திருவண் புருடோத்தமம்

தமிழ்நாட்டில் உள்ள வைணவத்திருத்தலங்களில் புருடோத்தமன் (புருஷோத்தமன்) என்ற பெயரில் இறைவன் எழுந்தருளியுள்ளது இங்கு மட்டுமே! இறைவனின் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண்புருஷோத்தமம்என்று ஆயிற்று மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளனர்.திருநாங்கூர் பதினோரு திருப்பதி பெருமாள்களும் இங்கு எழுந்தருளும் தைஅமாவாசைக்கு அடுத்த நாள் திருநாங்கூர் கருட சேவைக்கு திருநாங்கூருக்கு இப்பெருமாளும் செல்வார். வியாக்ரபாத முனிவர் எனப்படும் புலிக்கால் முனிவர் என்பவர் பெருமாளுக்கு பூமாலை சூட்டும் வேலையை மேற்கொண்டிருந்தார்.இக்கோயில் எம்பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தன் குழந்தை உபுமன்யுவை உட்காரவைத்துவிட்டு பூப்பறிக்கச் சென்றார்.குழந்தை பசியால் அழுதது.புருடோத்தம நாயகி தூண்ட, வண்புருஷோத்தமர் திருப்பாற்கடலை வரவழித்து குழந்தைக்கு பாலைப்புகட்டி அருள் புரிந்து வியாக்ரபாத முனிவருக்குக் காட்சி தந்தார் என்பது இத்தலத்தோடு பேசப்படும் வரலாறாகும். இறைவன், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

அமைவிடம்

குடமாடுகூத்தன் சதுர்புஜங்களுடன் கோபாலன் சோழ நாடு,
சீர்காழி. 30-திருவண் புருடோத்தமம் Phone Numbers: Ph: +91- 4365-245 350,

தாயார் : ஸ்ரீ புருஷோத்தம நாயகி
மூலவர் : ஸ்ரீ புருஷோத்தமன்
உட்சவர்: --
மண்டலம் : சோழ நாடு
இடம் : திரு நாங்கூர்
கடவுளர்கள்: ஸ்ரீ புருஷோத்தமன்,ஸ்ரீ புருஷோத்தம நாயகி


திவ்யதேச பாசுரங்கள்

    1258.   
    கம்பமா கடலடைத்து இலங்கைக்குமன்*  கதிர்முடிஅவைபத்தும் அம்பினால் அறுத்து*
    அரசு அவன் தம்பிக்கு*  அளித்தவன் உறைகோயில்*
    செம்பலாநிரை செண்பகம்மாதவி*  சூதகம் வாழைகள்சூழ்* 
    வம்புஉலாம் கமுகுஓங்கிய நாங்கூர*  வண்புருடோத்தமமே.       

        விளக்கம்  



    1259.   
    பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி*  அக்காளியன் பண அரங்கில்* 
    ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த*  உம்பர்கோன் உறைகோயில்*
    நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம்* ஐவேள்வியோடு ஆறுஅங்கம்* 
    வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.

        விளக்கம்  



    1260.   
    அண்டர் ஆனவர் வானவர்கோனுக்கு என்று*  அமைத்த சோறு அது எல்லாம் உண்டு* 
    கோநிரை மேய்த்து அவை காத்தவன்*  உகந்து இனிது உறை கோயில்*
    கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில்*  குல மயில் நடம் ஆட* 
    வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.     

        விளக்கம்  



    1261.   
    பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து*  அதன் பாகனைச் சாடிப் புக்கு*  
    ஒருங்க மல்லரைக் கொன்று*  பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்*
    கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு*  கழனியில் மலி வாவி* 
    மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.     

        விளக்கம்  



    1262.   
    சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து*  ஈசன் தன் படையொடும் கிளையோடும் ஓட* 
    வாணனை ஆயிரம் தோள்களும்*  துணித்தவன் உறை கோயில்*
    ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப்*  பகலவன் ஒளி மறைக்கும்* 
    மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்*  வண்புருடோத்தமமே.    

        விளக்கம்  



    1263.   
    அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று*  அயன் அலர் கொடு தொழுது ஏத்த* 
    கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய*   கண்ணன் வந்து உறை கோயில்* 
    கொங்கை கோங்குஅவை காட்ட*  வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்* 
    மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.  

        விளக்கம்  



    1264.   
    உளைய ஒண் திறல் பொன்பெயரோன்*  தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும்*
    வெம் சினத்து அரி பரி கீறிய*  அப்பன் வந்து உறை கோயில்*
    இளைய மங்கையர் இணைஅடிச் சிலம்பினோடு*  எழில் கொள் பந்து அடிப்போர்*
    கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்*  வண்புருடோத்தமமே.       

        விளக்கம்  


    • திருநாங்கூரில் சிறுமிகள் நர்த்தமனமாடுவார் சிலரும் பந்தடிப்பார் சிலருமாயிருக்கையாலே அன்னவர்களது காற்சிலம்புகளின் ஒலியும் கைவளைகளின் ஒலியுமே ஓங்கி மற்ற நகர கோஷங்களைக் கீழ்ப்படுத்தி நிற்குமென்று நகர்ச்சிறப்பு சொல்லிற்றாயிற்று, பின்னடிகளில்


    1265.   
    வாளை ஆர் தடங் கண் உமைபங்கன்*  வன்சாபம் மற்றுஅதுநீங்க* 
    மூளைஆர்சிரத்து ஐயம் முன்அளித்த*  எம்முகில் வண்ணன் உறைகோயில்*
    பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின்*  வண்பழம் விழ வெருவிப் போய்* 
    வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்*  வண்புருடோத்தமமே.    

        விளக்கம்  


    • பாக்குச் சோலைகளின் நடுவே தென்னைமரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கின்றன; அவற்றினின்று பெருத்த காய்கள் இற்றுக் குளங்களிலே விழுகின்றன; அவற்றின் கடுமையான ஓசையைக் கேட்டவாறே மீன்கள் ‘தங்களை இரையாகக் கொள்வதற்கு ஏதோவொன்று வந்து குதித்துவிட்டது’ என்று பிரமித்து வேறிடந்தேடித் துள்ளித் தாவுகின்றனவாம். எம்பெருமானிடத்தில் அஸ்தாநே பயசங்கை பண்ணிக் கலங்கும் பரிலர்களின்படிக்குப் போலியென்னலாம்.


    1266.   
    இந்து வார் சடை ஈசனைப் பயந்த*  நான் முகனைத் தன் எழில் ஆரும்* 
    உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன்*  உகந்து இனிது உறை கோயில்* 
    குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து*  தன் குருளையைத் தழுவிப் போய்* 
    மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்*  வண்புருடோத்தமமே.

        விளக்கம்  



    1267.   
    மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர்*  வண்புருடோத்தமத்துள்* 
    அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன்*  ஆலி மன் அருள் மாரி* 
    பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல்*  இப்பத்தும் வல்லார் உலகில்* 
    எண் இலாத பேர் இன்பம் உற்று*  இமையவரோடும் கூடுவரே. (2)   

        விளக்கம்