திரு வட மதுரை (மதுரா)

தலபுரானம்:‍‍ மதுரா (Mathura, இந்தி: मथुरा, தமிழிலக்கிய பெயர்: வடமதுரை) இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஓர் மாநகரமாகும். ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும் தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுராவிலிருந்து 11 கிமீ தொலைவில் பிருந்தாவனமும் 22 கிமீ தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன. இது மதுரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராகவும் உள்ளது. முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான மதுரா, இந்து தொன்மவியல் கூற்றுக்களின்படி கிருட்டினனின் பிறப்பிடமாகும். மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி மதுராவை தலைநகராகக் கொண்டு சூரசேன இராச்சியத்தை கிருட்டினனின் மாமன் கம்சன் ஆண்டு வந்தான். கிருஷ்ண ஜென்ம பூமி எனப்படும் இடத்தில் பாதாள சிறையொன்றில் கிருட்டினன் பிறந்ததாக அந்த இடத்தில் கேசவ தேவ் கோவில் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக் கோவில் இருந்த இடத்தில் முகலாயர் காலத்தில் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளதாக ஓர் சர்ச்சை நிலவி வருகிறது.[சான்று தேவை] இந்தப் புராதன நகரம் அண்மையில் தொழில்நகரமாக மாறி வருகிறது. இந்தியாவின் நாயகமான தொடர்வண்டி மற்றும் சாலைவழிகளில் இந்நகர் அமைந்துள்ளதால் தொழில் முனைவோருக்கு பல வசதிகளை கொடுக்கிறது. இங்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிநவீன பாறைநெய் தூய்விப்பாலை அமைந்துள்ளது. இது வெளியேற்றும் புகையினால் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலின் பளிங்கு கற்கள் மாசடைந்து பாதிப்படைவதாகவும் ஓர் சர்ச்சை உண்டு

அமைவிடம்

மதுரா ,
உத்தராகண்டம்,
வடமதுரை 044-2627 2430,
2627 2487.,

தாயார் : ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்
மூலவர் : கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)
உட்சவர்: --
மண்டலம் : வட நாடு
இடம் : உத்தராகண்டம்
கடவுளர்கள்: கோவர்தனேசன்,ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

  264.   
  அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்*  தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்- 
  பொட்டத் துற்றி*  மாரிப் பகை புணர்த்த*  பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை* 
  வட்டத் தடங்கண் மட மான் கன்றினை*  வலைவாய்ப் பற்றிக் கொண்டு*  குறமகளிர்- 
  கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.* (2)

      விளக்கம்  


  • “துன்னுசகடத்தாற்புக்க பெருஞ்சோற்றை” என்றபடி வண்டி வண்டியாக வந்து திரண்டு கிடந்த சோற்றின் மிகுதியைக் கொண்டு ‘சோற்றுப் பகுப்பதம்’ எனப்பட்டது. மலையில் ஓடைகளுஞ் சேறுகளும் இன்றியமையாதனவாதலால், இங்குத் தயிர்த்திரளை ஓடையாகவும் நெய்ப்பெருக்கைச் சேறாகவும் உருவகப்படுத்தினரென்க. சோற்றுத்திரளில் தொட்டியாகக்கட்டி அதில் தயிரையும் நெய்யையும் நிறைத்தமை தோற்றும். ‘நெடுநாளாக இந்திரனுக்குச் செய்துவந்த இப்பூஜையை நீ உனக்காக்கிக் கொள்ளவொட்டோம்’ என்று சில இடையர் மறுப்பர்களோ என்று சங்கித்துப் பொட்டத்துற்றினானாயிற்று; ஓர் இமைப்பொழுதளவில் அவற்றையெல்லா மமுதுசெய்திட்டனன். இவன் இவ்வாறு செய்யவே, பூஜையை இழந்த இந்திரன் பசிக்கோபத்தினால் புஷ்கலாவர்த்தம் முதலிய மேகங்களை ஏவி விடாமழை பெய்வித்ததனால் அம்மழையாகிற பகைக்குக் கண்ணபிரான் காரணமானமைப்பற்றி ‘மாரிப்பகைபுணர்த்த’ என்றார்.


  265.   
  வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்*  வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட* 
  மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப*  மதுசூதன் எடுத்து மறித்த மலை* 
  இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி*  இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்* 
  குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*

      விளக்கம்  


  • இங்கு இந்திரனை வழுவொன்று மில்லாச் செய்கையனாகக் கூறினது - தான் இந்திர பதவியைப் பெறும்போது அதற்குச் செய்யவேண்டிய ஸாதநங்களில் ஒன்றுங் குறைவில்லாமல் செய்தவனென்பதற்காக. இப்படி வெகு வருத்தப்பட்டு ஸம்பாதித்த இந்திரபதவிக்குப் பிறர்களிடத்தில் பூஜை பெறுவதை ஒரு பெரிய கௌரவமாக இவன் கொண்டிருப்பதனால் அம்மரியாதைக்குக் குறைவுவரவே கோபங்கொண்டனனென்க; ஆகவே, “வழுவொன்றுமில்லாச் செய்கை” என்பது கருத்துடை யடைமொழியாம். “மாத்தடுப்ப” என்பதில் ‘மா’ என்ற விலங்கின் பொதுப்பெயர் இங்கு. பசுக்களையும் கன்றுகளையுங் குறிக்கும்; இடையர்கட்கும் உபலக்ஷணம். மதுசூதன் - மது என்ற அஸுரனைக் கொன்றவன்; மது - வேதத்தை அபஹரித்துக் கொண்டு சென்ற அஸுரர்களில் ஒருவன். பின்னிரண்டடிகளின் கருத்து;- ஒரு பெண் யானையானது தன் குட்டியை ஒரு சிங்கக்குட்டி நலிவதாக வந்து சீறினவளவிலே அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல் அந்தத் தன் குட்டியைத் தனது நான்கு கால்களினுள்ளே அடக்கி மறைத்துக்கொண்டு அச்சிங்கக்குட்டியை எதிர்த்துப் போர் செய்தற்கிடமான கோவர்த்தனமலை என்க. இனி, இழவு என்பதற்கு, விட்டுப்பிரிதல் என்று பொருள்கொண்டு வேறுவகையாகவும் கருத்துக் கூறலாம்; குட்டியுந் தானுமாயிருந்த ஒரு பெண்யானை, தன்னை நலியவந்த ஒரு சிங்கக் குட்டியோடு தான் பொர நினைத்து அப்போது தன் குட்டியை இறைப்பொழுதும் தனித்து விட்டிருக்கமாட்டாத தான் அக்குழவியைத் தன் காலிடையடக்கிக் கொண்டு போர் செய்ததாகக்கொள்க.


  266.   
  அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்*  ஆனாயரும் ஆநிரையும் அலறி* 
  எம்மைச் சரண் ஏன்றுகொள் என்று இரப்ப*  இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை* 
  தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப்*  புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று* 
  கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*

      விளக்கம்  


  • “எம்மைச் சரணேன்றுகொள் என்றிரப்ப” - எங்களை ரக்ஷித்தருள் என்று வேண்ட என்பது கருத்து. “சரணென்றுகொள்” என்ற பாடத்தை மறுக்க. கண்ணபிரான் மலையெடுத்தபோது, கையில் திருவாழி உள்ளதாகச் சொல்லுகிறவிதுக்குக் கருத்து என்னென்னில்; கண்ணபிரான் இந்திரனைத் தலையறுக்க வேண்டினால் அது அரிய வேலையன்று, கையில் திருவாழியை ஏவிக் காரியம் செய்து முடிக்கவல்ல வல்லமையுண்டு. ஆகிலும் அங்ஙன் செய்யாதொழிந்தது - ‘இந்திரனுடைய உணவைத்தான் கொண்டோமே, உயிரையுங் கொள்ள வேணுமா’ என்ற கருணையைத் தெரிவித்தவாறாம். பின்னிரண்டடிகளின் கருத்து;- மலைக்குறவர் தமக்கு அன்பர்களான குறப்பெண்களின் கண்கள் கொல்லையிலே பரந்திருக்கக்கண்டு அவற்றை மான்களாகக் கருதி, ‘இவை நமது கொல்லையை மேய்ந்து அழிக்கவந்தன, இவற்றை நாம் அம்பெய்து கொல்லுதல் கவிமரபாகையால், இம்மலையிலுள்ள குறத்திகள் மானேய் மடநோக்கிகள் என்பதைப் பெறுவிக்கும் இவ்வர்ணனை. கொம்மை - வலிவு. புயம் - ?ஜம் என்ற வடசொல்விகாரம்.


  267.   
  கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்*  கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்* 
  அடிவாய் உறக் கையிட்டு எழப் பறித்திட்டு*  அமரர்பெருமான் கொண்டு நின்ற மலை* 
  கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக்*  கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி*  எங்கும்- 
  குடவாய்ப் பட நின்று மழை பொழியும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*

      விளக்கம்  


  • கண்ணபிரான் மேகமழையைத் தடுப்பதற்காக மலையை உயரத் தூக்கிக்கொண்டு நின்றபடிக்கு ஓர் உவமை கூறுகின்றார் - முதலடியினால்; மேகத்தை யானையாகவும் மலையைக் கவளமாகவும், அம்மலையையெடுத்துப் பிடிக்கின்ற கண்ணனைக் கவளமெடுத்துக் கொடுக்கும் பாகனாகவும் உருவகப்படுத்தியவாறு: “மதயானைபோலெழுந்த மாமுகில்காள்” எனப் பிறவிடத்தும் மேகத்துக்கு யானையை உவமையாகக் கூறியுள்ளமை காண்க. கடுவாய், சினம், வெங்கண் என்ற இம்மூன்றடைமொழிகளும் மேகத்துக்கும் இயையும்; கேட்டார் அஞ்சும்படியான முழக்கமும், அடர்த்துக்கொண்டு வர்ஷிக்கநிற்கிற ஆக்ரஹமும், கொள்ளிவட்டம் போன்ற மின்னற்சுழிப்பும் அமையப்பெற்றிருக்குமிறே மேகங்கள். கடு - ?? என்ற வடசொல்விகாரம். கவளம் - ???. யானையின் உணவு. (அடிவாய் இத்யாதி) ஒருதிருக்கையை மலையின் கீழ்ச் செலுத்தி மற்றொரு திருக்கையை மலையின் மேற்செலுத்திப் பறித்தெடுத்தானென்க. அடிவாய் - அடியிலே; வாய் - ஏழனுருபு. உற - ஊன்றும்படி. மேகங்களானவை திருவாய்ப்பாடியெங்கும் மழையைப் பொழிந்து வருத்த, அதனைத் தொலைப்பதற்காகத் தூக்கினகுடையாமென்பது - பின்னடிகளின் கருத்து. கதுவாய்ப்படுதலாவது - குறைவுபடுதல்; எனவே, கடன் வெறுந்தரையாம்படி என உரைக்கப்பட்டது; வேறுவகையாகவுமுரைக்கலாம்.


  268.   
  வானத்தில் உள்ளீர்! வலியீர் உள்ளீரேல்*  அறையோ! வந்து வாங்குமின் என்பவன் போல்* 
  ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை*  இடவன் எழ வாங்கி எடுத்த மலை*
  கானக் களி-யானை தன் கொம்பு இழந்து*  கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்துக்* 
  கூனற் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*

      விளக்கம்  


  • கண்ணபிரான் மலையை விடாது வருந்தாது தாங்கிக்கொண்டு நிற்றலை ஒருவகையாக உத்ப்ரேக்ஷிக்கின்றார் - முதலடியினால்; நாம் ஆகாசத்திலே திளைத்தோமென்று இறுமாந்திருப்பவர்களே! நீங்கள் மெய்யே வலிவுள்ளவர்களாகில் இம்மலையைச் சிறிது தாங்குங்கள் பார்ப்போம் என்று தேவர்களை அழைப்பவன் போன்றுள்ளனென்க. அறையோ என்றது - பௌருஷம் தோன்ற மீசை முறுக்கிச் சொல்லும் வெற்றிப்பாசுரம். பாதாள லோகஞ்சென்று சேர்ந்த பூமியை ஒட்டு விடுவித்தெடுத்துத் திருஎயிற்றிலே தாங்கிநின்ற பெருமானுக்கு இம்மலையெடுக்கை அரிதன்றென்பார். “ஏனத்துருவாகியவீசன்” என்றார். இடவன் - மண்கட்டிக்குப் பெயர். பின்னடிகளின் கருத்து; ஒரு யானையானது கரைபொருது திரியும்போது ஓரிடத்திற் கொம்பைக்குத்தின வளவிலே அக்கொம்பு முறியப்பெற்று அவ்விடத்தில் மதநீரொழுகப்பெற்ற ஆற்றாமையாலே துதிக்கையைத் தூக்கிக்கொண்டு, வானத்தில் வளைந்து தோற்றும் இளந்திங்களைத் தானிழந்த கொம்பாக ப்ரமித்து அதனைப் பறித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவலுடன் உயர்முகமாகவேயிருக்கும்படியைச் சொல்லியவாறு. கதுவாய் - குறையுற்ற இடம். அண்ணாத்தல் - மேல் நோக்குதல். இதற்கு உள்ளுறை பொருள்;- ஸம்ஸாரமாகிற மருகாந்தாரத்திலே களித்துத்திரிகிற ஆத்துமா தனது மமகாரமழியப்பெற்று மதமாத்ஸர்யங்களும் மழுங்கப்பெற்று ஸத்துவம் தலையெடுத்து அஞ்சலிபண்ணிக்கொண்டு ப்ரக்ருத்யாத்ம விவேகம் முதலிய ஞானங்களைப் பெறவிரும்பி ????னாயிருக்கும்படியைக் குறித்தவாறாம்: இது மகாரார்த்தமென்க.


  269.   
  செப்பாடு உடைய திருமால் அவன் தன்*  செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்*  
  கப்பு ஆக மடுத்து மணி நெடுந்தோள்*  காம்பு ஆகக் கொடுத்துக் கவித்த மலை*
  எப்பாடும் பரந்து இழி தெள் அருவி*  இலங்கு மணி முத்துவடம் பிறழக்* 
  குப்பாயம் என நின்று காட்சிதரும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*

      விளக்கம்  


  • செப்பாடாவது - இந்திரனுக்கிட்ட சோற்றையடங்கத் தானமுது செய்து மழைபெய்வித்து ‘இவை பட்டதுபடுக’ என்று ஈரமற்ற நெஞ்சனாயிருக்கையன்றிக்கே தான் முன்னின்று ரக்ஷித்தருளின் செவ்வைக்குணமா இக்குணம் பிராட்டியோடே சேர்த்தியால் வந்ததென்பார். திருமால் என்றார். அவன் - முதல் வேற்றுமைச் சொல்லுருபு. கப்பு -குடைக்காம்பினடியிற் கிளை விட்டாற் போன்றுள்ள வேத்ரதண்டங்கள். கோவர்த்தன மலையை ஒரு குடையாக உருவகப்படுத்தியதற்கேற்பத் தடங்கை விரலைந்தும் மலரவைத்த கண்ணபிரான் கைவிரல்களைக் கப்பாகவும் பாஹுதண்டத்தைக் காம்பாகவும் உருவகப்படுத்தியவாறு காண்க. பின்னடிகளின் கருத்து; - (மலைகளில் சுனைநீரருவிகள் இன்றியமையாதன வாகையால்) இம்மலையில் கண்டவிடமெங்கும் பரவிப்பெருகுகின்ற தெள்ளருவிகளானவை அமைந்துள்ள படியைப் பார்த்தால் கண்ணபிரானுக்காக முத்துச்சட்டை ஸித்தப்படுத்தப் பட்டுள்ளது போலும் என உத்ப்ரேக்ஷித்தவாறென்க. குப்பாயம் - சட்டை; “மெய்ப்பை சஞ்சுளி கஞ்சுகம் வாரணம், குப்பாயமங்கி சட்டையாகும்” என்பது - திவாகரம். இங்குச் சந்தர்ப்பம் நோக்கி முத்துச்சட்டை எனப்பட்டது. காட்சி - சி விகுதிபெற்ற தொழிற்பெயர்.


  270.   
  படங்கள் பலவும் உடைப் பாம்பு- அரையன்*  படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்* 
  தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத்*  தாமோதரன் தாங்கு தடவரைதான்* 
  அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த*  அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களைக்* 
  குடங்கைக் கொண்டு மந்திகள் கண்வளர்த்தும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*

      விளக்கம்  


  • உரை:1
    
   கருடனைப் புள்ளரையன் என்றாள் கோதை நாச்சியார். அவர் தம் திருத்தகப்பனார் பெரியாழ்வார் ஆதிசேஷனைப் பாம்பரையன் என்கிறார்.பாம்புகளின் அரசனான ஆதிசேஷன் விரிந்த படங்கள் பலவும் உடையவன். அவன் பூமியைத் தாங்கிக் கிடக்கின்றான். அது போல் நீண்ட அழகிய கைகளின் விரல்கள் ஐந்தும் மலர விரித்து தாமோதரன் தாங்கும் கொற்றக் குடை எது தெரியுமா? இலங்கைக்குச் சென்று அதன் பெருமையை முழுக்க அழித்த அனுமனின் புகழினைப் பாடி தங்கள் குழந்தைகளை தங்களின் கைகளில் ஏந்தி பெண் குரங்குகள் தூங்க வைக்கும் கோவர்த்தனம் என்னும் குன்றமே.மந்திகள் மட்டுமின்றி மாநிலத்தில் உதித்தவர் எல்லோரும் அனுமன் புகழ் பாடி அவன் தன் பெருமைகளை நம் குழந்தைகளுக்கு அனுமனின் திருவவதார நாளான இந்த இனிய நன்னாளில் சொல்லுவோம்.

   உரை:2

   கண்ணபிரான் ஐந்து விரல்களாலும் மலையைத் தாங்கிக்கொண்டு நின்றது - ஆதிசேஷன் தனது ஆயிரந்தலைகளினால் பூமியைத் தாங்கிக்கொண்டு கிடப்பதை யொக்குமென்றார் - முன்னடிகளால். பலவும் என்றவிடத்து உம்மை - குறைவில்லாமைப் பொருளைத் தருதலால், முற்றும்மை; இசை நிறையென்னவுமாம். அரையன் - அரசன்; ‘ராஜா’ என்ற வடசொல்விகாரம். பின்னடிகளின் கருத்து ;- அம்மலையிலுள்ள பெட்டைக் குரங்குகள் பண்டு தம் குலத்திற் பிறந்து பற்பல வீரச்செயல்களைச் செய்த ஹனுமான் இராமபிரானிடத்துப் பெற்ற பரிசுகளைப் பாடிக்கொண்டு தம்குட்டிகளை அகங்கையிற் கொண்டு சீராட்டி உறங்கச் செய்யும்படியைக் கூறினபடி. உலகத்திலுங் குழந்தைகளை உறக்க வேண்டுவார் சில கதைகளைச் சொல்லிச் சீராட்டுதல் வழக்கமாயிருப்பதை அறிக. குட்டன் - உவப்பினால் வந்த திணை வழுவமைதி. இதற்கு உள்ளுறை பொருள்; - கபடச்செயல்களுககு ஆசுரமான இந்திரியங்களின் திறலைவென்ற பாகவதர்களின் ஞானானுட்டானங்களைத் தமது கைக்கடங்கின சிஷ்யர்களுக்கு உபதேசித்து இம்முகமாக அவர்களுக்கு அறிவை வளரச் செய்கின்ற மஹாநுபாவர்களின் படியைக் கூறியவாறாம்.


  271.   
  சலமா முகில் பல் கணப் போர்க்களத்துச்*  சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு* 
  நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்*  நாராயணன் முன் முகம் காத்த மலை* 
  இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர்*  இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக்* 
  கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*

      விளக்கம்  


  • சலம் -ஜ?ம் கணம் - ?ணம். களம் - வ?ம். சரம் - ?ரம். தவம் - தவ@. சரமாரி என்றவிடத்து உவமவுருபு தொக்கிக்கிடக்கிறது. பூசலிடுதல் - இடியிடித்தல். நலிவான் - நலிவதற்காக. வீரர்கள் போர்க்களத்தில் நெறுநெறென அம்புகளைப் பொழிவதுபோல மேகங்கள் திரள்திரளாக நீர்கொண்டெழுந்து முழங்கிக் கொண்டு இடைச்சேரியடங்கலும் நீரைப்பொழிந்து வருத்தப்புக, கண்ணபிரான் மலையைக் குடையாக எடுத்துக்கையிற்கொண்டு நின்றது - கேடயம் என்னுமாயுதத்தைக் கையிற்கோத்துக் கொண்டு நிற்றலை ஒக்கும். கேடயம் பகைவரை அணுகவொண்ணாதபடி தடுப்பதிற் சிறந்த கருவியாவதுபோல இம்மலையும் மாரிப்பகையைத் தடுத்தலில் வல்லதாதலால் இவ்வுவமை ஏற்குமெனக. கேடகம் எனினும், கேடயம் எனினும் ஒக்கும். முன்முகம் காத்தமலை - முகமென்று வாயைச் சொல்லிற்றாய் அது இலக்கணையால் வாய்மொழியைச் சொல்லக்கடவதாய், முன்பு இடையர்கள் இந்திர பூஜை செய்யப் புகுந்தபோது அதனை விலக்குங்கால் “இம்மலையே உங்களுக்கு ரக்ஷகம்” என்று தான்சொன்ன வாய்மொழியைத் தவறாமல் காப்பாற்றிக் கொள்வதற்குக் காரணமான மலை என்றுமுரைக்க இடமுண்டு. நாராயணன் - கருத்துடையடைகொளி; பரிசுராங்குராலங்காரம். புலிகளானவை பர்ணசாலைகளில் தவம் புரியாநின்ற ரிஷிகள் கோஷ்டியிற்செல்ல, அவற்றின் கழுத்தை அந்த ரிஷிகள் சொறிந்ததாகக் கூறுவது அவர்களின் தவ உறுதிக்குக் குறைகூறியவாறாகாதோ? எனின்; எல்லாப் பதார்த்தங்களும் எம்பெருமான் தன்மையனவேயாம் என்று கைகண்டிருக்கும் ரிஷிகளாதலால் ஒரு குறையுமில்லையென்க; ??? என்ற சாஸ்த்ரார்த்த அநுஷ்டாநத்தைக் கூறியவாறுமாம். புலிகளின் கழுத்தை ரிஷிகள் சொறியும் போது அவை பரமாநந்தத்துக்குப் பரவசப்பட்டன என்பார், நின்றுறங்கும் என்றார்.


  272.   
  வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன்*  வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை* 
  தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற்*  தாமோதரன் தாங்கு தடவரை தான்* 
  முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்*  முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக்* 
  கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*

      விளக்கம்  


  • கண்ணபிரான் பசுக்களுக்கும் புல்லுந் தண்ணீருங் கொடுத்து வளர்ப்பதனால் தான்பெற்றுள்ள கோவர்த்தநன் என்னுந்திருநாமத்தை அந்த மலை தனக்கு இட்டு அதனைக் குடையாக எடுத்துத் தாங்கிக்கொண்டு நின்றது - வலியதொரு ஸ்தம்பம் பெருஞ்சுமையைத் தாங்கி நிற்பதை ஒக்குமென்று முன்னடிகளால் உவமித்துக் கூறினரென்க. பரத்தை என்றதன்பின் ‘தாங்கி’ என்றொரு வினையச்சம் வருவித்துக்கொள்ளலாம். கண்ணனைத் தூணாகவும், மலையைத் தூண்தாங்கு சுமையாகவும் உருவகப்படுத்தியவாறு காண்க. தூண் -??? பரம் - ??? கண்ணபிரான் இவ்வற்புதச் செய்கையைப் பிரமன் இந்திரன் முதலியோர்க்குக் காட்டாது பரமகிருபையினால் அற்ப மனிதர்க்குக் காட்டியருளினனென்பார் தரணிதன்னில் என்றார்.


  273.   
  கொடி ஏறு செந் தாமரைக் கைவிரல்கள்*  கோலமும் அழிந்தில வாடிற்று இல* 
  வடிவு ஏறு திருவுகிர் நொந்தும் இல*  மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்*
  முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள்*  முன் நெற்றி நரைத்தன போல*  எங்கும்- 
  குடி ஏறி இருந்து மழை பொழியும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*

      விளக்கம்  


  • கண்ணபிரான் ஏழு நாளளவும் ஏகாகாரமாக மலையைத் தாங்கிக் கொணடு நிற்கச் செய்தேயும் கை, விரல், நகம் முதலியவையொன்றும் சிறிதும் விகாரமடையாமையால், இவன் மலையெடுத்து நின்றவிது தொம்பரவர் கூத்துப் போலே ஒரு கண்கட்டுவித்தையாகத் தோன்றுகின்றதே யன்றி ஒன்றும் மெய்க்கொள்ளப் போகவில்லை; மெய்யே மலையைச் சுமந்தானாகில் மேனிவாட்டமுண்டாகாதொழியுமோ? என்று சமத்காரந்தோற்றக் கூறுகின்றார் - முன்னடிகளில். சம்பிரதம் - ஒருவகை அஞ்சனத்தின் உதவியினால் ஒரு முஹூர்த்தகாலத்தளவு நிற்கும்படி மாஞ்செடி முளைக்கச்செய்தல் முதலிய இந்திரஜாலவித்தை. இப்படி இந்திரஜாலமெனக் கூறியதனால இச்செய்கை அபாரமார்த்திகம் என்று சிலர் மயங்கக்கூடுமே எனச் சஙகித்து, அதனைத் தெளிவிக்குமாறு அருளிச் செய்கின்றார் - பின்னடிகளால். அம்மலையிலுள்ள கார்மேகங்கள் அதன் சிகரத்திலே நிலச்செழிப்புண்டாம்படி எங்கும் வர்ஷித்து நீர் கழிந்தமையால் வெளுக்கப் பெற்று அச்சிகரத்தின் மேற்குடியிருக்கும் படியைப் பார்த்தால் அம்மலையின் முன்னெற்றி நரைத்துக் கிடக்கின்றதோ வென்று தோற்றா நின்றதென்று உத்ப்ரேக்ஷித்தவாறு. கண்ணபிரான் மழை தடுக்க மலையெடுத்தபோது அதன் மேல் இவ்வாறு மழையுண்டானதாகப் பொருளன்று; இதை உபலக்ஷண ரூப விசேஷணமாகக் கொள்க. குடியேறியிருந்து மழைபொழியும் - மழை பொழிந்து குடியேறியிருக்கும் என விகுதி பிரித்துக் கூட்டியுரைக்கப்பட்டது. வர்ஷியாமல் வெளுத்திருக்குங் காலத்திலும் மேகங்களிருக்குமிடம் மலைத்தலை யோரமாதல் அறிக. இதற்கு உள்ளுறை பொருள் ;- வேதாந்த நிஷ்டர்களான ஆசாரியர்கள் தம்மடி பணிந்த சிஷ்யர்களுக்கு ரஸமான அர்த்தங்களை உபதேசித்துத் தாங்கள் சுத்தஸ்வரூபர்களாக இருக்கும்படியைக் குறித்தவாறாம்.


  274.   
  அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு*  அரவப்-பகை ஊர்தி அவனுடைய*  
  குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல்*
  திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்- திகழ்*  பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்* 
  பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)

      விளக்கம்  


  • இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார் - இப்பாட்டால். திருவாய்ப்பாடியிற் பிறந்த காளியன் கொழுப்பையடக்கின கண்ணபிரான் க்ஷீராப்திசாயியும் கருடவாஹநனுமான ஸாக்ஷாத் பரமாத்துமா என்பதைத் தெளிவிக்கும்-முதலடி. அரவப் பகையூர்தியவனுடைய-அவன் எடுத்துதரித்த என்றவாறு, குரவமரமும் அதன்மேற் பரந்த கொடிமுல்லையும் நின்றுறங்கு மென்றது-தன்மை நவிற்சி, நன்கு பரவும் மனமுடை என்று மியைக்கலாம்: நன்கு-கு என்ற விகுதிபெற்ற பண்புப்பெயர். “வைகுந்த நண்ணுவரே” எனச் சந்தியாக வேண்டுமிடத்து, “வைகுந்த நண்ணுவரே” என நகரவொற்று மிக்கது, செய்யுளோசை நோக்கி; விரித்தல் விகாரம். (கக)


  478.   
  மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்*  தூய பெருநீர் யமுனைத் துறைவனை *
  ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்*  தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை*
  தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது*  வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க* 
  போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*  தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்.

      விளக்கம்  


  • உரை:1

   நோன்பு நோற்கும் பெண்களில் ஒருத்தி, ‘நாம் நோன்பு நோற்று எம்பெருமானை அநுபவிக்க இலையகலப் பாரியா நின்றோம்; இஃது அழகியவாறே; ‘ச்ரேயாம்ஸிபஹுவிக்நாநி பவந்தி மஹதாமபி” என்று மேலையார் செய்யும் நற்சிரிசைகட்கும் பல இடையூறுகள் மிடைதரமென்று நூல்கள் கூறும்; இராமபிரானை முடிசூட்டுதற்காகச் சம்பராந்தகனான தசரத சக்கரவர்த்தி பாரித்தான்; பிரமவிருடியான வசிட்டன் முஹூர்த்தமிட்டான்; ஸாக்ஷாத் தரும்மெனப்பட்ட இராமன் முடிசூட நின்றான்; பிராட்டியோடே கூடிப் பெரியபெருமாளைத் தொழுதிறைஞ்சினான்; நாடடங்கலும் இவ்வபிஷேக மங்களத்தைப் பிரார்த்தித்து மங்களாசாஸநம் செய்யாநின்றது; இங்ஙனம் அமைந்திடவும் அந்த மங்கள காரியத்திற்குமன்றோ இடையூறு மிடைதந்தது; நாம் நெடுநாளாகப் பண்ணியுள்ள பாவங்கள் பல கிடக்க இன்று செய்யக்கருதிய நற்கிரிசை நன்னர் நிறைவேறுமோ?’ என்று கேட்க; நாம் பகவந்நாம ஸங்கீர்த்தநம் பண்ணவே பாவங்களனைத்தும் தீயிலிட்ட பஞ்சுபோல உருமாய்ந்தொழியுமாதலால் அத்திரு நாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணக்கடவையென்று அவளை நோக்கி மற்றொருத்தி உரைக்கும் பாசுரமாய்ச் செல்லுகிறது இப்பாட்டு.

   உரை:2

     "மாயனும் தெய்வத்தன்மை பொருந்திய வட மதுரையில் உதித்தவனும், சுத்தமான நீர் நிரம்பிய யமுனைக்கரையில் விளங்குபவனும், ஆயர் குலத்தில் தோன்றிய அழகிய விளக்கு போன்றவனும், தேவகியை பெருமைப்படுத்தியும், யசோதைக்கு சிறு மணிக்கயிற்றால் கட்டுண்ட வயிற்றைக் காட்டி சந்தோஷப்படுத்தியவனுமான கண்ணனை, உள்ளும் புறமும் பரிசுத்தமாய் வந்து, வாசனை மிக்க மலர்களால் அர்ச்சனை செய்து, உடலால் வணங்கி, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால், முற்பிறவிப்பாவங்களும், அறியாமல் வருகின்ற பாவங்களும், நெருப்பில் விழுந்த பஞ்சு போல் அழிந்து போகும். எனவே, அவன் திருநாமங்களை சதா ஓதிக்கொண்டிருத்தல் வேண்டும்."


  538.   
  மாட மாளிகை சூழ்*  மதுரைப் பதி* 
  நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு* 
  ஓடை மா*  மத யானை உதைத்தவன்* 
  கூடுமாகில்* நீ கூடிடு கூடலே!*    

      விளக்கம்  


  • உரை:1

   குவாலயாபீடமென்னும் மதயானையை முடித்தருளின அபதாநத்திலே ஈடுபட்டுப் பேசுகிறாள்.-வில்விழாவென்ற வ்யாஜம் வைத்துக் கம்ஸனால் வரவழைக்கப்பட்டு ஸ்ரீக்ருஷ்ய பலராமர்கள் கம்ஸனுடைய அரண்மனையை நோக்கிச் செல்லுகையில், அவ்வரண்மனைவாசல் வழியில் தம்மைக் கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயாபீட மென்னும் மதயானை கோபித்துவர, அவ்யாதவ வீரர் அதனைஎதிர்த்து அதன்தந்தங்களிடையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு அடித்து அவ்யானையை உயிர்தொலைத்துவிட்டு உள்ளே போயினர் என்றவரலாறு இங்குணரத்தக்கது. இரண்டாமடியின் இறுதியிலுள்ள வந்திட்டு என்ற வினையெச்சம்-உதைத்தவன் என்பதிலே அந்வயிப்பதல்ல’ கூடுமாகில் என்பதிலே அந்வயிக்கக்கடவது. இப்போது, கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் இருப்பதாகவும், இவ்வாண்டாள் தான். வடமதுரையிலே யிருப்பதாகவும் பாவநப்ரகர்ஷம் செல்லுகிறபடி. மதுரைப்பதிக்கு “மாடமாளிகைசூழ்” என்று விசேஷணமிட்டஸ்வாரஸ்யத்தைக் கண்டறிந்த பெரியவாச்சான்பிள்ளை ரஸோக்தியாக அருளிச்செய்கிற ஸ்ரீஸூக்திகளைக் காணீர்- “அவன் வில்விழவுக்கென்று கோடித்தான்’ இவள் இவன் வரவுக்கென்றிருக்கிறாள்”.

   உரை:2

   மாடமாளிகைகள் சூழ்ந்த வடமதுரைப்பதியில் வரும்போது கம்சனால் ஏவப்பட்டு நடுவீதியில் மறித்த, மத நீர் ஓடை போல் ஒழுகும் மதம் பிடித்த குவலயாபீடம் என்னும் யானையை உதைத்துக் கொன்றவன் என்னைக் கூடுமாகில் நீ கூடிடு கூடலே.


  539.   
  அற்றவன்*  மருதம் முறிய நடை- 
  கற்றவன்*  கஞ்சனை வஞ்சனையிற்* 
  செற்றவன் திகழும்*  மதுரைப் பதிக்* 
  கொற்றவன் வரில்*  கூடிடு கூடலே!* 

      விளக்கம்  


  • தீயவரை அறவே ஒழித்தவன், மருத மரம் முறிய நடந்தவன், கம்சனை வஞ்சனையால் கொன்றவன், மிகப் புகழ் கொண்டு திகழும் வடமதுரைப்பதியின் அரசன் வருவானெனில் நீ கூடிடு கூடலே.


  560.   
  கதிர் ஒளித் தீபம்*  கலசம் உடன் ஏந்திச்* 
  சதிர் இள மங்கையர்*  தாம் வந்து எதிர்கொள்ள* 
  மதுரையார் மன்னன்*  அடிநிலை தொட்டு* 
  எங்கும் அதிரப் புகுதக்*  கனாக் கண்டேன் தோழீ! நான்*       

      விளக்கம்  


  • உரை:1

   பருவத்தாலும் வடிவழகாலும் தங்களையே எல்லாரும் நோக்கிக்கொண்டிருக்கும்படி மிக்க அழகுவாய்ந்தமாதர்கள் மங்களஸம்ருத்திக்காகத்தீபங்களையுமு பூர்ண கும்பங்களையும் ஏந்திக்கொண்டு எதிர்கொண்டுவர, கண்ணபிரான் பாதுகைசாத்திக்கொண்டு பூமி அதிரும்படி ஸந்தோஷமாக நடநதுவரும்படியைக் கனவில் கண்டேனென்கிறாள். கதிர் என்று கிரணத்திற்குப் பேராயினும் இங்கு இலக்கணையால் ஸூர்யனுக்குப்பேராகிறது. இடையில் விளக்கு அணைந்தால்மங்களத்துக்கு குறையாமென்று ஸூர்யப்ரபைபோலே மிக்கவொளியையுடைய விளக்குக்களைக் கொண்டுவருவர்களென்க. தீபம், கலசம் - வசொற்கள். மதுரையார் மன்னர் - மற்றதிருநாமங்களிற்காட்டில் இத்திருநாமத்தில் கண்ணபிரானுக்கு உகப்பு விஞ்சியிருக்குமென்பதற்கு ஒருஐதிஹ்யமிருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை - ஒரு பக்தன் ஒருக்ருஸ்ணவிக்ரஹத்தை ஏறியருளப்பண்ணி ‘இவர்க்கு என்ன திருநாமம்சரத்துவோம்‘ என்று சிந்தியாநிற்க, பெருமாள் அவனுடையகனவிலே வந்துதோன்றி ‘அப்பா! எனக்கு கன்னாபின்னாவென்று சிலநாமங்களை இடாமல் மதுரைமன்னன் என்றுபெயரிடு‘ என்று நியமித்தாராம்.

   உரை:2

   ஆடல் பாடல்களில் சிறந்த மங்கையர் கதிரவனைப் போல் ஒளிவீசும் தீபங்களையும் கலசங்களையும் ஏந்தி எதிர்கொண்டு அழைக்க வடமதுரையில் வாழ்பவர்களின் மன்னன் மணப்பந்தலின் நிலைப் படியினைத் தொட்டு எங்கும் மங்கல வாத்தியங்கள் அதிர உள்ளே புகுந்துவரக் கனாக் கண்டேன் தோழி நான்


  569.   
  தட வரையின் மீதே*  சரற்கால சந்திரன்* 
  இடை உவாவில் வந்து*  எழுந்தாலே போல்*
  நீயும் வட மதுரையார் மன்னன்*  வாசுதேவன் கையில்* 
  குடியேறி வீற்றிருந்தாய்*  கோலப் பெருஞ் சங்கே!*

      விளக்கம்  


  • உரை:1

   சரத்காலத்தில் எல்லாக்கலைகளும் நிரம்பின பூரணசந்திரன் உதயகிரியின் மேல் வந்து தோற்றினாற்போலே, ஸ்ரீபாஞ்சஜந்யமே! நீயும் கண்ணபிரானது, திருக்கையின்மேலே அழகாகவீற்றிருந்து தோற்றாநின்றாய், உனது பெருமையே பெருமையென்று கொண்டாடுகிறாள். எம்பெருமானுடைய திருக்கை தடவரையாகவும், திருச்சங்காழ்வான் சரத்கால சந்திரமண்டலமாகவும் உருவகப் படுத்தப்பட்டிருக்கின்றமை அறிக. உவா என்று - அமாவாஸ்யைக்கும் பௌர்ணமிக்கும் பெயர், இங்கு பௌர்ணமி விவக்ஷிதம், இடை உவாவில் - உவாவிடையில் - பௌர்ணமியிலே என்கை. இனி, உவர் என்று கடலுக்கும் பெயருண்டாதலால், ‘கடலிலையில் நின்றும் தடவரையின்மீது எழுந்தாற்போல‘ என்றுமுரைக்கலாமாயினும் சுவைகுன்றும். சரற்கால சந்திரன் - வடசொல்தொடர். வாசுதேவன் என்றது - வஸுதேவருடைய புத்திரன் என்றும் எங்கும் நிறைந்துறையுங் கடவுள் என்றும் பொருள்படும்.

   உரை:2

   அழகிய சங்கே!. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் ( சரற்காலம் )பெளர்ணமியன்று பெரிய மலையில் சந்திரன் உதயமாகி ஒளி விடுவது போல, வட மதுரை அரசன் கண்ணன் திருக்கையில் நீயும் குடி புகுந்து, நீ எனக்கு அவன் வாய்ச்சுவையைக் குறித்துக் கூற வேண்டும் ( கண்ணனை விட்டு அகலாது எப்போதும் இருக்கும் பெருமை மட்டுமா இதற்கு உண்டு, அவன் வாய்ச்சுவை அறிந்த பெருமையும் அதற்குண்டு.


  617.   
  மற்று இருந்தீர்கட்கு அறியலாகா*  மாதவன் என்பது ஓர் அன்புதன்னை* 
  உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம்*  ஊமையரோடு செவிடர் வார்த்தை* 
  பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப்*  பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி* 
  மற் பொருந்தாமற் களம் அடைந்த*  மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின்*. (2)   

      விளக்கம்  


  • எம்பெருமானை இப்போதே பெறவேணுமென்று வருந்திக்கிடக்கின்ற ஆண்டாளை நோக்கித் தோழியரும் அன்னையரும் ‘அம்மா! நம் தலையால் ஆவதொன்றுமில்லை, பேறு அவன் தலையாலே ஆகவேணும் என்பது ஸித்தாந்தமான பின்பு நீ இப்படிப்பதறுவதில் பயனொன்றுமில்லையே, அடைவிலேபேறு பெறலரகுமென்று ஆறியிருப்பதன்றோ முறைமை, அஸோக வநிகையிற் பிராட்டியின் அத்யவஸாயம் உனக்குத் தெரியாததன்றோ, அவளைப்போலே நீயும் ஆறியிருக்கவேணுங்காண், நீ இப்படிப் பதறலாகாது‘ என்றாற்போலே சிலஹிதவசநங்களைச் சொல்லப்புக, அவர்களைக்குறித்துக் கூறுகின்றாள் - ‘எனக்கு இப்போது நிகழ்கிற அவஸ்தை இப்படிப்பட்டதென்று சிறிதும் அறிபகில்லாத நீங்கள், பகவத்விஷய காமத்தின் மேலெல்லையிலே நிற்கிற எனக்குச் சொல்லுகிற வார்த்தைகள் வீண், உங்கள் பேச்சு என்காதில் புகவும்மாட்டா, புகுந்தாலும் அவற்றுக்கு மறுமொழி வுறுமளவிலே நான் நிற்கின்றிலேன், ஆகையாலே நீங்கள் எனக்குஹிதஞ் சொல்லப்பார்ப்பதை நிறுத்திவிட்டு * ஒருத்திமகனாப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்த்து சாணுர முஷ்டிகாதிமல்லர்களோடே போர்புரிந்து, வெற்றி பெற்ற கண்ணபிரானெழுந்தருளி யிருக்கிற மதுராபுரியின் ப்ராந்தத்திலே என்னைக் கொண்டுபோய்ப் போடுங்கள்‘ என்கிறாள்.


  624.   
  கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்*  காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்* 
  பற்றி உரலிடை யாப்பும் உண்டான்*  பாவிகாள்! உங்களுக்கு ஏச்சுக் கொலோ?* 
  கற்றன பேசி வசவு உணாதே*  காலிகள் உய்ய மழை தடுத்துக்* 
  கொற்றக் குடையாக ஏந்தி நின்ற*  கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின்* 

      விளக்கம்  


  • மற்றுஞ்சிலபெண்கள் ஆண்டாளை நோக்கி, ‘அம்மா! நீ இராமபிரானை ஆசைப்பட்டாலுங் குற்றமில்லை, மாடுமேய்க்கப் பிறந்த கண்ணனைப்போய் நீ ஆசைப்படாநின்றாய், அவனோ கன்றுகளை மேய்ப்பதற்காக அவற்றின்பின்னே திரிவானொருசிறுவன், ஒரூரிலே தங்குவதுமில்லாமல் பசுக்களுக்கு நீரும்புல்லுமுள்ளவிடத்தே தங்குவானொருத்தன், வெண்ணையைக்களவாடுவதும் நெய்யைக் களவாடுவதுஞ்செய்து உரலிலே பிணிப்புண்டு திண்டாடுமவன், அன்னவனைப் பெறுகைக்கோ நீ இப்படிக்கிடந்து துடிக்கிறது? என்று ஏளனமாகச்சொல்ல, அவர்களைநோக்கிச் சொல்லுகிறாள் அவன் கன்றுகளை மேய்க்கப் பெற்றதும் காடுவாழ்சாதியாகப் பெற்றதும் உரலிடை ஆப்புண்டதும் குணமாகத்தோற்றவேண்டியிருக்க, உங்களுக்கு இவையெல்லாம் குற்றமாகத் தோற்றுவதற்குக் காரணம் உங்களுடைய பாவமேயாம், சிறந்தகுணமே உங்களுக்குக் குற்றமாகத் தோற்ற நீங்கள் சிசுபாலன் பிறந்த முஹூர்த்தத்திலேயோ பிறந்தது? “எத்திற முரலினோடு இணைந்திருந்தேங்கிய எளிவே!“ என்று ஈடுபடவேண்டிய விஷயம் உங்களுக்கு தூஷணார்ஹமாயிற்றே! இனி நீங்கள் இப்படிப்பட்ட அஸந்தர்ப்பமான நீசவார்த்தைகளை என் காதில் விழச் சொல்லுவீர்களாகில், நான் வாயில் வந்தபடி உங்களை நிந்தித்துவிடுவேன். அப்படி நிந்தனைகளுக்கு நீங்கள் ஆளாகாமல், அன்றொருகால் இந்திரன் ஏழுநாள் விடாமழை பெய்வித்தபோது அந்த மழையைத்தடுத்து அனைவரையுங்காத்த கோவர்த்தன மலையினருகே என்னைக்கொண்டு போட்டுவிடுங்களென்கிறான்.


  634.   
  உள்ளே உருகி நைவேனை*  உளளோ இலளோ என்னாத* 
  கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்*  கோவர்த்தனனைக் கண்டக்கால்* 
  கொள்ளும் பயன் ஒன்று இல்லாத*  கொங்கைதன்னைக் கிழங்கோடும்* 
  அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில்*  எறிந்து என் அழலைத் தீர்வேனே*.     

      விளக்கம்  


  • உரை:1

   உள்ளுக்குள்ளே உருகி நைந்துகொண்டிராநின்ற என்விஷயத்திலே சிறிது ஆராய்ச்சியுமில்லாதவனும், என்னை வெறுத்தரையாக்கினவனும், குறும்பு செய்யவதற்கென்றே பிறந்தவனுமான கோபாலக்ருஷ்ணனை ஒருகால் நான்காணப்பெற்றேனாகில், ஆட்டின் கழுத்தில் முலைபோலே என் மார்பில் வ்யர்த்தமாக முளைத்துக்கிடக்கிற இப்பாழும் முலைகளை வேர்பறியாகப் பறித்து அவனுடைய மார்விலே விட்டெறிந்து என்துக்கம் தீரப்பெறுவேனென்கிறாள். உள்ளோ இலளோ என்னாத - இங்கேற வந்து முகங்காட்டாவிட்டாலும் “அவள் பிழைத்திருக்கிறாளா ஒழிந்தாளா?“ என்று ஸாமாந்யமாகப் பிறரை விசாரிக்கலாமே, என்னைப்பற்றி அவனுக்கு எள்ளவாவது கவலையிருந்தாலன்றோ விசாரிக்கப்போகிறான், தன்பெருமையும் தன்போகமுமே தனக்குப் பெருஞ்செல்வமாயிருப்பதால் நானொரு சரக்கு இருப்பதாகவும் அவனுக்கு எண்ணமில்லை என்றவாறு. கொள்ளை கொள்ளி - கொள்ளை கொள்பவன், ஸர்வ ஸ்வாபஹாரம் செய்பவன். இ-பெயர்விகுதி. “கோவர்த்தன்னை“ என்றவிடத்து “பெண்களை வெறுந்தரையாக்கும், பசுக்களை ஒன்று நூறாயிரமாக்கும்” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் அழகு காண்க. “***“ (கா-வர்த்தயதீதி கோவர்த்கந) என்ற வ்யுத் பத்தியில் நோக்கு. “கண்டக்கால்“ என்றசொல்லாற்றலால், அவன் பசுக்களின்பின்னே போமவனாகையாலே அவனைக்காண்பது அருமை என்பது விளங்கும், வருந்தி ஒரகால் காணப்பெற்றேனாகில் என்க.

   உரை:2

   'தோழியர்களே. உள்ளத்தின் உள்ளே உருகி நைந்து போகிறேன். நான் உயிருடன் இருக்கிறேனா இல்லையா என்று கூட கேட்காத, என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொள்ளைக் கொள்ளும் குறும்பனை மாடுகள் மேய்க்கும் இடையனைக் காணும் போது, இருப்பதால் ஒரு பயனும் இல்லாத என் கொங்கைகளை கிழங்கோடு அள்ளிப் பறித்து அவன் மார்பில் எறிந்து என் உடலிலும் மனத்திலும் எரியும் நெருப்பைத் தீர்ப்பேன்'


  637.   
  பட்டி மேய்ந்து ஓர் காரேறு*  பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய்* 
  இட்டீறு இட்டு விளையாடி*  இங்கே போதக் கண்டீரே?* 
  இட்டமான பசுக்களை*  இனிது மறித்து நீர் ஊட்டி* 
  விட்டுக் கொண்டு விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*. (2)

      விளக்கம்  


  • சிறைக்கூடத்தில் கட்டுண்டு கிடப்பாரைப்போலே பரமபதத்தில் திருவனந்தாழ்வான் மடியிலும் ஸேனை முதலியார் பிரமபின் கீழிலும் பெரியதிருவடி சிறகின் கீழிலும் ஒடுங்கி வர்த்தித்தபெருமான் இந்நிலத்தே போந்து யதேச்சமாகத் திரிந்து விளையாடா நிற்கக் கண்டதுண்டோ? என்று கேட்பவர்களின் பாசுரம் முன்னடிகள். தனக்கு மிகவும் ப்ரீதி பாத்ரமான பசுக்களைப் புல்லும் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டுபோய் மேயத்துப் பரமானந்தத்துடனே விளையாடா நிற்குங்கால் ஸ்ரீப்ருந்தாவனத்திலே காணப்பெற்றோம் என்று விடையளிப்பார் பாசுரம் பின்னடிகள். பட்டிமேய்கையாவது - தடை செய்வாரில்லாதபடி கண்டவிடஙகளிலும் சுற்றுச்சுழன்று மேய்கை. இப்படி ஸ்வச்சந்தவிஹாரம் செய்வதற்காகவேயிறே எம்பெருமான் திருநாட்டைவிட்டுத் திருவாய்ப்பாடியில் பிறந்தது. திருநாட்டிலே இவனுக்குப் பட்டிமேய வொண்ணாதே. * வானின் வரசாயிருக்க வேணுமே. அந்தச் சிறையிருப்புக் குறைதீர இங்கே வந்து பட்டிமேய்கிறபடி.


  639.   
  மாலாய்ப் பிறந்த நம்பியை*  மாலே செய்யும் மணாளனை* 
  ஏலாப் பொய்கள் உரைப்பானை*  இங்கே போதக் கண்டீரே?* 
  மேலால் பரந்த வெயில்காப்பான்*  வினதை சிறுவன் சிறகு என்னும்* 
  மேலாப்பின் கீழ் வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே*      

      விளக்கம்  


  • பெண்கள் திறந்திலேயுள்ள வ்யாமோஹமே ஒரு வடிவுகொண்டது என்னலாம்படி. வ்யாமோஹபிண்டமாயிருப்பவனும், ஸகலகுணங்களாலும் பரிபூர்ணனும், எல்லார்க்கும் ஆசைப்படத் தகுந்தவனும், அஸம்பத்தங்களான பொய்களைக் கூசாது கூறுமவனுமான கண்ணபிரான் இங்கே எழுந்தருளக் கண்ட துண்டோ? என்று கேட்பார் பாசுரம் - முன்னடிகள். மேலே வெய்யில்படாதபடி பெரிய திருவடி தன் சிறகைவிரித்து நிழல்செய்ய, அதாகிற மேற்கட்டியின் கீழ் விருந்தாவனத்திலே எழுந்தருளக் கண்டோமென்று விடையளிப்பார் பாசுரம் - பின்னடிகள். ஏலாப் பொய்களுரைப்பானை - “ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமாய் வந்தால் ‘இதெல்லாம் எங்கு நின்றும் பெற்றாய்?‘ என்று கேட்டால் மற்றொன்றுண்டோ? நான் புறம்பு அறிவேனோ? என்னும்.“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் அழகை நோக்குமின். “***“ (கஸ் த்வம் பால! நுஜ கமிஹ தே மந்மந்திராசங்கயா, யுக்தம் தத் நவநீதபாண்டவிவரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா? மாத கஞ்சந வத்ஸகம் ம்ருகயிதும், மகா விஷாதம் க்ஷணாதியேவம் வநவல்லவீநிகித க்ருஷணஸ் ஸ புஷ்ணாதுனந) என்கிற ச்லோகத்தை இங்கே பரக்க உபந்யஸித்தருள்வர் அழகிய மணவாளச்சீயர்.


  640.   
  கார்த் தண் கமலக் கண் என்னும்*  நெடுங்கயிறு படுத்தி*
  என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும்*  ஈசன்தன்னைக் கண்டீரே?* 
  போர்த்த முத்தின் குப்பாயப்*  புகர் மால் யானைக் கன்றே போல்* 
  வேர்த்து நின்று விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*   

      விளக்கம்  


  • உரை:1

   மேகத்திலே அழகிய இரண்டு தாமரைப்பூக்கள் பூத்தனவோ? என்னும்படி யமைந்த திருக்கண்களாகிற வலையிலே என்னை அகப்படுத்தித் தான் போகுமிடமெங்கும் என்னையும் (அதாவது -என் நெஞ்சையும்) இழுத்துக்கொண்டு முன்னடிகள். முத்துச்சட்டையிட்டாற்போலே குருவெயர்ப்பு அரும்பியபுகரையுடைத்தான யானைக்கன்றுபோலே வேர்த்து நின்று விளையாடும்போது விருந்தாவனத்திலே கண்டோமென்பார் பாசுரம் - பின்னடிகள். கார் - முகம்போலே, தண் -குளிர்ந்த, என்றும் உரைக்கலாம். “குப்பாயமென நின்று காட்சி தருங்கோவர்த்தனமென்னுங் கொற்றக்குடையே“ என்றார் பெரியாழ்வாரும். “மெய்ப்பை கஞ்சுளி கஞ்சுகம் வாரணம் குப்பாய மங்கி சட்டையாகும்“ என்பது திவாகரம். கண்ணபிரான் யானைக்குட்டிபோலவும், அவன் வேர்வையரும்புகளை அணிந்து நிற்கும் நிலைமை முத்துச்சட்டை யணிந்திருக்கை போலவும் உவமிக்கப்பட்டுள்ளமை காண்க.

   உரை:2

   கருத்த மேகத்திலே குளிர்ந்த தாமரை மலர் போன்ற கண்ணினால் நீளமான கயிறைக் கொண்டு என்னைப் படுத்தி என்னைக் கவர்ந்து கொண்டு என்னோடு விளையாடும் இறைவன் தன்னைப் பார்த்தீர்களா ? போர்வை போலப் போர்த்திய முத்துக்களினால் ஆன சட்டை கொண்டு ஒளிர்கின்ற கரும் யானைக் கன்றினைப் போல் வேர்க்க விறுவிறுக்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே.


  641.   
  மாதவன் என் மணியினை*  வலையிற் பிழைத்த பன்றி போல்* 
  ஏதும் ஒன்றும் கொளத் தாரா*  ஈசன்தன்னைக் கண்டீரே?* 
  பீதகஆடை உடை தாழ*  பெருங் கார்மேகக் கன்றே போல்* 
  வீதி ஆர வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே* (2)    

      விளக்கம்  


  • உரை:1

   திருமகள் கொழுநனாய், எனக்கு நீலமணிபோலே அனுபாவ்யனாய், வலையிலே அகப்பட்டிருந்து தப்பின பன்றிபோல் செருக்கி ஒருவர் கைக்கும் பிடிகொடாதவனான பெருமானைக் கண்டதுண்டோ? உண்டு, திருவரையில் பீதாம்பரத்தைத் தொங்கத் தொங்க அணிந்துகொண்டு காளமேகக்குட்டியிபோல் திருவீதி நிறைய எழுந்தருளும்போது விருந்தாவனத்திலே கண்டோம். “மாதவனென் மணியினை” என்று ப்ரதீகமெடுத்து -“தன்னுடைய ரஸிசுத்வம் எனக்கு முடிந்தாளலாம்படி பவ்யனாயிருக்கிறவனை” என்று தாத்பர்ய மருளிச்செய்த பெரியவாச்சான் பிள்ளையின் திருவுள்ளத்தின் ஆழத்தை என் சொல்வோம்!. “சுவையன் திருவின்மணாளன்“ என்ற திருவாய்மொழியை அடியொற்றி மாதவனென்பதற்கு ரஸிகனென்றே பொருள்கொண்டார், ஒரு சிறந்த மணியானது பெருவிலையுடைத்தாயிருப்பினும் துணியின் தலைப்பில் முடிந்தாளலாம்படி கைச்சரக்காயிருக்குமென்பது திருவுற்றம்பற்றி என்மணியினை என்பதற்கு “எனக்கு முடிந்தாளலாம்படி பவ்யன்“ எனப்பொருள் கொண்டார். இனி ஸமபிவ்யாஹார ஸித்தமான தாத்பர்ய விசேஷத்தைப் பரமபோய்கமாக அருளிச்செய்தார்.

   உரை:2

   மாதவன் என் மணியினை வலையில் இருந்து தப்பிப் பிழைத்த பன்றி போல் ஏதும் ஒன்றும் நாம்  கொள்ள , கைக்குப் பிடி தாராமல் செல்லும் இறைவனைக் கண்டீர்களா ? தனது மஞ்சள்  பட்டாடை தாழப் பெரும் கார் மேகக் கன்று போல வீதியில் நிறைந்து வருவானை விருந்தாவனத்தே கண்டோமே.


  642.   
  தருமம் அறியாக் குறும்பனைத்*  தன் கைச் சார்ங்கம் அதுவே போல்* 
  புருவ வட்டம் அழகிய*  பொருத்தம் இலியைக் கண்டீரே?* 
  உருவு கரிதாய் முகம் சேய்தாய்*  உதயப் பருப்பதத்தின்மேல்* 
  விரியும் கதிரே போல்வானை*  விருந்தாவனத்தே கண்டோமே*            

      விளக்கம்  


  • உரை:1

   தயையென்கிற தர்மத்தை ஈஷத்தும் அறியாதவனாய், குறும்பு செய்வதையே தொழிலாகக்கொண்டவனாய், தன்கையிலுள்ள சார்ங்க வில்போன்று வட்டமாய் அழகியதான திருப்புருவங்களை யுடையவனாய், உதந்தாரோடே பொருந்திவாழப் பெறாதவனான பெருமானைக கண்டதுண்டோ? உண்டு, கண்டாருடைய கண்களெல்லாம் குளிரும்படி இருண்டவ்வையுடையனாய், செந்தாமரைபோற் சிவநத திருமுகமண்டலத்தை யுடையவனாய், உதய பர்வதத்தின்மேலே ஆதித்யன் உதிக்கும்போதுள்ள ப்ரபாவிசேஷத்தையுடையனான கண்ணபிரானை விருந்தாவனத்திலே கண்டோம். (தர்மம்) என்றும் வடசொல் தரும்மெனத் திரிந்தது. “ஆந்ரு சம்ஸ்யம் பரோ தரம்“ என்று பிறர் பக்கல் இரக்கமே பரம தர்மமாகச் சொல்லுகையாலே அப்படிப்பட்ட இரக்கமில்லாதவனென்று ஊடல் தலையெடுத்துச் சொல்லுகிறபடி.

   உரை:2

   நியாயம் என்பது அறியாத குறும்பனைத்தனது கையில் உள்ள சாரங்கம் எனும் வில்லைப் போல்புருவ வட்டம் கொண்ட அழகிய பொருத்தம் இல்லாதவனைக் கண்டீர்களா ? உருவம் கருமையாக முகம் செம்மையாய்
   மலையின் மீது விரிகின்ற கதிரைப் போன்ற முகம் கொண்டவனை
   விருந்தாவனத்தே கண்டோமே.


  643.   
  பொருத்தம் உடைய நம்பியைப்*  புறம்போல் உள்ளும் கரியானைக்* 
  கருத்தைப் பிழைத்து நின்ற*  அக் கரு மா முகிலைக் கண்டீரே?* 
  அருத்தித் தாரா கணங்களால்*  ஆரப் பெருகு வானம் போல்* 
  விருத்தம் பெரிதாய் வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே*     

      விளக்கம்  


  • உரை:1

   கீழ்ப்பாட்டில் பொருத்தமிலியைக் கண்டீரே என்றுவைத்து இப்பாட்டில் “பொருத்தமுடைய நம்பியை“ என்றது ஏன்? என்னில், பத்துடையடியவர்க்கு எளியவனான பெருமானையோ நாம் பொருத்தமிலி என்பது, அப்படிச் சொல்வது தகுதியல்ல. அவன பொருத்தமுடையவனேயாவன் என்று திருவுள்ளம்பற்றிச் சொல்லுகிறாள். என்பர் சிலர். அங்ஙன்ன்றியே “இந்தப்பிள்ளை பரமஸாது“ என்றால்அஃது எதிர்மறை இலக்கணையாய் துஷ்டன் என்று காட்டுமாபோலே இங்கும் பொருத்தமுடைய நம்பியென்றது பொருத்தமில்லாமையே சொல்லிற்றாகக் கொள்க இதுவே பெரியவாச்சான் பிள்ளை திருவுள்ளம்பற்றின கருத்தாம். பொருத்தமிலியென்பது நாட்டில் பொருந்தாரளவில் நிற்கு மன்றன்றோ“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி -பொருத்தமில்லாதவர்கள் உலகிலும் பலபேருண்டு, அவர்களைப் பொருத்தமிலிகள் என்று சொல்லுகிறாப்போலவே எம்பெருமானையும் பொருத்தமிலி என்று சொல்லிவிட்டால் நாட்டாருடைய பொருத்தமின்மைக்கும் எம்பெருமானுடைய பொருத்தமின்மைக்கும் வாசி ஏற்படாமல் போகுமென்று அதற்காக விலக்ஷணப்ரக்ரியையிலே சொல்லுகிறபடி. அதாவது விபரீதலக்ஷணை.

   உரை:2

   உள்ளும் புறமும் ஒன்றாய்ப் பொருந்திய நம்பியை,  உடல் போலவே உள்ளமும் கருப்பானவனை தான் சொன்ன வாக்கை நிறைவேற்றாத அந்தக் கரிய நிற முகில் நிறத்தவனைக் கண்டீர்களா ? அருந்ததி முதலான  விண்மீன் கூட்டங்களால் நிறைந்து வழியும் வானம் போல் கூட்டம்  பெரிதாக வருவானை விருந்தாவனத்தே கண்டோமே.


  644.   
  வெளிய சங்கு ஒன்று உடையானைப்*  பீதக ஆடை உடையானை* 
  அளி நன்கு உடைய திருமாலை*  ஆழியானைக் கண்டீரே?* 
  களி வண்டு எங்கும் கலந்தாற்போல்*  கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்* 
  மிளிர நின்று விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*       

      விளக்கம்  


  • உரை:1

   கடல்போலே கறுத்த திருமேனிக்குப் பரபாகமான வெண்மையையுடைய விலக்ஷணமான ஸ்ரீபாஞ்சந்யத்தைகையிலேயுடையனும், பீதாம்பரதரனும், பிராட்டியோட்டைச் சேர்த்யடியாக கருணையுடையனும் திருவாழியாழ்வானை யுடையனுமான பெருமானைக கண்டதுண்டோ? மதுபானத்தாலே மதித்தவண்டுகள் பரம்பினாற்போல, பரிமளப்ரசுரமாய் அழகான திருக்குழல்களானவை திருத்தோள்களிலே நிறலைய விளையாடா நிற்க விருந்தாவத்திலே கண்டோம். வெளிய - வெள்ளிப் என்பதன் தொகுத்தல். இப்பாட்டுக்கு அழகிய மணவாளச்சீயர் மூலத்தின்மேல் பொருள் அரளிச்செய்யும்போது ‘வெளியசங்கொன்றுடையானை, என்றதன் பக்கத்திலே ஆழியானை என்பதைக்கொண்டு சேர்த்து “***“ (பாடக்ரமாத் அர்த்தக்ரமோ பலீயாந்) என்கிற ந்யாயத்தாலே “வெளிசங்கொன்றுடையானை ஆழியானை” என்று அந்வயித்துப் பொருள் கொள்ளுதல் நான்று என்றருளிச்செய்து, மேலே வியாக்கியானம் ஸேவிக்குமிடத்து.

   உரை:2

   வெண் சங்கு உடையவனை, மஞ்சள் ஆடை உடுத்தியவனை ,இரக்கமும் அன்பும் நன்றாகவே கொண்ட திருமாலை,  சக்கரம் உடையவனைக் கண்டீர்களா ? (என்னடா..போன பாடல் வரை திட்டிட்டு இருந்தவள் இந்தப் பாடலில் இரக்கம் நன்கு கொண்ட திருமால் என்கிறாளே மனம் திருந்திவிட்டாளா என ஐயம் வேண்டாம்.. எந்த ஒரு சொல்லையும் சொல்கின்ற விதம் என ஒன்று உண்டில்லையா? அளி உடையவன் என்று சொல்லல அளி நன்கு உடையவன் என்கிறாள்..சற்றே எள்ளலாக..வஞ்சப்புகழ்ச்சி அணி என்றே உண்டு தமிழில்..ஒருவரைப் புகழ்வது போல இகழ்வது..இகழ்வது போலப் புகழ்வது..இவள் புகழ்வது போல இகழ்கிறாள்..திருமால் இரக்கமுடையவன் என்று சொன்னால் ஆமாமா நல்ல இரக்கமுடையவன் என்று சற்று ஏளனப் புன்னகையோடு சொன்னால் எப்படி இருக்குமோ அப்படிக் கற்பனை செய்துகொள்ளுங்கள் ..அடையாளம் சொல்கிறாள்.. வெண்சங்கு வச்சிருப்பான்..சக்கரம் வச்சிருப்பான்..மஞ்சள் நிறத்தில் ஆடை உடுத்தி இருப்பான்..அன்பு தான..நல்லா உடையவன் ம்க்கும்.. அவனைப் பார்த்தீங்களா..? )


  645.   
  நாட்டைப் படை என்று அயன் முதலாத்*  தந்த நளிர் மா மலர் உந்தி* 
  வீட்டைப் பண்ணி விளையாடும்*  விமலன்தன்னைக் கண்டீரே?* 
  காட்டை நாடித் தேனுகனும்*  களிறும் புள்ளும் உடன் மடிய* 
  வேட்டையாடி வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே* (2)

      விளக்கம்  


  • - சிறிது இடத்தைத்தானே கைதொட்டு ஸ்ருஷ்டித்து மேலுள்ளதையெல்லாம் ஸ்ருஷ்டிங்களென்று சதுர்முன் முதலான ப்ரஜாபதிகளையுண்டாக்கினவனும், அந்த நான் முகனுக்கிருப்பிமாகத் திருநாபிக் கமலத்தை புண்டாக்கித் தந்து இதுவே லீலையாக இருப்பணுமான பரமபுருஷனைக் கண்டதுண்டோ? கம்ஸன் ஏவின அஸுராவேம் பெற்ற ஐந்துக்களையெல்லாம் முடித்துக்கொண்டு வேட்டையாடிவந்த அப்பெருமானை விருந்தாவனத்திலே கண்டோம் “அயன் முதலானவர்களை“ என்றதநிணங்க “நாட்டைப்படைமின்“ என்று பன்மையாகவன்றோ இருக்கவேணும், படை என்று ஒருமையாக இருத்தல் கூடுமோ? எனின், அயன் முதலானவர்களைத் தனித்தனியே விளித்து “நீநாட்டைப்படை“ எறு விதிதத்தாகக்கொள்க. “அயன் முதலாத்தந்த“ என்பதைவிட “அயன்றன்னைத்தந்த“ என்று படமாகில்அழகாயிருக்குமென்று நம்பிள்ளை அருளிச்செய்வாராம். அயன்-பிரானை, முதலா-முதன்மையாக தந்த-, என்றும் பொருள் கொள்ள இடமுகடு. அயன் -அஜ என்ற வடசொல்விகாரம். அ-எம்பெருமான் பக்கலில், ஜா-தோன்றினவன். விமலன் -லீலாரஸந்தவிர வேறொருபலனை விரும்பாமையாகிற தூய்மையுடையவன் என்கை.


  646.   
  பருந்தாள்களிற்றுக்கு அருள்செய்த*  பரமன்தன்னைப்* 
  பாரின் மேல் விருந்தாவனத்தே கண்டமை*  விட்டுசித்தன் கோதை சொல்* 
  மருந்தாம் என்று தம் மனத்தே*  வைத்துக் கொண்டு வாழ்வார்கள்* 
  பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்ப்*  பிரியாது என்றும் இருப்பாரே* (2)     

      விளக்கம்  


  • பருத்த கால்களை உடைய யானைக்கு அருள் செய்த ( முதலையின் பிடியில் மாட்டிக்கொண்ட யானை , வெகு நேரம் போராடி இறுதி நேரத்தில் திருமாலை அழைக்கின்றது.. உடனே  யானைக்கு அருள புவி வருகிறார் திருமால்..அதனைத் துன்பத்தில் இருந்து விடுவித்து   காப்பாற்றி அருள்கிறார்..வைகுந்தம் புகுன்றது திருமாலின் அருள் பெற்ற யானை.. உலகத் துன்பங்களில் எல்லாம் உழன்றாலும் அவன் திருவடிகளை அடைக்கலம் புகும் பொழுது அவன் வந்து காத்து அருள்வான் என்ற நம்பிக்கையை மகள் கோதைக்குக் கொடுத்தவர் பெரியாழ்வார்.


  1512.   
  வில் ஆர் விழவில் வட மதுரை*  விரும்பி விரும்பா மல் அடர்த்து* 
  கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்காய்ந்தான்*  பாய்ந்தான் காளியன்மேல்*
  சொல் ஆர் சுருதி முறை ஓதிச்*  சோமுச் செய்யும் தொழிலினோர்* 
  நல்லார் மறையோர் பலர் வாழும்*  நறையூர் நின்ற நம்பியே.      

      விளக்கம்    1527.   
  மன்னும் மதுரை*  வசுதேவர் வாழ் முதலை* 
  நல் நறையூர்*  நின்ற நம்பியை*  வம்பு அவிழ் தார்
  கல் நவிலும் தோளான்*  கலியன் ஒலி வல்லார்* 
  பொன்உலகில் வானவர்க்குப்*  புத்தேளிர் ஆகுவரே. (2)  

      விளக்கம்  


  • உரை:1

   மன்னு மதுரை – பகவத் ஸம்பந்தம் ஒருநாளும் மாறாமல் நித்யமாயிருக்கப்பெற்ற மதுரை என்றபடி; முதலில் ஸ்ரீவாமநமூர்த்தி நெடுநாளளவும் தவம்புரிந்த ஸித்தாச்ரமமாயிருந்தும், பிறகு ஸ்ரீசத்ருக்நாழ்வான் பிரதிபக்ஷ நிரஸநம் பண்ணி அரசாட்சிபுரிந்த இடமாயிருந்தும், பின்பு ஸ்ரீக்ருஷணபகவான் திருவவதரித்த விடமாயும் ஆக விப்படி பகவத்ஸம்பந்தம் இடையறாது அநுவர்த்திக்கப்பெற்ற ஊர். புத்தேளிர் – தேவதைகள் என்றபடி. திருவாசசிரியத்தில் “நான் முகம் புத்தேள்” என்ற நம்மாழ்வார்பிரயோகமுங்காண்க. நித்யஸூரிகளால் கொண்டாடப்படுவர்களென்றபடி.

   உரை:2

   மன்னு வடமதுரை என்று நாச்சியார் சொன்னதைப் போல் இவர் மன்னு மதுரை என்கிறார். வட என்று சொல்லவில்லை; அதனால் தமிழக மதுரையைத் தான் சொன்னார் என்று கொள்வதில் தட்டில்லை. ஆனால் மன்னு மதுரை என்பது வசுதேவருக்கு அடைமொழியாக வந்ததால் இங்கே சொல்லப்படும் மதுரை வடநாட்டு மதுரை என்பது தெரிகிறது. தமிழக மதுரையில் வசுதேவர் வாழவில்லை; அவருக்குக் கோவிலும் இல்லை.

    


  3675.   
  பொருள்கைஉண்டாய்ச் செல்லக்காணில்*  போற்றிஎன்றுஏற்றுஎழுவர்* 
  இருள்கொள்துன்பத்து இன்மைகாணில்*  என்னே என்பாரும்இல்லை*
  மருள்கொள்செய்கை அசுரர்மங்க*  வடமதுரைப் பிறந்தாற்கு* 
  அருள்கொள் ஆளாய் உய்யல்அல்லால்*  இல்லைகண்டீர்அரணே.

      விளக்கம்  


  • கண்ணுயிருப்பவர்களாதலால் அந்த ஸ்வப்ர யோஜனத்திற்காக நேசத்தை அபிநயிப்பவர்களே யல்லது அதற்கு வழியில்லை யென்றால் ஆணுகவும்மாட்டார்கள்; ஆகவே அன்னவர்களிடத்துப் பற்று விடத்தக்க தென்கிறாரிப்பாட்டில், "பைத்திரக்காரனைச் சுற்றிப் பத்துப்பேர்; பணக்காரனைச் சுற்றிப் பதினாயிரம்பேர்" என்றொரு பழமொழியண்டே ஒருவன் கையில் பொருளுள்ளதாகத் தெரியவர்தான் அதைப் பறிக்கனென்பு வந்து சேர்வாருவர்; வரும்போதே போற்றி பல்லாண்டு ஜீதம் தெனன்று கண்ணப் பணிமொழிகளைக் கூறி அபரிமிதமான ஆதாரவை அபிநயிப்பர்கள்; உனக்கு இன்னமும் கிழிச்சிரை பெருகவேணுமப்பா என்பார்கள்; தக்களுக்கொரு ப்ரயேதத்தில் கருத்தில்லை போலவும், அவனுக்கு மேன் மேலும் ஸம்ருத்திகள் பெருகுவதே தங்களுக்குப் பரமானந்தம்போலவும் காட்டிப்போல பேசுவர்கள்; அவனும் இவற்றைக் கேட்டு மயக்கி "இப்படி நம்முடைய ஸம்ருத்தயே தனக்கு பிரயோஜனமா ருப்பானொருவ அண்டாவதே" என்று மனம் பொங்கிக்கு வர நோக்குவன்; 'நம் வலையில் அசப்பட்டுவிட்டானிலன்' என்று நிச்சயித்து அன்று முதலாகவே பொருளைப் பறிக்கத் தொடங்குவர்கள். "ஜீவாத்மஹஸோ நம்ரா க்ருஹீத்வா கிம் கநிஷ்டா: கிமு ஜ்யேஷ்டா: " உன்றான் ஒரு மஉறகனி ஏற்றச்சாலும் துர்ஜநமும் ஒரே வகுப்பாம்.


  3676.   
  அரணம்ஆவர் அற்றகாலைக்கு*  என்றென்று அமைக்கப்பட்டார்* 
  இரணம்கொண்ட தெப்பர்ஆவர்*  இன்றியிட்டாலும் அஃதே*
  வருணித்துஎன்னே?*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
  சரண்என்றுஉய்யப் போகல்அல்லால்*  இல்லைகண்டீர் சதிரே. 

      விளக்கம்  


  • அற்றகாலைக்கு அரணமாவர் என்றென்று அமைக்கப்பட்டார் 'அற்றகாலைக்கு' என்றது கைம்முதலற்ற காலத்திற்கு என்றபடி. இப்போது நாம் செல்வம் மிக்கவர்களாக இருந்தாலும் வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பதில்லையாதலால் ஒருகால் நமக்கு வறுமை நேருமாயின் அப்போது உதவுவர்கள் என்றெண்ணிச் சிலரிடத்தே பொருளைச் சேமிக்க இட்டு வைப்பாருண்டே; அது சொல்லுகிறது இங்கு. தைத்திரீயஸ்ஹிதையில் முதற் காண்டம் ஐந்தாவது ப்ரசகத்தின் தொடக்கத்தில், தேவாஜீராஜ் ஜம்யத்தா ஆஜந் தே தேவா விஜய முபயந்த; அக்நௌ வாமம் வஸீ ஸம்ந்யததத இதமுநோ பவிஷ்யதி யதி நோ ஜேஷ்யந்தீதி என்ற ஒர் உபாக்கியான மேதப்பட்டுள்ளது; தேவர்களும் அசுரர்களும் போர்புரிந்து கொண்டிருந்த காலத்துத் தேவர்களுக்கு வெற்றியுண்டாயிற்றாம். அப்போது அத்தேவர்கள் மெற்றொருகால் நமக்குத் தோல்வியுண்டானால் அப்போது உபஜீவிக்க இருக்கட்டும் என்று நினைத்துத் தங்களுடைய சிறந்த செல்வத்தை அக்நிதேவதையிடத்து இட்டுவைத்தார்கப் அந்த தேவதை அதனைக் கொள்ளைகொண்டு அகன்றதாம். அக்கதையை இங்கு நினைப்பது. இப்படி, அற்றகாலைக்கு அரணமாவரென்று கருதி ஆராதிக்கப் பெற்றவர்கள் அக்கருத்தின்படி ஆபத்துக்கு உதவுகிறார்களோ வென்னில்; இரணங்கொண்ட தெட்புராவர் தங்களுக்கு எதோ கடன் செலுத்த வேண்டியிருந்து அதனைச் செலுத்தினதாக நினைத்துக் கிடப்பர்களே யல்லது சிறிதளவும் உதவிபுரியார்கள். சக்தியற்ற காளிலுங்கூட இவன் நம்மை இப்போது ஆராதிக்கவில்லையே என்று வெறுத்துமிருப்பர்கள். இரணம்–'ருணம்' என்னும் வட சொல்லின் விகாரம். தெப்பர்–தப்ரர் என்பது வடசொல் ; புல்வியர் என்றபடி. இன்றியிட்டாலும் அஃதே=ஏற்கெனவே பச்சையிட்டு அராதியாமற் போனாலும் ஆபத்து வந்தால் கைவிடுவார்தாம் உளர் என்றபடி. இங்கே ஈடு:– "அன்றிக்கே, இப்படியே இப் பச்சையிட்டவன் நமக்கு ரக்ஷகனென்று ஆராதியா நிற்கச் செய்தே நடுவே இவன முடிவது, அப்போதும் கீழச்சொன்னதுனே பலிதமா மித்தனை." வருணித்து எண்ணே ! நன்றிகெட்டார்களான உலத்தாரின்படியை வருணிப்பதற்கோ நாம் வாய் படைத்தது ! என்று அதைவிட்டு ஸர்வாக்ஷகன்படியைப் பேசவொருப்படுகிறார். இவ்விடத்தில் ந தேம்பா மத்யமா தாந! கர்ஹிதவ்யா கதஞ்சா தாமேவ இசஷ்வாரு நாதஸ்ய பாநஸ்ய கதாம் குரு என்று இளைய பெருமாளை நோக்கிப் பெருமானருச்செய்த ச்லோகம் ஊட்டில் இன்சுவை மிக வியாக்கியானிக்கப்பட்டுள்ளது ஸேவிக்கத் தக்கது [வடமதுரைப் பிறந்தவன் இத்யாதி] கிர்ஹேதுகமாக உபகாரம் செய்தருள் பவனுடைய ஸெளசீல்யம் முதலிய கல்யாண குணங்களே நமக்கு ரக்ஷகமென்று எண்ணி உஜ்ஜீவித்துப் போமதொழிய வேறொன்றும் நமக்குத் தஞ்சமன்று என்றாராயிற்று "இல்லை கண்டீர் கதிரே" என்றவிடத்து; ஊட்டில் – "நெற்றி பெருந்துப் பலமொன்றுமிற்றிக்கேயிருக்கமென்னுமது இளிம்பிநே; நெற்றி அல்பமாய் பலம் கணக்கப்பெறுமதிதே கதிராவது நமவென்னவிநே நெற்றி; சமன்கொள்வீறேபலம்" என்கிற ஸ்ரீஸூக்திகளுள்ளன. இங்கு நெற்றியாவது ப்ரயாஸம். நேர்த்தி என்கிற சொல்லே பூருவர்களால் எழுதப்பட்டிருந்ததென்றும், பின்புள்ளவர்களால் அச்சொல் நெற்றியென்று திரித்து எழுதப்பட்டதென்றும் சிலர் சொல்லுவர்; நெற்றி, நேர்த்தி, நேர்ச்சி என்று மூவகைச் சொற்களும் ப்ரயாஸமென்னும் பொருளில் வருவன வென்பர் பலர்.


  3678.   
  இல்லைகண்டீர் இன்பம்அந்தோ!*  உள்ளது நினையாதே* 
  தொல்லையார்கள் எத்தனைவர்*  தோன்றிக் கழிந்தொழிந்தார்?*
  மல்லை மூதூர்*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே* 
  சொல்லிஉய்யப் போகல்அல்லால்*  மற்றொன்றுஇல்லைசுருக்கே.

      விளக்கம்  


  • எம்பெருமானே பரமபுருஷார்த்தம் என்பதுணராதே முன்னே கழிந்த பலர் பாழாய்ப் போயினர்; நீங்களும் அங்ஙனே நசித்துப் போகாமே வடமதுரைப்பிறந்த பெருமானுடைய திருக்குணங்களைச் சொல்லி உய்யப்பாருங்கள்; இது தவிர வேறு ஹிதமில்லை ஆத்மாவுக்கு என்கிறாரிப்பாட்டில். பாட்டுத் தொடங்கும்போதே இல்லை கண்டீரின்பமந்தோ! என்கிறார். கெடுவிநான் ! துக்கமயமான ஸம்ஸாரநிலத்தில் ஸீநாபாஸமுள்ளதேயல்லது உண்மையான ஸீதம் லவலேசமுமில்லை திடீர் என்கிறார். இதை நீங்கள் அறியாதவர்களல்லீரே; அறிந்தவுங்களுக்கு நான் எடுத்துக்காட்ட வேணுமோ; என்பது அந்தோ வென்பதன் கருத்து "ப்த்யக்ஷமும் அகிஞ்சித்தரமாயிருக்க உபதேசிக்கிறாரிறே" என்பர் நம்பிள்ளை. இதனால் ஆழ்வாருடைய அருளின் கனம் தெரிவிக்கப்பட்டதாம். உள்ளது நினையாதே யென்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் பணிப்பர்; 'ஸம்ஸாரத்தில் இன்பமில்லை' என்கிற வுண்மையை நினையாமல் என்பது ஒரு பொருள். 'ஸுகரூப முமாய் நித்யமுமாயிருப்பது பகவத்விஷயம்' என்கிறவுண்மையை நினையாமல் என்பது மற்றொரு பொருள். தொல்லையார்களெத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார் = தோன்றினவிடந்தன்னிலே நின்று தீய்ந்துபோம் சிலபூண்டுகளுண்டே; அப்படி உத்பத்தியும் விநாசமுமேயாய்க் கழிந்து போனவர்கள்–உள்ளது நினையாதே தொலைந்து போனவர்கள் எண்ணிக்கையில் அகப்படுவர்களோ? ஸம்ஸாரமோ அநாதி; விவேகமோ துர்லபம்; அவிவேசிகளாயே மாண்டு போனவர்கள் அஸங்க்யேயர் என்க. 'நாங்கள் அப்படி அவிவேகிகளாய்த் தொலைந்து போககில்லோம்; எங்களுக்கு உய்யும் விரகு சொல்லலாகாதோ?' என்று சிலர் கேட்க, பின்னடிகளால் ஹிதமூரைக்கிறார். மல்லை மூதூர் வடமதுரை= செல்வச்சிறப்புடைனை பற்றி மல்லை யென்கிறது. பகவத் ஸம்பந்தம் அநாதியாயுள்ளது பற்றி மூதூர் என்கிறது. "ஸித்தாச்ரமமாய் ஸ்ரீவாமனனெழுந்தருளியிருந்தும், ஸ்ரீசத்ருக்நாழ்வான் படை வீடுசெய்தும் கிருஷ்ணன் வந்தவதரித்தும் இப்படி பகவத்ஸம்பந்தம் மாறாதே போருகிற தேசமாயிற்று" என்பது ஈடு. திருப்பாவையில் "மன்னு வடமதுரைமைந்தனை" என்றவிடத்து வியாக்கியானமுங்காண்க.


  3679.   
  மற்றொன்றுஇல்லை சுருங்கச்சொன்னோம்*  மாநிலத்துஎவ்உயிர்க்கும்* 
  சிற்றவேண்டா சிந்திப்பேஅமையும்*  கண்டீர்கள்அந்தோ!*
  குற்றம்அன்றுஎங்கள் பெற்றத்தாயன்*  வடமதுரைப்பிறந்தான்* 
  குற்றம்இல்சீர் கற்றுவைகல்*  வாழ்தல்கண்டீர்குணமே. 

      விளக்கம்  


  • எம்பெருமானைப் பற்றுவதினுடைய எளிமையையும் இனினையையும் எடுத்துரைக்கிறன்ர். மற்றொன்று இல்லை= இத்தொடொக்க வேறொன்று எண்ணலாவதில்லை; அன்றியே; எத்தனை தடவை சொன்னாலும் இது தவிர வேறொருவார்த்தை சொல்லலாவதில்லை என்னவுமாம். சுருங்கச் சொன்னோம்= உங்கள் நெஞ்சில் தேக்கிக் கொள்ள வொண்ணாதபடி காடு பாய்ந்து சொல்லுகை பன்றிக்கே ஸாரஸம்சேஷபமாகச் சொல்லுகிறோமொகை. சொன்னோமென்றது–சொல்லுகிறோமென்றபடி. மாநிலத்து எவ்வுயிர்க்கும் = கடல் சூழ்ந்த மண்ணுலகிலுள்ளாரெல்லாரும் இது கேட்க அதிகாரிகள். "இவ்வர்த்தத்துக்கு அணியார்" பரமபதத்திலுள்ளாராகிலும் உபதேசத்துக்கதிகாரிகள் ஸம்ஸாரத்திலுள்ளாரென்கை" என்பது ஈடு. ஸித்தோபாயஸ்வீகாரஞ் சொல்லுகிற இப்பாட்டில் சிற்றவேண்டா என்பதே உயிரானது; கிற்றுதல், சிதறுதலாய், ப்ரக்கவொரு வியாபாரம் பண்ணவேண்டா வென்கை. இவ்வுபாயத்திவிழியுமவனுக்குப் பரக்கவொரு வியாபாரம் பண்ணவேண்டா வென்னுமிடம் சரமச்லோகஸித்தம். ஸகலப்ரவ்ருத்தியினுடையவும் நிவ்த்தியே இவனுக்கு வேண்டுமென்பது ஸர்வதர்மாந் ப்ரித்யஜ்ய என்பதனால் சொல்லிற்றன்றோ. சிந்திப்பே அமையும் = ரக்ஷித்தருண வேணுமென்று வாயாலே சொல்லி ப்ரார்த்திக்கவும் வேண்டா; அஞ்சவி: பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவப்ரஸதநி என்கிறபடியே பகவத்ப்ரஸாத ஹேதுபூதமான அஞ்ஜவியைப்ரயோகிப்பதோ. குஹன் காகம் முதலானாரைப்போலே ரக்ஷசுவஸ்து இருந்தவிடத்தே வருவதோ இவையும் செய்யவேண்டா: *ஜ்ஞாநாந் மோக்ஷ:* என்று ஞானத்தாலே மோக்ஷமென்று சொல்லி யிக்கையாலே மாநஸிகமான பற்றுதலே போதும் என்றவாறு, த்ருடாத்யவஸாய ரூபமாயிருப்பதொரு ஜ்ஞாநவிசேஷத்தைத் திருவுள்ளம்பற்றிச் 'சிந்திப்பேயமையும்' என்கிறார். முமுக்ஷுப்படி த்வயப்ரகரணத்தில் "வாசிகமாகவும் காயிகமாகவும் பற்றினாலும் பேற்றுக்கு அழிவில்லை; ஜ்ஞாநாந் மோக்ஷ மாகையாலே மாநஸமாகக் கடவது" என்றுள்ள சூர்ணிகை இங்சு அநுஸந்தேயம்.


  3680.   
  வாழ்தல்கண்டீர் குணம்இது அந்தோ!*  மாயவன் அடிபரவிப்* 
  போழ்துபோக உள்ளகிற்கும்*  புன்மைஇலாதவர்க்கு*
  வாழ்துணையா*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே* 
  வீழ்துணையாப் போம்இதனில்*  யாதும்இல்லைமிக்கதே. 

      விளக்கம்  


  • கண்ணபிரான் திருவவதாரம் செய்தது எதற்காக? என்றொரு கேள்வி பிறப்பதுண்டு ; பகவத் கீதையில் சுபரித்ராணுய ஸாதூநாம் விநாசாய சதுஷ்க்ருதாம், தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே என்று அவன்தாநே பணித்திருப்பதைக் கொண்டு அக்கேள்விக்கு விடை கூறுவதுண்டு. சிஷ்டரக்ஷணமோ துஷ்டசிக்ஷணமோ தர்மஸ்தாபனமோ இலை ஸங்கல்பமாத்ரத்தாலே ஸாத்யமாகாதோ? இவற்றுக்காக நேரில் வந்து பிறக்க வேணுமோவென்று கேட்பதுண்டு; துஷ்ட நிரஸனம் ஒருகால் ஸங்கல்ப ஸாத்யமானாலும் ஸாதுபரித்ராணம் ஸங்கல்பத்தினால் ஸாத்யமாகாதென்றும், நேரே வந்து அவதரித்தே அது செய்யத்தக்கது என்றும் அந்தரதிகாண ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்வாமி யருளிச் செய்துள்ளார். அதற்கு மூலமாக அருளிச் செயல்கள் பலவுண்டு; அவற்றுள் இந்தப் பாசுரமுமொன்று– அதற்கு மூலமாக அருளிச் செயல்கள் பலவுண்டு; அவற்றுள் இந்தப் பாசுரமுமொன்று. இதில் மூன்றாமடியில் "வடமதுரைப் பிறந்தவன்" என்று ப்ரஸ்தாவிக்கப்படுகிற அவதாரத்திற்கு ப்ரயோஜனம் கூறுவது முற்பகுதி. "மாயவனடிபரவிப் போழ்து போகவுள்ளகிற்கும் புன்மையிலாதவர்க்கு வாழ்துணையா" என்பது அவதாரஹேது சொல்லுகிறபடி. இவ்வாழ்வார் தாமே பெரிய திருவந்தாதியில் கார்கலந்த மேனியான கைகலந்த வாழியான் பார்கலந்த வல்லயிற்றான் பாம்பணையான் சீர்கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையயினாழ் துயரை, என்னினைந்து போக்கு வரிப்போது" என்றார். பகவத் குணங்கள் மலிந்திருக்கப்பெற்ற ஸ்ரீராமாயண ஸ்ரீபாகவ தாதிகளைக் கொண்டு போது போக்க முடியுமே தவிர மற்ற எதனாலும் போதுபோக்க முடியாதென்றார் ஆழ்வார் தம்மியல்வுகொண்டு, அவ்விதமாகப் போதுபோக்க விரும்புமலர்களே "பரித்ராணாய ஸாதுநாம்" என்கிற த்லோகத்தில் சொல்லப்பட்ட ஸாதுக்கள்: அவர்களைப் பரித்ராணம் செய்வதென்றால் அவர்களுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வதேயாம். எம்பெருமான் திருவலதாரஞ் செய்து தனது திருக்குணங்களைக் காட்டியருளாதொழியில் சீர்கலந்த சொற்கள் தோன்றமாட்டா; அவை தோன்றவில்லையாகில் அவற்றைக் கொண்டே காலசேஷபம் பண்ணவிருக்கும் ஸாதுங்களின் பரித்ராணம் வித்திக்கமாட்டாது. ஆகவே, மாயவனடி பரவிப் போழ்து போகவுள்ளகிற்கும் புன்மையிலாதவர்க்கு வாழ் துணையாவதற்கு வடமதுரைப் பிறந்தானாயிற்று. அப்படிப்பட்டவனுடைய திருக்கல்யாண குணங்களையே விரும்பத்தக்க துணையாகப் பற்றும தொழிய வேறொரு நலமுமில்லை யென்றாராயிற்று.


  3681.   
  யாதும்இல்லை மிக்குஅதனில்*  என்றுஎன்று அதுகருதி* 
  காதுசெய்வான் கூதைசெய்து*  கடைமுறை வாழ்க்கையும்போம்*
  மாதுகிலின் கொடிக்கொள்மாட*  வடமதுரைப்பிறந்த* 
  தாதுசேர்தோள் கண்ணன் அல்லால்*  இல்லை கண்டீர் சரணே.

      விளக்கம்  


  • எம்பெருமானைத் தவிர்த்து வெறொன்றை ரக்ஷகமாகப் பற்றினவர்கள் பண்டு நின்ற நிலையுங்கெட்டு அனர்த்தப்பட்டுப் போவர்கள்; அனபின்பு அவனல்லது புகலில்லை யென்கினறார். "நஸம்பதாம் ஸமாஹாரே விபதாம் விநிவர்த்தநே, ஸமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம்" என்றும், ந ஹி பாலநஸாமர்த்த்யம்ருதே ஸர்வேச்வரம் ஹரிம் என்று முள்ள ப்ரமாணங்களை யறிந்துவைத்தும் இந்த அத்யவஸாயத்தை எம்பபெருமானளவிற் பண்ணுதே வேறொரு விஷயத்திற்பண்ணி, (அதாவது) அப்ராப்த விஷய மொன்றைப்பற்றி 'இதுவே நமக்கு ரக்ஷதம், இதனில் விஞ்சியராக்ஷகமில்லை' என்கிற அத்யவஸாயத்தை அவ்விஷயத்திலே கொண்டிருக்குமளவில். காது செய்வான் கூதைசெய்து கடைமுறை வாழ்க்கையும் போம் = கனங்குழையிடுவதற்காகக் காதைப்பெருக்கப்புகுந்து பண்டுள்ள யோக்யதையையுங் கெடுத்துக் கூறையாக்கிக் கொள்வாருண்டே; அப்படியாகி, தண்ணிதானமுறைமையாலே வாழக்கடவதான வாழ்வும் தொலைந்து போம். "ஸம்ஸாரத்திலே பசலுங்குட்டியுமாய் அனாய்குளாயாய்ப் போருமதுவுங்கூடக் கெடுமித்தனை" என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. கடைமுறை வாழ்க்கையாவது இவ்வாழ்வே: இதுவும் கெட்டுப்போமித்தனை உயர்ந்த ஜீவனத்தில் ஆசை கொண்டதற்குப் பயனாக அதமஜீவனமும் அழிந்து போமென்றபடி, "காது செய்வான கூதை செய்து" என்பது உபமானத்தையுட் கொண்ட வாக்யம். முன்னடிகட்கு மற்றொரு வகையான நிர்வாஹமுமுண்டு; அதாவது கைகல்ய பரமான நிர்வாஹமுமுண்டு; அதாவது கைவல்ய பரமான நிர்வாஹம்; கைவல்யஸுகத்தை விரும்பி இவ்வாத்மாநுபவ ஸுகத்திற்கு மேற்பட மற்றோரின்பமில்லை என்று துணிந்து அதற்கு க்ருஷி பண்ணுமளவில் முன்புள்ள ஸாம்ஸாரிக ஸுகத்தையுமிழக்குமித்தனை –என்று. இங்கே ஆறாயிரப்படி யருளிச்செயல் – "எல்லாவற்றிலும் மேற்பட்ட புருஷார்த்தமன்றோ ஸாம்ஸாரிக துக்கநிவ்ருத்திரூப கைவல்யமென்று அத்தைப் புருஷார்த்தமென்று பற்றில், காதுபெருக்க வென்றுபுக்குப் பண்டுள்ளதையுங் கெடுத்துக் கூதையாக்கினாப்போலே பண்டுள்ள ஸாம்ஸாரிக ஸுகத்தையுமிழக்குமித்தனை ஆதலால், ஸ்ரீமதுரையிலே திருவவதாரம் பண்ணுகையாலே புதுக்கணித்த வழகையுடையனான கண்ணனே பரமப்ராப்யனென்கிறார்" என்று. இப்பொருளில் "அது கருதி" என்றது கைவல்யோபாஸநத்தைப் பண்ணி யென்றபடி. அந்த ஹேயக்ருத்யத்தைத் தம்வாக்காலே சொல்லக் கூசி 'அது ' என்றதாகக் கொள்க.


  3682.   
  கண்ணன் அல்லால் இல்லைகண்டீர்*  சரண்அதுநிற்கவந்து* 
  மண்ணின் பாரம் நீக்குதற்கே*  வடமதுரைப்பிறந்தான்*
  திண்ணமாநும் உடைமை உண்டேல்*  அவன்அடி சேர்த்துஉய்ம்மினோ* 
  எண்ணவேண்டா நும்மதுஆதும்*  அவன்அன்றிமற்றுஇல்லையே.

      விளக்கம்  


  • எம்பெருமாளுடைய அவதாரம் ஸாது பரித்ராணத்திற்காகவும் துஷ்டர்களைத் தொலைப்பதற்காகவும் என்று மூலத்தில் மொழிந்திருந்தாலும் ஸாது பரித்ராணந்தான் முக்கமாக ப்ரயோஜனமென்றும் துஷ்க்ரூத்விநாசஙம் அப்படி முக்ய மன்றென்றும், அது ஸங்கல்பத்தாலும் செய்து முடிக்கத் தக்கதாகையாலே அதற்காக அவதாரம் அபேக்ஷி தமன்றென்றும் எம்பெருமானார் திருவுள்ளம் பற்றினர். ஸ்ரீவசநபூஷணத்தில் "ஈச்வான் அவதரித்துப்பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயாருளிச்செய்வர்" என்ற சூர்ணையையும் அதன் வியாக்கியானத்தையும் நோக்குமளவில் துஷ்க்ருத் விநாசநத்தை நோக்கியே எம்பெருமானது அவதாரமென்று நஞ்சீயர் திருவுள்ளம் பற்றினதாகப் புலப்படுகின்றது. இனை பரஸ்பர விருத்தங்களல்ல. இரண்டு படியாகவும் சொல்லலாம் போலேயுள்ளது. இரண்டும் ஆழ்வார் திருவுள்ளத்திலோடியிருப்பதாக விளங்காநின்றது. இப்பதிக்கத்திலேயே கீழ் எட்டாம்பாட்டில் ஸாதுபரித்ராணமே வேதாரத்திற்கு ப்ரயோஜனமென்னுந் திருவுள்ளத்தை வெளியிட்டார். இப்பாட்டில் "மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப்பிறந்தான்" என்பதனால் துஷ்க்ருத்விநாசமே அவதாரப்ரயோஜன மென்கிற திருவுள்ளத்தை வெளியிடுகிறாரயிற்று. உண்மையில் ; துஷ்க்ருத்விநாசந மென்பீதும் ஸாதுபரித்ராணத்தின் பாகுபாடேயென்பது அண்ணிதி னுணரத்தக்கது. ரக்ஷிக்கையாவது அநிஷ்டங்களைத் தவிர்க்கவும் இஷ்டங்களைக் கொடுக்கையுமாதலால் துஷ்க்ருத விநாசநம் பண்ணுகவனவில் ஸாதுபரித்ராணம் பூர்ணமாக வித்திக்கமாட்டாதன்றோ. அன்றியும், ஸாது பரித்ராண துஷ்க்ருத்விநாசகங்களுக்கு மேலே "தர்மஸம்ஸ்தாப கார்த்தாய" என்று மூன்றாவதான வொரு ப்ரயோஜனமும் சொல்லப்பட்டுள்ளது. தர்மஸ்தா பனத்திற்காக அவதரிக்கிறேனென்ற திருவாக்கினாலேலே "ஸர்வதர்மாந் பரித்யஜ்ய" என்றும் மேலே சொல்லியிருக்கையாலே இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் முரண்பாடில்லாமை ஆராயத் தக்கது. இன்று புதிதாக நாம் ஆராயவேண்டாவே; முமுக்ஷுப்படி சாமச்லோகப்ர கரணத்தில் "தர்மஸம்ஸ்தாபநம் பண்ணப் பிறந்தவன் தானே ஸர்வதர்மங்களையும்விட்டு என்னைப் பற்றென்கையாலே ஸாசஷாத்தர்மம் தானே பென்கிறது" என்றருளிச் செய்தார் பிள்ளையுலகாசிரியர். ஆகவே "தர்மஸம்ஸ்தாபநார்த்தாய" என்றவிடத்தில் விவக்ஷிதமான தர்மஸ்தாபனம் ஆபாஸதர்மான ஸாத்ய தர்மங்களின் ஸ்தாபனமன்றிக்கே க்ருஷ்ணம் தர்மம் ஸ்நாதநம் ராமோ விக்ரஹவாந் தர்ம; என்று ஸாசஷாத்தர்மமாகவும் ஸித்ததர்மமாகவும் சொல்லப்பட்ட தன்னையே ஸ்தாபிப்பது என்று தேறிற்று. இவ்விஷயமும் இப்பாட்டில் முதலடியில் தெரிவிக்கப்படுகிறது–"கண்ணனல்லாலில்லைகண்டீர் சரணது நிற்க" என்று இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;–க்ருஷ்ணனையொழிய வேறு சரணமாவாரில்லையென்னு மிவ்வர்த்தம் நிலைநிற்கைக்காக. இவ்வர்த்தத்தை ஸ்தாபிக்கைக்காகவும், அதுக்குறுப்பாக பூபாரத்தைப் போக்குகைக்காகவும் திருவவதாரம் பண்ணினான் என்று.