ஸ்ரீரங்கம்

தலபுராணம்:- திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

அமைவிடம்

முகவரி:- 107,
அம்மன் மண்டபம் சாலை,
ஸ்ரீரங்கம்,
-620 006 திருச்சி(மாவட்டம்) தமிழ் நாடு. தொலைபேசி : +91 (0431) 2433945 ,

தாயார் : ஸ்ரீரங்க நாச்சியார்
மூலவர் : ஸ்ரீ ரங்கநாதன்
உட்சவர்: நம்பெருமாள்
மண்டலம் : சோழ நாடு
இடம் : திருச்சி
கடவுளர்கள்: ரங்கநாதன்,ரங்கநாயகி


திவ்யதேச பாசுரங்கள்

  183.   
  கரு உடை மேகங்கள் கண்டால்*  உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்* 
  உரு உடையாய்! உலகு ஏழும்*  உண்டாக வந்து பிறந்தாய்!* 
  திரு உடையாள் மணவாளா!*  திருவரங்கத்தே கிடந்தாய்!* 
  மருவி மணம் கமழ்கின்ற*  மல்லிகைப் பூச் சூட்ட வாராய் 

      விளக்கம்  


  • நீர் கொண்டெழுந்த காளமேகம் போன்ற வடியையுடையவனே! உலகங்களுக்கு ஸத்தையுண்டாகும்படி இந்நிலத்தில் வந்து பிறந்தவனே!; திருவாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கும் திருவாயிருப்பவனே! இந்த மல்லிகைப்பூவின் பரிமளம் குன்றுவதற்கு முன்னே இதைச் சூடவா என்பதாம் ‘ஒக்கும்’ என்பதை முற்றாகக் கொண்டு கருவுடை மேகங்களைக் கண்டால் உன்னைக் காண்பதை ஒத்திருக்கும்: (அதுக்குமேலே) கண்கள் உருவுடையதாய் - கண்ணழகையுமுடையவனே! என்றும் உரைக்கலாம்.


  189.   
  சீமாலிகன் அவனோடு*  தோழமை கொள்ளவும் வல்லாய்!* 
  சாமாறு அவனை நீ எண்ணிச்*  சக்கரத்தால் தலை கொண்டாய்!* 
  ஆமாறு அறியும் பிரானே!*  அணி அரங்கத்தே கிடந்தாய்!* 
  ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!*  இருவாட்சிப் பூச் சூட்ட வாராய்.

      விளக்கம்  


  • மாலிகன் என்பான் ஒருவன் கண்ணபிரானுக்கு உயிர்த்தோழனாய் அப்பிரானிடத்திற் பலவகை ஆயுதங்களையும் பயின்று ஒருவர்க்கு மஞ்சாமல் அஹங்காரியாய் ஸாதுஜகங்களை ஹிம்ஸித்துக்கொண்டிருக்க, கண்ணபிரான் ‘நண்பனாகிய இவனை நாம் கொல்வது தகாதே! என்னசெய்யலாம்? என்று வ்யாகுலப்பட்டு, ஒருநாள் அவனைநோக்கி ‘நீ இப்படி செய்வது தகாது‘ என்ன, ஆஸுரப்ரக்ருதியான அந்த மாலிகன் தன்வாயில் வந்தபடி பிதற்றி ‘நீ எல்லா ஆயுதங்களையும் எனக்குக் கற்பித்தும் சக்ராயுதப்பயிற்சி மாத்திரம் செய்விக்கவில்லையே‘ என்று கண்ணன்மேற்குறைகூற, ‘இதில் பழகுவது உனக்கு முடியாது எனக்கே அஸாதாரணமானது‘ என்ன, ‘என்னால் முடியாதது மொன்றுண்டோ? நீ அவச்யம் அதைக் கற்பிக்கவேணும்‘ என்று அவன் நிர்ப்பந்திக்க, கண்ணன் இதுதான் தக்கஸமயம்‘ என்று திருவுள்ளத்திற்கொண்டு சக்ராயுதத்தை யெடுத்துத் தன் ஒற்றைவிரலால் சுழற்றி மேலெறிந்து கையிலேற்க, ‘இது எனக்கு அரிதோ‘ என்று மாலிகன் சொல்ல, ‘இது உனக்கு அரிதே‘ என்று கண்ணன் சொல்லவும் அதை அவன் கேளாமல் அச்சக்ராயுதத்தை வாங்கிச் சுழற்றி நிற்க, அச்சக்கரம் சுழன்றுவருவதற்கு இடம் போதாமையாலே அதன் வீச்சு இவன் கையிற் பிடிபடாமல் இவன் தலையை அரிந்து விட்டதென்பது இப்பாட்டில் குறித்த கதை. இவ்வரலாறு எந்தப் புராணத்திலுள்ளதென்று ஆராய்ந்து பார்த்தும் பலபெரியோர்களைக் கேட்டும் ஆகரம் அறியப் பெற்றிலேன் வந்த விடத்திற்கண்டுகொள்க. “***“ தத்ஸர்வம் தர்மவீர்யேண யதாவத் ஸம்ப்ரபச்யதி“ என்று ஸ்ரீ – சதுர்முகன்வரத்தினால் வால்மீகி முனிவர் பகவதவதார வ்ருத்தாந்தங்களைத் தாமாக ஸாக்ஷத்கரித்ததுபோலே ஆழ்வாரும் மயர்வற மதிகல மருளப்பெற்றுத் தாமாக ஸாக்ஷாத்கரித்தவற்றில் இவ்வரலாறு ஒன்று என்பர் பெரியோர், இப்பிரபந்த்த்தின் ஈற்றுத்திருமொழியின் ஆறாம்பாசுரத்தின் வியாக்கியானத்திலே பெரியவாச்சான் பிள்ளைதாமும் இதை ஸ்பஷ்டமாக அருளிச்செய்துளர். ‘மாலிகன்‘ என்பதே அவன்பெயர், மேன்மைப் பொருளைத்தரும் ‘ஸ்ரீ‘ என்ற சொல் ‘சீ‘ எனத்திரிந்துவந்து சீமாலிகன் எனக்கிடக்கிறது. க்ருஷ்ண ஸ்நேஹத்தால்வந்த மேன்மையுண்டே அவனக்கு, அவனைக்கொல்வது ஆவச்யகமானபோது ‘தோழினைக் கொன்றான்‘ என்னும் பழி தனக்கு வாராமல் ‘தன்னாலே தான் முடிந்தான்‘ என்று உலகத்தார்சொல்லும்படி கண்ணபிரான் மாலிகனை உபாயமாக்க் கொன்றன்னென்பார் ‘சாமாறவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய்‘ என்றார். “தோழமைக்கொள்ளவும்“ என்னற உம்மை எதிரது தழுவியதாய், தலைகொள்ளவும் என்பதைக் காட்டும்.


  212.   
  வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ்*  வருபுனற் காவிரித் தென்னரங்கன்*
  பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம்*  பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்* 
  கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்*  கோவிந்தன்தன் அடியார்கள் ஆகி* 
  எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்*  இணையடி என்தலை மேலனவே (2) 

      விளக்கம்  


  • பகவத் விஷயத்திலே நான் பேசின பாசுரங்களைப் பாடிப் பாடி உத்தம பாகவதர்களாய் எங்கும் புகழ் பெற்று விளங்கும் அவர்களது திருவடிகளை யான் முடிமேல் அணிவேன் என்பதாகும். “குருகூர்ச் சடகோபன் சொன்ன தீதிலாத வொண்டமிழ்க ளிவையாயிரத்து ளிப்பத்தும், ஓதவல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே”” என்று நம்மாழ்வர் பாசுரத்தை அடியேற்றிய தாமிது. இதனால் இத்திருமொழி கற்பாருடைய சிறப்பும் இவர்களிlத்த்தில் தமக்குள்ள கெளரவப்புத்தியும் தெரிவிக்கப்பட்டனவாம். “என் தலைமேலான” என்று வருவதனால் ‘பட்டபிரான் விட்டுச் சித்தன்’ என்பது தன்மையிற் படர்க்கை வந்த வழுமதியாம். மேலான-பலவின்பாற் குற்ப்பு முற்றிற்று.


  245.   
  கன்னி நன் மா மதில் சூழ்தரு*  பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம்* 
  மன்னிய சீர் மதுசூதனா! கேசவா!*  பாவியேன் வாழ்வு உகந்து*
  உன்னை இளங்கன்று மேய்க்கச்*  சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன்* 
  என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை*  என்குட்டனே முத்தம் தா*

      விளக்கம்  


  • கன்னி-ஸ்திரமாயிருக்கை; நிகண்டு;- “கன்னிபெண் அழிவில்லாமை கட்டிளமைக்கும் பேரே”” என்றான் மண்டலபுருடன். யாவரும்வந்தடி வணங்க அரங்கநகர் துயின்ற ஸர்வேச்வரனான உன் அருமையை நோக்காது உன்னை இடைப்பிள்ளையாகவே நினைத்துச் சாதித்தொழிலென்று கன்று மேய்க்கைக்காகக் காலையிலே ஊட்டிக் காடேறப்போகவிட்ட எனது நெஞ்சின் காடிந்யத்தை என்னென்று சொல்வேன்; இவ்வாறு கடினமான நெஞ்சையுடையஸ்த்ரீ மர்ராரெனுங் கிடைப்பாளோவென்று இவ்வுலகெங்குந் தேடினாலும் கிடையாள்; வேறு சிலராகில் நெஞ்சழிந்து விழுந்து விடார்களோ? இனி இதைப்பற்றிச் சிந்தித்துப் பயனென்? எனக்குண்டான இவ்வருத்தமெல்லாந்தீர ஒருமுத்தங் கொடுத்தருள் என்று அணைத்து உகந்து சொல்லுகின்றாள். வாழ்வு உகந்து என்ற சொல்நயத்தால்-ஸ்வப்ரயோஜநத்தைக் கணிசித்தேனேயொழிய உன் ஸம்ருத்தியை நான் விரும்பிற்றிலேனே என்று உள் வெதும்புகின்றமை தோற்றும். ஒருப்படுத்தேன்=ஒருப்பாடு-ஒருமனப்படுதல், ஸம்மதித்தல் என்றபடி: ‘நீ கன்று மேய்க்கும்படியை நான் ஸம்மதித்தேன்’ என்கை. “ஒருப்படுத்தேன்”” என்கிறவிது-உடன்பாட்டுக்கும் எதிமறைக்கும் பொதுவான வினை; இங்கு உடன்பாட்டில் வந்ததென்க. முத்தம்-அதரம்.


  402.   
  மாதவத்தோன் புத்திரன்போய்*  மறிகடல்வாய் மாண்டானை* 
  ஓதுவித்த தக்கணையா*  உருவுருவே கொடுத்தானுர்* 
  தோதவத்தித் தூய்மறையோர்*  துறைபடியத் துளும்பிஎங்கும்* 
  போதில் வைத்த தேன்சொரியும்*  புனலரங்கம் என்பதுவே. (2)

      விளக்கம்  


  • கண்ணபிரான் ஸாந்தீபிநி யென்னும் ப்ராஹ்மணோத்தமம் பக்கல் ஸகல சாஸ்திரங்களையும் அத்தியயநம் பண்ணின அநந்தரம் குருக்ஷிணைகொடுக்கத் தேடுகின்றவளவிலே, அவ்வாசாரியரும் இவனுடைய அதிமாநுஷசேஷ்டிதங்களை அறிந்தவராகையாலே, ‘பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு ப்ரபான தீர்த்தக்கட்டதிற் கடலில் முழுகி இறந்துபோன என் புத்திரனைக் கொணடுவந்து தர வேண்டும்’ என்று அபேக்ஷிக்க, ‘அப்படியே செய்கிறேன்’ என்று, அப்புத்திரனைக் கொண்டுபோன சங்கின் உருவம்தரித்துச் சமுத்திரத்தில் வாஸஞ் செய்கின்ற பஞ்சஜகன் என்ற அஸுரனைக் கொன்று, யமபட்டணத்துக்கு எழுந்தருளி, அங்கு யாதனையிற்கிடந்த அக்குமாரனைப் பூர்வதேஹத்தில் ஒன்றும் விசேஷமறக் கொணர்ந்து கொடுத்தருளிய வரலாறு முன்னடிகளிற் கூறியது. ‘மாண்டானை” என்ற விடத்துள்ள இரண்டனுருபு, “புத்திரன்” என்ற பெயரோடு கூட்டியுரைக்கப்பட்டது. நக்கணை- உக்ஷிணா என்ற வடசொல்லிகாரம். பின்னடிகளின் கருத்து:- கங்கையிற் புனிதமாய காவிரியில் பெரிய பெருமாளுடைய திருக்கண்நோக்கான திருமுகத்துறை முதலான பலதுறைகளில் ஆசாரபரரான வைதிக ஸ்ரீவைஷ்ணவர்கள் திரள் திரளாக வந்து குடைந்து நீராட அதனால் அக்காவேரியடங்கலும் அலைமோதப்பெற்று, அவ்வலைகளினால் தாமரை மலர்களின் நாளங்கள் அலைக்கப்பட, அதனால் அப்பூக்களினின்றும் தேன் பெருக, அத்துடன் சொந்த தீர்த்தத்தையுடைய திருவரங்கமென்பதாம்.


  403.   
  பிறப்பகத்தே மாண்டொழிந்த*  பிள்ளைகளை நால்வரையும்* 
  இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து*  ஒருப்படித்த உறைப்பனுர்*
  மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார்*  வருவிருந்தை அளித்திருப்பார்* 
  சிறப்புடைய மறையவர்வாழ்*  திருவரங்கம் என்பதுவே.

      விளக்கம்  


  • இதில் முன்னோடிகளிற் கூறிய வரலாறு, கீழ் முதற்பத்தில் உய்யவுலகில், “துப்புடையாயர்கள் தம்” என்ற பாட்டின் உரையில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாமடியில், விருந்து என்ற சொல் ஆகுபெயரால் விருந்தினரை உணர்த்துகிறது.


  404.   
  மருமகன் தன் சந்ததியை*  உயிர்மீட்டு மைத்துனன்மார்* 
  உருமகத்தே வீழாமே*  குருமுகமாய்க் காத்தானுர்* 
  திருமுகமாய்ச் செங்கமலம்*  திருநிறமாய்க் கருங்குவளை* 
  பொருமுகமாய் நின்றலரும்*  புனலரங்கம் என்பதுவே.

      விளக்கம்  


  • பண்டு பாரதப்போரில், அர்ஜுனன் மகனான அபிமந்யுவின் மனைவியாகிய உத்தரை என்பவருடைய கருவைநோக்கி அசுவத்தாமாவினால் பிரயோகிக்கப்பட்ட அபாண்ட வாஸ்திரத்தினால் அக்கருவிலிருந்த சிசு (பரிக்ஷித்) நீறாயொழிய, அச்சிசுவை மீண்டும் உயிர் பெறுத்த வேணுமென்று ஸுபத்திரையினால் பிரார்த்திக்கப்பட்ட கண்ணபிரான் தனது செந்தாமரை மலர்போன்ற திருவடியினால் அச்சிசுவை உயிர்பெற்ற வரலாறு முதலடியிற் கூறப்பட்டது. இவ்வரலாறு மஹாபாரதத்தில் ஆச்வமேதிகபர்வத்துக்கு உள்ளீடான அநுகீதாபர்வத்தில் ***- அத்தியாயங்களிற் பரக்கக் காணத்தாக்கது. அபிமந்யு என்பவன் கண்ணபிரானுக்கு உடன் பிறந்தவளான ஸுபத்தையின் மகனாதலால் மருமகனாயினன். சந்ததி- வடசொல்லிகாரம். (மைத்துனன்மார் இத்யாதி.) பஞ்சபாண்டவர்களுக்கு தான் துணையாய் நின்று, கௌரவர்களால் அவர்கட்கு ஒரு நலிவு நேராதபடி பலவகைகளாயல் காத்தருளிமமையைக் கூறியவாறு. இரண்டாமடியில், “மகத்தே” என்றவிடத்து, மகம்- வேமென்ற வடசொல் விகாரம்: யாகமென்பது பொருள்; சந்தர்ப்பம் நோக்கி, நரமேதயாகமென்று உரைக்கப்பட்டது; மநுஷ்யர்களைப் பலிகொடுத்து நடைபெறும் யாகம்- நரமேதயாகமெனப்படும். “எல்லாச்சேனையு பிருநிலத்தவித்த” என்றபடி உபயஸேனையிலும் பூமிக்குச் சுமையாயிருப்பவர்களையெல்லாம் ஒழிப்பதாக நடத்தப்பட்டதும், *மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தவனுடைய திருவுள்ளத்திற்கு உகப்பாயிருப்பதுமான பாரதயுத்தத்தை நரமேதயாகமாகக் கூறுவது ஏற்குமென்ப. பகவத்கீதை முதலியவற்றால் ஆசார்யத்வம் தோற்ற ஹிதோபதேசம் பண்ணினபடியைப் பற்றிக் “குருமுகமாய்க் காத்தான்” என்றருளிச் செய்தனரென்க. குருமுகம்- ***- பின்னடிகளின் கருத்து- திருவரங்கத்தைச் சூழ்ந்து பெருகாநின்ற காவிரி நீரில், பெரிய பெருமானது திருமுகம்போன்ற செந்தாமரை மலர்களும், அவரது திருமேனி நிறம்போன்ற கரு நெய்தல் பூக்களும் பரபாகத்தாலே ஒன்றுக் கொன்று எதிர்பொருகிற முகத்தை யுடைத்தாய்க்கொண்டு விகஸிக்குமென்று நீர்வளஞ் சொல்லியவாறு. (பொருமுகமாய்) குவளையும் கமலமும் எம்பெருமானது திருநிறத்தோடும் திருமுகத்தோடும்


  405.   
  கூன்தொழுத்தை சிதகுரைப்பக்*  கொடியவள் வாய்க் கடியசொற்கேட்டு 
  ஈன்றெடுத்த தாயரையும்*  இராச்சியமும் ஆங்கொழிய* 
  கான்தொடுத்த நெறிபோகிக்*  கண்டகரைக் களைந்தானுர்* 
  தேன்தொடுத்த மலர்ச்சோலைத்*  திருவரங்கம் என்பதுவே.

      விளக்கம்  


  • தண்டகாரணியத்தில் ஜையந்தமென்ற பட்டணத்தில் வஸிப்பவனும் திமித்வஜன் என்று மறுபெயருள்ளவனும் இந்திரனை வென்றவனுமான சம்பரராஸுரனை இந்திரனது வேண்டுகோளின்படி வெல்லுதற் பொருட்டுக் கைகேயியுடன் சென்ற தசரதச்சக்கரவர்த்தி அவ்வஸுரனை எதிர்த்துச் செய்த பெரும்போரில் அவனால் விரணப்பட்டு மூர்ச்சையடைந்த பொழுது, அச்சக்கரவர்த்தியை அசுரர்கள் வதை செய்யாதபடி கைகேயி போர்க்களத்திலிருந்து எடுத்துச்சென்று பாதுகாக்க, மூர்ச்சை தெளிந்தவுடன் தசரதன் தனனக்கு கைகேயி செய்த உயிருதவிக்காக அகமகிழ்ந்து தான் அவட்கு அவள் வேண்டும் இரண்டு வரங்கள் கொடுப்பதாக வாக்கு அளிக்க, அவள் அவற்றை பின்பு தனக்கு வேண்டும்பொழுது கேட்டுப் பெற்றுக்கொள்வதாகச் சொல்லியிருந்தாள்; அவவ்வரங்களில் ஒன்றாகப் பரதனது பட்டாபிஷேகத்தையும், மற்றொன்றாக இராமபிரானது வநவாஸத்தையும் கேட்கும்படி ஞாபகப்படுத்தி உபாயங்கூறித் தூண்டின கூனியின் சொற்படி தன்னைக்காட்டு கெழுந்தருளச் சொன்ன கைகேயியின் நியமநத்தின்படி ராஜ்யம் முதலியவற்றையெல்லாம் துறந்து இராமபிரான் தண்டகராணியத்திற்சென்று புகுந்து அங்கு ஜகஸ்தாகத்தில் இருந்துகொண்டு ஸாதுக்களை நலிந்து திரிந்த அரக்கர்களை அழித்தருளினமை அறிக.


  406.   
  பெருவரங்கள் அவைபற்றிப்*  பிழக்குடைய இராவணனை* 
  உருவரங்கப் பொருதழித்து*  இவ்வுலகினைக் கண்பெறுத்தானுர் 
  குரவரும்பக் கோங்கலரக்*  குயில்கூவும் குளிர்பொழில்சூழ்* 
  திருவரங்கம் என்பதுவே*  என் திருமால் சேர்விடமே.

      விளக்கம்  


  • பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற வரங்களினால் தனக்கு எவ்வகையாலும் அழிவு நேராதென்று துணிந்து, நெஞ்சினால் நினைக்கவும் வாயினால் மொழியவு மொண்ணாத பற்பல பிழைகளைச் செய்து உலகத்தையெல்லாம் படவடித்துக்கிடந்து கூப்பிடும்படி பண்ணித் திரிந்த இராவணனைக்கொன்று உலகத்தையெல்லாம் வாழ்வித்தருளின எம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம்- நித்யவஸந்தமான சோலைகளையுடைய திருவரங்கமென்பதாம். வரம்- தற்சமவடசொல். பிழக்கு- பிழை.


  407.   
  கீழுலகில் அசுரர்களைக்*  கிழங்கிருந்து கிளராமே* 
  ஆழிவிடுத்து அவருடைய*  கருவழித்த அழிப்பனுர்*
  தாழைமடல் ஊடுரிஞ்சித்*  தவளவண்ணப் பொடியணிந்து* 
  யாழின் இசை வண்டினங்கள்*  ஆளம்வைக்கும் அரங்கமே.

      விளக்கம்  


  • பாம்புகளானவை புற்றுக்களில் பாங்காகக் கிடந்து வஸிப்பதுபோல, அசுரர்களும் பாதாளலோகத்தில் பாங்காகக் கிடந்து சிலசில காலங்களில் அங்குநின்றம் போந்து தேவர்களை அடர்த்துப் போர் செய்வார்கள்; அப்போது எம்பெருமான் அத்தேவர்களுக்குத் துணையாய்நின்று அவ்வசுரர்களை அழித்தொழித்தருள்வன்; இவ்வாறு அவ்வசுரர்கள் பலகால் போர்புரிய வருவதையும் அவ்வப்போதுகளிலெல்லாம் தான் அவர்களை ஒழிக்க வேண்டிய வருத்தத்தையும் நோக்கி, அவ்வசுரரைக் கிழங்கோடு களையவேணுமெனத் திருவுள்ளம் பற்றித் தனது திருவாழியைச் செலுத்தி அங்ஙனமே நிறைவேற்றிக் கொண்டானென்பன, முன்னடிகள். (கிழக்கு இருந்து கிளராமே.) மரத்தின் வேரை மாத்திரம் நிறுத்திவிட்டு மற்றபாகத்தை வெட்டினால்,அவ்வேரடியாக மீண்டும் அம்மரம் செழிப்புற்றோங்கி வளரும்; அவ்வேர்தன்னையு மொழித்திட்டால் பின்பு ஒன்றுமின்றி யொழியும்; இவ்வாறே எம்பெருமான் அசுரர்களை ஸமூலோந்மூலகம் பண்ணியருளினானென்க. கிழங்கு - வேரானது: இருந்து- மிகுந்திருந்து கிளராமே- மறுபடியும் முன்போல முளைக்க வொட்டாதபடியென்க. கரு- ***- இதனால் மூலத்தைச் சொல்லியவாறு. அழிப்பன்= வடமொழியில்*** என்ற திருநாமம்போல. செவிக்கினிய ஸ்வரத்தையுடைய வண்டுகள் திரள்திரளாகக்கூடி, விசாஸோங்முகமான தாழை மடலினுள் வருந்திப்புகுந்து அங்குப்புரண்டு அதிலுள்ள வெண்ணிறக் கண்ணங்களைத் தம் உடலில் அணிந்து கொண்டு, தென, தென என்று ஆளத்திவைத்துப் பாடும்படியைக் கூறுவன- பின்னடிகள். (உரிஞ்சி) நெருக்கமானத்வாரத்தில் நுழைய வேண்டுபோது உடம்பு உராய்தல், இயல்பு. உறிஞ்சுதல் - ஊராய்தல்;


  408.   
  கொழுப்புடைய செழுங்குருதி*  கொழித்திழிந்து குமிழ்த்தெறிய* 
  பிழக்குடைய அசுரர்களைப்*  பிணம்படுத்த பெருமானுர்* 
  தழுப்பரிய சந்தனங்கள்*  தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு* 
  தெழிப்புடைய காவிரிவந்து*  அடிதொழும் சீரரங்கமே.

      விளக்கம்  


  • ஊட்டுப் பன்றிபோல நிணங்கொழுக்கும்படி போஷகவஸ்துக்களை உட்கொண்டு உடலை வளரச் செய்து திரிகையாலே கொழுப்புடைத்தாயும் அழகியதாயுமிருக்கிற ரத்தமானது ஊற்று மாறாமல் கிளர்ந்து அருவி குதித்ததுபோலே நிலத்திலே யிழிந்து குமிழிகிளம்பி அலையெறியும்படியாக உலகங்களையெல்லாம் கலிந்துதிரியும் பிழைகளையுடையரான அசுரர்களை நிரந்வய விநாசமாக்கிவிட்டவாறு கூறுவன முன்னடிகள். (தழுப்பரிய இதயாதி.) மலையினிடத்து வளர்ந்துள்ள பெருப்பெருத்த கந்தகவிருஷங்களை வேரோடு கிளப்பி இழுத்துக்கொண்டு இவற்றைக் கைக் கொண்டருள வேணும் என்று இருப்பதுபோல இவரகண்டநின்ற காவேரியானது தான் கொணர்ந்த சாத்துப்பாடியைப் பெரிய பெருமாளுக்கு ஸமர்ப்பித்துத் திருவடிகளைத் தொழ நிற்கும்படியாக கூறியவாறு. தழும்பரிய- சந்தன மரம் சிறிதாயிந்தால் ஓருவரிருவரால் தழுவமுடியும். அளவிட்டுக்காடட் கெவாண்ணாதபடி மிகவும் ஸ்தூலமாக யிருப்பதனால் தழுவ முடியாமை கூறப்பட்டது. தழுவுகள்- கைகளால் அணைத்துக் கொள்ளுதல்


  409.   
  வல்யிற்றுக் கேழலுமாய்*  வாளேயிற்றுச் சீயமுமாய்* 
  எல்லையில்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானுர்*
  எல்லியம்போது இருஞ்சிறைவண்டு*  எம்பெருமான் குணம்பாடி* 
  மல்லிகை வெண்சங்கூதும்*  மதிளரங்கம் என்பதுவே.

      விளக்கம்  


  • ஹிரண்யாக்ஷரணையும், ஹிரண்யனையும் ஸம்ஹரித்தபடியைக் கூறுவன முன்னடிகள். வல்லெயிற்றுத் தரணியை இடந்தான், வாளெயிற்றுச் சீயமாய் அவுணனை இடந்தான் என இயையும்; எனவே, நிரனிறைப் பொருள்கோளாம். இவ்வரலாறுகள் கீழ்ப்பலவிடங்களிலும் குறிக்கப்பட்டுள்ளன. வராஹத்தின் எயிற்றுக்குப் பூமியை கீண்டெடுக்கும்படியான வன்மை இன்றியமையாதானது பற்றி “வல்லெயிற்றுக் கேழல்” என்றார்; நரஸிம்ஹத்தின் எயிறுகள் அழகுக்குறுப்பாதல் பற்றி “வாளெயிற்றாச்சீயம்” என்றார். தரணிக்கு எல்லையில்லாமையானது கடல்களும் தீவுகளும் போலன்றி, எல்லாம் தன்னுள்ளேயாம்படி *பஞ்சாகத்கோடி விஸ்தீர்ணையாயிருக்கை அவுணனுக்கு எல்லை யில்லாமையாவது நான் பெற்ற வரங்களுக்கீடாக எல்லையில்லாத தபஸ்ஸுகளை யுடையவனாயிருக்கை. வண்டுகள் அந்நியம்போதில் எம்பெருமான் குணங்களைப் பாடிக்கொண்டு திரிதலைக் கூறுவது, மூன்றாமடி. கீழ் திருமாலிருஞ் சோலையைப் பாடும்போது “அறுகால் வரிவண்டுகள் ஆயிரநாமஞ்சொல்லிச், சிறுகாலைப்பாடும்” என்றார்; இங்கு ‘எல்லியம்போது’ என்கிறார்; இதனால், திவ்யதேசங்களிலுள்ள வண்டுகள் காலத்துக்கேற்பப் பிகளிலே பகவத்குணங்களை நியதமாகப் பாடும்படியைக் கூறியவாறு. (மல்லிகை இத்யாதி.) ஸாயங்கால புஷ்பமான மல்லிகைப் பூவில் வண்டுகளிலிருந்து ஊதும்போது அந்தப்பூவானது அலருவதுக்கு முன்பு தலைகுவிந்து மேல்பருத்துக் காம்படிநேர்ந்து வெளுத்த நிறத்தையுடைத்தாய் சங்கைப் போன்றிருத்தலால் வெண்சங்கை ஊதுவது போல்வது பற்றி இங்ஙனருளிச் செய்தாரென்க.


  410.   
  குன்றாடு கொழுமுகில்போல்*  குவளைகள்போல் குரைகடல்போல்* 
  நின்றாடு கணமயில்போல்*  நிறமுடைய நெடுமாலூர்* 
  குன்றாடு பொழில்நுழைந்து*  கொடியிடையார் முலையணவி* 
  மன்றாடு தென்றலுமாம்*  மதிளரங்கம் என்பதுவே.

      விளக்கம்  


  • நிறம் என்று திருமேனிநிறத்தன்னையே சொல்லிற்றாக்க் கொள்ளில் கண்ட கண் மயிர்க்குச்சி விடும்படியான குளிர்த்திக்கு – நீர்கொண்டெழுந்த காளமேகத்தின் நிறத்தையும், நெய்ப்புக்கு – குவளைப்பூவின் நிறத்தையும், இருட்சிக்கு – கடலின் நிறத்தையும், புசர்ப்புக்கு – மயில் கழுத்தின் நிறத்தையும் உவமைகூறுவதாக நிறமித்துக்கொள்ள வேணும். எம்பெருமான் வடிவுக்கு ஒன்றே உபமாநமாகப் பேராமை இதனால் அத்யத்தக்கது.


  411.   
  பருவரங்கள் அவைபற்றிப்*  படையாலித் தெழுந்தானை* 
  செருவரங்கப் பொருதழித்த*  திருவாளன் திருப்பதிமேல்*
  திருவரங்கத் தமிழ்மாலை*  விட்டுசித்தன் விரித்தனகொண்டு* 
  இருவரங்கம் எரித்தானை*  ஏத்தவல்லார் அடியோமே. (2)

      விளக்கம்  


  • “தீதிலாத வொண்டமிழ்க ளிவையிரத்துளிப்பத்தும், ஓத வல்லபிராக்கள் நம்மை ஆளுமையார்கள் பண்டே” என்று- தம் அருளிச்செயலைக் கற்பார்க்குத் தாம் அடிமைசெய்வதாக அருளிச்செய்த நம்மாழ்வாரைப்போல, இவ்வாழ்வாரும் இப்பத்தையும் ‘கற்பார்க்கு’ அடிமை செய்யப்பெறுவோம் யாமென்கிறார். வரங்கள் அவை = அவை- முதல் வேற்றுமைச் சொல்லுருபு படை என்று சேனைக்கும் பெயர். யுத்தத்துக்குப் பெயர். ஆலிப்பு- கோலாஹலம். அரங்கல் - அழிதல். (இருவரங்கமேரித்தானை.) “ஏய்ந்த பணக்கதிரமேல் வெவ்வுயிர்ப்ப- வாய்ந்த மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்” என்றது காண்க. தமிழ் மாலை கொண்டு வந்தவல்லார்” என இபையும்


  412.   
  மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்*  வானோர்வாழ* 
  செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்து உலகாண்ட*  திருமால்கோயில்*
  திருவடிதன் திருவுருவும்*  திருமங்கைமலர் கண்ணும் காட்டிநின்று* 
  உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட*  ஒலிசலிக்கும் ஒளியரங்கமே. (2)

      விளக்கம்  


  • “ஓசலிக்கும்” என்ற விடத்து, ஓ- உயர்வு சிறப்பு; அசையுமாம் “காட்டிநின்று” என்ற பாடத்தில் செய்யுளோசை குன்றுதலாலும், வியாக்கியாக விரோத முண்டாகையாலும் “காட்டிநின்ற” என்றபாடங் கொள்ளப்பட்டது; “ப்ரகாசிப்பியாநின்ற அழகையுடைத்தான நீலமலரானது” (தாள் கோசி பாடம்) என்ற ஜீயருரைவாக்கிய மறியத்தக்கது. இராமபிரான், தன்னை அயோத்திக்கு வந்து முடிசூடி அரசாளுமாறு சித்திரகூடத்திற் பணிந்து வேண்டியன பரதாழ்வானை நோக்கி, ‘தந்தை சொற் பழுதுபடாதபடி பதினான்கு வருடம் வனவாசங்கழித்தன்றி யான் அரசாள மீளமாட்டேன்’ என்றருளிச்செய்ய, பரதன் ‘இனி நாம் நிர்ப்பந்திக்கலாகாது’ என்றிசைந்து, “அடியேனுடைய பாரதந்திரியமே விளங்ககைக்கும், தேவர் மீண்டெழுந்தருளிவீர்; என்று நம்புவதற்கும் அடி ஏன்?” என்று கேட்க, அவ்விரண்டிற்கு முறுப்பாகப் பாதுகைகளை அளித்தரளின படியைக் கூறுவது, முதலடி. ..... மயமான திருவடி; பாதுகை. பணயம்- அடகு; உலகத்தில் ஒருவர் ஒரு பொருளை மற்றொருவிடத்து அடகுவைப்பது; நம்பிக்கைகாகவாம்; அதுபோல இராமபிரானும் பரதனுடைய நம்பிக்கைக்காக அவனிடத்து இம்மாவடியை வைத்தருளினமையால் “பயணம் வைத்து” என்றார். வான் என்று பெருமையைச் சொன்னபடி; ‘பணயம்’ என்பதன் பொருளின் ஏகதேசமாதகிய நம்பிக்கையில் அப்பெருமைக்கு அந்நயம்; இதனால், உறுதியின் ஏகதேசமாகிய நம்பிக்கையில் அப்பெருமைக்கு அக்வயம்; இதனால், உறுதியான நம்பிக்கையைக் கூறியவாறு. பணையம் எனினும், பணயம் எனினும் ஒக்கும். ராவணாதி ராக்ஷஸலெல்லாரும் கூடிக்கொண்டிருப்பது தென்திசையிலாகலாம், அதனைச் சேருவுடையதிசை என்றார். இத்திசைக்கருமந்திருத்துகையாவது- ஜகஸ்நாதசுவாஸிகளான அரக்கரை அழித்ததும், ஸுக்ரீவனுக்குப் பகையறுத்து அரசாட்சி செய்வித்ததும், *இலஙகை பாழானாகப் படைபொருந்தும் விபீடணனுக்கு அரசித்ததும் முதலியன.


  413.   
  தன்னடியார் திறத்தகத்துத்*  தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல்* 
  என்னடியார் அதுசெய்யார்*  செய்தாரேல் நன்றுசெய்தார் என்பர்போலும்* 
  மன்னுடைய விபீடணற்கா மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்க்கண்வைத்த* 
  என்னுடைய திருவரங்கற்கன்றியும்*  மற்றோருவர்க்கு ஆளாவரே? (2)

      விளக்கம்  


  • “நீரிலே நெருப்புக்கிளருமாபோலே குளிர்ந்த திருவுள்ளத்தில் அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுக்காக; திருவடியைப் பொறுப்பிற்குமிவள் தன் சொல்வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டாவிற்றே” (முமுக்ஷுப்படி) என்றருளிச் செய்தபடி- சேதநர் செய்த பிழைகளைக் கணக்கிட்டு அதற்கு தக்கவாறு தண்டம் நடத்துவதாகச் சீற்றமுற்றிருக்கு மெம்பெருமானை எதிர்த்து ***= இவ்வுலற் பிழைசெய்தார் ஆர்?” என்றாற்போலப் சில பேச்சுக்களைப் பேசி மயக்கி அக்குற்றவாளிகளை வாழ்விக்க கடவனான பிராட்டிதானே எம்பெருமாளுடைய திருவுள்ளத்தைச் சோதிக்கக் கருதியோ, வேறு ஏதேனுமொரு காரணம் கொண்டோ அப்பகனச்சேஷபூதர்திறத்துச் சில குற்றங்களை எம்பெருமானிடத்துக் கூறுவளோயாகில், அதுகேட்டு எம்பெருமான், “இப்படிப்பட்ட குற்றங்களை உன்னடியார் செய்யத் துணிவர்களேயன்றி என்னடியார் ஒருகாலுஞ் செய்யமாட்டார்கள்” என்பன்; அவ்வளவிலும் பிராட்டியானவள், “நீர் இங்ஙன் சொல்லலாகாது, அவர்கள் குற்றவாளிகள் என்பதில் இறையும் ஐயமில்லை” என்று நிர்ப்பந்தித்துச்சொல்லில், அதற்கு எம்பெருமான் “உன்னடியார் செய்யுங் குற்றங்கள் எனக்குக் குண்மாகவே தோற்றாநின்றன; இனி நீ ஒன்றும் எதிர்த்துப்பேசக் கடவையல்ல” என்று வெட்டொன்று துண்டிரண்டாகக் கூறுவன் என்பது முன்னடிகளிற் போதரும். இதனால், பெருமாள், பிராட்டி, இருவரும் ஒருவருக்கொருவர் போராடி அடியாரைநோக்கியருளுமாறு கூறியதாம். தாமரையாள் - இடமடியாப்பிறந்த பெயர். குற்றத்தையும் நற்றமாகக் கூறவேண்டியவள் சிதகுரைப்பதுபற்றித் “தாமரையாளாகிலும்” என்றார். “என்னடியார் குற்றஞ்செய்யார்கள்” என்று சொல்லவேண்டும் போதும், குற்றம் என்ற சொல்லை எம்பெருமான் வாயாற் சொல்லுதற்குக்கூசி “என்னடியார் அது செய்யார்” என்பனாம்; “பேதை பாலகன் அதாகும்’ என்ற திருமாலையும்,


  414.   
  கருளுடைய பொழில்மருதும்*  கதக்களிறும் பிலம்பனையும் கடியமாவும்* 
  உருளுடைய சகடரையும் மல்லரையும்*  உடையவிட்டு ஓசைகேட்டான்* 
  இருளகற்றும் எறிகதிரோன்*  மண்டலத்தூடு ஏற்றிவைத்து ஏணிவாங்கி* 
  அருள்கொடுத்திட்டு அடியவரை*  ஆட்கொள்வான் அமரும் ஊர் அணியரங்கமே.

      விளக்கம்  


  • எம்பெருமான் தன்னை அடுத்தவர்களைப் பாரமபதத்திலேரற்றி நித்திய கைங்கைரிய பரராக்குமாறு கூறுவன, பின்னடிகள். பரமபதத்துக்குப் போவார் ஸூர்ய மண்டலத்தைக் கீண்டுகொண்டு போவதாகக் கூறப்படுவதனால் “எறிகதிரோன் மண்ணடலத்தூடு” என்றார். “தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கிண்டு புக்கு” என்று சிறிய திருமடலிலும், “மன்னுங்கடுகதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள், அன்னதோரில்லியினூடுபோய் வீடென்னுந் தொன்னெறிக்கண் சென்றாரை” என்ற பெரிய திருமடலிலும், “இந்தவுடல் விட்டிராவிமண்டலத்தூடேகி இவ்வண்டங் கழித்திடையிலாவரண மேழ்போய், அந்தமில்பாழ்கடந்தழகார் விரசைதனிற் குளித்தங்கமாநவனாலொளிக்கொண்ட சோதியும் பொற்றமரர், சந்தெதிர்கொண்டலங்கரித்து வாழ்த்தி வழிநடத்த வைகுந்தம்புக்க மணிபண்டபத்துச் சென்று, நந்திருமாலடியார்கள் குழங்களுடன் கூடும் நாளெனக்குக் குறுகும்வகை நல்கென்னெதிராசா” என்ற ஆர்த்திப் பிரபந்தத்திலும் (மணவாள மாமுனிகள்) அருளிச் செய்துள்ளவை காண்க. (ஏணிவாங்கி) மேல் ஏறுகைக்குச் சாதனமாயிருப்பது எதுவோ அது ஏணி எனப்படும்; அதாவது இங்கு எம்பெருமானுடைய உபாயத்வம்; பரமபதமேறுமளவுமிறே எம்பெருமானுக்கு உபாயத்வமென்கிற ஆகாரமுள்ளது; ஏறினபிறகு இவன்றனக்கு உயேத்வமென்கிற ஆகாரம் வருதால் “எணி வாங்கி” என்றாரென்க. ***- ***- ***- என்ற விடத்து ***- ” என்றது நோக்கத்தக்கது. பரமபதத்தில் எம்பெருமான் கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியா யறுகையாலே, அங்கு அவனுக்கு உபேயத்வமே யன்றி உபாயத்வமல்லையென்க.


  415.   
  பதினாறாம் ஆயிரவர்*  தேவிமார் பணிசெய்யத் துவரை என்னும்* 
  அதில் நாயகராகி வீற்றிருந்த*  மணவாளர் மன்னுகோயில்* 
  புதுநான் மலர்க்கமலம்*  எம்பெருமான் பொன்வயிற்றில் பூவேபோல்வான்* 
  பொதுநாயகம் பாவித்து*  இறுமாந்து பொன்சாய்க்கும் புனலரங்கமே.

      விளக்கம்  


  • முன்னடிகளிற் குறித்த வரலாறு - கீழ்* கதிரரயிரமிரவியின் ஆறாம்பாட்டினுரையில் குறிப்பப்பட்டுள்ளமை காண்க. இத்தேவிமார் பதினாறாயிரத்தொருநூற்றுவர் என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்திற் காணப்படுகிறது. திரவரங்கமா நகரைச்சுற்றிச் சூழ்ந்துள்ள திருக்காவேரியில் எம்பெருமானது திருநாபிக் கமலம் போன்ற பல தாமரை மலர்கள் ஓங்கி விளங்குகின்றனவென்றும், அப்பூக்களோடடொத்த அழகிய பூக்கள் மற்றோரிடத்திலுமில்லை யென்றுங் கூறுவன பின்னடிகள். வயிறு- திருநாபிக்கு இலக்கணை. “பூவே” என்றவிடத்து, ஏ - இசைநிறை. போல்வான் -வான் விகுதிபெற்ற வினையெச்சம் பொதுநாயகம் பாவித்து - லோகஸ்ருஷ்டிக்குக் காரணமாய் ஸர்வநிர்வாஹகமாயிருக்கிற இருப்பைத்தானு முடையதாகப் பாவித்து என்றபடி இறுமாந்து = இறுமா-பகுதி; இறுமாப்பு-கர்வம்.


  416.   
  ஆமையாய்க் கங்கையாய்*  ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்* 
  நான்முகனாய் நான்மறையாய்*  வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்* 
  சேமமுடை நாரதனார்*  சென்றுசென்று துதித்திறைஞ்சக் கிடந்தான்கோயில்* 
  பூமருவிப் புள்ளினங்கள்*  புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே.

      விளக்கம்  


  • துரியோதநாதியருடைய யாகத்தில் வந்த அரசர்களைவரும் ஸ்ரீத்வாரகையின் மஹிமையையும் , அங்கு ஸ்ரீகிருஷ்ணன் எழுந்தருளியிருக்கிற மதிப்பையுமெல்லாம் துரியோதநாதிகளின் முகமாகக் கேட்டுத் தாங்கள் கண்ணபிரானோடு உறவு பண்ணிக்கொள்ள விரும்பி, அத்துரியோதநாதியருடனும் பாண்டவர்களுடனும் ஸபரிலாராய்ப் புறப்பட்டு ரைலதகபர்வதத்திற்குப் போந்து, தாங்கள க்ருஷ்ணஸேவார்த்தமாக வந்திருக்கிறபடியைக் கண்ணபிரானுக்குத் தெரிவிக்க, அதையறிந்த கண்ணனும், ‘இவர்கள் பரிவாரங்களுடன் திரண்டு வருகைக்கக் காரணம் யாதோ’ என்று சிந்தித்து, ஸ்ரீபலராமனையும் ஸாத்யகியையும் முன்னிட்டுக்கொண்டு சேனைகளுடனும் ஆயுதங்களுடனும் அவர்களிருப்பிடத்திற் கெழுந்தருளிய எல்லாரையும் குசலங்கேட்டு, அவரவர்களுடைய வயஸ்ஸுக்கும் வலிவுக்கும் அறிவுக்கும் பெருமைக்கும் தக்கவாறு ஆஸநமிடுவித்துத் தானும் தனக்கேற்றதொரு சீரியசிங்காசனத்தில் எழுந்தருளியிருளியிராநிற்கச்செய்தே, ஸ்ரீநாரத மஹர்ஷி வந்து வணங்கி ஸ்ரீகிருஷ்ண பகவானை நோக்கி “ஸர்வ தேவதர்களிற் காட்டிலும் நீர் ஆச்சரியகாரும் தந்ய (***- )ன் - க்ருதார்த்தன்). ருமாகாநின்றீர் ; இங்ஙனிருப்பார் இவ்வுலகில் வேறு யாருமில்லை” என்று விண்ணப்பஞ்செய்ய, கண்ணபிரான் அதைக்கேட்டுப் புன்முறுவல் செய்து, “முனிவனே! தக்ஷிணைகளோடுகூட நான் ஆச்சரியனாகவும் ***- னாகவும் சொல்லப்பட்டவன்” என்றருளிச்செய்ய, அதனைக்கேட்ட முனிவன் மிகவும் மணமகிழ்ந்து. “பிரானே! தேவர் அருளிச்செய்த வாக்கியத்தினால் அடியேன் மிகவும் மகிழ்வுற்றேன்; இனி வந்தவழியே விடைகொள்ளுகிறேன்” என்று விண்ணப்பஞ்செய்து போக நினைத்தவளவில், அங்குள்ள அரசர்கள் பொருளைத் தாங்கள் அறியாமையாலே ஸ்ரீகிருஷ்ணனுடைய திருமுகமண்டலத்தை நோக்கி நாரதமுனிவன் தேவரைக்குறித்துச் சொன்ன வாக்கியமும், அதற்கு உத்தரமாகத் தேவர் அருளிச்செய்த வாக்கியமுமாகிற இந்த மஹாரஹஸ்ய எங்களுக்க இன்னதென்ற விளங்கவில்லை, இதனை விரித்துரைக்க வேணும்’ என்று பிரார்த்திக்க, கண்ணபிரானும் அம்முனிவன்றன்னையே கூறுமாறு நியமித்தருள, அம்முனிவன் அவ்வரசர்களை நோக்கி இவ்வண்ணம் கூறத்தொடங்கினான்;-


  417.   
  மைத்துனன்மார் காதலியை*  மயிர்முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி* 
  உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட*  உயிராளன் உறையும்கோயில்* 
  பத்தர்களும் பகவர்களும்*  பழமொழிவாய் முனிவர்களும் பரந்தநாடும்* 
  சித்தர்களும் தொழுதிறைஞ்சத்*  திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.

      விளக்கம்  


  • பாண்டவர் மனைவியாகிற த்ரௌபதியானவள் தான் ரஜஸ்வலையா செய்யாது தன்னைச் சபையில் மாநபங்கம்செய்ய மயிரைப்பிடித்திழுத்த நன் மீதும், அவனுக்கு உபபலமாயிருந்த துரியோதநாதியர்மீதும் கொண்டு இவர்களை உயிர்மாள்வித்தன்றி நாள் இவ்வரிந்தகூந்தலை முடிப்பதில்லை” என்ற சபதம் பண்ணிக்கொண்ட பதினான்கு வருஷம் காட்டில் அந்தகாலத்தோடும், பின்வு நாட்டிற்சேந்ர்நத காலத்தோடும் வாசியற விரிந்த தலையுந் தானுமாகத் திரிகிறபடி யைக்கண்ட கண்ணபிரான் “நாம் இவள் ஸங்கல் பத்தின்படியே காரியஞ் செய்துகொடுத்து இவளது கூந்தலை முடிப்பித்தாலன்றோ ‘சரணாகதரக்ஷகன்’ என்ற நாம் படைத்துள்ள விருது பிழைக்கலாவது” என்றெண்ணி அவ்வண்ணமே செய்யக் கருதித் தூதுநடத்தும் தேர் முன் நின்ற பாண்டவர்களுக்குத் துணைசெய்து, அவளது ஸங்கல்பத்தை ஈடேற்றி கூந்தலை முடிப்பித்து அப்பாண்டவர் தம்மையே அரசாய்வித்தவாறு கூறுவது முதலடி. கண்ணபிரான் தூதுசென்றதும் தேர்முன் நின்றதும், பிரபத்தியுபதேசம் பண்ணினதுமெல்லாம் காஞ்சாலியின் கூந்தலை முடிப்பதற்காகவேயென்பது அறியத்தக்கது. “அர்ஜுனனுக்கு தூத்யஸாரத்யங்கள் பண்ணிற்ற்றும் ப்ரபத்த துபதேசம் பண்ணிtற்றுமிளுளக்காக” என்ற ஸ்ரீவசநபூஷண ஸூத்தியின் வியாக்யானத்தில் இனத் விவரணம் காண்க; “பந்தார் விரலாள் பாஞ்சாலிகூந்தல் முடிக்கப் பாரதத்துக் கந்தார் களிற்றக் கழன்மன்னர் நகலங்கச் சங்கம் “வாய் வைத்தான்” என்றார் திருமங்கையாழ்வாரும். மைத்துனன்மார் - பெண்கொடுத்துக் கொள்ளுதற்கு உரிய உறவுமுறைமை உடையாரை மைத்துனன்மாரென்பது மரபாதல்பற்றிப் பாண்டவர்கள் கண்ணபிரானுக்கு மைத்துனன்மாராகக் கூறப்படுகின்ற ரென்பது கேள்வி. காதலி - வடமொழியில் ***- ***- என்ற சொற்கள் போலும்.


  418.   
  குறட்பிரமசாரியாய்*  மாவலியைக் குறும்பதக்கி அரசுவாங்கி* 
  இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை*  கொடுத்துகந்த எம்மான்கோயில்* 
  எறிப்புடைய மணிவரைமேல்*  இளஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின் வாய்* 
  சிறப்புடைய பணங்கள் மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே.

      விளக்கம்  


  • மாவலினிடத்து மூன்றடி வாங்கி இரண்டிகளால் கீழ்மேலு லகங்களனைத்தையு மளந்துகொண்டு, மூன்றாமடிக்கு இடம் கிடைக்காமல் அதனைத் தருமளவும் சிறைவைப்பாரைப்போலே அவனைப் பாதாளத்திற்கிடக்கும்படி தள்ளியவாறு கூறுவன, முன்னடிகள். “கலவிருக்கை கொடுத்து என்றது - அவ்விருப்பு சிறையிருப்பாகவன்றிகே ***- பூமியாகக் கொடுத்த படியைப்பற்ற; கலவிருக்கையாவது- எநஞ்ச கலந்திருக்குமிருப்பிறே” என்ற வியாக்கியவாக்கியமாகி மறியத்தக்கது. பிரமசாரி - ***- . பாதாளம்- வடசொல். * பச்சைமாமலையோல் மேனியனான அழகியமணவாளன் சாய்ந்தருளப் பெறுகையால் அத்திருமேனியினது நிழலீட்டாலே கறுத்துத் தோன்றுகின்ற திருவனந்தாழ்வானுடைய படங்களின்மேல் செழுமணிகள் ஒளிவிடாநிற்பது- ஒரு நீலரத்னபர்வதத்தின்மேல் பல இளஞ்சூரியர்கள் உதித்தாற்போலு மென்பது, பின்னடி: இது இல்பொருளுவமை


  419.   
  உரம்பற்றி இரணியனை* உகிர்நுதியால் ஒள்ளியமார்ப் உறைக்கவூன்றி* 
  சிரம்பற்றி முடியிடியக் கண் பிதுங்க*  வாயலறத் தெழித்தான்கோயில்*
  உரம்பெற்ற மலர்க்கமலம்*  உலகளந்த சேவடிபோல் உயர்ந்துகாட்ட* 
  வரம்புற்ற கதிர்ச்செந்நெல்*  தாள்சாய்த்துத் தலைவணக்கும் தண்ணரங்கமே.

      விளக்கம்  


  • தேவர்களிடத்துப் பெற்ற வரங்களின் வலிவையும் தனது தோள் வலியையும் பெருக்க நினைத்து ‘நமக்கு ஒருவராலும் ஓரழிவு நேரமாட்டாது’ என்று துணிந்து தனக்கு வரமளித்த தேவர்களோடு மற்றுள்ளாரோடு வாசியற அனைவரையும் நெருக்கித் தன்கீழாக்கித் ‘தன்னுடைய நாமொழிய எம்பெருமானது திருமநாமம் காட்டில் நடைபெறவொண்ணாது’ என விளங்கி, பசுவந்நாமம் சொன்னதுவே காரணமாகப் பள்ளியிலோதிவந்த தன் சிறுவனான ப்ரஹலாதனைப் பலவகைகளால் நலிந்த இரணியன் ஒருநாள் ‘பிள்ளாய்! நீ சொல்லுகிறவன் எங்கு உளன்?’ என்று தன் மகனைநோக்கிக் கேட்க, அவன் ‘எங்குமுளன்’ என்று விடைகூற, அது கேட்ட இரணியன் ‘இத்தூணிலே உளனோ?’ என்று சொல்லித் தானளந்து கட்டி வைத்ததொரு துணைப் புடைக்க, எம்பெருமான் தனது அடியவனுடைய சொல்லை மெய்ப்பிக்கைக்காக அத்தூணில் நரசிங்கவுருவாய் புறப்பட்டுத் தனது திருஉகிர்களையே ஆயுதமாகக்கொண்டு அவனுடைய மார்பை மறுபாடூருவும்படி ஊன்றித் தலையிற்கிரீடம் பொடிபடும் அடியாகவும், கண்கள் பிதுங்கும்படியாகவும், வேதனைகள் பொறாமல் வாய் விரியும்படியாகவும் தலையைப் பிடித்து நெரித்தமையைக் கூறுவன, முன்னடிகள். ஒள்ளிய மார்பு- இரணியன் தனது மார்வை ஆபரணம் முதலியனவற்றால் அலங்கரித்தும் பலகாலும் அழகு பார்த்துக்கொண்டிருந்தவனால், ***- என்கிறார். சிரம் - ...... பிதுங்குதல்- உள்ளடங்காமற் புறப்படுதல். “***- அலறு” என்றும் பாடமுண்டு. தெழித்தல் என்று கோபங் கொள்ளுதற் பேராதல் அறிக நான்காமடிக்கும் உள்ளுறை பொருள்- தேவர் முதலானார் திரண்டு வந்து காலைநீட்டி தலைவணங்கித் தண்டனிட்டுக் கிடக்குமாற்றைக் கூறியனாறாம்.


  420.   
  தேவுடைய மீனமாய் ஆமையாய்*  ஏனமாய் அறியாய்க்  குறளாய்* 
  மூவுருவில் இராமனாய்க்*  கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான்கோயில்* 
  சேவலொடு பெடையன்னம்*  செங்கமல மலரேறி ஊசடிலாப்* 
  பூவணைமேல் துதைந்தெழு*  செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே.

      விளக்கம்  


  • எம் பெருமானது தசாவதாரங்களை அடைவே கூறுவன முன்னடிகள். “தேவுடைய” என்ற அடைமொழி- ஆமை முதலிய எல்லாவற்றிலும் அந்வயிக்கக்கூடாது. (மூவருவினிராமனாய்) துஷ்டக்ஷத்ரியரை ஒழிப்பதற்கான பரசுராமவதாரமும் ராவணாதிராக்ஷஸரை ஒழிப்பதற்கான ஸ்ரீராமாவதாரமும், ஆஸுரப்ரக்ருதிகளான க்ஷத்ரியாதிகளை ஒழிப்பதற்கான பலராமாவதாரமுமாகிய இம்மூன்று அவதாரங்களுள் நடுச்சொன்ன ஸ்ரீராமாவதாரம் ஸ்வரூபேண அவதரித்ததாகையால் முக்கியம்; மற்றவை இரண்டு ஆவேசாவதாரங்களாகையால் அமுக்கியம். ஆயினும் அவ்விரண்டிற்கும் ஸ்வரூபாவேசரூபதயா.... உயர்த்தி உள்ளாகையால் அவை முக்கிய அவதாரங்களுடன் சேர்த்து கணக்கிடப்பட்டன. இவற்றில் பரசுராமாவதாரம் அஹங்காரயுக்தனான அதிஷ்டாநாம்ம் பண்ணி நிற்பதனால் முமுக்ஷுக்களுக்கு அது உபாஸிக்கத்தக்கதன்று; பலராமாவதாரம் அஹங்கார லேசமுற்றதாயும் எம்பெருமானுக்கு மிகவும் அபிமத விஷயமாயு மிருப்பதனால் அது முக்கிய அவதாரங்களாடொக்க உபதாதோயம். இனி, உபாஸிக்கத்தகாத பரசுராமாவதாரத்தை ஆழ்வார் அருளிச்செய்வானென்? எனில்; தசாவதாரங்களையும் அருளிச்செய்வதாகத் திருவுள்ளத்திற் கொண்டபடியாலும், அவ்வ்வதாரத்திற் பண்ணின விரோதிஸம்ஹாரம் தமக்கு அபிமதமாகையாலும் அருளிச்செய்தாரென்க “மன்னடங்க மழுவலங்கைக்கொண்ட இராமநம்பி” என்பர் மேலும்.


  421.   
  செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்*  செருச்செய்யும் நாந்தகமென்னும்* 
  ஒருவாளன் மறையாளன் ஓடாத படையாளன்*  விழுக்கையாளன்* 
  இரவாளன் பகலாளன் எனையாளன்*  ஏழுலகப் பெரும்  புரவாளன்* 
  திருவாளன் இனிதாகத்*  திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே.

      விளக்கம்  


  • அஸுரராக்ஷணரோடு போர்புரியுமிடத்து, அந்த யுத்தத்தை பெரியதிருவடிதானே நடந்த, எம்பெருமான் அதைக் கண்டுகொண்டு அவன் தோடரிலே இருக்குமத்தனையைப்பற்றச் செருவாளும்புள் என்றார்; “பாறிப்பாறியரை தம் பல்குழாய்கள் நீறெழுப்பாய் பறவை யென்றேறி வீற்றிருந்தாய்” என்றார் நம்மாழ்வாரும், நித்யஸூர்களின் தலைவனான பெரிய திருவடியை வாஹாரமாக வுடையவன் என்றதனால் நித்யாவிபூதிநாயகத்வம் சொல்லப்பட்டதாய், மேல்வீலா விபூதிநாயகத்லஞ் சொல்லப்படுகிறது- மண்ணாளன் என்று. காந்தகம்- நீட்டல் விகாரம். ஆயுதத்தினால் அழிக்கவொண்ணாத பாஹ்யருக் ருஷ்டிமதங்களை அழிப்பதற்குப் பரிகாரமான வேதங்களை ஆளுமவன் என்கிறது- மறையாளன் என்று. எனவே, விரோதிநிரஸகம் பண்ணுவது- சஸ்திரத்தாலும் சாஸ்த்ரத்தாலும் யவன் என்றலுமொன்று; என்றாரிறே எம்பெருமானார். விழுக்கையாளன் என்ற ஆழ்வார் யருளிச்செயலின்படி- தன்னையும் தனது பரிகாரங்களையு மடங்கலும் அடியார்தமக்கே ஆக்கிவைக்ருஞ் சீர்மையுடைமைதொல்லுகிறது; விழுமம்- சீர்மை ஞானத்தின் ஸங்கோசவிநாஸங்களுக்குக் காரணமாகிய இரவு பகல்களைத் தன் அதிகமாகவுடையவன் என்கிறது- இராவணன் பகலாளன் என்று.


  422.   
  கைந்நாகத்திடர் கடிந்த*  கனலாழிப் படையுயான் கருதும்கோயில்* 
  தென்நாடும் வடநாடும் தொழநின்ற*  திருவரங்கம் திருப்பதியின்மேல்* 
  மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்*  விரித்ததமிழ் உரைக்கவல்லார்* 
  எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்*  இணைபிரியாது இருப்பர் தாமே.(2)

      விளக்கம்  


  • இத்திருமொழிகற்பார் நலமந்த மில்லாதோர் நாடுபுக்கு அடியார்கள் குழாங்களை யுடன் கூடி வாழப்பெறுபவர் என்று பலங்கூறியவாறு. மெய்ந்நாவன்- “பொய்மொழி யொன்றில்லாத மெய்ம்மையாளன்” என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்தது போல; இத்தால் இவரருளிச் செய்யும் பகவத்வைபவம், திருப்பதி வைபவம் முதலியவற்றில் இறையும் பொய்கலசாமை போதருமென்க. மெய்யடியான் அடிமை செய்துவிட்டு ‘தேஹி’ என்று மடியேற்குமவரல்ல ரென்கை. கை+ நாகம்; கைந்நாகம். மெய்+நாவன். மெய்நாவன் தாம் எ. அசைச்சொற்கள்


  423.   
  துப்புடையாரை அடைவது எல்லாம்*  சோர்விடத்துத் துணை ஆவர் என்றே* 
  ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*  ஆனைக்கு நீ அருள் செய்தமையால்* 
  எய்ப்பு என்னை வந்து நலியும்போது*  அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
  அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)

      விளக்கம்  


  • “துப்புடையாயை யடைவதெல்லாஞ் சோர்விடத்துத் துணையாவை யென்றே” என்று முன்னிலையாகக் கூறவேண்டியிருக்க; அங்ஙனங் கூறாது படர்க்கையாகக் கூறியது, இடவழுவமைதியின் பாய்படும்: முன்னிலைப் படர்க்கை என்க; “ஓரிடம்பிற இடந்தழுவலுமுளவே” என்பது நன்னூல். காத்தல்தொழிலில் வல்லமை எம்பெருமானுக்கன்றி மற்ற ஆர்க்கேனும் அமையாதென்பது - ப்ரபந்ந்பரித்ராணம் முதலிய பிரபந்தங்களிளால் அறுதியடப் பட்டதாதலின், படர்க்கைப்பொருள் பொருந்தாதென்றுணர்க. “உடையாரை: துணையாவர்” என்ற பன்மை - பூஜையிற் போந்ததாம். ஆழ்வார் எம்பெருமானை நோக்கி, “திருமாலே! ரக்ஷணத்தில் ஸமர்ப்பனான உன்னை அடியேன் ஆசரயிப்பது, ‘செவி வாய் கண் மூக்கு முதலியவையெல்லாம் தளர்ச்சிபெற்று ஒரு காரியத்திற்கும் உதவப் பெறாதகாலத்தில் நீ துணையாவாய்’ என்ற நிச்சயத்தினாலன்றோ” என்றருளிச்செய்ய அதற்கு எம்பெருமான் “ஆழ்வீர்! என்ற எனது பிரதிஜ்ஞைக்க விஷயபூதர்களான அதிகாரிகளுக்குநீர் ஒப்போ?” என்று கேட்க; ஆழ்வார், “அப்படிப்பட்ட அதிகாரிகளோடு எனக்கு ஒப்பு இல்லையாயினும், உனது நிர்ஹேதகக்ருபையையே கணிசித்து என்னுடைய துக்கம் பொறுக்கமாட்டாமல் உன்னை அடைந்தேன்” என்ன; இப்படிநான் ஆரை ரக்ஷித்ததுகண்டு என்னைநீர் அடைந்தது? ” என்று எம்பெருமான் கேட்க “ஆர்த்தியும் அநந்யகதித்வமு மொழிய வேறொரு யோக்யதையில்லாத ஸ்ரீகஜேனக்திரானாழ்வானுக்கு நீ அருள்புரிந்து பிரஸித்தமன்றோ” என்று ஆழ்வார் அருளிச்செய்ய, அதுகேட்ட எம்பெருமான், “ஆனால் அந்த ஸ்ரீகஜேந்திராழ்வானைப்போல் நீர் உமக்குத் தளர்த்தி வந்தபோது நினைத்தீராகில் அப்போது வந்து ரக்ஷிக்கிறோம்” என்ன; ஆழ்வாரும் அது கேட்டு, “வாதம், பித்தம், கிலேக்ஷ்மம் என்ற மூன்று தோஷங்களும் ப்ரபலப்பட்டு வருத்துவதனாலுண்டாகும் இளைப்பானது என்னை நலியுங்காலத்தில் உன்னை நான் நினைப்பது எப்படி கூடும்?” என்று கேட்க; ஆழ்வார், “சரமகாலத்துக்காக இப்போதே சொல்லி வைக்க முடியும்; அதைத்தான் சொல்லிவைத்தேன்” என்ன; “இப்படி நீர் சொல்லிவைத்தால் இதை நான் நினைத்திருந்து உம்மை ரக்ஷிக்கவேண்டிய நிர்ப்பந்தமென்ன?” என்று எம்பெருமான் கேட்க அதற்கு ஆழ்வார், “அப்படியா? ஸ்ரீவைகுண்டத்தையும் திருப்பாற்கடலையும் விட்டுக் கோயிலில்வந்து பள்ளி கொண்டருளினது இதற்காகவன்றோ” என்பதாய்ச் செல்லுகிறது இப்பாசுரம்.


  424.   
  சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்*  சங்கொடு சக்கரம் ஏந்தினானே!* 
  நாமடித்து என்னை அனேக தண்டம்*  செய்வதா நிற்பர் நமன்தமர்கள்* 
  போமிடத்து உன்திறத்து எத்தனையும்*  புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை* 
  ஆமிடத்தே உன்னைச் சொல்லிவைத்தேன்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!

      விளக்கம்  


  • “ஆமிடத்தே - சாமிடத்தென்னைக் குறிக்கொள் கண்டாய் (என்று) உன்னைச் சொல்லிவைத்தேன்” என்று இயையும். கீழ்ப்பாட்டில் “எல்லாஞ் சோர்விடத்து” என்றதை விவரிக்கிறது - “சாமியிடத்து” என்று. எம்பெருமானே! எனது உயிர் உடலைவிட்டு நீங்கினபிறகு, யமகிங்கரர் வந்து மிக்க சீற்றங்கொண்டு நாக்கைமடித்துப் பலவகைத் துன்பங்களைச் செய்வதற்காக யமலோகத்திற்கு இழுத்துக்கொண்டு போகும்போது, என் நெஞ்சினால் உன்னை நினைக்கமுடியாதபடி உன்னை உன் நெஞ்சுக்கு விஷயமாக்காமல் மறைத்துக் கொள்ளும்படியான மாயச்செயல்களில் நீ வல்லவனாதல்பற்றி அக்காலத்தில் உன்னை நினைக்கை அரிதென்று, இந்திரியங்கள் ஸ்வாதீகமாயிருக்கப் பெற்ற இப்போதே, “சரமஸமயத்தில் அடியேன் நலிவுபடாவண்ணம் திருவுள்ளம்பற்றி யருளவேணும்” என்று உன் திருவடிகளில் விண்ணப்பஞ் செய்து கொண்டேன் என்கிறார். அநேகதண்டம் - வடசொல் தொடர். செய்வதா - செய்வதாக. நிற்பர் - முற்றெச்சம்; நின்று என்றபடி; செய்வதாநின்று- செய்வதாக மனத்திற்கொண்டு என்பது தேர்ந்தபொருள். அன்றி, நிற்பர் என்பதை வினைமுற்றாகக் கொள்ளுதலும் ஒன்று.


  425.   
  எல்லையில் வாசல் குறுகச்சென்றால்*  எற்றிநமன்தமர் பற்றும்போது* 
  நில்லுமின் என்னும் உபாயமில்லை*  நேமியும் சங்கமும் ஏந்தினானே!
  சொல்லலாம் போதே உன் நாமமெல்லாம்*  சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டுஎன்றும்* 
  அல்லல்படாவண்ணம் காக்கவேண்டும்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே!

      விளக்கம்  


  • எல்லை என்று - மரணதசையைச் சொல்லுகிறது; ஆயுஸ்ஸுக்கு மரணம் எல்லையாதலால். வாசல் -‘வாயில்’ என்பதன் மரூஉ. எற்றுதல் - அடித்தல். உபாயம்- வடசொல்; ஸாதகம் என்பது பொருள். “நில்லுமினென்னவுபாயமில்லை” என்று சிலர் ஓதுவர். எம்பெருமானே! நான் சரமதசையில் கர்மபலாநுபவத்துக்காக யமபுரதின்வழியே சென்றால் அங்க யமகிங்கரர்கள் வந்து என்னை அடித்துப் பிடிக்கும்போது, “நீங்கள் என்னருகில் வரக்கூடாது” என்று அவர்களைத் தடுக்க என்னால் முடியாது: ஆதலால், அப்படிப்பட் அநர்த்தம் அடியேனுக்கு விளையவொண்ணாமைக்கு உறுப்பாக இப்போதே உன் திருநாமங்களையெல்லாம் அநுஸந்தித்துவிட்டேன்; இதுவே ஹேதுவாக என்னை நீ திருவுற்றதிற்கொண்டு காத்தருளவேணுமென்றவாறு


  426.   
  ஒற்றைவிடையனும் நான்முகனும்*  உன்னையறியாப் பெருமையோனே!* 
  முற்றஉலகெல்லாம் நீயேயோகி* மூன்றெழுத்தாய முதல்வனேயோ!*
  அற்றதுவாழ்நாள் இவற்கென்றெண்ணி*   அஞ்சநமன்தமர் பற்றலுற்ற* 
  அற்றைக்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!

      விளக்கம்  


  • சிவபிரான் மற்றவர்களைப்போலன்றி, ப்ரஹ்மராவனை தலையெடுத்த போது, “நுண்ணுணர்வின் நீலார்கண்டத்தமமானும்” என்னும்படி தத்துவத்தை உண்மையாக உணருகைக்கீடான ஸூக்ஷ்மஞான முடையனாதலால், ஒற்றை என்று சிறப்பித்துக் கூறப்பட்டனன். ஒன்று + விடையன், ஒற்றை விடையன்; “ஐயீற்றுடைக் குற்றுகரமுமுளவே” என்பது நன்னூல். இனி, ஒற்றை என்பதை விடைக்கு அடைமொழியாக்கலுமாம். முதலடியில், உன்னை என்றது வார்த்ததைப்பாடு.***- ***- ***- ***- ***- ***- என்று விஷ்ணுவினுடைய ப்ரமமான ஸ்வரூபத்தைப் பிரமனாகிய தானும் சிவனும் மற்றமுள்ள தேவர் முனிவர்களும் அறியார்களென்னுமிடத்தைப் பிரமன்றானே சொல்லிவைத்தான் காண்மின். (முற்றவுலகெல்லாம் நீயேயாகி.) எம்பெருமானுக்குத் தன்னை யொதீந்த ஸமஸ்த வஸ்துக்கம் ப்ரகார பூதங்கள்; எம்பெருமான் அவற்றுக்கு ப்ரகாரி என்றபடி : (மூன்றெத்தாய்). அகார, உகார, மகாரங்களாகிற (ஓம்) பிரணவத்துக்கு அர்த்தமாயிருப்பவன் என்க. “ஓகார என்றது காண்க. இம்மூன்றெழுத்துக்களில் முதலாவதான அகாரத்தின் ப்ரக்ருத்யர்த்தமான ஸர்வகாரணத்வத்தைச் சொல்லுகிறது - முதல்வனே! என்று. ஓ, என்று இரக்கக்குறிப்புமாம் (மூன்றாமடியில்), இவன்+கு, இவற்கு, இடையில் உகரச்சாரியைபெறில், இவனுக்கு என்றாகும். அற்றைக்கு -அப்போதைக்கு.


  428.   
  தண்ணெனவில்லை நமன்தமர்கள்*  சாலக்கொடுமைகள் செய்யாநிற்பர்* 
  மண்ணொடு நீரும் எரியும் காலும்*  மற்றும் ஆகாசமும் ஆகிநின்றாய்!*
  எண்ணலாம்போதே உன்நாமமெல்லாம் எண்ணினேன், என்னைக் குறிக்கொண்டு என்றும்* 
  அண்ணலே! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!

      விளக்கம்  


  • தண்னானவு குளிர்ச்சி, ‘தண்ணேன’ என்றனுக்கருதி ஈர நெஞ்சு அற்றவர்களென்றவாறு . அன்றி ‘தண்ணனவு’ என்று கணிதலைச் சொல்லிற்றாய் ( தணிகள்-ஓய்தல்) கவிதையில் ஒழிவில்லாமையைக் கூறியவாறுமாய் சால உரிச்சொல். (மண்ணோடு இந்தியாகி.) இவ்வொற்றுமை ப்ரகாரப்காரியான நிபர்தாம்


  429.   
  செஞ்சொல்மறைப் பொருளாகி நின்ற*  தேவர்கள்நாயகனே! எம்மானே!* 
  எஞ்சலில் என்னுடை இன்னமுதே!*  ஏழலகுமுடையாய்! என்னப்பா!*
  வஞ்சவுருவின் நமன்தமர்கள்*  வலிந்துநலிந்து என்னைப்பற்றும்போது* 
  அஞ்சலமென்று என்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!

      விளக்கம்  


  • அமுதத்திற்கு எஞ்சலில்லாமையாவது- ‘அப்பொழுதைக்கப் பொழுதென்னாராவமுதமே” என்றபடி அநுபவிக்க அநுபவிக்க குறைவின்றிப் பணைக்கை, வஞ்சவுருவின் நமன்றமர்கள் தங்கள் வரவு ஒருவற்குத் தெரியாதபடி ரூபத்தை மறைத்துக்கொண்டு வரும் யமபடர்கள் என்றபடி, வஞ்சம்- அஞ்சல்- அஞ்சு என்ற வினைப்பகுதியாப் பிறந்த எதிர்மறை பொருமை யேவல்ல; அம்- சாரியை.


  430.   
  நான் ஏதும் உன் மாயம் ஒன்றறியேன்*  நமன்தமர்பற்றி நலிந்திட்டு* 
  இந்த ஊனேபுகேயென்று மோதும்போது*  அங்கேதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
  வானேய் வானவர் தங்கள் ஈசா!*  மதுரைப் பிறந்த மாமாயனே!*  என்- 
  ஆனாய்! நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!

      விளக்கம்  


  • அங்கேதும் நானுன்னை நினைக்கமாட்டேன்” என்றும் பாடமுண்டு “நானே துமுன்மாய மொன்றறியேன்” என்றவிடத்தில், (கீழ் இரண்டாம் பாட்டில்) ‘போமிடத்துன் திறத்தெத்தனையும் புகாவண்ணம் நிற்பதோர் மாயைவல்லை” என்றதை நினைக்க. இந்த ஊன்- விட்ட சரீரததிற்காட்டில் பிரவேசிக்கிற சரீரத்தின் கொடுமையைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த என். நரகத்தில் அதி தீவ்ரமான வேதனைகளை அநுபவிப்பதற்காக யமகிங்கரர்களினால் பூட்டப்படும் சரீரத்திற்கு ‘யாத்நாசரீரம்” என்று பெயர் அறிக. ஊனே. புகே ஏ இரண்டும் இசைநிறை என்னலாம்.


  431.   
  குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா!*  கோநிரை மேய்த்தவனே! எம்மானே!* 
  அன்றுமுதல் இன்றறுதியாக*  ஆதியஞ்சோதி மறந்தறியேன்* 
  நன்றும் கொடிய நமன்தமர்கள்* நலிந்து வலிந்து என்னைப் பற்றும்போது* 
  அன்றங்கு நீஎன்னைக் காக்கவேண்டும்*  அரங்கத்தரவணைப் பள்ளியானே!

      விளக்கம்  


  • அன்று முதல்- கர்ப்பவாஸம் முதலான என்றும் கொளா அறுதி முடிவு. “அன்றமுதலின்றறுதியா” என்ற பாடம் செய்யுளின்பத்துக்கு மாறுபாடாம். அன்று முதல் இன்றளவாக ஆகியஞ்சோதியை மறந்தறியேன் ஏன்னா நின்றுகொண்டு, - என்றால் விருத்தமன்றோலென்னில்; அதிசங்காமூலமாக கலக்கத்தினால் வந்த அச்சத்தாலே இன்னனே வேண்டுகிறபடி. (இத் திருமொழியின் அவதாரிகையில் இது விரியும்.) “பற்றும்போது அங்கு என்னைக் காக்க வேண்டும்” என்றிவ்வளவே போதுமாயிருக்க, அன்று என்று அதிகமாக ஒரு சொல் சொன்னது அவ்வவஸ்தையின் கொடுமையைக் கருதியாமென்க.


  432.   
  மாயவனை மதுசூதனனை*  மாதவனை மறையோர்கள் ஏத்தும்* 
  ஆயர்களேற்றினை அச்சுதனை அரங்கத்தரவணைப் பள்ளியானை*
  வேயர்புகழ் வில்லிபுத்தூர்மன்*  விட்டுசித்தன் சொன்ன மாலைபத்தும்* 
  தூய மனத்தனாகி வல்லார்*  தூமணி வண்ணனுக்காளர் தாமே. (2)

      விளக்கம்  


  • இப்பாடல், இத்திருமொழி கற்பார்க்கப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார். மேன்மைக்கு “அமரரேறு” என்பதுபோல, நீர்மைக்கு “ஆயர்களேறு” என்பதாம். நம்பூருவாசாரியர்கள் பெரியபெருமானைக் கிருஷ்ணாவதாரமாக அநுஸந்தித்துப் போருவர்கள்; “ கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெயுண்டவாயன் என்னுள்ளங் கவர்ந்தானை, அண்டர்கோ னணியாங்கள் என்னமுதிலே” என்றார் திருப்பாணாழவார். திருபவளத்தை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் மணக்கும் என்றருளிச் செய்வர். - என்று- யசோதைப்பிராட்டி பிள்ளைப்பணியாகச் சாத்தின திருவாபரணம் இப்போதும் பெரியபெருமாள் திருக்கழுத்திற் கிடக்கிறதென்று நேரில் கண்டநுபவித்து அருளிச் செய்தார் பட்டரும். தூயமனத்தனராகி வல்லார்- அநந்யப்ரயோஜநராக ஓதவல்லர்கள் என்றபடி; இதனால், சோறு கூறைகளையே முக்கிய பிரயோஜநமாக நச்சி ஓதுமவர்களை வியாவர்த்திக்கின்ற தென்க.


  607.   
  தாம் உகக்கும் தம் கையிற்*  சங்கமே போலாவோ* 
  யாம் உகக்கும் எம் கையில்*  சங்கமும்? ஏந்திழையீர்!* 
  தீ முகத்து நாகணைமேல்*  சேரும் திருவரங்கர்* 
  ஆ! முகத்தை நோக்காரால்*  அம்மனே! அம்மனே!* (2)  

      விளக்கம்  


  • எம்பெருமானுடைய விஸ்லேஷம் நெடுகிச்செல்லவே, அதனால் உடல் ஈர்க்குப்போல் கைவளைகளெல்லாம் கழன்றொழிந்தமையையும், இவ்வளவிலும் வந்து முகங்காட்டாத எம்பெருமானுடைய கொடுமையுங் கூறி வருந்துகின்றாள். எந்திழையீர்! என்று அருகே வந்துநிற்கும் பெண்களை விளிக்கிறபடி. “பெண்காள்! - தோழிகாள்!“ என்னாதே எந்திழையீர் என்றது - என்னைப்போலே வளையிழந்து வருந்தாதே, ப்ரளயத்துக்குத் தப்பிப் பிழைப்பாரைப்போலே நீங்கள் மாத்திரம் அவனுடைய விரஹத்துக்கு எப்படித் தப்பிப்பிழைத்தீர்கள்? என வியந்து கேட்கிறபடிபோலும். “ஏந்திழையீர்!, யாமுகக்கு மென்கையிற் சங்கமும் தாமுகக்கும் தம்கையிற் சங்கமே போலாவோ? என்று அப்பெருமாளைக் கேளுங்கள்“ என்று வாக்யசேஷம் பூரித்துக்கொள்ளவேணும். ‘நம் கையிலுள்ள சங்கு எப்போதும் நம்கையிலேயே இருக்கவேணும்‘ என்று அவர் ஆசைப்படுவதுபோல், நானும் ‘நம்கையிலுள சங்கு நம்கையிலேயே இருக்கவேணும்‘ என்று ஆசைப்பட ப்ராப்தி இல்லையா? அவருடைய ஆசைமாத்திரம் வழுவாமல் பலித்துவிடவேணும் என்னுடைய ஆசைமாத்திரம் பாழ்த்துப் போகவேணுமென்று இஃது என்ன விபரீதஸங்கல்பம்? என்று அவரையே போய்க் கேளுங்கள் என்கிறாள். இரண்டடியிலும் சங்கம் என்றது ஸப்தஸ்லேஷம். பாஞ்சஜந்யத்துக்கும் கைவளைக்கும் பெயர்.


  608.   
  எழில் உடைய அம்மனைமீர்!*  என் அரங்கத்து இன்னமுதர்* 
  குழல் அழகர் வாய் அழகர்*  கண் அழகர் கொப்பூழில்* 
  எழு கமலப் பூ அழகர்*  எம்மானார்* 
  என்னுடைய கழல் வளையைத் தாமும்*  கழல் வளையே ஆக்கினரே*

      விளக்கம்  


  • “சங்கஞ்சரிந்தன சாயிழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்“ என்னும்படி நான் அழகழிந்து கிடக்கச்செய்தே நீங்கள் அழகு பொலிந்து நிற்பதும் உங்கள் பாக்கியமே - என்பாள் போல எழிலுடையவம்மனைமீர் என விளிக்கின்றாளென்க. திருவரங்கத்திலே எனக்கு போக்யமான அமுதம்போன்று எழுந்தருளியிருப்பவராய், திருக்குழலழகும் திருவதரத்தினழகும் திருக்கண்ணழகுமு திநாபிக்கமலத்தழகும் பொலிய நின்று இவ்வழகையெல்லாங் காட்டி என்னை ஆட்படுத்திக்கொண்டவரான பெரியபெருமாள் தப்பாக ஒன்றுஞ்செய்யவில்லை யுத்தமாகவே செய்தார். நான் கழலாதவளையை இட்டுக்கொண்டிருந்தேனாகில் அவரும் அதனைக் கழலாத வளையாகவே அமைத்துவைப்பர், நான் கழல்வளையையிட்டுக்கொண்டேனாகையாலே அவர் அதை அந்வர்த்தமாக்கினார், என்மேல் குற்றமேயன்றி அவர்மேல் என்ன குற்றமிருக்கிறது? உள்ளத்தை உள்ளபடி செய்பவரன்றோ அவர். நான் கழலாதவளையே இட்டுக்கொண்டிருந்து அவர் அதைக் கழல்வளையாக ஆக்கினாராகில் அப்போது ஒருவாறு அவர்மேல் குற்றஞ்சாட்டலாம், நானே கழல்வளையிட்டுக் கொண்டேனான அருளிச்செய்கிறாள். இது நர்மோக்தி எனவும்படும். கைவளைக்குக் கழல்வளையென்று இடுகுறிப்பெயர். அதனைக் காரணப்பெயர்போலக்கொண்டு “தாமுங் கழல்வளையேயாக்கினரே“ என்றாள். கழன்றொழியும் வளையாதலால் கழல்வளை எனப்பெயர்வந்த்து என்கிறாளாய்த்து. “***“ (யுக்தோ வாரணலாபோயம் ஸ்யால! தேவாரணார்த்திந) என்ற வடமொழி ஸ்லோகத்தை இதனோடு ஒருபுடை ஒப்பிடலாம். வடமொழியில் வாரணம் என்றால் யானைக்கும் பெயர். கழுத்தைப்பிடித்துத் துள்ளுதலுக்கும் பெயர் ஒருவன் தனக்கு ஒருயானை கொடுக்கவேணும் என்று நாடோறும் ஒரு அரசனிடத்துச் சென்றுகொண்டிருந்தான், இப்படி நீ யானை கேட்பது தகுதியல்லவென்று சேவகர் நெடுநாள் அவனுக்கு ஹிதமாகச் சொல்லியும் அவன் கோளாதொழியவே, ஒருநாள் சேவகர் அவனைக் கழுத்தைப்பிடித்து நெட்டித்தள்ளிவிட்டனர். அதைக்கண்ட ஒருவன் அவனைநோக்கிக் கூறுகின்றான் வாரணம் விரும்பிய நீ வாரணம்பெற்றது தகுதியே என்கிறான். அதுபோல ஆண்டாளும் “என்னுடைய கழல்வளையைத் தாமுங் கழல்வளையே யாக்கினரே“ என்கிறாள்.


  609.   
  பொங்கு ஓதம் சூழ்ந்த*  புவனியும் விண் உலகும்* 
  அங்கு ஆதும் சோராமே*  ஆள்கின்ற எம்பெருமான்* 
  செங்கோல் உடைய*  திருவரங்கச் செல்வனார்* 
  எம் கோல் வளையால்*  இடர் தீர்வர் ஆகாதே?*   (2)

      விளக்கம்  


  • கடல்சூழ்ந்தமண்ணுலகும் விண்ணுலகுமாகிய உபயவிபூதியையும் அபாயலேஸமுமின்றி ரக்ஷித்தருளுமவனாய், என்னை ஒரு மூன்றாம் விபூதியாக ஆளுவனாய், திருவரங்கத்திலே பள்ளி கொண்டருளினபடியே செங்கோல்செலுத்துமவனான எம்பெருமான் இப்படி அவாப்தஸமஸ்தகாமனாயிருந்து வைத்தும் குறைவாளன்போன்று என்னுடைய கைவளையைக் கொள்ளை கொண்டுபோனான், போயிடுக, இவ்வளையினால் அவனுடைய தாரித்ரிய மெல்லாம் ஹதமாகட்டும் என்கிறாள். இரண்டாமடியின் முதலிலுள்ள அங்கு என்பது ஓர் அசைச்சொல், அதற்கு இவ்விடத்தில் பொருள் இல்லை. எம்பெருமான் என்றவிடத்துவியாக்கியான ஸ்ரீஸூக்தி, ‘ஸப்தாதிகளாலே களிக்கும்படி பண்ணிவைத்தான் அவ்விபூதியை, இங்குள்ளார்க்கும் கூட்டன்றிக்கே அங்குள்ளார்க்குங்கூட்டன்றிக்கே நடுவே நோவுபடும்படி பண்ணிவைத்தான் என்னை யொருத்தியையும்.“


  610.   
  மச்சு அணி மாட*  மதில் அரங்கர் வாமனனார்* 
  பச்சைப் பசுந் தேவர்*  தாம் பண்டு நீர் ஏற்ற* 
  பிச்சைக் குறையாகி*  என்னுடைய பெய்வளை மேல்* 
  இச்சை உடையரேல்*  இத் தெருவே போதாரே?*       

      விளக்கம்  


  • மற்றபேருடைய கைகளில் வளைஇருக்க உன்கை வளைகளை மாத்திரம் எம்பெருமான் கொள்ளைகொண்டது உன்னிடத்துள்ள அன்பு மிகுதியாலன்றோ ஆகவே, அதற்கு நீ மகிழவேண்டியிருக்க ஸோகிக்கலாமோ? என்று சிலபெண்கள் ஆண்டாளை நோக்கிக் கூற, அவர்களை நோக்கிக் கூறுகின்றாள். மச்சுக்களாலே அலங்கரிக்கப்பட்ட மாடங்களையும் மதிள்களையுமுடைத்தான திருவரங்கம் பெரியகோயிலிலேவந்து நம் உடைமையைப் பெறுகைக்குத்தாம் அர்த்தியாய்க் கண்வளர்ந்தருள்பவராய்ப் பசுகுபசுகென்று ஆகர்ஷகமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையரான பெரியபெருமாள் முன்பு தாம் மஹா பலியிடத்திலே யாசகராக எழுந்தருளி அவனிடத்தில் உதகதாராபூர்வகமாக பிக்ஷைவாங்கிக் கொண்ட பிச்சையில் குறையுண்டாகி அக்குறையை என்கையாலே தீர்த்துக்கொள்வேணுமென்ற ஆவலுடையவராய் என் கைவளையிலே ஆசையுடையவராகில் அஸுரனுடைய யஜ்ஞபூமியிலே நடந்தநடையை இத்தெருவை என்கண்வட்டத்திலே நடந்துகாட்டலாகாதோ? என்கிறாள். பச்சைப்பசுந்தேவர் - “மேகஸ்யாமம்“ என்றபடி பசுமைநிறம்மிக்க பெருமாள் என்றவாறு. அன்றியே, “பச்சைப்பசும்பொய்“ என்றால் மெய்கலசாதபெய் என்று பொருளாகிறப்போலே ‘கீழ்மைகலசாத மேன்மையுடையவர்‘ என்றும்பொருளாம். கலப்பற்ற பரதேவதை.


  611.   
  பொல்லாக் குறள் உருவாய்ப்*  பொற் கையில் நீர் ஏற்று* 
  எல்லா உலகும்*  அளந்து கொண்ட எம்பெருமான்* 
  நல்லார்கள் வாழும்*  நளிர் அரங்க நாகணையான்* 
  இல்லாதோம் கைப்பொருளும்*  எய்துவான் ஒத்து உளனே*  

      விளக்கம்  


  • விலக்ஷணமான வாமநரூபத்தைப் பரிக்ரஹித்து அழகிய கையிலே நீரேற்றுப் பிச்சைவாங்கி, பிச்சையிட்டவன் குடிவாழ்வதற்கும் ஒரடிமண் மிகாதபடி கைலலோகங்களையும் அளந்து ஸ்வாதீதப்படுத்திக்கொண்ட மஹாநுபாவராய், ஸிஷ்டர்கள் வாழ்கிற திருவரங்கத்திலே அநந்தஸாயியாய் எழுந்தருளியிருக்கிற பெரியவர் தரித்ர்ரான நம்முடைய கைப்பொருளையும் (அதாவது - இந்தவுடம்பையும்) கொள்ளை கொள்வார்போலே இராநின்றார் என்கிறாள். பொல்லாக்குறள் - ‘நல்லகுள்ளுருவாய்‘ என்னவேண்டியிருக்க, ‘பொல்லாக்குறளுருவாய்‘ என்றது என்னென்னில், நல்லதென்றால் கண்ணெச்சில் படுமென்று நினைத்து, நல்ல வஸ்துக்கள்மேலே கரிபூசுவாரைப்போலே பொல்லாக்குறள் என்கிறாளென்பர். அன்றியே, அழகிய குறளுருவாய் என்றால் நாட்டிலுள்ள அழகோடு ஸமமாக நினைக்கக்கூடுமென்று விஜாதீயத்வம் தோற்றப் பொல்லாக்குறள் என்கிறாளென்றும் கூறுவர். நல்லார்கள் வாழும் நளிரரங்கம் என்றவிடத்து, “மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிந்தை யளித்திருப்பார், சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கமென்பதுவே“ என்ற பெரியாழ்வார் திருமொழி நினைக்கத்தக்கது.


  612.   
  கைப் பொருள்கள் முன்னமே*  கைக்கொண்டார்* 
  காவிரிநீர் செய்ப் புரள ஓடும்*  திருவரங்கச் செல்வனார்* 
  எப் பொருட்கும் நின்று ஆர்க்கும்*  எய்தாது*
  நான் மறையின் சொற்பொருளாய் நின்றார்*  என் மெய்ப்பொருளும் கொண்டாரே*.

      விளக்கம்  


  • எல்லாப்பொருள்களிலும் அந்தர்யாமியா யிருந்துகொண்டு ஒருவர்க்கும். கைப்படாமல் வேதவேத்யராயிருக்கும் பெரியபெருமாள் என்கையிலுள்ள பொருள்களை முன்னமே கைக்கொண்டார், கடைசியாக ஸரீரமென்கிற ஒருவஸ்து மிகுந்திருந்தது, அதையும் கொள்ளைகொண்டாரென்கிறாள். “கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார்“ என்றவிடத்து வியாக்கியான ஸ்ரீஸூத்தி பரமபோக்யமானது - “இவளுக்கு முலைப்பாலோடே கூடப் புகுந்த்திறே பகவத்ஸம்பந்தம், * ஸ்ருஷ்ட ஸ்த்வம் வநவாஸாப போலே பிறக்கிறபோதே வளையிழந்து கொண்டுபோலே காணும் பிறந்தது.“ காவிரிநீர்செயப்புரளவோடும் திருவரங்கம் - அசேதநமான தீர்த்தமுங்கூட ரக்ஷ்யவாக்கம் வாடாமல் நோக்கும் தேஸம் என்றபடி. அசேதநமர்ன வஸ்துக்களும் தங்கள் தங்கள் ரக்ஷ்யவர்க்கங்களை நோக்குமிடமான திருவரங்கத்திலே வாழப்பெற்ற பரமசேதநன் ரக்ஷ்யகோடியிலே ஒருத்தியான என்னை நோக்காதிருப்பது தகுதியன்று என்று குறிப்பித்தபடி.


  613.   
  உண்ணாது உறங்காது*  ஒலிகடலை ஊடறுத்துப்* 
  பெண் ஆக்கை யாப்புண்டு*  தாம் உற்ற பேது எல்லாம்* 
  திண்ணார் மதில் சூழ்*  திருவரங்கச் செல்வனார்* 
  எண்ணாதே தம்முடைய*  நன்மைகளே எண்ணுவரே* 

      விளக்கம்  


  • தமக்கு மேற்பட்டாரொருவருமில்லாதபடி பரமபுருஷராயிருக்கும்வரை ஒருமானிடப் பெண்ணாகிய நீ இப்படியெல்லாஞ் சொல்லுவது தகுதியோ? அவருடைய மேன்மை எங்கே? உன்னுடைய கீழ்மை எங்கே? இதை ஆராயாமல் நீ அப்பெரியவரைப் பழிப்பது சிறிதும் பொருந்தாது என்று சிலமாதர்கள் ஆண்டாளைநோக்கிக் கூற, அதற்கு மறுமாற்றா முரைக்கின்றாள். அப்பெரியவர் ராமாவதாரத்தில் பட்டபாடுகள் தெரியாதா? ஒரு பெண்பெண்ட்டியின் உடம்பிலே ஆசைகொண்டு அந்த ஆஸாபாஸ பாரவஸ்யத்தாலே ஊணுமின்றி உறக்கமுமின்றி அவளுடைய பிரிவுக்கு ஆற்றாமல் நோவுபட்டு வானரப்படைகளைத் துணைகொண்டு கடலிலே அணைகட்டுகையாகிற அருந்தொழிலைச் செய்து இப்படிகளாலே தாம் வெளிப்படுத்திய பைத்தியத்தை ஸ்ரீராமாயணம் நடையாடுந் தேஸத்திலே அறியாதாருண்டோ? “***“ (அநித்ரஸ்ஸததம்ராம) என்றுமு, “***“ (ந மாம்ஸம் ராகவோபுங்க்தே நசாபி மது ஸேவதே) என்றும் ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கவில்லையா? பரமபுருஷராயிருப்பவர் ஒரு பெண்ணுக்காக அப்பாடுபடலாமோ? அது அவருடைய மேன்மைக்குத் தகுமோ? அது தகுமாகில், எனக்காகவும் அவர் அப்பாடுபட்டிருக்க வேண்டாவோ? என்னிடத்தில் மாத்திரமேயோ அவர் மேன்மை பாராட்டி யிருக்கவேணும்? என்கிறாள். தாமுற்ற பேதெல்லாம் என்றவிடத்தில், ஸுக்ரீவனைச் சரணமடைந்தது ஸமுத்ரராஜனைச் சரணமடைந்தது முதலிய மற்றுள்ள இழிவான செயல்களும் அநுஸந்திக்கத்தக்கவை. பெண்ணாக்கையாப்புண்டு என்றவிடத்து, “ஒருபெண் கொடியாலே கண்டுண்டு“ என்ற வியாக்கியான ஸூக்தி நோக்கத்தக்கது.


  614.   
  பாசி தூர்த்தக் கிடந்த*  பார்மகட்குப்*
  பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் சீர் வாரா*  மானம் இலாப் பன்றி ஆம்* 
  தேசு உடைய தேவர்*  திருவரங்கச் செல்வனார்* 
  பேசியிருப்பனகள்*  பேர்க்கவும் பேராவே*. (2)      

      விளக்கம்  


  • ஸ்ரீதேவிக்காகப்பட்ட பாட்டைச் சொன்னாள் கீழ்ப்பாட்டில், பூமிப் பிராட்டிக்காகப் பட்டபாட்டைச் சொல்லுகிறாள் இப்பாட்டில். ஹிரண்யக்சிபுவின் உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னும் கொடிய அசுரராஜன் தன்வலிமையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச்சென்றபோது, தேவர் முனிவர் முதலியேரது வேண்டுகோளினால் திருமால் நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹாவராஹரூபமாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டுபொருது கோட்டினாற்குத்திக்கொன்று, பாதாளலோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற்குத்தி அங்குநின்று எடுத்துக்கொண்டுவந்து பழையபடி விரித்தருளினன் என்ற வரலாறு அறியத்தக்கது. இப்பொழுது நடக்கிற ஸ்வேதவராஹகல்பத்துக்கு முந்தின பாத். மகல்பத்தைப்பற்றிய பிரளத்தின் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளயஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலேயெடுக்க நினைத்து ஸ்ரீவராஹாவதாரத்தைச் செய்தருளிக் கோட்டுநுனியாற் பூமியை எடுத்துவந்தன்னென்ற வரலாறும் உண்டு.


  615.   
  கண்ணாலம் கோடித்துக்*  கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்* 
  திண் ஆர்ந்து இருந்த*  சிசுபாலன் தேசு அழிந்து* 
  அண்ணாந்து இருக்கவே*  ஆங்கு அவளைக் கைப்பிடித்த* 
  பெண்ணாளன் பேணும் ஊர்*  பேரும் அரங்கமே*.   

      விளக்கம்  


  • ருக்மிணிப்பிராட்டியின் ப்ரதிபந்தகங்களைப்போக்கி அவளுக்கு உதவினபடியை அநுஸந்தித்து, ‘அவளொருத்திக்கு உதவினதானது பெண்பிறந்தாரெல்லார்க்கும் உதவினபடியன்றோ‘ என்று அவ்வழியாலே தரிக்கிறாள். அர்ஜுநனொருவனைநோக்கிக் கண்ணபிரானருளிச்செய்த வார்த்தையை நாமெல்லாரும் விஸவஸித்திருக்கிறோமிறே, அதுபோல். ருக்மிணியைக் கைப்பிடித்த வரலாறு -விதர்ப்பதேஸத்தில் குண்டினமென்கிறபட்டணத்தில் பீஷ்மகனென்கிற அரசனுக்கு ருக்மி என்கிற பிள்ளையும், ருக்மிணி என்கிற பெண்ணுமிருந்தனர். அந்த ருக்மிணியானவள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரம். அவளுக்கு யுக்த வயது வந்தவுடன் க்ருஷ்ணன் சென்று இப்பெண்ணை எனக்கு விவாஹஞ் செய்துகொடுக்கவேணுமென்று கேட்க, ருக்மியென்பவன் அவனைச் சேதிதேசத்தரசனான ஸிஸுபாலனுக்குக் கொடுக்க விரும்பியவனாதலால் கிருஷ்ணனுடைய விருப்பத்திற்கு உடன்படாதொழிந்தான். சிலநாள் கழிந்தபின் அந்த ருக்மிணியின் கல்யாணத்துக்காக ஸ்வயம்வரம் கோடித்து ஸகலதேஸத்து அரசர்களையும் ருக்மி வரவழைத்தான். அவர்கள் வந்து சேர்ந்தவுடனே க்ருஷ்ணனும் பலராமாதிகளைக்கூட்டிக்கொண்டு அப்பட்டணத்துக்குப்போய்க் கல்யாணத்துக்கு முதல்நாள் அந்தருக்மிணியை மாயமாய் அபஹரித்துக்கொண்டு வந்துவிட்டான். பின்பு அங்குள்ள ‘தந்தவக்த்ரன்‘ முதலிய பல அரசர்கள் போர் செய்ய எதிர்த்துவர, அவர்களைப்பலராமனும் கண்ணபிரானும் முதுகுகாட்டியோடும்படி செய்துவிட்டனர். பிறகு ருக்மிணிப்பிராட்டியின் தமையனான ருக்மியானவன் “இஃது என்ன அநியாயமான காரியமாயிருக்கிறதே“ என்று எதிர்பொருது மீட்பதாக நினைத்துவந்து கண்ணனைத்தகைய, அப்போது ஸ்ரீக்ருஷ்ணன், இவனைக்கொன்றால் ருக்மிணி மனம்வருந்துவாள் என்று அவனைப்பிடித்துத் தனது தேர்க்காலிலேகட்டி அம்பாலே அவனது துதலையைச் சிரைத்திட்டு மானபங்கஞ்செய்துவிட்டுப் பின்பு ருக்மிணியை விதிபூர்வகமாகக் கல்யாணஞ் செய்து கொண்டான் - என்பதாம். இவ்வரலாற்றி இன்னுஞ்சில விஸ்தாரங்களுமுண்டு.


  616.   
  செம்மை உடைய*  திருவரங்கர் தாம் பணித்த* 
  மெய்ம்மைப் பெரு வார்த்தை*  விட்டுசித்தர் கேட்டிருப்பர்* 
  தம்மை உகப்பாரைத்*  தாம் உகப்பர் என்னும் சொல்* 
  தம்மிடையே பொய்யானால்*  சாதிப்பார் ஆர் இனியே!* (2)   

      விளக்கம்  


  • நெஞ்சில் நினைப்பது ஒன்றாய் வாயாற் சொல்வது வேறொன்றாய், பின்பு அநுஷ்டிப்பது மற்றொன்றாயிருக்கும் செவ்வைக்கேடர்களை ஒருங்கவிடுக்கை மநோவாக்காயங்கள் மூன்றும் ஒருபடிப்பட்டிருக்குமவராய் அக்குணம்விளங்குமாறு கோயிலிலே கண்வளர்ந்தருளுமவரான பெருமான், முன்பு அர்ஜுநனை வ்யாஜீகரித்து அவனுடைய தேர்த்தட்டிலே நின்றுகொண்டு, யதார்த்தமுமாய் ஸ்லாக்யமுமான ஒருவார்த்தையை அருளிச்செய்தார், அதாவது -“உன்காரியங்களை யெல்லாம் குறையறத் தலைக்கட்டிவைக்க நானிருக்கிறேன், நீன ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டியத்தில்லை, உனது ஸகலபாரங்களையும் என்பக்கல் ஸமர்ப்பித்து நிர்ப்பரனாய் இரு“ என்று உரைத்த சரமஸ்லோகம். அவ்வார்த்தையைக்கேட்டு அதன்படியே நிஷ்டையுடையராயிருப்பர் பெரியாழ்வார் என்கிறாள் முன்னடிகளில், அவருடைய மகளான தனக்கும் அந்த அத்யவஸாயமே புகல் என்று காட்டியவாறு. (தம்மையுகப்பாரை இத்யாதி) நாட்டில் ஒருவன் ஒருவனைநோக்கி “நீ ஆர்க்கு நல்லவன்?“ என்றால், அதற்கு அவன் “நான் நல்லார்க்கு நல்லன்“ என்று மறுமொழி கூறுவது ஸார்வலௌகிகம். “நல்லார்க்குத் நீயாருண்டோ?“ என்றும் ஒரு உலகநீதியுண்டு. இந்த உலகவழக்குச்சொல் அவ்வெம்பெருமானிடத்துப் பொய்யாகப் போய்விட்டால் “ஏன் நீர் இப்படி அநியாயம் பண்ணுகிறீர்?“ என்று அவரைக் கேட்பதற்கும் “இனிநீர் இன்னபடி வர்த்திக்கவேணும்“ போலே, * நெறியெல்லாம் எடுத்துரைத்தவனே நன்னெறிக்கு மாறுபாடாக நடக்காகில் நாமோ அவனுக்கு நெறியுரைப்பது.? “மாமேகம் ஸரணம் வ்ரஜ“ என்று அவர் நமக்கு விதித்த காரியத்தை நாம் குறையறச்செய்து தலைக்கட்டினோம். “மோக்ஷயிஷ்யாமி“ என்றும் “மாஸுச“ என்றும் ஸவக்ருத்யமாக அவர்சொல்லிற்றை அவர் நிறைவேற்றாதொழியில் நாம் என்செய்வது? என்கிறாள் போலும்.


  647.   
  இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி*  இனத்துத்தி ணிபணம் ஆயிரங்களார்ந்த*  அரவரசப்
  பெருஞ்சோதி  அனந்தன் என்னும்*  அணிவிளங்கும் உயர்வெள்ளை ணையை மேவி*
  திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி*  திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்* 
  கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு*  என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (2)

      விளக்கம்  


  • உரை:1

   திருவரங்கம் பெரியகோயிலில் உபயகாவேரீ மத்யத்தில் திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்திருளாநின்ற அழகிய மணவாளனை அடியேன் கண்ணாரக்கண்டு களிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ! என்கிறார். ஆயிரம் பைந்தலைய அனந்தனாகையால் ஒவ்வொரு தலையிலும் ஒவ்வொரு மாணிக்கமணி உண்டாகையால் மணிகள் எனப்பட்டது. ஒரு மணியின் சுடரே இருளனைத்தையும் ஒழிக்கவற்றாயிருக்க, ஆயிரம் மணிகளின் சுடரால் இருளிரியச் சொல்லவேண்டாவே. இமைத்தல்-விழித்தல் அதாவது இங்கு, விளங்குதல். துத்தி-படத்தின் மேலுள்ள பொறி. மேவி என்ற வினையெச்சம் பள்ளி கொள்ளும் வினையைக் கொண்டு முடியும். பொன்னி-பொன்களைக் கொழிக்கையாலே காவிரிக்குப் பொன்னியென்று பெயராயிற்று. “பொன்னி திரைக்கையாலடிவருட” என்றது-காவிரியின் அலைகள் இனிதாக மோதிக் குளிர்ச்சி பெற்றுள்ள கரையிலே பரமஸூகமாகக் கண் வளர்ந்தருள்கின்றமையைக் கூறியவாறு. கோமளம்-வடசொல், கண்ணால் துகைக்கவொண்ணாத ஸௌகுமார்ய முடையவனை”என்பது வியாக்கியானம்.

   உரை:2

   மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடைய காவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால் இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் நகரத்தில், இருளானது சிதறி ஓடும்படி, ஓளி வீசும் மாணிக்கக்கற்களை பொருத்தியுள்ள நெற்றியினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மைநிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை, என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானது எந்நாளோ?
   என்றவாறு அரங்கனை நினைத்து ஏங்குகிறார் அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் தாபமிருந்தால் போதும் அவன் செயல்பட தொடங்கிடுவான்.
    


  648.   
  வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த*  வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ*
  வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்*  மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்*
  காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை*  கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
  மாயோனை மணத்தூணே பற்றி நின்று*  என் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே! 

      விளக்கம்  


  • ஆயிரம் வாய்களாலும் ஆயிர நாமங்களைச சொல்லி எம்பெருமானைத் துதிப்பவனும், ‘சுத்த ஸத்வகுணமுடையவன்’ என்பது நன்கு விளங்குமாறு பால்போல வெளுத்த உடலையுடையவனுமான ஆதிசேஷன், எம்பெருமானிடத்திலுள்ள பரிவின் மிகுதியாலே அஸ்நாதத்திலும் பயத்தை மங்கிப்பவனாதலால் கொடிய அரக்கரசுரர்கள் விபவாவதாரங்களிற் போல அர்ச்சையிலும் வந்து நலிவர்களோ என்னும் அதினங்கையினால் அவர்கள் அணுகமுடியாதபடி எப்போதும் அழலை வாயில் நின்று கக்கிக்கொண்டிருப்பதனால் செந்நிறமான அந்த அக்நிஜ்வாலையானது அவனுடைய தலைகளின் மேற் கிளம்பி விசேஷமாகப் பரவி ‘சண்பகம் முதலிய செம்மலர்களாலே ஒரு மேற்கட்டி அமைக்கப்பட்டுள்ளதோ’ என்று உத்பரேக்ஷிக்கத் தக்கதாய் விளங்க, அத்தகைய மேற்கட்டியின் கீழே அரவணையின் மீது பள்ளி கொண்டருளா நின்ற பெரியபெருமாளை ஸேவித்தமாத்திரத்திலேயே “காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்” என்றபடி சைதில்யம பிறந்து தரித்து நிற்கமுடியாத அவஸ்தை விளையுங்கால் அவ்வழகிய மணவாளனுடைய திருக்கண்ணோக்கத்திலே நிலாவுகின்ற இரண்டு திருமணத்தூண்களை அவலம்பமாகப் பற்றிக்கொண்டு தரித்துநின்று, வெகுநாளாக இழந்த இழவுதீர ஸ்தோத்ரம் பண்ணும்படியான பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார். (மணத்தூணே பற்றிநின்று) அழகிய மணவாளன் ஸந்நிதியில் ஹத்தண்மையிலிருக்கும் இரண்டு தூண்களுக்குத் “திருமணத்தூண்” என்பது ஸம்ப்ராதாயத் திருநாமம். மணம். “மணத்தூணருகில் நின்றுகொண்டு” என்னாமல் “பற்றி நின்று” என்றதன் உட்கருத்தை ஸ்ரீரங்கராஜஸ்த்தில் படடர் வெளியிட்டருளினார்.


  649.   
  எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி*  ஈரிரண்டு முகமும் கொண்டு*
  எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும்* தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற*  செம்பொன்-
  அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற* அணி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
  அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு அங்கு* அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே

      விளக்கம்  


  • பிரமன் வாயாரவாழ்த்திக் கண்ணாரக்கண்டு களிக்கும்படியாவும், ஸகலலோகங்களினுடையவும் ஆவிர்ப்பாவத்துக்குக் காரணமாகிய திருநாபிக்கமலம் நன்கு விளங்கும்படியாகவும் திருவனந்தாழ்வான் மீது சாய்ந்தருளாநின்ற பெரியபெருமாளை ஆராதிக்கின்ற அடியார்களோடுகூட அடியேனும் ஆராதிக்கும்படி அந்த திவ்யஸந்நிதானத்திற்குப்போய்ச் சேரும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார். எம்மாண்பின்-துதிப்பதற்கு உறுப்பான வாக்தேவியை எப்போதும் தன்வசமாகக் கைக்கொண்டிருக்கும் அதிசயத்தையுடையவன் என்பது உட்கருத்து.


  650.   
  மாவினை வாய் பிளந்து உகந்த மாலை*  வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி*
  ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர்-ஏற்றை*  அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப்
  பாவினை*  அவ் வடமொழியை பற்று-அற்றார்கள்*  பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
  கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள்*  கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே

      விளக்கம்  


  • குதிரை வடிவங்கொண்டு தன்னைக் கவளங்கொள்ளவந்த கேசியென்னு மசுரனைக் கொன்று தன்னை நித்யாநுபாவ்யனாக உபகரித்தருளினவனும், கடலைக் கண்டாற் போலே வடிவைக்கண்டபோதே தாபத்ரயமும் தீரும்படியிருப்பவனும், அரியன செய்து ஆச்ரிதரைக் காப்பாற்றினவனும் பரம யோக்யனுமான ஸ்ரீரங்கநாதனை நாத்தழும் பெழத் துதித்து நன்மலர்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து ‘அடியேனை ஆட்கொள்ள வேணும்’ என்கிற ப்ரார்த்தனை தோற்றக் கைகூப்பி நிற்கும்படியான பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ என்கிறார். எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற போக்யதைக்கு அவனுடைய திவ்ய குணங்களை ப்ரதிபாதிக்கின்ற திருவாய்மொழி முதலிய திவ்ய ப்ரபந்தங்களும் ஸ்ரீராமாயணம் முதலிய இதிஹாஸ புராணங்களுந் தவிர வேறொன்றும் ஒப்புச்சொல்லத் தகாமையால் “அந்தமிழினின் பப்பாவினை அவ்வடமொழியை” என்றார். (பற்றற்றார்கள் பயிலரங்கம்) “சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர்,அற்ற பற்றர் சுற்றிவாழு மந்தணீரரங்கமே” என்றார் திருமழிசைப்பிரானும்.


  651.   
  இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி*  இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த*
  துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால்*  தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த*
  மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ*  மதில்-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
  மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு*  என் மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே 

      விளக்கம்  


  • தும்புரு நாரதர் முதலிய முனிவர்கள் பகவத்குணங்களை இனிய இசையுடன் வீணையிலேயிட்டுப் பாடிக்கொண்டும், நான்முகன் முகங்களாலும் நான்கு வேதங்களை ஓதிக்கொண்டும் வணங்கப் பள்ளிகொண்டருளாநின்ற பெரியபெருமாளை நான் ஸேவிக்கப் பெறுவதும், அரசாட்சிக்கு ஏற்பப் பூமுடி சூடிக்கிடக்கின்ற என்தலை அவனுடைய திருவடியை முடிசூடப் பெறுதலும் என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார். இன் இசை யாழ் கெழுமி-இனிய இசையையுடைத்தான வீணையை அப்யஸித்து என்றுமாம்.


  652.   
  அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு*  ஏனை அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும்*
  தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித்*  திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும்*
  களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக்*  கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்*
  ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு*  என் உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே

      விளக்கம்  


  • உரை:1

   தேவர்களும் தேவமாதர்களும் முனிவர்களும் ஆராதநோபகரணங்களைக் கோண்டுவந்து, திரள் மிகுதியாலே ஒருவரையொருவர் நெருக்கிதள்ளிப் புகும்படியான கோயிலிலே கண்வளர்ந்தருளாகின்ற பெரியபெருமாளையுடைய செந்தாமரைக் கண்ணையும் முகசந்த்ர மண்டலத்தையும் ஸேவிக்கப்பெற்று, ‘பாவியேனுக்கும் இப்பேறு வாய்த்த அதிசயம் என் கொல்! என்று நெஞ்சுருகும்படியான நாளும் வரப்போகிறதோ! என்கிறார்.

   உரை:2

   வண்டு மலரும் தாமரை மேல் உள்ள பிரமனும், சிவனும் இந்திரனும் தேவர்களும் அரம்பையர்களும், தெளிந்த ஞானமுடைய முனிவர்களும் நெருக்கிக் கொண்டு திசையெல்லாம் பூக்களைத் தூவி அரங்கனை வழிபட வருவர். தேன் மலர் சோலைகள் உள்ள ஸ்ரீரங்கத்தில் பாம்பின் மீது கண்வளரும் கடல் நிறப் பெருமானின் தாமரைக் கண்களையும் சந்திரன் போன்ற முகத்தையும் பார்த்து வணங்கி, என் மனம் உருகும் நாள் என்றோ ? என்று ஏங்குகிறார்.


  653.   
  மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி*  வன் புலன்கள் அடக்கி இடர்ப் பாரத் துன்பம்
  துறந்து*  இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத் தொல் நெறிக்கண்*  நிலைநின்ற தொண்டரான*
  அறம் திகழும் மனத்தவர்தம் கதியை பொன்னி*  அணி அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
  நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்*  நீர் மல்க என்றுகொலோ நிற்கும் நாளே

      விளக்கம்  


  • முன்னடிகளிரண்டும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கூறுவன. “திகழும் மனம் மறம் ஒழித்து” என்று அந்வயித்து, விளாங்காநின்ற மனத்தில் நின்றும் கொடுமையை நீக்கி என்றுரைத்தலுமாம். முறம்-கொலை, கோபம், கொடுமை. இடர்ப்பாரத் துன்பம் துறந்து-“பாரமாய பழவினை பற்றறுத்து” என்கை. மஹத்தான துக்கத்தை விளைவிக்கக்கூடியதும், மனிதனைக் கீழே அமுக்குவதில் தலைச்சுமை போன்றதுமான பழையவினையை வேரோடு களைந்து என்றபடி.


  654.   
  கோல் ஆர்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்*  கொலையாழி கொடுந்தண்டு கொற்ற ஒள் வாள்* 
  கால் ஆர்ந்த கதிக் கருடன் என்னும் வென்றிக்*  கடும்பறவை இவை அனைத்தும் புறஞ்சூழ் காப்ப*
  சேல் ஆர்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
  மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி*  வல்வினையேன் என்றுகொலோ வாழும் நாளே

      விளக்கம்  


  • பஞ்சாயுதங்களும், திருவடி விஷ்வகஸேநன் முதலிய நித்யஸூரிவர்க்கங்களும் ‘அழகிய மணவாளனுக்கு எந்த ஸமயத்தில் என்னதீங்கு நேரிடுமோ? அன்று அதிநங்கை பண்ணி எப்போதும் நாற்புறமும் சூழ்ந்து காவலாயிருக்கத் திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்தருளாநின்ற பெரிய பெருமாளை, ஸாம்ஸாரிக ஸூகாபாஸங்களிலேயே ருசி கண்டிருக்குமபடி மஹாபாபத்தைப் பண்ணி நித்ய கைங்கரியத்தை இழந்து கிடக்கிற அடியேன் என்றைக்கு ஸேவித்து வாழப்போகிறேன் என்கிறார். இப்பாசுரத்தை அடியொற்றியே ஆழ்வான் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில்


  655.   
  தூராத மனக்காதல்-தொண்டர் தங்கள் குழாம் குழுமித்*  திருப்புகழ்கள் பலவும் பாடி* 
  ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்*  மழை சோர நினைந்து உருகி ஏத்தி*  நாளும்
  சீர் ஆர்ந்த முழவு-ஓசை பரவை காட்டும்*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
  போர் ஆழி அம்மானைக் கண்டு துள்ளிப்*  பூதலத்தில் என்றுகொலோ புரளும் நாளே!

      விளக்கம்  


  • “இன்கனிதனியருந்தான்” (நல்ல பொருள்களைத் தனியே அநுபவிக்கலாகாது) என்றாற்போல, பகவத்குணங்களைத் தனியே அநுபவிக்கக் கூடாதாகையால், அக்குணங்களை வாய்விட்டுக் கதறினாலன்றி த்ருப்திபெற முடியாதபடி கரைபுரண்ட காதலையுடைய பாகவதர்களின் கோஷ்டியிலே கலந்து அவர்களுடன் எம்பெருமானது கீர்த்திகளை வாயாரப்பாடி அதனால் ஆநந்தக்கண்ணீர் பெருகப்பெற்று ‘நமக்குமன்றோ இவ்வநுபவம் கிடைத்தது!’ என்கிற உள்ளடங்காத பேரின்பப் பெருமையாலே “மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை” என்கிற திருவாய் மொழியிற்படி தலைகால் தெரியாமல் துள்ளிக்கூத்தாடி, இப்போது ஸிம்ஹாஸநத்திலே மார்பு நெறித்திருக்கு மிருப்புத் தவிர்ந்து ஆநந்த மிகுதியாலே நிலத்தில் வீழ்ந்து புரளும்படியான பாக்கியம் வாய்ப்பது என்றைக்கோ? என்கிறார்.


  656.   
  வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய*  மண்-உலகில் மனிசர் உய்ய*
  துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச் சுகம் வளர*  அகம் மகிழும் தொண்டர் வாழ *
  அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்*  அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்*
  இன்ப மிகு பெருங் குழுவு கண்டு*   யானும் இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே (2)

      விளக்கம்  


  • தேவர்களும் மநுஷயர்களும் விலக்ஷண ஸ்ரீவைஷ்ணவர்களும் வாழவும் பாவங்கள் நீங்கிப் புண்ணியங்கள் செழிக்கவுமாகக் குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி வடதிசை பின்புகாட்டித் தென்திசை இலங்கை பாகவதர்களையுடைய கோஷ்டியிலே சேர்ந்து அடியேனும் அவர்களைப் போலே திளைத்து வாழ்வது என்றோ! என்கிறார்.


  657.   
  திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத்*  திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்* 
  கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக்*  கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால்*
  குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள்*  கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த* 
  நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார்*  நலந்திகழ் நாரணன்-அடிக்கீழ் நண்ணுவாரே  (2)

      விளக்கம்  


  • This decad of Tamil songs with Rhythm by the generous Kulasekara, --ruler of Madurai, wielder of a sharp sword, commander of a victorious army and heir to the tall umbrella, --with a deep desire in his heart for seeing the Lord to his fill, sings of the dark ocean-hued Lord who reclines on a serpent-bed in Arangam island in the middle of Kaveri river. Those who master it shall attain the auspicious feet of Narayana.


  658.   
  தேட்டு அருந் திறல்-தேனினைத்*  தென் அரங்கனைத்*  திருமாது வாழ் 
  வாட்டம் இல் வனமாலை மார்வனை வாழ்த்தி*  மால் கொள் சிந்தையராய்*
  ஆட்டம் மேவி அலந்து அழைத்து*  அயர்வு-எய்தும் மெய்யடியார்கள்தம்* 
  ஈட்டம் கண்டிடக் கூடுமேல்*  அது காணும் கண் பயன் ஆவதே  (2)

      விளக்கம்  


  • பூணாமார்பனைப் புள்ளுரும் பொன்மலையைக் காணாதரா; கண்ணென்றுங் கண்ணல்ல கண்டோமே” என்று ‘எம்பெருமாளைக் காண்பதே கண்படைத்ததற்கு ப்ரயோஜநம்’ என்கிற ஸித்தாந்தம ஸாமாந்யமானதென்றும் ‘பாகவதர்களுடைய கோஷ்டியை ஸேவித்தாலன்றிக் கண்களுக்கு ஸாபல்யம் கிடையா’ தென்பதே விசேஷஸித்தாந்தமென்றும் ஸாரமாகக் கண்டறிந்தவர்களுள் இவ்வாழ்வார் தலைவர் என்னுமிடம் இப்பாட்டில் விளங்கும். அடியவர்கட்குப் பரமயோக்யனான சரிய:பதியை வாயாரத்துதித்து அவனிடத்திலே மிக்க மோஹங்கொண்டு அதனால் உடம்பு நின்றவிடத்தில் நில்லாது கூத்தாடி, ‘ச்ரிய:பதியே! -மந்நாராயணனே!’ என்றிப்படி பல திருநாமங்களைக்கூறி யழைத்து, அவ்வளவில் எம்பெருமான் கண்ணெதிரே வந்து ளேவைதந்தருளக் காணாமையாலே வருந்தி ஏங்குகின்ற பாரமார்த்திக பாகவதர்களின் கோஷ்டியை ஸேவிக்கப்பெறுவதே கண்களுக்கு ப்ரயோஜநமாமென்கிறார்.


  659.   
  தோடு உலா மலர்-மங்கை தோளிணை தோய்ந்ததும்*  சுடர்-வாளியால்* 
  நீடு மா மரம் செற்றதும்*  நிரை மேய்த்ததும் இவையே நினைந்து*
  ஆடிப் பாடி அரங்க ஓ என்று அழைக்கும்*  தொண்டர் அடிப்-பொடி 
  ஆட நாம் பெறில்*  கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை*  என் ஆவதே?  

      விளக்கம்  


  • பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பைபூண்டு, உண்டிராக் கிடக்கும்போது முடலுக்கே கரைந்து நைந்து” என்றபடி அல்லும் பகலும் ஸரம்ஸாரிக சிந்தனைகளே நிகழும் லௌகிகர்படி யில்லாமல் எம்பெருமானுடைய திவ்யசரிதங்களையே மாறி மாறி அநுஸந்தித்து, அவ்வநுஸந்தாநத்தாற் பிறந்த உகப்பு உள்ளடங்காமல் பகந்நாமங்களை வாய்விட்டுக் கதறுகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸ்ரீபாததூளிகளில் அவகாஹிக்கப்பெற்றால், பிறகு ‘கங்கையில் நீராடவேணும்’ என்கிற விருப்பமும் வியர்த்தமேயாம் என்கிறார்.


  660.   
  ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும்*  முன் இராமனாய்* 
  மாறு அடர்த்ததும் மண் அளந்ததும்*  சொல்லிப் பாடி*  வண் பொன்னிப் பேர்- 
  ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு* அரங்கன் கோயில்-திருமுற்றம்* 
  சேறு செய் தொண்டர் சேவடிச்* செழுஞ் சேறு என் சென்னிக்கு அணிவனே

      விளக்கம்  


  • எம்பெருமானுடைய பல அவதார சரித்திரங்களையே அநவரதம் வாயாரப் பாடிக்கொண்டு அன்பு மிகுதியால் கண்களின்று பெரிய நதிபோலப் பரவசமாகப் பெருகுகின்ற ஆநந்த புஷ்பங்களாலே ஸ்ரீரங்கநாதன் ஸந்நிதித் திருமுற்றத்தைச் சேறாக்குகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களின் திருவடிகளால் தொகையுண்ட சேற்றை எனது தலைக்கு அலங்காரமாகக் கொள்வேன் என்கிறார். கண்ணநீர் எவ்வளவு அடக்கினாலும நில்லாமல் பெருவெள்ளமிடுதற்குப் பொருத்தமான த்ருஷ்டாந்தம் காவிரியேயாம். கணடநீர் ஸ்ரீ (கண் அ) அ-ஆறாம் வேற்றுமை யுருபு கண்களினுடைய நீர் என்றபடி.


  661.   
  தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும்*  உடன்று ஆய்ச்சி கண்டு* 
  ஆர்த்த தோள் உடை எம்பிரான்*  என் அரங்கனுக்கு அடியார்களாய்*
  நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து*  மெய் தழும்பத் தொழுது 
  ஏத்தி*  இன்பு உறும் தொண்டர் சேவடி*  ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே

      விளக்கம்  


  • “எத்திறம்! உரலினோடிணைந்திருந்தேங்கிய எளிவே!” என்று நம்மாழ்வார் ஆறுமாதம் மோஹித்துக்கிடக்கும்படி மயக்கவல்ல கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ட அபதாநத்தை அநுஸந்தித்து, “கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெயுண்டவாயன்-அணியரங்கன்” என்றபடி ஸ்ரீரங்கநாதனை அக்கண்ணபிரானாகப் பாவித்துப் பணிசெய்யும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குப் பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்டிருப்பேன் நான் என்கிறார்.


  662.   
  பொய் சிலைக் குரல் ஏற்று-எருத்தம் இறுத்தப்*  போர்-அரவு ஈர்த்த கோன்* 
  செய் சிலைச் சுடர் சூழ் ஒளித்*  திண்ண மா மதில்-தென் அரங்கனாம்*
  மெய் சிலைக் கருமேகம் ஒன்று*  தம் நெஞ்சில் நின்று திகழப் போய்* 
  மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து* என் மனம் மெய் சிலிர்க்குமே

      விளக்கம்  


  • அடியார்களை ஆட்கொள்வதற்காக அருமையான செயல்களைச் செய்தருளின எம் பெருமானாகிற காளமேகத்தை ஹ்ருதயத்திலே வஹிக்கப்பெற்று எப்போதும் மயிர்க்கூச்செறியும் திருமேனியையுடயரா யிருக்கின்ற ஸ்ரீவைஷ்ணவர்களை அநுஸந்தித்து, அவர்கள் பாடும் பாட்டை என்னெஞ்சு படாநின்ற தென்கிறார். “திகழப்போய்” என்ற விடத்து, போய்-வார்த்தைப்பாடு. “மனம் மெய்சிலிர்க்கும்” என்றது-மனம் விகாரப்படாநின்ற தென்றபடி.


  663.   
  ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன*  வானவர் தம்பிரான்* 
  பாத மா மலர் சூடும் பத்தி இலாத*  பாவிகள் உய்ந்திடத்*
  தீதில் நன்னெறி காட்டி*  எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே* 
  காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும்*  காதல் செய்யும் என் நெஞ்சமே 

      விளக்கம்  


  • ஸகல ஜகத்காரண பூதனாய் ஸர்வவ்யாபகனான எம்பெருமானிடத்து அன்பு இல்லாதவர்களான பாவிகளும் அவ்வன்பைப் பெற்று உஜ்ஜீவிக்குமாறு தேச தேசாந்தரங்களெங்கும் ஸஞ்சரித்து ஸ்வரூபாநுரூபமான அர்த்த விசேஷங்களை ஆங்காங்கு உபந்யாஸமுகேந உபதேசித்துவரும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே நான் பிறவிதோறும் அன்பு பாராட்டுவேன் என்கிறார். “எப்பிறப்பிலும்” என்ற சொற்போக்கால், அப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் பக்திபண்ணுவதற்காக இன்னும் பல ஜந்மங்களைத் தாம்பெற விரும்பியிருக்குமாறு விளங்கும்.


  664.   
  கார்-இனம் புரை மேனி நற் கதிர் முத்த*  வெண்ணகைச் செய்ய வாய்*
  ஆர-மார்வன் அரங்கன் என்னும்*  அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச்*
  சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து*  கசிந்து இழிந்த கண்ணீர்களால்*
  வார நிற்பவர் தாளிணைக்கு* ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே

      விளக்கம்  


  • பல காளமேகங்கள் திரண்டாற்போன்று விளங்குகின்ற திருமேனியையும், அத்திருமேனியில் ஓடுகின்ற விலக்ஷணமான லாவண்யத்தையும், முத்துவரிசை போன்ற புன் முறுவலையுமுடைய திருவதரத்தையும், முத்துமாலையணிந்த திருமார்பையுமுடையனான ஸ்ரீரங்கநாதனென்கிற ஒரு பரஞ்சோதியை அடிபணிந்து கண்ணுங் கண்ணீருமாய் நிற்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே என் நெஞ்சமானது அநந்யப்ரயோஜநமாய் ஆட்பட்ட தென்கிறார்.


  666.   
  மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப*  ஏங்கி இளைத்து நின்று* 
  எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து*  ஆடிப் பாடி இறைஞ்சி*  என்
  அத்தன் அச்சன் அரங்கனுக்கு*  அடி யார்கள் ஆகி*  அவனுக்கே 
  பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள்*  மற்றையார் முற்றும் பித்தரே  

      விளக்கம்    668.   
  மெய் இல் வாழ்க்கையை*  மெய் எனக் கொள்ளும்*  இவ்
  வையம்தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*
  ஐயனே*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
  மையல் கொண்டொழிந்தேன்*  என்தன் மாலுக்கே (2)

      விளக்கம்  


  • மெய்யில் வாழ்க்கை = மெய் இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.


  669.   
  நூலின் நேர்-இடையார்*  திறத்தே நிற்கும்* 
  ஞாலம் தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*
  ஆலியா அழையா*  அரங்கா என்று* 
  மால் எழுந்தொழிந்தேன்*  என்தன் மாலுக்கே

      விளக்கம்  


  • ஆலியா, அழையா=‘செய்யா’ என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம், ஆலித்து அழைத்து என்றபடி


  670.   
  மாரனார்*  வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்* 
  பாரினாரொடும்*  கூடுவது இல்லை யான்*
  ஆர-மார்வன்*  அரங்கன் அனந்தன்*  நல் 
  நாரணன்*  நரகாந்தகன் பித்தனே

      விளக்கம்  


  • நரகாந்தகன்-நரகாஸூரனைக் கொன்றவன் என்றுமாம்.


  671.   
  உண்டியே உடையே*  உகந்து ஓடும்,*  இம்
  மண்டலத்தொடும்*  கூடுவது இல்லை யான்*
  அண்டவாணன்*  அரங்கன் வன் பேய்-முலை*
  உண்ட வாயன்தன்*  உன்மத்தன் காண்மினே

      விளக்கம்  


  • ‘ஸ்ரீராமாயணம் எங்கு உபந்யஸிக்கிறார்கள்? ஸ்ரீ பாகவதம் எங்கு உபந்யஸிக்கிறார்கள்? பகவத்ஸேவை எங்கே கிடைக்கும்? பாகவதஸேவை எங்கே கிடைக்கும்? ’ என்று காதும் கண்ணும் தினவெடுத்து ஓடிக்களிக்கவேண்டியது ஸ்வரூபமாயிருக்க, அஃதொழிந்து ‘சோறு கொடுப்பது எங்கே? கூறை கிடைப்பது எங்கே?’ என்று வாய்வெருவிக் கொண்டு பறந்தோடுகின்ற இப்பாவிகளோடு எனக்குப் பொருந்தாது. விரோதிகளைப் போக்கித் தன்னை அருள்கின்ற எம்பெருமான் குணங்களையே நினைந்து நைந்து உள்ளுரைந்துருகுமவன் நான் என்கிறார்.


  672.   
  தீதில் நன்னெறி நிற்க*  அல்லாது செய்*
  நீதியாரொடும்*  கூடுவது இல்லை யான்*
  ஆதி ஆயன்*  அரங்கன் அந் தாமரைப்* 
  பேதை மா மணவாளன்*  தன் பித்தனே 

      விளக்கம்  


  • தேவதாந்தரங்களைப் பற்றுகை, தீயநெறி; எம்பெருமானை ஸ்வயம் ப்ரயோஜநமாகப் பற்றுகை; நல்ல நெறி; ஐச்வரியம் முதலிய க்ஷுத்ரபுருஷார்த்தங்களை விரும்பி அவற்றுக்காக எம்பெருமானைப் பற்றுகை, தீமையோடு கலசிய நல்ல நெறி-என்று கண்டுகொள்க. அநந்ய ப்ரயோஜநமாக எம்பெருமானைப் பற்றுகையாகிற பரமசுத்த மார்க்கத்தை விட்டிட்டு, ஸ்வரூப விருத்தமாக ஒழுகுகின்றவர்களோடு எனக்குப்பொருந்த மாட்டா தென்றாராயிற்று.


  673.   
  எம் பரத்தர்*  அல்லாரொடும் கூடலன்*
  உம்பர் வாழ்வை*  ஒன்றாகக் கருதலன்*
  தம்பிரான் அமரர்க்கு*  அரங்க நகர்*
  எம்பிரானுக்கு*  எழுமையும் பித்தனே

      விளக்கம்  


  • ஸம்ஸாரத்தில் வெறுப்பும் கைங்கரியத்தில் விருப்பும் இல்லையாகில் ப்ரஹ்மாதிகளின் ஸம்பத்தேயாகிலும் அதை நான் க்ருணமாகவே நினைப்பேன்; நித்யஸூரிகளெல்லாம் அநுபவிக்குமாபோலே ஸம்ஸாரிகளும் இழவாமல் அநுபவிக்கும்படி கோயிலிலே வந்து ஸூலபராகக் கண்வளர்ந்தருளுமவருடைய இந்த நீர்மையை நினைத்து ‘இது எத்திறம்!’ என்று மோஹிப்பதே எனக்குத் தொழிலாயிருக்கு மென்கிறார்.


  674.   
  எத் திறத்திலும்*  யாரொடும் கூடும்*  அச்
  சித்தந்தன்னைத்*  தவிர்த்தனன் செங்கண் மால்*
  அத்தனே*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
  பித்தனாய் ஒழிந்தேன்*  எம்பிரானுக்கே

      விளக்கம்  


  • ஆழ்வீர்! அயலாரோடு பொருந்தாமைக்கடியான நன்மை உமக்கு வந்தபடிஏன்?’ என்று சிலர் கேட்க; இது நானே ஸம்பாதித்துக் கொண்டதல்ல; ஸர்வேச்வரனது அருளடியாகக் கிடைத்ததென்கிறார். ‘ஒரு அவைஷ்ணவனோடு பேசினால் ஸகல புருஷார்த்தங்களும் கொள்ளைகொள்ளையாகக் கிடைக்கும்’ என்று ஒரு ஆப்தன் சொன்னபோதிலும் அப்போதும் அவர்களை த்ருணமாகக் கருதி, ஸ்ரீரங்கநாதா! ஸ்ரீரங்கநாதா!’ என்றே எப்போதும் வாய்வெருவிக் கொண்டிருக்குமாறு எம்பெருமான் எனக்கு அருள்புரிந்த பாக்கியம் மற்றையோர்க்குக் கிடைக்குமா என்கிறார். எம்பெருமான் என்னை ஒருதடவை குளிரக் கடாக்ஷித்த மாத்திரத்திலே இந்த பாக்கியம் வாய்த்தது என்பார் “செங்கண்மால்.” என்கிறார்.


  675.   
  பேயரே*  எனக்கு யாவரும்*  யானும் ஓர்
  பேயனே*  எவர்க்கும் இது பேசி என்*
  ஆயனே!*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
  பேயனாய் ஒழிந்தேன்*  எம்பிரானுக்கே

      விளக்கம்  


  • (கோமணம் கட்டாத ஊரில் கோமணம் கட்டுவானொருவன் பைத்தியக்காரன் போல் பரிஹஸிக்கத்தக்கவனாவன்) என்ற பழமொழியின்படி-லோகவிஜாதீயரான நீர் பைத்தியக்காரன்; என்று எல்லாராலும் இகழக் கூடியவராயிருக்கின்றீரே! என்று ஆழ்வாரை நோக்கிச் சிலர் கூற, அவர்களுக்கு விடைகூறுகின்ற பாசுரமிது.


  676.   
  அங்கை-ஆழி*  அரங்கன் அடியிணை*
  தங்கு சிந்தைத்*  தனிப் பெரும் பித்தனாய்க்*
  கொங்கர்கோன்*  குலசேகரன் சொன்ன சொல்*
  இங்கு வல்லவர்க்கு*  ஏதம் ஒன்று இல்லையே (2)

      விளக்கம்    728.   
  தேவரையும் அசுரரையும்*  திசைகளையும் படைத்தவனே* 
  யாவரும் வந்து அடி வணங்க*  அரங்கநகர்த் துயின்றவனே* 
  காவிரி நல் நதி பாயும்*  கணபுரத்து என் கருமணியே* 
  ஏ வரி வெஞ்சிலை வலவா*  இராகவனே தாலேலோ (2)

      விளக்கம்    772.   
  அரங்கனே! .தரங்கநீர்*  கலங்க அன்று குன்றுசூழ்,* 
  மரங்கள் தேய மாநிலம் குலுங்க*  மாசுணம் சுலாய்,*
  நெருங்கநீ கடைந்தபோது*  நின்றசூரர் என்செய்தார்?* 
  குரங்கையாளுகந்த எந்தை!* . கூறுதேற வேறிதே.*

      விளக்கம்  


  • இந்திரன் முதலிய தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மந்தர மலையைமத்தாக நாட்டி- வாஸுகிநாகத்தைக் கடைகயிறாகச் சுற்றிக்கடல் கடைந்தபோது தேவர்கள் அசுரர்கள் முதலியோர் தாங்கள் கயிற்றைவலித்துக் கடைவதாகக் கைவைத்து க்ஷணகாலத்திற்குள் இளைதபுதுப்போய் கைவாங்கினவாறே ‘நீங்கள் வெறுமனே இருங்கள்’ என்று அவர்களைச் சுகமாக உட்காரவைத்து விட்டு எம்பெருமான் தானே அஸஹாயனாய்க் கடைந்து தலைக்கட்டியிருக்கச் செய்தேயும் “தேவதைகள் கடல்கடைந்தார்கள்” என்று நாட்டார் தேவதைகளுக்கு விஜயப்புகழ்கூறுமாறு அவர்களை அபிமாகித்ததும், - அதிமாநுஷக்ருத்யங்களைச் செய்து இராவணனைத் தொலைத்ததெல்லாம் தன்னுடைய திவ்யசேஷ்டிதமாயிகச்ருக் செய்தேயும். ‘வாநர வீரர்கள் இலங்கையைப் பொடிபடுத்தினார்கள்’ என்று உலகத்தார் அவர்கள் தலையிலே விஜயப்புகழை ஏறிட்டுகூறுமாறு அவர்களை அபிமாகித்ததும்- என்ன ஆசரித பக்ஷபாதம்! என்று விஸ்மப்படுகிறார்கள். கடல் கடைந்தவிதம் மிகவும் பயங்கரமாயிருந்தது என்கைக்காக, “தரங்க நீர் கலங்க, குன்றுசூழ் மரங்கள் தேய, மாநிலம் குலுங்கக் கடைந்தபோது” என்கிறார். ஸர்ப்பஜாதிக்கு வாசகமாகிய மாசுணம் என்றசொல் இங்கு வாஸுகி யென்று சிறப்புப் பொருளைத் தந்தது. கலாய் = சுலாவி என்றபடி: சுலாவுதல்- சுற்றுதல். இப்படி நீ கடைந்த காலத்திலே, “நாங்கள் பராக்ரமசாலிகள்” என்று செருக்கி மார்புதட்டிக் கிடப்பவர்களான தேவர்கள் “கடலில் நின்றும் அமுதம் கிளர்ந்து வருவது எப்போதோ!” என்று தாங்கள் உணவு பெறுங்காலத்தை எதிர்பார்த்து அக்கடலையே நோக்கிக் கொண்டிருந்தது தவிர ஸமுத்ரமதந காரியத்துக்கு உறுப்பாக ஒரு காரியமும் செய்யவில்லை; செய்ததுண்டாகில் பிரானே! நீயே சொல்லிக்காண்; மந்தரமலைக்கு அதிஷ்டநமா யிருந்தார்களா? வாஸுகிக்கு நல்லசக்தியுண்டாம்படி வரமளித்தார்களா? அல்லது கடை கயிற்றைத்தான் சற்றுப்பிடித்து வலித்தார்களா? என்னதான் செய்தார்கள்? அவர்கள் செய்தது ஒன்றுமில்லை.


  800.   
  கொண்டைகொண்ட கோதைமீது*  தேன்உலாவு கூனிகூன்,* 
  உண்டைகொண்டு அரங்கஓட்டி*  உள்மகிழ்ந்த நாதன்ஊர்,*
  நண்டைஉண்டு நாரைபேர*  வாளைபாய நீலமே,* 
  அண்டைகொண்டு கெண்டைமேயும்*  அந்தண்நீர் அரங்கமே. 

      விளக்கம்    801.   
  வெண் திரைக் கருங்கடல்*  சிவந்துவேவ முன்ஒர்நாள்,* 
  திண் திறல் சிலைக்கைவாளி*  விட்டவீரர் சேரும்ஊர்,*
  எண் திசைக் கணங்களும்*  இறைஞ்சிஆடு தீர்த்தநீர்,* 
  வண்டுஇரைத்த சோலைவேலி*  மன்னுசீர் அரங்கமே.   

      விளக்கம்    802.   
  சரங்களைத் துரந்து*  வில் வளைத்து இலங்கை மன்னவன்,* 
  சிரங்கள் பத்துஅறுத்து உதிர்த்த*  செல்வர் மன்னு பொன்இடம்,*
  பரந்து பொன்நிரந்துநுந்தி*  வந்துஅலைக்கும் வார்புனல்,* 
  அரங்கம்என்பர் நான்முகத்து அயன்பணிந்த*  கோயிலே.  

      விளக்கம்    803.   
  பொற்றைஉற்ற முற்றல்யானை*  போர்எதிர்ந்து வந்ததைப்,* 
  பற்றிஉற்று மற்றதன்*  மருப்புஒசித்த பாகன்ஊர்,*
  சிற்றெயிற்று முற்றல்மூங்கில்*  மூன்று தண்டர் ஒன்றினர்,* 
  அற்றபற்றர் சுற்றிவாழும்*  அந்தண்நீர் அரங்கமே.  

      விளக்கம்    804.   
  மோடியோடு இலச்சையாய*  சாபம்எய்தி முக்கணான்,* 
  கூடுசேனை மக்களோடு*  கொண்டுமண்டி வெஞ்சமத்து-
  ஓட*  வாணன் ஆயிரம்*  கரங்கழித்த ஆதிமால்,* 
  பீடுகோயில் கூடுநீர்*  அரங்கம்என்ற பேரதே.   

      விளக்கம்  


  • இலச்சை- ‘லஜ்ஜா’ என்ற வடசொல் திரிபு; வெட்கமென்று பொருள். லஜ்ஜாவஹமான சாபத்தை யடைந்த முக்கண்ணன் என்றவாறு. சாபமெய்தி = வினையெச்சமல்ல; பெயர்.


  805.   
  இலைத்தலைச் சரம்துரந்து*  இலங்கை கட்டழித்தவன்,* 
  மலைத்தலைப் பிறந்துஇழிந்து*  வந்துநுந்து சந்தனம்,*
  குலைத்துஅலைத்து இறுத்துஎறிந்த*  குங்குமக் குழம்பினோடு,* 
  அலைத்துஒழுகு காவிரி*  அரங்கம்மேய அண்ணலே.

      விளக்கம்  


  • (இலங்கை கட்டழித்தவன் அரங்கமேய அண்ணல் என்றவாறு. ஸ்ரீவைஷ்ணவர்கள் நாடோறும் நீராடும்போது இப்பாட்டை அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம்.


  806.   
  மன்னு மாமலர்க் கிழத்தி*  வையமங்கை மைந்தனாய்,* 
  பின்னும் ஆயர் பின்னைதோள்*  மணம்புணர்ந்து அதுஅன்றியும்,*
  உன்னபாதம் என்ன சிந்தை*  மன்னவைத்து நல்கினாய்,* 
  பொன்னி சூழ் அரங்கம்மேய*  புண்டரீகன் அல்லையே?

      விளக்கம்  


  • லக்ஷ்மீபூமிநீளாதேவிகளுக்கு நாயகனாயிருந்துவைத்து உனக்கு அவர்களிடத்திலே அன்பு மட்டம் என்று விளங்கும்படியாக என்னை அங்கீகரித்தருளின மஹோபகாரம் என்னே! என்கிறார். தாமரைப் பூவிலே பிறந்த பெரிய பிராட்டியாரென்ன, பூமிப் பிராட்டியென்ன, நப்பின்னைப் பிராட்டியென்ன இவர்களுக்கு கொழுநனாய் இவர்களோடு திவ்யாநுபவங்களை இடைவிடாது அநுபவிக்கச் செய்தேயும் அவ்வநுபவம் அஸாரம் என்றிட்டு, ஸூரிபோக்யான உன் திருவடிகளை நித்ய ஸம்ஸாரியாயிருக்கிற என்னுடைய ஹ்ருதயத்திலே நொடிப்பொழுதும் விச்லேஷமின்றி வைத்தருளி என் பக்கலுள்ள ப்ரீதி விசேஷத்தைக் காட்டியருளினாய்; உன்னுடைய வைலக்ஷணியத்தைப் பார்த்தாலும் என்னை விஷீகரிக்க ப்ராப்தியில்லை; என்னுடைய புன்மையைப் பார்த்தாலும் விஷயீகரிக்க ப்ராப்தியில்லை; இப்படியிருக்கச் செய்தேயும் வாத்ஸல்யாதிசயமன்றோ இப்படி செய்வித்தது. என்னொருவனை விஷயீகரித்தது மாத்திரமேயோ? காவிரி சூழ்ந்ததென் திருவரங்கத்திலே கிடந்தருளிப் பரமயோக்யமான திவ்யாவயங்களை ஸர்வஜந ஸேவ்யமாகக் காட்டிக் கொடுக்கும் மஹோபகாரகனமாயிருக்கின்றாயிறே. புண்டரீகன் = புண்டரீகம்போன்ற அவயங்கள் நிறைந்து கிடக்கின்றமை பற்றிப் புண்டரீகன் என்று எம்பெருமானையே சொல்லுகிறார்.


  844.   
  சுரும்புஅரங்கு தண்துழாய்*  துதைந்துஅலர்ந்த பாதமே,* 
  விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு*  இரங்கு அரங்க வாணனே,*
  கரும்புஇருந்த கட்டியே!*  கடல்கிடந்த கண்ணனே,* 
  இரும்புஅரங்க வெஞ்சரம் துரந்த*  வில் இராமனே!  

      விளக்கம்  


  • கீழ்ப்பாட்டில் “அஞ்சலென்னவேண்டுமே” என்று அபயப்ரதாநமாத்ரத்தை வேண்டினாயினும் அவ்வளவினால் த்ருப்திபெறக் கூடியவரல்லரே; பெரியபெருமாள் திருவடிகளிலே நித்யாநுபவம் அபேக்ஷிதமாயிருக்குமே; அவ்வநுபவம் வாய்க்குமாறு கிருபை செய்தருளவேணுமென்கிறார் இதில். “நான்காமடியில், இரும்பு போல் வலியநெஞ்சினரான அரக்காக என்ன வேண்டு மிடத்து இரும்பு என்று அபேதமாகச் சொன்னது ரூபகாதிரயோக்தியாம். அரங்குதல்- (இங்கு) அழிதல்.


  870.   
  பொன்னிசூழ் அரங்கம்மேய*  பூவைவண்ண! மாய!கேள்,* 
  என்னதுஆவி என்னும்*  வல்வினையினுட் கொழுந்துஎழுந்து,*
  உன்னபாதம் என்னநின்ற*  ஒண்சுடர்க் கொழுமலர்,* 
  மன்ன வந்து பூண்டு*  வாட்டம்இன்றி எங்கும் நின்றதே.  (2)

      விளக்கம்  


  • ‘ஆழ்வீர்! பரமவிவக்ஷணமான இப்படிப்பட்ட அபிநிவேசம் உமக்கு நம்பக்கலில் உண்டானமை ஆச்சரியமாயிராநின்றதே! இதற்கு அடி என்?’ என்று எம்பெருமான் கேட்டருள; வடிவழகையும் சீலத்தையும் காட்டி தேவரீர் பண்ணின க்ருஷபலித்த பலமன்றேவிது என்கிறார்போலும். காவிரிசூழ்ந்த திருவரங்கம் பெரியகோயிலிலே நித்யவாஸம் செய்தருள்கிற விலக்ஷணமான திருமேனி படைத்த மாயோனே! உன்னுடைய அழகாலும் சீலத்தாலும் எனக்குப் பிறந்த ருசிவிசேஷத்தைக் கேட்டருளவேணும்; உபகாரம் செய்தவளின் தேவரீர் மறந்தொழிந்தாலும் நன்றியறிவுடைய நான் சொல்லக் கேட்க வேணும்; சொல்லுகிறது தான் என்னன்னச் சொல்லுகிறார்- என்னதாவி யித்யாதியால். *** என்று ஜ்ஞாஸ்வரூபாகயும் ஆநநிதஸ்ரூபியாயும் சாஸ்த்ரங்களுள் சொல்லப்பட்டிராநின்ற ஆத்மா என்னளவில் அப்படிப்பட்டதன்று; கொடிய பாபராசிகளின் பிண்டமே ஆத்ம வஸ்துவாக நிற்கிறதெனலாம் அப்படிப்படட் என் ஆத்மவஸ்துவில் தேவரீரைப்பற்றிய அநுராகம் கிளர்ந்து அவ்வநூகாயாமனது தேவரீருடைய பாதாரவிதத்திலே பரிபூர்ணமாக அவகாஹித்து தேவரீருடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளையெல்லாம் கபளீகரித்து விளங்காநின்றது என்கிறார் இவ்வாழ்வார்க்கு ஆவியென்றும் வல்லினையென்றும் பர்யாயம் போலும். நைச்யாநுஸக்காக பரமகாஷ்யை யிருக்கிறபடி “*** என்ற அநுஸந்தாகம் முதிர்ந்தபடி’ தம்முடைய ஆவிக்கு வல்வினை என்று பெயரிட்டாற்போல பகவத் விஷயாநுரகத்திற்குக் கொழுந்து என்று திருநாமம் சாற்றினர் என்ன தாவியென்னும் வல்வினையிலே கொழுந்து எழுந்ததானது நெருப்பிலே தாமரை பூத்ததுபோலும் என்ற திருவுள்ளந்தோற்ற அருளிச் சொல்கிறபடி பாரீர்.


  872.   
  காவலில் புலனை வைத்துக்*  கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து,*
  நாவலிட்டு உழி தருகின்றோம்*  நமன் தமர் தலைகள் மீதே,*
  மூவுலகு  உண்டு  உமிழ்ந்த​* முதல்வ நின் நாமம் கற்ற,*
  ஆவலிப் புடைமை கண்டாய்*  அரங்கமா நகர் உளானே. (2)

      விளக்கம்  


  • உரை:1

   அடியார்களைக் காத்தருளும் திறம் நன்கு விளங்கும்படி கோயிலில் கண் வளர்ந்தருளும் பெருமானே! உன் திருநாமத்தை நான் கற்றதனால் பெற்றபேற்றின் கனத்தைக் கண்டாயோ? அஹஹ! என்னைத் தீவழியில் செலுத்தி உனக்கு விலக்காக்கின பஞ்சேந்திரியங்களை அவற்றின் ஸ்வாதந்திரியம் ஒன்றும் ஓங்க வொண்ணாதபடி அமுக்கி இத்தனை நாளாக இவற்றை அமுக்கி, ஆளமுடியாதபடி தடையாய்க் கிடந்த பாபங்களையும் உதறிவிட்டு, நரகபாதையில் நின்றும் பயம் தவிர்ந்து யமகிங்கரர் தலைமேல் அடியிட்டுத் திரியாநின்றேன்; எனது செருக்கு எப்படிப்பட்டது! பாராய் என்கிறார்.

   உரை:2

   எல்லாவுலகங்களையும் (ப்ரளய காலத்திலே) திருவயிற்றிலே வைத்து (பிரளயம் நீங்கினபிறகு) அவற்றை வெளிப்படுத்திய ஜகத்காரணபூதனே அரங்கமாநகரளானே உனது திருநாமத்தைக் கற்றதனாலுண்டான செருக்கினாலே பஞ்சேந்திரியங்களையும் வெளியில் ஓடாதபடி அடைத்து பாபராசியை வெகுதூரம் உதறித்தள்ளி ஜயகோஷம் செய்து யமபடர்களின்  தலைமேல் அடியிட்டுத் திரிகின்றோம்.


  873.   
  பச்சை மாமலைபோல் மேனி*  பவளவாய் கமலச் செங்கண்*
  அச்சுதா! அமரர் ஏறே!*  ஆயர் தம் கொழுந்தே! என்னும்,*
  இச்சுவை தவிர யான்போய்*  இந்திர லோகம் ஆளும்,*
  அச்சுவை பெறினும் வேண்டேன்*  அரங்கமா நகர் உளானே!  (2)

      விளக்கம்  


  • உரை:1

   இப்படி திருநாமங் கற்ற ஆழ்வாரை நோக்கிப் பெரியபெருமாள் “ஆழ்வீர்! நம் பேர் சொன்னவர்களுக்கு நாம் கொடுப்பதொரு நாடு உண்டு; அதைத் தருகிறோம் கொள்ளும்.” என்ன; இவ்வுலகத்திலிருந்தபடியே திருநாமத்தைச் சொல்லி அதனால் பெறக்கூடிய இனிமைக்கு பரமபதத்திற் போய் அநுபவிக்கின்ற அந்த அனுபவித்தினால் தோன்றும் இனிமையும் ஈடாகாது; அது எனக்கு வேண்டா என்கிறார்.

   உரை:2

   பசுமையான மரங்கள் சூழ்ந்த வனத்தை உடையவனாகையால் அவனை பச்சை மா மலை போன்ற மேனி என்கிறார். மரம் தண்ணிழல் கொடுத்து காப்பதோடு நிற்பதில்லை. "ஆயர் தம் கொழுந்தே" என்கிறார் ஆழ்வார். கொழுந்து மரத்தின் உச்சியில், தளிர்க்கும் கிளையில் இருப்பது. ஆயர் குலத் தலைவனான கண்ணனை கொழுந்து என்பது சரிதான். கொழுந்து மென்மையானது, மிருதுவானது, பார்க்க அழகுள்ளது - முல்லைத் தலைவனும் அப்படி என்பதும் பொருந்துகிறது. அதற்கும் மேலே, அடி வேரில் புண் என்றால் முதலில் வாடுவது கொழுந்துதான். மெய் பொருளின் காருண்ய கிருபையைக் காட்ட இதற்கு மேல் ஒரு உதாரணம் தர முடியுமா என்று தெரிய வில்லை. அடியார்களின் துன்பம் காண்கையில் முதலில் கண்ணீர் சிந்துபவன் கண்ணன் என்று வெகு அழகாக சொல்லி வைத்தனர் பண்டைத் தமிழர். இப்பாடலையும் முன்பு நம்மாழ்வார் உவமைப் படுத்திய "தொன் மிகு பெரும் மரம்" என்பதையும் சேர்த்து ரசிக்க முடியும்!


  874.   
  வேத நூல் பிராயம் நூறு*  மனிசர் தாம் புகுவ ரேலும்,*
  பாதியும் உறங்கிப் போகும்*  நின்றதில் பதினையாண்டு,*
  பேதை பாலகனதாகும்*  பிணி பசி மூப்புத் துன்பம், *
  ஆதலால் பிறவி வேண்டேன் *  அரங்கமா நகர் உளானே.*

      விளக்கம்  


  • உலகத்தில் மானிடப்பிறவி யென்பது ஜந்மாந்தர ஸஹஸ்ரநற்றவங்களாலே பெறக்கூடியது; அதனை வருந்திப்பெற்றாலும், கர்ப்பத்திலேயும், பிறந்தவுடனும் நாலுநாள் கழித்தும் சில மாதங்கள் கழித்தும் சில வருடங்கள் கழித்தும் இறக்கக்கூடியவர்கள் பெரும்பான்மையரேயன்றி, வேதசாஸ்த்ரத்தில் “தாயுர்வை புரு‘” (மனிதன் நூறு பிராயம் வாழ்பவன்) என்று கூறியுள்ளபடி தீர்க்காயுஸ்ஸாக வாழக்கூடியவர் மிகச் சிறுபான்மையரே; விதிவசத்தால் சிலர்நூறு பிராயம் புக்கு வாழப்பெற்றாலும் அவரது வாழ்நாள் கழியும் வகையை ஆராய்ந்தால் ஒரு நொடிப்பொழுதாவது நற்போதாகக் கழிய வழியில்லை. ஸூர்யன் அஸ்தமித்து மீண்டும் உதிக்குமளவும் உறங்குவது ஒரு நியமமாக வந்துவிட்டபடியால் அஹோராத்ரமாகிய ஒரு திநத்துக்கு உள்ள அறுபது நாழிகையில் முப்பது நாழிகை உறக்கத்தில் கழிகிற கணக்கில் பாதி ஆயுஸ்ஸாகிய ஐம்பது வருஷம் உறக்கத்தால் கழிந்ததாகிறது; மற்ற பாதிவாழ்நாளில்-தன்னுடைய ஹிதாஹிதம் தாயின் அதீனமாயிருக்கும் சிசுத்வாவஸ்தையாய்ச் சிலகாலமும், எத்தனை தீம்புகள் செய்தாலும் சீறவொண்ணாதபடி செல்வப்பிள்ளை பருவமாய்ச் சிலகாலமும், பிறகு யௌவநம் வந்து புகுந்து விஷயாந்தரங்களிலே மண்டித்திரியும் பருவமாய்ச் சிலகாலமும், இங்ஙனே இந்திரியச் சிறையிலே அகப்பட்டுத் தடுமாறாநிற்க இடிவிழுந்தாற்போலே வந்து புகுகிற கிழத்தனமாய்ச் சிலகாலமும் “அத்யுத்கடை; புண்யபாபைரிஹைவ பலமச்நுதே” (வரம்புகடந்த புண்யபாபங்களின் பலனை இப்பிறவியிலேயே அநுபவிக்கிறான்)என்றபடி - யௌவநத்திற் செய்த எல்லை கடந்த குறும்புகட்குப் பலனாக எய்தும் பிணிகளால் வருந்துவதாய்ச் சிலகாலமும், பசியினால் ஒன்றும் தோன்றாதபடி இடர்படுவதாய்ச் சிலகாலமும், ஒருபக்கத்தில் பிள்ளை செத்தான் என்று கேட்டு அழுவதும், மற்றொரு பக்கத்தில் மனைவி செத்தாள் என்று கேட்டு அழுவதுமாய் இப்படி ஸம்ஸாரத் துன்பங்களில் ஆழ்ந்து செல்லும் நாளாய்ச் சிலகாலமும் கழிவதால் இத்துன்பங்களை அநுபவிப்பதற்கு இன்னும் சிறிது ஆயுஸ் கடன் வாங்கிக் கொள்ளவேண்டியதாமேயன்றி உள்ள வாழ்நாளில் ஆத்மாவைப்பற்றிச் சிறிதாகிலுஞ்சிந்திக்கப் பொழுது கிடைப்பரிது; ஆதலால் இப்பிறவி எனக்கு வேண்டா என்கிறார்.


  875.   
  மொய்த்த வல்வினையுள் நின்று*  மூன்று எழுத்துடைய பேரால்,*
  கத்திர பந்தும் அன்றே*  பராங்கதி கண்டு கொண்டான்,*
  இத்தனை அடியரானார்க்கு*  இரங்கும் நம் அரங்கனாய*
  பித்தனைப் பெற்றும் அந்தோ!*  பிறவியுள் பிணங்கு மாறே!  

      விளக்கம்  


  • இப்பாட்டு முதல், பதினான்காம் பாட்டளவும் பகவத் விஷயத்திலே தம்மைப்போல் ஆழங்காற்படாமல் உடலுக்கே கரைந்து நைந்து திரியும் ஸம்ஸாரிகளின் இழவைக்கண்டு பொறுக்கமாட்டாமல் தளர்ந்து ஒரு பக்கத்தில் ஆச்சர்யப்பட்டும், ஒரு பக்கத்தில் வருத்தப்பட்டும், மற்றொரு பக்கத்தில் வெறுப்புற்றும் இன்னொரு பக்கத்தில் நிந்தித்துக்கொண்டும் பேசுகிறார். பகவதநுபவத்திலே ஊன்றி உகப்பேயாய்ச் செல்லுமிவர் ஸம்ஸாரிப் பாவிகளைப்பற்றிக் கரைந்து வருந்துவானேன்? என்னில்; இப்பாவிகள் அநியாயமாய் வகுத்த விஷயத்தை இழந்து படுகின்றனரே என்னும் துக்கம் பொறுக்கமாட்டாமையாலும், பகவத் விஷயம் பலர்கூடித் திரண்டு அநுபவிக்கவேண்டிய இனிய விஷயமாதலாலும், “ஏக; ஸ்வாது ந புஞ்ஜீத” (இன்கனி தனி யருந்தான்) என்றபடி இனிய விஷயத்தைத் தனியராய் அநுபவித்து ஸாத்மிப்பித்துக்கொள்ள வல்ல தன்மையரல்லராதலாலும் துணை கூட்டிக்கொள்ளத் தேடுகிறாரென்க.


  876.   
  பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்*  பெரியதோர் இடும்பை பூண்டு*
  உண்டிராக் கிடக்கும் போது*  உடலுக்கே கரைந்து நைந்து,*
  தண்டுழாய் மாலை மார்பன்*  தமர்களாய்ப் பாடி யாடி,* 
  தொண்டு பூண்டமுதம் உண்ணாத்*  தொழும்பர் சோறு உகக்குமாறே!

      விளக்கம்  


  • பெண்களோடு அணைந்து சுகத்தை அநுபவிக்க விரும்பதல் தீயோடு அணைந்து விடாய்தீர நினைப்பதையம், ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்கி சுகம் பெற நினைப்பதைய மொக்குமென்பார்- பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பைபண்டு என்கிறார். ஐயோ துக்கத்திற்கு ஸாதமானவற்றையே சுகத்திற்கு ஸாதனமாக நினைப்பதே இப்படியுமொரு மயக்கமுண்டோ பிழைக்கவேணுமென்று நினைப்பாரும் விஷத்தையுண்ப?


  877.   
  மறம்சுவர் மதிளெடுத்து*  மறுமைக்கே வெறுமை பூண்டு,* 
  புறம்சுவர் ஓட்டை மாடம்*  புரளும்போது அறிய மாட்டீர்,*
  அறம் சுவராகி நின்ற*  அரங்கனார்க்கு ஆட்செய்யாதே,* 
  புறம்சுவர் கோலம் செய்து*  புள் கவ்வக் கிடக்கின்றீரே!   

      விளக்கம்  


  • விஷயங்கள் அற்பமென்றும் அஸ்திரமென்றும் கீழ்க்கூறிய ஆழ்வாரை நோக்கிச் சிலர் “விஷயங்களுக்கு அல்பாஸ்திரத்வம் முதலிய பலதோஷங்களுள்ளனவாயினும் அவற்றை நாங்கள் விடவேணுமென்ற நியதியில்லை; ஒரு விஷயத்தில் பூர்ணமான அனுபவத்தைப் பெறாதொழிவோமாயினும் விஷயங்கள் பல உளவாகையால் ஒன்றில் இல்லாத நன்மையை வேறொன்றிலே கூட்டிக்கொண்டு அனுபவிக்கிறோம் போம்” என்று சொல்ல, “அப்படியேயானாலும் அந்த விஷயங்களை அநுபவிக்ககக்கூடிய வஸ்து ஸ்திரமாயிருக்கவேணுமே அவ்விஷயங்களைப்போலவே போக்தாவும் அஸ்திரன்கிடீர்” என்கிறார் இப்பாட்டால்.


  878.   
  புலையறம் ஆகிநின்ற*  புத்தொடு சமண மெல்லாம்,* 
  கலையறக் கற்ற மாந்தர்*  காண்பரோ கேட்பரோதாம்,*
  தலை அறுப்புண்டும் சாவேன்*  சத்தியம் காண்மின் ஐயா,* 
  சிலையினால்  இலங்கை செற்ற*  தேவனே தேவன் ஆவான்.   

      விளக்கம்  


  • ‘தொண்டுபூண்டமுதமுண்ணாத்தொழும்பர்’ என்றும், “புள் கவ்வக்கிடக்கின்றீரே” என்றும் எங்களை இகழ்ந்துரைப்பதிற் பயனென்? ஸம்ஸாரத்தின் இயல்பு இப்படி யிராநின்றது; அன்றியும் “தொண்டுபூண்டு அமுதமுண்போமென்று பார்த்தாலும் எந்தத் தேவனை வணங்கி வழிபடுவதுதென்று தெரியவில்லை; நாங்கள் பரதேவதா நிச்சயம் பண்ண மாட்டாமையாலே ஸம்ஸாரத்திலே ஆழ்கிறோம்; எங்கள் மீது குற்றமென்?” என்று சில ஸம்ஸாரிகள் கூற, அவர்களைத் தெளிவிக்க விரும்பிய ஆழ்வார், தேவதா நிஷ்கர்ஷம் பண்ணித்தருகிறார். புத்தொடு - புத்தமென்ற வடசொல் புத்து எனத் திரிந்தது. சமணம் -க்ஷபணகருடைய மதம். கலையறக்கற்ற மாந்தராவார் -கூரத்தாழ்வான் போல்வார் . “ஸ்ருதிஸ்ம்ருதீதிஹாஸங்களில் நிலைநின்றவர்களாய் வேததாத்பர்யம் கைப்பட்டவர்கள்; அவர்களாகிறார்- கூரத்தாழ்வான் போல்வாரிறே”! என்பர் பெரியவாச்சான்பிள்ளை.


  879.   
  வெறுப்பொடு சமணர் முண்டர்*  விதியில் சாக்கியர்கள்,*  நின்பால்- 
  பொறுப்பரியனகள் பேசில்*  போவதே நோயதாகி* 
  குறிப்பெனக் கடையும் ஆகில்*  கூடுமேல் தலையை*  ஆங்கே,- 
  அறுப்பதே கருமம் கண்டாய்*  அரங்கமா நகருளானே!       

      விளக்கம்  


  • வெறுப்போடு-ஒரு காரணத்தை முன்னிட்டன்றியே நிஷ்காரணமாக எம்பெருமானுடைய பெருமை என்றால் சிவீலென்று திரஸ்கரிக்கையாகிற வெறுப்போடுகூடிய புறச்சமயிகள், ஸாத்விகர் காது கொடுத்துத் கேட்கப்பெறாத உன் விஷயமான தூஷணங்களைப் பேசும்போது அப்பேச்சுக்கள் ஒரு ஸாத்விகன் காதில் விழுந்தால், அவன்றான் மெய்யே ஸாத்விகனாகில் அந்த க்ஷணத்திலேயெ தன்னடையே உயிர் துறக்க வேணும் என்கிறார்-முன்னிரண்டடிகளால். உயிர்துறப்பதறகு நோய் முதலிய சில வியாஜங்கள் நேரவேண்டுமே என்று சிலர் நினைக்கக்கூடுமென்றெண்ணி “போவதே நோயதாகி” என்கிறார். பகவந்நிந்தையைக் கேட்பதற்கு மேற்பட்ட நோய்கூட உலகத்திலுண்டோ? என்பது கருத்து.


  880.   

  மற்றுமோர் தெய்வம் உண்டே*  மதியிலா மானி டங்காள்,*
  உற்றபோது அன்றி நீங்கள்*  ஒருவன் என்று உணர மாட்டீர் ,*

  அற்றம்மேல் ஒன்று அறியீர் *  அவனல்லால் தெய்வ  மில்லை,* 
  கற்றினம் மேய்த்த  எந்தை*  கழலிணை பணிமின் நீரே.


      விளக்கம்  


  • பல தேவரையும் பற்றிக் கூறுகிற வேதத்தின் உட்பொருளை நுட்பமாக ஆராய்ந்து அறியுந் திறமையில்லாமையால் நீங்கள் தேவதாந்தரங்களைப் பற்றுகின்றீர்கள்; ‘ஒரு குறையும் வாராமல் உன்னைப் பாதுகாக்கிறேன்’ என்று ப்ரதிஜ்ஞை பண்ணி பாணாஸுரனது வாசலிலே பரிவாரத்தோடு பாதுகாவாலாயிருந்த சிவன் அந்த வாணாசுரனை எதிர்த்துவந்த ஸ்ரீ கிருஷ்ணனோடு போர் செய்யமாட்டாமல் தோற்று ஓடினபோது அந்தச் சிவனுடைய வலியின்மையை அந்த வாணன் கண்டறிந்ததுபோல, நீங்களும் ஸரணமாகப் பற்றியிருக்கிற தேவதாந்தரங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால்தான் அத்தெய்வங்களின் பலஹீநத்வத்தைக் கண்டறிவீர்கள்; நீங்கள் இப்படி பரமாத்மாவைத் தவிர்த்து இதர தேவதைகளைப் பற்றுவதற்குக் காரணம் நுமக்குப் பகுத்தறிவு இல்லாமையே. உண்மையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வையே சரணமாகப் பற்றுங்களென்று உபதேசிக்கின்றனரென்க.


  881.   
  நாட்டினான் தெய்வம் எங்கும்*  நல்லதோர் அருள் தன்னாலே.* 
  காட்டினான் திருவரங்கம்*  உய்பவர்க்கு உய்யும் வண்ணம்,* 
  கேட்டிரே நம்பிமீர்காள்!*  கெருட வாகனனும் நிற்க,* 
  சேட்டை தன் மடியகத்துச்*  செல்வம் பார்த்து இருக்கின்றீரே.  

      விளக்கம்  


  • ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களும் அமைந்த சேதநர்கட்கெல்லாம் அவரவர்களுடைய ருசிக்குத் தக்கபடி காரியஞ்செய்பவன் எம்பெருமானாதலால் ராஜஸருடையவும் தாமஸருடையவும் ருசிக்கு ஏற்ப அக்குணங்களுள்ள அம்மன் பிடாரி முதலிய க்ஷுத்ரதேவதைகளை எம்பெருமான்றானே ஒவ்வொரு பேரிட்டு நாட்டினான். “யே ஹ்யந்யதேவதாபக்தா: யஜந்தே ச்ரத்தயான்விதா:-தேபி மாமேவ கௌந்தேய! யஜந்த்யவிதிபூர்வகம்” என்ற கீதையின்படியும், ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம் - ஸர்வ தேவநமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி’ என்ற வசநப்படியும் அந்த க்ஷூத்ரதேவதைகளைக் குறித்துச்செய்யும் வணக்கவழிபாடுகள் யாவும் அத்தேவதைகட்கும் ஆத்மாவான ஸ்ரீமந்நாராயணனிடத்திற் போய்ச் சேர்ந்துவிடுமேயன்றி அவர்களுக்கே உரியனவாகமாட்டா. ராஜப்பிரதிநிதிகள் ஒவ்வோரிடங்களிலும் ப்ரஜைகளிடத்தில் பணங்களை (கப்பம்) வசூல் செய்து அவற்றைப் பிரதாந ராஜனிடத்தில் சேர்ப்பது போல வாய்த்து இத்தேவதைகளின் தொழிலும் . “இறுக்குமிறை யிறுத்துண்ண எவ்வுலகுக்கும் தன்மூர்த்தி, நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வநாயகன்றானே” என்றும் “ அவரவர் விதிவழி யடைய நின்றனரே” என்றும் நம்மாழ்வாரு மருளிச்செய்தார்.


  882.   
  ஒருவில்லால் ஓங்கு முந்நீர்*  அடைத்து உலகங்கள் உய்ய,* 
  செருவிலே அரக்கர் கோனைச்*  செற்ற நம் சேவகனார்,*
  மருவிய பெரிய கோயில்*  மதில் திருவரங்கம் என்னா,* 
  கருவிலே திருவிலாதீர்!*  காலத்தைக் கழிக்கின்றீரே.   

      விளக்கம்  


  • இராமபிரானும் கண்ணபிரானுமாய் அவதரித்த பெருமான்றானே திருவரங்கம் பெரிய கோயிலில் கண் வளர்ந்தருளுகிறான்; ஜாயமாநகால கடாக்ஷமில்லாமையாலன்றோ நீங்கள் இழக்கிறது! என்று க்ஷேபித்துக்கூறுவது இப்பாட்டு. இராமபிரான் ஸமுத்ரராஜனை அடைக்கலம்பற்றி வழிவிட வேணுமென்று வேண்டிக்கொண்டவிடத்தும் அவன் வந்து முகங்காட்டாதொழிய, “ஒரு மீன்படுகுட்டம் நம்மை அஸமர்த்தராக நினைத்துவிட்டது; இனி ஒரு கைபார்க்குமத்தனை” என்று துணிந்து இளையபெருமாளை நோக்கி “வில்லைக்கொண்டுவா” என்று நியமித்தருளின பின்பு ஸமுத்ரராஜன் அஞ்சி நடுங்கி ஓடி வந்து முதுகைக்காட்டித் தன்மீது அணைகட்டிப் போகும்படி அமைந்தனனாதலால், ஒரு வில்லாலோங்கு முந்நீரடைத்து என்கிறார். ஓங்கு என்றது-கடலின் இயற்கையான கொந்தளிப்பைக் கூறுகிறபடி யன்று; இராமபிரான் சீற்றத்தாலே கையும் வில்லுமாய் நின்ற வீரவுறப்பைக் கண்டு கீழ்மண்கொண்டு மேல் மண்ணெறிந்து காலிலேவிழுமாபோலே திருவடிகளளவும் வந்து வெள்ளங் கோத்தபடியைக் கூறுவதாம்.


  883.   
  நமனும் முற்கலனும் பேச*  நரகில் நின்றார்கள் கேட்க,* 
  நரகமே சுவர்க்கம் ஆகும்*  நாமங்கள் உடையன் நம்பி,*
  அவனது ஊர் அரங்கம் என்னாது*  அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்,* 
  கவலையுள் படுகின்றார் என்று*  அதனுக்கே கவல்கின்றேனே!  

      விளக்கம்  


  • திருநாமத்தின் பெருமையை நான் அறியாதிருந்தேனாகில் ஸம்ஸாரிகளைப்பற்றிக் கவலைப் படமாட்டேன் மநுஷ்யஜந்மம் எளிதிற் பெறக்கூடுமாயின் நான் கவலைப்படமாட்டேன்; இவர்கள் உஜ்ஜீவநத்திற்காகச் செய்யவேண்டிய காரியம் மிகப்பெரியதாயின் கவலைப்படமாட்டேன். திருநாமங்களின் மேன்மையோ சொல்லுந்திரமல்ல பெறுதற்கு அரிதான மானிடஜந்மத்தையோ இவர்கள் பெற்றிருக்கிறார்கள்; இவர்கள் செய்யவேண்டிய காரியமோ மிக அற்புதமானது-‘எம்பெருமான் ஊர் திருவரங்கம்’ என்றிவ்வளவே சொல்லவேண்டுமத்தனை இங்ஙனிருக்கவும் இவர்கள். விஷயாந்தரப் படுகுழியிலே தலைகீழாக விழுந்து வருந்துவர்களாகில் நான் எங்ஙனே கவலைப்படாதிருக்கமுடியும்? இவர்கள் சிறிது திருந்தினராகில் என் அநுபவத்திற்கு எவ்வளவோ துணையாகுமே! என்கிறார்.


  884.   
  எறியுநீர் வெறிகொள் வேலை*  மாநிலத்து உயிர்கள்எல்லாம்,* 
  வெறிகொள் பூந்துளவ மாலை*  விண்ணவர் கோனை ஏத்த,*
  அறிவிலா மனிசர் எல்லாம்*  அரங்கமென்று அழைப்பராகில்,* 
  பொறியில்வாழ் நரகம் எல்லாம்*  புல்லெழுந்து ஒழியுமன்றே?

      விளக்கம்  


  • கீழெல்லாம் பிறருடைய துயரத்தைக்கண்டு தாம் பொறுக்கமாட்டாமல் கவல்கிறபடியை வாய்விட்டுச் சொன்னார்; ஒன்றும் பயன்படவில்லை; இனி பரோபதேசத்தில் நின்றும் மீண்டுவிடுவோம் என்று பார்த்தார்; பிறர்க்கென்றே அவதரித்த இவர் எங்ஙனே சடக்கென மீளக்கூடும்? தீயகுணம் நிறைந்த பிள்ளையைப்பற்றி ஒன்றும் கவனிக்கக்கூடாதென்று தகப்பன் மீள நினைத்தாலும் அந்நினைவின்படி உடனே மீளமுடியுமோ? அப்படியே இவ்வாழ்வாரும் பிறருடைய துயரத்தைப்பற்றிக் கவலைப்படுவதினின்றும் உடனே மீளமாட்டாமல் அவர்களை நோக்கிக் கூறுகிற முறையை மாத்திரம் விட்டிட்டு, தம் நெஞ்சோடு தாமே வருந்துகின்றார், இப்பாட்டில். மூலப்ரக்ருதியிலே அழுந்தி ஒளி மழுங்கிக் கிடந்த ஆத்மாக்களை யெல்லாம் எம்பெருமான் தனது இன்னருளால் உஜ்ஜீவிப்பிக்க விரும்பித் தன்னை அடையுமாறு கரசரணம் முதலிய அவயவங்களையும் சாஸ்திரங்களையும் காட்டிக்கொடுத்தான் என்ற நூற்கொள்கை, முன் இரண்டடிகளிற் குறிப்பிடப்பட்டது.


  885.   
  வண்டினம் முரலும் சோலை*  மயிலினம் ஆலும் சோலை,* 
  கொண்டல் மீதுஅணவும் சோலை*  குயிலினம் கூவும் சோலை,*
  அண்டர்கோன் அமரும் சோலை*  அணி திருவரங்கம் என்னா,* 
  மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை  விலக்கி* நாய்க்கு இடுமின்நீரே.  

      விளக்கம்  


  • இதுவரை பகவத்விசய விரோதிகளான பாவிகளை நினைத்ததற்கும் அவர்களோடு ஸம்பாசனை செய்ததற்கும் ப்ராயஸ்சித்தமாக “வண்டினமுரலுஞ் சோலை” இத்யாதியைப் பரம போக்யமாகத் தாம் அநுஸந்திக்கச் செய்தேயும், மீண்டும் “திருவரங்கமென்னாமிண்டர்”என்று அப்பாவிகளையே நினைக்கிறார். அவர்களையொழிய இவர்க்கு ஒருக்ஷணமும் செல்லாதுபோலே. ஸம்ஸாரத்திலேயே நெடுநாள் ஊன்றினவன் கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றத்தவரோடுண்டான பற்றை அறுத்துக்கொண்டு பகவத்விஷய சிந்தையினாலேயே போதுபோக்குவேணுமென்று பெருமுயற்சி செய்தாலும் பழையதான வாஸநையின் கணத்தினால் அந்த ஸம்ஸாரப்பற்றை விரைவில் அறுத்துக்கொள்ள முடியாமல் “அங்குற்றேனல்லே னிங்குற்றேனல்லேன்” என்றாற்போல இருகரையனாய்த் தடுமாறுமாபோலேபராங்முகரையும் சீர்திருத்தி மங்களாபாஸநத்துக்கு ஆளாக்கிக் கொள்வதற்காகப் பாடுபடுகையாகிற ஒரு விலக்ஷண ஸம்ஸாரத்திலே நெடுநாளாக ஊன்றின இவ்வாழ்வார், மநோரதம் நிறைவேறப்பெறாத வருத்தத்தினால் அப்பாவிகளின் பற்றை அறுத்துக்கொள்ளவேணுமென்று பெருக்கமுயன்றாலும் அது இவர்க்கு விரைவில் கைகூடுகிறதில்லை. மங்களாபாஸணத்திற்கு ஆள்சேர்க்கப் படுகிறபாட்டின் உறைப்பு என்னே.


  887.   
  சூதனாய்க் கள்வனாகித்*  தூர்த்தரோடு இசைந்த காலம்,* 
  மாதரார் கயற்கண் என்னும்*  வலையுள் பட்டு அழுந்துவேனை,*
  போதரே என்று சொல்லி*  புந்தியுள் புகுந்து தன்பால்- 
  ஆதரம் பெருக வைத்த*  அழகனூர் அரங்கம் அன்றே? 

      விளக்கம்  


  • ஒருவன் விஷயாந்தரங்களிலே அகப்பட்டால் அந்த ஸப்தாதி விஷயங்களை இஷ்டப்படி அநுபவிப்பதற்குப் பொருள் விஸேஷமாக வேண்டுமாதலால் எவ்வழியிலாவது அது திரட்ட வேண்டிச் சூதாடுவதிலும் களவு செய்வதிலும் இறங்குவான்; சூதாவது-பச்யதோஹரத்வம்; அதாவது-ப்ரத்யக்ஷக்களவு; ‘ கன்னக்களவன்று’ என்கிற மாத்திரமேயொழிய, களவு என்பதில் தட்டில்லை; சூதாடுகிறவன் முதலில் விஸேஷலாபம் வரக்கண்டு மேன்மேலும் அதிலே முயல்வான்; அடைவிலே, சூதில்பெற்ற பொருளையும் இழந்து ஏற்கனவே கையிலுள்ளதையுமிழந்து அனைத்தையும் கொதுகைவைத்துக் தோற்கும்படியான நிலைமைக்கு வருவான்; இதில் இவ்வளவு தன்மையானவாறே பிறகு கன்னக்கனவிலே கைவைப்பான். அதிலே ஏகாகியாகத் திருடுவது சிலநாள் வரையில்; தேர்ச்சி பெற்றவாறே தீவட்டிக் கொள்ளையிலிறங்குவான்; அது ஒருவனாய்ச் செய்யக்கூடிய காரியமன்றாகையால் பலரையும் துணை கூட்டிக்கொள்வான். நாலு தூர்த்தரோடு நெருங்கினவாறே அவர்கள் மாதரார்கயற்கணெனனும் வலையில் பட்டழுந்தும்படி செய்வார்கள். அதற்கு மேற்பட்ட ஆபத்து வேறொன்று சொல்லவேண்டா. இத்தனையும் தமக்கு உண்டானதாகச் சொல்லுகிறார் இவ்வாழ்வார்.


  888.   
  விரும்பி நின்று ஏத்த மாட்டேன்*  விதியிலேன் மதியொன்றில்லை,* 
  இரும்புபோல் வலிய நெஞ்சம்*  இறை-இறை உருகும் வண்ணம்,*
  சுரும்புஅமர் சோலை சூழ்ந்த*  அரங்கமா கோயில் கொண்ட,* 
  கரும்பினைக் கண்டு கொண்டு*  என் கண்ணினை களிக்கு மாறே!      

      விளக்கம்  


  • தரித்ரனுக்கு நித்யபாயஸம் கிடைத்தாற்போலே, ஒருவகை யோக்யதையுமில்லாத கல்நெஞ்சனான எனக்கு அழகிய மணவாளன் ஸேவைஸாதிக்கப் பெற்ற பாக்கியத்தை நான் என்னவென்று சொல்லுவேன் என்று தடுமாறுகின்றனர். மனஸ்ஸு, வாக்கு, காயம் என்ற மூன்றுவகை யுறுப்புகளில் ஒன்றினாலும் நான் பகவத்விசயத்தில் அந்வயிக்கப்பெறவில்லை; சிறிது காலமாகிலும் ஒருபடிப்பட நிலைத்துநின்று உண்மையான அன்புடன் ஸ்தோத்ரஞ் செய்யுமவனல்லேனாதலால் வாய் படைத்த பயன் பெற்றிலேன்; (“நின் தலையைத் தாழ்த்து இருகைகூப்பென்றால் கூப்பாது பாழ்த்தவிதி” என்றபடி) ஒரு அஞ்சலியும் நேராகச் செய்யமாட்டாதவனாகையால் காயம் படைத்த பயனும் பெற்றிலேன்; எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைப்பற்றி விஸேஷமாகச் சிந்திக்க மாட்டாமற் போனாலும் ‘எம் பெருமான் ஒருவன் உண்டு’ என்று அவனுடைய ஸத்தையையாகிலும் சிந்திக்கலாமே; அதுவும் சிந்தித்திலேனாதலால் மனம் படைத்த பயனும் பெற்றிலேன். இனி மேலாவது மநஸ்ஸைத் திருத்திக்கொள்ளக்கூடுமோ வென்று பார்த்தாலும் அதற்கும் யோக்யதையில்லாதபடி மனம் கல்லாய்க்கிடக்கிறது.


  889.   
  இனிதிரைத் திவலை மோத*  எறியும்தண் பரவை மீதே,* 
  தனிகிடந்து அரசு செய்யும்*  தாமரைக் கண்ணன் எம்மான்,*
  கனியிருந்து அனைய செவ்வாய்க்*  கண்ணனைக் கண்ட கண்கள்,* 
  பனிஅரும்பு உதிருமாலோ*  என்செய்கேன் பாவியேனே!  

      விளக்கம்  


  • எம்பெருமானை ஸேவிக்கப்பெற்றமைக்கு உகந்து உரைத்த ஆழ்வார் , கண்களினுடைய களிப்புக்குப் போக்குவீடான ஆநந்தக் கண்ணீர் பெருகப்பெற்று ஐயோ! இக்கண்ணீர் அரும்பரும்பாகத் துளித்துக் கண்களை மறைத்து எம்பெருமானை இடைவிடாது ஸேவிக்கவொட்டாமல் துடைச்சுவராய்த் தடை செய்கின்றவே ! கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாதொழியும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான் இந்த துக்கத்திற்கு எங்குபோய் முறையிட்டுக் கொள்வேன் என்று வெறுக்கிறார். பரவை என்று கடலுக்குப் பெயர் ; திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளுகிறவன் திருக்காவிரியிடையிலே வந்து கண்வளர்ந்தருள்வதாக அதுஸந்திக்கிறர் என்னலாம்: அன்றியே, காவேரி தான் ஒரு பெருங்கடல் பெருகுமாபோலே பெருங்வெள்ளங் கோத்துப் புரளுகையாலே காவேரியையே கடலாகச் சொல்லிற்றாகவுமாம் முற்றுவமை.


  890.   
  குடதிசை முடியை வைத்துக்*  குணதிசை பாதம் நீட்டி,* 
  வடதிசை பின்பு காட்டித்*  தென்திசை இலங்கை நோக்கி,*
  கடல்நிறக் கடவுள் எந்தை*  அரவணைத் துயிலுமா கண்டு,* 
  உடல்எனக்கு உருகுமாலோ*  என்செய்கேன் உலகத்தீரே! (2)

      விளக்கம்  


  • கண் முதலிய அவயவங்களுக்கு உண்டாகிற விகாரமேயல்லாமல் அவற்றுக்கு ஆஸ்ரய மாய் அவயவியான ஸரீரமும் கட்டழியாநின்றதே! இதற்கு என் செய்வேன்! என்கிறார். அழகிய மணவாளன் நான்கு திக்குக்களுக்கும் தன் ஸம்பந்தமுண்டாம்படி ஸேஷஸயநனாய் யோக நித்திரை செய்தருள்வதை ஸேவித்துத் தமது ஸரீரம் நீராய்க் கரைந்து உருகிச் செயலற்றிருத்தலை உலகத்தார்க்கு வியப்போடு அறிவிக்கின்றனரென்க. பூமியின் ஸ்ருஷ்டி - மநுஷ்யதிர்யக்ஸ் தாவரங்களான பொருள்கள் வாழ்தற்காக என்றும் ஆகாஸத்தின் ஸ்ருஷ்டி – தேவர்கள் வாழ்தற்காக என்றும் ஏற்பட்டிருக்கிறது; திக்குக்களின் ஸ்ருஷ்டி வ்யர்த்தம் என்று நினைக்கவேண்டா; சேதநர்க்கு தன்மீது அன்பைக் யுண்டாக்குமாறு எம்பெருமான் தான் பள்ளி கொள்வதற்காகவே திக்குக்களை ஸ்ருஷ்டித்ததும் என்று இப்பாட்டால் கூறுவதாக விஸேஷார்த்த முரைப்பார்.


  891.   
  பாயும் நீர் அரங்கந்தன்னுள்*  பாம்பணைப் பள்ளி கொண்ட,* 
  மாயனார் திருநன் மார்வும்*  மரகத உருவும் தோளும்,*
  தூய தாமரைக் கண்களும்*  துவரிதழ் பவள வாயும்,* 
  ஆயசீர் முடியும் தேசும்*  அடியரோர்க்கு அகலல்ஆமே?  

      விளக்கம்  


  • கீழ் “பனியரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே” என்றும், “உடலெனக் குருகுமாலோ என் செய்கேனுலகத்தீரே” என்றும் கதறின ஆழ்வாரை நோக்கிச் சில ஸம்ஸாரிகள் “ஓய்! பகவத் விஷயத்திலே அகப்பட்டு ஏன் இங்ஙன கதறுகிறீர்? அதில் ஊற்றத்தை விட்டு எங்களோடே கூடினீராகில் என் செய்கேன்! என் செய்வேன்!! என்று வாய்வெருவ வேண்டாதபடி தரித்து ஸுகமே வாழலாமே! உம்முடைய ஸ்வயம்க்குருதாநத்தம் மிகவ மழகிறது! என்றாற்போலே சில சொல்ல; அது கேட்ட ஆழ்வார், ‘ பாவிகாள்! கண்வளர்ந் தருளுகிற அழகைக்கண்டுவைத்து இவ்வழகெல்லாம் நமக்காகவாயிற்று? என்று களிக்கும் படியான ஸ்வரூபஜ்ஞாநமுடைய:எங்களுக்கு, “அஹம்-மம” என்றிருக்கிற உங்களைப்போல் அகலமடியுமோ? என்கிறார். எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏட்டுபுறத்தில் கேட்டுப் போகையன்றிக்கே பரமபாவநமான திருவரங்கந் திருப்பதியிலே திருவனந்தாழ்வான்மீது “தன் தாளுந் தோளும் முடிவுகளும் சமனிலாத பல பரப்பி” என்றபடி ஸகலாவயவஸெளந்தரியமும் நன்கு விளங்கும்படி சாய்தருள்கின்ற எம்பெருமானது திவ்ய தேஜஸ்ஸைக் காணப்பெற்றவர்களும் மீண்டு கால்பேர்ந்து விலகமடியுமோ? என்க.


  892.   
  பணிவினால் மனமதுஒன்றிப்*  பவளவாய் அரங்கனார்க்குத்,* 
  துணிவினால் வாழமாட்டாத்*  தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்,*
  அணியினார் செம்பொன்னாய*  அருவரை அனைய கோயில்,* 
  மணியனார் கிடந்தவாற்றை*  மனத்தினால் நினைக்கலாமே? 

      விளக்கம்  


  • “கரும்பினைக் கண்டுகொண்டு” என்றும், “அரவணைத் துயிலுமா கண்டு” என்றும் அழகிய மணவாளனை நீர் கண்ணால் கண்டாமையாலன்றோ “என்செய்கேன்! என் செய்கேன்!!” என்று தவிக்கிறீர்; அப்பெருமான் பள்ளி கொண்டருளும்படியைக் கண்ணால் காணவேண்டா; ஒரு மூளையிலே உட்கார்ந்து நெஞ்சினால் தியாநஞ் செய்துகொண்டிரும் என்று சிலர்சொல்ல அதற்கு உத்தரமாக தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார் - அப்பெருமான் பள்ளி கொண்டருளுமாற்றை நெஞ்சினால் தான் நினைத்துத் தரிக்க முடியுமோ? என்கிறார்.


  893.   
  பேசிற்றே பேசல் அல்லால்*  பெருமை ஒன்று உணரலாகாது,* 
  ஆசற்றார் தங்கட்குஅல்லால்*  அறியலா வானும்மல்லன்,*
  மாசற்றார் மனத்துளானை*  வணங்கி நாம் இருப்பதல்லால்,* 
  பேசத்தான் ஆவதுண்டோ?*  பேதை நெஞ்சே!நீ சொல்லாய். 

      விளக்கம்  


  • நினைக்க முடியாதாகில் வாய்விட்டுப் பேசினாலோவென்ன “மந: பூர்வோ வாகுத்தர:” என்றன்றோ சொல்லியிருப்பது; மநஸ்ஸாலே பரிச்சேதிக்க வொண்ணாத விஷயத்தை பாசுரமிட்டு முடிக்கப் போமோ என்கிறார். பேசமுடியாதென்றால் பேசுவதைவிட்டு விலகி வாய்மூட வேண்டாவோ? பின்னையும் பேசிக்கொண்டே இருக்கிறதென்? என்ன; ஊமையாகப் பிறவாமல் நாலாறு வார்த்தைகள் சொல்லும்படியாகப் பிறந்தோமாதலால், வேதங்களும் வைதிகோத்தமர்களும் சொல்லிப் போன பேச்சுக்களில் ஏதோ சிலவற்றைச் சொல்லிகொண்டிருக்கிறோமே யொழிய, எம்பெருமானுடைய பெருமைகளை யெல்லாம் அறிந்து பேசுகிறபடியன்று என்கிறார் முதலடியில்: “நிற முயர் கோலமும் பேருமுருவு மிவையிவை யென்று, அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலு மங்கங்கெல்லாம், உறவுயர் ஞானச்சுடர்விளக்காய் நின்றதன்றி யொன்றும், பெறமுயன்றா ரில்லையால் எம்பிரான் பெருமையையே” என்ற திருவிருத்தத்தை ஒரு புடை ஒத்திருக்கும் இது. அன்றியே; ”யதோ வாசோ நிவர்த்தந்தே” என்று வேதம் பேசினபடியே நாமும் “எம்பெருமானுடைய பெருமையைப் பேசமுடியாது” என்று பேசுமத்தனையல்லது பெருமை அறியமுடியாது என்றும் பொருள்படும்.


  894.   

  கங்கயிற் புனித மாய*  காவிரி நடுவு பாட்டு,*
  பொங்குநீர் பரந்து பாயும்*  பூம்பொழி லரங்கந் தன்னுள்,*

  எங்கள்மா லிறைவ னீசன்*  கிடந்ததோர் கிடக்கை கண்டும்,*
  எங்ஙனம் மறந்து வாழ்கேன்*  ஏழையே னேழை யேனே!


      விளக்கம்  


  • பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழிலரங்கம்)கோயிலைக் கிட்டுகின்றோமென்கிற குதூஹத்தினால் பெரிய கிளர்த்திகொண்டு தனது பெருமகிழ்ச்சியெல்லாம் தோற்றுமாறு எங்கும் காவேரிநதி பாய்வதனால் எப்போதும் மலர்கள் மாறாத சோலைகள் சூழ்ந்த பெரிய பெருமாளது ஸெளகுமார்யத்துக்கு அநுகூலமான நீர்வளத்தையும் எப்போதும் இளவேனிற் பருவம்போலத் தோன்றுகிற பூஞ்சோலைகளையுமுடைய ஸ்ரீரங்கம்: இதனால் அத்தேசத்தினது தூய்மையும் .இனிமையும் வெளியாமென்க. இறைவன் என்பது -அவன் ஸகல பதார்த்தங்களுக்கும் தலைவன் என்பதையும்; ஈசன் என்பது –தனது தலைமைக்குத் தகும்படி ஆளவல்ல திறமையுடையவ னென்பதையும் தெரிவிக்கு மென்ப.


  895.   

  வெள்ளநீர் பரந்து பாயும்*  விரிபொழி லரங்கந் தன்னுள்,*
  கள்ளனார் கிடந்த வாறும்*  கமலநன் முகமும் கண்டு*

  உள்ளமே! வலியைப் போலும்*  ஒருவனென் றுணர மாட்டாய்,*
  கள்ளமே காதல் செய்துன்*  கள்ளத்தே கழிக்கின் றாயே!


      விளக்கம்  


  • எம்பெருமான் பரமபதத்தில் நித்யஸூரிகளோடு பரிமாறுவதை விட்டுவிட்டு இங்கே வந்து கண்வளர்ந்தருளுவது- உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலத்தவராகிய ஸம்ஸாரிகளை வசப்படுத்திக் கொள்வதற்காக வலை வீககிறபடியாதலால் கள்வனார் எனப்பட்டது. வேசியைக் கண்டு பேசவிரும்பியும், சோறுவாங்கி உண்ணக்கருதியும், திருவிழாக்களிலே திரண்டவர்கள் ஏமாந்திருக்கையில் கொள்ளை கொள்ளக்கருதியும் இவ்வாறு பலவகை எண்ணங்களோடே கோவிலுக்குள்ளே புகுந்தவர்களை, வடிவழகு முதலியவற்றைக்காட்டி நாளடைவில், தனக்கு அற்றுத்தீர்ந்த அடியவராம்படி, ஆக்கிக்கொள்ளுகிற எம்பொருமானைக் கள்ளனென்னத் தடையுண்டோ? “செஞ்சொற் கவிகாள்! உயிர் காத்து ஆட்செய்மின் திருமாலிருஞ்சோலை, வஞ்சக்கள்வன் மாமாயன்” என்றாரே நம்மாழ்வாரும்.


  896.   

  குளித்துமூன் றனலை யோம்பும்*  குறிகொளந் தணமை தன்னை,*
  ஒளித்திட்டே னென்க ணில்லை*  நின்கணும் பத்த னல்லேன்,*

  களிப்பதென் கொண்டு நம்பீ!* கடல்வண்ணா! கதறு கின்றேன்,*
  அளித்தெனக் கருள்செய் கண்டாய்*  அரங்கமா நகரு ளானே!


      விளக்கம்  


  • கர்மயோகம், ஜ்ஞாநயோகம், பக்தியோகம் என்று சாஸ்த்தரங்களில் உபாயமாகக் கூறப்பட்டவற்றை அநுஷ்டிப்பதற்கு ஏற்ற ப்ராஹ்மண்யமிருந்தும் ஐயோ!; எனக்கு ஒன்றிலும் யோக்யதை இல்லையே என்று தமது வறுமையைக் கூறுகின்றார். அக்நிஹோத்ரம் முதலிய தீத்தொழில்களைக் செய்வதற்கு யோக்யதையைக் கொடுப்பது ப்ராஹ்மண்யம் என்பது முதலடைமொழியால் விளங்கும், குறிகொள் என்பதனால் - இந்த ப்ராஹ்மண்யம் மிகவருந்திக்காப்பாற்ற வேண்டிய தென்பது போதரும். ப்ராஹ்மணயோநியிற் பிறந்தவன் எவ்வளவு அக்ருத்யங்கள் செய்தாலும் ப்ராஹ்மணனாகவே இருக்கிறான் என்பது கிடையாதாகையாலும், சாஸ்த்தரங்களிலே பாபங்களைக் கூறும்போது ஜாதிப்ரம்சாபாதக பாபங்கள் (அதாவது ஜாதியில் நின்றும் நழுவச்செய்யவல்ல பாவங்கள்) என்று சில பாதகங்கள் கூறப்பட்டிருத்தலாலும் அப்படிப்பட்ட பாவங்களுக்கு ஆளாகாதபடி ஒழுங்காக இருந்தாலன்றி ப்ராஹ்மண்யம் நிலைத்து நிற்கமாட்டாதாகையால், குறிகொள் எனப்பட்டதென்க.


  897.   

  போதெல்லாம் போது கொண்டுன்*  பொன்னடி புனைய மாட்டேன்,*
  தீதிலா மொழிகள் கொண்டுன்*  திருக்குணம் செப்ப மாட்டேன்,*

  காதலால் நெஞ்ச மன்பு*  கலந்திலே னதுதன் னாலே,*
  ஏதிலே னரங்கர்க்கு எல்லே!*  எஞ்செய்வான் தோன்றி னேனே!


      விளக்கம்  


  • “கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும்ஆம்பலும் முன் சண்டக்கால், புள்ளாயோரேனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று உள்ளாதா ருள்ளத்தை உள்ளமாக்கொள்ளோமே” என்றபடி கண்ணிற்கண்ட பூக்களைக் கொணர்த்து பெருமாள் திருவடிகளிலே ஸமர்பிக்க வேண்டியது ப்ராப்தமாயிருக்க, அது செய்யமாட்டுகிறிலேன்; இவ்வளவு கஷ்டமும் வேணடா; வாயில்வந்த நாலு சொற்களைச் சொல்லி ஸ்தோத்ரமானது செய்யலாமே; அதுவும் செய்யப் பெற்றிலேன்; அவ்வளவு சிரமமும் வேண்டா; நெஞ்சிலேயாவது சிறிது ஸ்நேஹம் வஹிக்கலாமே; அதுவும் பெற்றிலேன்; இப்படி ஒருவிதத்தாலும் எப்பெருமான் விஷயத்திலே தான் கிஞ்சித்கரிக்கப் பெறாதவனானபின்பு அட்டின் கழுத்தில் முலைக்கும் எனக்கும் ஒரு வாசியில்லை; என்னுடைய பிறவி வீண்! வீண்!! வீண்!!! என்கிறார்.


  898.   

  குரங்குகள் மலையை தூக்கக்*  குளித்துத்தாம் புரண்டிட் டோடி,*
  தரங்கநீ ரடைக்க லுற்ற*  சலமிலா அணிலம் போலேன்,*

  மரங்கள்போல் வலிய நெஞ்சம்*  வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,*
  அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே*  னயர்க்கின் றேனே!


      விளக்கம்  


  • ஸ்ரீராமாவதாரத்தில் பெருமாள் இலங்கைநகர் எழுந்தருள்வதற்காகக் கடலில் அணை கட்ட நேர்ந்தபோது வாநரவீரர்கள் மலைகளைக் கொணர்ந்து எறிந்து கடலைத் தூர்ப்பதைக் கண்ட அணிற்பிள்ளைகள் ‘இவ்வாநரங்கள் தமது சக்திக்கு இயன்ற காரியத்தைச் செய்து பெருமாள் விஷயத்திலே கிஞ்சித்கரித்தால் நாமும் நமது சக்திக்கு ஏற்றவாறு இப்பெரிய காரியத்திலே சிறது கிஞ்சித்கரிப்போம்’. என்றெண்ணி, எல்லா அணிற்பிள்ளைகளும் கடலிலே முழுகுவது, உடனே அந்த ஈரவுடம்போடே கரைமேல் மணலில் புரண்டு உடலில் ஒட்டிக்கொண்ட மணல்களைக் கடலிலேகொண்டு உதறுவதாய் இப்படிப்பட்ட ஒரு காரியத்திலே ஸேதுபந்தன கைங்கரியத்திற்கு உதவிபுரிந்ததாக ஒரு இதிஹாஸம் உண்டு; அதனை அருளிச்செய்கிறார் முன் இரண்டடிகளில்.


  899.   

  உம்பரா லறிய லாகா*  ஒளியுளார் ஆனைக் காகி,*
  செம்புலா லுண்டு வாழும்*  முதலைமேல் சீறி வந்தார்,*

  நம்பர மாய துண்டே?*  நாய்களோம் சிறுமை யோரா,*
  எம்பிராற் காட்செய் யாதே*  எஞ்செய்வான் தோன்றி னேனே!


      விளக்கம்  


  • மடுவின் கரையிலே முதலையின் வாயில் அகப்பட்டு வருந்தின கஜேந்த்ராழ்வான் “நாராயணா! ஓ! மணிவண்ணா நாகணையாய்!” என்று அழைத்தவாறே அரைகுலையத் தலைகுலைய மடுவின்கரையிலே ஓடிவந்தவனன்றோ எம்பெருமான்; இப்படி ஆச்ரித ஸுலபனாய் ஆச்ரித பக்ஷபாதியான எம்பெருமானிருக்க அவனைக் கடகாகப் பற்றாமல் நம்மைநாமே ரக்ஷித்துக் கொள்ளப் பார்ப்பதும் ஒரு காரியமாகுமோ? ஆனால் பரமோத்க்ருஷ்டனான அவன் பரமநிக்ருஷ்டரான நம்மை ஒரு பொருளாக நினைப்பனோ என்று சிறிது சங்கிக்கலாம்; இதுவும் அவனுடைய ஸ்வரூபத்தை அறியாதாருடைய சங்கையாகும்; ‘இவன் நீசன், இவன் உத்கிருஷ்டன்’ என்று ஏற்றத்தாழ்வுகளைப் பார்ப்பவனல்லன் எம்பெருமான். இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே சிறிதும் அடிமை செய்யப்பெறாத பாவியேன் ஏதுக்காக ஒரு மனிதனாகப் பிறந்தேனென்று தலையிலடித்துக் கொள்ளுகிறபடி பரமபதத்தை ஒளி என்ற சொல்லாற் கூறியது வடமொழி வேதப்ரக்ரியையை அடியொற்றியாம்.


  900.   

  ஊரிலேன் காணி யில்லை *  உறவுமற் றொருவ ரில்லை,*
  பாரில்நின் பாத மூலம்*  பற்றிலேன் பரம மூர்த்தி,*

  காரொளி வண்ண னே!(என்)*  கண்ணனே! கதறு கின்றேன்,*
  ஆருளர்க் களைக ணம்மா!*  அரங்கமா நகரு ளானே!


      விளக்கம்  


  • தமக்கு ஒருவிதத்தாலும் ‘பேறு தப்பா’ தென்று நிச்சயித்து விசாரமற்றிருப்பதற்கு இடமில்லாமையை விரிய உரைக்கும் பாசுரம் இது. ஊரிலேன் - வேறு எவ்வித யோக்யதையுமில்லாமற் போனாலும் ஸாளக்ராமம், கோயில் திருமலை, பெருமாள் கோயில் முதலிய திவ்யதேசங்களில் ஜந்மமாவது கிடைத்தால் அதைக் கொண்டு உய்வு பெறலாம். அப்படிப்பட்ட ஒரு தேசத்திலும் எனக்குப் பிறவி நேரவில்லையே! காணி யில்லை.-- திவ்யதேசத்தில் ஐந்மமில்லாவிடினும் உதரபோஷணார்த்தமாக ஏதாவது கொஞ்சம் க்ராம பூமிகள் ஏற்பட்டிருந்தால் அங்குப்போக வேண்டிய காலங்களில் யாத்ருச்சிகமாக இடையிலே ஒரு திவ்யதேவஸேவை கிடைக்கக்கூடும் அப்படிப்பட்ட ப்ரஸக்தி நேருவதற்கு ஒரு குழியளவு காணியுமில்லை யென்கிறார்.


  901.   

  மனத்திலோர் தூய்மை யில்லை*  வாயிலோ ரிஞ்சொ லில்லை,*
  சினத்தினால் செற்றம் நோக்கித்*  தீவிளி விளிவன் வாளா,*

  புனத்துழாய் மாலை யானே!*  பொன்னிசூழ் திருவ ரங்கா,*
  எனக்கினிக் கதியென் சொல்லாய்*  என்னையா ளுடைய கோவே!


      விளக்கம்  


  • “குளித்து மூன்றனலையோம்பும்” என்ற பாட்டுத் தொடங்கி ஐந்து பாட்டுகளாலே தம்மிடத்தில் ஒருவித நன்மையும் கிடையாதென்பதை வெளியிட்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! உம்மிடத்தில் ஒரு நன்மையும் இல்லையென்றீர்; இருக்கட்டும், ஒருவித நன்மையுமில்லாதாப் போலே ஒருவித தீமையுமில்லா திருந்தாலும் போதும்; அப்படி உண்டோ?” என்று கேட்க; நநிந்திதம் கர்மததஸ்திலோகே ஸஹஸ்ரசோ யந்நமயாவ்ய தாயி” என்ற ஆள வந்தாரைப்போலே என்னிடத்திலில்லாத தீமை உலகத்திலேயே இல்லை! எல்லா வித தீமைகளும் என் பக்கல் சூடிகொண்டிருக்கின்றன வென்கிறார். மனத்தில் ஓர் தூய்மை இல்லை -- காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம் மாத்ஸர்யம் என்று சொல்லப்படும் பல துர்க்குணங்களில் ஒன்றாவது குறைந்தால் கொஞ்சமாவது சித்தசுத்தி ஏற்படும், அப்படியுமில்லை யென்கை.


  902.   

  தவத்துளார் தம்மி லல்லேன்*  தனம்படத் தாரி லல்லேன்,*
  உவர்த்தநீர் போல*  வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்,*

  துவர்த்தசெவ் வாயி னார்க்கே*  துவக்கறத் துரிச னானேன்,*
  அவத்தமே பிறவி தந்தாய்*  அரங்கமா நகரு ளானே!


      விளக்கம்  


  • தவமாவது - சரீரத்தை வருத்தப்படுத்திச் செய்யும் காரியம்; முமுக்ஷுக்களாயிருப்பார் மோக்ஷார்த்தமாகத் தவம்புரிவர்கள்; புபுக்ஷுக்களாயிருப்பார் ஸ்வர்க்கம் முதலிய ப்ரயோஜ நாந்தரங்களைக் குறித்துத் தவம் புரிவார்கள்; நான் ஒருவிதமான தவமும் செய்திலேன். ஸத்விஷயத்திலே விநியோகப்படுகிற தனத்தை நான் படைக்கவில்லை என்கிறார் ‘தனம் படைத்தாரிலல்லேன்’ என்பதனால். “பொருள் கையுண்டாய்ச் சொல்லக்காணில் போற்றி யென்றேற்றெழுவர்” (திருவாய்மொழி - கூ- க-ங) என்றபடி கையில் நாலுகாசு நடமாடுமளவு கழிந்தால் பந்துக்களும் நோக்கமாட்டார்களென்ற கருத்துடன் இரண்டாமடி அருளிச்செய்கிறார். உவர்த்த நீர் போல உப்புத் தண்ணீரை முகத்திலே இறட்டிக்கொண்டால் கண்விழிக்க வொண்ணுதபடி கரிக்குமாபோலே ஏன்னை அவர்கள் நேர்முகம் பார்க்கமுடியாதபடி அவர்கட்கு நான் தீயனாய்விட்டேனென்கை.


  903.   

  ஆர்த்துவண் டலம்பும் சோலை*  அணிதிரு வரங்கந் தன்னுள்,*
  கார்த்திர ளனைய மேனிக்*  கண்ணனே! உன்னைக் காணும்,*

  மார்க்கமொன் றறிய மாட்டா*  மனிசரில் துரிச னாய,*
  மூர்க்கனேன் வந்து நின்றேன்,*  மூர்க்கனேன் மூர்க்க னேனே.


      விளக்கம்  


  • எம்பெருமான் ஆழ்வாரைநோக்கி “ஸம்ஸாரிகளுக்குங்கூட ஆகாதபடி அஸாரமான நீர் என்னிடத்தில் வந்து நிற்பதேன்?” என்று கேட்க; என்னுடைய மூர்க்கத்தனத்தாலே வந்து நின்றேன்காண் என்கிறார். வண்டுகள் பலவகைப்பட்ட மலர்களிற் பெருகும் தேனைப் பருகுவதற்காகப் பேராரவாரம் செய்துகொண்டு அலையாநிற்கப்பெற்ற சோலைகள் சூழ்ந்த திருவரங்கம் பெரியகோயிலில் காளமேகங்களெல்லாம்கூடி இங்ஙனே ஒரு உருவெடுத்துக்கிடக்கின்றனகொல் என்று சங்கிக்கும்படியாகப் பரமபோக்யமாய்ப் பள்ளிகொண்டருளாநின்ற பெருமானே! தேவரீரை ஸாக்ஷாத்கரிக்கப் பெறும் உபாயம் இன்னதென்று அறியமாட்டாதவர்களில் பெருங்கள்ளனாகிய அடியேன் என் நிலைமையை நினைத்துப்பார்த்தால் தேவர் திருமுன்பே வந்து நிற்கைக்கு யோக்யதையே இல்லை; ஆயிருக்கச்செய்தேயும் யுக்தாயுக்தம் ஆராயமாட்டாத மூர்க்கனாகையாலே லஜ்ஜாபயங்களற்று வந்து நின்றேனென்கை


  904.   

  மெய்யெலாம் போக விட்டு*  விரிகுழ லாரில் பட்டு,*
  பொய்யெலாம் பொதிந்து கொண்ட*  போட்கனேன் வந்து நின்றேன்,*

  ஐயனே!அரங்க னே!உன் அருளென்னு மாசை தன்னால்,*
  பொய்யனேன் வந்து நின்றேன்*  பொய்யனேன் பொய்ய னேனே.


      விளக்கம்  


  • தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி கதறி தேவரீர் உடைய கருணையொன்றைய எதிர்பார்திருப்பவனடியேன் என்கிறார். மனம், மொழி, மெய், என்கிற முக்கரணங்களிலும் சத்தியம் நிலையாய் இருக்கப்பெற்ற உத்தமாதிகாரியாய் இருக்க முடியாமற்போனாலும் ஏதாவது ஒரு காரணத்திலாவது சத்தியமாய் இருக்கலாம்; அப்படிப்பட்ட நிலைமையும் எனக்கு இல்லை; விஷயாந்தர ப்ராவண்யத்தாலே பொய் தவிர வேறுயில்லாதவனாயிராநின்றேன். ஆயினும் “தேவரீருடைய திருவருள் இருக்குமானால் நமக்கொரு குறைவுமில்லை” என்கிற விச்வாஸமொன்றுமாத்திரம் என்னிடத்தில் உள்ளதாதாலால் அக்கருணையிலுள்ள நசையாலே, வெட்கமும் அச்சமுமற்றுத் திருமுன்பே வந்து நின்றேன் என்கிறார். போழ்க்கன் - முறைகேடன், வழிதப்பினவன். ‘போட்கன்’ என்றலுமுண்டு.


  905.   

  உள்ளத்தே யுறையும் மாலை*  உள்ளுவா னுணர்வொன் றில்லா,*
  கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்*  தொண்டுக்கே கோலம் பூண்டேன்*<

  உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்*  உடனிருந் தறிதி யென்று,*
  வெள்கிப்போ யென்னுள் ளேநான்*  விலவறச் சிரித்திட் டேனே!


      விளக்கம்  


  • உரை:1

   நாம் ஓரிடம்தேடி ஓடவேண்டாதபடி நம்ஹ்ருதயத்திலுள்ளே எப்போதும் வந்து நெருங்கியிருக்கிற உன்னைச் சிந்தைசெய்வதற்கு ஏற்ற அறிவுஇல்லாத ஆத்மாபஹாரக் கள்ளனாகிய அடியேன் உனக்கு அடிமைசெய்பவன்போலத் தோன்றி “இவன் பரமபாகவதன், பரமபக்தன்” என்று கண்டாரடங்கலும் புகழும்படியாக “தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றபடி கைங்கர்யவேஷங்களைப் போட்டுக்கொண்டு திரிந்தபோதிலும் “இன்னாரின்னார் இன்னது நினைக்கிறார்கள்” என்று எல்லாருடைய நினைவையும் நீ நெஞ்சினுள்ளேயே இருந்துகொண்டு அறிகின்றாயென்று உனது ஸர்வஜ்ஞத்வத்தை நான் அநுஸந்தித்தவாறே ‘ஐயோ! நமது கள்ளவேஷம் வெளிப்படையாயிற்றே!’ என்று வெட்கமடைந்து எனக்குள்ளேயே நான் சிரித்துக்கொண்டேனென்கிறார். -ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே” என்ற கருத்து ஈற்றடியில் உறையும். விலவறச் சிரித்திட்டேன் என்றது - எல்லை கடந்து சிரித்தமையைக் கூறியவாறு.

   உரை:2

   உள்ளத்தே உறையும் திருமாலை நினைக்கும் நினைப்பு சிறிதும் இல்லாத பொய்யனான நான் தொண்டு செய்கிறேன் என்று பொய்க்கோலம் பூண்டேன். நினைப்பவர் நினைப்பவை எல்லாம் உடன் இருந்து நீ அறிவாய் என்று வெட்கட்ப்பட்டு என்னுள்ளே நான் விலா அறும் படி சிரித்திட்டேனே.


  906.   

  தாவியன் றுலக மெல்லாம்*  தலைவிளாக் கொண்ட எந்தாய்,*
  சேவியே னுன்னை யல்லால்*  சிக்கெனச் செங்கண் மாலே,*

  ஆவியே! அமுதே!* என்றன் ஆருயி ரனைய எந்தாய்,*
  பாவியே னுன்னை யல்லால்*  பாவியேன் பாவி யேனே.


      விளக்கம்  


  • கீழ்ப்பாட்டில் தமது கள்ளத்தன்மையைப் பேசி, “இப்படிப்பட்ட நாம் எம்பெருமானைக் கிட்டுதல் தகாது” என்று ஆழ்வார் அகல நினைக்க ஆழ்வீர்! நாம் உலகத்தாருடைய தாழ்வுகளைக் கண்ணெடுத்துப் பாராது அவர்களுடைய ஸ்வல்ப குணத்தையே பாராட்டி அவர்களை அடிமை கொள்பவரல்லோமோ? என்று தன்னுடைய வாத்ஸல்யம் விளங்குமாறு எல்லாரையும் தான் அடிமைகொண்ட த்ரிவிக்ரமாவதார சரித்திரத்தை இவர்க்கு நினைப்பூட்டிச் சமாதாநம் உண்டாகுமாறு செய்ய; அதனால் ஆழ்வார் தாம் முன்பு அவனைவிட்டு விலகிச்செல்லும்படி நினைந்த தமது குற்றத்தைப் பாராட்டி, “பாவியேன் பாவியேனே” என்று தம்மை வெறுத்துக்கூறி, எம்பெருமானைத் தவிர வேறொரு கடவுளை நினைத்தலும் தொழுதலும் செய்யாத தமது தன்மையை வெளியிடுகின்றனர்.


  907.   

  மழைக்கன்று வரைமு னேந்தும்*  மைந்தனே மதுர வாறே,*
  உழைக்கன்றே போல நோக்கம்*  உடையவர் வலையுள் பட்டு,*

  உழைக்கின்றேற் கென்னை நோக்கா*  தொழிவதே,உன்னை யன்றே*
  அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி!*  அரங்கமா நகரு ளானே!


      விளக்கம்  


  • பேறு பெறுவதில் விரைவு மிகுதியாலே ஆற்றாமை கரைபுரண்டு பெருமிடறுசெய்து கூப்பிடுகிறார். இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழுநாள் விடாமழை பெய்வித்து வருத்தப்படுத்தின காலத்தில் கோவர்த்தநகிரியைக் கொற்றக்குடையாக வெடுத்து ஆயரையும் ஆநிரையையும் காத்தருளினவனன்றோ நீ; அப்படி அவர்களைக் காப்பதற்கு அவர்களிடத்தில் ஏன்ன குணம் கண்டுபிடித்தாய்? அவ்விடையருடைய கோஷ்டியிலாவது பசுக்களின் திரளிலாவது அடியேனையும் சேர்த்துக்கொள்ளலாகாதா? என்னும் இரக்கப்பொருள்தோன்ற மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே! என்கிறார். மதுர ஆறே! - ரக்ஷித்தருளாமல் உபேக்ஷித்தபோதிலும் உன்னைவிட முடியவில்லையே! என்பது கருத்து. ஆறானது ஏரி, குளம் முதலியவைபோலே ஒரிடத்திலேயே இராமல் நாநா தேசங்களிலும் போய்ப் பெருகுவது போல் எம்பெருமான் அடியார் இருக்குமிடங்களிலெல்லாம்போய் ஸேவை ஸாதிததருள்கின்ற ஸௌலப்யமும் இந்த முற்றுவமையால் தோற்று மென்க.


  908.   

  தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்* திருவரங்கங் கத்துள் ளோங்கும்,*
  ஒளியுளார் தாமே யன்றே* தந்தையும் தாயு மாவார்,*

  எளியதோ ரருளு மன்றே*  எந்திறத் தெம்பி ரானார்,*
  அளியன்நம் பையல் என்னார்*  அம்மவோ கொடிய வாறே!


      விளக்கம்  


  • தாம் இப்படி கதறாநிற்கச் செய்தேயும் பெரியபெருமாள் இரங்கி அஞ்சேல்” என்னக் காணாமையாலே, தம்மையொழிய வேறே ஒரு சுற்றத்தவர் எனக்கு இருப்பதாக நினைத்திருக்கிறாரோ? ப்ரயோஜநாந்தரங்களை விரும்பி அகன்று போகிறேனென்று நினைத்திருக்கிறாரோ? ‘நம்முடையவன்’ என்று என்னைச் சிறிது அபிமாநித்தால் போதுமாயிருக்க இவ்வளவுகூட அபிமாநியாமல் கூக்குரல் கேட்டுக்கொண்டே கண்ணுறங்குவதே! அம்மே! இவர் திருவுள்ளம் இப்போது இங்ஙனே கொடிதாயிற்றே! என்று வருந்துகின்றார். காவேரிக்குத் தெளிவில்லாமை- மேன்மேலும் பெருக்கு மிக்கிருக்கையாலே. இத்தெளிவில்லாமையை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் ஒரு சமத்காரம் தோற்ற வருணிக்கிறார் - “துக்தாப்திர்ஜநகோ ஜந்ந்யஹமியம்” இத்யாதி ச்லோகத்தால் . அதன் கருத்து-பாற்கடல் தகப்பனார்; பொன்னி என்ற நான் தாய் ; ஸ்ரீரங்கநாய்ச்சியார் பெண்; பெரிய பெருமாள் மணவாளன்; இந்த விஷயத்திலே பெரிய பெருமாளுக்கும் பெரியபிராட்டியார்க்கும் தகுதியாக நான் என்ன பண்ணப்போகிறேன்? என்று கலங்கினாற்போல, சாமரம், கருப்பூரம், சந்தநவ்ருக்ஷங்கள், சிறந்த ரத்நங்கள், முத்துக்கள் முதலியவற்றை அலைகளாகிற கைகாலே உந்தா நின்று கொண்டு ஆழ்ந்து வருகிற காவேரியைப் பற்றுங்கள் என்பதாம்.


  909.   

  மேம்பொருள் போக விட்டு*  மெய்ம்மையை மிகவு ணர்ந்து,*
  ஆம்பரி சறிந்து கொண்டு*  ஐம்புல னகத்த டக்கி,*

  காம்பறத் தலைசி ரைத்துன்*  கடைத்தலை யிருந்துவாழும்*
  சோம்பரை உகத்தி போலும்*  சூழ்புனல் அரங்கத் தானே!


      விளக்கம்  


  • “அளியனம் பையலென்னார் அம்மவோ கொடியவாறே!” என்று கீழ்ப்பாட்டில் ஆழ்வார் வருந்தினவாறே “இவ்விருள் தருமாஞாலத்திலே ஸ்வரூபாநு ரூபமான புருஷார்த்தத்தை அபேக்ஷிப்பதும் அதற்காக நம் கைபார்த்திருப்பதும் அதுக்குமேலே விளம்பம் பொறாமல் கூப்பிடுவதும்! இதென்ன ஆச்சரியமாயிருக்கிறதே! இப்படிப்பட்ட ஒரு உத்தமாதிகாரியைக் கிடைக்கப்பெற்றோமே!” என்று பெரியபெருமாள் திருவுள்ளம் மிகவும் ப்ரஸந்நமாய், அந்த ப்ரஸாதமெல்லாம் திருமுகத்திலே தோற்றும்படி யிருக்கக்கண்ட ஆழ்வார், “பெருமானே! தேவரீரைக்கிட்டி தேவரீர் பக்கலிலே ஸர்வபாரங்களையும் ஸமர்பித்து நிச்சிந்தையாயிருப்பவர்களைக் கண்டால் தேவரீருடைய திருவுள்ளம் இங்ஙனேயோ மலர்ந்திருப்பது!” என்று பெரியபெருமாள் திருமுகத்தை நோக்கி விண்ணப்பம் செய்கிறார்.


  910.   

  அடிமையில் குடிமை யில்லா*  அயல்சதுப் பேதி மாரில்,*
  குடிமையில் கடைமை பட்ட*  குக்கரில் பிறப்ப ரேலும்,*

  முடியினில் துளபம் வைத்தாய்!*  மொய்கழற் கன்பு செய்யும்,*
  அடியரை யுகத்தி போலும்*  அரங்கமா நகரு ளானே!


      விளக்கம்  


  • மேன்மைக்குக் காரணம் -எம்பெருமான் பக்கல் தொண்டு பூண்டு ஒழுகுவதே தவிர, உயர்குடிப்பிறப்பு அன்று. அவ்வாறு தொண்டுபூண்டு ஒழுகாமலிருப்பதே தாழ்ச்சிக்குக் காரணம்; இழிகுலப்பிறப்பு அன்று, ஆகையால் யோநிஜந்மத்தைச் சிறிதும் பாராட்ட வேண்டாவென்க. குடிமை-குடிப்பிறப்பிற்கு ஏற்ற நல்லொழுக்கம். அயலாதலாவது ‘எம்பெருமானுடைய கைங்கர்யத்தைச் செய்தற்கு அநுகூலமாக வேதமோதுகிறோம் என்று அறியாதிருக்கை. அத்யயநத்திற்குப் பலன் வேதத்தின் பொருளை உள்ளபடி அறிந்து நடப்பதுதான்’ என்று உணராதவர்கள் நான்கு வேதங்களிலும் வல்லவரானாலும் பயனில்லை என்பது முதலடியில் விளங்கும்.


  911.   

  திருமறு மார்வ! நின்னைச்*  சிந்தையுள் திகழ வைத்து,*
  மருவிய மனத்த ராகில்*  மாநிலத் துயிர்க ளெல்லாம்,*

  வெருவரக் கொன்று சுட்டிட்*  டீட்டிய வினைய ரேலும்,*
  அருவினைப் பயன துய்யார்*  அரங்கமா நகரு ளானே!


      விளக்கம்  


  • தாழ்ந்த வகுப்பில் பிறப்பேயன்றி நீசமான அநுஷ்டாநமு முடையரேயாயினும் “மேம் பொருள் போகவிட்டு” என்ற பாட்டிற்கூறிய அதிகாரத்திலே நிஷ்டையுடையராகில் அவர்களுக்கு அந்தக் கருமங்களின் பலன் அநுபவிக்கக் கடவதல்ல என்கிறது, இப்பாட்டு. திருமகள் கொழுநனான எம்பெருமானே! என்னை இடைவிடாது நெஞ்சிலே அநுஸந்தித் திருப்பராகில் அந்த ப்ரபாவத்தாலே அவர்களுடைய பரஹிம்ஸை முதலிய கொடியபாவங்களும் தீயிலிட்ட தூசுபோல் உருமாய்ந்தொழியு மாதலால் அவர்கள் நரகங்களிலே புக்கு அக்கருமங்களின் பலன்களான தண்டனைகளை அநுபவிக்கவேண்டிய ப்ரஸக்தியே யில்லை என்றவாறு.


  912.   

  வானுளா ரறிய லாகா*  வானவா! என்ப ராகில்,*
  தேனுலாந் துளப மாலைச்*  சென்னியாய்! என்ப ராகில்,*

  ஊனமா யினகள் செய்யும்*  ஊனகா ரகர்க ளேலும்,*
  போனகம் செய்த சேடம்*  தருவரேல் புனித மன்றே?


      விளக்கம்  


  • தேவர்கள் மேலுலகில் இருப்பவர்கள் என்ற மாத்திரத்தால் அவர்களுக்கு எம்பெருமானுடைய ஸ்வரூபம்ரூபம் முதலியவை விசதமாய்விடுமென்ன முடியாது. “நாம் மநுஷ்யர்களிற்காட்டிலும் மிகவும் மேம்பாடுடையோம்; மேலுலகத்தில் வாழ்கிறோம். கடவர்களாயிருக்கிறோம்” என்றாற்போலே அவர்கள் தங்களைப் பெருக்க மதித்திருப்பதால், “அகிஞ்சநோநந்யகதி:” என்றிருக்கும் ஸாத்விகாதிகாரிகளால் அறியப்படுமவனான எம்பெருமானை அவ்வஹங்காரிகள் அறியகில்லார் என்க. இப்படி எம்பெருமானுக்குள்ள ‘அறிவதரியான்’ என்கின்ற ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவரேல், அவர்கள் தாங்கள் இழிதொழில் செய்யுமவர்களாயிருந்தாலும், தாங்கள் செய்வது போதாமல் பிறரையும் அவ்வழிதொழில்களைச் செய்விப்பவர்களாயிருந்தாலும் அவர்கள் தாங்கள் பெற்றிருக்கும் பகவத் ஸ்வரூபவுணர்ச்சி காரணமாக மிகவும் ஆதரிக்கப்படுவர்களே யன்றி இழிதொழில் செய்யுமவர்களென்று இகழப்படமாட்டார்கள். அவ்வளவேயுமன்று; அவர்கள் தாங்கள முதுசெய்து மிகுந்த ப்ரஸாதத்தை அருள் புரிந்தால் அதனைப் பெற்று மற்றையோர் தூய்மைபெறலாம்படி அத்தனை பெருமை பொருந்தியவர்கள்காண் என்கிறது.


  913.   

  பழுதிலா வொழுக லாற்றுப்*  பலசதுப் பேதி மார்கள்,*
  இழிகுலத் தவர்க ளேலும்*  எம்மடி யார்க ளாகில்,*

  தொழுமினீர் கொடுமின் கொள்மின்!*  என்றுநின் னோடு மொக்க,*
  வழிபட வருளி னாய்போன்ம்*  மதிள்திரு வரங்கத் தானே!


      விளக்கம்  


  • உத்பத்தியிலாவது ஆசாரம் முதலியவற்றிலாவது ஒருவகையாலும் குறையின்றியே ஸத்ஸந்தாந ப்ரஸூதர்களாய் ஸதாசார்நிஷ்டர்களா யிருக்கும் சதுர்வேதிகளை நோக்கி எம் பெருமான் கூறின வார்த்தை;- ‘ஓ சதுர்வேதிகளே’ உங்களைப்போலே, ப்ரஹ்மாதொடங்கி நெடுகிவருகிற வம்சப்ரவாஹத்திலே பிறந்து சதுர்வேதிகளா யிருப்பவர்கள் தாம் பூஜ்யர், மற்றையோர் அநாதரணீயர் என்று நீங்கள் பாவிக்கலாகாது; எந்த ஜாதியிலே பிறந்தவரேனும் எனது அடியவர்களானால் அவர்களை நீங்கள் தொழவேணும்; பரஸ்பரம் ஜ்ஞாநத்தைக் கொடுத்துக்கொள்ளலாம். விசேஷமாகச் சொல்வதேன்? என்னை நீங்கள் எவ்விதமாக ஆராதிக்க உடன்பட்டிருக்கிறீர்களோ, அவ்விதமாகவே அவர்களையும் ஆராதிக்க வேண்டியது தான்” என்று ஸ்ரீபாஞ்சராத்ரத்திலே “பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா” என்று தொடங்கி “தஸ்மைதேயம் ததோக்ராஹ்யம் ஸசபூஜ்யோ யதாஹ்யஹம்” என்பதீறாகவுள்ள ச்லோகங்களை நோக்குக.


  914.   

  அமரவோ ரங்க மாறும்*  வேதமோர் நான்கு மோதி,*
  தமர்களில் தலைவ ராய*  சாதியந் தணர்க ளேலும்,*

  நுமர்களைப் பழிப்ப ராகில்* நொடிப்பதோ ரளவில்,*  ஆங்கே-
  அவர்கள்தாம் புலையர் போலும்*  அரங்கமா நகரு ளானே!


      விளக்கம்  


  • ருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என்று வேதங்கள் நான்கு; சீக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜியோதிஷம், கல்பம் என்று வேதாங்கங்கள் ஆறு; இவற்றை யெல்லாம் கண்டபாடம் பண்ணி அவற்றின் பொருள்களையும் அறிந்து, அவ்வறிவுக்குப் பலனாக பகவத் கைங்கர்யத்தில் முதன்மையாக ஊன்றியிருக்கும் சிறந்த அந்தணர்களா யிருந்தபோதிலும் அவர்கள், கீழ்க்கூறிய யோக்யதைகளெல்லாமில்லாமல் கேவலம் பகவத்தைங்கர்ய மொன்று மாத்திரமுடைய ஒரு ஸ்ரீவைஷ்ணவரை (அதாவது சண்டாளஜாதியிலே பிறந்தவரை) அந்தப் பிறவியைப் பற்றி இகழ்வாக நினைத்து தூஷிப்பார்களானால் தூஷிக்குமவர்கள் தாங்களே ப்ராஹ்மண்யம் கெட்டுக் கர்மசண்டாளராயப் போவர்கள். இப்படி போவது ஜந்மாந்தரத்திலோ வென்னில்; அன்று தூஷித்த அந்த க்ஷணத்திலேயே சண்டாளராயொழிவர்.


  915.   

  பெண்ணுலாம் சடையி னானும்*  பிரமனு முன்னைக் காண்பான்,*
  எண்ணிலா வூழி யூழி*  தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*

  விண்ணுளார் வியப்ப வந்து*  ஆனைக்கன் றருளை யீந்த-
  கண்ணறா,*  உன்னை யென்னோ*  களைகணாக் கருது மாறே!(2)


      விளக்கம்  


  • கீழ்பாட்டுக்களில் கூறிய பாகவத வைபவம் நன்கு ஸம்விக்கக் கூடியதென்பதை ஸ்தாபிப்பதற்காக ஸ்ரீகஜேந்த்ராழ்வானுடைய சரிதத்தை அநுஸந்தித்துக் காட்டுகின்றார்; சிவன் பிரமன் முதலாயினோர் தாங்கள் எம்பெருமானை ஸாக்ஷாத்கரிக்கவேணுமென்று நெடுங்காலம் தவம்புரிந்தும் அவர்கட்கு அப்பேறு கிடையாமையாலே வெள்கிநிற்க்கும்படியாயிற்று; கஜேந்த்ராழ்வான் மநுஷ்யஜாதியுமல்ல; மிகவும் நீசமான திர்யக்ஜாதி.அப்படியிருந்தும் எம்பெருமானுடைய விஷயீகாரத்திற்கு எளிதில் பாத்திரமாய்விட்டது. ஆகையாலே ஜாதியின் சிறப்பு உபயோகமற்றது என்கிற அர்த்தம் இப்பாட்டில் அர்த்தாத் ஸூசிதம். வெள்கிநிற்ப-தங்களுடைய சிரமம் வீணாய் ஒழிந்தமையை நினைத்து வெட்கப்பட்டுத் தலைகுனிந்து தரையைக்கீறி நிற்கையில்என்கை. அன்றியே, வெள்கிநிற்ப-வெட்கப்பட்டு நிற்கும்படியாக என்றுமுரைக்கலாம். ஒரு தபஸ்ஸும் செய்யாத ஒரு யானைக்கு அருளையீந்த்து பிரமனுக்கும் சிவனுக்கும் லஜ்ஜாஹேதுவாக ஆமன்றோ.


  916.   
  வளவெழும் தவள மாட*  மதுரைமா நகரந் தன்னுள்,*
  கவளமால் யானை கொன்ற*  கண்ணனை அரங்க மாலை,*

  துவளத்தொண் டாய தொல்சீர்த்*  தொண்டர டிப்பொ டிசொல்,*
  இளையபுன் கவிதை யேலும்*  எம்பிறார் கினிய வாறே!(2)


      விளக்கம்  


  • உரை:1
    
   அடடா. மதுரை மாநகரம் என்று சொல்லியிருக்கிறாரே. அது நம் தமிழக மதுரையாய் இருக்கலாமே. தவள மாடங்கள் நிறைந்த மதுரை என்று இம்மாநகரை இன்னும் பல இலக்கியங்கள் புகழ்கின்றதே - என்றால், 'மாநகரம் தன்னுள் கவள மால் யானை கொன்ற' என்று சொன்னதால் இங்கும் சொல்லப்பட்டது வடநாட்டு மதுரையைத் தான் என்பது தெளிவு.
    
   உரை:2

   விசேஷ உணவுகளையுண்டு மதம் பிடித்துக் கொழுத்திருந்த குவலயாபீடமென்னும் கம்ஸனது யானையை ஒழித்தருளினாற்போலே தம்முடைய ப்ராப்தி ப்ரதிபந்தகங்களையும் போக்கினபடியை அருளிச் செய்து பெரியபெருமாளுடைய ப்ரீதியே தமக்கு ப்ரயோஜன மென்று முடிக்கிறார் . கவளம் என்று யானையுணவுக்குப் பெர். “களவமால்யானை” என்றும் பாடமுண்டு. அப்போது கலப: என்னும் வடசொல் களவமெனத்திரிந்ததாம் ஒரு பருவத்தில் பெருத்தயானை யென்றபடி. இளைய புன் என்பவை -சப்தத்தில் இளமையையும் கவித்வத்தில் குற்றத்தையும் கூறும். எம்பெருமானைக் குறித்து அடியேன் சொன்ன சொற்கள் குற்றம் குறைகள் நிரம்பிய வையாயினும், எனது நெஞ்சில் உருக்கத்தையும் ஊற்றத்தையும் அறிந்திருக்கும் பெரிய பெருமாளுக்கு இது ஆராவமுதமாயிருக்கு மென்கிறார்.


  917.   
  கதிரவன் குணதிசைச் சிகரம் வந்துஅணைந்தான்*  கனைஇருள் அகன்றது காலைய‌ம் பொழுதாய்,* 
  மதுவிரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்*  வானவர் அரசர்கள் வந்து வந்துஈண்டி,*
  எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*  இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்,* 
  அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.  (2)

      விளக்கம்  


  • உரை:1

   திருவரங்கத்தில் பள்ளிகொண்டு இருக்கும் பெருமானே, கிழக்கு திசையிலே சூரியன் உதிக்க, இருளானதுநீங்கியது. அழகிய காலைப் பொழுது வந்தவுடன், மலர்கள் எல்லாம் விகாசம் அடைந்து தேன் நிறைந்து காணப்பட்டன. தேவர்களும்அரசர்களும்தெற்குபக்கத்திலேதிரண்டனர். அவர்களோடு வந்த யானை கூட்டங்களும், பெரிய வாத்தியங்களும்சப்திக்கும்போது எழும் ஒளியானதுகடலோசையை ஒத்து இருந்தது. ஆதலால் தேவரீர் திருப்பள்ளியை விட்டு எழ வேணும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

   உரை:2

   சூரியன் கிழக்கே தோன்றிவிட்டான். கருமை இருள் அகன்றுவிட்டது. காலைப் பொழுது மலர்கின்றது, மலர்களில் தேன் ஒழுகுகிறது. தேவர்கள் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் ஆண் -பெண் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல் அலைபோல அதிர்கிறது. அரங்கனே எழுந்தறள்வாய்.


  918.   
  கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்*  கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ,* 
  எழுந்தன மலர்அணைப் பள்ளிகொள் அன்னம்*  ஈன்பணி நனைந்த தம் இருசிறகு உதறி,*
  விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்*  வெள்எயிறுஉறஅதன் விடத்தினுக்கு அனுங்கி,* 
  அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.   

      விளக்கம்  


  • காற்றானதுமுல்லைச்செடியில் உள்ள மலர்களைச் சூழ்ந்து கொண்டுவீசா நின்றது. புஷ்பங்களிலேசயனிக்கும்பறவைகளானது பனி நிறைந்த தங்களுடைய அழகிய சிறகுகளை உதறிக்கொண்டு உறக்கம் களைந்து எழுந்து ஆயிற்று. முதலையின் பெரிய வாயிலுள்ளபற்களாலேகடிபட்டு, அம்முதலையின்பல்விஷத்தாலே மிகவும் நோவுபட்டகஜேந்திரஆழ்வானுடையதுக்கத்தைபோக்கிஅருளியஅரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் இப்பாசுரத்தில் ஆழ்வார்.


  919.   
  சுடர்ஒளி பரந்தன சூழ்திசை எல்லாம்*  துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,* 
  படர்ஒளி பசுத்தனன் பனிமதி இவனோ*  பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்,*
  மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற*  வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ,* 
  அடல்ஒளி திகழ்தரு திகிரியந் தடக்கை*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.  

      விளக்கம்  


  • கண்ட இடமெங்கும் சூரிய ஒளி பரவ, நக்ஷத்ரங்களினுடையஒளியும் குளிர்ந்த சந்திரனுடையஒளியும், இருளும்நீங்கியது. விடியற் காலையில் வீழும்காற்றானது, பசுமையோடு காணப்படும் பாக்குமரங்களினுடையமடலைக் கீற, அதனாலேபாக்குமரத்தினுடைய அழகிய பாளைகள் பரிமளித்து வீசா நின்றது. தேஜசு மிக நிறைந்த திருவாழிஆழ்வானை அழகிய திருக்கையிலே உடைய அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.


  920.   
  மேட்டுஇள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்*  வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்,* 
  ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்*  இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை,*
  வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!*  மாமுனி வேள்வியைக் காத்து,*  அவ பிரதம்- 
  ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே!*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.

      விளக்கம்  


  • எருதுகளைமேய்ச்சலுக்குகட்டவிழ்த்து விடும் இடையர்கள்ஊதுகிறபுல்லாங்குழலின்நாதமும், எருதுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ளமணிகளின் ஓசையும், இவை இரண்டின்ஓசையால் ஏற்பட்ட அழகான இசையும் அனைத்து திசைகளிலும் பரவி ஆயிற்று. வண்டுகளும் திரள் திரளாக ஆரவாரித்து கிளம்பிவட்டன. ராக்ஷசகுலத்தைஅழித்த அழகிய சார்ங்கத்தை உடைய வானவர் தலைவனே, விஷ்வாமித்ரரின்யாகத்தைநிறைவேற்றுவித்து, விரோதிகளைஅழித்தவனே, அயோத்திக்குஅரசனே, எமக்குத் தலைவனே! அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்.


  921.   
  புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்*  போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,* 
  கலந்தது குணதிசை கனைகடல் அரவம்*  களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,*
  அலங்கலந் தொடையல் கொண்டடியிணை பணிவான்*  அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா* 
  இலங்கையர் கோன் வழிபாடு செய்கோயில்*  எம்பெருமான்!பள்ளி எழுந்து அருளாயே.

      விளக்கம்  


  • முன் பாசுரத்தாலே வண்டுகள் உணர்ந்தமைகூறப்பட்டது. இந்த பாசுரத்திலேசோலைகளிலே பொழுது விடிந்தது கூட அறியாமல் மிகவும் சுகமாக உறங்கிக் கொண்டிருந்த பறவைகள் பொழுது விடிந்ததை கண்டு உணர்ந்தமைதெரிவிக்கப்படுகிறது. (இங்கு பறவைகள் விஷயமாக சொன்னது சம்சாரிகளுக்குஒக்கும் என்று பெரியவாச்சான்பிள்ளைபணிப்பர் என்று ஸ்ரீ உ. வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணா சுவாமியின்உரைகளிலே கண்டு மகிழலாம்) இரவு பொழுதானதுகழிந்து, காலை பொழுது வந்தாயிற்று. கிழக்கு திசையிலேகடலினுடையஓசையானதுகலந்தது. தேனைப்பருகும் வண்டுகள் சப்தியாநிற்கும் பல வகையான பூக்களாலேதொடுக்கப்பட்டமாலைகளைதேவரீருடையதிருவடிகளிலேசமர்பிப்பதற்குதேவர்களும் வந்து நிற்கின்றனர். அதனாலேஇலங்கையர்கோன் என்ற விபீஷணன் வழிபாடு செய்த கோயிலிலேகண்வளர்ந்துஅருளுகிறசுவாமியே! பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.


  922.   
  இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ?*  இறையவர் பதினொரு விடையரும் இவரோ?* 
  மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ?*  மருதரும் வசுக்களும் வந்து வந்துஈண்டி'*
  புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் * குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்,*
  அருவரை அனைய நின் கோயில்முன் இவரோ?*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே. 

      விளக்கம்  


  • பன்னிரண்டு ஆதித்யர்களும், ஏகாதசருத்ரர்களும், தேவசேனாதிபதியானசுப்ரமணியனும், தேவதைகள் மற்றும் அஷ்டவசுக்கள் ஆகிய எல்லோரும் தேவரீர் பள்ளி உணர்ந்தருளும் சமயத்தில் முதல் கடாக்ஷம்தம்மதாக இருக்க, மலை போன்று திரண்டு நிற்கிறார்கள், எம்பெருமான் பள்ளிஎழுந்தருளாயே என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.


  923.   
  அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ?*  அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?* 
  இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ?*  எம்பெருமான் உன கோயிலின் வாசல்,*
  சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க*  இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,* 
  அந்தரம் பார்இடம் இல்லை மற்றுஇதுவோ?*  அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.   

      விளக்கம்  


  • அடியேனுக்குஸ்வாமியான தேவரீர் திருக்கோவிலின்வாயிலிலேதேவேந்திரனும், அவனுடைய வாகனமானஐராவதமும், தேவர்களும் அவர்களுடைய பரிவாரங்களும், மகரிஷிகளும், யக்ஷர்களும், மற்றும் கந்தர்வர்நெருக்கசாதரர்தள்ளவும், தேவரீருடையதிருவடிகளைசேவிக்க வந்து நிற்கின்றனர், அரங்கத்தம்மாபள்ளிஎழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.


  924.   
  வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க*  மாநிதி கபிலைஒண் கண்ணாடி முதலா,* 
  எம்பெருமான் படி மக்கலம் காண்டற்கு*  ஏற்பன ஆயின கொண்டுநன் முனிவர்,*
  தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?*  தோன்றினன் இரவியும் துலங்குஒளி பரப்பி,* 
  அம்பரதலத்தில் நின்று அகல்கின்றது இருள்போய்*  அரங்கத்து அம்மா பள்ளி! எழுந்து அருளாயே.

      விளக்கம்  


  • தேவரீருக்குசமர்பிப்பதற்காக சிறந்த மாநிதியான சங்கநிதி மற்றும் பத்மநிதிகளை கையிலே வைத்துக்கொண்டு தேவர்களும், காமதேனுவும், ஒளி பொருந்திய கண்ணாடி மற்றும் தேவரீருக்குகண்டருள்வதர்க்குஉகக்கும் அனைத்து உபகாரங்களையும் எடுத்துக் கொண்டுமகரிஷிகளும், நாரதரும் வந்து நின்றார்கள். கதிரவனும் தன்னுடைய தேஜஸ்சை எங்கும் பரவச் செய்து உதயமாக, இருளானதுஆகாசத்திலிருந்துநீங்கியது. அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாய் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் இந்த பாசுரத்தில்.


  925.   
  ஏதம்இல் தண்ணுமை எக்கம்மத் தளியே*  யாழ்குழல் முழவமோடு இசைதிசை கெழுமி,* 
  கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்*  கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம்,*
  மாதவர் வானவர் சாரணர் இயக்கர்*  சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,* 
  ஆதலில் அவர்க்கு நாள்ஓலக்கம் அருள*  அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.  

      விளக்கம்  


  • வாத்தியம், மத்தளம், வீணை, புல்லாங்குழல் ஆகியவற்றைக்கொண்டுதிக்குகள் எங்கும் இசை கூட்டி பாட்டு பாடக்கூடியவர்களானகின்னரர்களும், கருடர்களும், கந்தர்வர்களும், மகரிஷிகளும், தேவர்களும், யக்ஷர்களும் மற்றும் சித்தர்களும்தேவரீருடையதிருவடித்தாமரைகளைசேவிப்பதற்காகஇரவுப் பொழுது முழுவதும் மோஹித்துக்கிடந்தனர். அவர்களுக்கு பகல் ஓலக்கம் அருள எழுந்தருள வேணும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.


  926.   
  கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?*  கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?* 
  துடியிடையார் சுரி குழல் பிழிந்துஉதறித்*  துகில்உடுத்து ஏறினர் சூழ்புனல் அரங்கா,*
  தொடைஒத்த துளவமும் கூடையும் பொலிந்து*  தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி என்னும்- 
  அடியனை,*  அளியன் என்று அருளி உன் அடியார்க்கு-  ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்து அருளாயே!  (2)

      விளக்கம்  


  • திருக்காவேரியாலேசூழப்பட்டதிருவரங்கத்திலேகண்வளர்ந்துஅருளும்அரங்கனே! பரிமளம் மிக்க தாமரைப் பூக்கள் மலர்ந்துவிட்டன. தாமரையைமலரச் செய்யும் கதிரவனும்தோன்றிவிட்டான். மாதர்கள் தம் குழலைப் பிழிந்து உதறிவிட்டு அவரவர்களுடையஆடைகளை அணிந்து கொண்டுகரையேறிவிட்டார்கள். பூக்குடலையும்தோளுமாக வந்து நிற்கும் அடியனை(தாசனை) அங்கீகரித்தருளிஅத்தாணிச் சேவகம் பண்ணிக்கொண்டிருக்கும்பாகவதர்களின்திருவடிகளில் ஆளாக்க தேவரீர் எழுந்தருள வேணும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார். அடியேனதுசிற்றறிவுக்குஎட்டினஅளவிலேஎழுதியுள்ளேன். உரையில் குறை இருக்குமாயின்அடியேனைத்திருத்திப்பணிகொள்ளுமாறுபெரியோர்களைப்பிரார்த்திக்கிறேன்.


  928.   
  உவந்த உள்ளத்தனாய்*  உலகம் அளந்து அண்டம் உற,* 
  நிவந்த நீள்முடியன்*  அன்று நேர்ந்த நிசாசரரைக்,*
  கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்*  கடியார்பொழில் அரங்கத்து அம்மான் அரைச்* 
  சிவந்த ஆடையின் மேல்*  சென்றதுஆம் என சிந்தனையே (2)

      விளக்கம்  


  • சிறப்புப் பொருள்: எம்பெருமான் மீது ருசி கண்டமையைஉணர்த்தும் பாசுரம்: எம்பெருமான் த்ரிவிக்ரம அவதாரம் எடுத்த பொது அடியார் அடியாரல்லாதார் என்ற வேறுபாடு இன்றி எல்லோர்தலையிலும் தம் திருவடியை வைத்து அருளி, மூன்று உலகங்களையும் அளந்து, அண்டங்கள்அளவும் சென்று முட்டும்படியான பெரிய திருமுடியைஉடையவனாய், முன்னொரு காலத்தில் எதிர்த்து வந்த இராக்ஷஷர்களைக்கொன்ற கொடிய அம்புகளை உடைய இராமபிரானாய் மணம் வீசும் சோலைகளையுடையதிருவரங்கத்தில்எழுந்தருளி இருக்கும் எம்பெருமானின் இடுப்பில் சாற்றியதிவ்யபீதாம்பரத்தின் மேல் என்னுடைய நினைவானதுபதிந்தது.


  929.   
  மந்தி பாய்*  வட வேங்கட மாமலை,*   வானவர்கள்,- 
  சந்தி செய்ய நின்றான்*  அரங்கத்து அரவின் அணையான்,* 
  அந்தி போல் நிறத்து ஆடையும்*  அதன்மேல் அயனைப் படைத்ததுஓர் எழில்* 
  உந்தி மேலதுஅன்றோ*  அடியேன் உள்ளத்து இன்னுயிரே (2)

      விளக்கம்  


  • குரங்குகள் தாவும்திருவேங்கடமலைமேல், வானவர்கள் என்று சொல்லப்படும் நித்யசூரிகள்பூக்களைக்கொண்டுஆராதிக்கும்படிநிற்பவனாய், திருவரங்கத்திலே ஆதிசேஷன் எனும்போக்யமானதிருப்படுக்கையைஉடையவனான அழகிய மணவாளனின்செவ்வானம் போன்ற நிறத்தையுடைய பீதாம்பரம் மற்றும் பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகுடையதிருநாபிக் கமலம் ஆகியவற்றின் மீது என் ஆத்மாவானதுபடிந்தது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.


  930.   
  சதுரமா மதிள்சூழ்*  இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
  உதிர ஓட்டி,*  ஓர் வெங்கணை*  உய்த்தவன் ஓத வண்ணன்*
  மதுரமா வண்டு பாட*  மாமயில் ஆடுஅரங்கத்து அம்மான்,*  திருவயிற்று- 
  உதர பந்தம்*  என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.

      விளக்கம்  


  • நான்காம்பாசுரத்திலேஉதரபந்தனத்தைசேவிக்கிறார். நான்கு பக்கத்திலும்மதில்களால்சூழப்பட்டஇலங்கையின்தலைவனானஇராவணனின் பத்து தலைகளையும்அருந்துவிழச் செய்து, போரில் தோற்று ஓடச் செய்தவனும், வண்டுகள் இசைபாட, மயில்கள்ஆடும்படியதான அழகிய சோலையை உடைய அரங்கத்தம்மானாகியஇராமபிரானுடையஉதரபந்தனம்(யசோதையால் கட்டப்பட்ட கயிற்றின் அடையாளம்) என் நெஞ்சில் உலாவுகின்றது.


  931.   
  பாரமாய*  பழவினை பற்றுஅறுத்து,*  என்னைத்தன்-
  வாரம்ஆக்கி வைத்தான்*  வைத்ததுஅன்றி என்உள் புகுந்தான்,*
  கோர மாதவம் செய்தனன் கொல்  அறியேன்*  அரங்கத்து அம்மான்,*  திரு-
  வார மார்பத‌ன்றோ*  அடியேனை ஆட்கொண்டதே*

      விளக்கம்  


  • இந்த பாசுரத்திலேதிருமார்பின்அழகைக் கண்டு ஆனந்திக்கிறார். அவனுடைய திருமார்பானதுஆழ்வாரை எப்படி ஆட்படுத்திக் கொண்டது என்பதை உணர்த்தும்பாசுரமாக அமைந்த பாசுரம் ஆகும். “என்னுடைய பழைய வினைகளை எல்லாம் ஒரு நொடிப்பொழுதில்தொலைத்ததோடு மட்டும் அல்லாமல் என்னை அவனுக்கு ஆட்படுத்தியும், என்னுள் புகுந்து தங்கியும் விட்டான் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்”.


  932.   
  துண்ட வெண்பிறையன்*  துயர் தீர்த்தவன்*  அஞ்சிறைய-
  வண்டுவாழ் பொழில்சூழ்*  அரங்கநகர் மேய அப்பன்*
  அண்டர் அண்ட‌ பகிரண்டத்து*  ஒரு மாநிலம் எழுமால்வரை,*  முற்றும்-
  உண்ட கண்டம் கண்டீர்*  அடியேனை உய்யக் கொண்டதே.

      விளக்கம்  


  • ஆறாம்பாசுரத்திலே கண்டம் என்று சொல்லக்கூடியதிருக்கழுத்துப் பகுதியை அனுபவிக்கிறார். வெண்பிறையன் துயர் தீர்த்த, வண்டுவாழ்சோலைகளால்சூழப்பட்டதிருவரங்கத்திலேஎழுந்தருளி இருக்கும் திருவரங்கனாதனின்கழுத்தானது ஏழு உலகங்களையும்பிரளயகாலத்திலே அடக்கிக் கொண்டது. அந்த கண்டமானதுதனக்கும் உய்வு உபாயமாக இருந்தது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.


  933.   
  கையினார்*  சுரி சங்கனல் ஆழியர்,*  நீள்வரை போல்-
  மெய்யனார்*  துளப விரையார் கமழ் நீள் முடியெம்.
  ஐயனார்,*  அணிஅரங்கனார்*  அரவின் அணைமிசை மேய மாயனார்,*
  செய்ய வாய் ஐயோ!*  என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!

      விளக்கம்  


  • திருக்கையில் சங்கு சக்கரங்களை ஏந்தியவராய், பெரிய மலை போன்ற திருமேனியைஉடையவராய், துளசி மணம் கமழும்நீள்முடிஉடையவராய், எமக்குத்தலைவராய், அணியரங்கனாய்அரவில்பள்ளிகொண்டிருக்கும்எம்பெருமானுடையதிருவாயானது தம் நெஞ்சை கொள்ளை கொண்டது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.


  934.   
  பரியனாகி வந்த*  அவுணன் உடல்கீண்ட,*  அமரர்க்கு-
  அரிய ஆதிபிரான்*  அரங்கத்து அமலன் முகத்து,*
  கரியவாகிப் புடைபரந்து*  மிளிர்ந்து செவ்வரிஓடி*  நீண்டவப்‍- 
  பெரிய வாய கண்கள்*  என்னைப் பேதைமை செய்தனவே!

      விளக்கம்  


  • கொடிய அசுரனைசம்ஹரித்தவனும், அமரருக்கும்அறியமுடியாதஆதிப்பிரானானஅரங்கநாதஎம்பெருமானுடையதிருக்கண்கள் கருத்த நிறமாகவும், விசாலமாகவும், ஒளி பெற்று சிவந்து நீண்டதாகவும் இருக்கும். அத்திருக்கண்கள் ஆனது தம்மை பேதைமை செய்தது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.


  935.   
  ஆலமா மரத்தின் இலைமேல்*  ஒரு பாலகனாய்,*
  ஞாலம் ஏழும் உண்டான்*  அரங்கத்து அரவின் அணையான்,*
  கோல மாமணி  ஆரமும்*  முத்துத் தாமமும் முடிவில்ல  தோரெழில்*
  நீல மேனி ஐயோ!*  நிறை  கொண்டது என் நெஞ்சினையே! (2)

      விளக்கம்  


  • பிரளய காலத்தில் ஏழு உலகங்களையும்உண்டவனும், பிரளய காலத்தில் நீரில் ஆலிலையில் துயில் கொண்டவனும், திருவரங்கத்திலேதிருவனந்தாழ்வான் மேல் சயனித்து இருப்பவனும், கௌஸ்துப மணியை அணிந்தவனுமான இந்த எம்பெருமானின் திருமேனி அழகு என் நெஞ்சினை நிறை கொண்டது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார். அதை (எம்பெருமானின்அழகினை) வெளிக்கொணரவே“ஐயோ” என்று சொல்லும் அளவிற்கு அழகானது என்கிறார்.


  936.   
  கொண்டல் வ‌ண்ணனைக்*  கோவலனாய் வெண்ணெய்-
  உண்ட வாயன்*  என்உள்ளம் கவர்ந்தானை,*
  அண்டர் கோன் அணி  அரங்கன்*  என் அமுதினைக்-
  கண்ட கண்கள்*  மற்றுஒன்றினைக்*  காணாவே. (2)

      விளக்கம்  


  • அப்படிப்பட்ட அழகுடையவன், கண்ணனாக அவதரித்து, ஆய்ச்சியர்கள் வைத்திருந்த வெண்ணையைத்திருடியுண்டவனும், என் உள்ளத்தைக்கொள்ளைக்கொண்டவனும், வானவர்க்குத்தலைவனும், அரங்க நகருக்கு அதிபதியானதிருவரங்கனின்திருமேனியைக் கண்ட என் கண்களானது இனி மற்றொன்றையும்காணாது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.


  1378.   
  உந்திமேல் நான்முகனைப் படைத்தான்*  உலகு உண்டவன்
  எந்தை பெம்மான்*  இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்*
  சந்தினோடு மணியும் கொழிக்கும்*  புனல் காவிரி* 
  அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்*  தென் அரங்கமே.          

      விளக்கம்  


  • அந்திபோலும் நிறத்தார் வயல் = அந்தி யென்றது ஸாயம் ஸந்தியாகாலத்தை: அது இருள்மூடிக் கறுத்துத் தோற்றுமாதலால் “கருநெல்சூழ் கண்ணமங்கை” என்னுமாபோலே கருவடைந்த பயிர்களாலே வயல்கள் கறுத்துத் தோன்றுகின்றனவாம். இனி, ஸாயம் ஸந்தியாகாலத்தைச் செந்நிறமாக வருணிப்பர்களாதலால் அதற்குச் சேரப்பொருள் கொள்ள வேண்டில் ‘நுனிநெல் பழுத்த வயலாலே சூழப்பட்ட’ என்றுரைத்துக்கொள்க.


  1379.   
  வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன்*  மணி நீள் முடி* 
  பைகொள் நாகத்து அணையான்*  பயிலும் இடம் என்பரால்*
  தையல் நல்லார் குழல் மாலையும்*  மற்று அவர் தட முலைச்*
  செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்*  தென் அரங்கமே.

      விளக்கம்    1380.   
  பண்டு இவ் வையம் அளப்பான் சென்று*  மாவலி கையில் நீர 
  கொண்ட*  ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்* 
  வண்டு பாடும் மது வார் புனல்*  வந்து இழி காவிரி* 
  அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.    

      விளக்கம்  


  • திருக்காவிரித் தீர்த்தம் மதுவோடுகூடிப் பெருகும்; மதுவில் நசையாலே வண்டுகள் வந்து மொய்க்கும்: 1. “ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிகந்து, ஊக்கமேமிகுந்து உள் தெளிவின்றியே, தேக்கெறிந்து வருதலிற்றீம்புனல், வாக்கு தேனுகர் மாக்களை மானுமே” என்றது காண்க


  1381.   
  விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன்*  நகர் பாழ்பட* 
  வளைத்த வல் வில் தடக்கை அவனுக்கு*  இடம் என்பரால்* 
  துளைக் கை யானை மருப்பும் அகிலும்*  கொணர்ந்து உந்தி* முன்
  திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.        

      விளக்கம்    1382.   
  வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன்*  வான் புக* 
  அம்பு தன்னால் முனிந்த*  அழகன் இடம் என்பரால்* 
  உம்பர் கோனும் உலகு ஏழும்*  வந்து ஈண்டி வணங்கும்* நல 
  செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.

      விளக்கம்    1383.   
  கலை உடுத்த அகல் அல்குல்*  வன் பேய் மகள் தாய் என* 
  முலை கொடுத்தாள் உயிர் உண்டவன்*  வாழ் இடம் என்பரால்*
  குலை எடுத்த கதலிப்*  பொழிலூடும் வந்து உந்தி*  முன்
  அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்*  தென் அரங்கமே.     

      விளக்கம்    1384.   
  கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும்*  சகடமும் காலினால்*
  துஞ்ச வென்ற சுடர் ஆழியான்*  வாழ் இடம் என்பரால்* 
  மஞ்சு சேர் மாளிகை*  நீடு அகில் புகையும் மா மறையோர்*
  செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்*  தென் அரங்கமே        

      விளக்கம்    1385.   
  ஏனம் மீன் ஆமையோடு*  அரியும் சிறு குறளும் ஆய* 
  தானும்ஆய*  தரணித் தலைவன் இடம் என்பரால்*
  வானும் மண்ணும் நிறையப்*  புகுந்து ஈண்டி வணங்கும்*  நல் 
  தேனும் பாலும் கலந்தன்னவர்*  சேர் தென் அரங்கமே

      விளக்கம்  


  • இரண்டாமடியில், “தானுமாய” என்றது ஸ்ரீராமாவதாரத்தை யுட்கொண்டதேயாம். மேலே எட்டாம்பத்தில் தசாவதாரங்களையும் சேர்த்துச் சொல்லுகிற பாசுரத்தில் “மீனோடா மை கேழலாரி குறளாய் முன்னுமிராமனாய்த் தானாய்ப், பின்னுமிராமனாய்த் தாமோதரனாய்க் கறிகியுமானான்றன்னை” என்றதில் ஸ்ரீராமனைச் சொல்லவேண்டு மிடத்துத் ‘தானாய்’ என்றதும் குறிக்கொள்ளத்தக்கது. தேனும் பாலுங் கலந்தன்னவர் = தேனம் தேனும் கலந்தார்போலும் பாலும் பாலும் கலந்தாற்போலும் வேற்றுமையின்றியே ஏகரஸமாகக் கலந்திருக்கின்ற பரமரஸிகர்கள் என்றவாறு. ‘கலந்தாலன்னவர்’ என்பது ‘கலந்தன்னவர்’ எனத்தொக்கது. இவ்விடத்து வியாக்கியானத்திலே பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்வது காண்மின் :- “நித்யஸூரிகள் ஸம்ஸாரிகள் என்கிற வாசி தெரியாதே ஒரு நீராய்ப் பரிமாற நிற்பர்கள். தேசாந்தரங்களில் முன்பு கண்டறியாதார் வந்து போகப்புக்கால் ‘பிரிந்துபோகா நின்றோமே!’ என்று கண்ணுங் கண்ணீருமாயிறே யிருப்பது.” என்று.


  1386.   
  சேயன் என்றும் மிகப் பெரியன்*  நுண் நேர்மையன் ஆய*  இம்
  மாயை ஆரும் அறியா*  வகையான் இடம் என்பரால்*
  வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து*  ஆர் புனல் காவிர* 
  ஆய பொன் மா மதிள் சூழ்ந்து*  அழகு ஆர் தென் அரங்கமே.  

      விளக்கம்  


  • சேயனென்று ஆய இம்மாயை ஆருமறியாவகையான், - மிகப் பெரியனென்னு ஆய இம்மாயை ஆருமறியாவகையான். – நுண்ணேர்மையன் என்று ஆய இம்மாயை ஆருமறியாவகையான் - என்று இங்ஙனே கூட்டி மூன்றுவாக்கியமாக அநுஸந்தித்தால் பொருள் நன்கு விறங்கும். சேயன் என்றால் தூரத்திலிருப்பவன் என்று பொருள்; பரமபதத்தில் வீற்றிருக்கு மிருப்பைச் சொல்லுகிறது. இவ்விருப்பின் ஆச்சரியத்தை யாரும் அறிய முடியாமை சொன்னபடி. மிகப்பெரியன் என்றது – “தோள்களாயிரத்தாய் முடிகாளயிரத்தாய் துணைமலர்க்கண்களாயிரத்தாய், தாள்களாயிரத்தாய்” என்று சொல்லப்பட்ட விராட் ஸ்வரூபநிலைமையைச் சொன்னபடி இவவாச்சரியமம் ஒருவராலும் அறியமுடியாதபடி உள்ளவன் என்கை.


  1387.   
  அல்லி மாதர் அமரும்*  திரு மார்வன் அரங்கத்தைக்*
  கல்லின் மன்னு மதிள்*  மங்கையர்-கோன் கலிகன்றி சொல்* 
  நல்லிசை மாலைகள்*  நால் இரண்டும் இரண்டும் உடன்*
  வல்லவர் தாம் உலகு ஆண்டு*  பின் வான் உலகு ஆள்வரே.

      விளக்கம்    1388.   
  வெருவாதாள் வாய்வெருவி*  வேங்கடமே! வேங்கடமே!' என்கின்றாளால்* 
  மருவாளால் என் குடங்கால்*  வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்*  வண்டு ஆர் கொண்டல்-
  உருவாளன் வானவர்தம் உயிராளன்*  ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட- 
  திருவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!

      விளக்கம்  


  • இப்போது அழகிய மணவாளன் விஷயமாக ப்ராவண்யம் செல்லாநிற்க, திருவேங்கடமலையின் ப்ரஸ்தாவத்துக்குக் காரணமில்லையே; “வேங்கடமே வேங்கடமே யென்கின்றாளால”; என்றன்றோ மூலமிருக்கிறது; இது திருவரங்கப் பதிகமேயன்றித் திருவேங்கடப்பதிகமன்றே; அப்படியிருக்க, “வேங்கடமே வேங்கடமே” யென்கைக்கு நிதானமேது? என்று சங்கை பிறக்கக்கூடும்; கேண்மின்:- மேலுலகத்திலுள்ள ஸ்ரீவைகுண்ட திவய்நகரமே இம்மண்ணுலகில் திருவரங்கமாகவும், அவ்விடத்துள்ள விரஜாநதியே திருக்காவேரியாகவும், பரவாஸுதேவனே ஸ்ரீரங்கநாதனாகவும் அவதரித்ததாக மஹாரிஷிகளும் நம் பூருவர்களும் சொல்லுவர்கள்; பரமபதநாதன் திருவரங்கத்திலே வந்து புகுவதற்காக அங்கு நின்றும் பயணமெடுத்துவிட்டு எழுந்தருளுமடைவிலே திருவேங்கடமலையிலே சிறிது இளைப்பாற நின்று, பின்பு திருவரங்கத்திலே வந்து சாய்ந்திருளினதாக நிர்வஹிப்பதொரு புடையுண்டு: திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் திவ்ய ப்ரபந்தத்தில் முதற் பாட்டில் “விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்” என்றார்


  1389.   
  கலை ஆளா அகல் அல்குல்*  கன வளையும் கை ஆளாஎன் செய்கேன் நான்* 
  விலை ஆளா அடியேனை வேண்டுதியோ? வேண்டாயோ?' என்னும்*  மெய்ய
  மலையாளன் வானவர்தம் தலையாளன்*  மராமரம் ஏழ்எய்த வென்றிச் 
  சிலையாளன்*  என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சிந்திக்கேனே!

      விளக்கம்  


  • உலகத்திலே ஸாமாந்யனான ஒரு க்ஷுத்ரபுருஷனிடத்தில் காதல் கொண்ட மாதர் அவனுடைய விரஹத்தினால் மேனிமெலிந்து வருந்துவதாகக் காணும்போது ஸாக்ஷாத் புருஷோத்தமனிடத்தில் பெரும் பித்துக்கொண்ட பேரன்பர்க்கு அந்த எம்பெருமானுடைய விரஹத்தில் சரீரம் க்ரசமாயொழியக் கேட்கவேணுமோ? அப்படி சரீரம் மெலிந்தமை கூறுவது முதலடி. உடல் மெலிந்துபோகவே அரையில் வஸ்த்ரமும் கையில்வளைகளும் தங்கமாட்டாமல் கழன்றொழியும் ஆதலால் அதனைச்சொன்ன முகத்தால் மேனிமெலிவு சொல்லிற்றாயிற்று. ஒருபேச்சுப் பேசவும் சக்தியில்லாதபடி மேனி மெலிந்திருக்கச் செய்தேயும் இவளுடைய வாய்ப்பேச்சின் வீறு இருக்கும்படி காண்மின் - ‘விலையாளாவடியேனை வேண்டுதியோ வேண்டாயோ?’ என்கிறாள் எம்பெருமானை முன்னிலைப்படுத்தி. அதாவது –‘என்னை உனக்கே அற்றுத்தீர்த்த அடியவளாக ஆக்கிக்கொள்ள எண்ணமுண்டா இல்லையா? சொல்லிவிடு’ என்று துணிவாகக் கேட்கிறாள்.


  1390.   
  மான் ஆய மென் நோக்கி*  வாள்நெடுங்கண்நீர்மல்கும் வளையும்சோரும்* 
  தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்*  திறம் பேசி உறங்காள் காண்மின்*
  கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக*  நந்தன் பெற்ற 
  ஆன் ஆயன் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!

      விளக்கம்  


  • இப் பெண்பிள்ளையின் கண்ணழகை நான் என்சொல்வேன்!; இக்கண்ணழகிலே யீடுபட்டு அப்பெருமான் ஊணுமுறக்கமும் இல்லாமல் வருந்த வேண்டியிருக்க, அவன் திறத்திலீடுபட்டு இவள் வருந்துகிறாளே, திருமலையருவிபோலே கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகுகின்றமை காண்மின்; கைவளைகள் கழன்றொழிவது காண்மின்; ‘பெண்ணே! படுக்கையிற் கடந்து உறங்கு; உறங்கினாயாகில் கண்ணீர்ப் பெருக்கு மாறும்; என்று நான் சொன்னாலும், என்பேச்சைச் சிறிதும் செவியேற்காது “எம்பெருமான் அணிந்துள்ள திருத்துழாயின் தேன்வெள்ளத்தை என்சொல்வேன்! அதன் செவ்வியை என்சொல்வேன்! அதன் தொடையழகை என்சொல்வேன்! அதன் குளிர்த்தியை என்சொல்வேன்! அதன் பரிமளத்தை என்சொல்வேன்!” என்றிப்படி அவனது திருத்துழாயின் திறங்களை வாய்வெருவிக் கொண்டிருக்கின்றாளே யன்றிச் சிறிதும் கண்ணுறங்கப் பெறுகின்றிலன். இவளை இப்பாடுபடுத்தினவன் கோபாலகிருஷ்ண னென்கிறாள் பின்னடிகளில்.


  1391.   
  தாய் வாயில் சொல் கேளாள்*  தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே
  ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
  பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன்*  பேசில் நங்காய்* 
  மா மாயன் என் மகளைச் செய்தனகள்*  மங்கைமீர்! மதிக்கிலேனே!

      விளக்கம்  


  • நேற்றுவரையில் இவளுடைய போதுபோக்கு ஒருவகையாயிருந்தது; இன்று வேறுபட்டுவிட்டது. என் வார்த்தையில் இவள் வைத்திருந்த மதிப்பு சொல்லிமுடியாது; நான் காலாலே ஏவினதைத் தலையாலே செய்து தீரும்படி அவ்வளவு கௌரவம் என் பேச்சில் வஹித்திருந்த விவள் இன்று என் வார்த்தையைச் செவி தாழ்த்துக் கேட்பதுஞ் செய்கின்றிலள். என்னிலும் மிக்க அன்பு பாராட்டி யிருந்தாள் தோழிமார் பக்கல்; அவர்களைவிட்டு ஒரு நொடிப்பொழுதும் பிரியாதிருந்த விவளக்கு இப்போது ‘தோழிமார்’ என்றால் விஷமாயிராநின்றதே. ஆகவே, தோழிமாரைக்கொண்டு இவளைத்திருத்திக் கொள்வோம் என்று நினைக்கவும் அவகாசமில்லையாயிற்று. ஆயம் - தோழியர்.


  1392.   
  பூண் முலைமேல் சாந்து அணியாள்*  பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள* 
  ஏண் அறியாள் எத்தனையும்*  எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
  நாள் மலராள் நாயகன் ஆய்*  நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி*
  ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!

      விளக்கம்  


  • சிறுமிகட்கு லக்ஷணமாக முலைத்தடத்தில் சந்தனமணிந்து கொள்வதும் கண்களில் மையிட்டுக்கொள்வதும் விளையாட்டுக் கருவிகளினால் போதுபோக்குவதும் என் மகட்கு மாறிவிட்டது. எம்பெருமான் விரும்பிவந்து அணையப்பெறாத இம்முலைகட்கு அலங்காரம் வேணுமோ? என்று வெறுப்புற்றுப் பூண்முலைமேல் சாந்தணியாள். அல்லும் பகலும் அழுதுகொண்டே போதுபோக்கும்படியாக, நம்மை எம்பெருமான் செய்துவிட்டனனாதலால், அழுங்கண்களுக்கு அஞ்சனமில்லாமை ஒரு குறையோவென்று மனம் நொந்து பொருகயற்கண்மை யெழுதாள். பூவைபேணாள் = பூவையென்று – கிளி, குயில், நாகணவாயப்புள் - இவற்றுக்கும் பெயர். சிறுமியர் லீலார்த்தமாகச் சில பறவைகளை வளர்த்துப் போதுபோக்குவதண்டு. நேற்றுவரையில் இப்பரகாலநாயகியும் அங்ஙனமே போதுபோக்கா நின்றிருந்தவள் இன்று அதனருகுஞ் செல்கின்றிலள். விஷத்தைப் பார்ப்பதுபோல் அதனைப் பார்க்கிறாள். எத்தனையும் ஏணறியாள் - இந்த லோகத்தைப் பற்றின சிந்தையே இவளுக்கில்லை என்றபடி. ஏண் - எண்ணுதல்; முதனிலை திரிந்த தொழிற்பெயர். ‘எம்பெருமான் திருவரங்கமெங்கே?’ என்கிற வார்த்தையொன்றே தொடர்ந்து வருகின்றது.


  1393.   
  'தாது ஆடு வன மாலை தாரானோ?' என்று என்றே தளர்ந்தாள் காண்மின்* 
  யாதானும் ஒன்று உரைக்கில்*  எம் பெருமான் திருவரங்கம்' என்னும்*  பூமேல்-
  மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்*  மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற- 
  தூதாளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் சொல்லுகேனே? 

      விளக்கம்  


  • என் மகள் ஓச்சலொழிவின்றியே கலகலவென்று எதையேனும் பேசிக்கொண்டிருப்பாளே; அப்படிப்பட்ட இவளுடைய பேச்செல்லாம் ஓய்ந்துவிட்டது; 1. “அவன் மார்வணிந்த வனமாலை வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே” என்றார்போலே அவ்வளவு வார்த்தையும் செல்லமாட்டாதாளாய் ‘வனமாலை தாரானோ?’ என்கிற இவ்வளவு வார்த்தையே சொல்லிக்கொண்டு தளர்கின்றாள். ‘நங்காய்! இப்படிப்பட்ட தளர்ச்சி உனக்குத் தகார்’ என்று ஹிதமாக நாம் ஏதாவது சொல்லத்தொடங்கினால் நம் வார்த்தை காதில் விழவொண்ணாதபடி காதை மூடிக்கொண்டு ‘திருவரங்கம், பெரிய கோயில்’ என்று கம்பீரமாக மிடற்றோசை செய்கின்றாள்.


  1394.   
  வார் ஆளும் இளங் கொங்கை*  வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்*  எண்ணில் 
  பேராளன் பேர் அல்லால் பேசாள்*  இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான்*
  தாராளன் தண் குடந்தை நகர் ஆளன்*  ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த- 
  தேராளன் என் மகளைச் செய்தனகள்*  எங்ஙனம் நான் செப்புகேனே? 

      விளக்கம்  


  • இப்பெண் பெற்றேன் என்செய்கேன் நான் = இதற்கு இரண்டுவகைப் பொருள்: இப்படி என் வார்த்தை கேளாத அடங்காப்பெண்ணைப் பெற்றேனே! இவளை இழந்தேனே! ஆநியாயமாய்க் கெட்டேனே! என்னசெய்வேன் - என்று வருந்திச் சொல்வதாகப் பிறர் நினைக்கவேணும்; தனக்குள்ளே பெருமகிழ்ச்சி; என்னைப்போலே பெண் பெற்றாருண்டோ? இத்தனை சிறு பிராயத்திலே பகவத் விஷயத்தில் ஆழங்காற்படும்படியான பாக்கியம் வாய்ந்த பெண்ணைப் பெற்ற நான் என்ன நோன்பு நோற்றேனோ? என்னும் மகிழ்ச்சியும் தொனிக்கும். (தாராளனித்யாதி.) ‘எல்லாரையும் ரக்ஷரிப்பவன் நான்’ என்று தனிமாலையிட்டிருப்பவன் என் மகளை இப்படி அழிக்கின்றானே; திருக்குடந்தையிலே சாய்ந்தருளி லோகரக்ஷணம் பண்ணுகிறவன் இவளை இப்படி அழிக்கிறானே; ‘பார்த்தஸாரதி’ என்று பேர்பெற்று அன்பர்க்குக் காரியஞ்செய்தவன் இவளுக்குக் காரியஞ் செய்யாதொழிகிறானே யென்கை.


  1395.   
  உறவு ஆதும் இலள் என்று என்று*  ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால* 
  மறவாதே எப்பொழுதும்*  மாயவனே! மாதவனே!' என்கின்றாளால்*
  பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன்*  விண்ணோர்தங்கள 
  அறவாளன்*  என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!   

      விளக்கம்  


  • ‘தாய் என்றும் தந்தையென்றும் பல உறவுமுறையா இருக்கும்போது அவர்களையெல்லாம் த்ருணமாக நினைத்துத் தள்ளிவிட்டுத் “தெளிவிலாக்கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும், ஒளியுளார்தாமேயன்றே தந்தையும் தாயுமாவார்” என்று ஒரு 1. பரபுருஷனையே ஸகலவித பந்துவுமாக்க கொண்டுவிட்டாளே இச்சிறுமி’ என்று நாட்டார் பழிதூற்றும் படியாயிற்று – என்று தாய் சொல்லும் இப்பேச்சில் வெறுப்பும் உவப்பும் விளங்கும். ‘என் மகள் அலர் தூற்றலுக்கு ஆளாய்விட்டாளே?, நற்குடிக்குப் பெரும்பழி விளைந்திட்டதே!’ என்று வருந்திச் சொல்லுவதாக நாட்டார்க்குப் பொருள்படும். ஆபாஸ பந்துக்களை யெல்லாம் விட்டிட்டு “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத் தாய்தந்தையும் அவரே யினியாவாரே” என்று ஆப்தபந்துவாகச் சொல்லப்பட்ட ஸ்ரீமந் நாராயணனையே இங்கொழிக்க வொழியாத உறவாகக் கொண்டாளே! என்கிற உவப்பு உள்ளுறையும்.


  1396.   
  பந்தோடு கழல் மருவாள்*  பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்* 
  வந்தானோ திருவரங்கன்*  வாரானோ?' என்று என்றே வளையும் சோரும்*
  சந்தோகன் பௌழியன்* ஐந்தழல்ஓம்பு தைத்திரியன் சாமவேதி* 
  அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்*  அம்மனைமீர்! அறிகிலேனே!

      விளக்கம்  


  • பந்தும் கழலும் சிறு பெண்களுக்கு விளையாட்டுக் கருவிகளாயிருப்பன; உறங்கும் போதும் அவற்றைக் கைவிடாதே விரல்களில் இடுக்கிக்கொண்டே உறங்குவது வழக்கம்; நேற்றுவரையில் இவளும் அப்படியேயிருந்தவள் இன்று அவற்றைக் கண்ணெடுத்துப் பார்ப்பதும் தவிர்ந்தாள். எது தவிர்ந்தாலும் தான் வளர்க்கும் கிளிக்குப் பாலூட்டுவது தவிராதிருந்தவள் அக்காரியத்தை அடியோடே மறந்தாள்; கிளிக்குப் பாலூட்டுவது எப்போதோ வொருகாலாசையாலே அதுபோலல்லாமல் ஸர்வகாலமும் பேணிக்கொண்டிருப்பதற்குறுப்பான பாவையுண்டு – பதுமை, அதனைக் கண்ணெடுத்துப் பார்ப்பதும் செய்கின்றிலள். பின்னை இவள் செய்வது என்னென்னில்; ஸர்வகாலமும் திருவரங்கனையே சிந்தைசெய்து கொண்டிருக்கையாலே அந்தப்பாவனை முற்றி அவன் அருகே வந்தானாக நினைத்து ‘வந்தானோ திருவரங்கன்’ என்பது, அவனோடே தழுவி முழுசிப்பரிமாற நினைத்துக்கையை நீட்டினவாறே அவனைக் காணாமையாலே ‘ஓ! நான் பிரமித்தேன் போலும், அவனேது வருகிறதேது? வாரானோ’ என்பதாய் மேனி மெலிந்து வளைகழலப் பெறுகின்றாள். ஸகல வேதப்ரதிபாத்யனாயிருக்குமவன் என் மகளை இப்பாடு படுத்தினான் காண்மின் - என்றாளாயிற்று.


  1397.   
  சேல் உகளும் வயல் புடை சூழ்*  திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த* 
  நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்*  தாய் மொழிந்த அதனை* நேரார்
  காலவேல் பரகாலன்*  கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்* 
  மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்*  பொன்உலகில் வாழ்வர்தாமே.

      விளக்கம்    1400.   
  ஏன் ஆகி உலகு இடந்து*  அன்று இரு நிலனும் பெரு விசும்பும* 
  தான் ஆய பெருமானை*  தன் அடியார் மனத்து என்றும்* 
  தேன் ஆகி அமுது ஆகித்*  திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால்* 
  ஆன்-ஆயன் ஆனானைக்*  கண்டது தென் அரங்கத்தே.      

      விளக்கம்  


  • பூமியை ஹிரண்யாக்ஷனென்னு மசுரன் பாயாகச் சுருட்டிக் கவர்ந்துபோனதும் ஒன்றுண்டு; பிரளய வெள்ளம் கொள்ளை கொண்டுபோனதும் ஒன்றுண்டு, பிந்திய வரலாறே பெரும்பாலும் ஆழ்வார்கள் அநுஸந்திப்பதாம். மேல் எட்டாம் பத்தில் “பாராரளவும் முது முந்நீர்ப்பரந்த காலம் வளைமருப்பில், ஏராரூருவத்தேன மாயெடுத்த வாற்றலம்மானை” (8-8-3). என்ற பாசுரத்தினால் இது விளங்கும்.


  1401.   
  வளர்ந்தவனைத் தடங் கடலுள்*  வலி உருவில் திரி சகடம்* 
  தளர்ந்து உதிர உதைத்தவனை*  தரியாது அன்று இரணியனைப்- 
  பிளந்தவனை*  பெரு நிலம் ஈர் அடி நீட்டிப்*  பண்டு ஒருநாள் 
  அளந்தவனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.  

      விளக்கம்  


  • இரண்டாமடியில் ‘உதிர’ என்றும் ‘அதிர’ என்றும் பாடபேதமுண்டு; அதிர – அதிர்ச்சியுண்டாம்படி. தரியாது – தன்விஷயத்திலே எத்தனை தீங்குசெய்தாலும் தரித்திருப்பன் எம்பெருமான்; தனது உயிர்நிலையான அடியவர் திறத்தில் தீங்கு செய்தால் ஒருநொடிப்பொழுதும் தரித்திருக்கமாட்டானென்க.


  1402.   
  நீர் அழல் ஆய்*  நெடு நிலன் ஆய் நின்றானை*  அன்று அரக்கன் 
  ஊர் அழலால் உண்டானை*  கண்டார் பின் காணாமே*
  பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய்*  பின் மறையோர் மந்திரத்தின்* 
  ஆர் அழலால் உண்டானைக்*  கண்டது தென் அரங்கத்தே.        

      விளக்கம்  


  • நீர் அழல் நிலன் என்று மூன்று பூதங்களைச் சொன்னது – காற்று, விசும்பு என்னும் மற்ற இரண்டு பூதங்களுக்கும் உபலக்ஷணமாகும். பஞ்ச பூதங்களுக்கும் நியாமகன் என்றவாறு. ஸகலசேதநா சேதநங்களையும் எம்பெருமான் சரீரமாகக் கொண்டவனாதலால் இங்ஙனே சொல்லக் குறையில்லையென்க. கண்டார் பின் காணாமே அரக்கனூர் அழலாலுண்டானை – “மன்னு தண்பொழிலும் வாவியும் மதிளும் மாடமாளிகையும் மண்டபமும்” என்று திவ்ய தேசங்களை வருணிப்பதுபோலவே இலங்கையின் ஸந்நிவேசமும் இருந்தது; அப்படிப்பட்ட செல்வமெல்லாம் ஒருநொடிப் பொழுதில் நீறாகி யொழியும்படி தீக்கு இரையாக்கினவனென்கை. பேரழலாய் - கடலில் உறைகின்ற பாடபாக்நி ஸ்வரூபியாயிருப்பவனென்கை. அன்றியே, பகவத்கீதையில் (15-14) சொல்லுகிறபடியே கடித்தும் உறிஞ்சியும் குடித்தும் நக்கியும் நம்மால் உட்கொள்ளப்படுகிற அன்னங்களைப் பசநம் செய்வதற்காக உள்ளே உறைகின்ற ஜாடராக்கியும் எம்பெருமானேயென்று கூறப்படுதலால் அதனைச் சொல்லிற்றாகவுமாம்.


  1403.   
  தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார்*  தவ நெறியை*  தரியாது 
  கஞ் சனைக் கொன்று*  அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை* 
  வெம் சினத்த கொடுந் தொழிலோன்*  விசை உருவை அசைவித்த* 
  அம் சிறைப் புள் பாகனை*  யான் கண்டது தென் அரங்கத்தே.  

      விளக்கம்  


  • வெஞ்சினத்த கொடுந்தொழிலோன் விசையுருவை யரைவித்த அஞ்சிறைப் புடபாகனை = ருத்ரன் ஸம்ஹாரத்தொழிற் கடவுளாதலால் “வெஞ்சினத்த கொடுந்தொழிலோன்” என்று அவனைச் சொல்லுகிறது; பாணாஸுர யுத்தத்தில் அவன் பட்டபாடு இங்கு அநுஸந்திக்கத்தக்கது. (ஸ்ரீவிஷ்ணுபுராண ஐந்தாவது அம்சம் முப்பத்துமூன்றாம் அத்யாயம் நோக்குக.) இங்கு “வெஞ்சினத்த கொடுந்தொழிலோன்” என்று (பெயரொன்றும் இன்றியே) பொதுப்படையாயிருத்தலால் பாணாஸுரனென்றும் பொருள் கொள்ளலாமென்பர்


  1404.   
  சிந்தனையை தவநெறியை*  திருமாலை*  பிரியாது- 
  வந்து எனது மனத்து இருந்த*  வடமலையை வரி வண்டு ஆர்-
  கொந்து அணைந்த பொழில் கோவல்*  உலகு அளப்பான் அடி நிமிர்த்த-
  அந்தணனை*  யான் கண்டது*  அணி நீர்த் தென் அரங்கத்தே.        

      விளக்கம்  


  • சிந்தனையை = “ஒழிவில்காலமெல்லா முடனாய்மன்னி வழுவிலா வடிமை செய்ய வேண்டுநாம்” என்றாற்போலே உண்டாகிற கைங்கரிய மனோரதங்களுக்கு இலக்கானவன் எம்பெருமானிறே. தவநெறியை = மநோரதித்தபடியே கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெறுவிக்கும் உபாயபூதனும்தானே என்கை. கஜேந்திராழ்வான் கமலபுஸ்பார்ச்சகையாகிற கைங்கரியத்தைப் பண்ணப் பாரித்தும் அவனுடைய முயற்சி பயன்படவில்லையே; எம்பெருமானேயன்றோ பிரதிபந்தகநிவ்ருத்தியைச்செய்து கைங்கரியத்தை நிறைவேற்றுவித்துக்கொண்டான். ஆகையாலே உபாயமும் அவனே யென்கிறது. அந்தணன் - அழகிய தண்மை பொருந்தியவன்; பரமதயாளு என்றபடி…


  1405.   
  துவரித்த உடையவர்க்கும்*  தூய்மை இல்லாச் சமணர்க்கும்* 
  அவர்கட்கு அங்கு அருள் இல்லா*  அருளானை*  தன் அடைந்த
  எமர்கட்கும் அடியேற்கும்*  எம்மாற்கும் எம் அனைக்கும்* 
  அமரர்க்கும் பிரானாரைக்*  கண்டது தென் அரங்கத்தே.  

      விளக்கம்  


  • கீழ்ப்பாட்டில் எம்பெருமானை ‘அந்தணன் - பரமதயாளு’ என்றார்; வைதிகர்களிடத்தில் தயை உள்ளவனேயன்றி வேதபாஹ்யர்களான புறமதத்தவர்களிடத்தில் தயையுள்ளவனல்லன் என்கிறார் இப்பாட்டில். ‘துவரித்தவுடையவர்’ என்று காஷாயதாரிகளான பௌத்தர்களைச் செல்லுகிறது. ஸ்ரீவைஷ்ணவ ஸந்ந்யாஸிகளுக்கும் காஷாய வஸ்த்ரதாரணம் உண்டேயாகிலும் அவர்களை இங்கு விவக்ஷரிப்பதில்லை; கேவலம் காவித்துணி யுடுத்த மாத்திரத்தினால் வேஷதாரிகளென்று வசைச்சொல் பெற்றவர்களான பௌத்தர்களுக்கே ‘துவரித்தவுடையவர்’ என்று லக்ஷண நாமதேயம் போலும். அப்படிப்பட்டவர்கள் திறத்திலும் தூய்மையற்றவர்களான ஜைநர் திறத்திலும் அருளற்றவன். அதாவது, அவர்களை நிக்ரஹித்து நரகத்திலே வீழ்த்துமவன் என்றவாறு. “கேசவன் தநர் கீழ்மேலெமரேழெழுபிறப்பும் மாசதிரிதுபெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா” என்கிறபடியே தம் பக்கலிலும் தம்மைச்சேர்ந்தவர்கள் பக்கலிலும் எம் பெருமானருள் ஏறிப்பாய்கின்றமையைப் பின்னடிகளில் அருளிச்செய்கிறார். ஆகவிப்படி பாஹ்யரை நிக்ரஹித்து அந்தரங்கரை அநுக்ரஹிக்கும் பெருமானைத் தென்னரங்கத்தில் கண்டேனென்றாராயிற்று.


  1406.   
  பொய் வண்ணம் மனத்து அகற்றி*  புலன் ஐந்தும் செல வைத்து* 
  மெய் வண்ணம் நினைந்தவர்க்கு*  மெய்ந் நின்ற வித்தகனை*
  மை வண்ணம் கரு முகில்போல்*  திகழ் வண்ணம் மரகதத்தின்* 
  அவ் வண்ண வண்ணனை*  யான் கண்டது தென் அரங்கத்தே.   

      விளக்கம்  


  • பொய்வண்ணன் மனத்தகற்றி = காண்கின்ற பிரபஞ்சமெல்லாம் மாயைத்தோற்றம் - பொய் - என்கிறார்கள் அத்வைதிகள்; அங்ஙனல்ல; ‘நிலை நில்லாதவை’ என்னும் பொருளிலும் ‘பொய்’ என்கிற சொல்லைப் பிரயோகிப்பதுண்டு; ஆகவே நிலைநில்லாத (-அஸ்திரங்களான) ப்ராக்ருத பதார்த்தங்களே இங்குப் பொய்வண்ணம் எனப்படுகின்றன; அவற்றை நெஞ்சிற் கொள்ளாமல், பஞ்சேந் திரியங்களையும் விஷயக்ராமங்களில் செல்லாதபடி தடுத்துத் தன்னையே உண்மையாகச் சிந்திப்பவர்கள் யாரோ, அவர்கட்குத் தன் ஸ்வரூபஸ்வபாவங்களை உள்ளபடி காட்டித் தந்தருள்பவன் எமபெருமான் என்கிறது முன்னடிகளில். ஆன்னவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும் திவ்யமங்கள விக்ரஹத்தைப் பரமபோக்யமாக வாயாரப் பேசுகிறார் பின்னடிகளில். அஞ்சனம் போலவும் காளமேகம் போலவும் மரகதம் போலவும் ஆகர்ஷகமான திருநிறம்பெற்ற பெருமானைத் திருவரங்கத்திலே கண்டேனென்றாராயிற்று.


  1407.   
  ஆ மருவி நிரை மேய்த்த*  அணி அரங்கத்து அம்மானைக்* 
  காமரு சீர்க் கலிகன்றி*  ஒலிசெய்த மலி புகழ் சேர்*
  நா மருவு தமிழ்மாலை*  நால் இரண்டோடு இரண்டினையும்* 
  தாம் மருவி வல்லார்மேல்*  சாரா தீவினை தாமே.        

      விளக்கம்    1408.   
  பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்*  பதங்களின் பொருளும்* 
  பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்*  பெருகிய புனலொடு நிலனும்*
  கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்*  ஏழு மா மலைகளும் விசும்பும்* 
  அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.

      விளக்கம்  


  • பண்டை நான்மறையும் தானாய் நின்ற வெம்பெருமான், வேள்வியும் தானாய் நின்ற வெம்பெருமான், கேள்விப் பதங்களும் தானாய் நின்ற வெம்பெருமான்… என்றிங்ஙனே யோஜிப்பது. எம்பெருமானே பண்டை நான்மறையாக நிற்கையாவது என்னில்; நான்கு வேதங்களையும் தானே வெளியிட்டவன் என்கையும், நான்கு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவன் தானே என்கையுமாம். வேள்வியும் தானாய் நிற்கையாவது – அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள யாகங்கள் எல்லாவற்றாலும் தானே ஆராதிக்கப்படுபவனாயிருக்கை. வேதங்களில் பலபல தேவதைகள் யஜ்ஞங்களுக்கு விஷயமாகச் சொல்லப்பட்டிருந்தாலும் அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியான ஸ்ரீமந்நாராயணனே ஆங்காங்கு விவக்ஷரிதன் என்ற பரமைகாந்தி ஸித்தாந்தம் உணரத்தக்கது.


  1409.   
  இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்*  எண் இல் பல் குணங்களே இயற்ற* 
  தந்தையும் தாயும் மக்களும் மிக்கசுற்றமும்*  சுற்றி நின்று அகலாப் பந்தமும்*
  பந்தம் அறுப்பது ஓர்*  மருந்தும்பான்மையும்*  பல் உயிர்க்கு எல்லாம்* 
  அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.

      விளக்கம்  


  • இந்திரன் பிரமனீகனென் றிவர்கள் எண்ணில் பல் குணங்களேயியற்ற அரங்கமா நகர் அமர்ந்தான்” என்று அந்வயிப்பது. இந்திரனென்றும் நான்முகனென்றும் பரமசிவனென்றும் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தேவர்கள் அஹங்கார மொழிந்தவர்களாய்ப் பல திருக்குணங்களையும் சொல்லித் துதித்துக்கொண்டு ஆச்ரயிக்கத் திருவரங்கத்திலே சயனித்தருளும் பெருமான் எப்படிப்பட்டவனென்னில்; பிராணிகளுக்கெல்லாம் ஹிதமே நடத்தக் கடவனான பிதாவும், ப்ரியத்தையே நடத்தக் கடவுளான தாயும், நரகத்தைக் கடத்தும் புத்திரர்களும், - அளவிறந்திருந்துள்ள ஜ்ஞாதிவர்க்கமும், பக்கம்விட்டு நீங்காத பந்துவர்க்கமுமாக எல்லா வுறவுமுறையாயிருப்பவன்; மாறிமாறிப் பலபிறப்பும் பிறப்பதாகிற இந்த ஸம்ஸார பந்தத்தை அறுக்கல்ல மருந்தாயிருப்பவன்; இந்த ஸம்ஸாரபந்தம் அற்றால் இருக்கக்கூடிய நிஷ்கள ஸ்வபாவமாயிருப்பவன்; ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹாரங்களுக்குக் கடவனாயிருப்பவன்.


  1410.   
  மன்னுமாநிலனும் மலைகளும் கடலும்*  வானமும் தானவர் உலகும்* 
  துன்னுமா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி*  தொல்லை நான்மறைகளும் மறைய*
  பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி*  பிறங்கு இருள் நிறம் கெட*  ஒருநாள்- 
  அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.  

      விளக்கம்    1411.   
  மாஇருங் குன்றம் ஒன்று மத்து ஆக*  மாசுணம் அதனொடும் அளவி* 
  பா இரும் பௌவம் பகடு விண்டு அலற*  படுதிரை விசும்பிடைப் படர*
  சேய்இரு விசும்பும் திங்களும் சுடரும்*  தேவரும் தாம் உடன் திசைப்ப* 
  ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.     

      விளக்கம்  


  • பகடு விண்டு அலற – ‘பகடு’ என்னுஞ் சொல்லுக்கு உள்ள பல பொருள்களில் ‘யானை’ என்னும் பொருள் இங்குக்கொள்ளவுரியது. உவமவுருபு தொக்கியிருக்கின்றதென்க. விண்டுவாய்விரிந்து. “ஆயிரந்தோளால் அலைகடல் கடைந்தான்” என்கிறாரே, இப்படி உண்டோ? என்னில்; “நாலு தோள்கொண்டு வ்யாபரித்தபடிதான் ஆயிரந் தோள்கொண்டு வ்யாபரித்தான் என்னலாம்படியாய்த்து” என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகண்டு தெளிக.


  1412.   
  எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்*  இரணியன் இலங்கு பூண் அகலம்* 
  பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து*  பொழிதரும் அருவி ஒத்து இழிய*
  வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்*  விண் உறக் கனல் விழித்து எழுந்தது* 
  அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.    

      விளக்கம்  


  • நரஸிம்ஹாவதார ப்ரக்ரியையை வாய்விட்டுச் சொல்லுவதற்கு முன்னே “எங்ஙனெ உய்வர் தானவர் நினைந்தால்” என்றருளிச்செய்த அழகு வியக்கத்தக்கது, நம்மைப்போலே அநுகூலித்து பிரஹ்லாதனைப்போலே ‘இது நமக்காகச் செய்த செயல்’ என்றிருப்பார் உஜ்ஜீவித்துப்போவர்கள்; சத்ருபக்ஷமான அஸுரவர்க்கம் இவ்வரலாற்றை நெஞ்சால் நினைத்தமாத்திரத்திலே இடிவிழுந்தாற்போலே உக்கிப்போவார்கள் என்றவாறு. இரணியனுக்குப் பொன்னன் என்று பெயருண்டு; அவனுடம்பு பொன்னிறமாயிருக்கும்; அதில் நின்று ரத்தவெள்ளம் பாய்வதானது பொன்மலை பிளந்து அருவி பெருகுவதொக்கும் என்கிறார். நரஸிம்ஹமூர்த்தி வெண்ணிறங் கொண்டதாதலால் அதற்கு வெள்ளிமலையை உவமை கூறினார்.


  1413.   
  ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய*  அடல் புரை எழில் திகழ் திரள் தோள்* 
  ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி*  மற்று அவன் அகல் விசும்பு அணைய*
  ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச*  அறிதுயில் அலை கடல் நடுவே* 
  ஆயிரம் சுடர் வாய் அரவுஅணைத் துயின்றான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.   

      விளக்கம்  


  • அகல் விசும்பு அணைய = பெருமான் கையினால் போரில் உயிர்துறந்தவன் வீரஸ்வர்க்கம் சேரக்கடவனென்க. தேவர்களையும் உட்பட நலிந்துகொண்டு கொழுந்துக்கிடந்த இவன் மாண்டுபோகவே; பின்பு தேவர்கள் மனமகிழ்ந்து திருப்பாற்கடலிற் சென்று பெருமானைத் துதிக்கக் கேட்க வேணுமோ? அது சொல்லுகிறது பின்னடிகளில். திருவாய்மொழியில் “ஐந்துபைந்தலையாட ரவணைமேவிப் பாற்கடல் யோகநித்திரை, சிந்தைசெய்த வெந்தாய்” என்கிறார் நம்மாழ்வார்; இவர் “ஆயிரஞ்சுடர் வாயரவணைத் துயின்றான்” என்கிறார்; இவ்வெண்ணில் ஒரு நிர்ப்பந்தமில்லை; திருவனந்தாழ்வானுக்கு மகிழ்ச்சியின் மிகுதியினால் வாய்கள் பல்லாயிரமாகவும் பணைக்குமென்ப.


  1414.   
  சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த*  கொடுமையின் கடு விசை அரக்கன்* 
  எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து*  இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*
  வரிசிலை வளைய அடு சரம் துரந்து*  மறி கடல் நெறிபட மலையால்* 
  அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே. 

      விளக்கம்  


  • அரிகுலம் - ‘ஹாரிகுலம்’ என்ற வடசொல் தொடர்விகாரம். ஹாரி – குரங்கு.


  1415.   
  ஊழியாய் ஓமத்துஉச்சிஆய்*  ஒருகால் உடைய தேர்ஒருவன்ஆய்*  உலகில்- 
  சூழி மால் யானைத் துயர் கெடுத்து*  இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*
  பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி*  பகலவன் ஒளி கெடப்*  பகலே- 
  ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.

      விளக்கம்  


  • ஓமத்து உச்சியாய் = ஓமம் - ஹோமம்; யாகமென்றபடி. உச்சி என்றது – பிரதானன் என்றபடி. “அஹம்ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா” என்றும் “போக்தாரம் யஜ்ஞதபஸாம்” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வயஜ்ஞ ஸமாராத்யன் என்றவாறு. ஒரு காலுடையதேரொருவனாய் = ஒற்றைச்சக்கரம் பூண்ட தேரையேறி நடத்துமவன் ஸூர்யன்; அவனுக்கு அந்தர்யாமி. சூழி மால்யானை = சூழியாவது முகபடாம். பிங்கல நிகண்டில் 1287 காண்க. யானையின் முகப்போர்வை. காட்டில் திரிந்து கொண்டிருந்த கஜேந்திராழ்வானுக்கு முகபடாம் இராதாயினும் உரிமைபற்றிய விசேஷணமிடுதல் தமிழ்வழக்காம்.


  1416.   
  பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்*  ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்*
  மால் ஆய் ஆல் இலை வளர்ந்து*  மணி முடி வானவர் தமக்குச
  சேயன் ஆய்*  அடியோர்க்கு அணியன் ஆய் வந்து*  என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்* 
  ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.   

      விளக்கம்    1417.   
  பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து*  பொரு திரை மா நதி புடை சூழ்ந்து* 
  அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த*  அரங்க மா நகர் அமர்ந்தானை*
  மன்னு மா மாட மங்கையர் தலைவன்*  மான வேல் கலியன் வாய் ஒலிகள்* 
  பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்று அறுப்பாரே.      

      விளக்கம்    1418.   
  ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாதுஇரங்கி*  மற்று அவற்கு இன் அருள் சுரந்து* 
  மாழை மான் மட நோக்கி உன் தோழி*  உம்பி எம்பி என்று ஒழிந்திலை*  உகந்து
  தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து*  அடியேன் மனத்து இருந்திட* 
  ஆழி வண்ண! நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே

      விளக்கம்  


  • ஸ்ரீ ராமாவதராத்தில் குஹப்பெருமாள் திறத்தில் நீ செய்தருளின திருவருள் என்னெஞ்சை விட்டு அகலாது என்னை உருக்குகின்றது; அப்படிப்பட்ட திருவருள் அடியேன் மேலும் செய்தருளத்தக்கது காண் என்கிறார் இம்முதற்பாட்டில். க்ஷத்ரிய ஜாதியில் ஸூர்யகுலத்தில் இக்ஷ்வாகு வம்சத்தில் திருவவதரித்தவனும் சக்ரவர்த்தியின் திருக்குமாரனும் ஸகலைச்வர்ய ஸம்பந்நனும் மஹாபுத்திமானும் பகைவரிடத்தும் அன்பு கொள்பவனுமான இராமபிரான் குஹனை நோக்குங்கால், இவன் இழிவான வேடச்சாதியனென்றும் அதனால் பகுத்தறிவில்லாத அவிவேகியென்றும்அச்சாதிக்கு இயல்பான கொடுமையினால் எல்லா வுயிர்களோடும் பகைமை கொள்பவனென்றும் இகழ்ச்சி கொள்ளவேண்டியது ப்ராப்தமாயிருந்தும் அங்ஙனம் இகழ்ச்சி கொள்ளாது தனது பெருமைக் குணங்களையும் பாராமல் அவனுடன் கலந்து பரிமாறின கருணையை இங்ஙனம் பாராட்டியெடுத்துக்கூறி, ஆழ்வார், ‘அவ்வாறே அடியேனிடமுள்ள இழிகுணங்களையும் பொருள்செய்யாது என்னையும் ஆட்கொண்டருள்வன் எம்பெருமான்’ என்னும் நம்பிக்கைகொண்டு தாம் அவன் திருவடிகளிற் சரண்புகுந்தமையை வெளியிட்டார்.


  1419.   
  வாத மா மகன் மர்க்கடம் விலங்கு*  மற்றுஓர்சாதிஎன்று ஒழிந்திலை*  உகந்து 
  காதல் ஆதரம் கடலினும் பெருகச்*  செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று*
  கோது இல் வாய்மையினாயொடும் உடனே*  உண்பன் நான் என்ற ஒண் பொருள்*  எனக்கும 
  ஆதல் வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

      விளக்கம்  


  • சக்ரவர்த்தி திருமகன் சிறிய திருவடியை ஆதரித்த வரலாற்றை முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகிறாரிதில். கீழ்ப்பாட்டில் - மநுஷ்யஜாதியிலே குலத்தாலும் குணத்தாலும் குறையநின்ற குஹனிடத்துப் பெருமாள் பேரன்பு காட்டினதைக் கூறிய ஆழ்வார், அப்படி ஸமாந ஜாதியுமன்றி விஷம ஜாதியாயுள்ள விலங்கையுமுட்பட அதன் இழிவு பாராதே ஆட்கொண்டு அதன் பக்கல் விசேஷ கடாக்ஷஞ்செய்த பொருளை இப்பாட்டில் எடுத்துக்கூறி ஈடுபடுகிறார். நீ அனுமனிடத்து வரம்புகடந்து அருள்செய்ததுபோல அடியேனிடத்தும் என் இழிவு பாராதே பேரருள் புரியவேண்டுமென்று பிரார்த்திக்கின்றனர்.


  1420.   
  கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை*  வைகு தாமரை வாங்கிய வேழம்* 
  முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற*  மற்று அது நின் சரண் நினைப்ப* 
  கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்*  கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து*  உன 
  அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

      விளக்கம்  


  • கொண்டசீற்றம்’ என்றதனால் எம்பெருமானுக்குக் கோபம் இயற்கைக் குணமல்லாமல் செயற்கையாகக் காரியகாலங்களில் வேண்டுமென்று வருவித்து ஏறிட்டுக் கொண்ட தென்பது தோன்றும். கடல்கடக்க உபாயஞ் சொல்லவேணுமென்று சரணாகதிபண்ணின விடத்தும் விமுகனாயிருந்த கடலரசன் விஷயத்தில் பெருமான் கோபங்கொண்டதைச் சொல்லுமிடத்து “க்ரோகமாஹாரயத்தீவ்ரம்” (கடுங்கோபத்தை வரவழைத்துக்கொண்டார்) என்று வால்மீகி பணித்தது இங்கு ஸ்மரிக்கத்தகும். தனது அடியாரின் எதிரிகள் விஷயமாகப் பெருமான் கொள்ளுங் கோபத்தையே ஆழ்வார் தாம் வாழ்வதற்குச் சாதனமாக ஆபத்தனம் போலக் கருதியமைதோன்ற “கொண்ட சீற்ற மொன்றுண்டுளதறிந்து” என்றார். கஜேந்திராழ்வானைக் காத்தருளும் பொருட்டு மடுவின்கரைதேடி ஓடிவந்தது போல வரவேண்டாமல், நானிருக்கிற இந்த நிலவுலகத்திலே கோயில் கொண்டுள்ளாயென்பார் அணி பொழில் திருவரங்கத்தம்மானே!’ என விளித்தார்.


  1421.   
  நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்*  வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்* 
  நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு*  அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து*
  வெம் சொலாளர்கள் நமன்தமர் கடியர்*  கொடிய செய்வன உள*  அதற்கு அடியேன் 
  அஞ்சி வந்து நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

      விளக்கம்  


  • ஸுமுகனென்னும் நாககுமாரனை எம்பெருமான் பாதுகாத்தருளியதை முன்னிட்டுக்கொண்டு சரணம் புகுகிறாரிதில். ஸுமுகனக்குக் கருடனால் வந்த அச்சத்தைத் தவிர்த்தருளியதுபோல, அடியேனுக்கு யமபாதை நிமித்தமாக நேர்ந்த அச்சத்தைத் தவிர்த்தருள வேணுமென்கிறார். சரணமடைபவர் தம்தமது தாழ்வுகளை முன்னிட்டுக்கொண்டு சரணம் புகுதல் இயல்பு; அவ்வாறே தமது தீவினைப் பயனாய்வரும் யமதண்டனையைச் சொல்லிக்கொண்டு அடைக்கலமடைகின்றனர். தேவேந்திரனுக்கு நண்பனும் மந்திரியும் ஸாரதியுமான மாதலியானவன் அழகிலும் குணத்திலும் மிகச்சிறந்த தன் புத்திரியான குணகேசியென்னுங் கன்னிகைக்குத் தக்கவரனைத் தேடுபவனாய்ப் புறப்பட்டு வழியில் நாரதமுனிவரைச் சந்தித்துத் துணையாகக்கொண்டு பலவுலகங்களிற் சென்றுபார்த்துத் தக்க வரனைக் காணாமல் பாதாளலோகத்தில் வாஸுகியினாலாளப்படுகின்ற போகவதி யென்னுஞ் சிறந்த நகரத்தையடைந்து அங்கேயிருக்கின்ற அனேக நாககுமாரர்களைப் பார்க்கின்ற பொழுது ஸுமுகனென்னும் நாககுமாரனை நோக்கி அவனது ரூபலாவண்யங்களி லீடுபட்டு அவனுக்குத் தன்மகளைக் கொடுக்கக்கருதி அவனது பாட்டனாரைக்கண்டு பேச, அவர் மகிழ்ச்சியோடு துயரமுங் கொண்டவராய் ‘இவனது தந்தையைக் கருடன் பக்ஷரித்து இந்த ஸுமுகனையும் ஒருமாதத்திற்குள் பக்ஷரிப்பேனென்று சொல்லியிருக்கின்றானாதலால் இவனுக்கு மணஞ்செய்தல் ஏற்றதன்று’ என்று தெரிவித்தார்.


  1422.   
  மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்*  மலர் அடி கண்ட மா மறையாளன்* 
  தோகை மா மயில் அன்னவர் இன்பம்*  துற்றிலாமையில் அத்த! இங்கு ஒழிந்து*
  போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே*  போதுவாய் என்ற பொன் அருள்*  எனக்கும 
  ஆக வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

      விளக்கம்  


  • கோவிந்தஸ்வாமியினுடைய கருத்தறிந்து காரியஞ்செய்ததுபோல அடியேனுக்கும் கருத்தறிந்து காரியஞ்செய்யவேணுமென்று அவனுடைய விருத்தாந்தத்தை முன்னிட்டுக் கொண்டு சரணம்புகுகிறார். கோவிந்தஸ்வாமி யென்பானொரு பிராமணன் இதிஹாஸ புராணங்களைப் பலகாலுங்கேட்டு அதனாலே கண்ணபிரானுடைய பால்ய சேஷ்டிதங்களையும் ராஸக்ரிடை (குரவைகோத்தல்) முதலிய திருவிளையாடல்களையும் ஸாக்ஷாத்தாகக் கண்டு களிக்கக் கருத்துக்கொண்டவனாய், ‘இதை எம்பெருமான் பக்கல் நாம் பிரார்த்தித்தால் அப்பெருமான் அருள்செய்யக் குறையில்லை’ என்றெண்ணி ஊன்வாட வுண்ணாது உயிர்காவலிட்டு உடலிற் பிரியாப்புலனைந்தும் நொந்து தான்வாடவாடத் தவஞ்செய்கையில், எம்பெருமான் இவனது நினைவின்படியே க்ருஷ்ணாவதார க்ருத்யங்களையெல்லாம் அவ்வண்ணமே ஸாக்ஷாத்கரிப்பித்து ‘இன்னமும் உனக்கு வேண்டுவதென்?’ என்று கேட்டருளினன்; அதற்கு இவன் ‘தேவரீரோடு கூடவே அத்தாணிச் சேவகனாயிருந்து நித்யாநுபவம் பண்ணிக்களிக்க விரும்பியிருக்கின்றேன்’ என்றான்;


  1423.   
  மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை*  மதியாத வெம் கூற்றம்- 
  தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்*  தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா*
  பின்னை என்றும் நின் திருவடி பிரியாவண்ணம்*  எண்ணிய பேர் அருள்*  எனக்கும்- 
  அன்னது ஆகும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே .

      விளக்கம்  


  • மார்க்கண்டேயனுக்கு எம்பெருமான் திருவருள் புரிந்ததை முன்னிட்டுக்கொண்டு சரணம்புகுகிறாரிதில். மார்க்கண்டேயனுக்கு யமபயத்தை யொழித்து எப்பொழுதும் உன் திருவடிகளைப் பிரியாதபடியான பேற்றைத் தந்தருளியதுபோல, அடியேனுக்கும் பிறவித் துன்பங்கட்குப் பயப்படுதலை யொழித்து எந்நாளும் உன் திருவடிகளைப் பிரியாதபடியான பேற்றைத் தந்தருளவேணுமென்று பிரார்த்திக்கிறார்.


  1424.   
  ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்*  உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்* 
  காதல் என் மகன் புகல் இடம் காணேன்*  கண்டு நீ தருவாய் எனக்கு என்று*
  கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய*  குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*
  ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

      விளக்கம்  


  • ஸாந்தீபினிக்கு எம்பெருமான் திருவருள்செய்ததை முன்னிட்டுக்கொண்டு சரணம்புகுகிறாரிதில். ஸாந்தீபினியின் வேண்டுகோளைப் பூர்த்திசெய்ததுபோல அடியேன் வேண்டுகோளையும் நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகின்றாராயிற்று. இடைப்பிள்ளையான கண்ணபிரான் ஸாந்தீபினியிடத்தில் வேதமோதின னென்பதும் உபநயநஸம்ஸ்சாரம் பெற்றனனென்பதும் எங்ஙனே சேருமென்று சிலர் சங்கிப்பர்; ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனா யொளித்து வளர்ந்தவனான கண்ணன் க்ஷத்ரிய ஜாதியிற் பிறந்தவன். பிராமணர் க்ஷத்ரியர் வைசியர் என்னும் மூன்று ஜாதியாரும் தேஹோத்பத்தியாகிய இயற்கைப் பிறப்புடனே செயற்கைப் பிறப்பாக உபநயனமென்கிற ஸம்ஸ்காரத்தாலாகும் ஜ்ஞாநஜந்மத்தையுங்கொண்டு இருபிறப்பாளராய் ‘த்விஜர்’ எனப்படுவரென்க. உவனியம் - உபநயனமென்ற வடசொல்லின் சிதைவு. பூணூல் தரிக்குஞ்சடங்கு. மாணாக்கனை ஆசாரியள் தன்னிடத்தே வைத்துக்கொள்ளுதல் என்று பதப்பொருள்.


  1425.   
  வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்*  எந்தை! நின் சரண் என்னுடை மனைவி* 
  காதல் மக்களைப் பயத்தலும் காணாள்*  கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப*
  ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்செய்து*  உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்* 
  ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே. 

      விளக்கம்  


  • வைதிகனொருவன் எம்பெருமானருள் செய்ததை முன்னிட்டுக்கொண்டு சரணம் புகுகிறாரிதில். வைதிகனது வேண்டுகோளை அருளினாற்போல என் வேண்டுகோளையும் அருள்வாய் என வேண்டுகின்றார். வேதவாய்மொழியந்தணன் = “பொய்ம்மை மொழி புகன்றறியேன் புகலமன மெண்ணுகினும், மெய்ம்மையலதுரையாநா வேதநவில்பயிற்சியால்” என்றாற்போலக் கொள்ளலாம். வேதமோதினவனாகையாலே வாய்மை (ஸத்வம்) பொருந்திய மொழிகளை யுடையான் என்கை. வேதம்போலப் பயன்நிறைந்த வார்த்தையளையுடையான் என்றுமாம். எந்தை - இயல்பாகிய அண்மைவிளி; எனது பரமபிதாவே! என்றபடி. புத்திரனைப் பிதா காப்பதுபோல என்னை நீ காக்கக்டவை என்ற குறிப்பு. காதல் மக்களை = மறுமையில தாய்தந்தையர்க்கு ‘புத்;’ என்ற நரகத்தை இல்லாதபடி செய்தலும், இம்மையிலும் “மக்கள் மெய்தீண்டலுடற்கின்பம் மற்று அவர் சொற்கேட்டலின்பஞ்செவிக்கு” என்றபடி பலவகையின்பந்தருதலும் பற்றி விரும்பப்படுகின்ற புதல்வர் என்கை. மக்கள் - பன்மைப்பெயர். பயத்தலும் - இறந்தகாலவினையெச்சம்.


  1426.   
  துளங்கு நீள் முடி அரசர்தம் குரிசில்*  தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு* 
  உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து*  அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*
  வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு*  அடியேன் அறிந்து*  உலகம் 
  அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

      விளக்கம்  


  • தொண்டைமான் சக்ரவர்த்திக்கு எம்பெருமான் திருவருள் செய்ததை முன்னிட்டுக்கொண்டு சரணம் புகுகிறாரிதில். உன்னையல்லது அறியாதமஹாபக்தனான தொண்டைமான் சக்ரவர்த்திக்கு நீ மந்திரோபதேசஞ் செய்து மெய்யுணர்வை யுண்டாக்கி யருளியது போல எனக்கும் மெய்யுணர்வையுண்டாக்கி யருளவேணும் என்று பிரார்த்திக்கிறபடி. இவர் முன்னே எம்பெருமான் பக்கல் திருமந்திரோபதேசம் பெற்று மெய்யுணர்வுடையராயினும் பணிவினால் தமது தத்துவஞானத்தைப் பாராட்டாது இங்ஙனம் வேண்டுகின்றார்.


  1427.   
  மாட மாளிகை சூழ் திருமங்கைமன்னன்*  ஒன்னலர்தங்களை வெல்லும்* 
  ஆடல்மா வலவன் கலிகன்றி*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*
  நீடு தொல் புகழ் ஆழி வல்லானை*  எந்தையை நெடுமாலை நினைந்த* 
  பாடல் பத்துஇவை பாடுமின் தொண்டீர்! பாட*  நும்மிடைப் பாவம் நில்லாவே.

      விளக்கம்    1506.   
  தார் ஆளன் தண் அரங்க ஆளன்*  பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற 
  பேர் ஆளன்*  ஆயிரம் பேர் உடைய ஆளன்*  பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்*
  பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற*  படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த* 
  தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

      விளக்கம்  


  • ‘உபயவிபூதியையும் நானே ரக்ஷிக்கக்கடவேன்’ என்று தனிமாலை யிட்டுக்கொண்டிருப்பவனும் ஜகத்ரக்ஷணத்திற்காகத் திருவரங்கம் பெரியகோயிலை இருப்பிடமாகக் கொண்டுள்ளவனும் தாமரைப்பூவை யிருப்பிடமாகவுடைய அத்விதீயையான பிராட்டிக்கு வல்லபனும் ப்ரஹ்மபாவநையையே தலைக்கொண்டிருக்கிற ஸநகாதி மஹர்ஷிகள் துதிக்கும் பெருமையையுடையவனும், அநுபவிப்பார்க்கு இழிந்தவிடமெங்கும் துறையாம்படி ஆயிரந் திருநாமங்களையுடையவனம் நப்பின்னைப்பிராட்டிக்கு நாதனுமான பெருமானுடைய பெருமைகளை அநுபவிக்க வேண்டில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்கள். அத்திருப்பதிக்கு அபிமாநியான சோழனுடைய வீரம் சொல்லுவது மூன்றாமடி. கீழ் மூன்று நான்காம் பாசுரங்களில் வெண்ணி யென்னுமிடத்தில் வந்தெதிர்ந்த அரசர்களை வென்ற வீரம் சொல்லிற்று; தேரழுந்தூரில் வந்தெதிர்ந்த மன்னரைவென்ற வீரம்சொல்லுகிறது இப்பாட்டில்.


  1571.   
  உரங்களால் இயன்ற மன்னர் மாள*  பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று* 
  இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும்*  எம்பிரானை*  வம்பு ஆர் புனல் காவிரி
  அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி*  ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று* 
  சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்குஅன்றி*  என் மனம் தாழ்ந்து நில்லாதே*.

      விளக்கம்  


  • க்ருஷ்ணாவதார முகத்தாலும் ராமாவதார முகத்தாலும் மண்ணில் பாரங்களை நீக்கியருளின மஹாநுபாவனுக்கன்றி மற்றொருவன் விஷயத்திலே என்னெஞ்சு தாழாது என்கிறார். * மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தவன் சிலைவளையத் திண் தேர்மேல் முன்னின்று அருள் செய்தமையை முன்னடிகளிற் கூறுகின்றார். ‘சரங்களாண்ட’ என்றது “வில்லாண்டான்றன்னை” என்றாற்போலே; சத்துருக்களைக் காட்டு, காட்டு’ என்று விம்மிக் கிளம்புகின்ற அம்புகளை அடக்கி யாள்பவ னென்க “சரங்களாண்ட தண்டாமரைக் கண்ணன்” என்ற சேர்க்கையினால் – தாமரைக் கண்களின் கடாக்ஷத்திற்கு இலக்காகி உய்நததுபோகப் பெறாதே அம்புகட்கு இலக்காகி மாண்டுபோயினரே பாவிகள்! என்ற பரிதாபந்தோன்றும். இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயததிலே “ந நமேயம் – தாழமாட்டேன்” என்று மார்பு நெறித்து மாண்டொழிந்தனர் ஆஸுர ப்ரக்ருதிகள்; என் மனம் அங்ஙனன்றியே தாழ்ந்து நின்று உய்வுபெறும் என்றாராயிற்று.


  1664.   
  தரங்கநீர் பேசினும்*  தண்மதி காயினும்,* 
  இரங்குமோ?*  எத்தனை நாள்இருந்து எள்கினாள்?*
  துரங்கம் வாய் கீண்டு உகந்தான்*  அது தொன்மை*  ஊர்- 
  அரங்கமே என்பது*  இவள் தனக்கு ஆசையே.    

      விளக்கம்    1978.   
  கண்ணன் மனத்துள்ளே*  நிற்கவும், கைவளைகள்*
  என்னோ கழன்ற?*  இவையென்ன மாயங்கள்?*
  பெண்ணானோம் பெண்மையோம் நிற்க,*  அவன்மேய,-
  அண்ணல் மலையும்*  அரங்கமும் பாடோமே.

      விளக்கம்  


  • “நோக்கி நோக்கியுன்னைக் காண்பான் யானென தாவியுள்ளே, நாக்குநீள்வன் ஞானமிலலை நாடோறுமென்னுடைய, ஆக்கையுள்ளுமாவியுள்ளுமல்ல, புறத்தினுள்ளும் நீக்கமின்றியெங்கும் நின்றாய் நின்னையறிந்தறிந்தே” எனற் பாசுரத்தின் கருத்தை ஈண்டு அறிந்து கொள்ளுதல் வேண்டும். எம்பெருமான் தம்முடைய ஸகல அவயவங்களிலும் புகுந்து நிற்கச் செய்தேயும் அதில் த்ருப்தி பெறாதே கண்ணாற் காணப் பெற வேணுமென்று ஆசைப்பட்டு வருந்தின நம்மாழ்வாரைப்போலே இப்பரகால நாயகியும் தனது நெஞ்சினுள்ளே எம்பெருமான் உறையப்பெற்று வைத்தும் திருப்தியடையாதே வளையிழக்கிறாள் காண்மின். எம்பெருமான் தூரஸ்தனாயிருந்தால் விரஹம் பொறாதே மேனி மெலிந்து வருந்துதல் தகுதியே; அவன் என் மனத்தினுள்ளே யிருந்து ஸந்நிஹிதனாய் நிற்கச்செய்தேயும் இங்ஙனே என் மேனி மெலிவதற்கு என்ன காரணமோ? இது ஆச்சரியமான ஸம்பவமாயிருக்கின்றதே! என்கிறாள் முன்னடிகளில். பணப் பையிலே ஏராளமான பணம் கடக்கச் செய்தேயும் புறங்கால் வீங்குவாரைப்போலே யாயிற்று இந்த நாயகியின்படியும். சங்கும் சக்கரமும் சிரித்த முகமும் தொங்கும் பதக்கங்களுமாய்க் கண்ணெதிரே வந்தருளி ஸேவை ஸாதியாமல் உள்ளே யுறைந்து மறைந்துகிடக்குமதனால் என்ன பயன்? என நினைத்திருக்கிறாளாயிற்று. பெண்ணானோம் பெண்மையோம்=பெண்ணாய்ப் பிறந்த நாம் பெண்மையை நன்றாகக் காப்பாற்றிக் கொண்டோமானோம்; கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கைகளை கழலப்பெறுகின்ற நமக்கும் பெண்மைக்கும் வெகுதூரமுண்டு என்றபடி. (நிற்க) இந்த விஷயமெல்லாம் ஒருபுறமிருக்கட்டும், “குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி, அளியத்த மேகங்காள்! ஆவி காத்திருப்பேனே” என்றாற்போலே உள்ளவரையில் ஆவியகை; காத்திருப்பதற்காக, அவன் விரும்பியுரையும் திவ்ய தேசங்களைப் பாடுகையில் ஒரு தடையுடையராயிருந்தோமோ? கைவளைகள் கழன்றொழிந்தா லொழியட்டும் பெண்மைக்குக் கேடு வந்தால் வரட்டும்; அவன் விரும்பியுறையும் திருமலையையும் திருவரங்கத்தையும் பாடுதும் என்றாளாயிற்று.


  2029.   
  அணிஆர் பொழில்சூழ்*  அரங்க நகர்அப்பா,* 
  துணியேன் இனி*  நின் அருள்அல்லது எனக்கு,*
  மணியே! மணிமாணிக்கமே!*  மதுசூதா,*
  பணியாய் எனக்கு உய்யும்வகை,*  பரஞ்சோதீ!  (2)

      விளக்கம்  


  • அரங்கநகரப்பனே! ஆபத்காலத்திலுதவும் உற்ற வுறவினனான நீ மிக்க குளிர்ச்சியுடையதாய் இளைப்புத் தீர்க்கவல்லதான திவ்ய தேசத்திலே அடியார்களை உஜ்ஜீவிப்பிக்கும் பொருட்டு வந்து எழுந்தருளியிருத்தலால் உனது அருளையன்றி வேறொன்றை எனக்குப் பற்றுக்கோடாகக் கொள்ளேன் யான் என்கிறார். துணிதல்-ரக்ஷகமாக நிச்சயித்தல். அணி ஆர்பொழில்-வரிசையாகப் பொருந்திய சோலை யெனினுமாம். சேதநர்கட்கு ஹிதங்களைச் செய்வதில் தந்தைபோலுதலால் எம்பெருமான் அப்பன் எனப்பட்டான். மணியே! கண்டவர் கண்குளிரும்படி நீலமணிபோன்று காண்பவரிளைப்பைத் தீர்க்கும் படியான வடிவுடையவனே! என்றபடி. மணிமாணிக்கமே! மிக்க விலையுள்ளதும் பெறுதற்கரியதுமான மாணிக்கமென்னுஞ் சிறந்த ரத்நம்போல இயற்கையில் மேன்மையுடையவனே யென்றவாறு. இவ்விரண்டும் உவமையாகுபெயர். ‘மணியே மணிமாணிக்கமே’ என்றழைத்தது வடிவழகிலும் மேன்மையிலுங்கொண்ட ஈடுபாட்டினால். ‘மதுசூதா’ என்றழைத்தது, நீ முன்பு மதுவென்னும் அசுரனைக் களைந்தாற்போல இப்பொழுது எனக்குப் பகையான பிறவித் துயரத்தை அழித்தருள்வாயென்ற குறிப்பு. செய்வது இன்னதென்று அறியாது சோதித்து நின்ற அர்ஜுநனைக்குறித்து ‘உனது பாரமுழுதையும் நம்மேல் ஏறிட்டு நம்மையே தஞ்சமாக நினைத்திரு’ நாம் உன் விரோதிகளைப் போக்குகிறோம் நீ சோகியாதே; என்று கீதையருளிச் செய்தாற்போலே, நான் உய்யும்படி எனக்கு ஒரு நல்வார்த்தை யருளிச் செய்யவேணு மென்பார் ‘எனக்கு உய்யும் வகை பணியாய்’ என்கிறார். நீ பேறு தந்தருள்வது பின்பொரு மையத்திலானாலும், முன்னர் ‘தருவேன்’ என்று சொல்லுதல் மாத்திரஞ் செய்தாலும் அதுகொண்டு ஆறியிருப்பே னென்பது உட்கோள். இங்ஙனம் தாம் பிரார்த்தித்தற்கு இரங்கி அவன் ஒன்று சொல்லத் தொடங்கும்போது அவனது திருமுகமண்டலத்திலும் திருமேனியிலும் அருளினா லுண்டாவதொரு பெருவிளக்கத்தை யுட்கொண்டு பரஞ்சோதி யென விளித்தனரென்பர் பெரியவாச்சான்பிள்ளை.


  2038.   
  இம்மையை மறுமை-தன்னை*  எமக்கு வீடுஆகி நின்ற,* 
  மெய்ம்மையை விரிந்த சோலை*  வியன் திருஅரங்கம் மேய,*
  செம்மையை கருமை தன்னை*  திருமலை ஒருமையானை,* 
  தன்மையை நினைவார் என்தன்*  தலைமிசை மன்னுவாரே    

      விளக்கம்  


  • செம்மையைக் கருமைதன்னை – எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக்கொள்வன்; கிருதயுகத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காகப் பால்போன்ற நிறத்தைக் கொள்வன்; த்ரேதாயுகத்திலே சிவந்த நிறத்தைக்கொள்வன், த்வாபரயுகத்திலே பசுமை நிறத்தைக்கொள்பவன்; கலியுகத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான நீல நிறத்தோடிருப்பவன். (இது ”பாலினீர்மை செம்பொனீர்மை” என்ற திருச்சந்தவிருத்தப் பாசுரத்திலும் ”நிகழ்ச்தாய் பால் பொன் பசுப்புக்கார்வண்ணம் நான்கும்” என்ற நான்முகன் திருவந்தாதிப் பாசுரத்திலும் திருமழிசைப்பிரானாலும் அருளிச் செய்யப்பட்டுள்ளது.) இங்கு ”செம்மையைக் கருமை தன்னை” என்று இரண்டு யுகங்களின் நிறத்தைச் சொன்னது மற்றவர்க்கும் உபலக்ஷணமென்க. திருமலையொருமையானை = ”தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே வானோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே” என்றும் சொல்லுகிறபடியே திருமலையிலே நின்று நித்யஸூரிகளுக்கும் நித்ய ஸம்ஸாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுக்கும் அவன் என்றவாறு. ஒருமையான் – ஒருமைப்பட்டிருப்பவன், பொதுவாயிருப்பவன், திருமலையானது நித்ய விபூதிக்கும் லீலாவிபூதிக்கும் நடுநிலை என்பதாகத் திருவுள்ளம். இங்குள்ளார் சென்று பரத்வகுணத்தை அநுபவிப்பர்கள்; அங்குள்ளார் வந்து சீலகுணத்தை அநுபவிப்பர்கள்; ஆக இருபாடர்க்கும் வைப்பாயிருப்னென்க.


  2043.   
  ஆவியை அரங்க மாலை*  அழுக்குஉடம்பு எச்சில் வாயால் 
  தூய்மைஇல் தொண்டனேன் நான்*  சொல்லினேன் தொல்லை நாமம்
  பாவியேன் பிழைத்தவாறுஎன்று*  அஞ்சினேற்கு அஞ்சல்என்று 
  காவிபோல் வண்ணர் வந்து*  என் கண்ணுளே தோன்றினாரே. 

      விளக்கம்  


  • ஆவியை – “ஓருயிரேயோ உலகங்கட்கெல்லாம்” என்கிறபடியே அனைத்துலகுக்கும் பிராணனாயிருப்பவன் எம்பெருமான். இப்படிப்பட்டவனை யன்றோ என்னுடைய எச்சில் வாயில் கொண்டு கெடுத்தேனென்கை. (அரங்கமாலை) கண்ணுக்குத் தோன்றாதபடி நிற்கிற உயிர்போலன்றியே எல்லாருங் காணலாம்படி திருவரங்கம் பெரிய கோயிலிலே காட்சி தந்து ஆச்ரிதர் பக்கலில் வியாமோஹமே வடிவெடுத்தவன் போலிருக்கிற எம்பெருமானையன்றோ நான் தூஷித்தேனென்கை. தூஷிக்கையாவது எச்சில் வாயிற் கொள்ளுகை. அதனைச் சொல்லுகிறார். அழுக்குடம்பேச்சில் வாயால் என்று. கண்டவர்களின் காலிலும் விழுந்து உடம்பு அழுக்காயிற்று; கண்டவர்களையும் தோத்திரம் பண்ணி வாய் எச்சிலாயிற்று. ‘ஐயோ! தப்பாக இவை செய்தோம்‘ என்கிற அநுதாபமு மில்லாமையாலே தூய்மையற்ற தொண்டனாயினேன். இப்படிப்பட்ட நான். இவ்வழுக் குடம்பிலமைந்த எச்சில் வாயினால் (சொல்லினேன் தொல்லைநாமம்) ‘தொல்லை நாமம்‘ என்றது – அநாதிகாலமாக நித்யஸூரிகள் முதலானார்க்கு ஜீவனமாயிருக்கின்ற திருநாமம் என்றபடி. பல பெரியோர்களுக்கு உதவும் படியான வஸ்துவை அநியாயமாக நான் வாய்வைத்துக் கெடுத்துவிட்டேனே!, இனி அவர்கள் எங்ஙனே ஜீவிக்கப் போகிறார்கள்! என்று நைச்யாநுஸந்தானமாகப் பேசுகிறபடி. தொல்லை நாமங்களை அழுக்குடம்பெச்சில் வாயால் நான் சொன்னது மாத்திரமன்றியே ”நானுஞ் சொன்னேன் நமருமுரைமின்“ என்று நமர்களையும் சொல்லுவித்தன்றோ கெடுத்தேன்; ஆ ஆ! என்ன அபசாரப்பட்டோம்!, என்ன அபசாரப்பட்டோம்!!, இனி நமக்கு உய்யும் வழியுண்டோ?” என்று நான் அஞ்சினவளவிலே ‘ஆழ்வீர்! அஞ்சவேண்டா‘ என்று வடிவழகைக் காட்டி மருந்தையிட்டுப் பொருந்தவிட்டான் எம்பெருமான் என்றாராயிற்று.


  2044.   
  இரும்புஅனன்றுஉண்ட நீரும்*  போதரும் கொள்க,*  என்தன்- 
  அரும்பிணி பாவம் எல்லாம்*  அகன்றன என்னை விட்டு,*
  சுரும்புஅமர் சோலை சூழ்ந்த*  அரங்கமா கோயில் கொண்ட,* 
  கரும்பினைக் கண்டு கொண்டு* என்  கண்இணை களிக்குமாறே.   

      விளக்கம்  


  • தம்மைவிட்டு ஒருகாலும் பிரிக்கக்கூடாமலிருந்த அரும்பிணி பாவமெல்லாம் அகன்றுபோன ஆச்சரியத்தினால் இரும்பனன்றுண்ட நீரும் போதரும் என்கிறார். இரும்பானது பழுக்கக் காயந்து நீரைக்குடித்தால் குடித்த நீரடங்கலும் இரும்பிலே சுவறிப்போமத் தனை யொழிய அந்த இரும்பில் நின்றும் வெளிப்படுத்தியெடுக்க முடியாதென்பது லோகாது பவஸித்தமே யாகிலும், அந்த நீரும் அந்த இரும்பில் நின்று வெளிப்பட்டுவிடுமென்று நிச்சயிக்கலாம்; ஏனென்றால், அனன்ற இரும்புபோன்ற என்னிடத்திலே தனித்துப் பிரித்துக் களைந்தொழிக்க வொண்ணாதபடி மங்கிக்கிடந்த அரும்பிணி பாவங்கள் வெளிப்பட்டனவன்றோ; ஆதலால் இதுபோல் அதுவும் நேரலாம் என்கிறாராயிற்று. அரும்பிணி பாவமெல்லாம் அகலவே, திருவரங்கம் பெரிய கோயிலிலே நித்யஸந்நிதி பண்ணியிருக்கின்ற பரமபோக்யனான பெருமானைக் கண்ணாரக்கண்டு களிக்கப்பெற்றே னென்கிறார் பின்னடிகளில். தகாத விஷயங்களைக் கண்டுகளித்த என்கண்கள் இன்று ஸ்வரூபாநுரூபமான விஷயத்தைக் கண்டு களிக்கப்பெற்றமை என்ன பாக்கியம்! என்று அதிசயப்படுகிறார்.


  2062.   
  பட்டுஉடுக்கும் அயர்த்துஇரங்கும் பாவை பேணாள்*  பனிநெடுங் கண்நீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,* 
  எள்துணைப்போது என்குடங்கால் இருக்க கில்லாள்*  எம்பெருமான் திருவரங்கம் எங்கே?' என்னும்* 
   
  மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்*  மடமானை இதுசெய்தார் தம்மை,*  மெய்யே- 
  கட்டுவிச்சி சொல்', என்னச் சொன்னாள் 'நங்காய்!- கடல்வண்ணர் இதுசெய்தார் காப்பார் ஆரே?'

      விளக்கம்  


  • பேரின்பவநுபவத்திலே ஊன்றின ஆழ்வார்கள் பெண்மை யெய்துவதாகவும் கொங்கை முதலிய சொற்களையிட்டுப் பாசுரங்கள் கூறுவதாகவும் நிகழ்கிறவிது என்னோ? எனின்; விஷயாந்தரகாமம் என்றும் பகவத் விஷயகாமம் என்றும் காமம் இருவகைப்படும்; வேதாந்தங்களில் விதிக்கப்பட்ட பக்தியே ஆழ்வார்களுக்கு ச்ருங்காரமுறைமையில் பரிணமித்து நிற்கும். சிற்றின்பவநுபவத்திற்குக் கொங்கை முதலியன ஸாதநமாயிருப்பது போல, பகவத் விஷயாநுபவத்திற்குப் பரபக்திபரஜ்ஞாந பரமபக்திகள் இன்றியமையாதனவா யிருப்பதால் அவையே கொங்கை முதலிய சொற்களால் அருளிச் செயல்களிற் கூறப்படுகின்றன வென்றுகொள்க. ச்ருங்காரரஸத்தின் ஸம்பந்தம் சிறிதுமின்றியே கேவலம் சுத்த பக்திரஸமாகவே பாசுரங்கள் அருளிச்செய்யக் கூடுமாயினும் ஆழ்வார்கள் ச்ருங்காரரஸத்தையுங் கலந்து பாசுரங்கள் பேசுவதற்குக் காரணம் யாதெனில்; ஆரோக்கியத்திற்குக் காரணமாகிய வேப்பிலை யுருண்டையை உட்கொள்ள இறாய்க்குமவர்களுக்கு வெல்லத்தை வெளியிற் பூசிக்கொடுத்துத் திண்பிப்பதுபோலச் சிற்றின்பம் கூறும்வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுகின்றனரென்ப. பகவத் விஷயத்தில் அபிநிவேசம் மீதூர்ந் காலத்தில் தன்நிலைமாறிப் பெண் நிலைபெற்றுப் பேசுமிடத்தில், தாய்பாசுரமென்றும் தலைவிபாசுரமென்றும் தோழி பாசுரமென்றும் இப்படி வகுத்துக் கூறுவதற்கும் உட்கருத்து உண்டு;- தோழியாகப் பேசுவதற்குக் கருத்து: - நாயகனையும் நாயகியையும் இணக்கிச் சேர்க்குமவள் தோழியாவள். திருமந்திரத்தில் பிரணவத்தினால் எம்பெருமானோடு இவ்வாத்மாவுக்குச் சொல்லப்பட்ட அநந்யார்ஹசேஷத்வம் முதலிய ஸம்பந்தங்களை உணருகையே அப்பெருமானோடு இவ்வாத்மா சேருகைக்கு ஹேதுவாகையாலே அந்த ஸம்பந்தஞானமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையைத் தோழியென்பதாகக்கொள்க.


  2063.   
  நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்*  நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்* 
  நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ!  என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்* 
  அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்*  அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்* 
  என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்*  இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே!     

      விளக்கம்  


  • கீழ்ப்பாட்டில் ‘கடல்வண்ணர்‘ என்று கட்டுவிச்சி சொன்ன திருநாமத்தைத் திருத்தாயர் வினவவந்தார்க்குச் சொல்லி அநுவதிக்கையாலும், எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்று தானும் வாய் வெருவுகையாலும் முந்திய அவஸ்தையிற் காட்டிலும் சிறிது உணர்த்தி பிறந்தது; அவ்வளவிலும் காதலன் வந்து முகங்காட்டப் பெறாமையாலே ஆற்றாமை மீதூர்ந்து இடைவிடாமல் கூப்பிடத் தொடங்கினாள்; அதனை வினவவந்தார்க்குச் சொல்லி க்லேசப்படுகிறாள் திருத்தாய். இப்பெண்பிள்ளை நின்றநிலை இது; இவளுடைய ஸ்வரூபஹாநி இது; எனக்கு இவள் அடங்காதபடியானது இது; இத்தனைக்கும் நான் செய்த பாபமே காரணமாயிற்றென்று சொல்லி யிரங்குகிறாளாயிற்று. கீழ்ப்பாட்டில் “அயர்த்து இரங்கும்“ என்று சொன்ன இரக்கத்தின் வகைகளை “நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும்“ இத்யாதியாலே விவரிக்கிறபடி. நெஞ்சு உருகி = நெருப்பினருகே மெழுகுபோலே விரஹாக்நியாலே நெஞ்சு பதஞ் செய்யா நின்றது. கண் பனிப்ப = உருகின வெள்ளம் உள்ளடங்காமையாலே, நீர் நிரம்பின ஏரிக்குக் கலங்கவெடுத்து விடுங்கணக்கிலே கண்வழியே புறவெள்ளமிடுகிறபடி. நிற்கும் = க்ருத்யாக்ருத்ய விவேகம் பண்ணக்கடவதான நெஞ்சு அழிந்து போகையாலே ஒரு வியாபாரமும் செய்யமாட்டாதே நிற்கின்றாள். சோரும் = துவட்சி யடைகின்றாள்; நெடிது உயிர்க்கும் = உள்ளுண்டான சோகாவேசத்தாலே நெடுமூச்செறியா நின்றாள். உண்டறியாள் = உணவு இப்படியிருக்க மென்பதே இவளுக்குத் தெரியாது ; கூடியிருக்குங் காலத்திலே “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங்கண்ணன்“ என்றிருக்கையாலே அப்போதும் ஊண் இல்லை; விரஹகாலத்தில் உணவு விஷமாயிருக்கையாலே ஊண் இல்லை; ஆக உணவில் வ்யுத்பத்தியேயில்லை யென்றதாயிற்று. உறக்கம் பேணாள் = ‘நங்காய்! காதலனுக்கு உன் உடம்பன்றோ தாரகம்; உடம்பன்றோ தாரகம்; உறங்காவிடில் தேஹம் கெட்டுப்போகுமே; காதலன் பிறகு வருந்துவானே; அவனுடைய போகம் குன்றாமைக்காகவாவது சிறிது உறங்கவேணும்‘ என்று சொன்னாலும் உறங்கப் பார்க்கின்றிலள்: இவை யெல்லாம் எங்ஙனே யாயினுமாயிடுக; ஸ்வரூபநியாம்படி வாய்விட்டுக் கதறுகின்றாறே!, அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகின்றாறே!, இதனைப் பாருங்கோளென்கிறாள் நஞ்சரவில் என்று தொடங்கி. நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீயென்னும் = திருவனந்தாழ்வானுடைய பரிவுக்கு உகந்து ‘நஞ்சரவு‘ என்கிறாள். “ஆங்காரவாரமது கேட்டு அழலுமிழும் பூங்காரரவு“ என்ற திருமழிசைப்பிரான் பாசுரத்தை இங்கு அநுஸந்திப்பது. பரிவின் மிகுதியினால் அச்சத்திற்கு நிலமல்லாத ஸ்தாநத்திலும் அஞ்சிக் காப்பிடுகின்ற திருவனந்தாழ்வானுடைய தன்மைக்குத்தான் உகந்தமை தோற்ற ‘நஞ்சரவு‘ என்றாளாயிற்று. மென்மை, குளிர்த்தி, பரிமளம் என்று படுக்கைக்கு உரியனவாகச் சொல்லப்படுகிற லக்ஷணங்கள் சாதியியல்வாகவே அமையப்பெற்ற ஆதிசேஷன் நம் தலைவனுக்குப் படுக்கையாகப் பெற்ற பாக்கியம் என்னே! என்று உகக்கிறாள் போலும். இப்படிப்பட்ட படுக்கையிலே படுத்து, வீசிவில்லிட் டெழுப்பினாலும் எழுந்திராதபடி கண்வளர்ந்தருளும்போது தகட்டிலழுத்தின மாணிக்கம்போலே அழகால் குறையற்று விளங்குபவனே! என்று வாய்விட்டுக் கூப்பிடாநின்றாள். இப்படி உகந்து சொல்லுகிற ளென்கை யன்றியே ப்ரணய ரோஷந் தோற்றச் சொல்லுகிறாளென்றுங் கொள்ளலாம்; எங்ஙனே யென்னில் ; நஞ்சரவு பிரதிகூலர் கிட்டாமைக்கு நஞ்சை உமிழ்கிற னென்றிருந்தோம்; அது ஒருவியாஜமாத்திரமாய் என்னைப் போன்ற அநுகூலர்களும் கிட்டவொண்ணாதபடி விஷத்தை உமிழ்கின்றானே!‘ இருவர் படுக்க வேண்டிய படுக்கையிலே ஒருவராய் எங்ஙனே துயிலமர்ந் திருக்கிறார்! எனக்குத் தாயின் மடியும் பொருந்தாதிருக்க அவர்க்கு எங்ஙனே படுக்கை பொருந்திற்று என்றவாறு. வம்பார்பூ வயலாலிமைந்தா வென்னும் = தன்னைப் பாணிக்ரஹணம் பண்ணின விடத்தைச் சொல்லி வாய்வெருவுகின்றாள். எப்போதும் வஸந்தருதுவே விளங்கும்படி யாகவுள்ள வயல்களாற் சூழப்பட்ட திருவாலியிலே தன்னுடைய இளம்பருவத்தைக் காட்டி என்னைக் கொள்ளை கொண்டவனே! என்கின்றாள். நானிருக்குமிடம் நீரும் பூவும் பரிமளமுமின்றி வறண்டு கிடக்க, தானிருக்குமிடம் தளிரும் முறிவுமாய் விளங்குவதே! என்று ஊடல் தோற்றத் சொல்லுகிறபடியுமாம். தான் வாடிக் கிடக்கையாலே தானிருக்குமிடமும் வாடிக்கிடக்குமென்க. “மைந்தா வென்னும்“ என்கிறவிடத்திலே வியாக்கியான வாக்கியம் காண்மின் “என்னை பேக்ஷிக்கப் பார்த்தால் தன் பருவத்தைக் காட்டி என்னை அநந்யார்ஹ மாக்குவானேன்? அடியிலே நான் விஷய ப்ரவணனாய்த் திரிய ‘வாடினேன்‘ என்று சொல்லும்படி உன் போக்யதையைக் காட்டிப் புறம்புள்ள துவக்கை உன்னையொழியச் செல்லாதபடி பண்ணிற்று இன்று என்னைக் கைவிடுகைக்கோ?“ அஞ்சிறை புட்கொடியே ஆடும்பாடும்=பிராட்டிக்குத் திருமணம் நடத்திவைக்க வந்த விச்வாமித்திர முனிவனைப் போன்று தனக்குப் பாணிக்ரஹணம் பண்ணிவைக்க கொண்டுவந்த பெரிய திருவடியே நெஞ்சில் உறைத்திருக்கையாலே அவனை அநுகரிக்கின்றளாயிற்று. பெரிய திருவடி நெடுந் தூரத்திலே தோற்றித் தேற்றுவிக்கும்படியை நினைத்துக் கொண்டு அவன் வரும் வழியை நோக்கிக்கிடந்தாள்; அவன் வரக் காணாமையாலே அவனை அநுகரிக்கத் தொடங்கினாள் போலும். விடாய்த்தவர்கள் ஹஸ்தமுத்ரையாலே தண்ணீர் வேண்டுமாபோலே பெரிய திருவடியின் வரவில் தனக்குண்டான விருப்பம் தோன்ற அவன் வருகிற ரீதியை அபிநயிக்கத் தொடங்கினாளென்க. அநுகாரத்தாலே ஒரு தேறுமதல் பிறப்பதுண்டே; அதனாலே வாய்திறக்கவல்லளாய் ஆர்த்தி தோற்றக் கூப்பிடும்படியைச் சொல்லுகிறது பாடும் என்று கேட்டவர்கள் கண்ணுங் கண்ணீருமாய்க் கொண்டு கால் தாழ்ந்திருக்கும்படியான த்வனி விசேஷமே பாட்டாவது. அவ்வளவிலே இவளைத் தேற்றவேண்டித் தோழியானவள் காய்ந்த தலையும் மெலிந்த வடிவும் உறவின. முகமுமாய்க்கொண்டு தன் ஆர்த்தியெல்லாம் வடிவிலே தோற்றும்படி முன்னேவந்து நின்றாள்; அவள் முகத்தைப் பார்த்து, ‘தோழீ! நாம் கோயிலே போய்ப் பெரிய பெருமானை அநுபவிக்கக்கூடுமோ?‘ என்கின்றாள். ‘ஆடுதும்‘ என்றது கலவி செய்ய விருப்பத்தைக் கூறியவாறு. தமிழர் கலவியைச் ‘சுனையாடல் ‘புனலாடல்‘ எனனுமாற்றாற் கூறுவர்! “பொற்றாமரைக் கயம் நீராடப்போனாள் பொருவற்றளென்மகள்“ என்பர் மேலும் “தயாதன் பெற்ற மரதகமணித்தடம்“ என்கிறபடியே எம்பெருமான் தடாகமாகச் சொல்லப்பட்டிருந்தலுங்காண்க. இங்ஙனம் தன்மகளின் தன்மைகளை எடுத்துரையாநின்ற தாயைநோக்கி “உன் வயிற்றிற் பிறந்தவள் ஸ்வரூபஹாநியிலே இழியப்புகுந்தால் அடக்கிக்காக்கவேண்டாவோ?“ என்று சில மூதறிவாட்டிகள் சொல்ல, அந்தோ! நான் என்செய்வேன்? என்சிறகின் கீழடங்காப் பெண்ணை பெற்றேனே! என்கிறாள். ‘ஆச்ரயணதசையில் அவன் தானே மேல் விழுந்து ஆச்ரயிப்பித்துக் கொள்ள ஆச்ரயித்ததுபோலவே போகதசையிலும் அவன் செய்தபடி ஆச்ரயிப்பித்துக் கொள்ள ஆச்ரயித்ததுபோலவே போகதசையிலும் அவன் செய்தபடி கண்டிருக்கைகாண் ஸ்வரூபம்; நீ மேல்விழுகை பெண்மைக்குப் போராதுகாண்‘ என்று எனக்குத் தெரிந்தமட்டில் நான் சொன்னாலும் அதைச் செவியிலுங் கொள்ளாமல் உதறித் தள்ளாநின்றாள். ‘என்சிறகு‘ என்றது ‘என் பக்ஷத்திலே‘ என்றபடி. எம்பெருமானுடைய பக்ஷத்திலே ஒதுங்கினவள் என் பக்ஷத்திலே ஒதுங்கி என்வார்த்தையை எங்ஙனே கேட்பள். (அடங்காப்பெண்ணைப் பெற்றேன்) ‘என்னநோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்‘ என்றாற்போலே பிறர் சொல்லும்படியாகவும் ‘ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானேமற்றாருமில்லை‘ என்றாற்போலே தானே சொல்லிக் கொள்ளும்படியாகவும் மகளிடத்தில் வைலக்ஷணயமிருப்பதை நோக்கி, பெற்றேன் என்று உள்ளுற ஆனந்தம் பொலியச் சொல்லிக் கொள்ளுகிறாள். தன்னை, நொந்து பேசிக்கொள்வதாகப் புறம்புள்ளார்க்குத் தோற்றும். மகளுடைய குற்றமொன்றுமில்லை, தோன்றச் சொல்லுகிறபடி. (இருநிலத்து ஓர்பழிபடைத்தேன் ஏ பாவமே) பரந்த இப்பூமண்டலத்திலே என்னைப் போல் பெண் பெற்றவர்களும் இல்லை, என்னைப் போல் பழிபடைத்தவர்களுமில்லை யென்கிறாள். இப்பழி உத்தேச்யமென்பது விளங்க ஓர்பழி என்கிறாள். பகவத் விஷயத்தில் உண்டாகிற பதற்றமெல்லாம் ஞானவிபாககார்யமான ப்ரேமத்தின் பரீவாஹமென்று உகப்பார்க்கு இதுவே புகழாமிறே.


  2069.   
  கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்* கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம்*
  பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்* பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்* 
  ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்* 
  நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்* இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே?

      விளக்கம்  


  • பெண்பிள்ளையின் வாய்வெருவுதல்களை வரிசையாகச் சொல்லுகிறாள் திருத்தாய் கீழ்ப்பாட்டில் “நங்காய் நங்குடிக்கிதுவோ நன்மையென்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே“ என்று நின்றது. ‘நாம் சொன்ன ஹிதத்தை இவள் கடந்தபடியாலே இனி படியாகவே தோற்றவிருந்து இவளுடைய பாசுரங்களைக் கேட்போம்‘ என்றெண்ணிய திருத்தாயார் ‘நங்காய்! உன் எண்ணங்களைச் சொல்லிக் காணாய்‘ என்று சொல்ல, மகளும் எம்பெருமானுடைய திருமேனியழகை வருணிப்பது, திருமடந்தை மண்மடந்தையர் பக்கலிலே அப்பெருமான் இருக்குமிருப்பைப் பேசுவது, அவனூர் எங்கேயென்று வினவுவது, நானிருங்கேயிருந்து கதறி என்ன பயன்? அவனூருக்கே போய்ச்சேருவேன் என்பது, ஆகவிப்படி நிகழும் மகளது பாசுரங்களைத் தன் உகப்புத் தோன்றத் தான் திருத்தாய். ‘கார்வண்ணந் திருமேனி கண்ணும் வாயுங் கைத்தலமு மடியிணையுங் கமல வண்ணம்‘ என்பதும், ‘பார்வண்ணமடமங்கை பத்தர்‘ என்பதும் ‘பனிமலர்மேல் பாவைக்குப் பித்தர்‘ என்பதும் ‘எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்பதும் ‘நீர்வண்ணன் நீர் மலைக்கே போவேன்‘ என்பதும் மகளுடைய வார்த்தைகளின் அநுவாதங்கள்; மற்றவை தாய்ச்சொல். ‘என்னும்‘ என்கிற வினைமுற்று மகளுடைய ஒவ்வொரு வார்த்தையோடும் அந்வயிக்கத்தக்கது. ‘என்மகள் இப்படிசொல்லுகிறாள், இப்படிசொல்கிறாள்‘ என்று ஒவ்வொரு வாக்கியமாக எடுத்துத் தாய் சொல்லுகிறாளாயிற்று. முந்துற முன்னம் இவள் எம்பெருமானுடைய வடிவழகிலே வாய்வைக்கத் தொடங்கினாளே! என்கிறாள். ‘திருமேனியானது காளமேக நிறத்தது, திருக்கண்களும் திருவாயும் திருக்கைத்தலமும் திருவடியிணையும் செந்தாமரை மலர் நிறத்தன‘ என்று திருமேனியையும் திவ்யாவயவங்களையும் பற்றிப் பேசுகின்றாளாம். அடியிலே எம்பெருமான் இவளுக்குத் தன்வடிவை முற்றூட்டாக அநுபவிக்கக் கொடுக்கையாலே அதுவே வாய்வெருவுதலாயிருக்கின்றாள் காணுமிவள். எம்பெருமான் தானுகந்தார்க்கு ஸர்வஸ்வதானமாகக் கொடுத்தருள்வது தன் திருமேனியையே. பரதாழ்வாள், சிறியதிருவடி, அக்ரூரர் முதலானாரிடத்தே இது காணலாம். “தம் ஸமுத்தாப்ய காகுத்ஸ்த; சிரஸ்யாக்ஷிபதம் கதம் – அங்கே பரதமாரோப்ய முதித; பரிஷஸ்வஜே“ என்று பரதாழ்வான் விஷயத்திலே சொல்லப்பட்டது. (நெடுநாள் கடந்தபின் கண்ணுக்கு இலக்காகித் திருவடிவாரத்தில் வீழ்ந்த பரதாழ்வானை வாரியெடுத்து மடிமீதிருத்தி மகிழ்ந்து சேரத்தழுவினாள் ஸ்ரீராமபிரான் என்பது இதன் பொருள்) “ஏஷ ஸர்வஸ்பூதஸ்து பரிஷ்வங்கோஹநூமத; மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மந;“ என்று சிறிய திருவடி விஷயத்திலே சொல்லிற்று. “ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜக்ருதசிஹ்நேந பரணிநா, ஸம்ஸப்ருச்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே“ என்று அக்ரூரர் விஷயத்திலே சொல்லப்பட்டது. மூவர்க்கும் தன் திருமேனியை அணைக்கக் கொடுப்பதே பெரும்பரிசு. கார்வண்ணந் திருமேனி = தாபத்ரயத்தினால் தகர்ப்புண்டிருப்பார்க்கு நினைத்தமாத்திரத்தில், அதனை ஆற்றக்கடவதும் விரஹதாபத்தாலே வருந்துவார்க்கு அதனைத் தணிக்க வல்லதுமான திருமேனியைப் பேசினபடி. கண்ணும் வாயுங் கைத்தலமுமடியிணையுங் கமலவண்ணம் = மேகத்திலே தாமரைக் காடு மலர்ந்தாற்போலே யாயிற்று அவயவங்களிருக்கிறபடி. பார்வண்ணமடமங்கை பத்தர் = இங்கும் ‘என்னும்‘ என்கிற வினைமுற்றைக் கூட்டிக் கொள்ளவேணும்; மகள் பாசுரத்தைத் திருத்தாய் அநுவதிக்கிறபடி. கடலிலே உழன்று காலங்கழிக்குமவர்கள் மூழ்கி மண்ணெடுக்குமாபோலே, கீழ்ச்சொன்ன ஸௌந்தர்யஸாகரத்திலே அவலீலையாக ஆழங்காற்பட்டிருப்பவள் பூமிப்பிராட்டி; அவளிடத்தில் பக்தியுக்தனாயிருப்பன் எம்பெருமான் என்கிறது. பூமிப்பிராட்டியாலே எம்பெருமான்றான் ஸேவிக்கப்படவேண்டியதுபோய் எம்பெருமான்றான் அவளை ஸேவித்திருக்கிறானாம் ப்ரணயதாரையில் முதிர்ச்சியாலே. அவளுடைய போக்யத்தையிலே துவக்குண்டு அத்தலை இத்தலையானபடி. இப்படி ஒருத்திபக்கலிலே பக்தியைப் பண்ணி நிற்கும் பெருமான், நான் பக்தி பண்ணுகிறனென்றால் எனது பக்தியைப் பெற்றுக்கொள்வதும் செய்கிறானில்லையே! என்ற வருத்தந்தோற்றப் பார்வண்ண மடமங்கை பத்தர் என்கிறாள் பரகாலநாயகி. பித்தர் பனிமலர் மேல்பாவைக்கு = இவ்வி்டத்திலும் ‘என்னும்‘ என்கிற வினைமுற்றைக் கூட்டிக்கொள்வது. இதுவும் மகள் வார்த்தையைத் திருத்தாய் அநுவதிக்கிறபடி. குளிர்ந்த தாமரைப்பூவின் பரிமளந்தானே ஒருவடிவுகொண்ட தென்னலாம்படியுள்ள பெரிய பிராட்டியார் திறத்திலே பித்துக்கொண்டவன். என்கிறது. “அல்லிமலர்மகள் போகமயக்குக் களாகியும் நிற்குமமம்மான்” என்கிறபடியே அவளுடைய போகங்களிலேயே மயங்கி என்னை மறந்தான் திடீர் என்றாள் போலும். பாவஞ்செய்தேன் = வினவவந்தவர்கட்கு அழுதுகாட்டுகிறாள் திருத்தாய். இப்பெண்பிள்ளையைப் பெறும்படியான பாவஞ்செய்தேன் நான் என்று கண்ணீர் சொரிகின்றாளென்க. இவள் ஈடுபட்டவிஷயத்தின் வைலக்ஷண்யத்தை நம்மால் மாற்றப்போகாது; இவளுடைய ஆற்றாமையும் நம்மால் அடக்கவொண்ணாது; அவனே உபேக்ஷியாநின்றாள்; இவளோ பதறநின்றாள்; இந்நிலைமையைக் கண்டு கொண்டிருக்கவேண்டுவது என்பாபமேயன்றோ என்கிறாள். பகவத் விஷயத்திலே தன் பெண்பி்ள்ளைக்குண்டான அவகாஹநம் தனக்கு மிகவும் மகிழ்ச்சிக்குடலாயிருக்கையாலே ‘புண்ணியஞ்செய்தேன்‘ என்னவேண்டுமிடத்து நாட்டாருக்காக மறைத்து “பாவஞ்செய்தேன்“ என்கிறாள். காலிப்பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர், ஞாலத்தப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை‘ என்ற யசோதைப் பிராட்டியைப்போலே “ஞாலத்துப் புத்திரியைப் பெற்றாள் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை” என்று சொல்லிக்கொள்ளவே இத்திருத்தாய்க்கு விருப்பம்; ஆயினும் கட்டுப்பாட்டுக்காக மறைக்கிறாளென்க. ஏர்வண்ணவென்பேதை = ஐயோ! இப்பெண்ணை தன்வடிவழகைத் தான் நன்கறிந்தாளாகில் ‘அவன்றானே நமக்காக மடலெத்துப் புறப்படட்டும்‘ என்று கிடக்கலாமே; தன்படியைத் தான் அறியாமலன்றோ இவள் இப்படி படுகிறாள் என்கிறாள். அவனுடைய கார்வண்ணம் இவளுடைய ஏர்வண்ணத்துக்கு ஏற்குமோ? ஒரு உவமையையிட்டுச் சொல்லும் படியா யிருக்கிறது அவன் வடிவு; இவள்வடிவுக்கு உவமைஇல்லையே; ‘அழகியவடிவு படைத்தவள்! என்று சொல்லலாமத்தனையொழிய த்ருஷ்டாந்தமிட்டுச் சொல்ல வழியில் லையே! என்கிறாள். என்சொல்கேளாள் = நான் இவளை அடக்கி யாண்டுகொண்டிருந்த காலமுண்டு; அது கடந்துபோயி்ற்று; “அவனுடைய திருவருள் தன்னடையே பரிபக்குவமாகும் போது கிடைக்குமேயல்லது நாம் பதறிப் பயனில்லைகாண்“ என்று நான் சொல்லப்புறப்பட்டால் நான் வாய்திறப்பதைக் கண்டவுடனே இவள் காதை அழுந்த மூடிக்கொள்ளுகிறாளே! என் செய்வெனென்கிறாள். (என்சொல் கேளாள்) “மாமேகம் சரணம் வ்ரஜ“ என்றும், “அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம“ என்றும் அவன் சொல்லி வைத்த வார்த்தைகளைக் கேட்டிருக்குமவள் என்சொல்லைக் கேட்பளோ? எம்பெருமான் திருவரங்கமெங்கே யென்னும் = என்வார்த்தை கேளாத மாத்திரமேயோ? அவனிருக்கும் தேசத்திற்குச்செல்ல வழியும் தேடுகின்றாள். என்னைத் தனக்கேயாக்கிக் கொண்டவனுடைய கோயிலுக்கு எங்ஙனே வழியென்கிறாள். நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேனென்னும் = எம்பெருமான் திருவரங்கமெங்கே யென்று கேட்டவளுக்கு வழிசொல்வாரார்? ஒருவரும் வாய்திறந்திலர்; அதற்குமேல் தானே சொல்லுகின்றாள் – நீர்வண்ணன் நீர்மலைக்கேபோவேன் என்கிறாள். திருக்குறைய லூரில் நின்றும் புறப்பட்டுத் திருநீர்மலைக்குப் போய் அங்கு நின்றும் திருவரங்கம் பெரிய கோயிலுக்குப் போகவேணும் என்று இங்ஙனே இவள் வழிகண்டிருக்கிறாள் போலும். கோவிலிலே கெட்டுப்போன பொருளைக் குளத்திலே தேடுமாபோலே யிருக்கிறது இவள்படி. திருப்பதிகளிலே தங்கித் தங்கிப்போகப் பார்க்கிறாளாயிற்று. இதுவன்றோ நிறைவழிந்தார் நிற்குமாறே = தன் தலையில் ஸ்வரூபத்தைப் பாராதே எதிர்தலையின் வைலக்ஷண்யத்தையே பார்த்துப் பதருவாருடையபடி இதுவன்றோ. இப்படியும் அடக்கங்கெட்டாளே என்மகள்! என்றாளாயிற்று.


  2073.   
  நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா* நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்* 
  செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய* இப்பால்- 
  கைவளையும் மேகலையும் காணேன்* கண்டேன்- கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்* 
  எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு* இது அன்றோ எழில் ஆலி? என்றார் தாமே   

      விளக்கம்  


  • கீழ்ப்பாட்டில் ‘அவரை நாம் தேரரென்றஞ்சினோமே‘ என்று ப்ரமத்தாலே தான் இறாய்த்தமை சொன்னாள்; அதைக்கேட்ட தோழியானவள் ‘நங்காய்! நீ இறாய்த்து அகன்றாயாகில் அவர் உன்னோடு கலந்தபடி என்?‘ என்று கேட்க, ‘அவர் என்னை வசப்படுத்திக் கொண்டபடியும் என்னோடு கலந்தபடியும் இது காண்‘ என்கிறாள் இப்பாட்டில். அவர் தம்முடைய விலக்ஷணமான வடிவழகையும் சீலத்தையும் காட்டின விடத்திலும், * அவரைத் தேவரென்றஞ்சி இறாய்த்தபடியாலே ‘இனி நாம் வந்தவழியே திரும்பிப் போகவேண்டு மத்தனையன்றோ‘ என்று நினைத்தார்; கால் பெயர மாட்டிற்றில்லை; மேயன்றொ: சேஷவஸ்து கைப்படுவது சேஷியானவனுக்குப் பரம லாபமன்றோ. வடிவழகைக் காட்டுவதும் சீலத்தைக் காட்டுவதும் எதற்காக? கைப்படாத வஸ்துவைக் கைப்படுத்துகைக்காக வன்றோ? தாம் உத்தேசித்துவந்த விஷயம் இங்குக் கைபுகுந்ததில்லை வகையினாலேனும் வசீகரித்தாக வேணுமே, அதற்கு வழி யென்ன? என்று பார்த்தார்; முன்பு திருவாய்ப்பாடியிற் பெண்கள் தம்முடைய திருக்குழலோசையிலே வசப்படக் கண்ட வாஸநையாலே இங்கு நம்முடைய மிடற்றோசையாலே வசீகரிக்கப்போமென்று பார்த்து ஒரு பண்ணை நுணுங்கத் தொடங்கினார்; நாம் வேட்டையாடுகிற வியாஜமாக வந்தோமாகையாலே ‘பாடுகிறது ஏதுக்கு?‘ என்று கேட்பாரில்லை; ஆகவே தாராளமாகப் பாடலாமென்று துணிந்து ஒருபண்ணை நுணுங்கினார்; அதிலே யீடுபட்டு மேல்விழுந்து கலந்தேன் என்று வரலாறு சொல்லுகிறாள் பரகாலநாயகி. நைவளம் ஒன்று ஆராயா = ‘நைவளம்‘ என்று ஒரு பண்ணுக்குப் பெயர். பாட்டுப் பாடுகிறவர்களையும் பாட்டு கேட்கிறவர்களையும் நைவிக்கும்படியான வளத்தையுடைய தாதல் பற்றி நைவளமென்று பெயரிடப்பட்ட தென்று யோகார்த்தமும் அருளிச்செய்வர். மற்ற இசைகளிற்காட்டில் இந்த இசை பிறரை வசீகரி்க்கும் விஷயத்தில் இன்றியமையாததாதலாலும் இதற்கு வசப்படாவிட்டால் வேறுகதி யில்லாமையாலும் ‘நைவளம் ஒன்று‘ எனப்பட்டது. கருமயோக ஜ்ஞாநயோகங்களால் அஸாத்யமானதை பக்தியோகத் தாலே ஸாதிக்கலாம்; அதனாலும் அஸாத்யமானதை ப்ரபத்தியாலே ஸாதிக்கலாம்; அது வும் பலித்தலில்லை யென்றால் வேறு கதியில்லை என்றிருப்பதுபோல, காதலன் தானும் இப் பரகால நாயகியைப் பெறுகைக்ககுச் நரமோபாயமான பண்ணைக் கைகண்டபடி. ஆராய் தல் – நன்றாக நுணுங்குதல். ‘ஆராயா‘ என்றது செய்யா என்னும் வாய்பாட் டிறந்தகால வினையெச்சம்; ஆராய்ந்து என்றபடி. மேலே ‘ நோக்கா“ என்றதையும் இங்ஙனமே கொள்க. நைவளம் என்கிற பண்ணைத் தாம் நுணுங்கினவாறே தாம் உருகினார்; ‘முரட்டு ஆணாகிய நாமே உருகுகிறபோது மெல்லியலான இவள் உருகக் கேட்கவேணுமோ? வயிரத்தை யுருக்குமது அரக்கையுருக்கச் சொல்லவேணுமோ? இது இவளையும் அழித்தே தீரும்‘ என்றறுதியிட்டு என்முகத்தைப் பார்த்தார்; உண்மையில் அவ்விசையினால் நான் உள்ளெலா முருகிக் குழைந்திருக்கச் செய்தேயும் அந்த உருக்கத்தையும் ஈடுபாட்டையும் எப்படியோ மறைத்து, சிறிதும் விகாரப்படாதவள்போல முகத்திற் காட்டிக்கொண்டேன்; அப்படிப் பட்ட நிலைமையைக் கண்டு அவர்க்கு வெட்கமுண்டாயிற்று. ஏன்? நம்முடைய எண்ணம் பழுதாயிற்றேயென்று லஜ்ஜித்தார்; அவர் தம்முடைய காம்பீர்யத்தாலே நாணி னமை தோற்றாதபடி யிருக்கப்பார்த்தும் நாணினார் போலவே காணப்பட்டார்; ‘நம்முடைய சரமோபாயமும் நிஷ்பலமாயிற்றே‘ என்று அவரால் வெட்கப்படாமலிருக்க எங்ஙனே முடியும். அந்த வெட்கத்தாலே நேர்முகம் பார்க்கமாட்டாதே சோலையைப் பார்ப்பதும் பக்கங்களைப் பார்ப்பதுமாக ஆனார். பின்னும் நயங்கள் செய்வளவில் = ‘பின்னும்‘ என்றது, நைவளமென்கிற பண்ணைப் பாடினவளவோடு நில்லாமல் என்றபடி. அது பலிக்கவில்லையென்று வாளா கிடந்திலர்; ‘அடியேன், குடியேன்‘ என்றாற்போலே சில நைச்யபாஷணங்களைப் பண்ணிலே ஏறிட்டுப் பாடத்தொடங்கினார்; அவ்வளவிலே. என்மனமுங் கண்ணுமோடி எம்பெருமான்திருவடிக்கீழ் அணைய = விகாரத்தை வெளிக் காட்டாதிருக்கவேணுமென்று நான் எவ்வளவோ முயற்சி செய்தும் பலிக்கப் பெற்றதில்லை; அடக்கிக் கொண்டிருந்தும் என்னால் அடக்க முடியவில்லை; கடல் உடைந்தாற்போலே உடைந்தது. நெஞ்சும் கண்ணும் ஆச்ரயத்தைவிட்டுப் பதறியோடிற்று; தம் மிடற்றோசை யாலே என்னை யீடுபடுத்தினவருடைய திருவடிவாரத்தின்கீழே சென்றணைந்தன. – வியாக்கியான வாக்கியங்காண்மின்; - “அவர் நினைத்தவளவன்று காண் நான் அழிந்தபடி யென்கிறாள். என்முலையைத் தம் மார்விலே நெருக்கித் தழுவிக் கொள்ளவாயிற்று அவர் நினைத்திருந்தது; நான் அவர்காலைத் தலையிலே வைத்துக்கொண்டே னென்கிறாள்“. இப்பால் கைவளையும் மேகலையுங் காணேன் = இதனால் விரஹவ்ருத்தாந்தம் சொல்லுகிறதன்று; உந்மஸ்தகமான ஸம்ச்லேஷரஸம் சொல்லுகிறது. கைவளையையும் மேகலையையுங் காணாமை விச்லேஷத்திலன்றோ வென்னில், அங்ஙனே ஸம்ச்லேஷத்திலுமுண்டு. ஸம்ச்லேஷரஸம் மீதூர்ந்து உண்டான தேஹப்பூரிப்பினால் வளைகள் வெடித் தொழிந்தமையாலுண்டான இழவைச் சொன்னபடி. கலவியிலும் வளையிழப்பது பிரிவிலும் வளையிழப்பது என்றனால், பின்னை வளைதங்கியிருக்கும் நிலைமை எது வென்னில்; ஸம்ச்லேஷரஸம் உந்மஸ்தகமாகாமல் ஸாத்மி்க்கு மளவாகும் தசையிலே வளை தங்கியிருக்கு மென்க. (மேகலையுங்காணேன்) மே – அரையில் மேவுகின்ற, கலை – வஸ்திரம் என்றுகொள்க. “பரியட்டமாறாட்டத்தாலே என்பரியட்டப்பட்டுங் கண்டிலே னென்கை. அவன் பரியட்டம் தன்னரையிலேயிருக்கக் கண்டாளித்தனையிறே“ என்ற வியாக்கியான வாக்கியமுங் காண்த்தக்கது. இதுவும் ஸம்ச்லேஷரத்தின் உந்மஸ்தகத்வத்தை வெளியிடவற்று. “கைவளையும் மேகலையுங் காணேன்“ என்றதற்கு ‘அஹங்காரமமகாரங்கள் ஒழிந்தன‘ என்று கூறுதல் ஸ்வாபதேசப்பொருள் என்றருளிச்செய்வர். உபாயவிரோதி, ப்ராப்யவிரோதி, புருஷார்த்த விரோதி என் மூன்று வகையான இடையூறுகளும் தொலைந்து “உன்றன்னோடுற்றோமே யாவோ முனக்கே நாமாட்செய்வோம், மற்றைநங்காமங்கள்மாற்று“ என்கிற பிரார்த்தனை பலித்தமை சொன்னவாறு. ‘நான் போக்தாவன்று, எனக்குப்போகமன்று; போக்தாவும். அவனே, போகமும் அவனுடையதே‘ என்ற ஸ்வரூபதத்துவத்தின் அநுஸந்தானம் முதிர்ந்தமை சொல்லிற்றாயிற்று. கண்டேன் கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும் = அணைத்தபோது உறுத்தின திருமகரக் குழைகளையும், அணைத்த திருக்கைகளையும் கண்டேனென்கிறாள். கலந்தவள் சக்ரவர்த்தி திருமகனாயிருக்க, நான்குதோள் என்கிறதென்னென்னில்; தன்னைத் தழுவுகையாலே தோள்கள் பணைத்தபடி. அன்றி, உண்மையான சதுர்ப்புஜ ஸ்வரூபத்தை வெளியிட்ட படியாகவுமாம். எவ்வளவுண் டெம்பெருமான்கோயில்? என்றேற்கு = வந்தவிடத்திலே கலந்து பிரிந்து போகையன்றியே அவருடைய இருப்பிடத்தே உடன் சென்று நித்ய ஸம்ச்லேஷம் பண்ணிக் களிக்கவேணுமென்னும் விருப்பாலும், சிறிது தூரமாகிலும் கூடவே தோள்மேல் தோளிட்டுக்கொண்டு போகவேணு மென்னும் விருப்பாலும், தகுதியான பரிஜனங்களோடே அநுபவிக்கவேணு மென்னும் விருப்பாலும் ‘தேவரீருடைய வாழ்விடம் இங்குத் தைக்கு எத்தனை தூரமுண்டு?‘ என்று கேட்டேன்; இதோ காண்கிற திருவாலித் திருநகரி காண் என்று சொல்லி அந்தர்த்தானமாய்விட்டார். அந்தோ! ‘எவ்வளவுண்டெம்பெருமான் கோயில்‘ என்று பாவியேன் நானேயன்றோ பிரிவை ப்ரஸ்தாவித்தேன்; அது கேளாதிருந்தேனாகில் இன்னமும் சற்றுப்போது அநுபவிக்கலாமாயிருந்ததே! நானே கெடுத்துக்கொண்டேனே யென்கிறாள் போலும்.


  2074.   
  உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து* என்- ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே*
  தெள் ஊரும் இளந் தெங்கின் தேறல் மாந்திச்* சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன* 
  கள் ஊரும் பைந் துழாய் மாலையானைக்* கனவிடத்தில் யான் காண்பன் கண்ட போது* 
  புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன்* என்றாலும் இது நமக்கு ஓர் புலவி-தானே? 

      விளக்கம்  


  • தன் பேறாகத் தானே வந்து கலந்தவன் பிரிகிறபோது ‘போகவேண்டா‘ என்று ஒருவார்த்தை சொல்லமாட்டிற்றிலையோ? என்று தோழி கேட்க, அது சொல்லாமலிருப்போனோ? அதுவுஞ் சொன்னேன், பலிக்கப் பெற்றதில்லை யென்கிறாள். கலவியிலே உன்கைக்க அடங்கின சரக்காயிருந்தவர் உன் வார்த்தையை அலக்ஷியஞ் செய்துபோவரோ?‘ என்ன, ‘நிலமல்லாத நிலத்திலே இப்படி நெடும்போது நிற்கலாகுமோ‘ என்று பெரிய திருவடி தூக்கிக்கொண்டு போகப் போயினாரென்கிறாள். உபயவிபூதி நாதராய்ப் பரம உதாரராயிருக்குமவர்க்கு நீ வாழ்க்கைப்பட்டிருந்தாயாகில் அவர் போம்போது உனக்குத் தந்துபோன செல்வம் ஏதேனுமுண்டோவென்று கேட்க, உள்ளுருஞ் சிந்தைநோய் எனக்கே தந்து என்கிறாள். தோழீ! இதுகாண் அவர் எனக்குத் தந்துபோனது என்கிறாள், கண்ணாலே பார்த்துச் சிகித்ஸை பண்ணத்தக்க நோயையன்று கொடுத்தது; ஸர்ப்பம் ஊர்ந்தாற்போலே உள்ளுக்குள்ளே ஸஞ்சாரியாயிருக்கின்ற ப்ரேமவியாதியைத் தந்துபோனார். “தக்கார் பலர் தேவிமார் சாலவுடையீர்“ என்கிறபடியே அவர்க்குத் தேவிமார் மற்றும் பலருண்டாகிலும் அவர்களை அவர் பொருள் படுத்தவேயில்லை; என்னொருத்திக்கே ஸர்வஸ்தானமாகக் கொடுத்தாராயிற்று. அவர் கொடுத்ததற்கு நீ ஏதேனும் பிரதிஸம்பாவனை செய்ததுண்டோ? என்று தோழிகேட்க, “என்னொளிவிளையும் மாநிறமுங் கொண்டாரிங்கே“ என்கிறாள். நான் கொடுக்கவேண்டிற்றுண்டோ? அவர்தாம் * கொள்ளை கொள்ளிக்குறும்பராயிற்றே; தாமே கொள்ளைகொண்டுபோனார். கீழ்ப்பாட்டில் ‘கைவளையும் மேகலையுங் காணேன்“ என்ற விடத்திற்கொண்ட அர்த்தத்திற்கு எதிரான அர்த்தம் இங்குக்கொள்ளவேண்டும். அங்கு ஸம்ச்லேஷத்தாலுண்டான பூரிப்பு; இங்கு விச்லேஷத்தாலுண்டான இளைப்பு. ஏற்கனவே பூரிப்பினால் வளைகள் வெடித்துப்போயிருக்க, என்னொளி வளையைக் கொண்டார் என்று இங்குச் சொல்வதற்கில்லையே; கையில் வளையிருந்தாலன்றோ கொண்டாரென்னலாம் என்று சிலர் சங்கிக்கக்கூடும்; வளைகொண்டாரென்றதில் தாற்பரியமாகிய உடலிளைப்புமாத்திரமே இங்கு விலக்ஷிதமென்று கொள்க; உடல் ஈர்க்குப்போல இளைக்கும்படி செய்துவிட்டாரென்றவாறு. அஹங்காரமமகாரங்கள் நன்கு ஒழியப்பெற்றவர் தம்வாயாலே ‘என்னொளிவளை‘ என்னலாமோ? என்னில்; ஸம்ச்லேஷகாலத்தில் இந்த வளையும் நிறமும் காதலனுடைய கொண்டாட்டத்திற்கு மிகவும் உறுப்பாயிருந்ததனால் அவனுக்கு ஆதரணீயமானது என்னும் வழியாலே தமக்கு ஆதரணீயமாகக் குறையில்லை என்க. கூடியிருக்குங்காலத்தில் நாயகன் ‘இதுவொரு வளையிருக்கு மழகு என்னே! ; சேர்த்தியால் வந்த ஒளியிருக்குமம்படி என்னே; வடிவில் நிறமிருக்கும்படி என்னே!‘ என்று பலகாலும் வாய்வெருவுவது வழக்க மாகையாலே அதனை அநுவாதம் செய்கிறவத்தனை. இங்கே யென்று தான் வழிபறியுண்ட விடத்தைக்காட்டுகிறாள்; * மைவண்ணநறுங்குஞ்சியில் ‘இங்கே‘ என்று தான் நிதியெடுத்த விடத்தைக் காட்டினள்; இப்பாட்டில் ‘இங்கே‘ யென்று நிதியிழந்தவிடத்தைக் காட்டுகிறாள். நான் வழிபறிக்க வந்து வழிபறியுண்டேனென்கிறாள். நங்காய்! உன் ஒளிவளையும் மாநிறமுங்கொண்டு அவர் போகிறபோது உம்முடைய ஊர் ஏதென்று கேளாவிட்டதென்? என்று தோழிகேட்க; அது நான் கேட்கவேண்டிற் றில்லை; பிரிவில் தரித்திருக்கைக்காகத் தாமே சொல்லிப் போனாரென்கிறாள் தெள்ளூருமித்யாதியால். தெளிந்து தெங்கினின்றும் பெருகிவாரா நின்றுள்ள தேனை நுகர்ந்து சேல்மீன்கள் உகளும்படியான திருவரங்கம் நம்மூர் என்று சொல்லிப்போனார். ‘என்ஊர்‘ என்றாவது, ‘உன் ஊர்‘ என்றாவது சொல்லாமல் ‘நம்மூர்‘ என்றதில் இவளுக்கு ஒரு ஆநந்தம். என்னூர் என்றால் அவனுடைய ஆச்ரித பாரதந்திரியம் குலையும்; உன்னூர் என்றால் இவளுக்கு ஸ்வரூபஹாநியாகும். இரண்டு தலைக்கும் பாங்காக நம்மூர் என்று சொல்லிப்போனார். “திருமந்த்ரம்போலே இருவர்க்கும் பொதுவானவூர்“ என்று வியாக்கியான ஸ்வாரஸ்யம் நோக்குக. அப்படி அவர் கருணையற்றுப் பிரிந்துபோகச் செய்தேயும் அவருடைய வடிவின் போக்யதை இவளைக் கனக்க ஈடுபடுத்தியிருக்கையாலே கள்ளூரும்பைந் துழாய்மாலையானை யென்று வாய்வெருவுகின்றாள். தோளிலிட்ட தனிமாலையுந் தாமுமாய் அவர் இருந்த இரும்பை நீ காணப்பெற்றிலையே தோழீ! என்கிறாள். அவரூர் படுமதெல்லாம் அவருடம்பும் படுகிறதுகாண். * தெள்ளூருமிளந்தெங்கின் தேறல் அவரூர்த் திருவீதிகளிலே வெள்ளமிடுமாபோலவே அவருடம்பும் பைந்துழாய்மாலையின் மதுவெள்ள மொழுகப்பெற்றிருந்தது. கனவிடத்தில் யான்காண்பன் = கனவு என்றது ஸ்வப்நத்தையாகவுமாம்; இவ்விபூதியின் வாழ்க்கையை ஸ்வப்நபர்யாயமாக ஞானிகள் அத்யவஸிப்பராகையாலே கனவிட மென்று இவ்விபூதியைச் சொல்லிற்றாகவுமாம். அவர் கூடவே கலந்து வாழ்கிற பாவனையைக் காட்டிக் கொண்டிருக்குமளவிலே, மறைந்திருந்த பெரிய திருவடி வந்து “வந்த காரியம் தலைக்கட்டிற்றே, இனி யெழுந்தருளலாகாதோ“ என்று நிற்க, அவன் மேலேறிப் போகப் புறப்பட்டார்; இத்தனை காலமும் நம் கைச்சரக்காயிருந்தவர் நாம் ஒரு வார்த்தை சொன்னால் கேளாதொழிவரோ வென்று நினைத்து “புள்ளூருங்கள்வா! நீபோகேல்“ என்று சொல்லியும் இங்ஙனே வருத்தப்பட வேண்டிய நிலைமைதானேயாயிற்று. ஸம்ச்லேஷத்துக் கடுத்தபடி விச்லேஷம் விளைந்தாலல்லது ஸாத்மியாது என்பது அவருடைய கருத்துப்போலும். அதனை நினைந்து ஆறியிருக்கப்போமோ நமக்கு? துடிப்பதே தொழிலாயிற்று என்கிறாள்.


  2075.   
  இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!* இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட* 
  பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்* பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ*
  ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி* உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து* என்- 
  பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!

      விளக்கம்  


  • புள்ளூருங்கள்வா! நீ போகேலென்பன் என்றாலுமிது நமக்கோர் புலவிதானே“ என்றாள் கீழ்ப்பாட்டில்; அது கேட்ட தோழியானவள், ‘நங்காய்! பெரிய திருவடி வந்து தூக்கிக்கொண்டு போய்விட்டானென்கிறாயே; அந்தப் பெரிய திருவடிதானும் உனக்கு அடங்கினவனல்லனோ? 1 “ஒருவன் அடிமை கொள்ளும்போது க்ருஹிணிக்கென்றன்றே ஆவணையோலை எழுதுவது; ஆகிலும் பணிசெய்வது க்ருஹிணிக்கிறே“ என்ற நியாத்தாலே கணவனுக்கு அடிமைப் பட்டாரெல்லாரும் மனைவியர்க்கும் அடிமைப்பட்டிருத்தல் முறைமையன்றோ; பகவானுக்கு அடிமைப்பட்டபோதே உனக்கும் அடிமைப்பட்டவனாயன்றோ அக்கருடனிருப்பது; அப்படி விதேயனான அவனை நீ போகேலென்று நியமிக்கக்கூடாதோ?‘ என்று கேட்க; ஆமாம் தோழீ!, அவன் ஒருவனுமேயாகிலன்றோ நியமிக்கலாம்; நித்ய விபூதியிலுள்ளரடங்கலும் வந்து சூழ்ந்துகொண்டார்கள்; அவர் தாமும் முன்புபோலின் றியே இப்போதுண்டான விலக்ஷணமான மேன்மையினாலே எதிர்த்துப் பேசவொண்ணா தபடியாயிருந்தார்; அதனாலே சென்று கிட்டவும் வார்த்தை சொல்லவும் அருமையாயிருந்தது!, என்செய்வேனென்கிறாள். இருகையிற் சங்கு இவை நில்லா = போகிறவர் தாம் மாத்தி்ரம் போகையன்றியே என்கையில் வளைகளையுங் கொண்டுபோனார். அவர் போய்விட்டாலும் அவர் உகந்த வளைகளாவது கையிலிருந்தால் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தாகிலும் ஒருவாறு போதைப் போக்கலாமென்று நினைத்துக் கையில் வளையைப் பார்த்தாள்; வளை அவர்க்கு முன்னே போய் நின்றது. இன்னொரு கையிலாவது வளை தங்கியிருக்கிறதோவென்று பார்த்தாள்; அதுவும் அதுக்கு முன்னே போய் கிடந்தது; அந்தோ! என்செய்வேன்!, இருகையிற் சங்கிவை நில்லா வென்கிறாள். ‘சங்கு நில்லா‘ என்னாமல் ‘சங்கு இவை நில்லா‘ என்றதற்குக் கருத்தென்னன்னில்; அவர் நில்லாதொழிந்தால் இவையும் நில்லாதொழிய வேணுமோ? அவர் சேஷியாகையாலே போகிறார்; எனக்கு சேஷமான இவையும் நில்லாதே போகவேணுமோ? அவர் சேதநராகையாலே என்னிடத்தில் ஏதேனுங் குறைகண்டு போகலாம்; அசேதனமான இவையும் போகவேணுமோ? வந்து கலந்தவராகையாலே போகிறார் அவர்; ஸஹஜமான இவையும் போகவேணுமோ? நம் கைக்கு அடங்காதவராகையாலே அவர் போனார்; நம் கைக்ககு அடங்கின இவையும் போகவேணுமோ? அவர் நிற்கிலும் இவை நிற்கின்றனவில்லையே யென்கிறாள். போகேலென்னச் செய்தேயும் அவர் போனாப்போலே இவையும் பலகால் எடுத்தெடுத்துக் கையிலேயிடச் செய்தேயும் கழலுகின்றமை தோற்றும் நில்லா என்றதில். எல்லே பாவம்! = ஈதென்ன கஷ்டகாலம்!? சேதனப்பொருளோடு அசேதனப் பொருளோடு வாசியற எல்லாம் என்னைக் கைவிடும்படியாக என்ன பாபம் பண்ணினோனோ வென்கிறாள். கைப்பட்டதும் போகும்படியான பாபத்தை யன்றோ பண்ணினே னென்கிறாள். தன்னோடு கலந்து பிரிந்துபோகிறபோது அவருடைய வடிவிற்பிறந்த புதுக்கணிப்பைச் சொல்லுகிறாள் இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட பெருவயிற்ற கருமுகிலேயொப்பர் வண்ணம் என்று. தன்னை வெறுந்தரையாக்கினபடிக்கு ஒரு க்ருஷ்டாந்த மிட்டுச் சொல்லுகிறாள் போலும். இயற்கையான வொளிமிக்க கம்பீரமான மஹாமுத்ரத்தை வெறுந்தரையாகப் பருகி நீர் கொண்டெழுந்த காளமேகம் போலே காண் போகிற போது அவரது வடிவு இருந்தபடி. கீழ்ப்பாட்டில் “என்னொளிவளையும் மாநிறமுங் கொண்டார்“ என்றாளே; இங்கு நின்றுங் கொண்டதெல்லாம் அங்கே குடிகொண்டதாக வேணுமே, அது தோன்றச் சொல்லுகிறபடி. பரகாலநாயகி, தன்னைப் பெருங்கடலாகவும் அவரைக் காளமேகமாகவுங் கருதி இது சொல்லுகிறாளென்க. மேகமானது பெரிய அபிநிவேசத்தோடே வந்து கடலில் ஸாரத்தைக் கவர்ந்து செல்வதுபோல அவரும் இத்தலையில் ளெஸந்தர்ய ஸாகரத்தைக் கவர்ந்து சென்றமை சொன்னபடி. அதுதானும் அவரது வடிவிலே நன்கு தோன்றியிருக்கையாலே ஸ்பஷ்டமாயிற்று. பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ண மென்று பெருமாளுடைய இயற்கையான அழகு சொல்லுகிறதன்று; தற்காலத்திலுண்டான அழகைச் சொல்லுகிறாள். ஐயோ! மேகம் முகக்குமிடமாகப் பெற்றேனே. மேகம் முகந்து பெய்யுமிடமாகப் பெற்றிலேனே! என்கிற வருத்தம் ‘மண்டி யுண்ட‘ என்றதில் தொனிக்கும். அன்றியும், இத்தலையிலுள்ள தெல்லாவற்றையும் கொள்ளை கொண்டும் இன்னமும் அவருடைய வயிறு நிரம்பவில்லையே, அவருக்கு த்ருப்தி பிறக்க வில்லையே! என்பது ‘பெருவயிற்ற‘ என்பதில் தொனிக்கும். அவர் பிரிந்துபோகிறபோது வடிவில் புகர் இருந்தபடியும் சுற்றும் புடைசூழ நின்றார் பெருவெள்ளமிருந்தபடியும் மேன்மையிருந்தபடியும் தோழீ! நீ காணப்பெற்றிலையே!, அவற்றை என்சொல்லவல்லே னென்வாய்கொண்டு? (பெருந்தவத்த ரருந்தவத்து முனிவர் சூழ ஒரு கையிற் சங்கொருகை மற்றாழியேந்தி உலகுண்ட பெருவாயர் போயினார்.) ஒருவ ரிருவராய் வந்து கிட்டினார்களோ? கடலில் அமுதந் தோன்றினவன்று அதனை அமரர் சுற்றிலும் சூழ்ந்துகொண்டாப்போலே காண் என்னைப்பிரிந்து போகிறபோது அவரைப் பரிகாரம் வந்து சூழ்ந்துகொண்டது. * வைகுண்ட து பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி;, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ * என்று சொல்லப்பட்ட பக்தர்களும் பாகவதர்களும் வந்து சுற்றிலும் சூழ்ந்துகொண்டார்கள். அந்தப்பெருங் கூட்டத்தை விலக்கிக் கொண்டு நான் கிட்டிச்சென்று அவரைப் போகேலென்று சொல்வது எங்ஙனே? அந்தப் பெருவெள்ளத்தை ஒருபடி நீஞ்சிக்கொண்டு சென்றோமேயாகிலும், “குழுமித் தேவர்குழாங்கள் கைதொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு“ என்னப்பட்ட அவருடைய திருவுரு கண்ணால் முகக்கலாயிருந்ததோ? கையுந் திருவாழியுமாய்நின்ற மேன்மை கிட்டலாம்படியிருந்ததோ? (ஒருகையிற் சங்கு ஒருகை மற்றாழியேந்தி) அவர்தாம் வந்த போதிலே என்கையைப் பிடித்த கையும் என்காலைப் பிடித்த கையும் இப்போது சங்கும் சக்கரமும் பொலிய நின்றனவே!. கலந்தபோது அவர்க்கு இருந்த நீர்மைக்கு எல்லையில்லாதாப்போலே காண் போகிறபோதிருந்த மேன்மைக்கு எல்லை யில்லாதிருந்தபடியும். “வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு, படை போர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே“ என்று நெடுந்தூரத்திலே நின்று அந்த மேன்மைக்குப் பல்லாண்டு பாடும்படியா யிருந்ததத்தனையன்றி அணுகிச் சென்று வாய்திறக்க வழியுண்டாயிருந்ததோ வென்கிறாள். (உலகுண்ட பெருவாய ரிங்கேவந்து) இத்தால் பிரளமாகிற பெரிய ஆபத்துக்கு உதவினவர் என்று சொல்லுகிறதன்று, அவர் தன்னோடு கலக்க வருகிறபோது இருந்த ரீதியைப்பற்றிச் சொல்லுகிறாள். பிரளயகாலத்திலே உலகங்கட்கெல்லாம் தம்மையொழியச் செல்லாமையிருந்தாப்போலே என்னையொழியச் செல்லாதவராயன்றோ அவர் ஸம்ச்லேஷிக்கவந்தபோதில் இருந்தபடி என்கை. பொருகயற்கண் நீரரும்பப் புலவிதந்து = அவர் வந்து கலந்ததனால் நான்பெற்றபேறு இதுகாணென்கிறாள். “கண்ணீர் பெருக“ என்னாமல் ‘அரும்ப‘ என்றதனால் விரஹசோகாக்நியாலே உள்ளூலர்ந்து கிடக்கின்றமை தோன்றும். உள்ளே உலர்ந்து கிடக்கும் போது கண்ணீர்பெருகுவதெங்ஙனே? (புலவி தந்து) தன்னைக் கிட்டினாரை “வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன்“ என்கிறபடியே ஆனந்தத்தின் எல்லையிலே நிறுத்தவல்லவரான அவர்காண் எனக்கு இப்போது துயரத்தை விளைத்தது. (தந்து) உபயவிபூதிநாதரான அவர் தம் முடைய பணப்பையில் நின்றும் அவிழ்த்துத் தந்த செல்வம் இதுகாணென்கிறாள் போலும். அவர் தமக்கு நெஞ்சில் இரக்கமில்லாமை வந்தேறியானாலும் இயற்கையிலே கருணை யுண்டாகையாலே அதனால் தூண்டப் பெற்று ஒருவார்த்தை சொல்லிப்போனார்காண்; பிரிவில் நான் தரித்திருக்கவேணுமென்று பார்த்து ‘நம்ஊர் திருவரங்கம் பெரியகோயில்‘ என்று அழகும் போனபோதை யழகும் தோழீ! நீ காணப்பெற்றிலையே! என்றாளாயிற்று.


  2076.   
  மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும்* கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்* 
  தன் அலர்ந்த நறுந் துழாய் மலரின் கீழே* தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி* 
  என் நலனும் என் நிறையும் என் சிந்தையும்* என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு* 
  பொன் அலர்ந்த நறுஞ் செருந்திப் பொழிலினூடே* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!   

      விளக்கம்  


  • தலைமகன் தன்பக்கலிலுள்ளவை அனைத்தையுங் காட்டி என்பக்கலிலுள் ளவை யெல்லாவற்றையுங் கொள்ளைகொண்டு போயினானென்கிறாள். மின்னிலங்கு திருவரங்கம் = மின்போலே விளங்காநின்றுள்ள திருமேனியை முதலிலே காட்டினாரென்கிறாள். “கார்வண்ணந் திருமேனி“ என்றும் “கருமுகிலேயொப்பர்வண்ணம்“ என்றும் “முகிலுருவமெம்மடிகளுருவந்தானே“ என்றுங்கீழே சொல்லியிருக்க, இங்கே ‘மின்னலங்கு திருவுரு‘ என்றது என்னனெனில்; ஔதார்யத்திற்கும் விடாய்தீர்க்குந் தன்மைக்கும் மேகத்தை ஒப்புச் சொல்லிற்றுக்கீழ்; எதிர்விழி விழிக்க வொண்ணாதபடியான தன்மையை நோக்கி இங்கு ‘மின்னலங்கு திருவுரு‘ என்றது. ஆனாலும் காளமேகத்தின் நிறமேயன்றோ வடிவின்நிறமென்னில்; திருவாழியாழ்வானுடைய புகர் திருமேனியெங்கும் பரவியிருக்கையாலே இங்ஙனே சொல்லக் குறையில்லை யென்க. அருணகிரணத்தாலே திருப்பல்லாண்டும் நோக்குக. “ஒருகையிற்சங்கொருகை மற்றாழியேந்தி உலகுண்ட பெருவாயரிங்கேவந்து“ என்று கீழே சொல்லிற்றும் இங்கே நினைக்கத்தக்கது. பெரிய மேன்மையைக் காட்டினமை சொல்லிற்றாயிற்று. பெரியதோளும் = காலமுள்ளதனையும் அனுபவித்தாலும் வேறொரு அவயவத்தில் போகவொட்டாதபடி துவக்கவல்ல அளவிறந்த போக்யதை வாய்ந்த திருத்தோள்கள். “தோள் கண்டார்தோளே கண்டார்“ என்னும்படியானவை. ஆகவே, பெரிய என்று போக்யதையிலுள்ள பெருமையைச் சொன்னபடி. இனி, “பாஹுச்சாயாமவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந;“ என்கிறபடியே தோள் நிழலிலே உலகமெல்லாம் ஒதுங்கினாலும் ஒதுங்கினவர்கள் சுருங்கி நிழலே மிக்கிருக்கும்படியான பெருமையைச் சொல்லிற்றாகவுங் கொள்ளலாம். கரிமுனிந்த கைத்தலமும் = கம்ஸனால் மதமூட்டி நிறுத்தப்பட்டிருந்த குவலயாபீட மென்கிற யானையைத் தொலைத்த மிடுக்க விளங்கநின்ற திருக்கைகள். ஒரு விசேஷணமிட வேண்டாதே இயற்கையாகவே பரமபேக்யமா யிருந்துள்ள கண்ணும் வாயும். (தன்னலர்ந்த நறுந்துழாய் இத்யாதி) தன்னிலத்திற் காட்டிலும் செவ்விபெற்று நறுமணம்மிக்க திருத்துழாய் வளையத்தினருகே திருத்தோளளவுந் தாழ்ந்து விளங்குகின்ற மகரகுண்டலங்களும், ஆக இவற்றையெல்லாம் ஸேவைஸாதிப்பித்து. (என்னலனு மென்னிறைவு மென்சிந்தையும் என்வளையுங் கொண்டு என்னையாளுங் கொண்டு) ஸர்வஸ்வதானம் பண்ணுவாரைப்போலே வந்து ஸர்வஸ்வத்தையுங் கொள்ளை கொண்டார் என்கிறாள். நலன் – நலம்; மகரனகரப்போலி. குணம் என்றபடி. நாண் மடம் அச்சம் பயிர்ப்பு என்கிற ஆத்ம குணங்களையும், அழகு மென்மை முதலிய தேஹகுணங்களையும் சொன்னபடி. (நாணமாவது, தகாத காரியத்தில் மனமொடுங்கிநிற்பது. மடமாவது, எல்லாமறிந்தும் அறியாதுபோலிருத்தல். அச்சமாவது, மிகச்சிறிய காரணத்திலும் மனம் நடுங்குதல். பயிர்ப்பாவது, பரபுருஷர்களின் ஆடை முதலியன தம்மேற்பட்டால் அருவருப்புக் கொள்வது.) ஆக இக்குணங்களையும் அழகு முதலியவற்றையுங் கொள்ளை கொண்டாரென்றது, வைவர்ணியப்படுத்தி வாய்பிதற்றச் செய்தாரென்றபடி. “என்னலனும் நிறைவும் சிந்தையும் வளையுங் கொண்டு“ என்று சொல்லாதே ‘என்‘ என்பதை ஒவ்வென்றிலுஞ் சேர்த்து ‘என்னிறைவும் என்சிந்தையும் என்வளையும்‘ என்று சொல்லுவானென்? என்னில்; இதில் ஒரு ஸ்வாரஸ்யமுண்டு; அவருடைய ஆபரணங்களையுங் கொள்ளை கொள்ளப் பிறந்தவள் நானாயிருக்க, என்னுடையவற்றை அவர் கொள்ளைகொண்டது என்ன அற்புதம்! காண்மின்!! என்று எடுத்தெடுத்துக் காட்டுகிறபடி. என்னையாளுங்கொண்டு = என் ஸர்வஸ்வத்தையும் அபஹரித்துக்கொண்டு போன மாத்திரமேயோ? அவற்றைச் சுமந்துகொண்டு போவதற்கு. ஆளாகவும் என்னையே அமைத்துக் கொண்டபடி என்னே! என்கிறாள். ஒருவனுடைய வீட்டிலே கொள்ளைகொள்ளப் புகுந்து ஸர்வஸ்வத்தையும் பறித்து அவற்றை அந்த வீட்டுக்குடையவனது தலையிலேயே வைத்துச் சுமக்கச் செய்து கொண்டுபோமாபோலே யிருந்ததீ! என்கிறாள். அன்றியே, “கொம்மை முலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர் குற்றவேல்“ என்கிறபடியே அவரோடு கலந்து பரிமாறின பரிமாற்றத்தையே அடிமையாக நினைத்திருக்கையாலே அதனைச் சொன்னபடியுமாம். இங்ஙனே மறுபடியும் ஒருகால் கொள்ளை கொள்வதற்கு ஆச்ரயம் இருக்கவேணுமே; முதலே போய்விட்டால் பின்னையுங் கொள்ளை கொள்வதற்கு இடமில்லைபாகுமே. ‘உள்ளம். புகுந்தென்னை நைவித்து நாளுமுயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்“ என்று – போகிற உயிரையும் போகவொட்டாமல் நிறுத்திவைப்பது மேன்மேலும் ஹிம்ஸைகளைச் செய்வதற்கு ஆச்ரயம் வேணுமென்றாயிற்று. அப்படியே, பின்னையும் கொள்ளை கொள்வதற்கு ஆச்ரயம் நிறுத்த வேண்டி – (நான் ஸத்தை பெற்றிருப்பதற்காக) ஊரைச் சொல்லிப் போனாரென்கிறாள்; பொன்போலேயலர்ந்து பரிமளம் மிக்கிருந்துள்ள பூவையுடைய ஸுரபுன்னபை் பொழிலினூடே உபயகாவேரீ மத்தியத்திலுள்ள திருவரங்கம் பெரிய கோயில் நம்மூர் என்று சொல்லிக்கொண்டே போயினார் என்கிறாள். இங்கே வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்;- “திருநகரியில் நின்றும் கோயிலளவுஞ் செல்லப் பொழிலாய்க்கிடந்ததோ வென்னில்; ஒரு காளமேகம் வர்ஷித்துக்கொண்டு போகாநின்றால் கண்டவிடமெங்கும் தளிரும் முறியுமாகாதோ? என்று பட்டாருளிச் செய்வர்“ என்று. முற்காலத்தில், விக்ரமசோழதேவன் என்பானொரு அரசன் தமிழில் ரஸிகனாயிருந்தான்; அவனது ஸபையில் வைஷ்ணவ பண்டிதர்களும் சைவபண்டிதர்களும் அடிக்கடி செல்லுவதுண்டு; ஒருகால் இருசமயத்து வித்வான்களும் கூடியிருந்தபோது அவ்வரசன் “தலைமகன் பிரிந்தபோது தலைவி இன்னாப்போடே சொல்லும் பாசுரம் எங்ஙனே யிருக்கிறது? சொல்லுங்கள், கேட்போம்‘ என்று இரு வகுப்பினரையுங் கேட்க, ஸ்ரீவைஷ்ணவ வித்வான் “மின்னலங்கு திருவுருவம் பெரியதோளும்“ என்று தொடங்கி இப்பாசுரத்தை யெடுத்துச் சொன்னார்; சைவ வித்வான் “எலும்பஞ்சாம்பலு முடையவனிறைவன்“ என்று தொடங்கி ஒரு செய்யுளைச் சொன்னான்; இரண்டையுங் கேட்டு அரசன் ‘நெஞ்சில் கிலாய்ப்போடே சொல்லச் செய்தேயும் மின்னிலங்கு திருவுருவும் என்று நெஞ்சு பிணிப்புண்ணுமாறு சொன்னவளே உண்மையில் தலைமையுடையவள்; மற்றொருத்தி பிணந்தின்னி‘ என்றானாம்.


  2087.   
  ஒன்றும் மறந்தறியேன்*  ஓதநீர் வண்ணனைநான்,* 
  இன்று மறப்பனோ ஏழைகாள்* - அன்று-
  கருஅரங்கத்துள் கிடந்து*  கைதொழுதேன் கண்டேன்*
  திருவரங்கம் மேயான் திசை.

      விளக்கம்  


  • ஓதநீர்வண்ணனை என்ற சொல்லாற்றலால்- அவனுடைய வடிவழகு நெஞ்சிலே ஊன்றப் பெற்றவர்கட்கு அவனை மறப்பது ஒருநாளும் ஸம்பாவிதமல்ல என்பது பெறப்படும். கர்ப்பவாஸ காலத்தில் வந்து ஸேவை ஸாதித்தது மாத்திரமே யல்லாமல் எப்போதும் கடாக்ஷித்து விஷயீகரிப்பதற்காகவே திருவரங்கம் முதலான திருப்பதிகளிலே ஸந்நிதனாயிரா நின்றா னென்பது தோன்றத் திருவரங்கமேயான் என்கிறார். மேயான் - மேவியிருப்பவன் திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருப்பவன். இப்பாட்டின் முடிவிலுள்ள திசை என்னும் பதத்திற்கு ‘திக்கு’ என்னும் பொருளாயினும் ‘தன்மை’ என்னும் பொருளில் அஃது இங்குப் பிரயோகிக்கப்பட்டது. இப்பிரயோகம் வட நூல்களிலே விசேஷமாகவுண்டு. இதில் மூன்றாம் மடியில் ஒரு சங்கை பிறக்கும்; அதாவது –பொய்கையிலே ஒரு செங்கமலப் பூவிலே திருவவதரித்ததனால் அயோநிஜராகிய இவ்வாழ்வார்க்கு கர்ப்பவாஸ மென்பது கிடையாதே; அப்படி யிருக்க கருவரங்கத்துள் கிடந்து” என்று இவர்தாம் எங்ஙனே அருளிச் செய்கிறார் என்று; இதற்கு உத்தரமாவது- “கருவரங்கத்துள் கிடந்து” என்ற விதனால், *தீண்டாவழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையுமாய் வேண்டா நாற்றம்மிக்கிருக்கிற கர்ப்பத்தும்பையில் நின்றும் ஆழ்வார் பிறந்தாரென்று கொள்ளவேண்டிய அவசியம் யாதுமில்லை; எவ்விடத்தில் நின்று அவதரித்தாரோ அவ்விடமே கர்ப்பஸ்தாநமாகும்; இந்தவாழ்வாருடைய வாழித்திருநாமத்தில் “வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே” என்றிருப்பதும் இவ்வர்த்தத்தை வற்புறுத்தும் ‘நான் இவ்விருள் தருமா ஞாலத்தில் வந்து தோன்றுவதற்கு முன்னமே எம்பெருமானுடைய கடாக்ஷம் பெற்றவன்’ என்று சொல்லுவதே இங்கு விலக்ஷிதம் “அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்” என்றாற்போலுமாம். “கருவரங்கத்துள்” என்ற விடத்து அரங்கம் என்னும்சொல் ரங்கம் என்ற வடசொல்லின் விகாரம்; அச்சொல் –நர்தனம் செய்யுமிடம், போர் செய்யுமிடம் என்று சிறப்பிடப் பொருளதாயினும் இங்கே ‘இடம்’ என்னும் பொதுப் பொருளிலே நிற்கிறது


  2260.   
  பின் நின்று தாய் இரப்ப கேளான்,*  பெரும் பணைத் தோள்-
  முன் நின்று தான் இரப்பாள்*  மொய்ம் மலராள்*  - சொல் நின்ற-
  தோள் நலத்தான்*  நேர் இல்லாத் தோன்றல்,*  அவன் அளந்த-
  நீள் நிலம் தான்*  அத்தனைக்கும் நேர்.   

      விளக்கம்  


  • ஸ்ரீராமாவதாரத்தில், இராமபிரான் தந்தையின் நியமநங்கொண்டு காட்டுக்குப் புறப்படுகையில் தாயாகிய கௌஸல்யையும் தேவியான பிராட்டியும் வேண்டச்செய்தேயும் அவ்வேண்டுகொளைச் சிறிதுங் காதிற்கொள்ளாமல் ‘தந்தை சொல் தவறலாகாது‘ என்பதுபற்றியும், ‘துஷ்டர்களைத் தண்டித்து சிஷ்டர்களை வாழ்விப்பதற்குப் பாங்காக நமக்கு வாய்த்த வநவாஸத்தை இழக்கலாகாது‘ என்பதுபற்றியும் ஒன்றையும் சிந்தியாது காட்டுக் கெழுந்தருளின பெருங்குணத்திற்கு ஒப்பாகச் சொல்லக்கூடிய விஷயம் வேறொன்றுமில்லை, சொல்லில், அப்பெருமான் வஸிஷ்டசண்டாள விபாகம் பாராமல் எல்லார்தலையிலும் திருவடியை வைக்கத்தாவி யன்றுலகளந்த சரிதமொன்றே ஒப்பாகச் சொல்லத்தகும், இராமனுடைய பெருங்குணத்திற்குத் திரிவிக்ரமனுடைய பெருங்குணமே ஒப்பாகப் பொருந்தவற்று – என்கிறார். இதனால், ‘சந்திரன் சந்திரனைப்போலே அழகியான், கடல் கடல்போலே பெரிது என்னுமாபோலே எம்பெருமானுடைய குணத்திற்கு அவனுடைய குணத்தையே ஒப்புச் சொல்லவேணு மத்தனையல்லது, வேறொருவருடைய குணமும் பகவத்குணத்திற்கு ஈடாக மாட்டாது – என்று காட்டியவாறு. “அத்தனைக்கும் அவனளந்த நீணிலந்தான் நேர்“ என்றதற்கு – இராமபிரானுடைய குணம் எப்படிப்பட்ட தென்றால், “பெரிது பெரிது புவனம் பெரிது“ என்கிறாப்போலே இவ்வுலகம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரிது என்னலாமத்தனை யொழிய, மற்றைப் படியாக அவன் குணத்தை வகையிட்டுச் சொல்ல முடியாது என்றுங் கருத்தாகலாம். சொல்நின்ற – ஸ்ரீராமாயண ப்ரதிபாத்யமாய் நின்ற என்றுமாம். மூன்றாமடியில். “தோள் நலத்தான்“ என்பதே ப்ராசீந பாடம், “தோள் நலந்தான்“ என்றபாடத்திலும் பொருள் பொருந்தும், தோள – திருந்தோள்களுடையனான இராமபிரானுடைய நலந்தானத்தனைக்கும் – மஹாகுணத்துக் கெல்லாம் என்க.


  2411.   
  அவன் என்னைஆளி*  அரங்கத்து அரங்கில்* 
  அவன்என்னை எய்தாமல் காப்பான்*  அவன்என்னது
  உள்ளத்து*  நின்றான் இருந்தான் கிடக்குமே* 
  வெள்ளத்து அரவுஅணையின் மேல்.   

      விளக்கம்  


  • இப்படிப்பட்ட எம்பெருமான் திருப்பாற்கடல் முதலிய ஸ்தாநங்களை விட்டிட்டு என்னெஞ்சிலேயே நிற்பதுமிருப்பதுமாகா நின்றான் என்கிறார். திருவரங்கம் பெரியகோயிலில், குடதிசை முடிவைத்துக் குணதிசை பாதம்நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கித் துயில்கொள்ளுமழகைக்காட்டி என்னை ஆட்படுத்திக்கொண்ட பெருமாள் இனி நான் ஸம்ஸாரமாகிய நாடகசாலையிற் புகாவண்ணம் என்னைக் காத்தருள்வன், அவ்வளவேயன்றி என்னுடைய ஹ்ருதயத்தையே தனக்குப் பரமப்ராப்யமான ஸ்தலமாகத் திருவுள்ளம்பற்றி, நிற்பதும் வீற்றிருப்பதுமெல்லாம் இங்கேயாயிராநின்றான், இனி அவனுக்குத் திருப்பாற்கடலில் திருவரவணையில்தானும் படுக்கை பொருந்துமோ? பொருந்தாது – என்றாயிற்று. அரங்க என்னும் வடசொல் கூத்தாடுமிடம் என்னும் பொருளது, அதுவே தமிழில் “அரங்கு“ எனத் திரிந்தது. நாடகசாலையில் ஒவ்வொருவனே பலபல வேஷங்களைப் பூண்டு கொணடு வருதல்பேல இந்த ஸம்ஸாரத்தில் ஒவ்வொரு ஆத்மாவும் பலபல தேஹங்களைப் பரிக்ர ஹித்துக்கொண்டு அனேக யோனிகளில் பிறப்பதுபற்றி ஸம்ஸாரத்தை நாடகசாலையாகச் சொல்வது நன்கு பொருந்தும். 1. பிறவி மா மாயக்கூத்து“ என்றார் நம்மாழ்வாரும்.


  2441.   
  ஆள்பார்த்து உழிதருவாய்*  கண்டுகொள் என்றும்*  நின் 
  தாள் பார்த்து உழிதருவேன்*  தன்மையை*  கேட்பார்க்கு
  அரும்பொருளாய் நின்ற*  அரங்கனே*  உன்னை 
  விரும்புவதே*  விள்ளேன் மனம்.  

      விளக்கம்  


  • எம்பெருமானை நோக்கி “ஆள்பார்த்து உழிதருவாய்!“ என்று விளிக்கிற விளியின் அழகை என் சொல்லுவோம். “***“ என்று வேதாந்தங்கள் எம்பெருமானை நாம் தேடிப் பிடிக்கவேணுமென்று ஓதுகின்றன, அப்படியிருந்தும் எம்பெருமான் நம்மைத் தேடிப் பிடிப்பதற்கு அலைந்து திரிகின்றானென்கிறார் காண்மின். எம்பெருமான் ஸர்வஸ்வாமியென்பதும் சேதநாசே தநங்களடங்கலும் அவனுடைய ஸொத்து என்பதும் தேர்ந்த விஷயம். ஸொத்து தவறிப் போனால் அதனைத் ஸ்வாமியான தன்னுடைய திருவடிகளில் நின்றும் தவறிப்போன தானேயாகையால் இந்த விளி மிகப் பொருந்தும். ஸ்ரீவசநபூஷணத்தில் “ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்குகப்பானுமவனே“ என்றருளிச் செய்த்தும் இதுபோன்ற அருளிச் செயல்களை அடியொற்றியேயாம். ஆள்பார்த்து உழிதருவாய் – “நம்பலையிலே அகப்படுவார் ஆரேனுமுண்டோ“ என்று இதுவே கவலையாக இவ்விபூதியில் வந்து திரிந்துழன்று தேடிக்கொண்டிருப்பவனே! என்கை. இப்போது இது சொல்லுகிற எதுக்காகவென்னில், நீ இப்படி ஆள்தேடிந் திரிகிறவன் ஆகையாலே யாத்ருச்சிகமாக உன்வலையில் சிக்கிக் கொண்ட என்னை விட்டுவிடலாகாது என்கைக்காக. அதனையே “நின்தாள் பார்த்தழிதருவேன் தன்மையை என்று கண்டுகோள்“ என்றதானா லருளிச்செய்கிறார். இப்போது நான் உனது திருவடிகளையே நோக்கிக் கொண்டிருப்பது போலவே என்றைக்கும் இருப்பேனாம்படி கடாக்ஷித்தருளவேணு மென்கை. “உன்னை விரும்புவதே விள்ளேன். மணம்“ என்ற ஈற்றடியையும் ‘கண்டுகோள்‘ என்ற வினைமுற்றோடே கூட்டியுரைத்துக் கொள்ளலாம், அதாவது நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை நெஞ்சில் தவிராதவனாயிருக்கும்படியாக நீயே கடாக்ஷித் தருளவேணும் என்பதாம். இது தாத்பர்ய வ்ருத்தியாகும்.


  2505.   
  தண் அம் துழாய்*  வளை கொள்வது யாம் இழப்போம்,*  நடுவே-
  வண்ணம் துழாவி*  ஓர் வாடை உலாவும்,*  வள் வாய் அலகால்-
  புள் நந்து உழாமே பொரு நீர்த் திருவரங்கா! அருளாய்*  
  எண்ணம் துழாவுமிடத்து,*  உளவோ பண்டும் இன்னன்னவே? 

      விளக்கம்  


  • கீழ்ப்பாசுரத்தில் தோற்றுவித்த ஸம்ச்லேஷம் கனவின் காட்சிபொன்றதாதலான க்ஷணிகமாயிற்று; பழைய விச்லேஷவ்யஸநமே தோன்றிற்று. ஆகவே, நாயகனைப் பிரிந்த நாயகி வாடைக்கு வருந்தியிரங்கும் பாசுரத்தாலே ஆழ்வார் தமது க்லேசத்தை வெளியிடுகிறார். ஆற்றாமை மிகுதியால் தலைவனை எதிரில் நிற்கிறாப்போலப் பாவித்து முன்னிலைப்படுத்திக் கூறியது இது. அன்றி, உருவெளிப்பாட்டில் கண்ட தலைவனை நோக்கியுரைதத்ததுமாம். உன்னோடு நேரில் ஸம்பந்தம் பெற்று திருத்துழாயானது விச்வேஷகாலத்தில் ஸம்ச்லேஷத்தை நினைப்பூட்டி மிகவும் வருத்தப்படுத்தி உடலிளைக்கச் செய்வதும் அதற்கு ஆற்றாது நாமெலிந்து வளையிழப்பதும் யுக்தமாயிருக்கலாம்; அதுவன்றி, “பீஷாஸ்மாத் வாத: பவதே” வாயுவானவன் எம்பெருமானிடத்து அஞ்சிக்கொண்டு (அவனது கட்டளைக்கு உட்படிந்து) வீசுகின்றான்” என்ற உபநிஷத்தின்படியே இயல்பில் உனக்கு அஞ்சி நடக்குந் தன்மையான காற்று உனது ஸம்பந்தம்பெற்ற நம்மை மையம் பார்த்து வருந்திக் கொள்ளை கொள்ளைத் தொடங்குவது தகுதியோ? காற்று உன்னை நலிய என்ன ப்ராப்தியுண்டு! அங்ஙனம் ஆகாதபடி எம்மைக் காத்திட வேண்டும்; உன் பக்கல் அன்பு வைத்தவர்களில் எம்மைப்போல் வருந்தியவரும் உன்னால் உபேக்ஷிக்கப்பட்டவரும் இதுவரையிலும் எங்கும் எவருமில்லையேயென்கிறாள். திருத்துழாயானது என்னை எவ்வளவு வேணுமானாலும் ‘துன்பப்படுத்தட்டும், அதற்று நான் உடம்பட்டிருக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றது அதில் நோக்குடையதல்ல; ‘காற்று என்னை ஹிம்ஸிப்பதாவது ஒருபடியாலும் யுக்தமன்று, என்று வற்புறுத்திக் கூறுவதில் நோக்குடைத்து. ஒருபுறத்தில் திருத்துழாய் நலியவும் மற்றொருபுறத்தில் வாடை வந்து வீசி கலியவும் இப்படி இரண்டு ஹிம்ஸநவஸ்துக்களுக்கு ஈடுகொடுக்க என்னாலாகவில்லையே! இந்த ஹிம்ஸைக்கு அவகாசமின்றநியே ஸம்ச்லேஷத்தைத் தந்தருளாய் என்றவாறு


  3464.   
  கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்*  கண்ண நீர் கைகளால் இறைக்கும்,* 
  சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும்*  தாமரைக் கண் என்றே தளரும்,* 
  எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்*  இரு நிலம் கை துழா இருக்கும்,* 
  செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!*  இவள் திறத்து என் செய்கின்றாயே?  (2)   

      விளக்கம்  


  • (கங்குலும் பகலும்.) பேச்சுக்கு நிலமல்லாதபடி தன் மகளுக்குண்டாயிருக்கிற நிலைமையைப் பெரியபெருமானுக்கு அறிவித்து இவள் விஷயமாக நீர் செய்தருள் நினைக்கிறது என்னோ? என்று கேட்கிறாள் ஸ்ரீபராங்குச நாயகியின் திருத்தாய். கங்குலும் பகலும் கண்துயிலறியாள்- கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே என்று (திருவித்தத்தில்) அருளிச் இவ்வாழ்வாரேயாதலால் இரவோடு பகலோடு வாசியறக் கண்துயிலாதே இவர்க்கு. ஸம்ஸாரிகள் உறக்கமே யாத்திரையாயிருப்பர்கள். ஆழ்வார் இந்நிலத்திலிருந்துவைத்தே இமையோர் படியாயிருப்பர். விசாரமுள்ளவர்கட்குக் கண்ணுறங்குமோ? என்றுகொல் சேர்வாந்தோ என்றும் எந்நாள்யானுங்னையினிந்து கூடுவனே என்றும் இடையறாத விசாரங்கொண்ட விவர்க்குக் கண்ணாறங்க விரகில்லையன்றோ. “கண்துயில் அறியாள்’ என்றதன் கருத்தை நம்பிள்ளை காட்டியருளுகின்றார் -“ஸம்ச்லேஷத்தில் அவன் உறங்கவொட்டான்; விச்லேஷத்தில் விரஹவ்யஸநம் உறங்கவொட்டாது; ஆகையாலே இவளுக்கு இரண்டு படியாலும் உறக்கமில்லாமையாலே அறியாளென்கிறது.”


  3465.   
  என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா!   என்னும்*  கண்ணீர்மல்க இருக்கும்,* 
  என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்?  என்னும்*  வெவ்வுயிர்த்துஉயிர்த்து உருகும்:*
  முன்செய்த வினையே! முகப்படாய் என்னும்*  முகில்வண்ணா! தகுவதோ? என்னும்,* 
  முன்செய்து இவ்உலகம் உண்டுஉமிழ்ந்துஅளந்தாய்!*  என்கொலோமுடிகின்றது இவட்கே?

      விளக்கம்  


  • கண்ணீர் மல்கவிருக்கும் எங்கும் பக்கநோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணனே என்னும்படி பிராட்டிமார் திருமுலைத்தடத்தாலே நெருக்கியணைத்தாலும் புரிந்து பாராதே ஏகாக்ரமாக அன்று கடாக்ஷித்தருளின திருக்கண்கள் இன்று எங்கேபோயினவோவென்று உள்குழைந்துருகிக் கண்ணீர் நிரம்பப்பெற்றாள். எறிநீர்த் திருவரங்கத்தாய் என்செய்கேன் என்னும்-என்னுடைய தாபம் தீரும்வழி எனக்கொன்றும் தெரியவில்லையே; இன்னது செய்வதென்று தோன்றவில்லையே; பொன்னி சூழரங்கமேய பூவைவண்ணா! நான் என்ன செய்தால் என் தாபமாறும்? நீயே சொல்லப் என்கிறாள். இங்கே திருவரங்கத்திற்கு ‘எறிநீர்’ என்று விசேஷணமிட்டிருந்தலால் ‘என்னைக் கொண்டுசென்று திருக்காவேரியிலே போடவல்லார் ஆரேனுமுண்டோ!’ என்று அலைபாய்வதாகத் கருத்துத் தோன்றும். திருக்காவேரியிலே கொண்டுவந்து போடுவானேன்? தம் கண்ணெதிரே தாமிரபர்ணி இல்லையோ? அதில் விழலாகாதோவென்று சிலர் கேட்கக்கூடுமே; அதற்கு நம்பிள்ளை யருளிச் செய்கிறார்-“திருப்பொருநலில் நீர், பிரிந்தார்க்கு நிலாப்போலே உபதப்தமாயிரா நின்றதுபோலே.” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. தம்முடைய தாபம் தாமிரபர்ணயிலும் எறிப்பாய்ந்து அதிலே அடிவைக்கவும் அணுகவும் போகாமையாலே திருக்காவேரியிலே திருவுள்ளம் சென்றதென்கை. வெவ்வுயிர்த்துயிர்த்து உருகும் - பிரிந்தவர்கள் பூவும் பல்லமுமான செடிகொடி மரங்களை அருகே கண்டால் ஆறியிருக்க மாட்டார்களே; தஹந்தீவமிவ நிச்ச்வாஸை: வ்ருகூஷாந் பல்லவதாரிகை: என்று பிராட்டியானவள் பல்லவந்திகழ் பூஞ்செடிகளைப் பஸீருழுச்சசெறிந்து அழிக்க நினைத்தாப் போலே இப்பாராங்குச நாயகியும் நீள்பொழில்குருகூரை உஷ்ணோஷ்ணமான பெருமூச்செறிதலாலே பங்கம் செய்யப்பார்த்தாள் போலும், உருகும் என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;- “உருகுகிறபடியே நிற்குமத்தனை; இனி நெடுமுச்செறிகைக்கு தர்மியுமில்லையோ வென்னும்படி யுருகும்; வெவ்விடதாகப் பலகால் நெடுமூச்செறிந்து அவ்வுஷ்ணத்தாலே உருகாநிற்கும்.” முன்செய்தவினையே முகப்டாயென்னும்-எம்பெருமான் என்னை இப்படி உபேக்ஷிக்கும்படி நான் என்ன பாவம் பண்ணிவிட்டேன்? அப்படி நான்செய்த பாவம் ஏதேனுமுண்டாகில் அது என்னெதிரே வந்து நிற்கட்டுமே என்கிறாள். நாம் முன்செய்த முழுவினையால் இழக்கிறோமேயல்லது அவன்மேலே பழிசொல்லிப் பயனென்? என்று திருவுள்ளம் போலும். மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந ஸம்சய: என்று பிராட்டி தான் செய்த பாபத்தின் பலனைத் தான் அநுபவிப்பதாகச் சொன்னாளன்றோ.


  3466.   
  வட்குஇலள் இறையும் மணிவண்ணா! என்னும்*  வானமே நோக்கும் மையாக்கும்,* 
  உட்குஉடை அசுரர் உயிர்எல்லாம் உண்ட*  ஒருவனே! என்னும் உள்உருகும்,*
  கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்*  காகுத்தா! கண்ணனே! என்னும்,* 
  திண்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் செய்திட்டாயே?

      விளக்கம்  


  • சிறிது மயக்கம் தெளிந்தவாறே உட்குடையசுரருயிரெல்லாமுண்ட வொருவனே! யென்கின்றாள். தேவர்களுக்காக உடம்பு நோவக் காரியஞ்செய்து அசுரர்களோடே பொருது வெற்றிபெற்று வருவமனே! என்கிறாள். ஆண்புலிகளுக்கோ காரியஞ் செய்வது! பெண்பிறந்தார்க்குக் காரியம் செய்யலாகாதென்று திருவுள்ளமோ? பிரயோஜநாத் பரர்களுக்கேயா காரியஞ்செய்வது? அநந்ய ப்ரயோஜநர்களுக்குக் காரியம் செய்யலாககாதென்று திருவுள்ளமோ? பெருமிடுக்கர்களுக்கேயோ காரியஞ் செய்வது? அபலைகளுக்குக் காரியஞ் செய்யலாகாதென்று திருவுள்ளமோ? காரியமாகுமளவும் திருவடியைப் பற்றிக்கிடந்து, காரியம் தலைக்கட்டினவாறே மார்பு நெறித்து எதிரிடுமவர்களுக்கேயோ காரியஞ் செய்வது? அருளினபோதோடு அருளாத போதோடு வாசியற உன் திருவடிகளே தஞ்சமென்றிருப்பார்க்குத் காரியஞ் செய்யலாகாதோ? என்கிற நிர்வேதங்கள் இந்த விளியிலே தோன்றும் உட்கு-மிடுக்கு. உள் உருகும் - அத்தலையிலுள்ள திருக்குணங்களை நினைத்தும், தன்னுடைய மநோரதம் நிறைவேறப்பெறாமை பற்றியும் நீர்ப்பண்டம்போலே யுருகின்றாள். கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய் என்னும்-ஒருநாளும் கண்ணுக்கும் இல்க்காதவனென்று சாஸ்த்ரங்களில பேசப்பட்டிருக்குமவனே! உன்னை நான் காணும் வகை அருள் வேணுமென்கிறாள். நஸந்த்ருசே திஷ்ட்டதி ரூபமஸ்ய ந க்ஷிஷா பச்யதி கச்சநை நம் என்றும் நமாம்ஸசக்ஷூ அபிவீக்ஷ்தே தம் என்றும் ஒருவருடைய கண்ணுக்கும் இலக்காகாதவனென்று ஓதியிருக்கையாலே கட்கிலி யென்றது. கட்கு-கண்ணுக்கு, இலி-விஷயமாகாதவன் என்றவாறு. கண்ணுக்கு இலக்காகப் பெறதவனென்று அறிந்துவைத்து ‘காணுமாறருளாய்’ என்றால் இது அஸங்கதமன்றோ வென்னில், நசக்ஷூஷா பச்யதி கச்சநைநம் என்று ஓதின உபநிஷத்தே தஸ்யைஷ ஆத்மா விவிருணுதே தநூம் ஸ்வாம் என் என்று ஓதி வைத்திருக்கையாலே அப்பெருமான் தானே பரகதஸ்வீகாரமாகக் காட்டியருள்வது உண்டாகையாலும், அவன் தானே கீதையிலே -திவ்யம் ததாமி தேக்ஷூபச்ய மே யோகமைச்வரம் என்று திவ்ய சக்ஷூஸ்ஸைக் கொடுத்துக் காட்டி யருளினமை பரஸித்தமாகையாலும் அது பற்றசாகக் காணு மாறருளாய் என்னக்குறையில்லை. காகுத்தானாயும் திருவவதரித்து அப்படி காட்டிக் கொடுத்ததில்லையோ என்பது ‘காகுத்தா கண்ணனேயென்னும்’ என்பதில் உறையும். ஆமாம்; கட்கிலியானவென்னைக் காட்டிக்கொடுப்பதற்கென்றே விபவாவதாரங்கள் செய்தேன்; அப்போது வந்து தோன்றாமல் இப்போது காணுமாறருளாய் என்றால் எங்ஙனேயருளமம்படி? என்று எம்பெருமான் திருவுள்ளமாக, திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்! என்கிறாள் திருத்தாய். அவதாரகாலத்தில் இழந்தொருடையவும் இழவு தீர்க்கவன்றோ இங்கே வந்து சாய்ந்தருளிற்று. ‘வருவாரெல்லாரும் வாருங்கோள்’ என்று கொடிகட்டிக் கொண்டன்றோ கிடக்கிறது.


  3467.   
  இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்*  எழுந்துஉலாய் மயங்கும் கை கூப்பும்,* 
  கட்டமே காதல்! என்று மூர்ச்சிக்கும்*  கடல்வண்ணா! கடியைகாண் என்னும்,*   
  வட்டவாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,* 
  சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்!*  இவள்திறத்து என் சிந்தித்தாயே? 

      விளக்கம்  


  • காதல் கட்டமேயென்று மூர்ச்சிக்கும்-பகவத் விஷயத்தில் காதலைத் தாங்குவது மிகவும் கஷ்டமென்கிறாள். பசியனுக்குச் சோறு கிடையாதொழிந்தால் பசிக்கு ஆற்றமாட்டாமே பரிதபிக்குமமாபோலே ஆழ்வார் தமது காதலுக்குப் பரிதபிக்கிறார் காணும். அடியிலே மயர்ஹமதிநல மருளினன் என்று பக்தியைக் கொடுத்தருளினமைக்கு உகந்து பேசினார்; இப்போது அந்த பக்திக்குத் தக்க இரை கடைக்காமையினாலே ‘அந்தோ! கஷ்டத்தையன்றோ அவன் கொடுத்தது’ என்று வெறுத்துப் பேசுகிறார். ‘பகவத் விஷயத்தில் காதலே புருஷார்த்தம்’ என்று பலகாலும் அறுதியிடுகின்ற ஆழ்வார், இப்போது ‘காதலுக்கு மேற்பட்ட ஆபத்து இல்லை’ என்று பேசுகிறபடி என்னே!. இந்த கஷ்டத்துக்குப் பரிஹாரமில்லாமையாலே (மூர்ச்சிக்கும்) ஆத்மா உள்ளவரையில் இப்படி கஷ்டமே அநுபவிக்க வேண்டியன்றோ நம் கதியாயிற்று! என்று சொல்லி மோஹியா நின்றாள். கடல்வண்ணா! கடியை காண் என்னும்-கடலானது ஸகல பதார்த்தங்களையும் தன்னுள்ளே யடக்கி ஒன்றையொன்று நலியாதபடி நோக்குமாபோலே நீயும் நோக்குமவன் என்பது பற்றிப் பிரானே! உன்னைக் கடல்வண்ண னென்கிறார்கள்: அப்படி நோக்குவாயல்லையே நீ; கண்ணற்றவனாயிருக்கின்றாயே! என்கிறாள். கடியை -கடியன் என்பதன் முன்னில்: நிர்க்ருணனாயிருக்கின்றாய் என்றபடி. வட்டவாய் நேமி வலங்கையாவென்னும்-கையுந் திருவாழியுமான அழகைக் காணவேணுமென்று ஆசைப்பட்டு அதைப் பூர்த்தியாகச் சொல்லமாட்டாதே நடுவேயிளைத்து அரைகுறையான சொல்லோடே முடித்து, வந்திடாயென்றென்றே மயங்குகின்றாள். ஒருகால் ‘வந்திடாய்’ என்று சொல்லி ஆறியிருக்கமாட்டாமையாலே, விடாய்த்தவன் தாஹம் தீருமளவும் ‘தண்ணீர் தண்ணீர்’ என்றே வாய் வெருவுமாபோலே ‘வந்திடாய் வந்திடாய் என்றே ஊடுருவச் சொல்லுகின்றாள்; அங்ஙனம் சொல்லிக்கொண்டே மயங்குகின்றாள்; மயங்கினாலும் வாஸநையாலே வாய்ச்சொல் அநுவர்த்தியாநிற்கும். சிட்டனே-சிஷ்டனென்று ஆசாரசீலனுக்குப் பெயர். இங்கு, சிஷ்ட பாவதை பண்ணியிருப்பவனே! என்று விபாறித லக்ஷ்ணையாகப் பொருள் கொள்ளவேணும். உம்மைப்போலே நாலு சிஷ்டர்கள் இருந்தால் பெண்கள் நன்றாகக் குடிவாழலாம்! என்று பரிஹஸித்துச் சொல்லுகிறபடி ‘ப்ரஹ்மஹத்யைகளைப் பண்ணிப் பூணுலீலை வெளுக்கவிட்டுக் கையிலே பவித்ரத்தையுமிட்டு ஒத்துச் சொல்லித் திரிவாரைப் போலே யிருந்ததீ! உம்முடையபடி.” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.


  3468.   
  சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்*  திருவரங் கத்துள்ளாய்! என்னும் 
  வந்திக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க*  வந்திடாய் என்றுஎன்றே மயங்கும்,*
  அந்திப்போது அவுணன் உடல்இடந்தானே!*  அலை கடல் கடைந்த ஆர்அமுதே,* 
  சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த*  தையலை மையல் செய்தானே!

      விளக்கம்  


  • இரணியனாகிறான் - தேவர் மனிதர் முதலிய எவ்வுயிர்களாலும் பகலிலும் இரவிலும் வானத்திலும் பூமியில் வீட்டின் அகத்திலும் புறத்திலும் தனக்கு மரணமுண்டாகாதபடி வரம் பெற்றவன். இவன் தேவர் முதலிய யாவர்க்கும் பல பல கொடுமைகளைப் புரிந்து அனைவரும் தன்னையே கடவுளாக வணங்கும்படி செய்து வருகையில், அவன் மகனான ப்ரஹ்லாதாழ்வான் இளமை தொடங்கி மஹாவிஷ்ணுபக்தனாய்த் தந்தையின கட்டளைப்டி முதலில் அவன் பெயரைச் சொல்லிக் கல்வி பக்தனாய்த் தந்தையின் கட்டளைப்படி முதலில் அவன் பெயரைச் சொல்லிக் கல்வி கற்காமல் நாராயண நாமம் சொல்லிலரவே கடுங்கோபங்கொண்ட இரணியன் ப்ரஹ்லாதனைத் தன் வழிப்படுத்துவதற்குப் பலவாறு முயன்றபின் அங்ஙனம் வழிபடாத அவனைக் கொல்வதற்கு என்ன வுபாயஞ் செய்தும் அவன் பகவானுடைய அனுக்ரஹ பலத்தினால் ஒரு கேடுமின்றி யிருக்க, ஒருநாள் சாயங்காலத்திலே அந்த ஹிரண்யன் தன் புந்திரனை நோக்கி, = சொல்லும் நாராயணனென்பான் எங்கேயுளன்? காட்டு; என்ன, தூணிலுமுளன், துரும்பிலுமுளன் எங்குமுளன்” என்று உறுதியாகச் சொல்ல, உடனே அதிலிருந்து திருமால் மனுஷ்ய ரூபமும் சிங்க வடிவுங் கலந்த நரசிங்கமூர்த்தியாய்;த் தோன்றி இரணியனைப் பிடித்து வாசற்படியிர் தன் மடிமீது வைத்துக்கொண்டு தன் திருக்கையில் நயங்களால் அவன் மார்பைப் பிளந்து அழித்திட்டு ப்ரஹைலாதனுக்கு அருள் செய்தானென்பது பிரஸித்தம். வேறொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால், முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளேவைத்து நாட்டிய தூண் அது என்று சொல்லிவிடச் கூடுமாகையாலே அந்த வார்த்தைக்கு இடமில்லாதபடி அந்த இரணியன் தானே தனது உயரம் பருமனுக்குப் பொருந்தப் பார்த்து அளந்து நாட்டிய அவன் வாசல் தூணிலிருந்தே திருமால் நாசிங்கமாய்த் தோன்றினானென்பதும் வேறு யாரேனும் கையால் தட்ட அத்தட்டியவிடத்திரலிருந்து தோன்றினால் அவர் தற்கையில நரசிங்கத்தை அடக்கிக் கொண்டு வந்து தூணிலே பாய்ச்சினானர் என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு அவகாசமில்லாதபடி அவ்விரணியன் தானே தன் கையால் தட்டின வளவில் திருமால் தோன்றினானென்பலும்,-அவன் ஓரிடத்தில் தட்ட மற்றோஜீடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் ‘எங்குமுளன்’ என்று ப்ரஹ்லாதன் செய்த பிரதிஜ்னஞ் தவறி ‘நீ சொல்லுகிறவன் இங்கில்லை’ என்று இரணியன் செய்த பிரதிஞ்ஞை நிலைநிற்குமாகையாலே அதற்கு இடமில்லாதபடி அவன் தட்டின இடத்திலிருந்தே திருமால் தோன்றினானென்பதும், -அவன் தட்டின பிறகு சிறிதுபோது கழித்து நரசிங்கம் தோன்றியனால் ‘நான் தட்டினபொழுதும் எல்லாப் பொள்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உண்மைநிலையை மறுக்கக்கூடுமாகையாலே, அதற்கு இடமறும்படி கர்ப்பம், கருமுதிர்தல், ப்ரஸவித்தல் முதலியனவும் குழந்தையாய் ஜனித்தல் பிறகு நாளடைவில் வளர்தல் என்பனவுமில்லாமல் அவ்வெதிரியினும் பருத்து வளர்ந்த வடிவுடையவனாய் அப்பொழுதே தோன்றின னென்பதும்-அங்ஙன தோன்றியவிடத்தும் ஹமிரண்யன ஜயசீலனாகவும் நரஸிம்ஹன் பராஜிதனாகவும் நேர்ந்தால் ‘எங்குமுளன்’ என்ற உண்மை நிலைத்தாலும் பரத்வம் ஸித்தியமாமற் போய்விடுதல் பற்றி அதைவிடத் தோன்றிமலிருப்பதே நலமென்னும் படியிருக்குமாதலால் அங்ஙனமாகாதபடி அக்கொடியவனைத் தவறாவது அழித்தன னென்பதும், -தேவர், மனிதர், விலங்குகள் தாவரம் என்னும் நால்வகைப் பிறப்புக் களிலள்ளவற்றில் ஒவ்வொன்றிலும் தனித்தனி சாகாதபடியும், ப்ரஹ்மஸருஷ்டிக்கு உட்பட்ட எந்த பிராணியினாலும் சாகாதபடியும அவன் ப்ரஹ்மருத்ராதிகளிடத்திற பெற்ற வரம் பழுதுபடாமைக்காக நரங்கலந்த சிங்கமாய் ப்ரஹ்மஸ்ருஷ்டியினுட் படாமல் தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டு தோன்றினனென்பதும்,- அஸ்த்ரசஸ்த்ரங்களொன்றினாலும சாகாதபடியும்; ஈரமுள்ளதனாலும் ஈரமில்லாததினாலும் இறவாதபடியும் பெற்ற வரம் வீண் போகாமே நகங்களினால் கீண்டு கொன்றனனென்பதும், பகலிலுமிரவிலுஞ் சாகாதபடி பெற்றவரம் பொய்ப்படாதபடி அப்பசுலிரவுகளின் ஸந்தியாகிய மாலைப்பொழுதிலே கொன்றனனென்பதும்,- பூமியிலும் வானத்திலும் சாகாதபடி பெற்றவரம் மெய்யாகும்படி தம் மடிமீது வைத்துக் கொன்றனனென்பதும்,-வீட்டின் அகத்திலும் புறத்திலும் அறவாதிருக்கும்படி பெற்றவரத்திற்கு விரோதமின்றி வாசற்படிமீது வைத்துக் கொன்றானென்பதும் இவைபோன்ற பல விசேஷங்கள் இவ்வதாரத்திலே அருமையாக நோக்கத் தக்கவிஷயங்களாம். அயலகடல்சடைந்த ஆரமுதே-உன்னை அமுதமாக நினையாதே உப்புச் சாற்றை அமுதமதாக நினைத்து அகற்காக உன் திருமேனியை நோவுப்படுத்துமார் களுக்கோ நீ உதவலாவது? ஆராவமுதாயடியேனாவியமே தித்திப்பாய் என்றும், அமுதிலுமாற்றவினியன் என்றும இருப்பார்க்கு உகவலாகாதோ? உன்னைகிட்டி உன் சரணம் சாவதே வலித்த தையலை மையல் செய்தானே!-உன்னைக்கிட்டி உனிஸன்னிதியிலே முடியவேணுமென்று திண்ணிதான அத்யவஸாங் கொண்டிருக்கிற இவளை இப்படி அறிவு கெடுப்பதே! என்கிறாள். இங்கு ஆறாயிரப்படியருளிச்செயல்; -“உன் திருவடிகளை ஒருகால் கண்டு ஸமச்லேஷிக்க வேணுமென்னு மாசையாலே தன்னை தரித்துக் கொண்டிருக்கிற இப்பெண்பிள்ளையை இப்பாடு படுத்த வேணுமோ?”


  3469.   
  மையல்செய்து என்னை மனம்கவர்ந்தானே!  என்னும்*  மா மாயனே! என்னும்,* 
  செய்யவாய் மணியே! என்னும்*  தண் புனல்சூழ்  திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*
  வெய்யவாள் தண்டு சங்குசக்கரம் வில்ஏந்தும்*  விண்ணோர் முதல்! என்னும்,* 
  பைகொள் பாம்புஅணையாய்! இவள் திறத்துஅருளாய்*   பாவியேன் செயற்பாலதுவே. 

      விளக்கம்  


  • என் பக்கலிலே அளவுகடந்த வியாமோஹத்தைப் பண்ணி என்னை அறிவழித்து எனது மணத்தைக் கொள்ளை கொண்டவனே! என்கிறாள். அப்படி ஸம்ச்லஷிக்குமளவில் வார்த்தையருளிச் செய்யுமளவில் திருப்பவளத்திலும் திருவுடன்பிலும் பிறக்கும அழகை நினைத்துச் செய்யவாய் மணியே! என்கிறாள்; கோயிலில் கண்வளர்ந்தருளுகிறபடியை நினைத்து இக்கிடைதனக்கு உபயுக்தமாகிறதில்லையே! என்கிற பரிதாபம் தோற்ற விளிக்கின்றாள். அடியார்களுடைய ஆபத்துக்களைப் போக்குகைக்காகக் கொடியவையான திவ்யாயு தங்களை ஏந்தியிருக்கின்ற நீ என்னுடைய பிரதிபந்தகங்களை நீக்கி என்னோடே ஸம்ச்லேக்ஷிக்கிறாயல்லையே என்று இன்னாப்புத் தோற்றச் சொல்லுகிறாள். பிரானே அரவணையை விட்டு நீ பரியாதிருக்கிறாப்போலே இவளையும் விட்டும பிரியாதிருக்க படாநிற்க, இந்த கிலேசத்தைப் போக்க வழிதேடாதே படுக்கை விரித்துக் கிடந்து றங்குவதே! இஃது என்னே; இவளை இப்படி காணவைத்த பாபத்தையுடைய நான் இவள் திறத்துச் செய்யக்கூடியதை அருளிச் செய்யவேணும் என்கிறாள் தாய். “மையல் செய்தென்னை மனங் கவர்ந்தானே!” என்றவிடத்திற்குப் பிள்ளான் அருளிச் செய்வது பாரீர்;- “அதிக்ஷூத்ரமான காகத்தின் பக்கலிலே ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டருளின உன்னுடைய ஸர்வவசீகரணமான ப்ரணயித்வகுணத்தாலே என்னுடைய மநஸ்ஸை அபஹரித்தவனே!” என்று. ஒரு காகம் பிராட்டி திருமேனியிலே சிறிது நலிவை உண்டுபண்ணிற்றென்று அதன்மேலே ப்ரஹ்மாஸ்த்ரத்தை விட்டருளினமை ஸ்ரீராமாயண ப்ரஸித்தம். அல்பமான அபராதத்திற்காக இப்படிப்பட்ட மஹத்ரமான செயலைச் செய்யுமளவில் “அந்தோ! நம் மீது இப்படியும் ஒரு மையல் உண்டாவதே!” நமக்காகவன்றோ இவ்வரிய பெரிய செயல் செய்தது!” என்று நெஞ்சை பறிகொடுக்க வேண்டும்படியாகுமென்றவாறு.


  3470.   
  பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!*  பற்றிலார் பற்றநின்றானே,* 
  காலசக்கரத்தாய்! கடல்இடம் கொண்ட*  கடல்வண்ணா! கண்ணனே! என்னும்,*
  சேல்கொள் தண்புனல்சூழ் திருவரங்கத்தாய்!  என்னும்*  என்தீர்த்தனே என்னும்,* 
  கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்*  என்னுடைக் கோமளக் கொழுந்தே

      விளக்கம்  


  • எம்பெருமானுடைய ஸ்ருஷ்டிக்ரமத்தை நோக்குமிடத்த இன்பதுன்பங்களை அந்தந்த ஆச்ரயங்களுக்குத் தகுதியாக அமைக்கின்றபடியைக் காணாநின்றோம். அனுகூலர்கள் இன்பங்கள் யநுபவிப்பதென்றும். பிரதிகூலர்கள் துன்பங்களை யநுபவிப்பதென்றும் விரம்புகட்டி வைத்திருப்பதுண்டே; அந்த வரம்புக்கு நான் பஹிர்ப்பூதையோ என்கிறா ளென்மகள். இரண்டாமடியில் முடிவிலுள்ள என்னும் என்பது விளிதோறும் அந்வயிக்கக் கடவது. பால-பால் என்று இடத்திற்குப் பயர்; பால என்பது அந்தந்த இடத்திற்குத் தகுதியாக என்றபடி. அந்தந்த பதார்தத்தங்கள் பொறுக்குமாளவுகளிலே யன்றோ நீ ஸூகதுக்கங்களைச சுமத்துவது; ‘தன் காய்பொறாத கொம்பு என்னும்படி யான ஸ்ருஷ்டி இல்லையே, அதற்கு மாறாக இப்படி என்னைப் படுத்தலுலீமோ? என்கிறாள். பற்றிலார் பற்றநின்றானே!-அசரண்ய சரண்யன் என்று விருதூதித்திரி கிறாயே!; என்னைத் துடிக்க விட்டிருக்கு முனக்கு இந்த விருது தகுமோ? கள்ளிச் செடியை மஹாவிருக்ஷ்மென்னுமாபோல யாகுமென்றோ வென்கிறாள். காலசக்கரத்தாய்!-இதற்கு இரண்டுபடியாகப் பொருள் கூறுவர். கால சக்ரத்துக்கு நியாமகனானவனே! என்பது ஒரு பொருள். ‘உமக்கு அருள் செய்கைக்கு ஒரு கால நியமுண்டு’ என்பாயாகில், பிரானே! காலமென்று அப்படியொன்றுண்டோ? நீ ஸங்கல்பிக்கு மதுவே காலமன்றோ? காலசக்ரத்தைத் தன்னிஷ்டப்படி நடத்தவல்லவுனக்கு இதுவொரு வார்த்தையோ? என்பதாகக் கொள்க. காலன் என்று யமனுக்குப் பேராகையாலே, விரோதிக்கு மிருத்யுவான திருவாழியை யுடையவனே! என்பதும் ஒருபொருள். கடலிடங்கொண்ட கடல்வண்ணா கண்ணனே! - ஏஷ நாராயண: ஸ்ரீமாந்க்ஷுரார்ணவ நிகேதந: - நாகபாயங்க முத்ஸ்ருஜ்ய மதுராம் புரீம் என்கிற பிரமானத்தை விரித்து அதன் மேலே கள்ளநித்திரை கொள்கின்றபடியை விட்டு அடையனாய் வந்து பிறந்தாய்; அவ்விருப்பையும் விட்டுக் கோயிலே வந்து சாய்ந்தருளிநாய்; இதலெல்லாம் பழுதே போகா நின்றதே யென்கிறான் மூன்றாமடியால். சேல்கொள் தண்புனல்சூழ் என்றது ஸாபிப்ராயம். பிரானே! மீன்களில் படியை நீ ப்ரத்யக்ஷுகரிக்கவல்லையே; மீன் நீரைவிட்டுப் பிரிந்தால் துடிக்கும்படியை அறிவாயே. அப்படியே காண் என்படியும் என்று சொல்லுமாபோலே யிருந்தது. இவன் உம்மைப் பிரிந்து தரிக்கவல்லளாவது; அவ்வூரிலே வர்த்திக்கிவுமக்குப் போருமோ இவளுக்கு முகங்காட்டாதொழிகிறவிடம்.” என் தீர்த்தனே என்னும்! என்னளவில் மிக்க பரிசுத்தியை யுண்டாக்கினவனே! என்கிறாள். அதாவது நீ முகம் காட்டாதொழிந்தாலும் உன்னையொழிய வேறிடம் நெஞ்சாலும் நினைக்கமாட்டாதபடி செய்திருப்பவனே’ என்றபடி திர்த்த மென்று இழிந்தாடுந் துறைக்குப் பேராதலால் நான் இழிந்தாடும் துறையாயிருப்பவனே! என்றதாகவுமாம். மகரனகரப் போலி. என்னுடைக் கோமளக் கொழுந்து கோலமாமழைக்கண்பனிமல்கவிருக்கும். கொள் கொம்பிலே சோந்து தரிக்கவேண்டுங் கொடிபோலே உன்னோடே சேர்ந்தா லல்லது தரிக்கமாட்டாதவளான இப்பெண்பிள்ளை கண்ணுங்கண்ணீரமாயிருக்கிற படி கண்டாயே; இவ்விருப்புக்கு க்ருஷி பண்ணிண நீ பலித்தவளவிலே இதையநுப விக்கவாகிலும வரலாகாதோ? என்று கருத்து.


  3471.   
  கொழுந்து வானவர்கட்கு என்னும்*  குன்றுஏந்தி கோநிரை காத்தவன்! என்னும்,* 
  அழும்தொழும் ஆவி அனலவெவ்வுயிர்க்கும்*  அஞ்சன வண்ணனே! என்னும்,*
  எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்*  எங்ஙனே நோக்குகேன்? என்னும்,* 
  செழும்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!*  என்செய்கேன் என்திருமகட்கே?

      விளக்கம்  


  • பிரானே! உன்னுடைய பரத்வ்தையும ஸௌலப்யத்தையும் மாறிமாறி யநுஸந்தியா நின்றாளென்மகள்; வானவர்கட்குக் கொழுந்தே! என்று பரத்வத்தைப் பேசினவாறே கோநிரை காத்தவனே என்று ஸௌலப்யத்தைப பேசுகின்றாள்; குன்றேந்தினவனே! என்ற பின்னையும் ஒரு பரத்வத்தைப் பேசுகின்றாள். பரத்வத்தைக்கண்டு இகழாமைக்காகப் பரத்வத்தைப் பேசுவதும் மாறிமாறிச் செல்லுமே மெய்யன்பர்களுக்கு. அழும் தொழும்-பக்தி பரவசரைப்போலே கண்ணுங் கண்ணீருமாயிருக்கிற படியும். ப்ரபந்நரைப்போலே அஞஜலிபந்தம் பண்ணாநிற்கிறபடியும் சொல்லிற்றாயிற்று. ஆவியானல் வெவ்வுயிர்க்கும்-கீதையிலே ஆத்மஸ்வரூபத்தைப் பேசும் போது அச்சேத்யோயம் என்று சொல்லிற்று. ஆவியானது தஹிக்கவொண்ணாதது என்றபடி. அப்படிப்பட்ட ஆவியும் தஹித்தகாம்படி வெப்பமாகப் பெருமூச்சு விடுகின்றாள். தன்னை இப்படியாக்கின்றது அஞ்சனமேனி யாகையாலே அதைச் சொல்லிக் கூப்பிடுகின்றார்-அஞ்சனவண்ணனே! என்கின்றாள். அங்ஙனம் கூப்பிட்டவாறே நீ வரக்கூடுமென்று எண்ணி எழுந்து மேல் நோக்குகின்றாள்; ஒரு க்ஷ்ணம் தோற்றி மறைந்து விடுவாயோவென்று இமையாதே யிருக்கின்றாள். (எங்ஙனே நோக்ககேனென்னும்) ஈடு;- “தான் பார்த்த திக்கில் வரக்காணாமையாலே பின்னோக்கி வந்து கட்டிக் கொள்ளுமென்று புரிந்து பாராநிற்கும்.”th என் திருமகட்கு என் செய்கேன் -இவளுக்காக நான் ஏதேனும் உபாயக் அனுட்டிக்கலாகுமோ? என்னவுபாயத்தை யனுட்டிப்பேன். பிராட்டி உம்முடைய திருமார்பிலே நித்யவாஸம் பண்ணுகிறாப்போலே இவளும் உம்மை அகலகில்லாதே உம்மோடே பொருந்தியிருக்க வேண்டியவளன்றோ?


  3472.   
  என் திருமகள் சேர்மார்வனே! என்னும்*  என்னுடை ஆவியே! என்னும்,* 
  நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட*  நிலமகள் கேள்வனே! என்னும்,*
  அன்றுஉருஏழும் தழுவி நீ கொண்ட*  ஆய்மகள் அன்பனே! என்னும்,* 
  தென் திருவரங்கம் கோயில்கொண்டானே!*  தெளிகிலேன் முடிவு இவள்தனக்கே.  (2)

      விளக்கம்  


  • என் திருமகள் சேர்மார்பனே யென்னும்” என்று ஒரு வாக்கியமாகவும் “என்னுடையாவியே யென்னும்” என்று மற்றொரு வாக்கியமாகவும் யோஜிப்பது தவிர, முதலடி முழுவதையும் ஒரே வாக்கியமாக யோஜிப்பதுமுண்டு. இங்கெ ஈட்டில் ஆச்சரியமானதோர் ஐதிஹ்யம் காண்மின்; -“பெருமாளுக்கு விண்ணப்பஞ்செய்நோ இத்திருவாய்மொழியியலைக் கேட்டருளா நிற்க, இப்பாட்டளவிலே வந்த வாறே என் திருமகள் சேர்மார்பனே யென்னுமென்னுடையாவியே னென்னும் என்று இயலைச் சொத்தருளச் செய்ய, அத்தைக் கேட்டுக் கையையுதறி ‘ஸ்ரீரங்கநாத!’ என்று அணையிலே சாய்ந்தரளினார் பட்டர்” என்று அருளிச் செய்வர். அப்போது திருமேனியிலே பிறந்த விக்ருதியைக் கண்டு இவர்க்கு பகவத்ப்ராப்தி அணித்தாகிறதோ வென்று அஞ்சியிருந்தெனென்று ஜீயரருளிச் செய்வர்.” பட்டர் ஸ்ரீரங்கேச புரோஹிதராகையாலே அடிக்கடி பகவத் ஸன்னிதியிலே உபந்யாஸங்கள் செய்தருள் நேரும். அதற்காக மன்னாடி நஞ்சீயரையழைத்து அருளிச்செயல் பாசுரங்களைச் சொல்லவிட்டுச் செவிக்கினிதாகக் கேட்பது வழக்கம். அமுது செய்து கொண்டே ஒருநாள் கேட்டருளா நின்றாள். அப்போது இயல் ஸேவிக்கின்ற நஞ்சீயர் இப்பாசுரத்தை ஸேவிக்கும் போது “என் திருமகள் சேர்மார்பனே யென்னும்” என்றவிடத்தில் நிறுத்தாமல் ஏக ச்வாஸமாகவே முதவடியை முழுதுஞ்; சொல்லி நிறுத்தினாராம். என்னும் என்பதற்கு ‘என்று சொல்லுகிறாள்’ என்கிற அர்த்தம் தவிர, என்று சொல்லப்படுகிற என்கிற அர்த்தமும் உண்டாதலால் என் திருமகள் சேர்மார்பனென்று சொல்லப்படுகிற என்னுடைய ஆவியே எனிகிறாள்’ என்று விவக்ஷித்து நஞ்சீயர் நிறுத்தினபடி. பட்டர் அந்த இன் சுவையை யறித்து திருவுள்ளமுமடகுலைப்பட்டா ரென்றதாயிற்று. “இவர்க்கு ப்ராணன் ஒருவாயு விசேஷமால் ஒரு மிதுனமாயிற்று திருமகள் சேர்மார்பனாய்க்கொண்டு எனக்கு தாரகனானவனே! என்னும்.” என் திருமகள் சேர்மார்பனென்று சொல்லப்படுமதான என்னுவியே! என்று பொருள் விவசுமரதமானபடி ஆனதுபற்றியே “இவர்க்கு ப்ராணன் ஒரு வாயு விசேஷமால் ஒரு மிதுனமாயிற்று” என்றருளிச் செய்தது. இரண்டாமடியில் வராஹாவதாரத்தை ப்ரஸ்தாவித்தது-நீ பூமிப்பிராட்டி பக்கல் முகம் பெறவேணுமானால் அவள் பரிகரமான எங்களை நோக்கியேயாக வேணுங்காண் என்ற கருத்தினாலாம். அன்றியே பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள். மாசுடம்பில் நீர் வாராமானமிலாப்பலறஙாந், தேசுடைய தேவா திருவரங்கச் செல்வனார், பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே (நாச்சியார் திருமொழி 11-8) என்று ஆண்டாளருளிச் செய்த கணக்கிலே, பூமிப்பிராட்டிக்கு நீ அருளிச் செய்த திருவாக்கு வெறுமனேயோ? என்று கேட்கிற கருத்தாகவுமாம். மூன்றாமடியில் நப்பின்னைப் பிராட்டியை மணந்து கொண்ட வரலாறு அநுஸந் திக்கப்படுகிறது. குமபர்மகளான நப்பின்னையை மணந்து கொள்வதற்காக ஒருவர்க்கு மடங்காத ஏழுரிஷபங்களை; வலியடங்கின வரலாறு காண்க. உரு என்றாலும் உரும் என்றாலும் இடிக்குப் பெயர். இடியென்றே சென்னவிது அந்த ரிஷபங்களின் பயரங்கரத் தன்மையைக் காட்டும், தழுவி யென்றது மங்கலவழக்கு; வதைசெய்து என்பது தாற்பரியம்.


  3473.   
  முடிவு இவள் தனக்குஒன்றுஅறிகிலேன் என்னும்*  மூவுலகுஆளியே! என்னும்,* 
  கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்*  நான்முகக் கடவுளே! என்னும்,*
  வடிவுஉடை வானோர் தலைவனே! என்னும்*  வண் திருவரங்கனே! என்னும்,* 
  அடிஅடையாதாள் போல்இவள் அணுகி  அடைந்தனள்*  முகில்வண்ணன் அடியே 

      விளக்கம்  


  • இவள்-இப்பராங்குச நாயகியானவன், தனக்கொரு முடிவு காண்கிறிலே னென்கிறார். என்று காய் சொல்லுகிறபடி. தனக்கு முடிவாவது – தான் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு முடிவு. நான் ஆத்மாவுள்ளதனையும் இங்ஙனே கஷ்டப்பட வேண்டியதுதானோ? இதற்கொருநாளும் பரிஹாரமில்லையோ லென்கிறாள். தனக்கு முடியும்நாள் இல்லையோ வென்கிறாள் என்றுமாம். (மூவுலகாளிளேயயென்னும்) மூவுலகாளியென்று இங்கு தேவேந்திரனைச் சொன்னபடிவாய், அவனுக்கு அந்தர்யானியானவனே! என்றதாகிறது. (கடிகமழ கொன்றைச் சடையனே!) கொன்றைமாமையை அணியுமவன் பரமசிவன்; அவனுக்கு அந்தர் யாமியானவனே! என்றவாறு. (நான்முகக் கடவுளே!) என்றதும் அப்படியே. (வடிவுடை வானோர் தலைவனே!) எம்பெருமானே இடைவீடின்றி அனுபவிப்பதனாலுண்டான மகிழ்ச்சி வடிவிலே தோன்றும்படியிருக்கிற நித்யஸூரிகளுக்கு நாதனானவனே! என்கிறாள். (வண்திருவரங்கனே! என்னும்) நித்ய ஸூரிகளே அனு வித்திப்போகையன்றிக்கே நித்யஸம்ஸாரிகளும் இழவாமைக்கன்றோ திருவரங்கத்திலே வந்து திருக்கணிவளர்ந்திருளுகிறது; இங்குச் சாய்ந்தருளினதின் பலன் நான் பெற்ற வேண்டாவோ வென்கிறாள். ஈற்றடியின் கருத்து:-“இனிப் பெருமாள் திருவடிகளைச் சேர்ந்து முடியமாட்டாள், போய் முடிந்தாள் என்னும்படி துர்த்தசாபந்நையானனவிவள். இந்த துக்கமெல்லாம் விஸ்ம்ருதமாம்ப தான் ஆசைப்பட்டபடியே பெரிய பெருமான் திருவடிகளையே ஸம்ச்லேக்ஷிக்கப்பெற்றளென்று இவளுடைய திருத்தாயார் ப்ரீதையாகிறாள்” என்பது ஆறாயிரப்படி யருளிச்செயல்.


  3474.   
  முகில்வண்ணன் அடியைஅடைந்து அருள் சூடி  உய்ந்தவன்*  மொய்புனல் பொருநல்,* 
  துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்*  வண்பொழில்சூழ்  வண்குருகூர்ச் சடகோபன்,*
  முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல்மாலை*  ஆயிரத்து இப்பத்தும் வல்லார்,* 
  முகில்வண்ண வானத்து இமையவர் சூழ  இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே   (2)

      விளக்கம்  


  • பெரியபெருமாள் திருவடிகளைச் சேர்ந்து ஸர்வப்ரகார ஸம்ச்லேஷமும் பண்ணப் பெறுகையாலே உஜ்ஜீவனம் பெற்றவராய் தாம்ரபர்ணீ தீரவாஸியான ஆழ்வார் முகில்வண்ணனடிமேற் சொன்ன சொல்மாலையாயிரத்துள் இப்பத்தும் வல்லர்வர்கள் திருநாட்டிலே அயர்வறு மமரர்கள் சூழ்ஆனந்தக்கடலிலே ஆழ்ந்திருக்கப் பெறுவர்களென்று பயனுரைத்துக் தலைக்கட்டிளுராயிற்று. முகில்வண்ணனடிமேற் சொன்ன சொல்மாலையாயிர மென்றவிதனால்-திருவாய்மொழியாயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமாகவே அருளிச்செய்த தென்பது விளங்குமென்பர். ஆனது பற்றியே வான்திகழுஞ் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆன்ற தமிழ்மறைகளாயிரமும் என்று திருவாய்மொழித் தனியன் அவதரித்தபடி. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தியுங் காண்மின்;- “பெரியபெருமாள் திருவடிகளிலே திருவாய்மொழியாயிரமுஞ் சொல்லிற்று. திருமோகூர்க்கு ஈத்தபத்து திருவேங்கடத்துக் கிவைபத்து என்று பிரித்துக் கொடுத்துவித்தனை பெருமாள் திருப்பலகையில் அமுதுபடியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்க்கும் அளந்து கொடுக்குமாபோலே என்று பிள்ளையருளிச் செய்வர்” முகில்வண்ணவானத்து-முகில்வண்ணனான எம்பெருமானுடைய திருநாட்டிலே யென்று பொருள் கொள்ளலாமாயினும், அங்கிக்கிறனுடைய நிழலீட்டாலே அவன்படியாயிருக்கற வானம் என்று பொருள் கொள்வது சிறக்கும். ஸ்ரீரங்க விமானத்தை அநுபவியாநின்ற பட்டர்:-அபி பணிபதிபாவாத் சுப்ரமந்தச் சயாலோர் மரதகஸூகுமாரை: ரங்கபர்த்துர் மயூகை:, ஸகலஜலதிபாநச்யாம ஜீமூதஜைத்ரம் புலகயதி விமாநம் பாவநம் லோசநே ந: என்றருளிச்செய்த ச்லோகம் இங்கே அநுஸந்திக்கவுரியது. ஆதிசேஷனுடைய அவதாரமான ஸ்ரீரங்கவிமானம் வெண்ணிறத்ததாயினும் உள்ளுக்கிடக்கிற பச்சைமாமரைபோல் மேனியனுடைய திருமேனி நிழலீட்டாலே சாமளமாகவே தமக்கு ஸேவைஸாதிப்பதாக அருளிச்செய்தவாறு.