பிரபந்த அறிமுகம்


நாலாயிரம் - சில குறிப்புகள்

 

ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத்தில் உள்ள பல்வேறு பிரபந்தங்களின் பெயர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு. (நன்றி: திருவேங்கடத்தான் திருமன்றம் ட்ரஸ்ட்)

Sl Num

வகை/காரணம்

பிரபந்தம்

1

ஆரம்ப வார்த்தைகளால் பெயர் பெற்றவை

திருப்பல்லாண்டு அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுத்தாம்பு

2

அந்தாதித் தொடையால் பெயர் பெற்றவை

முதல் திருவந்தாதி இரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி

3

ஆரம்ப வார்த்தைகளாலும் அந்தாதித் தொடையாலும் பெயர் பெற்றது

நான்முகன் திருவந்தாதி

4

பாடியவர்களாற் பெயர் பெற்றவை

பெரியாழ்வார் திருமொழி நாச்சியார் திருமொழி பெருமாள் திருமொழி

5

அளவால் பெயர் பெற்றவை

பெரிய திருமொழி திருவெழுகூற்றிருக்கை

6

பாவாற் பெயர் பெற்றவை

திருவாசிரியம் திருச்சந்த விருத்தம் திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம்

7

செயலாற் பெயர் பெற்றவை

திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி

8

தன்மையால் பெயர் பெற்றவை

திருவிருத்தம் சிறிய திருமடல் பெரிய திருமடல் திருமாலை

9

சிறப்பால் பெயர் பெற்றது

திருவாய்மொழி