- முகப்பு
- திவ்ய தேசம்
- திரு அயோத்தி
திரு அயோத்தி
சர்ச்சைக்குரிய பாபர் மசூதியும், ராமர் கோவிலும் அமைந்துள்ளது. இந்தியாவின் அரசியல் தலைஎழுத்தை கொஞ்சம் மாற்றி எழுதிய ஊர் இது. விஷ்ணுவின் அவதாரமான இராமர், இந்த அயோத்தியை தலை நகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்ததாக வால்மீகி எழுதிய இராமாயண இதிகாசம் கூறுகிறது. அவத் பகுதி இசுலாமியர்களின் ஆட்சியில் அவுத் நவாப்புகள் ஆளுகையின் கீழ் 1722 முதல் 1948 வரை வந்தது. பாபரின் தளபதிகளில் ஒருவரால் இங்குள்ள பாபர் மசூதி கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இங்கிருந்த ராமர் கோவில் இடித்துவிட்டு இங்குள்ள மசூதி கட்டப்பட்டதாக சங்கப் பரிவார் இயக்கங்களால் அரசியல் சர்ச்சைகளுக்கு ஆளானது. பல ஆயிரம் உயிர்கள் கடவுளின் பெயரால் கொல்லப்பட்ட கொடுமை அரங்கேறியது. இதில் உச்சகட்டமாக அங்கிருந்த மசூதி சங்கப் பரிவார இயக்கங்களால் தகர்த்தெறியப்பட்டது. அயோத்தி பிரச்சினை இந்தியாவின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக இன்றும் விளங்குகிறது.
அமைவிடம்
அயோத்தி,
உத்தரப் பிரதேசம்,
தாயார் : ஸ்ரீ சீதாப் பிராட்டி
மூலவர் : ஸ்ரீ ராமன்
உட்சவர்: அக்காரக்கனி
மண்டலம் : வட நாடு
இடம் : உத்தரப் பிரதேசம்
கடவுளர்கள்: ஸ்ரீ ராமன் ,ஸ்ரீ சீதாப் பிராட்டி
திவ்யதேச பாசுரங்கள்
-
312.
பரதாழ்வான் கேகயநாட்டிலிருந்து அயோத்திக்கு வந்து அங்கு நிகழ்ந்ததை அறிந்து இராமன் வனம்புக்கமைக்கு மிகவும் வருந்தி, தந்தைக்குரிய அந்திமக்கிரியைகளைச் செய்துமுடித்து, இராமனை அழைத்து வந்து முடிசூடுவிக்கக்கருதி, தான் அரசியலைத் துறந்து மாவுரிபுனைந்து தாய்மார் முதலியோரோடு சேனை சூழ வனம் புகுந்து, சித்திரகூடத்தில் இராமபிரானைக்கண்டு திருவடி தொழுது, அவரை அயோத்திக்கு வந்து முடிசூடி அரசாளுமாறு வேண்ட, இராமபிரான் தந்தைசொற் பழுதுபடாதபடி பதினான்கு வருடம் வநவாஸங்கழித்துப் பின்னர் வருவதாகக் கூறி அதுவரை அரசாளுமாறு வேண்ட, இராமபிரான் தந்தை சொற் பழுதுபடாதபடி பதினான்கு வருடம் வநவாஸங்கழித்துப் பின்னர் வருவதாகக் கூறி அதுவரை அரசாளுமாறு நியமித்து, தனக்குப் பிரதியாகத் தனது திருவடிநிலங்களைத் தந்தனுப்பியருளினனென்ற வரலாறு அறியத்தக்கது. முடி ஒன்றுதல்- முடிபொருந்துதல் அருள்- முன்னிலை ஏவலொருமை வினைமுற்று, ‘நமது தாய் நன்று செய்தாள், நாம் சுகமாகவாழலாம்படி நமக்குப் பெரிய ராஜ்யம் கிடைத்ததன்றோ’ என்று மேனாணித்திராது ஸ்ரீராமவிச்லேஷத்தால் மிகவும் வருந்தினமையால், “படியில் குணத்துப் பரதநம்பி” என்றார்; இதிலும் விஞ்சின குணமில்லையே. அடிநிலை- மாவடி...
கீழ் ‘முடியொற்றி’ என்ற ஆறாம்பாட்டில் கூறியதை இங்கு, “தாரக்கிளந்தம்பிக்காசீந்து” என்று அநுபாஷித்தபடி. “அடிசூடுமாசையல்லால் அரசாகவெண்ணேன் மறறரசுதானே”- இனி, ஈந்து என்பதை எச்சந்திரபாக்கி, கொடுக்க என்னும் பொருளதாகக்கொண்டு, கைகேயியின் சொற்படி பரதாழ்வான் ராஜ்யம் நிர்வஹிக்கக்கடவன் என்று திருவுள்ளம்பற்றி (ராஜ்யத்தை அவனுக்குக் கொடுப்பதாக)க் காட்டுக்கெழுந்தருளி என்றுரைப்பாருமுளர். தார்க்குத்தகாத தம்பிக்கு என்ன வேண்டுமிடத்து, “தார்க்கிளத் தம்பிக்கு” என்றது- காரணங் கூறியவாற்றற் காரியத்தைக் குறித்தவாறாம். (காரியம்- தகாமை; காரணம்- இளமை.) நூற்றவள்- கெட்ட எண்ணமுடையவள் என்பது, கருத்து. (நுடங்கிடை - இத்யாதி.)............................. என்ற வடசொல், சூர்ப்பம் நகம் என்று பிரிந்து, முறம்போன்ற (வடிவமுள்ள) நகங்களை யுடையவள் என்ற பொருள்படும். அது, அவளுக்கு வடிவம்பற்றி வைக்கப்பட்ட காரணத்திற்குரியாகிய இயற்பெயராம். அது பெயராதலால் வடமொழி விதிப்படி, சூர்ப்பணகா என நிலைமொழியின் ரகாரத்தை நோக்கி வருமொழியின் நகாரம் ணகாரமாகத் திரியும்; ‘ராமயணம்’ ‘நாராயணன்’ என்பவற்றிற்போல அங்ஙனம்மாகாமல் சூர்ப்பநகா என்று நிற்கும்போது பெயராகாது தன்மை குறிக்கிற மாத்திரமாம். சூர்ப்பணகை- பிரமபுத்திரராகிய புலஸ்திய முனிவருடைய குமாரராகிய விச்ரவஸ்ஸினது இரண்டாம் மனைவியான கேகஸியின் வயிற்றில் ராவண கும்ப கர்ணர்களுக்குப் பின் விபீஷணனுக்குமுன் பிறந்தவள். இவளை ராவணன் காலகையென்பவருடைய மக்களாகிய காலகேயருள் ஒருவனான வித்யுஜ்ஜிஹ்வனென்னும் அசுரனுக்கு மணஞ்செய்து வைத்திருந்தான்; பின்பு ராவணன் திக்குவிஜயம் செய்கின்றபொழுது அசுமநகரத்தில் புகுந்து அங்கிருந்த காலகேயரை போர்செய்து அழிக்கையில் வித்யுஜ்ஜிஹ்வனும் ராவணனாற் கொல்லப்பட்டதனால், கணவனை இழந்த சூர்ப்பணகை ராவணன் காலில் விழுந்து மிகப் புலம்பிப் பலவாறு முறையிட, அவன் அவட்கு வெகுஸமாதாநங்கூறிக் கோபந்தணிந்து, தண்டகாரண்யத்தைச் சார்ந்த ஜநஸ்தாந மென்றவிடத்தில் ஒரு ராஜ்யமுண்டாக்கி அதில் அவளை மேன்மையோடிருக்கச் சொல்லி, தூஷணனென்ற ஸேகாபதிக்கு உட்பட்டதொரு பெருஞ்சேனையையும், தனது தாயினுடன் பிறந்தவள் மகனான கரனையும், அவளுக்கு உதவியாக இருந்து அவளிட்ட கட்டளைப்படி நடக்குமாறு நியமித்து, அங்கு அவள் யதேச்சையாகத் திரியுமாறு அனுப்பிவிட்டான். அங்ஙனமே அவ்விடத்திற்குடியேறி அங்குளள வநவாஸிகளை வருத்திக்கொண்டு உல்லாஸமாகத் திரியும் தன்மையுள்ள இவள், ஸ்ரீராமலக்ஷ்மணர் ஸீதையோடு பஞ்சவடி ஆச்ரமத்தில் வஸிக்கின்றபொழுது ஒருநாள் இராமபிரானது திருமேனியழகைக்கண்டு பெருங்காதல்கொண்டு அழகிய வடிவமெடுத்து அப்பெருமானருகில் வந்து சேர்ந்து ‘என்னைநீர் மணம் புணரவேண்டும்’ என்று வேண்ட, அவர் ‘எனக்கு ஒருத்தி இங்கே உளள்; தனியாயிருக்கின்ற என் தம்பியை வேண்டிக்கொள்’ என்றார். அவளும் லக்ஷமணனிடத்துச் சென்று வேண்ட, அதற்கு அவர் சில காரணங்களைக் கூறி மறுக்க, பின்பு அவள் “சீதையைக் கொன்றுவிட்டால் இராமன் என்னை மணம் புரியக்கூடும்” என்றெண்ணிப் பிராட்டியைப் பிடித்துண்பதாகப் பதறியபடியைக் கண்ட ஸ்ரீராமன் இளையபெருமானை நோக்கி ‘நீர் இவளுடைய அங்கங்களைப் பங்கப்படுத்தும்’ என்று நியமிக்க, அங்ஙனமே அவர் ஓடிவந்து அவளை மறித்து அவளது மூக்கு, காது, முதலிய சில உறுப்புகளை அறுத்திட்டார் என்ற வரலாறு அறிக. வேண்டினபடி வடிவங்கொள்ளும் ஆற்றல் அரக்கரிலும் அரக்கியரிலும் பலர்க்குத் தபோபலத்தாலும் மந்த்ரபலத்தாலும் உண்டென்பது இங்கு உணரத்தக்கது. இவள், லக்ஷ்மியைத்தியானித்து ஒரு மந்திரத்தை ஜபிதபுது நினைத்தபடி அழகிய வடிவம் பெற்றவன் என்பர் கம்பர். “***“ என்றபடி – இங்ஙனம் இவளை அங்கப்பங்கப்படுத்தியது இராமபிரானது திருத்தம்பியான இளையபெருமானது செய்கையாயிலும், இப்பாட்டில் அதனைப் பெருமாள்மேல் ஏற்றிச் சொன்னது. இராமபிரானது கருத்துக்கு ஏற்ப அவன் கட்டளையிட்டபடி இவன் செய்தனனாதலின், ஏவுதற்கருத்தாளின் விளையாதல்பற்றியென்க. அன்றியும், இளையபெருமாளும் திருமாலினது திருவ்வதாரமே யாதலால், அங்ஙனஞ் சொல்லதட்டில்லை. மற்றும், “***“ என்றபடி இராமனுக்கு லக்ஷ்மணன் வலத்திருக்கை யெனப்படுதலால், அங்ஙனம் கையாகிற லக்ஷ்மணனது செயல் இராமன்மேல் ஒற்றுமை நயம் பற்றிஏற்றிச்சொல்லுதல் தகுதியே. “அரக்கி மூக்கநீக்கிக் கரனோடு தூடணன்றேனுயிரை வாங்கி“ என்று குலசேராழ்வாரும், “தன்சீதைக்கு, நேராவனென்றோர் நிசாசரிதான் வந்தாளைக் கூரார்ந்தவாளாற் கொடிமூக்குங் காதிரண்டும், ஈராவிடுத்து“ என்று திருமங்கையாழ்வாரும், “தன்சீதைக்கு, நேராவனென்றோர் நிசாசரிதான் வந்தாளைக் கூரார்ந்தவாளாற் கொடிகூக்குங் காதிரண்டும், ஈராவிடுத்து“ என்று திருமங்கையாழ்வாரும், “அரக்கி மூக்கினொடு வார்காது மீர்ந்தார்வரை“ என்று பிள்ளைப் பெருமாளையங்காரும் அருளிச்செய்துள்ளமை காண்க. “தம்முடைய கையாலேயிறே தண்டிப்பது.....தம்முடைய தோளாயிருக்கிற இளைபெருமாளை இடுவித்துத் தண்டிப்பித்தா“ என்பது – பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செயல். “ஆவீறையும்“ என்ற நன்னூல் விதிப்படி “சூர்ப்பணகை“ எனத்திரிய வேண்டியிருக்க, அங்ஙனந்திரியாதது * புதியனபுகுதலென்னலாம், “பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல காலவகையினானே” என்றார் நன்னூலார்.
லங்கைக்குச் சென்று ராவணனை முடிப்பதாகத் திருவுள்ளம்பற்றி வாநரஸேனையுடனே கடற்கரையை அடைந்த இராமபிரான், கடலைக்கடக்க உபாயஞ் சொல்லவேண்டுமென்று கடலரசனாகிய வருணனை வேண்டி; தர்ப்ப சயநத்தில் படுத்து மூன்று நாளளவும் ப்ராயோபவேசமாகக் கிடக்க, ஸமுத்ரராஜன் அப்பெருமானது மேன்மையைக் கருதாமல் உபேக்ஷையாயிருந்துவிடவே ஸ்ரீராமன் அதுகண்டு சீற்றங்கொண்டு, அனைவரும் நடந்து செல்லும்படி கடலை வற்றச் செய்வேனென்று ஆந்நேயாஸ்திரத்தைத் தொடுக்கத் தொடங்க, அவ்வளவிலே வருணன் அஞ்சி நடுஙகி ஓடிவந்து இராமபிரானைச் சரணமடைந்து, கடல்வடிவமான தன்மேல் அணைகட்டுவதற்கு உடன்பட்டு ஒடுங்கி நிற்கப் பின்பு அதில் மலைகளினால் அணைகட்டி இலங்கையினுட் புக்கு அமர்க்களத்தில் ராவணனைத் தலையழித்து, ஸ்ரீவிபீஷணாழ்வாழ்வானுக்கு முடிசூட்டி அருளின வரலாறு அறிக. நேரா- ‘செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டிறந்தகால வினையெச்சம்- சேர்ந்து (அறுத்து) என்றவாறு நிளரசு- “என்னிலங்கு நாமத்தளவு மரசென்ற” என்றதை நினைக்க.
இராமபிரான் ஏகதார வ்ரத்முடையனாதலால் அப்பெருமானுக்குச் சிறுதேவியர்பலரும் பெருந்தேவி யொருத்தியுமில்லை யாதலால், “பெருந்தேவி” என்பதற்கு, பெருமைக்குத்தக்க தேவியென வுரைக்கப்பட்டது. இராமபிரான் மனைவியுடனும் தம்பியுடனும் அயோத்தியை நீங்கிக் கங்கைத் துறை சேர்கையில், கங்கையில் ஓடம் விடுபவனும், ஆயிரம் ஓடத்திற்குத் தலைவனும், கங்கைக்கரையிலுள்ள ச்ருங்கிபோபுரத்திற்கு அதிபதியும், வேடர் தலைவனுமான குஹப்பெருமாள் இராமனைக் காணும்பொருட்டுக் காணிக்கைகளுடன் அருகில்வந்து சேர்ந்து வணங்கி நிற்க, ஸ்ரீராமன் அவனது பக்திபாரவச்யத்தைக்கண்டு மகிழ்ந்து “என் மனைவியான இந்தச் சீதை உன் தோழி, என் தம்பியான இவ்விலக்குமணன் என் தம்பியே, நீ எனது உயிர்த்தோழன்; இதுவரை நாங்கள் உடன்பிறதோர் நால்வராயிருந்தோம், இன்று உன்னுடன் ஐவராயினோம்” என்று ஒற்றுமை நயந்தோன்றக் கூறினமையை இதனால் அடையாளமாகக் கூறினன். “ஏழையேதலன் கீழ்மகனொன்னாதிரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து, மாமழைமான்மடநோக்கியுள்றோழி உம்பி எம்பியென்றொழிந்திலையுகந்து, தோழன் நீ யெனக்கிங்கொழியென்ற சொற்கள்” என்ற பெரியதிருமொழியுங் காண்க. “சீரணிந்த தோழமையைக்கொண்டதும்” என்றுஞ்சிலர் பாடங்கூறுவர்.
பெருமாள் உம்மைத் தேடிக்கொண்டு வரும்போது வழியில் ஸுக்ரீவ மஹாராஜானோடு அக்நிஸாக்ஷிகமாகத் தோழமை பூண்டுகொண்டு அவ்விருவரும் ஒன்றாக விருந்து ஒவ்வொரு திக்குக்குப் பலகோடிக் கணக்கான வானரர்களை உம்மைத் தேடும்படி அனுப்பும்போது ஸுக்ரீவ மஹாராஜன் என்னிடத்தில் விசேஷ அபிமானம் வைதிருப்பதை உணர்ந்து, “இவனாலே நமது காரியம் கைகூடும்” என்று என்னிடத்தில் இராமபிரான் விசேஷகடாக்ஷம் செய்தருளி இவ்வடையாளங்களைச் சொல்லியனுப்பியதனால், இப்படி அடையாளங்களை யான் கூறினேன்; அன்றியும், தனது நாமாங்கிதமான மோதிரத்தையும் கொடுத்தருளினானென்று அநுமான் இராமபிரானுடைய திருவாழியையும் காட்டித் தான் ராமதூதனென்பதை வற்புறுத்திப் பிராட்டியின் ஸந்தேஹகத்தைப் போக்குகின்றனனென்க. முதலடியில் விளி- முன்பிருந்த நிலைமையைப் பற்றியது. ‘வைதேகி’ என்றதனால், தனது உடம்பை உபேஷிப்பவளென்பது விளங்குமென்பர். “நமக்கு இன்பமும் துன்பமும் ஒன்றே” என்று இளையபெருமாள் சொல்ல, அதன் பிறகு பெருமாளுடைய இன்பத் துன்பங்களைத் தன்னதாக நினைத்து வந்தானாதலால், ஸுக்ரீவனை “ஒத்தபுகழ் வானரங்கோன்” என்றது. அத்தகு சீர்- உம்மைப் பிரிந்த பின்பு ஊணும் உறக்கமுமற்றக் கடித்ததும் ஊர்ந்தது மறியாதே ஏதேனும் போக்யபதார்த்தத்தைக் கண்டால் உம்மையே நினைத்து வருந்தாநின்றுள்ள அந்த நிலைக்குத்தக்க அன்பென்னுங் குணத்தையுடையவன் என்று கருத்து. ... ... ... (அ)
இராமன் காட்டுக் கெழுந்தருளுகையில் பிரஜைகள் மாத்திரமே பின் தொடர்ந்ததாக ஸ்ரீராமாயணத்திற் கூறாநிற்க; இங்கு சுற்றமெல்லாம் பின் தொடரத் தொல்கான மடைந்தவனே என்றருளிச்செய்தது சேர்வதெங்ஙனே? என்று எம்பெருமானார் திருவோலக்கத்தில் ப்ரஸ்தாவம் நிகழ, அதற்கு எம்பெருமானார் அருளிச் செய்தது - அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்று சொன்ன எல்லாவடிமையும் செய்யு மிளையபெருமாள் கூடப்போகையாலே எல்லா பந்துக்களும் கூடப்பேனார்களாய்த்திறே என்றாம். இது ரஸோக்தியாக அருளிச் செய்தபடி.
காலின்மணி கரையலைக்கும் = உள்ளுக்கிடக்கிற ரத்நங்களைக் காற்றாலே கரையிற்கொழிக்கு மென்னுதல், அன்றி, கால் என்று கால்வாய்களைச் சொல்லிற்றாய், கால்வாய்களிலுள்ள மணிகளைக் கொண்டு வந்து கரையிலே ஏறிடுமென்னுதல், ஆலிநகர்க் கதிபதியே என்றவிடத்தில் ஒரு வாலியைக் கொன்று ஒரு வாலி தன்னைத் துணையாகக் கொள்ளப்பெற்றதே என்று சாடூக்தி அருளிச் செய்வர் பெரியவாச்சான் பிள்ளை.
இப்பாட்டும் கீழ்ப்பாட்டுப்போலவே அரக்கருள்ளாரை யழைப்பதாம். ‘அரக்கருள்ளீர்!’ என்ற விளி கீழ்ப்பாட்டிலிருந்து வருவித்துக் கொள்ளத்தக்கது. யானைகளும் குதிரைகளும் தேர்களுமாகிய சேனையுறுப்புகளெல்லா வற்றோடுங்கூட அரக்கர் தொலையுமாறு கொன்று வெற்றி பெற்ற ஆண்புலியின் கிங்கரர்களான அந்த சக்ரவர்த்தி திருமகன் கண்டுமகிழும்படியாகக் குழமணிதூரமாட எங்களோடே வந்து கூடுங்கள் என்கிறார்கள்.
இராம பிரானுடைய ஒரு விலக்ஷ்ணமான தன்மையை யருளிச் செய்கிறாரிதில். தசரத சக்ரவர்த்தியின் கட்டளையின்படி இராமபிரானைத் தேரிலேற்றிக் கொண்டு போய்க் கங்கைக்கரையில் விட்டுத் திரும்பியவத்த ஸீமந்த்ரன் சக்ரவர்த்தியிடம் சொல்லுகிறான்- விஷயே தே மஹாராஜ! ராமவ்யஸநகர்சிதா: அபிவ்ருகூஷா: பரிம்லாநாஸ் ஸபுஷ்பாங்குர கோரகா: உபதப்தோதகா நத்ய: பல்வலாநி ஸராம்ஸி ச, பரிசுஷ்கபலாகாநி வநாந்யுபவநாநி ச என்றான். மஹாராஜரே! உம்முடைய திருக்குமாரன் நாட்டைவிட்டுக் காட்டுக்குப் புறப்பட்டுச் செல்லுகிறேனேயென்கிற துயரத்தினால் மரங்களெல்லாம் வாடி யுலர்ந்துபோயின; நதிகள், குளங்கள், குட்டைகளெல்லாம் கரையருகிலும் அடிவைக்க வொண்ணாதபடி கொதிப்படைந்தன; சிறிய தோட்டங்கள் பெரிய தோட்டங்களென்கிற வாசியின்றிக்கே பொழில்களெல்லாம் இலையுலர்ந்து அழகழியப் பெற்றன என்கிறான். இப்படி அசேதநவஸ்துக்களையுங்கூட விசாரப்படுத்திக்கொண்டே காட்டுக்கெழுந்தருளினவன் பதினாலாண்டு கடந்த பிறகு மீண்டு திருபயோத்தித்கு எழுந்தருளுகையில் அகால பலிநோவ்ருகூஷா: என்னும்படியாயிற்று. ஆகவிப்படி தன்னுடைய விச்லேஷத்தில் வாடியுலர்ந்தும் ஸம்ச்லேஷத்தில் செழிப்பற்றோங்கியும் நின்றன அசேதனங்களென்றால் அவன்றன்னுடைய குணப்பெருமையை என்னென்று சொல்லுவது! கூரத்தாழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில்-வம்சம் ரகோரநுஜிக்ருக்ஷுரிஹாவதீர்ண: திவ்யைர் வவர்ஷித ததாத்ர பவக்குணௌகை: த்வத்ஸந்நிதி ப்ரபவசைத்யஜீஷோ யதாஹி; வ்ருகூஷாச்ச தாந்திமலபந்த பவத்வியோகே என்றச்லோகத்தினால் இக்குணத்திற்கு உருகினார். ஆசார்ய ஹருதியத்தில் “கோஸல கோகுலசராசரம் செய்யுங் குண மொன்றின்றியே அற்புதமென்னக் கண்டோம்” என்ற சூர்ணையும் அதன் வியாக்கியானமும் ஸேவிக்கத்தக்கன. இப்பாசுரத்தில் “புற்பாமுதலா” என்று தொடங்கி மூன்றடிகளாலும் கீழே விவரித்த மஹாகுணமே அருளிச் செய்யப்படுகிறதாகப் பிள்ளான் முதலான ஸகல ஆசாரியர்களும் ஒரு மிடறாக அருளிச்செய்தார்கள். ஸ்ரீவேதாந்த தேசிகர் ஒருவர் தாம் த்ரமிடோபநிஷத் தாத்பாய் ரத்நாவளியில் இத்திருவாய்மொழிக்கான ச்லோகத்தில் இப்பாசுரத்தின் பொருளாக—ஸாகேதே முக்திதாநாத்” என்றருளிச் செய்தார்; அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றிய கதையை இப்பாசுரத்திற்கு அர்த்தமாகக் கருதினார். ஆறாயிரப்படி ஸ்ரீஸீக்தி காண்மின்;-“ப்ராக்ருத வஸ்துக்களே தாரகபோஷக போக்யமாயிருக்கக்கடவ இப் ப்ரக்ருதிமண்டலத்திலே வைத்துக்கொண்டு திருவயோத்யையிலே வர்த்திக்கிற தூர்வாதி நிகில ஜந்துக்களையும் கர்மயோகாத்யு பாயம் பண்ணுதிருக்கச் செய்தேயும் திருநாட்டிலுள்ளாரைப்போலே தன் திருவடிகளே தாரக போஷக போக்யமாக்கியருளின் இம மஹாகுணத்தை யுடையனாயிருந்த இராமபிரானையல்லாமல் மற்றுங் கற்பரோ வென்று அவனுடைய குணங்களை யநுபவிக்கிறார்.” என்று இப்படியிருக்கவும் தேசிகன் வேறுவகையாகப் பொருள் கூறியது வாதிகேஸாஜீ அழகியமணவாளச் சீயருடைய பன்னீராயிரவுரையில் ப்ரதிபத்தியின் கனத்தாலே யென்று தெரிகிறது. அவ்வுரையில் அங்ஙனே பொருளுரைக்கப்பட்டது. மற்றுங் கற்பரோ” என்ற விடத்து மற்றும் என்றது தேவதாந்தரங்களைக் கருதியன்று; ஸ்ரீராமாவதாரந்தவிர மற்றுள்ள விபவாவதரய்களையும் பரத்வாதி நிலைகளையும். ஸ்ரீராமாவதாரந்தவிர மற்றுள்ள விபவாதாரங்களையும் பரத்வாதி நிலைகளையும். பாவோ நாந்யத்ர கச்சதி என்று திருவடி சொன்னதும், என்னமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றிகளைக் காணாவே என்று திருப்பாணாழ்வார் அருளிச் செய்ததும் இங்கே நினைக்கத்தக்கன.
விளக்கம்
314.
விளக்கம்
316.
விளக்கம்
321.
விளக்கம்
325.
விளக்கம்
724.
விளக்கம்
725.
விளக்கம்
1875.
விளக்கம்
3497.