- முகப்பு
- திவ்ய தேசம்
- திரு கண்ணங்குடி
திரு கண்ணங்குடி
தலபுராணம்:- கிபி முதல் நூற்றாண்டில் கொன்றைவனச் சித்தரால் மூலநிர்மாணம் செய்யப்பட்ட இத்திருக்கோவில் சித்தரின் நேரடி ஆன்மிக மற்றும் மருத்துவ சேவையில் ஏறத்தாழ 300 ஆண்டுகள் இருந்துள்ளது. இறுதியில் கொன்றைவனச் சித்தர் இத்திருக்கோவிலின் வடபுறம் சமாதி அடைந்துள்ளார். கிபி 9ம் நூற்றாண்டில் திருப்பத்தூரை கோட்டை நகரமாகவும், பேட்டை நகரமாகவும், பாசறையாகவும் விரிவுபடுத்திய இரண்டாம் வரகுண பாண்டியனால் கிபி 860 களில் அங்காளபரமேசுவரி திருக்கோவில் திருப்பணி செய்யப்பட்டது.. தொடர்ந்து பல நுற்றாண்டுகள் அங்காளபரமேசுவரி திருக்கோவில் அருள் தரும் ஆலயமாக விளங்கியுள்ளது. பின்பு 13ம் நூற்றாண்டில் நடைபெற்ற தில்லி படையெடுப்பால் இத்திருக்கோவில் சிதிலமடைந்தது.

அமைவிடம்
முகவரி:-
அண்ணா நகர்,
பம்மல்,
சென்னை-75. போன்- 044 22632633 35 ஆண்டுகள் ... 18-திரு கண்ணங்குடி ஸ்ரீ லோகநாயகி (அரவிந்த வல்லி),
தாயார் : ஸ்ரீ லோகநாயகி
மூலவர் : ஸ்ரீ லோகநாதன்
உட்சவர்: தாமோதர நாராயணன்
மண்டலம் : சோழ நாடு
இடம் : கும்பகோணம்
கடவுளர்கள்: தாமோதர நாராயனண்,அரவிந்தவள்ளி
திவ்யதேச பாசுரங்கள்
-
1748.
திருப்பாற்கடலில் பாம்பணையிற் பள்ளிகொள்ளுகின்ற வ்யூஹமூர்த்தியே திருக்கண்ணங்குடியில் அர்ச்சாவதார ரூபியாய் எழுந்தருளியுள்ள எம்பெருமானென்கிறார். வங்கம் – கப்பல்; கடலுக்குச் சிறப்பாகக் கூறும விசேஷணமிது, இனி இச்சொல்லை வடசொல்லின் சிதைவாகக்கொண்டால் அலை என்று பொருள் கொள்ளலாம். அங்கம் ஆறு = சீக்ஷா, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்று வேதாங்கங்கள் ஆறு. ஐந்துவேள்விகளாவன :– ப்ரஹ்மயஜ்ஞம், தேவயஜ்ஞம், பூதயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், மனுஷ்யஜ்ஞம் என்பனவாம். வேதமோதுதல் பிரமயஜ்ஞம்; பலியீதல் பூதயஜ்ஞம்; பித்ருக்களையுத்தேசித்துத் தர்ப்பணம்விடுதல் பித்ருயஜ்ஞம்; விருந்தினர்க்கு உணவளித்தல் மநுஷ்யயஜ்ஞம். நால்வேதமாவன :– ருக் யஜுஸ் ஸாமம் அதர்வணம் என்பன: தைத்திரியம் பௌடியம் தலவகாரம் சாமம் எனவிவை யென்றலுமுண்டு. அருங்கலை யென்றது – வேதங்களுக்கு உபப்ரும்ஹணமாகவுள்ள ஸ்மிருதீதி ஹாஸ புராணங்களை யென்ப. ஞானமனுட்டானமிவை நன்றாகவே யுடையரான மஹான்கள் வாழுமிடம் திருக்கண்ணங்குடி யென்றதாயிற்று. துளக்கமில்மனத்தோர் = துளக்கமாவது கலக்கம்; அஃதில்லாத மனமுடையவர்களென்றது நல்ல விவேகமுடையவர்களென்றபடி : ‘நாம் செய்கிற கருமங்கள் நமக்கு ஸாதநமல்ல; எம்பெருமானுடைய நிர்ஹேதுகக்ருபையே நமக்கு உஜ்ஜீவநோபாயம்’ என்னும் அத்யவஸாயத்தில் குலைதலற்றவர்களென்கை.
இத்திருப்பதியில் வாழ்பவர்கள் வேத வேதாந்தங்கள் கைவந்தவர்களென்றது கீழ்ப்பாட்டில். அந்தவேதத்தின் முக்கிய தாத்பரியத்தைச் செய்கையில் அதற்குநேரும் இடையூறுகளை யொழித்து அக்கைங்கரியத்தைத் தானே கைக்கொண்டருளுமவன் எம்பெருமானென்பதை உணர்த்து மாறு ஸ்ரீகஜேந்திராழ்வானது வரலாற்றை இப்பாசுரத்தி லெடுத்துரைக்கின்றார். கவளம் என்று யானையுணவுக்குப்பெயர் ‘மாகதத்த’ என்னும் விசேஷணமும் சாதிக்குரியதாக இட்டதாம். கதம் – கோபம். கரி – வடசொல். ‘கரா’ என்றும் ‘கராம்’ என்றுமு் முதலைக்குப் பெயர். கொள – கொள்ள. துவள – ‘மிகவருந்திப் பறிக்கப்பட்ட இப்பூவை எம்பெருமானது திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பெறுகின்றிலோமே!’ என்றுவருத்தங் கொள்ள. நீர்ப்பூவளமும் நகர்வளமும் சொல்வன பின்னடிகள்.
மூவுலகங்களும் பிரளயவெள்ளத்தில் மூழ்கித் துன்பம் மிகுந்தகாலத்தில், லக்ஷம் யோஜனை நீளமும் பதினாயிரம் யோஜனை பருமனும் ஒற்றைக்கொம்பும் வாய்ந்த பெரு மீனாகத் திருவவதரித்துத் தன் ஒரு 1.செலுவினகத்தே கடல்வெள்ளம் முழுவதும் ஒடுங்கும் படியிருந்த பெருமான் வாழுமிடம் திருக்கண்ணங்குடி. மீதுகொண்டு = எம்பெருமானுடைய நியமனப்படி பிரளயப் பெருநீரில் ஒரு பெரிய ஓடம்வர, அந்தப்படகில் ஸப்தரிஷிகளும் எல்லா ஓஷதிகளும் ஸமஸ்கபிராணிகளும் ஏறியிருக்குமளவில் ஒரு பெருங்காற்று அடிக்க அதனால் ஓடம் பெருநீரில் அலைய, அப்போது அதனை மத்ஸ்ய ரூபியான பெருமான் தனது ஒற்றைக்கொம்பிலே வஹித்து ரக்ஷித்ததாக வரலாறு உள்ளதாதலால் “மீதுகொண்டு உகளும் மீனுருவாகி” எனப்பட்டது. விரிபுனல்வரி அகட்டொளித்தோன் = “முடங்கு தெண்டிரைய பௌவம் முற்றுமோர் செலுவுட்சென்று, மடங்கிய துணரகில்லார் மயர்ந்தனர் நேடியன்னோர், ஒடுங்கினரேத்தி நின்றா ருயர்வொப்பில்லாத மேலோன், தடங்கொள் சேலுருவின்மாண்பு யாவரோ சாற்று நீரரா?” என்ற ஸ்ரீ பாகவதத்தைக்காண்க. கடல்நீர்முழுவதையும் ஒரு செலுவினுள்ளடக்கிக் கடலை வெறுந்தரையாக்கி அதிலே சிலகாலம் விளையாடுவதும், மறுபடியும் செலுவில் நின்று கடல்நீரை வெளிப்படுத்திக் கடலிலே சிலகாலம் விளையாடுவதுமாய் நிகழ்ந்த லீலை உணரத் தக்கது. செலுவாவது – மீனின் உட்புறத்தேயுள்ள முள்; ‘செதிள்’ எனவும்படும். அன்றி செலுவாவது மீன்செட்டையெனப்படும் மீன்சிறகுமாம். பட்டர் ‘பாதா’ என்னும் வடசொல் வாதையெனத்திரிந்தது.
பயலைதீர்த்தவன் :– பயலை யெனினும் பசலையெனினும் ஓக்கும். பசலை நிறத்தைப் பற்றிக் குறுந்தொகையில் ஒரு செய்யுளுண்டு; அதாவது – “ஊருண்கேணி உண்டுறைத் தொக்க பாசியற்லே பசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.” (399) என்பதாம். ஊரிலுள்ள ஜனங்களாலே நீருண்ணப் பெறுகிற கேணியினுள்ளே படர்ந்து கிடக்கும் பாசிபோன்றது பசலை நிறம்; தண்ணீரில் நாம் கைவைத்தோமாகில் கைபட்ட விடங்களில் பாசி நீங்கும்; கையை எடுத்துவிட்டோமாகில் அவ்விடமெல்லாம் பழையபடியே பாசி மூடிக்கொள்ளும். அதுபோல, கணவனுடைய கைபடுமிடங்களில் பசலைநிறம் நீங்கும்; அணைத்த கை நெகிழ்த்தவாறே அப்பசலை நிறம் படரும்; ஆதலால் பாசி போன்றது பசலை நிறம் என்றபடி : (தொடுவுழித் தொடுவுழி – தொட்ட விடங்கள் தோறும். விடுவுழி விழுவுழி – விட்டவிடங்கள் தோறும். பரத்தலான் – வியாபிக்கிறபடியினால்.) நிறவேறுபாடு பசலையெனப்படும். பூமிப்பிராட்டி எம்பெருமானைப் பிரிந்து பிரளயப் பெருவெள்ளத்தினுள்ளே ஆழ்ந்திருந்ததனால் நிறவேறுபாடு கொண்டிருந்தாளென்றும், “பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள், மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாந் தேசுடையதேவர்” என்கிறபடி மஹாவராஹமாகத் திருவவதரித்துப் பூமியைக் கோட்டாற்குத்தி மீட்டுக்கொணர்ந்து நித்ய ஸம்ச்லேஷம் பண்ணி “என்னிறம் பண்டு பண்டுபோலலொக்கும்” என்னும்படியான நல்லநிறத்தைக் கொடுத்தனனென்றும் கூறியவாறு. பஞ்சவர் - தொகைக்குறிப்பு; ஐவருள் அர்ஜுநனே இஙகு விவக்ஷிதன். இத்தலத்தின்கணுள்ள திருமாளிகைகளின் ஓக்கம் அதிசயோக்தி யலங்கார வகையிற் கூறப்படுகிறது பின்னடிகளில். ‘ஒன்றலாவுருவத்து’ என்பதும் ‘உலப்பில் பல்காலத்து’ என்பதும் நன்மாடத்துக்கு இட்ட அடைமொழிகள் ஒன்று அல்லாவுருவத்து – திருமாளிகைகள் ஒன்றோடொன்று விலக்ஷணங்களாயிருக்கிறபடி. ஒன்று போலொன்று இராத என்றபடி. உலப்பில் பல்காலத்து = (உலப்பு – முடிவு) சிலநாளிருந்து அழிந்து போவதன்றியே சாச்வதமாகவுள்ள திருமாளிகைகளென்கை (உயர்கொடி யித்யாதி) மேலே கட்டியுள்ள த்வஜங்கள் சந்திரமண்டலத்திலே படும்படிசிகரஙகள் ஓங்கியிருக்கின்றனவாம். சிகரம் – வடசொல்.
ஓரரசன் ராஜசிஹ்நமாகிய வெண்சாமரைவீசக் கொற்றக்குடை நிழலிலே சிங்காசனத்தின் மீது வீற்றிருத்தல்போல. இத்திருப்பதியில் அன்னப் பறவைகள் செந்நெற்கதிர்களாகிய சாமரை வீச இலைக்குடையின் கீழ்ச் செந்தாமரை மலர்களிலேறி வீற்றிருக்குமென்பது பின்னடிகளிற் கூறிய வருணனையின்கருத்து. பீடம் – வடசொல் திரிபு.
In the yore the Lord came on Earth wielding an angry battleaxe and rolled the crowned heads of twenty one kings, then bathed in the river of their gore. His standing form adorns the temple of Tirukkannangudi surrounded by mansions and fertile orchards bearing bunches of bananas, jackfruit, mango, Areca and fragrant kurukatti trees.
கண்ணபிரான் பாண்டவர்கட்குத் தூதனாய்த் தன்னிடம் வரப்போகிறானென்பதை யறிந்த துரியோதனன் எவ்வகையினாலேனும் க்ருஷ்ணனை முடித்துவிடுவதே கருமமென்று துணிந்து ரஹஸ்யமாகத் தனது ஸபரமண்டபத்தில் மிகப் பெரிய நிலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில் அனேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளே யிருக்க வைத்து அப்படுகுழியைப் பிறர் அறிய வொண்ணாதபடி மூங்கிற் பிளப்புகளால் மேலே மூடி அதன்மேற் சிறந்த ரத்நாஸந மொன்றை யமைத்து அவ்வாஸநத்தின் மீது கண்ணபிரானை வீற்றிருக்கச்சொல்ல, கண்ணன் அங்ஙனமே அதன்மேலேறின மாத்திரத்திலே மூங்கிற்பிளப்புக்கள் முறிபட்டு ஆஸனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில் மல்லர்கள் எதிர்த்துவர, பெருமான் மிகப் பெரியதாக விச்வரூபமெடுத்துப் பலகைகளையுங் கால்களையுங்கொண்டு எதிர்த்து மல்லர்களை மடிவித்தானென்ற வரலாறு அறிக. துரியோதனன் ஸர்ப்பத்தை த்வஜத்திலே யுடையனாதலால் அரவுநீள் கொடியோன் எனப்பட்டான். ‘ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தனான பெருமானுக்குத் தீங்கிழைக்கநினைக்கிறோமே! இது நமக்கே அநர்த்தமாய்த் தலைக்கட்டுமே!’ என்று அஞ்சவேண்டியிருக்க அங்ஙனம் சிறிதும் அஞ்சாமல் ஸாஹஸமாய்ப் பொய்யாஸனமிட்டதனால் ‘அஞ்சிடாதே யிட’ எனப் பட்டது. (பெரியமாமேனி அண்டமூடுருவப் பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்) ஸ்ரீ காஞ்சீபுரியில் ‘திருப்பாடகம்’ என்ற ப்ரஸித்தமான பாண்டவ தூதர் ஸந்நிதியில் இவ்விதிஹாஸத்துக்குத் தகுதியாக மிகப் பெரிய திருக்கோலங் கொண்டடொழுந்தருளி யிருக்கின்றமை அறியத்தக்கது. (பாடகம் = பாடு அகம்-, பாடு - பெருமை; அது தோற்ற எழுந்தருளியிருக்கும் தலம் என்க.) ஸஹ்ய பர்வதத்திலிருக்கிற ரத்னங்கள் மரதகத்திரள் வயிரம் மூங்கிலுதிர்த்த முத்துக்கள் ஆகிய இவற்றைத் திரைகளானவை தம்மிலடங்காமையாலே கொண்டுவந்து தள்ளி வயல்களிலே குவிக்குமென்பன பின்னடிகள். வெதிர் – மூங்கில்
மைத்துனற்குத் தேர் உய்த்த = கண்ணபிரானுக்கு அர்ஜுநன் எப்படி மைத்துனன்? என்று கேள்வி பிறக்கும், கேண்மின் : பெண் கொடுத்துக் கொள்ளுதற்கு உரிய உறவுமுறைமை யுடையாரை மைத்துனன்மாரென்பது தமிழ் மரபாதல் பற்றிப் பாண்டவர்கள் கண்ணபிரானுக்கு மைத்துனன்மாராவர் என்று பெரியோர் சொல்லக்கேள்வி; “மைத்துனன்மார் காதலியை மயிர்முடிப்பித்து” என்ற பெரியாழ்வார் திருமொழியுங்காண்க.
காரிகை - அழகு; அஃதுடையவளுக்கு ஆகுபெயர்; இச்சொல் இங்குச் சிறப்பாக ஸீதையைக் குறித்தது. கடல்பெரும்படையொடுஞ் சென்று = கடலிற் காட்டிலும் பெரிதான சேனையோடே சென்று என்றும், பெரும்படையோடே கடலிலே சென்று என்றும் பொருள் கொள்ளலாம். நல்குரவு - தரித்ரனாயிருத்தல்; எம்பெருமானை இழந்திருத்தலே தாரித்ரியமாகக் கருதத்தக்கது. ‘நல்குரவு இல்லை’ என்றது - பகவத் கைங்கர்ய லக்ஷ்மி இடையறாதிருக்குமென்றவாறு. இனி, லௌகிகருடைய ஆசைக்கு ஏற்பப் பொருளுரைக்கவுமாம்.
விளக்கம் 

1749.
விளக்கம் 

1750.
விளக்கம் 

1751.
விளக்கம் 

1752.
விளக்கம் 

1753.
விளக்கம் 

1754.
விளக்கம் 

1755.
விளக்கம் 

1756.
விளக்கம் 

1757.
விளக்கம் 
