திருக் கள்வனூர்

திருக்கள்வனூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் 55 வது திவ்ய தேசம்.[3] [2] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கருவறைக்கு முன் ஒரு மூலையில் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள்ளும் மட்டுமே ஆகும். இத்தலத்தில் கிழக்கு நோக்கி நான்கு தோள்களுடன் இறைவன் ஆதிவராகப் பெருமாள், இறைவி அஞ்சிலை வல்லி நாச்சியார் ஆவார். இத்தலத் தீர்த்தம் நித்ய புஷ்கரணி. விமானம் வாமன விமானம் எனும் அமைப்பினைச் சேர்ந்தது. 108 வைணவத் திருத்தலங்களில் மிகச் சிறிய வடிவிலான இறைவனாக விளங்குவது இங்கு மட்டும்தான். இத்தலம் திருமங்கையாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றுள்ளது. தனியாக கோவில் உற்சவர் போன்றவர்கள் இல்லாததனால் உற்சவங்களும், விழாக்களும் இல்லை. தினசரி பூஜையும் காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர்களாலேயே செய்யப்படுகிறது. [

அமைவிடம்

பெயர்: திருக்கள்வனூர் அமைவிடம் ஊர்: காஞ்சிபுரம்,
(காமாட்சியம்மன் கோவில் உள்ளே) மாவட்டம்: காஞ்சிபுரம் தொலைபேசி எண்: +91 44-3723 1988,
93643 10545,

தாயார் : ஸ்ரீ அஞ்சில வல்லி நாச்சியார்
மூலவர் : ஆதி வராஹப் பெருமாள்
உட்சவர்: --
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : காஞ்சிபுரம்
கடவுளர்கள்: ஆதி வராஹப் பெருமாள்,ஸ்ரீ அஞ்சில வல்லி நாச்சியார்