திரு நிலா திங்கள் துண்டம்
திரு நிலாத்திங்கள் துண்டம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலும் (திருக்கள்வனூர்)ஆகும். இத்தலத்தில் பார்வதியின் வேண்டுகோளின் படி பெருமாள் குளிர்ந்த கிரணங்களை வழங்கிக் கொண்டே இவ்விடத்தில் எழுந்தருளியிருப்பதாக நம்பிக்கையாகும். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நிலாத்திங்கள் துண்டத்தான். சந்திரசூடப் பெருமாள் எனற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இறைவிக்கு நேரொருவர் இல்லா வல்லியென்றும், நிலாத்திங்கள் துண்டத்தாயார் என்றும் பெயர். இத்தலத் தீர்த்தம் சந்திர புஷ்கரணி விமானம் புருஷ ஷீக்த விமானம் (ஆர்ய விமானம்) என்ற வகையைச் சேர்ந்தது. காஞ்சியில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குள் அமைந்துள்ள இந்த தலத்தில் சிவன் கோவில் குருக்களே பூஜை செய்து தீர்த்தம் கொடுக்கின்றார். தமிழ்நாட்டிலுள்ள வைணவத் திருத்தலங்களில் சிவனடியார்களால் பூஜை செய்யப்படும் பெருமாள் இவர் ஒருவர் தான். [2] திருமங்கையாழ்வாரால் ஒரு பாடலில் மட்டும் பாடல் பெற்றது.
அமைவிடம்
ஸ்ரீ நிலத்துண்ட பெருமாள் கோவில் ,
காஞ்சிபுரம் – 631 502.
போன் எண்:+91- 44 - 272 22084,
,
தாயார் : நேர் ஒருவர் இல்லா வல்லி
மூலவர் : சந்திர சூட பெருமாள்
உட்சவர்: --
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : காஞ்சிபுரம்
கடவுளர்கள்: சந்திர சூட பெருமாள் ,மகாலெட்சுமி