திருக்குளந்தை
பெருங்குளம் பெருமாள் கோவில் என்றழைக்கப்படும் திருக்குளந்தை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருப்புளிங்குடியிலிருந்து சுமார் 6 மைல் தொலைவிலும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சுமார் 7 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கி நின்ற நிலையில் சோர நாதன்(மாயக்கூத்தன்), ஸ்ரீனிவாஸன் என்று பெயர்கள் உண்டு. இறைவி: குளந்தை வல்லித்தாயார் (கமலாதேவி), அலமேலு மங்கைத் தாயார். தீர்த்தம்: பெருங்குளம். விமானம்:ஆனந்த நிலய விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.
அமைவிடம்
பெயர்: பெருங்குளம் பெருமாள் கோவில்
அமைவிடம்
ஊர்: திருக்குளந்தை
மாவட்டம்: தூத்துக்குடி
மாநிலம்: தமிழ்நாடு
phone:+91-4545 - 242 293,
242 236,
242 493.,
தாயார் : ஸ்ரீ அலமேலுமங்கை தாயார், ஸ்ரீ குளந்தை வல்லி
மூலவர் : ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
உட்சவர்: ஸ்ரீ மாயக்கூத்தன்
மண்டலம் : பாண்டியநாடு
இடம் : திருநெல்வேலி
கடவுளர்கள்: ஸ்ரீனிவாச பெருமாள் ,குழந்தை வள்ளி தாயார்