- முகப்பு
- திவ்ய தேசம்
- திருமணிக்கூடம்
திருமணிக்கூடம்
திருமணிக்கூடம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரிலிருந்து கிழக்கே 4 பர்லாங் தொலைவில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இக்கோயிலும் ஒன்றாகும். திருமணிக்கூடம் என்ற சொல்லுக்கேற்ப இத்தலம் மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.[1] திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனையும் எடுத்துச் செல்வர்
அமைவிடம்
வரதராஜப் பெருமாள் கோயில்,
சீர்காழி,
மாவட்டம்: நாகப்பட்டினம்
அமைவு: திருநாங்கூருக்கு அருகில்,
தாயார் : ஸ்ரீ திருமகள் நாச்சியார்
மூலவர் : வரதராஜப் பெருமாள்
உட்சவர்: --
மண்டலம் : சோழ நாடு
இடம் : சீர்காழி
கடவுளர்கள்: செங்கண்மால் , பூதேவி
திவ்யதேச பாசுரங்கள்
-
1288.
முதலடியில், ‘பணைக்கை’ என்றும் பாடமுண்டு; பருத்த கையையுடைய என்றபடி மூன்றாமடியிலும் ‘முற்றும்’ ‘முற்றம்’ என்பன பாடபேதங்கள். வரண்ட – தள்ள; “மழைப்பேரருவி மணிவரண்டி வந்திழிய” என்ற திருமழிசைப்பிரான் பிரயோகமுங்காண்க.
முன்னடிகளில் “இலங்கை மன்னிய விடும்பை தீர” “இலங்கை மன்னிய விடும்பைகூர” என்பன பாடபேதங்கள். “வவ்விய விடும்பை தீர” என்னும் பாடம் பெரும்பான்மையாக வழங்கிவரக் காண்கிறோம். வியாக்கியானத்திலும் உள்ளது.
ஜ்ஞாநாநுஷ்டாநங்களால் நிறைந்த வைதிகர்கள் வாழுமிடம் திருநாங்கூர் என்பன பன்னடிகள். ஈற்றடியில் “தீத்தொழில் பயிலும்” என்ற விடத்து விரோதாபாஸாலங்காரம் அறியத்தக்கது. ‘தீத்தொழில்’ என்பதற்கு தீயதொழில் (கெட்ட காரியம்) என்றும் பொருள்படுமாதலால் அதனை முந்துற விரோதப்பொருளாகக் கொள்க; வேதமோதித் தருமங்களை யனுட்டிப்பவர்கள் என்று மூன்றாமடியில் சொல்லிவைத்து, அன்னவர்கள் தீயதொழிலைப் பயில்கின்றனர் என்பது விரோதம்; ஔபாஸநம் முதலிய அன்நிகாரியங்களை நடத்துபவர்கள் என்று பொருள்கொண்டு விரோதத்தை அகற்றுக; ஆகவே விரோதாபாஸாலங்காரம் இது.
“ராமஸ்ய தக்ஷிணோ பாஹு:” என்றபடி இராமபிரானுக்கு லக்ஷ்மணன் வலக்கையெனப்படுதலால் அங்ஙனம் கையாகிய லக்ஷ்மணனுடைய செயலை அவயவியான இராமன் செய்ததாகச் சொல்லுதலும் தகுதியே. பலராமன் செய்தருளிய ப்ரலம்பாஸுர வதத்தைக் கண்ணபிரான் செய்தருளியதாக அநுஸந்திப்பதும், இதுபோன்றதேயாம். இவள் மிக்க நீசஜாதியிற் பிறந்தவளென்கைக்காகக் கருமகள் எனப்பட்டது. இலங்கையாட்டி - இலங்கையாளனான இராவணனுக்கு உடன பிறந்தவள் என்க. “ராவணனுடன் பிறந்தாளாகையாலே லங்கையிலுள்ளாரிடையக் கொண்டாடும்படி யிருக்கிறவள்” என்பது வியாக்கியான வாக்கியம்.
திருநாங்கூரிலுள்ள அந்தணர்கள் ஒருகால் படையெடுத்துவந்த பாண்டியராஜனையும் மற்றொரு ஸமயத்தில் சோழராஜனையும் தோற்கடித்து ஓட்டினாரென்பது இதிஹாஸம்.
சங்கையாவது – ‘இது இப்படியோ அப்படியோ?’ என்று ஸந்தேஹப்படுதல். துணிவாவது – ‘இது இப்படிதான்’ என்று நிச்சயித்தல் ஆக, ஸம்சயரூபமான ஞாத்திற்கும் நிச்சயரூபமான ஞானத்திற்கும் எம்பெருமானே நிவாஹகன். உலகத்திற்கு ஹிதமான மெய்யும் அஹிதமான பொய்யும் அவனே. (அதாவது – மெய்யர்க்கே மெய்யனாகும், பொய்யர்க்கே பொய்யனாகும் - என்கை.) கைம்மாறு கருதாமல் பூமியை ரக்ஷிக்கின்ற மேகங்களும் மற்றும் இடி மின் முதலியவைகளும் அவனிட்ட வழக்கு. இப்படி ஸர்வத்துக்கும் நியாமகனாயிருக்கும் எம்பெருமான் நாங்கூர்த் திருமணிக்கூடத்தான்
செய்யக்கூடாதென்று சாஸ்திரங்களில் மறுக்கப்பட்டுள்ள காரியங்களைச் செய்வதாகிற பாவமென்ன, செய்யவேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ள நற்காரியங்களைச் செய்தலாகிற புண்யமென்ன இவையிரண்டும் எம்பெருமானிட்ட வழக்கு எல்லாவற்றுக்கும் மேற்பட்டதான மோக்ஷஸுகமும் மற்றமுள்ள ஸாமாந்ய ஸுகங்களுமெல்லாம் அவனிட்ட வழக்கு மனங்கலங்கி இருத்தலாகிற கோவமும், தெளிந்திருத்தலாகிற அருளும் மற்றும் ஸத்வரஜன் தமோ குணங்களும் அவனிட்ட வழக்கு. இப்படி ஸர்வநிர்வாஹானான எம்பெருமான் நாய் கூர்த் திருமணிக்கூடத்திலுள்ளான். அரி, அயன், அரன் என மூன்று மூர்த்திகளிருந்தாலும் ஸாத்விகர்கட்கு ஆச்ரயிக்கவுரிய மூர்த்தி விஷ்ணுமூர்த்தியேயென்று தெளிந்து ஸநகாதி மஹர்ஷிகளும் ப்ரஹ்மாதி தேவர்களும் வந்து ஆச்ரயிக்கப் பெற்ற தலமிது.
The Lord of Tirumanik-kudam Nangur where mansions touch the Moon, has been praised by Mangai king kaliyan through this fragrant decad of Tamil songs, Those who master it will rule the Earth and golden sky, then also enter the orb the Sun and shine forever.
விளக்கம்
1289.
விளக்கம்
1290.
விளக்கம்
1291.
விளக்கம்
1292.
விளக்கம்
1293.
விளக்கம்
1294.
விளக்கம்
1295.
விளக்கம்
1296.
விளக்கம்
1297.