திருக்கச்சி

இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர். நூற்றக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி நூற்றக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி நூற்றக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி நூற்றக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி கல்யாண மண்டபத்தின் எழில் மிக்க சிற்ப தூண். கல்யாண மண்டபத்தின் எழில் மிக்க சிற்ப தூண். கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாளான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும். தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.

அமைவிடம்

பெயர்: காஞ்சி வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைவிடம் ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம்: காஞ்சிபுரம் தொலைபேசி எண்:94449 93370 ,

தாயார் : ஸ்ரீ பெருந்தேவி
மூலவர் : ஸ்ரீ பேரருளாள வரதராஜன்
உட்சவர்: --
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : காஞ்சிபுரம்
கடவுளர்கள்: தேவ பெருமாள் ,ஸ்ரீ பார்கவி


திவ்யதேச பாசுரங்கள்

    2276.   
    என் நெஞ்சம் மேயான்*  என் சென்னியான்,*  தானவனை-
    வல் நெஞ்சம்*  கீண்ட மணி வண்ணன்,*  முன்னம் சேய்-
    ஊழியான்*  ஊழி பெயர்த்தான்,*  உலகு ஏத்தும்-
    ஆழியான்*  அத்தியூரான்.

        விளக்கம்  


    • பெருமாள் கோயில் ஸ்ரீஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதமான பேர்ருளாளனை மங்களாசரஸநம் பண்ணும் பாசுரங்கள் – இப்பாட்டும் மேற்பாட்டும். ‘எங்குமுளன் கண்ணன்‘ என்று சொன்ன ப்ரஹ்லாதாழ்வானைப் பலபடிகளாலும் நலிந்த இரணியாசுரனுடைய முரட்டுடலைப்பினைந்தொழித்தவனும், இவ்விதமாக பக்தபரிபாலனம் செய்யப்பெற்றதனாலே திருமேனி புகர்பெற்றவனும், அநாதிகாலமாகவே பிறப்பிறப்பு மூப்புகள் ஒன்றுமின்றி யிருப்பவனும், ஸகல பதார்த்தங்களையும் இவ்வுலகில் தோன்றுவித்தவனும், உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்த் திருப்பாற்கடலில் துயில் கொண்டிருப்பவனுமான எம்பெருமான் அத்தியூர் என்னப்படுகிற ஸ்ரீஹஸ்திகிரி க்ஷேத்ரத்தில் எழுந்தருளியிராநின்றான், அவன் இன்று எனது நெஞ்சினுள்ளும் தலையின் மீதும் வந்து சேர்ந்து மகிழ்விக்கின்றான் காண்மின் என்கிறார்.


    2277.   
    அத்தியூரான்*  புள்ளை ஊர்வான்,*  அணி மணியின்-
    துத்தி சேர்*  நாகத்தின்மேல் துயில்வான்,*  - முத்தீ-
    மறை ஆவான்*  மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்*
    இறை ஆவான் எங்கள் பிரான். (2)

        விளக்கம்  


    • தென்னத்தியூரரான போருளாளப் பெருமான் மங்களாசாஸநம் செய்தருளு மிப்பாசுரத்தில் ‘புள்ளையூர்வான்‘ என்று ஆழ்வார் திருவாய்மலர்ந்தருளவேதான் இப்பெருமானுடைய கருடோத்ஸவம் இமவந்தந் தொடங்கி இருங்கடலளவும் பிரஸித்தமாகப் பெருமேன்மை வாய்ந்ததாயிற்றென்று பெரியோர் பணிப்பர். நாகத்தின்மேல் துயில்வான் –திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொள்ளும் பெருமானே ஸ்ரீஹஸ்திகிரியிலும் ஸேவைவஸாதித்தருள்வதாக அநுஸந்திக்கிறார். இந்த விசேஷணம் கூரத்தாழ்வான் திருவுள்ளத்திலே புகுந்திருந்து, வரதராஜஸ்தவத்தில் “நீலமேக நிபம்“ என்னும் ச்லோகத்தில் ‘அநந்தசயம் த்வாம்‘ என்றருளிச் செய்வதற்குக் காரணமாயிற்றென்க. “***“ என்ற வேதாந்த தேசிக திவ்யஸூக்தியும் ஸ்மரிக்கத்தகுமிங்கு. துத்தி –படங்களிலுள்ள பொறி, இலக்கணையால் படத்தையும் சொல்லுமென்ப. “முத்தீ மறையாவான்“ “முத்தி மறையாவனா“ என்பன பாடபேதங்கள். முந்தின பாடத்தில், முத்தீ ஹோமம் செய்யும் முகத்தாலே ஆராதிக்கப்படுகவனும் வேதங்களால் பிரதிபாதிக்கப்படுபவனுமான பெருமான் என்க. அன்றியே, த்ரேதாக்நிகளைச் சொல்லுகிற வேதங்களாலே பிரதிபாதிக்கப்படுமவன் என்றுமாம். இனி, “முத்திமறையாவான்“ என்ற பாடத்தில், மோக்ஷத்தைப் பிரதிபாதிக்கின்ற வேதங்களாலே சொல்லப்படுமவன் என்கை.