திருக் காரகம்
திருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்காரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 53 வது திவ்ய தேசம் ஆகும். இத்தல இறைவனை கார்ஹ மகரிஷி தரிசனம் செய்துள்ளார். இத்தல இறைவனை ஆணவம் நீங்கும் பொருட்டு பிரார்த்தனை செய்வதுண்டு, பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர். இந்த பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம் ஆகும்.
அமைவிடம்
பெயர்: திருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருக்காரகம்)
அமைவிடம்
ஊர்: திருக்காரகம்
மாவட்டம்: காஞ்சிபுரம்
தொலைபேசி எண்: +91- 94435 97107,
98943 88279,
தாயார் : ஸ்ரீ பத்மாமணி நாச்சியார்
மூலவர் : ஸ்ரீ கருணாகர பெருமாள்
உட்சவர்: --
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : காஞ்சிபுரம்
கடவுளர்கள்: கருணாகர பெருமாள்,ராமமணி நாச்சியார்