திருக் காவளம்பாடி

12 ஆண்டுகால வனவாசம் கிட்டத்தட்ட முடிந்து பாண்டவர்கள் ஓராண்டு மறைந்த வாசம் செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது. ஒரு நாள் காட்டில் அலைந்து கொண்டிருந்த சமயம் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர் நகுலனை அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதா என்பதைப் பார்த்து வரும்படி ஏவுகிறார். நகுலனும் அவ்வாறே செல்ல ஒரு பொய்கையைப் பார்க்கிறான். முதலில் தன் தாகம் தணித்து சகோதரர்களுக்கும் தண்ணீர் எடுக்கும் நோக்கத்துடன் பொய்கைக்குள் இறங்குகிறான். அப்போது “சாகசம் செய்யாதே நகுலா, எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும்” என்று ஒரு அசரீரி கேட்கிறது. அதை அலட்சியம் செய்து தண்ணீரை அருந்த, அவன் நினைவிழந்து கரையில் வீழ்கிறான்.

அமைவிடம்

சோழ நாடு. மயிலாடுதுறை. 27. திருக் காவளம்பாடி,
. திரு நாங்கூர். ஸ்ரீ மடவரல் மங்கை. ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்).,

தாயார் : ஸ்ரீ மடவரல் மங்கை
மூலவர் : ஸ்ரீ கோபால கிருஷ்ணன்
உட்சவர்: --
மண்டலம் : சோழ நாடு
இடம் : சீர்காழி
கடவுளர்கள்: கோபாலகிருஷ்ண பெருமாள் ,ருக்மணி, பாமா


திவ்யதேச பாசுரங்கள்

  1298.   
  தாஅளந்து உலகம் முற்றும்*  தட மலர்ப் பொய்கை புக்கு* 
  நாவளம் நவின்று அங்கு ஏத்த*  நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்* 
  மாவளம் பெருகி மன்னும்*  மறையவர் வாழும் நாங்கைக்* 
  காவளம் பாடிமேய*  கண்ணனே! களைகண்நீயே.    

      விளக்கம்  


  • கஜேந்திராழ்வானைக் காத்தருளினதுபோல எம்போலியரையும் பஞ்சேந்திரியங்களாகிற ஐந்து முதலைகளின் வாயில் நின்று விடுவித்துக் காத்தருள்வதற்காகத் திருநாங்கூரில் ஒரு பகுதியான திருக்காவளம்பாடியென்னுந் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் பிரானே! எமக்கு நீயே ரக்ஷகனாகவேணும்; நீ தவிர வேறொருவனையும் யாம் ரக்ஷகனாகவுடையோமல்லோம் என்றாராயிற்று.


  1299.   
  மண் இடந்து ஏனம் ஆகி*  மாவலி வலி தொலைப்பான்* 
  விண்ணவர் வேண்டச் சென்று*  வேள்வியில் குறை இரந்தாய்!*
  துண் என மாற்றார்தம்மைத்*  தொலைத்தவர் நாங்கை மேய* 
  கண்ணனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே. 

      விளக்கம்    1300.   
  உருத்து எழு வாலி மார்வில்*  ஒரு கணை உருவ ஓட்டி*    
  கருத்து உடைத் தம்பிக்கு*  இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய்*
  பருத்து எழு பலவும் மாவும்*  பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக்* 
  கருத்தனே! காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.    

      விளக்கம்  


  • உருத்து – ‘உரு’ என்று கோவத்திற்குப் பெயர்; அச்சொல்லடியாப் பிறந்த வினையெச்சம். ‘சற்று முன்னே சண்டைக்குவந்து தோற்றோடிப்போன பையல் மறுபடியும் வெட்கமின்றி வந்தானே!’ என்று கோபமூண்டு கிளம்பி வந்த வாலி என்றபடி. ஒருகணை உருவவோட்டி – வாலியின் மார்பில் எத்தனையோ வீரர்கள் அம்புகளைப் பிரயோகித்ததுண்டு; அவையெல்லாம் வாய் மடிந்துபோயின வத்தனையொழிய ஒன்றேனுங் காரியஞ்செய்யவில்லை; இராமபிரானுடைய கணையே காரியஞ்செய்ததுபற்றி ‘ஒருகணை’ எனப்பட்டது. கருத்துடைத்தம்பிக்கு – ‘வாலி ஆண்ட ராஜ்யத்தை நாம் ஆளவேணும்’ என்ற கருத்துடைய ஸுக்ரிவனுக்கு – என்றாவது, தன்னோடு ஸ்நேஹங்கொண்டதனால் ஒத்த கருத்தையுடையனான ஸுக்ரிவனுக்கு என்றாவது உரைக்கலாம். கர்த்தா என்னும் வடசொல் கருத்தன் எனத்திரிந்து விளிபுருபேற்றது.


  1301.   
  முனைமுகத்து அரக்கன் மாள*  முடிகள் பத்து அறுத்து வீழ்த்து*  ஆங்கு 
  அனையவற்கு இளையவற்கே*  அரசு அளித்து அருளினானே*
  சுனைகளில் கயல்கள் பாயச்*  சுரும்பு தேன் நுகரும் நாங்கைக்* 
  கனை கழல் காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே. 

      விளக்கம்  


  • (சுனைகளில் இத்யாதி.) வண்டுகள் பூக்களிலே படிந்து மதுபானம் பண்ணும்போது பெரிய கோலாஹலமாயிருக்கும்; அது தண்ணீரிலுள்ள மீன்களின் காதுகளில்படவே அவை தம்மேலே வண்டுகள் விழுகின்றனவாக நினைத்து அஞ்சிப் பாய்கின்றனவாம்.


  1302.   
  பட அரவு உச்சிதன்மேல்*  பாய்ந்து பல் நடங்கள்செய்து* 
  மடவரல் மங்கைதன்னை*  மார்வகத்து இருத்தினானே!*
  தடவரை தங்கு மாடத்*  தகு புகழ் நாங்கை மேய* 
  கடவுளே! காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.   

      விளக்கம்    1303.   
  மல்லரை அட்டு மாள*  கஞ்சனை மலைந்து கொன்று* 
  பல் அரசு அவிந்து வீழப்*  பாரதப் போர் முடித்தாய்*
  நல் அரண் காவின் நீழல்*  நறை கமழ் நாங்கை மேய* 
  கல் அரண் காவளம் தண்  பாடியாய்!* களைகண் நீயே.            

      விளக்கம்    1304.   
  மூத்தவற்கு அரசு வேண்டி*  முன்பு தூது எழுந்தருளி* 
  மாத்தமர் பாகன் வீழ*  மத கரி மருப்பு ஒசித்தாய்*
  பூத்தமர் சோலை ஓங்கி*  புனல் பரந்து ஒழுகும் நாங்கைக்* 
  காத்தனே! காவளம் தண் பாடியாய்!* களைகண் நீயே. 

      விளக்கம்  


  • மாத்தமர்பாகன் - ‘மஸ்தகம்’ என்னும் வடசொல் ‘மத்தகம்’ எனத் திரிந்து அது ‘மாத்து’ எனச் சிதைந்தது. மதகரி – வடசொல் தொடர்.


  1305.   
  ஏவிளங் கன்னிக்கு ஆகி*  இமையவர் கோனைச் செற்று* 
  காவளம் கடிது இறுத்துக்*  கற்பகம் கொண்டு போந்தாய்*
  பூவளம் பொழில்கள் சூழ்ந்த*  புரந்தரன் செய்த நாங்கைக் 
  காவளம்பாடி மேய*  கண்ணனே!  களைகண் நீயே.   

      விளக்கம்  


  • ஏவிளங்கன்னிக்காகி – ஏவு - ‘இந்தப் பாரிஜாத விருக்ஷத்தை என் வீட்டு முற்றத்தில் கொண்டு நட்டுவிடு’ என்று ஏவின, இளங்கன்னிக்காகி – என்று முரைக்கலாம்.. அம்மரத்தைக் கருடனைக்கொண்டு போருமளவில் இந்திரன் அஃதறிந்து வஜ்ராயுதத்தைத் தீட்டிக்கொண்டு போர்புரிய வந்து பங்கப்பட்டுப் போயினன் என்பதும் இங்கு அறியத்தக்கது. அதுதோன்ற “இமையவர் கோனைச் செற்று” எனப்பட்டது. புரந்தரன் செய்த நாங்கை - ஸ்வர்க்க லோகத்திற்கு உண்டான ஏற்றம் பூலோகத்திற்கு முண்டாகவேணும் என்று கருதின தேவேந்திரன் ஸ்வர்க்கலோகத்துக் கட்டளையாகவே திருநாங்கூரை அமைத்தனன் என்று ஒரு இதிஹாஸ முண்டென்பர். புரந்தான் - வடசொல்


  1306.   
  சந்தம் ஆய் சமயம் ஆகி*  சமய ஐம் பூதம் ஆகி* 
  அந்தம் ஆய் ஆதி ஆகி*  அரு மறை அவையும் ஆனாய்*
  மந்தம் ஆர் பொழில்கள்தோறும்*  மட மயில் ஆலும் நாங்கைக்* 
  கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய்!*  களைகண் நீயே.

      விளக்கம்  


  • காயத்ரி, த்ரிஷ்டுப், ஜகதீ, அநுஷ்டுப், பங்க்தி என்றிப்படி சொல்லப்படுகிற சந்தஸ்ஸுக்களெல்லாம் நீயேயாகின்றாய்; ‘இத்தனை அக்ஷரங்கள் கூடினால் இன்ன சந்தஸ், இத்தனை அக்ஷரங்கள் கூடினால் இன்ன சந்தஸ்’ என்றிப்படி வ்யவஸ்தைகள் பண்ணினவனும் நீயே; ஸ்வபாவ நியமத்தோடு கூடின பஞ்சபூதங்களுக்கு நியாமகனும் நீயே; காரியப் பொருள்களெல்லாம் அழிந்து கிடந்த காலத்து எல்லாம் தன் பக்கலிலே வயித்துத் தானொருவனே என்னும்படி யிருக்குமவனும் நீயே. இவற்றையெல்லாம் விபாகம்பண்ணிக் காரியங்கொள்ள நினைத்த காலத்து இவற்றுக்கெல்லாம் காரணபூதனாக நின்றவனும் நீ: இவ்விதமாக வேதங்களால் பிரதிபாதிக்கப்படுபவனும் நீயே; இப்படிப்பட்ட நீ காவளம்பாடியில் வந்து ஸேவை ஸாதியாநின்றாய்; நீயே எமக்கு ரக்ஷகன் என்றாராயிற்று. சமயம் - வடசொல். (ஸமயமாவது – வியவஸ்தை.) மூன்றாமடியில் ‘மந்தாரம்’ என்ற வடசொல் மந்தம் எனச் சிதைந்து கிடக்கிறது. கந்தம் - பரிமளம்.


  1307.   
  மாவளம் பெருகி மன்னும்*  மறையவர் வாழும்*  நாங்கைக் 
  காவளம் பாடிமேய*  கண்ணனைக் கலியன் சொன்ன* 
  பாவளம் பத்தும் வல்லார்*  பார்மிசை அரசர் ஆகிக்* 
  கோ இள மன்னர் தாழக்*  குடைநிழல் பொலிவர்தாமே.    

      விளக்கம்  


  • பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு:- “மோக்ஷத்தைப் மாகச் சொல்லில் அதிகாரிகளைக் கிடையாதென்று, அபிமதஸாதன மென்னவே கற்பர்கள்; பின்னை மோக்ஷத்திலே கொடுபோய் மூட்டுகிறோமென்று ஐச்வர்யத்தைப் பலமாகச் சொல்லிற்று.” என்று.