கோவில் திருவாய்மொழி
பூமன்னு மாது பொருந்திய மார்பன்* புகழ் மலிந்த-
பாமன்னு மாறன்* அடிபணிந்து உய்ந்தவன்* பல் கலையோர்-
தாம்மன்ன வந்த இராமானுசன்* சரணாரவிந்தம்-
நாம்மன்னி வாழ* நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே. (2)
கள்ளார் பொழில் தென்னரங்கன்* கமலப் பதங்கள் நெஞ்சில்-
கொள்ளா* மனிசரை நீங்கி* குறையல் பிரானடிக்கீழ்-
விள்ளாத அன்பன் இராமானுசன்* மிக்க சீலமல்லால்-
உள்ளாது என் நெஞ்சு* ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே. (2)
பேரியல் நெஞ்சே! அடிபணிந்தேன் உன்னை* பேய்ப்பிறவிப்-
பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி* பொருவருஞ்சீர்-
ஆரியன் செம்மை இராமானுச முனிக்கு அன்புசெய்யும்*
சீரிய பேறுடையார்* அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே.
என்னைப் புவியில் ஒருபொருளாக்கி* மருள்சுரந்த-
முன்னைப் பழவினை வேரறுத்து* ஊழி முதல்வனையே-
பன்னப் பணித்த இராமானுசன்* பரன் பாதமும் என்-
சென்னித் தரிக்க வைத்தான்* எனக்கேதும் சிதைவில்லையே.
எனக்குற்ற செல்வம் இராமானுசன் என்று* இசையகில்லா-
மனக்குற்ற மாந்தர்* பழிக்கில் புகழ்* அவன் மன்னியசீர்-
தனக்குற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என்பா*
இனக்குற்றம் காணகில்லார்,* பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.
இயலும் பொருளும் இசையத் தொடுத்து,* ஈன் கவிகள் அன்பால்-
மயல்கொண்டு வாழ்த்தும் இராமானுசனை,* மதியின்மையால்-
பயிலும் கவிகளில் பத்தியில்லாத என் பாவிநெஞ்சால்*
முயல்கின்றனன்* அவன்தன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே.
மொழியைக் கடக்கும் பெரும் புகழான்,* வஞ்ச முக்குறும்பாம்-
குழியைக் கடக்கும்* நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்*
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி* அல்லா-
வழியைக் கடத்தல்* எனக்கு இனி யாதும் வருத்தமன்றே. (2)
வருத்தும் புறவிருள் மாற்ற,* எம் பொய்கைப்பிரான் மறையின்-
குருத்தின் பொருளையும்* செந்தமிழ் தன்னையும் கூட்டி* ஒன்றத்-
திரித்தன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ளத்தே*
இருத்தும் பரமன்* இராமானுசன் எம் இறையவனே.
இறைவனைக் காணும் இதயத்து இருள்கெட* ஞானமென்னும்-
நிறைவிளக்கு ஏற்றிய* பூதத் திருவடி தாள்கள்,* நெஞ்சத்து-
உறையவைத்து ஆளும் இராமானுசன் புகழ் ஓதும்நல்லோர்*
மறையினைக் காத்து* இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே.
மன்னிய பேரிருள் மாண்டபின்* கோவலுள் மாமலராள்-
தன்னொடு மாயனை* கண்டமை காட்டும்* தமிழ்த்தலைவன்-
பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர்தாள்*
சென்னியிற் சூடும்* திருவுடையார் என்றும் சீரியரே.
சீரிய நான்மறைச் செம்பொருள்* செந்தமிழால் அளித்த-
பாரியலும் புகழ்* பாண்பெருமாள்,* சரணாம் பதுமத்-
தாரியல் சென்னி இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்தம்*
காரிய வண்மை,* என்னால் சொல்லொணாது இக்கடலிடத்தே.
இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன்* இணையடிப்போது-
அடங்கும் இதயத்து இராமானுசன்,* அம்பொற் பாதமென்றும்-
கடங்கொண்டு இறைஞ்சும் திருமுனிவர்க்கன்றிக் காதல்செய்யா*
திடங்கொண்ட ஞானியர்க்கே* அடியேன் அன்பு செய்வதுவே.
செய்யும் பசுந்துளபத் தொழில் மாலையும்* செந்தமிழில்-
பெய்யும் மறைத்தமிழ் மாலையும்* பேராத சீரரங்கத்து-
ஐயன் கழற்கணியும் பரன் தாளன்றி* ஆதரியா-
மெய்யன்* இராமானுசன் சரணே கதி வேறெனக்கே.
கதிக்குப் பதறி* வெங்கானமும் கல்லும் கடலுமெல்லாம்-
கொதிக்க* தவம்செய்யும் கொள்கை அற்றேன்,* கொல்லி காவலன் சொல்-
பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே*
துதிக்கும் பரமன்* இராமானுசன் என்னைச் சோர்விலனே.
சோராத காதல் பெருஞ்சுழிப்பால்,* தொல்லை மாலையொன்றும்-
பாராதவனைப்* பல்லாண்டென்று காப்பிடும்* பான்மையன்தாள்-
பேராத உள்ளத்து இராமானுசன் தன் பிறங்கியசீர்*
சாரா மனிசரைச் சேரேன்* எனக்கென்ன தாழ்வினியே?
தாழ்வு ஒன்றில்லா மறை தாழ்ந்து* தலமுழுதும் கலியே-
ஆள்கின்ற நாள் வந்து* அளித்தவன் காண்மின்* அரங்கர்மௌலி-
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்*
வாழ்கின்ற வள்ளல்* இராமானுசன் என்னும் மாமுனியே. (2)
முனியார் துயரங்கள் முந்திலும்* இன்பங்கள் மொய்த்திடினும்-
கனியார் மனம்* கண்ண மங்கை நின்றானைக்* கலைபரவும்-
தனியானைத் தண் தமிழ்செய்த நீலன் தனக்கு* உலகில்-
இனியானை* எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே.
எய்தற்கு அரிய மறைகளை* ஆயிரம் இன்தமிழால்-
செய்தற்கு உலகில் வரும்* சடகோபனைச்* சிந்தையுள்ளே-
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்*
உய்தற்கு உதவும்* இராமானுசன் எம் உறுதுணையே.
உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும்* உயர்குருவும்-
வெறிதரு பூமகள் நாதனும்* மாறன் விளங்கியசீர்-
நெறிதரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீணிலத்தோர்*
அறிதர நின்ற,* இராமானுசன் எனக்கு ஆரமுதே.
ஆரப் பொழில் தென் குருகைப் பிரான்,* அமுதத் திருவாய்-
ஈரத் தமிழின்* இசை உணர்ந்தோர்கட்கு* இனியவர்தம்-
சீரைப் பயின்று உய்யும் சீலங்கொள் நாதமுனியை* நெஞ்சால்-
வாரிப் பருகும்* இராமானுசன் என்தன் மாநிதியே
நிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்-
துதிகற்று உலகில் துவள்கின்றிலேன்* இனி தூய்நெறிசேர்-
எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்*
கதிபெற்றுடைய* இராமானுசன் என்னைக் காத்தனனே.
கார்த்திகை யானும் கரிமுகத் தானும்* கனலும்முக்கண்-
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு* மூவுலகும்-
பூத்தவனே! என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த*
தீர்த்தனை ஏத்தும்* இராமானுசன் என்தன் சேமவைப்பே.
வைப்பாய வான்பொருள் என்று,* நல்லன்பர் மனத்தகத்தே-
எப்போதும் வைக்கும் இராமானுசனை* இருநிலத்தில்-
ஒப்பார் இலாத உறுவினையேன் வஞ்ச நெஞ்சில்வைத்து*
முப்போதும் வாழ்த்துவன்* என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே!
மொய்த்த வெந்தீவினையால் பல்லுடல் தொறும் மூத்து,* அதனால்-
எய்த்தொழிந்தேன் முனநாள்கள் எல்லாம்,* இன்று கண்டுயர்ந்தேன்-
பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக்*
கைத்த மெய்ஞ்ஞானத்து* இராமானுசன் என்னும் கார்தன்னையே
காரேய் கருணை இராமானுச,* இக் கடலிடத்தில்-
ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை* அல்லலுக்கு-
நேரே உறைவிடம் நான்வந்து நீஎன்னை உய்த்தபின்* உன்-
சீரே உயிர்க்குயிராய்,* அடியேற்கு இன்று தித்திக்குமே.
திக்குற்ற கீர்த்தி இராமானுசனை,* என் செய்வினையாம்-
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை* மேவும்நல்லோர்-
எக்குற்ற வாளர் எதுபிறப்பேது இயல்வாக நின்றோர்*
அக்குற்றம் அப்பிறப்பு* அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே
கொள்ளக் குறைவு அற்று இலங்கி* கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால்* வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்*
வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று*
தள்ளுற்று இரங்கும்* இராமாநுச! என் தனி நெஞ்சமே!
நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன்* நங்கள்-
பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன்* பாதம்நண்ணா-
வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என்வாய்*
கொஞ்சிப் பரவகில்லாது* என்ன வாழ்வு இன்று கூடியதே!
கூட்டும் விதி என்று கூடுங்கொலோ,* தென் குருகைப்பிரான்-
பாட்டென்னும்* வேதப் பசுந்தமிழ் தன்னை,* தன் பத்தியென்னும்-
வீட்டின்கண் வைத்த இராமானுசன் புகழ் மெய்யுணர்ந்தோர்*
ஈட்டங்கள் தன்னை,* என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே?
இன்பம் தருபெருவீடு வந்து எய்திலென்?* எண்ணிறந்த-
துன்பம் தரு நிரயம்பல சூழிலென்?* தொல்லுலகில்-
மன்பல்லுயிர்கட்கு இறையவன் மாயன் எனமொழிந்த*
அன்பன் அனகன்* இராமானுசன் என்னை ஆண்டனனே.
ஆண்டுகள் நாள் திங்களாய்* நிகழ்காலம் எல்லாம் மனமே!-
ஈண்டு* பல்யோனிகள் தோறும் உழல்வோம்* இன்றோர் எண்ணின்றியே-
காண்தகு தோவண்ணல் தென்னத்தி ஊரர் கழலிணைக்கீழ்ப்*
பூண்டவன்பாளன்* இராமானுசனைப் பொருந்தினமே. (2)
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,* நல்ல-
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும்* செறுகலியால்-
வருந்திய ஞாலத்தை* வண்மையினால் வந்தெடுத்தளித்த-
அருந்தவன்* எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.
அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன்* கையாழியென்னும்-
படையோடு நாந்தகமும் படர் தண்டும்,* ஒண் சார்ங்கவில்லும்-
புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு* என்று-
இடையே* இராமானுச முனியாயின இந்நிலத்தே
நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை,* நினைப்பரிய-
பலத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை,* என் பெய்வினைதென்-
புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கியபின்*
நலத்தைப் பொறுத்தது* இராமானுசன் தன் நயப்புகழே
நயவேன் ஒருதெய்வம் நானிலத்தே* சில மானிடத்தைப்-
புயலே என* கவி போற்றி செய்யேன்* பொன் அரங்கமென்னில்-
மயலே பெருகும் இராமானுசன்* மன்னு மாமலர்த்தாள்-
அயரேன்* அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே?
அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன்* அன்று ஆரணச்சொல்-
கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப்ப,* பின்னும் காசினியோர்-
இடரின்கண் வீழ்ந்திடத் தானும் அவ்வொண்பொருள் கொண்டு* அவர்பின்-
படரும் குணன்,* எம் இராமானுசன் தன் படிஇதுவே.
படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்திவெள்ளம்*
குடிகொண்ட கோயில் இராமாநுசன் குணங்கூறும்,* அன்பர்-
கடிகொண்ட மாமலர்த்தாள் கலந்து உள்ளங் கனியும்நல்லோர்*
அடிகண்டு கொண்டு உகந்து* என்னையும் ஆளவர்க்கு ஆக்கினரே
ஆக்கி அடிமை நிலைப்பித்தனை* என்னை இன்று, அவமே-
போக்கிப் புறத்திட்டது என்பொருளா முன்பு* புண்ணியர்தம்-
வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின்வண்ணம்*
நோக்கில் தெரிவரிதால்,* உரையாய் இந்த நுண்பொருளே.
பொருளும் புதல்வரும் பூமியும்* பூங்குழலாரும் என்றே-
மருள்கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே!* மற்றுளார்தரமோ-
இருள்கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும்புகழே*
தெருளும் தெருள்தந்து* இராமானுசன் செய்யும் சேமங்களே?
சேமநல் வீடும் பொருளும் தருமமும்* சீரியநற்-
காமமும் என்றிவை நான்கென்பர்* நான்கினும் கண்ணனுக்கே-
ஆமது காமம் அறம்பொருள் வீடிதற்கு என்றுரைத்தான்*
வாமனன் சீலன்* இராமானுசன் இந்த மண்மிசையே.
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து* எங்கள் மாதவனே-
கண்ணுற நிற்கிலும் காணகில்லா,* உலகோர்கள் எல்லாம்-
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே*
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு,* நாரணற்கு ஆயினரே.
ஆயிழையார் கொங்கை தங்கும்* அக் காதல் அளற்றழுந்தி-
மாயும் என் ஆவியை* வந்தெடுத்தான் இன்று* மாமலராள்-
நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன்* அரங்கனென்னும்-
தூயவன்* தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே.
சுரக்கும் திருவும் உணர்வும்* சொலப்புகில் வாயமுதம்-
பரக்கும் இருவினை பற்றற ஓடும்* படியில்உள்ளீர்-
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறுகலியை*
துரக்கும் பெருமை* இராமானுசன் என்று சொல்லுமினே.
சொல்லார் தமிழ்ஒரு மூன்றும்* சுருதிகள் நான்கும்எல்லை-
இல்லா* அறநெறி யாவும் தெரிந்தவன்* எண்ணருஞ்சீர்-
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்கு*
அல்லார் அகல்இடத்தோர்,* எது பேறென்று காமிப்பரே.
பேறுஒன்று மற்றில்லை நின்சரண் அன்றி* அப் பேறளித்தற்கு-
ஆறுஒன்றும் இல்லை* மற்றச் சரண் அன்றி,* என்று இப்பொருளைத்-
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்*
கூறும் பரமன்று* இராமானுச மெய்ம்மை கூறிடிலே.
கூறும் சமயங்கள் ஆறும் குலைய* குவலயத்தே-
மாறன் பணித்த* மறையுணர்ந்தோனை* மதியிலியேன்-
தேறும் படி என் மனம் புகுந்தானை* திசையனைத்தும்-
ஏறும் குணனை* இராமானுசனை இறைஞ்சினமே.
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கனென்று* இவ்வுலகத்து-
அறம் செப்பும்* அண்ணல் இராமானுசன்,* என் அருவினையின்-
திறம்செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே*
நிறைந்து ஒப்பற இருந்தான்,* எனக்குஆரும் நிகர்இல்லையே!
நிகரின்றி நின்ற என் நீசதைக்கு* உன் அருளின்கண் அன்றிப்-
புகல் ஒன்றும்இல்லை* அருட்கும் அஃதேபுகல்* புன்மையிலோர்-
பகரும் பெருமை இராமானுச! இனி நாம்பழுதே*
அகலும் பொருள்என்* பயன் இருவோமுக்கும் ஆனபின்னே?
ஆனது செம்மை அறநெறி* பொய்ம்மை அறுசமயம்-
போனது பொன்றி* இறந்தது வெங்கலி* பூங்கமலத்-
தேன்நதி பாய்வயல் தென்அரங்கன் கழல் சென்னிவைத்துத்*
தான்அதில் மன்னும்* இராமானுசன் இத்தலத்து உதித்தே.
உதிப்பன உத்தமர் சிந்தையுள்* ஒன்னலர் நெஞ்சம்அஞ்சி-
கொதித்திட* மாறி நடப்பன* கொள்ளைவன் குற்றம்எல்லாம்-
பதித்த என் புன்கவிப் பாஇனம் பூண்டன பாவுதொல்சீர்*
எதித்தலை நாதன்* இராமானுசன் தன் இணைஅடியே (2)
அடியைத் தொடர்ந்துஎழும் ஐவர்கட்காய்* அன்று பாரதப்போர்-
முடியப்* பரிநெடுந் தேர் விடுங்கோனை* முழுதுணர்ந்த-
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை ஆளவந்து* இப்-
படியில் பிறந்தது* மற்றுஇல்லை காரணம் பார்த்திடிலே.
பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப,* இப் பார்முழுதும்-
போர்த்தான் புகழ்கொண்டு* புன்மையினேன் இடைத்தான் புகுந்து*
தீர்த்தான் இருவினை தீர்த்து* அரங்கன் செய்ய தாள்இணையோடு-
ஆர்த்தான்* இவை எம் இராமானுசன் செய்யும் அற்புதமே.
அற்புதன் செம்மை இராமானுசன்,* என்னை ஆளவந்த-
கற்பகம்* கற்றவர்* காமுறு சீலன்* கருதுஅரிய-
பற்பல்லுயிர்களும் பல்லுலகு யாவும் பரனதுஎன்னும்*
நற்பொருள் தன்னை,* இந் நானிலத்தே வந்து நாட்டினனே.
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன,* நாரணனைக்-
காட்டிய வேதம் களிப்புற்றது,* தென் குருகைவள்ளல்-
வாட்டம்இலா வண் தமிழ்மறை வாழ்ந்தது* மண்ணுலகில்-
ஈட்டிய சீலத்து* இராமாநுசன் தன் இயல்வுகண்டே.
கண்டவர் சிந்தை கவரும்* கடிபொழில் தென்அரங்கன்*
தொண்டர் குலாவும் இராமானுசனை* தொகைஇறந்த-
பண்தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்*
கொண்டலை மேவித் தொழும்,* குடியாம் எங்கள் கோக்குடியே.
கோக்குல மன்னரை மூவெழு கால்* ஒரு கூர் மழுவால்-
போக்கிய தேவனைப்* போற்றும் புனிதன்* புவனமெங்கும்-
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின்* என்
வாக்கு உரையாது,* என் மனம் நினையாது இனி மற்றறொன்றையே.
மற்றொரு பேறு மதியாது,* அரங்கன் மலரடிக்கு ஆள்-
உற்றவரே* தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமனை*
நற்றவர் போற்றும் இராமாநுசனை* இந் நானிலத்தே-
பெற்றனன்* பெற்றபின் மாற்றியேன் ஒரு பேதைமையே.
பேதையர் வேதப் பொருள் இதென்று உன்னி* பிரமம் நன்றென்று
ஓதி மற்றெல்லா உயிரும் அஃதென்று* உயிர்கள் மெய்விட்டு-
ஆதிப் பரனோடு ஒன்றுமென்று சொல்லும் அவ் வல்லலெல்லாம்*
வாதில் வென்றான்,* எம் இராமாநுசன் மெய்ம்மதிக்கடலே.
கடலளவாய திசை எட்டினுள்ளும்* கலியிருளே
மிடைதரு காலத்து இராமாநுசன்,* மிக்க நான்மறையின்-
சுடரொளியால் அவ் விருளைத் துரந்திலனேல்* உயிரை-
உடையவன்,* நாரணன் என்று அறிவாரில்லை உற்றுணர்ந்தே.
உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந் தொறும்,* திருவாய் மொழியின்-
மணந்தரும்* இன்னிசை மன்னும் இடந்தொறும்* மாமலராள்-
புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்*
குணந்திகழ் கொண்டல்* இராமாநுசன் எம் குலக்கொழுந்தே.
கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால்,* நிரயத்து-
அழுந்தியிட்டேனை* வந்து ஆட்கொண்ட பின்னும்,* அரு முனிவர்-
தொழும் தவத்தோன் எம் இராமாநுசன்* தொல் புகழ்* சுடர்மிக்கு-
எழுந்தது,* அத்தால் நல்ல அதிசயங் கண்ட இருநிலமே.
இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றி* இன்று யான் இறையும்-
வருந்தேன்* இனி எம் இராமாநுசன்,* மன்னு மாமலர்த்தாள்-
பொருந்தா நிலையுடையப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மைசெய்யா*
பெருந்தேவரைப் பரவும்,* பெரியோர் தம் கழல்பிடித்தே.
பிடியைத் தொடரும் களிறெயன்ன* யான் உன் பிறங்கிசீர்-
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும்* அறுசமயச்-
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து* இப்-
படியைத் தொடரும்* இராமாநுச! மிக்க பண்டிதனே!
பண் தரு மாறன் பசுந்தமிழ்* ஆனந்தம் பாய்மதமாய்-
விண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம்* மெய்ம்மை-
கொண்ட நல் வேதக் கொழுந்தண்டமேந்திக்* குவலயத்தே-
மண்டி வந்தேன்றது* வாதியர்காள்! உங்கள் வாழ்வற்றதே.
வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு* என்றும் மறையவர்தம்-
தாழ்வற்றது* தவம் தாரணி பெற்றது* தத்துவநூல்-
கூழற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு* அந்-
நாழற்றது,* நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே.
ஞானம் கனிந்த நலங்கொண்டு* நாள்தொறும் நைபவர்க்கு-
வானம் கொடுப்பது மாதவன்* வல்வினையேன் மனத்தில்-
ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு* அத்-
தானம் கொடுப்பது* தன் தகவென்னும் சரண் கொடுத்தே.
சரணம் அடைந்த தருமனுக்கா* பண்டு நூற்றுவரை-
மரணம் அடைவித்த மாயவன் தன்னை* வணங்கவைத்த-
கரணம் இவை உமக்கன்று என்றி இராமாநுசன்* உயிர்கட்கு-
அரண் அங்கு அமைத்திலனேல்,* அரணார் மற்று இவ்வாருயிர்க்கே?
ஆரெனக்கு இன்று நிகர் சொல்லில்?* மாயன் அன்று ஐவர்தெய்வத்-
தேரினில் செப்பிய கீதையின்* செம்மைப் பொருள் தெரியப்-
பாரினில் சொன்ன இராமாநுசனை பணியும் நல்லோர்*
சீரினில் சென்று பணிந்தது,* என் ஆவியும் சிந்தையுமே.
சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து,* முன்னாள்
அந்தமுற்று ஆழ்ந்தது கண்டு,* அவை என்தனக்கு அன்றருளால்-
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன்* தான் அதுதந்து*
எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே.
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து,* எண்ணில் பல்குணத்த-
உன்னையும் பார்க்கில்* அருள் செய்வதே நலம்* அன்றி என்பால்-
பின்னையும் பார்க்கில் நலமுளதே? உன் பெருங்கருணை*
தன்னை என் பார்ப்பர்?* இராமாநுச! உன்னைச் சார்ந்தவரே?
சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக்கீழ்,* அன்பு தான்மிகவும்-
கூர்ந்தது* அத் தாமரைத் தாள்களுக்கு* உன்தன் குணங்களுக்கே-
தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை* அதனால்-
பேர்ந்தது* வண்மை இராமாநுச! எம் பெருந்தகையே.
கைத்தனன் தீய சமயக் கலகரை* காசினிக்கே-
உய்த்தனன்* தூய மறைநெறி தன்னை,* என்று உன்னி உள்ளம்-
நெய்த்தவன் போடிருந்தது ஏத்தும் நிறை புகழோருடனே*
வைத்தனன் என்னை* இராமாநுசன் மிக்க வண்மைசெய்தே.
வண்மையினாலும் தன் மா தகவாலும்* மதிபுரையும்-
தண்மையினாலும்* இத் தாரணியோர்கட்குத்* தான்சரணாய்-
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை* உன்னும்-
திண்மை அல்லால் எனக்கில்லை,* மற்றோர் நிலை தேர்ந்திடிலே.
தேரார் மறையின் திமெறன்று* மாயவன் தீயவரைக்-
கூராழி கொண்டு குறைப்பது* கொண்டல் அனையவண்மை-
ஏரார் குணத்து எம் இராமாநுசன்* அவ்வெழில் மறையில்-
சேராதவரைச் சிதைப்பது,* அப்போது ஒரு சிந்தைசெய்தே.
செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும்* திருவரங்கர்
கைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி,* நங்கண் முகப்பே-
மொய்த்தலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும்* நின்புகழே-
மொய்த்தலைக்கும் வந்து* இராமாநுச! என்னை முற்றுநின்றே.
நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,* நிறை வேங்கடப்பொற்
குன்றமும்* வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்*
உன்தனக்கு எத்தனை இன்பந் தரும் உன் இணைமலர்த்தாள்*
என்தனக்கும் அது,* இராமாநுச! இவை ஈந்தருளே. (2)
ஈந்தனன் ஈயாத இன்னருள்* எணிண்ல் மறைக்குறும்பைப்-
பாய்ந்தனன்* அம்மறைப் பல்பொருளால்,* இப் படியனைத்தும்-
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை* வேர்பறியக்-
காய்ந்தனன்* வண்மை இராமாநுசற்கு என் கருத்தினியே?
கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி* கருதரிய-
வருத்தத்தினால்* மிக வஞ்சித்து* நீயிந்த மண்ணகத்தே-
திருத்தித் திருமகள் கேள்வனு ஆக்கிய பின்* என் நெஞ்சில்-
பொருத்தப் படாது,* எம்இராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே.
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,* இந்தப் பூதலத்தே-
மெய்யைப் புரக்கும்* இராமாநுசன் நிற்க,* வேறுநம்மை-
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கு யாதென்று உலர்ந்து அவமே*
ஐயப்படா நிற்பர்* வையத்து உள்ளோர் நல்லறிவு இழந்தே.
நல்லார் பரவும் இராமாநுசன்,* திரு நாமம் நம்ப-
வல்லார் திறத்தை* மறவாதவர்கள் எவர்,* அவர்க்கே-
எல்லாவிடத்திலும் என்றும் எப்போதிலும் எத்தொழும்பும்*
சொல்லால் மனத்தால்* கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே.
சோர்வின்றி உன்தன் துணையடிக் கீழ்,* தொண்டு பட்டவர்பால்-
சார்வின்றி நின்ற எனக்கு,* அரங்கன் செய்ய தாளிணைகள்-
பேர்வின்றி இன்று பெறுத்தும் இராமாநுச!* இனிஉன்-
சீர் ஒன்றிய கருணைக்கு,* இல்லை மாறு தெரிவுறிலே.
தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,* வெந் தீவினையால்-
உருவற்ற ஞானத்து உழல்கின்ற என்னை,* ஒரு பொழுதில்-
பொருவற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ!*
தெரிவுற்ற கீர்த்தி,* இராமாநுசன் என்னும் சீர் முகிலே.
சீர்கொண்டு பேரறம் செய்து,* நல்வீடு செறிதும் என்னும்*
பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன்,* உன் பதயுகமாம்-
ஏர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன்* உன்னுடைய-
கார்கொண்ட வண்மை* இராமாநுச! இது கண்டுகொள்ளே.
கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை* காண்டலுமே-
தொண்டு கொண்டேன்* அவன் தொண்டர் பொற்றாளில்* என் தொல்லை வெம்நோய்-
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை* வாய்மடுத்து இன்று-
உண்டு கொண்டேன்,* இன்னம் உற்றன ஓதில் உலப்பில்லையே.
ஓதிய வேதத்தின் உட்பொருளாய்,* அதன் உச்சிமிக்க-
சோதியை* நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்*
பேதைமை தீர்த்த இராமாநுசனைத் தொழும்பெரியோர்*
பாதமல்லால் என்தன் ஆர் உயிர்க்கு* யாதொன்றும் பற்றில்லையே.
பற்றா மனிசரைப் பற்றி* அப்பற்று விடாதவரே-
உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி,* ஒள்ளியநூல்-
கற்றார் பரவும் இராமாநுசனை* கருதும் உள்ளம்-
பெற்றார் எவர்,* அவர் எம்மை நின்றளும் பெரியவரே.
பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும்* தன் குணங்கட்கு
உரியசொல் என்றும்* உடையவன் என்றென்று* உணர்வில் மிக்கோர்-
தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன்* மறை தேர்ந்துலகில்-
புரியும் நல்ஞானம்* பொருந்தாதவரை பொரும் கலியே.
கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல்* கலைப் பெருமான்-
ஒலிமிக்க பாடலை உண்டு* தன்னுள்ளம் தடித்து,* அதனால்-
வலிமிக்க சீயம் இராமாநுசன்* மறைவாதியராம்*
புலிமிக்கது என்று,* இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே.
போற்றரும் சீலத்து இராமாநுச* நின் புகழ் தெரிந்து-
சாற்றுவனேல்* அது தாழ்வு அது தீரில்,* உன் சீர்தனக்கோர்-
ஏற்றமென்றே கொண்டிருக்கிலும்* என்மனம் ஏத்திய;ன்றி
ஆற்றகில்லாது,* இதற்கு என்னினைவாய் என்றிட்டு அஞ்சுவனே.
நினையார் பிறவியை நீக்கும் பிரானை,* இந் நீணிலத்தே-
எனையாள வந்த இராமாநுசனை* இருங் கவிகள்-
புனையார் புனையும் பெரியவர் தாள்களில்* பூந்தொடையல்-
வனையார்* பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே.
மருள்சுரந்து ஆகம வாதியர் கூறும்,* அவப் பொருளாம்-
இருள்சுரந்து எய்த்த* உலகிருள் நீங்கத்,* தன் ஈண்டியசீர்-
அருள்சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன்* அரங்கனென்னும்
பொருள் சுரந்தான்,* எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே.
புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்,* அடி போற்றி செய்யும்-
நுண்ணருங் கேள்வி* நுவன்றுமிலேன்,* செம்மை நூற்புலவர்க்கு-
எண்ணருங் கீர்த்தி இராமாநுச! இன்று நீபுகுந்து* என்-
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும்* நின்ற இக் காரணம் கட்டுரையே.
கட்டப் பொருளை மறைப்பொருள் என்று* கயவர்சொல்லும்-
பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே,* என் பெரு வினையைக்-
கிட்டி கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி*
வெட்டிக் களைந்த* இராமாநுசன் என்னும் மெய்த்தவனே.
தவம் தரும் செல்வம் தகவும் தரும்,* சலியாப்பிறவிப்-
பவம் தரும்* தீவினை பாற்றித் தரும்* பரந்தாமம் என்னும்-
திவம்தரும் தீதில் இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு*
உவந்தருந்தேன்,* அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.
உண்ணின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து* அவர்க்குஉயவே-
பண்ணும் பரனும் பரிவிலனாம்படி* பல்லுயிர்க்கும்-
விண்ணின் தலைநின்று வீடளிப்பான் எம் இராமாநுசன்*
மண்ணின் தலத்து உதித்து* உய்மறை நாலும் வளர்த்தனனே.
வளரும் பிணிகொண்ட வல்வினையால்* மிக்க நல்வினையில்-
கிளரும் துணிவு கிடைத்தறியாது* முடைத்தலையூன்-
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்கு*
உளர் எம் இறைவர்* இராமாநுசன் தன்னை உற்றவரே.
தன்னை உற்றாட்செய்யும் தன்மையினோர்,* மன்னு தாமரைத் தாள்-
தன்னை உற்றாட்செய்ய* என்னை உற்றான் இன்று* தன்தகவால்-
தன்னையுற்றார் அன்றி தன்மை உற்றாரில்லை என்றறிந்து*
தன்னை உற்றாரை* இராமாநுசன் குணம் சாற்றிடுமே.
இடுமே இனிய சுவர்க்கத்தில்* இன்னும் நரகிலிட்டுச்-
சுடுமே? அவற்றை* தொடர்தரு தொல்லை* சுழல்பிறப்பில்-
நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம்வசத்தே*
விடுமே? சரணமென்றால்,* மனமே! நையல் மேவுதற்கே? (2)
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும்* தாழ்சடையோன்-
சொற்கற்ற சோம்பரும்* சூனிய வாதரும்* நான்மறையும்-
நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர்* நீள் நிலத்தே-
பொற்கற்பகம்,* எம் இராமானுச முனி போந்தபின்னே.
போந்ததென் நெஞ்சென்னும் பொன்வண்டு* உனதடிப் போதில் ஒண்சீ-
ராம் தெளி தேன் உண்டு* அமர்ந்திட வேண்டி,* நின் பாலதுவே-
ஈந்திட வேண்டும் இராமாநுச! இது அன்றியொன்றும்*
மாந்த கில்லாது,* இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.
மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு* மதி மயங்கித்-
துயக்கும் பிறவியில்* தோன்றிய என்னை* துயரகற்றி-
உயக்கொண்டு நல்கும் இராமாநுச! என்றது உன்னையுன்னி*
நயக்கும் அவர்க்கு இது இழுக்கென்பர்,* நல்லவர் என்றும்நைந்தே.
நையும் மனம் உன் குணங்களை உன்னி* என் நாஇருந்துஎம்-
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும்* அருவினையேன்-
கையும் தொழும் கண் கருதிடுங் காண க் கடல்புடைசூழ்*
வையம் இதனில்* உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே?
வளர்ந்த* வெங்கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாளவுணன்-
கிளர்ந்த* பொன்னாகம் கிழித்தவன்* கீர்த்திப் பயிரெழுந்து-
விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என்தன் மெய்வினைநோய்*
களைந்து நல் ஞானம் அளித்தனன்* கையில் கனியென்னவே.
கையில் கனியென்னக்* கண்ணனைக் காட்டித் தரிலும்* உன் தன்-
மெய்யில் பிறங்கிய* சீரன்றி வேண்டிலன் யான்,* நிரயத்-
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள்நீ*
செய்யில் தரிப்பன்* இராமாநுச! என் செழுங் கொண்டலே!
செழுந்திரைப் பாற்கடல் கண்துயில் மாயன்* திருவடிக்கீழ்-
விழுந்திருப்பார் நெஞ்சில்* மேவு நல்ஞானி* நல் வேதியர்கள்-
தொழும் திருப்பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர்*
எழுந்திரைத்து ஆடும் இடம்* அடியேனுக்கு இருப்பிடமே. (2)
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்* மாலிருஞ் சோலையென்னும்-
பொருப்பிடம்* மாயனுக்கு என்பர் நல்லோர்,* அவை தன்னொடு வந்து-
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து* இன்று அவன்வந்து-
இருப்பிடம்* என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே. (2)
இன்புற்ற சீலத்து இராமானுச,* என்றும் எவ்விடத்தும்-
என்புற்ற நோய்* உடல் தோறும் பிறந்து இறந்து* எண்ணரிய-
துன்புற்று வீயினும் சொல்லுவது ஒன்றுண்டு* உன் தொண்டர்கட்கே-
அன்புற்று இருக்கும்படி,* என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே. (2)
அங்கயல்பாய் வயல் தென் அரங்கன்,* அணி ஆகமன்னும்-
பங்கய மாமலர்* பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம்-
தங்கியது தென்னத் தழைத்து நெஞ்சே! நம் தலைமிசையே *
பொங்கிய கீர்த்தி * இராமாநுசன் அடிப் பூ மன்னவே. (2)