நாலாயிரத்தில் நாரணன் நாமம்
இதற்கு முன் இங்கு இடப்பட்ட ‘” திருமாமகள் திருநாமங்க”ளைத் தொடர்ந்து
திருவஹீந்திரபுரம் திரு ஸ்ரீநிவாஸ தேசிகன் ஸ்வாமி ஆழ்வார்கள் அருளிச் செயல்களிலிருந்து நாராயணின் ஆயிரம் திருநாமங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை அற்புதமாக அகர வரிசைப் படுத்தி வெளியிட்டதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
ஆயிரம் திருநாமங்களில் “அ” வில் இங்கே!
மயர்வற மதிநல மருளப்பெற்ற ஆழ்வார்கள்அருளிச்செயல்களில்
அம்புயத்தாளுறை மார்பனின் திருநாமங்கள்ஆயிரம்
அக்காரக்கனியே!
அகலகில்லேன் இறையுமென்று
அலர்மேல் மங்கை உறை மார்பா!
அங்கண்ணன்
அங்கனாயகன்
அங்கண்மா ஞாலத்து அமுது
அங்கண் மா ஞாலம் எல்லாம்
அமுது செய்து மிழ்ந்தாய்!
அச்சுதா!
அஞ்சனக்குன்றம் .10.
அஞ்சனவண்ணன்
அஞ்சன வண்ணனே ஆயர்பெருமானே!
அஞ்சனம் புரையும் திருவுருவன்
அசோதைதன் சிங்கம்
அசோதைக் கடுத்த பேரின்பக் குலவிளங்களிறு!
அசோதை இளஞ்சிங்கம்
அட்ட புயகரத்தாதி
அடர் பொன்முடியான்
அடலாமையான திருமால்
அடலாழி கொண்டான் .20.
அடியவர்க்கு மெய்யனாகிய தெய்வநாயகன்
அடியவர்க்கு அருளி அரவணை துயின்ற ஆழியான்
அடியவர்கட் காரமுதமானான்
அண்டவாணன்
அண்டத்தமரர் பெருமான்
அண்ணலமரர் பெருமான்
அணங்காய சோதி
அணி நகரத்துலகனைத்தும் விளங்கும் சோதி
அணி நீலவண்ணன்
அணிநின்ற செம்பொனடலாழியான் .30.
அணிவாணுதல் தேவகி மாமகன்
அணி மணி ஆசனத்திருந்த அம்மான்
அதகன்
அத்தா! அரியே!
அத்தனெந்தை ஆதிமூர்த்தி
அத்தன் ஆயர்களேறு
அந்தணர்தம் அமுதம்
அந்தணாளி மாலே!
அந்தமாய் ஆதியாய்! ஆதிக்கும் ஆதியாய்!
அந்தமில் புகழ்க் காரெழிலண்ணலே! .40.
அந்தமில் புகழாய்!
அந்தமில் புகழ் அனந்தபுர நகராதி
அந்தமில் வரையால் மழை தடுத்தான்
அந்தமிலாக் கதிர்பரப்பி அலர்ந்ததொக்கும் அம்மானே!
அப்பனே! அடலாழியானே!
அப்புலவ புண்ணியனே!
அம்பர நற்சோதி!
அம்புயத்தடங்கண்ணன்
அம்மான் ஆழிப்பிரான்
அமரர்தம் அமுதே! .50.
அமரர்க்கரிய ஆதிப்பிரான்
அமரர்கள் ஆதிமுதல்வன்
அமரர்க் கரியேறே!
அமரர் தலைமகனே!
அமரர்க்கருள் செய்துகந்த பெருமான் திருமால்
அமரரேறே!
அமுதம் பொதியின் சுவை
அமுதாய வானேறே!
அயர்வறும் அமரர்கள் அதிபதி
அரங்கத்தரவணைப் பள்ளியானே! .60.
அரங்க மா நகருளானே!
அரங்கமேய அண்ணலே!
அரவணை மேல் பள்ளிகொண்ட முகில் வண்ணனே!
அரவணையான்
அரவினணை மிசை மேயமாயனார்
அரவிந்த லோசனன்
அரவிந்த வாயவனே!
அரவிற் பள்ளிப் பிரான்
அரியுருவ மானான்
அரியேறே என்னம் பொற்சுடரே! .70.
அரிமுகன் அச்சுதன்
அரும் பெருஞ்சுடர்
அருமா கடலமுதே!
அருவாகிய ஆதி
அருள் செய்த வித்தகன்
அலங்கல் துழாய் முடியாய்!
அலம்புரிந்தடக்கை ஆயனே! மாயா!
அலமுமாழிப் படையுமுடையார்
அல்லிக் கமலக் கண்ணன் .80.
அல்லிமாதர் புல்கநின்ற ஆயிரந்தோளன்
அல்லி மலர்த் திருமங்கை கேள்வன்
அல்லியந் தாமரைக் கண்ணனெம்மான்
அல்லி மாதர மரும் திரு மார்பினன்
அலைகடல் கடைந்த அம்மானே!
அலைகடல் கடைந்த ஆரமுதே!
அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே!
அலை நீருலகேழும் முன்னுண்ட வாயா!
அலை கடலரவமளாவி ஓர் குன்றம் வைத்த எந்தாய்
அழகனே!
அழலும் செருவாழி ஏந்தினான்
அழலுமிழும் பூங்காரரவணையான்
அழறலர் தாமரைக் கண்ணன்
அளத்தற்கு அரியனே!
அளவரிய வேதத்தான் வேங்கடத்தான்
அறமுயலாழிப் படையான்
அறம் பெரியன்
அறிஅரிய பிரானே!
அற்புதன் நாராயணன் .100.
அனந்த சயனன்
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா!
அனந்தனணைக் கிடக்கும் அம்மான்
அன்பா!
அன்றிவ்வுலக மளந்தாய்
அன்றுலகமுண்டு மிழ்ந்த கற்பகம்
அன்றுலக மளந்தானே!
அன்றுரு ஏழும் தழுவி நீ
கொண்ட ஆய் மகளன்பனே!
அன்னமும் கேழலும் மீனுமாய் ஆதியை
அன்னமதானானே அருமறை தந்தோனே! .110.
அலையும் கடல் கொண்டவையம் அளித்தவன்
அம்புயத்தாள் கணவன்
அழியாதவருளாழிப் பெருமான்
அருளாளப் பெருமான்
அருளாழியம்மான்
அத்திகிரித் திருமால்
அயனார் தனித்தவங் காத்த பிரான்
அருமறையினுச்சிதனில் நின்றார்
அருள் வரதர்
அருளாளர் .120.
அமலனவியாத சுடர்
அளவில்லா ஆரமுதம்
அத்திகிரி அருள் முகிலே!
அருமறையின் பொருளனைத்தும் விரித்தார்
அடியவர் மெய்யர்
அடியவர்க்கு மெய்யன்
அடைக்கலம் கொண்ட திருமால்
அந்தமிலாதி தேவன்
அருளாலுதவும் திருமால்
அம்புயத் தாளாரமுது
அயன் மகவேதியிலற்புதன் .131.
ஆதியஞ்சோதியுருவை அங்கு வைத்திங்குப் பிறந்த வேத முதல்வன்
ஆளும் பரமனைக் கண்ணனை
ஆழிப் பிரான்
ஆடிய மா நெடுந்தேர் படை நீரெழச் செற்ற பிரான்
ஆயர் குலத் தீற்றிளம் பிள்ளை
ஆழியங் கண்ண பிரான்
ஆயர்க்கதிபதி அற்புதன்
ஆழியங்கண்ணா!
ஆறாமத யானையடர்த்தவன் .140.
ஆயர்களேறு அரியேறு
ஆலின் மேலால் அமர்ந்தான்
ஆயிரம் பேருடையான்
ஆழியான்
ஆலின் இலை மேல் துயின்றான்
ஆகத்தனைப் பார்க்கருள் செய்யுமமம்மான்
ஆழி வண்ணனென்னம்மான்
ஆதியாய் நின்றார்
ஆயிரவாய் நாகத்தணையான்
ஆலிலையில் முன்னொருவனாய முகில் வண்ணா! .150.
ஆழியேந்தினான்
ஆழிவலவன்
ஆழிக் கிடந்தான்
ஆல்மேல் வளர்ந்தான்
ஆதி நெடுமால்
ஆதிப் பெருமான்
ஆழிசங்கம் படைக்கலமேந்தி
ஆழியங்கை அம்மான்
ஆடரவமளியில் அறிதுயிலமர்ந்த பரமன்
ஆராவமுதம் .160.
ஆறாவெழுந்தான் அரியுருவாய்
ஆயர்கள் போரேறே!
ஆழிப்படை அந்தணனை
ஆலிலைச் சேர்ந்தவனெம்மான்
ஆதிமூர்த்தி
ஆதியஞ்சோதி
ஆராவமுதூட்டிய அப்பன்
ஆவியே ! ஆரமுதே!
ஆய் கொண்ட சீர்வள்ளல்
ஆலிலை யன்னவசம் செய்யும் அண்ணலார் .170.
ஆற்ற நல்லவகை காட்டுமம்மான்
ஆதிப்பிரான்
ஆதிப் பெருமூர்த்தி
ஆற்றலாழியங்கை அமரர் பெருமானை
ஆலினீளிலை ஏழுல குமுண்டு அன்று நீ கிடந்தாய்
ஆழிநீர் வண்ணனை அச்சுதனை
ஆம் வண்ணம் இன்னதொன்றென்று அறிவதரிய அரியை
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி
ஆழியங் கண்ணபிரான்
ஆதியாய் நின்ற என் சோதி .180.
ஆழியங்கை யெம்பிரான்
ஆவியே!அமுதே! அலைகடல் கடைந்த அப்பனே!
ஆதியான்
ஆயன் அமரர்க்கரியேறு
ஆயர்கள் நாயகனே!
ஆழியங்கையனே!
ஆயர்தங்கோ
ஆயர் பாடிக்கணி விளக்கே!
ஆலத்திலையான்
ஆமாறு அறியும் பிரானே! .190.
ஆயா!
ஆயரேறு
ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கு
ஆலினிலையாய்
ஆலிலை மேல் துயின்ற எம்மாதியாய்
ஆலை நீள் கரும்பன்னவன்
ஆலினிலைப் பாலகனாய் அன்றுலகமுண்டவனே!
ஆதி தேவனே!
ஆதியான வானவர்க்கும் ஆதியான ஆதி நீ
ஆமையாகி ஆழ்கடல் துயின்ற .200.
ஆதி தேவ!
ஆமையான கேசவ!
ஆழிமேனி மாயனே!
ஆலின் மேலோர் கண் வளர்ந்த ஈசன்
ஆயர் பூங்கொடிக்கினவிடை பொருதவன்
ஆதியாயிருந்தாய்
ஆதியை அமுதத்தை
ஆழித் தடக்கையன்
ஆமருவி நிரை மேய்ந்த அணியரங்கத்தம்மான்
ஆயிரந்தோளால் அலைகடல் கடைந்தான் .210.
ஆயிரம் சுடர்வாய் அரவணைத் துயின்றான்
ஆழியாலன்றங்காழியை மறைத்தான்
ஆயனாயன்று குன்றமொன்றெடுத்தான்
ஆழிவண்ண!
ஆயிரம் பேருடையவாளன்
ஆரா இன்னமுது
ஆதி வராஹமுன்னானாய்
ஆழியேந்திய கையனே!
ஆதியுமானான்
ஆலிலைமேல் கண் துயில் கொண்டுகந்த
கருமாணிக்க மாமலை .220.
ஆடற் பறவையன்
ஆழிவண்ணர்!
ஆழியும் சங்குமுடைய நங்களடிகள்
ஆயிரம் பேரானை
ஆதிமுனேனமாகி அரணாய மூர்த்தி
ஆதியாதி ஆதி நீ
ஆடரவின்வன்பிடர் நடம் பயின்ற நாதனே!
ஆய நாயகர்
ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி .230.
ஆழி வலவா!
ஆயர்க்கதிபதி அற்புதன்
ஆலம் பேரிலையன்னவசம் செய்யும் அம்மானே!
ஆழிநீர் வண்ணன் அச்சுதன்
ஆற்றலாழியங்கை அமரர் பெருமானை
ஆசறு சீலன்
ஆற்ற வல்லவன்
ஆடுபுட்கொடி ஆதிமூர்த்தி
அணிச் செம்பொன்மேனி யெந்தாய்
ஆற்ற நல்லவகை காட்டும் அம்மானை .240.
ஆரமுதூட்டிய அப்பனை
ஆர்ந்த புகழச்சுதன்
ஆழிப்படை அந்தணனே!
ஆழிசங்கம் படைக்கலமேந்தி
இருடிகேசா
இலங்கைமாநகர் பொடிசெய்த அடிகள்
இன்னார் தூதனென நின்றான்
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றான்
இலங்கொளிசேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானே!
இருள்நாள் பிறந்த அம்மான் 250
இமையோர்க்கு நாயகன்
இமையோர்தம் பெருமான்
இறைவன்
இமயம் மேய எழில்மணித் திரள்
இன ஆநிரை காத்தான்
இளங்குமரன்
இன ஆயர் தலைவன்
இலங்கை செற்றான்
இருஞ்சிறைப் புள்ளூர்ந்தான்
இராமன் .260.
இமையோர் பெருமான்
இமையோர் தலைவா!
இருள்விரி சோதி பெருமான்
இலங்கைக்குழா நெடுமாடம் இடித்த பிரானார்
இமையோர்தன் சார்விலாத தனிப்பெரு மூர்த்தி
இருளன்னமாமேனி எம்மிறையார்
இரைக்கும் கடல் கிடந்தாய்
இன்னமுத வெள்ளம்
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் .270.
இலங்கை பாழாளாகப் படை பொருதான்
இனத்தேவர் தலைவன்
இழைகொள் சோதி செந்தாமரைக் கண்ணபிரான்
இமையோரதிபதியே!
இமையோர்களேத்தும் உலகம் மூன்றுடை அண்ணலே!
இன்னமுதே!
இன்தமிழ் பாடிய ஈசன்
இமையவரப்பன் என்னப்பன்
இமையவர் பெருமான்
இமையவர் தந்தை தாய் .280.
இனமேதுமிலான்
இன்னுரை ஈசன்
இறையவன்
ஈசனென் கருமாணிக்கம்
ஈட்டிய வெண்ணெயுண்டான்
ஈன் துழாயான்
உகப்புருவன்
உச்சியுள்ளே நிற்கும் தேவதேவன்
உத்தமனே!
உம்பர் கோன் .290
உம்பர் கோமானே!
உம்பர் வானவர் ஆதியஞ்சோதி
உம்பருலகினில் யார்க்கும் உணர்வரியான்
உயிர்க்கெல்லாம் தாயாயளிக்கின்ற தண் தாமரைக்கண்ணா!
உருவக் குறளடிகள்
உருவமழகிய நம்பி
உரைக்கின்ற முகில் வண்ணன்
உலகமுண்ட பெருவாயா!
உலகளந்த உத்தமன்
உலகளந்தமால் .300
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே!
உலகேத்தும் ஆழியான்
உலகேழு முண்டான்
உலகுக்கோர் தனியப்பன்
உலகுண்ட ஒருவா! திருமார்பா!
உலகுண்டவன் எந்தை பெம்மான்
உலகளந்த பொன்னடியே!
உலகளப்பானடி அடி நிமிர்ந்த அந்த அந்தணன்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான்
உம்பர் போகமுகந்து தரும் திருமால் .310.
உத்திர வேதிக்குள்ளே உதித்தார்
உம்பர் தொழும் கழலுடையார்
உவமையில திலகு தலைவனார்
உம்பர் தொழும் திருமால்
உள்ளத்துறைகின்ற உத்தமன்
உயிராகியுள்ளொளியோடுறைந்த நாதன்
உலகம் தரிக்கின்ற தாரகனார்
உண்மையுரைக்கும் மறைகளிலோங்கிய
உத்தமனார்
உலப்பில் கீர்த்தியம்மானே!
உலகுக்கே ஓருயிருமானாய் .320.
உறங்குவான்போல் யோகுசெய்த பெருமான்
உயர்வற உயர்நலமுடையவன்
உடன்மிசையுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
உலகமளந்தானே!
ஊழிப்பிரான்
ஊழிமுதல்வன்
ஊழியான்
ஊழிபெயர்த்தான்
ஊழியெல்லாமுணர்வானே!
ஊற்றமுடையாய் பெரியாய் .330.
எங்கள் தனிநாயகனே!
எங்கள் குடிக்கரசே!
எங்களீசனெம்பிரான்
என் சோதி நம்பி!
என் சிற்றாயர் சிங்கமே!
எண்ணற்கரியானே!
எம்மீசனே!
எழிலேறு
எம் விசும்பரசே !
என் கண்ணனெம்பிரான் .340.
என் அன்பனே!
என்தன் கார்முகிலே!
என்னுயிர்க் காவலன்
என்னப்பா!
எம்பிரான்
என்னையாளுடைத்தேனே!
எண்ணுவாரிடரைக் களைவானே!
எயிற்றிடை மண் கொண்ட எந்தை
எங்கள் நம்பி கரியபிரான்
என் பவளவாயன் .350.
என் கடல் வண்ணன்
எம்மிராமாவே !
எந்தை தந்தைதம் பெருமான்
என்னையாளுடையப்பன்
எண்ணிறந்த புகழினான்
எங்கள் தனி நாயகனே !
என்னமர் பெருமான்
என்னாருயிரே ! அரசே !
என் பொல்லாக் கருமாணிக்கமே ! .360.
என்னிருடீகேசன்
என்னுடையாவியே !
எங்கள் பிரான்
என் திருமகள் சேர்மார்பனே!
எந்தைமால்
எட்டுமாமூர்த்தி என் கண்ணன்
எட்டவொண்ணாத இடந்தரும் எங்களெம் மாதவனார்
எங்கள் பெற்றத் தாயன்
எழுத்தொன்றில் திகழ நின்றார் .370.
ஏதமின்றி நின்றருளும் பெருந்தகை
ஏத்தருங்கீர்த்தியினாய்
ஏரார்ந்த கருநெடுமாலிராமன்
ஏரார்ந்த கண்ணிய சோதை இளஞ்சிங்கம்
ஏவரி வெஞ்சிலையான்
ஏழுலகுக்காதி
ஏழுலகுமுடையாய்
ஏழுலகப் பெரும் புரவாளன்
ஏனத்துருவாகிய ஈசன்
ஏனமாய் நிலங்கீண் என்னப்பனே ! .380.
ஐயனே ! அரங்கா!
ஐவாய்பாம்பினணைப் பள்ளிகொண்டாய் பரஞ்சோதி
ஒண்சுடராயர் கொழுந்தே!
ஒத்தார் மிக்காரையிலையாய மாமாயன்
ஒருபாலகனாய் ஞாலமேழு முண்டான்
ஒருநாள் அன்னமாய் அன்றங்கரு மறைபயந்தான்
ஒளி மணிவண்ணன்
ஓங்கியுலகளந்த உத்தமன்
ஓங்கோத வண்ணனே ! .390.
ஓதமா கடல் வண்ணா!
ஓதநீர் வண்ணன்
ஓரெழுத்து ஓருருவானவனே !
கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியன்
கடல் போலொளி வண்ணா!
கடல் வண்ணர்
கடற்பள்ளியம்மான்
கடல் ஞாலத்தீசன்
கடல் வண்ணா!
கடவுளே! .400.
கடியார் பொழிலணி வேங்கடவா!
கணபுரத்தென் காகுத்தன்
கண்ணனென்னும் கருந்தெய்வம்
கண்ணபிரான்
கண்ணுக்கினியன்
கமலக்கண்ணன்
கரியமுகில் புரைமேனிமாயன்
கருங்குழற்குட்டன்
கரும்பெருங்கண்ணனே
கருஞ்சிறுக்கன் .410.
கருந்தடமுகில் வண்ணன்
கருவுடைமுகில் வண்ணன்
கருவினைபோல் வண்ணன்
கருமுகிலெந்தாய்
கரும்பிருந்த கட்டியே!
கடற்கிடந்த கண்ணனே!
கருந்தண்மாகடல் திருமேனி அம்மான்
கருத்தனே!
கருமாணிக்கச் சுடர் .420.
களங்கனி வண்ணா! கண்ணனே!
கற்கும் கல்விநாதன்
கன்று குணிலா எறிந்தாய்
கன்னலே ! அமுதே!
கண்ணா என் கார்முகிலே!
கரும்போரேறே!
கடற்பள்ளி மாயன்
கருளக்கொடியானே!
கஞ்சைக்காய்ந்த கழுவில்லி
கண்ணபுரத்தென் கருமணியே! .430.
கங்கைநீர் பயந்த பாத!
கதநாகம் காத்தளித்த கண்ணன்
கலையார் சொற்பொருள்
கருங்கடல் வண்ணா!
கருமாமுகில் வண்ணர்
கடல் வண்ணனார்
கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்
கன்று மேய்த்தினிதுகந்த காளாய்
கருந்தேவனெம்மான்
கடிசேர் கண்ணிப் பெருமானே! .440.
கறந்த பால் நெய்யே!
கடலினுளமுதமே!
கட்கரிய கண்ணன்
கட்டெழில் சோலை நல்வேங்கட வாணன்
கடல்ஞாலமுண்டிட்ட நின்மலா!
கடியமாயன்
கறங்குசக்கரக் கனிவாய்ப் பெருமான்
கடலின்மேனிப்பிரான்
கமலத்தடங்கண்ணன்
கரிய முகில் வண்ணன் .450
கடற்பள்ளி அண்ணல்
கரிய மேனியன்
களிமலர்த்துளவன் எம்மான்
கருமாணிக்கம்
கருகிய நீலநன்மேனி வண்ணன்
கடிபொழில் தென்னரங்கன்
கடல் கவர்ந்த புயலோடுலாங்கொண்டல் வண்ணன்
கடல் கிடக்கும் மாயன்
கலந்து மணி இமைக்கும் கண்ணா
கலங்காப் பெருநகரம் காட்டுவான் .460.
கமல நயனத்தன்
கருவளர் மேனி நம் கண்ணன்
கருவாகிய கண்ணன்
கண்ணன் விண்ணோரிறை
கடலமுதத்தைக் கடைந்து சேர்த்த திருமால்
கருணை முகில்
கமலையுடன் பிரியாத நாதன்
கருணைக் கடல்
கருதவரம் தரு தெய்வப் பெருமாள்
காண இனிய கருங்குழற் குட்டன் .470.
காண்தகு தாமரைக் கண்ணன்
கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரான்
கார்முகில் வண்ணன்
கார் வண்ணன்
கார்க்கடல் வண்ணன்
கார்தழைத்த திருவுருவன்
காரணா கருளக் கொடியானே!
காரார்மேனி நிறத்தெம்பெருமான்
காரானை இடர்கடிந்த கற்பகம்
காரொடொத்தமேனி நங்கள் கண்ணன் .480.
காரொளி வண்ணனே! கண்ணனே!
காயாமலர் வண்ணன்
காராயினகாள நன்மேனியன்
காய்சினப்பறவை யூர்ந்தானே!
காய்சினவேந்தே! கதிர்முடியோனே!
காயாமலர் நிறவா!
காயாவின் சின்னநறும்பூத்திகழ் வண்ணன்
காரார் கடல் வண்ணன்
கார் கலந்த மேனியான்
கார்வண்ணத்து ஐய! .490.
கார்மேக வண்ணன்
கார்போல் வண்ணன்
கார்மலி வண்ணன்
காவிப் பெருநீர் வண்ணன் கண்ணன்
காளமேகத் திருவுருவன்
காத்தனே!
காரார்ந்த திருமேனி கண்ணன்
காமருசீர் முகில் வண்ணன்
கானுலாவிய கருமுகில் திருநிறத்தவன்
காகுத்தா கரிய கோவே! .500.
கிளரும் சுடரொளி மூர்த்தி
கிளரொளி மாயன்
குடக்கூத்தன்
குடமாடுகூத்தன்
குருத்தொசித்த கோபாலகன்
குரைகடல் கடைந்தவன்
குறியமாணெம்மான்
குன்றம் குடையாக ஆகாத்த கோ
குன்றமெடுத்தானிரை காத்தவன்
குன்றமொன்றெடுத்தேந்தி மாமழை அன்று காத்த அம்மான்
குரவை முன் கோத்த கூத்த எம்மடிகள்
குருமாமணிக்குன்று
குன்றால் மாரி தடுத்தவன்
குடமாடி மதுசூதன்
குன்றால் மாரி தடுத்துக் காத்தானே!
குன்றமேந்திக் கடுமழை காத்த எந்தை
குவலயத்தோர் தொழுதேத்தும் ஆதி
குளிர்மாமலை வேங்கடவா!
குடத்தையெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல எங்கோவே! .520.
குறையொன்றுமில்லாத கோவிந்தா!
குன்று குடையாய் எடுத்தாய்
குலமுடைக் கோவிந்தா!
குன்றெடுத்தாய்
குன்றமெடுத்தபிரான்
குடந்தைத் திருமாலே
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்
குற்றமறியாத கோவலனார்
கூராழிப்படையான்
கூனற்சங்கத் தடக்கையன் .530.
கெழுமியகதிர்ச் சோதி
கேடில் விழுப்புகழ்க் கேசவன்
கேழல் திருவுரு
கை கலந்த ஆழியான்
கைந் நின்ற சக்கரத்தன்
கை கழலாநேமியான்
கையார் சக்கரத்தென் கருமாணிக்கமே!
கொந்தார் துளவ மலர் கொண்டவனே!
கொண்டல் வண்ணா!
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் .540.
கோலமாணிக்கமென்னம்மான்
கோலங்கரிய பிரான்
கோவலனே!
கோவிந்தா!
கோளரி மாதவன்
கோமள ஆயர்கொழுந்தே
கோயிற் பிள்ளாய்
கோபால கோளரி
கோவலனாய்வெண்ணெயுண்டவாயன்
கோவலனெம்பிரான் .550.
கோணாகணையாய்!
கோலால் நிரை மேய்த்த எம்கோவலர் கோவே!
கோதில் செங்கோல் குடைமன்னரிடை நடந்த தூதர்
கோல வல் விலிராம பிரானே!
கோவலனே! குடமாடீ!
கோவலர் குட்டர்
கோனே குடந்தைக் கிடந்தானே
கௌத்துவமுடைக் கோவிந்தன் .558.
சக்கரத்தண்ணலே!
சங்கு சக்கரத்தாய் .560.
சந்தோகா பௌழியா!
சாமவேதியனே நெடுமாலே!
சந்தோகா ! தலைவனே!
சங்கேறு கோலத்தடக்கைப் பெருமான்
சவிகொள் பொன்முத்தம்
சங்கொடு சக்கரத்தன்
சக்கரக்கையனே!
சக்கரக்கை வேங்கடவன்
சங்கமிடத்தானே!
சங்கோதப்பாற் கடலான் .570.
சார்ங்கத்தான்
சிரீதரனே! சிறந்த வான் சுடரே!
சீலமெல்லையிலான்
சீர்கெழு நான்மறையானவரே!
சீ மாதவன்
சீர்கொள் சிற்றாயன்
சீலமிகு கண்ணன்
சீர்ப்பெரியோர்
சீரார்சிரீதரன்
சீலப் பெருஞ்சோதி .580.
சுடர் கொளாதி
சுடர் ஞானமின்பமே
சுடர்ச்சோதி முடிசேர் சென்னியம்மானே!
சுடர் நீள் முடியாய்
சுடர் நேமியாய்
சுடர்ப் பாம்பணை நம்பரன்
சுவையன் திருவின்மணாளன்
சுழலின்மலி சக்கரப் பெருமாள்
சுடரொளி ஒருதனி முதல்வன் .590.
சுடர்கொள் சோதி
சுடராழியான்
சுவையது பயனே
சுடர்போல் என்மனத்திருந்த வேதா!
சுடராழிப்படையான்
சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடி மாரி
சூட்டாயநேமியான்
செங்கண் மால்
செஞ்சுடர்ச்சோதி
செஞ்சுடர்த்தாமரைக் கண்ணா! .600.
செம்மின் முடித் திருமால்
செய்ய கமலக் கண்ணன்
சென்னி நீண் முடியாதியாய்
செய்யாளமரும் திருவரங்கர்
செய்யாளன்பர்
சேண்சுடர்க்குன்றன்ன செஞ்சுடர்மூர்த்தி
சொற்பொருளாய் நின்றார்
ஞாலப்பிரான்
ஞாலமுண்டாய் ஞாலமூர்த்தி
ஞாலமுற்றுமுண்டுமிழ்ந்தான் .610.
ஞாலம்விழுங்கும் அநாதன்
ஞாலம் தத்தும் பாதன்
ஞான நல்லாவி
ஞானப்பிரான்
தடம் பெருங்கண்ணன்
தண்ணந் துழாயுடையம்மான்
தண்துழாய் விரைநாறுகண்ணியன்
தண்துழாய்த்தாராளா!
தண்தாமரை சுமக்கும் பாதப்பெருமான்
தண் வேங்கடமேகின்றாய் .620.
தம்மானென்னம்மான்
தன்சொல்லால்தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்
தன்தனக்கின்றி நின்றானை
தனக்கும் தன்தன்மையறிவரியானை
தன்னடியார்க்கினியன்
தருமமெலாம் தாமாகி நிற்பார்
தனித்தாதை
தனித்திறலோன்
தயிர் வெண்ணெய் தாரணியோடுண்டான்
தன்கழலன்பர்க்கு நல்லவன் .630.
தன்னடிக்கீழுலகேழையும் வைத்த தனித்திருமால்
தந்தையென நின்ற தனித்திருமால்
தன்துளவ மார்பன்
தனக்கிணையொன்றில்லாத திருமால்
தன்திருமாதுடனிறையுந்தனியாநாதன்
தண்துழாய்மார்பன்
தாசரதீ!
தாதுசேர்தோள் கண்ணா!
தாமரைக் கண்ணன்
தாமரைக்கையாவோ? .640.
தாமரைக் கண்ணினன்
தாமரையன்ன பொன்னாரடி எம்பிரான்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்
தாள்களாயிரத்தாய்
தார்தழைத்த துழாய்முடியன்
தாயெம்பெருமான்
தாமரைக் கண்ண னெம்மான்
தாமரைமேலய னவனைப் படைத்தவனே!
தாமரைமேல் மின்னிடையாள் நாயகனே!
தாரலங்கல் நீள் முடியான் .650.
தாளதாமரையான்
தாமரையாள் திருமார்பன்
தாதையரவணையான்
தாமனைத்தும் தீவினையைத் தவிர்ப்பார்
தாமரையாளுடனிலங்கும் தாதை
திருக்கலந்து சேருமார்ப!
திரிவிக்கிரமன்
திருநாரணன்
திருக்குறளப்பன்
திருமங்கை மணாளன் .660.
திருவிருந்த மார்பன்
திருமகளோடு இனிதமர்ந்த செல்வன்
திருமகளார் தனிக் கேள்வன்
திருமாமகள் கேள்வா! தேவா!
திருமார்பன்
திருவமர் மார்பன்
திருமாலார்
திருவிண்ணகர் சேர்ந்தபிரான்
திருவேங்கடத்தெழில்கொள் சோதி
திருவேங்கடத்தெம்பிரானே! .670.
திருவுடைப் பிள்ளை
திருவைகுந்தத்துள்ளாய் தேவா!
திறம்பாத கடல்வண்ணன்
திருவே! என்னாருயிரே!
திருமாமகள்தன் கணவன்
திருமறுமார்பான்
திருவுக்கும் திருவாகிய செல்வா!
திருவாழ் மார்பன்
திருநீர்மலை நித்திலத்தொத்து
திருவயிந்திரபுரத்துமேவு சோதி .680.
திருவெள்ளக்குளத்துள் அண்ணா!
திகழும் மதுரைப் பதி
திரண்டெழுதழைமழை முகில்வண்ணன்
திருவாயர்பாடிப் பிரானே!
திருந்துலகுண்ட அம்மான்
திருநீலமணியார்
திருநேமிவலவா!
திருக்குறுங்குடி நம்பி
திருமணிவண்ணன்
திருநறையூர் நின்ற பிரான் .690.
திருச்செய்ய நேமியான்
திருமாலவன்
திண்பூஞ்சுடர்நுதிநேமிஅஞ்செல்வர்
திருமாமணிவண்ணன்
திருமலைமேல் எந்தை
திருமங்கை நின்றருளும் தெய்வம்
திருமொழியாய் நின்ற திருமாலே!
திருப்பொலிந்த ஆகத்தான்
திரைமேல் கிடந்தான்
திருமோகூர் ஆத்தன் .700.
திருக்கண்ணபுரத்து ஐயன்
திலகமெனும் திருமேனிச் செல்வர்
தினைத்தனையும் திருமகளை விடாதார்
திருவத்தியூரான்
திகழரவணையரங்கர்
திருமகளார் பிரியாத தேவன்
திருவுடனே அமர்ந்த நாதன்
திருமகளோடு ஒருகாலும் பிரியாநாதன்
திருநாரணனென்னும் தெய்வம்
திருமகளார் பிரியாத் திருமால் ,710.
தீவாய்வாளிமழை பொழிந்த சிலையா!
தீவாய் நாகணையில் துயில்வானே!
தீங்கரும்பின் தெளிவே!
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
தீர்த்தன்
துணைமலர்க் கண்களாயிரத்தான்
துவராபதி யெம்பெருமான்
துழாயலங்கல் பெருமான்
துழாய்முடியார்
துயர்தீர்க்கும் துழாய்முடியான் .720.
துளவமுடியருள் வரதர்
துளங்காவமுதக்கடல்
துவரை மன்னன்
தூப்பால வெண்சங்கு சக்கரத்தன்
தூமொழியாய்
தூவியம்புள்ளுடையாய்
தூமணிவண்ணன்
தெண்டிரைக்கடற் பள்ளியான்
தெய்வப்புள்ளேறி வருவான்
தெய்வநாயகன் .730.
தெளிவுற்ற கண்ணன்
தெள்ளியார்பலர் கைதொழும் தேவனார்
தெள்ளியார் வணங்கப்படும் தேவன்
தேசுடையன்
தேசமுன்னளந்தவன்
தேவக்கோலப்பிரான்
தேவகி சிங்கமே!
தேவகி சிறுவன்
தேவர்கள் நாயகன்
தேவர்பிரான் .740.
தேவாதிதேவபெருமான்
தேனுடைக்கமலத் திருவினுக்கரசே!
தேனே இன்னமுதே!
தேவர்க்கும் தேவாவோ!
தேன்துழாய்த்தாரான்
தேங்கோதநீருருவன் செங்கண்மால்
தேசுடைய சக்கரத்தன் சங்கினான்
தேங்கோத வண்ணன்
தேனின்ற பாதன்
தேசொத்தாரில்லையெனும் தெய்வநாயகர் .750.
தேனமர் செங்கழலான்
தேசொத்தார் மிக்காருமிலாதார்
தேனார்கமலத் திருமகள்நாதன்
தேரிலாரணம்பாடிய நம் தேவகிசீர் மகனார்
தேனுளபாதமலர்த்திருமால்
தேனவேதியர் தெய்வம்
தொல்லைநன்னூலிற்சொன்ன உருவும் அருவும் நீயே
தோலாத தனிவீரன்
தோளாதமாமணி
நந்தன் மதலை .760
நந்தாவிளக்கின் சுடரே!
நம் கண்ணன் மாயன்
நம் கோவிந்தன்
நம் சுடரொளி ஒரு தனி முதல்வன்
நம் திருமார்பன்
நரனே நாரணனே
நல்லாய்
நறுந்துழாய்ப்போதனே
நன்மகளாய் மகளோடு நானிலமங்கை மணாளா
நம் அத்திகிரித் திருமால் .770
நம் பங்கயத்தாள் நாதன்
நறுமலர்மகள்பதி
நங்கள் நாயகன்
நந்துதலில்லா நல்விளக்கு
நன்மகன்
நந்திருமால்
நம்மையடைக்கலம் கொள்ளும்நாதர்
நாகணைமிசை நம்பிரான்
நாகத்தணையான்
நாராயணனே! .780.
நாறுபூந்தண்துழாய்முடியாய்
நாகணையோகி
நான்முகன்வேதியினம் பரனே
நாறுதுழாய் முடியான்
நாதன்
நாகமலை நாயகனார்
நாராயணன் பரன்
நிகரில் புகழாய்
நிரை மேய்த்தவன்
நிலமங்கைநல்துணைவன் 790.
நிலமாமகட்கினியான்
நிலவுபுகழ்நேமியங்கைநெடியோன்
நிறங்கிளர்ந்த கருஞ்சோதி
நிறந்திகழும் மாயோன்
நிறைந்த ஞானமூர்த்தி
நிறைபுகழ் அஞ்சிறைப் புள்ளின் கொடியான்
நின்னொப்பாரையில்லா என்னப்பா!
நிலைதந்த தாரகன்
நியமிக்குமிறைவன்
நீண்டதோளுடையாய் .800.
நீண்டமுகில் வண்ணன் கண்ணன்
நீதியான பண்டமாம் பரமசோதி
நீரார் கமலம்போல் செங்கண்மால்
நீரேற்றுலகெல்லாம் நின்றளந்தான்
நீரோதமேனி நெடுமாலே!
நீலமாமுகில் வண்ணன்
நீலமுண்டமன்னன்ன மேனிப்பெருமாள்
நீள்கடல்வண்ணனே!
நெடுமால்
நெடியான் .810.
நேமிவலவா!
நேமி அரவணையான்
பங்கயத்தடங்கண்ணன்
படநாகணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்
பணங்கொளரவணையான்
பண்புடையீர்
பண்புடை வேதம் பயந்த பரன்
பத்துடையடியவர்க்கெளியவன்
பரஞ்சோதி
பயில இனிய நம்பாற்கடல் சேர்ந்த பரமன் .820.
பரஞ்சுடர்
பரமனே!
பரனே பவித்திரனே!
பனிப்புயல் வண்ணன்
பரன்
படைத்தேந்துமிறைவன்
பரவும் மறைகளெல்லாம் பதம்
சேர்ந்தொன்றநின்ற பிரான்
பாகின்றதொல் புகழ் மூவுலகுக்கும்
நாதனே! பரமனே!
பாமருமூவுலகுமளந்தபற்ப பாதாவோ!
பாமருமூவுலகுமளந்தபற்பநாபாவோ! .830.
பாம்பணையப்பன்
பாரளந்தீர்
பாரிடந்த அம்மா!
பாரெல்லாமுண்ட நம்பாம்பணையான்
பாரென்னும் மடந்தையை மால் செய்கின்ற மாலார்
பாற்கடலான்
பார்த்தன்தேர்முன்னே தான்தாழ நின்ற உத்தமனார்
பிறப்பிலி
பிறப்பில் பல்பிறவிப் பெருமான்
பின்னை தோள் மணந்த பேராயா! .840.
பீடுடையப்பன்
பீடுநான்முகனைப் படைத்தான்
புணர்ந்த பூந்தண்டுழாய் நம்பெருமாள்
புயற்கரு நிறத்தினன்
புயல் மழைவண்ணர்
புயல்மேகம்போல் திருமேனி அம்மான்
புவனியெல்லாம் நீரேற்றளந்த நெடியபிரான்
புள்ளூர்தி
புள்ளையூர்வான்
புனத்துழாடாய் முடிமாலை மார்பன் .850.
புனிதன்
புண்ணியனார்
புராணன்
பூத்தண்துழாய் முடியாய்
பூந்துழாய் மலர்க்கே மெலியுமடநெஞ்சினார்