- முகப்பு
- திவ்ய தேசம்
- திருவாலி மற்றும் திருநகரி
திருவாலி மற்றும் திருநகரி
இது நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாக கருதப்படுகிறது. இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்கிர ஸ்தம்பம்' (தூண்) உள்ளது. திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.
அமைவிடம்
ஸ்ரீ அம்ருதகட வல்லி,
திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி,
சீர்காழி,
தொலைபேசி :044-24735191,
தாயார் : ஸ்ரீ அம்ருதகட வல்லி, திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி
மூலவர் : ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர்
உட்சவர்: ஸ்ரீ திருவாலி நகராளன், திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்
மண்டலம் : சோழ நாடு
இடம் : சீர்காழி
கடவுளர்கள்: வேடராஜன் ,அமிர்தவல்லி .
திவ்யதேச பாசுரங்கள்
-
1188.
எம்பெருனானுக்கு பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமாகையாலே. இப்போது அப்பெருமான் இவ்வாழ்வாரது திருவுள்ளத்திலே வந்து குடிகொண்டான். தம்முடைய பிரார்த்தனே யின்றியே அவன் தானாகிவே விரும்பி வந்து புகுந்து மகிழ்ச்சி உள்ளடங்காமல். “வந்துனதடியேன் மனம் புகுந்தாய்” என்று வாய்விட்டுப் பேசுகின்றார். (புகுந்ததற்பின் வணங்குமென் சிந்தனைக் கினியாய்!) அவன்றானாகவே வந்து புகுந்தாலும் ‘உன்னை இங்கிருக்க வொட்டேன்’ என்று அடித்துத் துரத்தும் பாவிகளுமுண்டே ஸம்ஸாரத்தில்; அப்படியல்லாமல்” இசைவித்தென்னையுன் தாளிணைக் கீழிருத்துமம்மானே 3202” என்னுமாபோலே பெரு நன்றி பாராட்டின தமக்குத் தித்தித்திருந்தமை சொன்னபடி. ஆழ்வாருடைய திருவாராதனத் திருமூர்த்திக்குச் சிந்தனைக்கினியானென்று திருநாமம் ப்ரஸித்தம். இத்திருநானங் கொண்ட திவ்யமங்கள விக்ரஹம் இன்றைக்கும் கலியன் ஸந்நிதியில் ஸேவை ஸாதிப்பர்.
“அரவணை வேலைத்தலைக் கிடந்தாய் அடியேன் மனத்திருந்தாய்” என்ற சொற்சேர்த்தியால் - அடியேனுடைய மனத்தில் ஸமயம் பார்த்து வந்து சேர்வதற்காகவே நீ திருப்பாற்கடலில் உபாய சிந்தனை பண்ணிக்கொண்டு கிடந்தாய் என்ற கருத்து விளங்கும். நீலநிறத்ததொரு மலையின்மேல் மாமணிவிளங்குவது போலத் திருப்பாற்கடலில் அரனணைமேற் கிடந்தாய் என்றவிதனில், நீலமலையின் ஸ்தாநத்திலே எம்பெருமானையும் மாமணியின் ஸ்தாநகரத்திலே ஸ்ரீகௌஸ்துப மணியையும் உபமேயமாகக்திலே கொள்ளவேணும். ஆகவே “அரவனை வேலைத்தலை” என்ற வாக்கியத்திற்கு உபமேயகோடியில் அந்வயமில்லை; அந்வயம் வேணுமென்னில்; எம்பெருமானுடைய கரிய திருமேனியின் நிழலீட்டாலே பாற்கடலும் பாம்பனையும் நீலநிறம் பெற்றன வென்றுகொண்டு, பாற்கடற்பாம்பமையை நீலத்தடவரைக்கு உபமேயமாகவும் எம்பெருமானை மாமணிக்கு உபமேயமாகவும் கொள்ளலாம்.
இனி போக்குவரத்து இல்லாமே ஸ்திரப்ரதிஷ்டைம்படி என் மனத்திலே புகுந்தாயென்கறது முதலடி. நென்னல் போய் வருமென்றென்றெண்ணி யிராமை = உலகத்திலே ஒருவர் விட்டுப்பிரிய நேர்வதுண்டே; காதலியை காதலன் விட்டுப்பிரிந்து தேசாந்தரஞ் சென்றால் விரஹவ்யஸநத்தை ஒருவாறு ஆற்றிக்கொள்வதற்காக ‘நேற்றுப் போனார், இன்று வந்திடுவர்’ என்று சொல்லிக் கொண்டே காதலி காலங்கழிப்பது வழக்கம்; அப்படிச்சொல்லிக்கொண்டு ஏங்கிக்கிடக்க வேண்டாதபடி வயலாலிமணவாளன் ஆழ்வார் தம்முடைய திருவுள்ளத்தை ஒரு நொடிப்பொழுதும் ட்டுபிரியாகிருக்கின்றமையைச் சொன்னபடி. “ நென்னல் போய் வரும்” என்பதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் சொல்லலாம்; நேற்று ஒரு நாள் கழிந்தது, இவற்றை நாள் வந்தது; இதுவுங்கழிந்து நாளை நாள் வரக்கடவது, அதுவும் கழிந்து அடுத்த நாள் வரக்கடவது என்றிப்படியே (பரதாழ்வான் போலே) பல்லைக்கடித்துக் கொண்டு பிரிவு நாள்களே எண்ணியிருக்க வேண்டாதபடி-என்றுமாம்.
ஆழ்வார்தம்முடைய பழைய நிலைமையையும் இப்போதைய நிலைமையையும் நினைந்து எம்பெருமானிடத்திலே பெருநன்றி பாராட்டுகின்றார். பிரானே! அநாதி காலமாக நான் எப்படி யிருந்தவன்; மாதரிகளின் இடையழகிலே மயங்கிக் கிடந்தவனான்றே; அப்படிப்பட்ட என்னை அவ்விஷயத்தைக் காறியுமிழ்ந்து உன் திருவடிகளையே சிக்கெனப் பிடித்துக்கொண்டு வாழுமாறு பண்ணிவைத்தாயே!, இந்த மஹோபகாரத்தை நான் மறக்கலாகுமோ? என்கிறார். மூன்றாமடியில், பவண-‘பண்ணை’ என்பதன் தொகுத்தல்; குளம்.
எப்போதும் உன்னுடைய திருவடிகளிலேயே அந்தரங்கப் பணிவிடைகள் செய்து கொண்டு போதுபோக்காநின்ற என்னுடைய மனத்தை நீ ஒருபோதும் வாடச்செய்ய நெஞ்சால் நினைக்கவுங்கூடாது; (இந்த நித்ய ஸம்ச்லேஷத்துக்கு ஒரு குறை நேர்த்தால் இவருடைய மனம் வாடிப்போகுமாதால் ஒரு நாளும் பிரியாதிருக்கவேணு மென்றாவாறு.) ***- பிரானே! ஸூக்ரிவனுக்கு நம்பிக்கையுண்டாக்குவதற்காக அருந்தொழில் செய்தாய்; எனக்காக அப்படிப்பட்ட செயலொன்றும் நீ செய்யவேண்டர் என்னைவிட்டுப் பிரியாதிருத்தால் போதுமானது என்ற கருத்துத் தொனிக்கும் மரமெய்த மாமுனிவா! என்ற விளியினால்.
கீழ்ப்பாட்டில் “என் மனம் வாட நீ நினையேல்” என்று மறைபொருளாகச் சொன்னதின் கருத்து வெளிப்படுமாறு இப்பாசுர மருளிச்செய்கிறார். என்ற வடசொல் ‘கந்தம்’ என்று கிடக்கிறது; மணம் மிக்க மாமலரெட்டும் எவையென்னில்; கருமுகை, கற்பகம், நாழல், மந்தாரம், ஸௌகந்தி, செங்கழுநீர், தாமரை, தாழை என்பனவாம். இவற்றைச் சொன்னது மற்றும் தேவார்ஹமாயுள்ள புன்னை முதலிய புஷ்பங்களுக்கும் உபலக்ஷணமாம். “மாமல ரெட்டு மிட்டு” என்றவிதற்கு-ஒவ்வொரு அக்ஷரமும் நறுமலர்பேர்போலே அவனுக்கு போக்யமாம்படியிருக்கைவாலே எட்டு மலர்கள் போன்ற எட்டெழுத்தோடுங்கூடின திருமந்திரத்தை அநுஸந்தித்து என்பதாகவும் பொருள் கூறலாம். அன்றியே; “அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பமிந்த்ரிய நிக்ரஹ: 1. ஸர்வபூததயா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விசேஷத:. ஜ்ஞாநம் புஷ்பம் த்யானம் புஷ்பம் ததைவ ச-ஸத்யமஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரிதிகரம்பவேத்.” என்கிறபடியே அஹிம்ஸை, இந்திரிய நிக்ரஹம், ஸர்வ பிராணிகளிடத்திலும் இரக்கம், பொறுமை, ஞானம், தவம், தியானம், ஸத்யம் என்று எட்டு வகையான புஷ்பங்களாகச் சொல்லப்பட்டவற்றை ஸமர்ப்பித்து என்றுமாம். (இப்பொருள்கள் ஆசார்யஹ்ருதய (99 ஸூ) வியாக்கியானத்திலுள்ளவை.)
எம்பெருமான் திருப்பாற்கடல் முதலியவிடங்களில் வாழ்வதானது அவ்விடமே உத்தேச்யமென்கிற எண்ணத்தினாலன்று; எந்த ஸமயத்திலே எந்த அன்பருடைய உள்ளத்திலே புகுந்து கொள்ளலாமென்று பார்த்துக்கொண்டு உபாயாநுஷ்டாநம் பண்ணுமவன்போல அங்கே கிடக்கிறானென்பர்; இவ்வர்த்தம் ஸ்ரீவசந பூஷணத்தில்-“ ‘திருமாலிருஞ் சோலைமலையே’ என்கிறபடியே உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏகதேசத்திலே பண்ணும்; அங்குத் தைவாஸம் ஸதாநம், இங்குத்தைவாஸம் ஸாத்யம். ‘கல்லுங்தனை கடலும்’ என்கிறபடியே இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும். ‘இளங்கோயில் கைவிடேல்’ என்று இவன் ப்ரார்த்திக்க வேண்டும்படி யாயிருக்கும்.” 170-3 என்ற ஸ்ரீஸூக்திகளால் நன்கு விசதமாகும். இதுவே இப்பாட்டின் முதலடியிலுறையும் பொருளாம். உலவு திரைக்கடலில் பள்ளிகொண்டிருந்தது அடியேன் மனத்தில் புகுருகைக்காக வென்கிறார். இப்படி நெடுநாள் பாரித்து ஸமயம் பார்த்து என் மனத்திலே புகுந்து உன்னை இனி நான் போகவொட்டேனென்கிறார். “(அப்புலவர் ;) விசேஷஜ்ஞனல்லையோ? அவஸரமறியாயோ புகுருகைக்காக” என்ற பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க. ‘புண்ணியனே!’ என்றது-உன்னைப் பெறுவதற்கு உறுப்பாக என்பக்கலிலே யாதொரு ஸூக்ருகமுங் கண்டத்திலே; நீயே யன்றோ மூலஸூக்ருதம் என்றபடி.
“சங்கு தங்கு தடங்கடல்” என்பதைக் கடன்மல்லைக்கு விசேஷணமாக்கியு முரைக்கலாம்; சங்குகள் தங்குகிற கடற்கரையிலேயிருக்கிற திருக்கடன்மல்லைத் திருப்பதியிலே என்றபடியாம். அர்ச்சாவதாரங்களில் எழுந்தருளியிருப்பதும் அன்பருடைய உள்ளத்திலே புகுருகைக்கு ஸாதநமாகவென்க. பரமபோக்யமான திருப்பதிகள் பலவுமிருக்க, அவற்றைவிட்டு நிர்ஹேதுக க்ருபையாலே ஸர்னெஞ்சிலே வந்து புகுந்தாய்; இனி இவ்விடம்விட்டு நீ போவதென்றால் அது உன்னாலாகாது; போக முடியுனானால் புறப்பட்டுப்பார்; என்னுடைய வார்த்தை மெய்யாகிறதோ, உன்னுடைய எண்ணம் நிறைவேறுகிறதோ, பார்ப்போமென்கிறார் முன்னடிகளில். ***- இனிப்போயினால் அறையோ = அறையோ என்பது தோற்றவர் முன்னே ஜயித்தவர் சொல்லும் வார்த்தைக்குறிப்பு. “ அறையோவென நின்ற திருங்கருங்கடல்” என்றார் நம்மாழ்வாரும் திருவிருத்தத்தில். “இனிப்போயினா லறையோ” என்னுமிவ்விடத்தில் வெற்றி தோல்விகளொன்று மில்லையே பென்னில்; எம்பெருமானே ! நீ இவ்விடம்விட்டுத் பேர முடியாது; எப்படியாவது அகன்று போய்விட வேணுமென்று நீ முயன்றாலுல் உன் முயற்சி தோற்றுப்போய் என் வார்த்தையே வெற்றிபெற்றதாகும் என்பதாகக்கொள்க. நீ இங்கே வந்து புகுந்ததற்குக் காரணமான பேரருள் மாறினாலன்றே இவ்விருப்பு மாறப்போகிறது; அருளும் மாறது, இவ்விருப்பும் மாறாது என்றவாறு.
கீழ்ப் பாசுரங்களிலே “புகுந்தாயைப் போகலொட்டேன்” என்று இவர்தாம் சொல்லிவைத்தாலும், “உன் மனத்தா ன்னினைந்திருந்தாய்?” என்றும் “இனியென் திருக்குறிப்பே?” என்றும் அவன் திருவுள்ளத்தை யநுஸரித்து நிற்கவேண்டிய ஸவபவுண்மையை உணர்ந்தவாரன ஆழ்வார், ஸ்வரூபத்துக்குத் தகுதியாகவன்றே பேசவேணும்; அப்படியே பேசுகிறா ரிப்பாட்டில்; பல் பன்னிரண்டையுங் காட்டிப் பிரார்த்திக்கின்றார்; அடியேன் தேறியிருக்கும்படி உன் சோதிவாய் திறந்து ஒரு நல்வார்த்தை சொல்லவேணும்; கடற்கரையிலே நின்று “ந த்யஜேயம் கதஞ்சந” என்ற வார்த்தைலயயாவது தேர்த்தட்டிலே நின்று “மா சுச:” என்ற வார்த்தையையாவது அடியேனே நோக்கி யருளிச் செய்ய வேணுமென்கறார். நீ ஸ்வைதந்த்ரனாகையால் இன்று அநுக்ரரஹித்து வந்துசேர்ந்தது போலே நாளே நிக்ரஹித்து அகன்றுபோய் விடவுங்கூடும்; இங்ஙனே நான் சங்கித்துக் கலங்கியிருக்க வொண்ணாத என்னைத் தேற்றுவிக்கவேணு மென்கிறார்.
வயலாலி மணவாளன் பக்கலிலே சென்று தமது நிலைமையைச் சொல்லுமாறு ஒரு வண்டை நோக்கிக் கூறுகிறார். அந்த வண்டு தன் பேடையோடே கலந்து மலரிலே மதுபானம் பண்ணிக் கொண்டிருந்தனையால், ‘நான் துணைவனைப் பிரிந்து உணவும் உறக்கமுமற்று வருந்திக் கிடக்கும்போது நீ இப்படி உன் காரியமே கண்ணாக இருப்பது தகுதியோ?’ என்னுங் கருத்து முன்னிரண்ட்டிகளில் வெளிவரும். வண்டுகள் சிறகுகளே விரித்துக்கொண்டு மலரை மிதித்தேறி மதுவைப் பருகுதல் இயல்பாதலால் “தாவிரியமலருழக்கி” எனப்பட்டது. ‘தா’ என்றும் ‘தாவி’ என்றும் சிறகுக்குப் பெயர். உழக்கல் மிதித்தல், சிதிலமாக்குதல். முதலடியில் “தாவிரியும் மலருழக்கி” என்ற பாடமுண்டென்று பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தினால் தெரிகின்றது; தூய்தாக விரியும் மலரை=நன்றாக அலர்ந்த மலரை என்றபடி. பொறிவாயி = புள்ளிகளும் ரேகைகளும் வண்டுக்கு இயல்பு.
-இப்பாசுரமும் வண்டைத் தூதுவிடுவதாம், மலரத் தொடங்கின நீலமலரிலே குடும்பத் தோடு சென்றழிந்த மதுபானம் பண்ணாநிற்கிற வண்டே! வயலாகி மணவாளன் என்னோடு கலந்து பிரிந்துபோனது முதலாக அவன் நினைத்திருப்பது இன்னதென்று தெரியவில்லை; என்னை மறங்திட்டானோ; அன்றி என்னையே நினைத்துக்கொண்டு கிடக்கிறனோ;இங்கே வருதாக இருக்கிறனோ; என்னை அங்கு வரவழைத்துக் கொள்வதாக இருக்கிறனோ-அன்றி நானொருத்தி இருக்கிறேனென்பதைக் கணிசியாமிலே கிடக்கிறானோ; இப்போது அவன் செய்வதும் செய்ய நினைத்திருப்பது மொன்றும் எனக்குத் தெரியவில்லை; என்னைப் பிரிந்து அவன் வருத்தமற்றிருப்பது போலவே நானும் அவனைப் பிரிந்து வருத்தமற்றிருக்கிறேனாக அப்பெருமான் நினைத்து ஆறியிருக்கவுங்கூடும்; நான் இங்ஙனே நோவுபடுகிறேனென்பது தெரிந்தால் இங்குவந்து சேரத் தாமஸிக்கமாட்டானாதலால், நீ அங்குச் சென்று நான் படுகிறநோயைத் தெரிவிக்க வேணுமென்கிறாள்.
சோலை வாய்ப்புப் பொருந்திய திருவாலியின் கழனிகளிலே மேய்ந்து வாழ்கின்ற சிறு குருகே, எல்லாப் பொருள்களும் தானேயாய் நிற்கிற ஸர்வேக்வரனான வயலாகி மணவாளன் தனது திருத்துழாய்மாலையை எனக்கு அருள் செய்கின்றிலன்; (அதாவது-மார்பிலிணிந்துள்ள மணமாலை என்கொங்கைத்தடத்தில் நெருக்குண்ணும்படி வந்து ஸம்ச்லேஷிக்கின்ளானில்லை.) அவனுடைய திருவுள்ளம் என்மேல் மாறிவிட்டதோ அறியேன்; நீ சென்று அவனது திருவுள்ளத்தைத் தெரிந்துகொண்டு வந்து எனக்குச் சொல்லவேணும்; நானொருத்தியிருக்கிறேனென்கிற நினைவோடேயிருந்து இவ்விடம் வருவதாக இருக்கிறானா? அல்லது, இத்தலையை மறந்தேயொழிந்தானா? அபிப்ராய மிருக்கும்படியை அறிந்து கொண்டுவந்து எனக்குச் சொல்லாய் என்கிறாள். குறிப்பறிந்து கூறாய்=அவனுடைய திருவுள்ளத்தை யறிந்து வந்து என்னிடம் சொல்லு என்ற பொருள்தவிர, மற்றொரு பொருளும் சொல்லலாம்; அதாவது-நான் உனக்குத் தாதுசொல்லும் வார்த்தையை அவனிடஞ்சென்று திடீரென்று சொல்லிவேண்டுமாதலால் அந்தக் குறிப்புத் தெரிந்துகொண்டு என் வார்த்தையை அவனிடம் சொல்லு என்பதாம்.
உடையவன் உடைமையை விட்டுப்பிரிந்தால் ‘ஐயோ! உடைமையை இழந்தோமே!, மறுபடியும் அதனை நாம் பெறவேணுமே!, எப்படி பெறப்போகிறோம்’ என்று துணுக்குத் துணுக்கென்றிருந்து ஸொத்தின்மேலேயே கருக்தான்றியிருக்கவேண்ணடவது முறைமை; இந்த முறைமையை எம் பெருமாள் நோக்குகின்றிலன்; தன் சரக்காகிய என்னைப் பிரிந்து கவலையற்றிருக்கின்றானே; உடையவன் கவலையற்றிருந்தானாகிலும் உடைமை கவலை கொள்வது நியாயமன்று; அசேதநமாயிருந்துவிட்டால் கவலை கொள்ளாமலிருக்கலாம்; சைதந்ய முண்டாகையாலே கவலை கொள்ளாதிருக்கமுடியவில்லை; என்பது முதலடியின் கருத்து. “நாம் அவனைப்போலே யாகமாட்டோமே; நாமும் நினையாமைக்கு ஒரு நெஞ்சு படைக்கப்பெற்றிலோம்” என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.
கீழ் நான்கு பாசுரங்களும் தாது விடுவனவாய்ச் சென்றன. வயலாலி மணவாளனையே இடைவிடாது நெஞ்சில் பாவனை செய்துகொண்டிருந்ததனால், அவன் கண்முன்னே வந்து தோற்றுகிறனாகக்கொண்டு அவனோடு நேரே வார்த்தை சொல்லுவதாகச் சில பாசுரங்கள். பிராட்டி அசோகவனத்தில் திருவடியை நோக்கிப் பெருமாளுக்குத் தாதுமொழிகள் சொல்லிக்கொண்டிருக்கும் போது இடையிலே பெருமாளையே ஸம்போதநம் பண்ணி ‘நாதா! என் விஷயத்தில் சிறிது அபராதம் பண்ணின காகத்தின் விஷயத்தில் உன் பராக்கிரமத்தைப் பெரிதாகக் காட்டினாய்; அபராதம் அடியோடு பிரித்துக் கொணர்ந்து சிறைவைத்திருக்கின்ற மஹாபாபியான இராவணன்மேல் பொறுமை பாராட்டி நிற்கின்றாய்; இஃது என்ன? என்றிப்படிப்பட்ட சில வார்த்தைகளை முன்னிலேயாகவே சொன்னதுபோல இப்பரகால நாயகியும் வயலாலி மணவாளளே முன்னிலையாக்கிச் சில பாசுரங்கள் பேசுகிறாள்.
ஆர்த்தரான பக்தர்களுடைய கூக்குரல் கேட்பதற்குப் பாங்கானவிடமென்று திருப்பாற்கடலைத் திருவுள்ளம்பற்றி அங்கே பள்ளிகொண்டிருக்கும் பெருமானே! அங்ஙனம் அங்கே பள்ளி கொண்டிருக்கையில் ஒருகால் தேவேந்திரனுடைய கூக்குரல் கேட்டுப் பதறியெழுந்து மாவலிபக்கலிலே கணுருவாய் வந்து திரிவிக்கிரமனாகி உலகளந்த பெருமானே! இப்போதும் அன்பர்களேக் காப்பதற்கென்றே திருவாலியில் நித்யஸந்நிதி பண்ணியிருக்குமவனே! நீ இப்படிப்பட்ட குணசாலியாயிருந்து வைத்து என்னுடைய கண்ணுறக்கத்தையும் அபஹரித்துக் கைவளையையும் அபஹரித்தாயே! இது என்ன முறையை என்கிறாள். இப்பாட்டால், இரவும் பகலும் உன்னையே சிந்தித்துக்கொண்டு கண் உறங்கப் பெறாமல் மேனி மேலிந்து போனேன் என்றாராயிற்று.
திருவாய்ப்பாடியில் இடைப் பெண்களெல்லாரும் காணலாம்படி குடக்கூடித்தான அழகையும் அப்படிப்பட்ட ஸௌசீல்யத்தையும் திருக்குடந்தையிலே பிரகாசப்படுத்திக்கொண்டு கிடந்தருளும் பிரானே! என்னுடைய கண்களுக்கு உறக்கமென்பது அடியோட போயிற்று. இளையபெருமாள் (லக்ஷ்ணன்) அவதரித்த முஹூர்த்தத்திலே என்னுடைய கண்களும் பிறந்தன போலும், உறங்காதே கிடக்கிற இக்கண்களுக்குத் தான் நீ இலக்காகவில்லையே, அப்படியே உட்கண்ணான நெஞ்சுக்கும் இலக்காகாமலிருந்து விட்டாயாகில் ஒருவருத்தமுமின்றி வாழ்வேனே; எப்போதும் என்னினைவுக்கு விஷயமாகி வருத்துகின்றாயே! ஆகாசத்தில் சந்திரன் உதித்தவாறே நான் மேனி மெலிந்து வளையிழக்கின்றேன்; எனக்கு இந்த அநர்த்தம் போராதா? நீயும் நடுவே வந்து புகுந்து என்மேனி நிறத்தையும் கொள்ளைகொள்ள வேணுமோ வென்கிறாள்.
ஸத்தையுள்ள வரைக்கும் உன் திருவடிகளுக்கு ஆளாயிருக்க வேண்டுவதே கடமை; ஆனாலும் இப்படி நீ திருவுள்ளம் பற்றினாலன்றி இந்த நித்ய கைங்கரியம் கிடைக்கமாட்டாதன்றோ; என்னை நித்ய கைங்கரியத்திற்கு ஆளாக்கிக் கொள்ளத் திருவுள்ளமில்லை யெனினும் ஒரு நாளாகிலும் உன்திருமேனியை எனக்குத் தந்தாலாகாதோ? இதுவும் நீ செய்யமாட்டாகில், ஆர்த்தர்களை ரக்ஷிப்பதற்காகக்; கையிலே வில்பிடித்துக் கொண்டிருக்கிறேனென்று நீ இருப்பது ஏதுக்காக? ஸூக்ரிவனுக்கு நம்பிக்கை யுண்டாவதற்காக மராமரங்க ளேயுழைந்துளைத்த மிடுக்கையுடையவனென்று உன்னைப் புகழ்வது ஏதுக்காக? திருமெய்யத்திலே ஸத்யேசனென்று பெயர்படைத்திருப்பது ஏதுக்காக? நான் ஒருத்தி வாழும்படி காரியஞ் செய்யமாட்டாத வுனக்கு இப்புகழெல்லாம் பொருந்துமோ என்கிறாள். நீ ஆள வளையாள மாட்டோமே-உன்னுடைய ஆளுகையிலே அடங்கியிருப்பார்க்கு) க்கையில் வளை தங்கியிருக்க ப்ராப்தியுண்டோ? என்கை.விட்டுப் பிரியாமல் கூடியிருக்குங் காலத்திலே ஸந்தோஷ மிகுதியினால் உடம்பு பூரித்து வளை வெடித்துப்போம். பிரிந்த காலத்திலோ உடலிளைத்து வளை சுடனறொழியும்: ஆனபின்பு ஒருபோதும் வளை தங்கியிருக்க ப்ராப்தியில்லை என்னலாம்.
திருத்தாயார் சொல்லத் தொடங்கும்போதே “கள்வன் கொல்” என்று எம்பெருமானைத் கள்ளனாகச் சங்கித்துச் சொல்கிறாள். சாஸ்த்ரங்களில் சேதநனைக் கள்வனாகச் சொல்லியிருக்கிறது; கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்மாபஹாரிணா” என்றது. எம்பெருமானுக்கே உரிமைப்பட்டதான ஆத்மாவை ஸ்வசேஷமாகவும் அந்ய சேஷமாகவுங் கருதுகின்ற சேதநன் ஆத்மாபஹாரக கள்ளனெனப்படுகிறான். தன் உடமையைத் தான் கைக்கொள்ளுகிற எம்பெருமானைக் கள்வனென்று சொல்லத்தகாது. ஆயினும், “ யானே என்றனதே” (2883) என்றிருக்கும் அஹங்கார மமகாரங்கள் நெடுநாளாக சேதநனிடத்து ஆழந்திக்கிடக்கும் வாஸநையி னுறைப்பினால் தன்னுடைய கள்ளத் தனத்தை எம்பெருமான்மீது ஏறிடலாகுமென்பது தோன்றக் கள்வன்கொல் என்கிறது. “செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்து ஆட்செய்மின், திருமாலிருஞ்சோலை வஞ்சக்கள்வன் மாமாயன்” (3733) என்றதுங் காண்க.
மற்றொரு அயல்வீட்டுப் பெண்மணாட்டி ‘அம்மா! கள்வன் கோல்யானறியேனென்று கதறினாயே, என்ன விசேஷம்?‘ என்று கேட்க, அவளுக்குச் சொல்லுகிறார் தாய். திருவாய்ப்பாட்டிலே “மச்சொடு மாளிகையேறி மாதர்கள் தம்மிடம் புக்குக் கச்சொடு பட்டைக் கிழத்துக் காம்புதுகி லவைகீறி, நிச்சலுந் தீமைகள்” செய்து கொண்டிருந்த கேபாலகிருஷ்ணனென்பவன் என்னகத்திலே புகுந்து என் மகளினது கொவ்வைக் கனிபோன்ற அதரத்தைப் பருகிநின்றான், பின்னை அவனுடனே என்மகள் புறப்பட்டுச் சென்றாள், சென்ற இருவரும் திருவாலிக்கேபோய்ச் சேர்ந்திருப்பர்களோ, அன்றி எங்கேனும் விரோதிவர்க்கமுள்ளவிடத்தே புகுந்திருப்பர்களோ அறகின்றிலேன் என்கிறார். படிறு – தீம்பு. கெண்டையொண்கண் மிளிர – வழியிலே செல்லும்போது அபூர்வமான பலபல பொருள்களைக் காண நேருமே, அவற்றைக் காணும்போது இவையென்ன இவையென்ன?‘ என்று காதலனைக் கண்ணாலேயே கேட்டுக் கொண்டு போவளாம். அதனைக் கருதியே “கெண்டையொண்கண் மிளிர“ எனப் பட்டதென்க. சில பொருள்களைப் பற்றி வாயாலுங்கேட்க நேருமையாலும் இனிய செஞ்சொற்களைப் பேசிக்கொண்டே வழி நடக்கவேண்டி யிருக்குமாகையாலும் “கிளிபோல்மிழற்றி நடந்து“ எனப்பட்டது.
வினவவந்த மற்றொரு தோழியை நோக்கிச் சொல்லுகிறார் தாய். “அரக்கர் குலப்பாவை தன்னை முக்கரிந்த விறலோன் திறங்கேட்கில் மெய்யே அஞ்சுவன்“ –தண்டகாரணியத்திலே இராமபிரான் வஸிக்கும் போது இராவணனது தங்கையான சூர்ப்பணகை அப்பெருமானைக்கண்டு காதல்கொண்டு தனது ராக்ஷஸூருபத்தை மறைத்து அழகிய பெண்ணின் வடிவுகொண்டுவந்து ‘என்னை அங்கீகரிக்கவேணும்‘ என்று ஸ்ரீராமனைப் பிரார்த்திக்க, அப்பிரான் ‘எனக்கு இதோ ஒரு ஸ்த்ரீ இருக்கிறாள், ஆதலால் அங்கே போ‘ என்று இளையபெருமாளைக் காட்ட, அவனும் ‘நான் ஸ்ரீராமனுக்கு அடிமை, என்னை மணந்துகொண்டால் நீயும் வேலைக்காரியாக வேண்டிவரும், ஆகையாலே அவர்பக்கலிலேயே போவாய்‘ என்ன, இப்படி இருவரும் தன்னை அவமதிக்கையாலே அச்சூர்ப்பணகை மிக்க சினங்கொண்டுபோக தனது உண்மையான வடிவுடனே வந்து ஸீதாபிராட்டியை எடுத்துக்கொண்டுபோக யத்நிக்க, அப்போது இராமபிரான் ஸ்த்ரீயென்று அவளை கொல்லாம் விட்டு இலக்குமணனைக்கொண்டு அவளது செவி மூக்கு முதலிய அங்கங்களையறுத்து மானபங்கஞ்செய்து போகவிட்டன்னென்பது வரலாறு. இதனை இவ்விடத்தில் (ப்ரகாலஜநநி) எடுத்துரைத்து, “இப்படிப்பட்ட தன்மையைக் கேட்க நான் அஞ்சுகின்றேன்“ என்று சொல்லியிருப்பதன் கருத்து யாது? அரக்கியில் மூக்கை யறுத்ததுபோலே என் மகளின் மூக்கையும் அறுத்துவிடுவனோவென்று அஞ்சுகின்றேனென்பதாகவன்றோ மேலெழ நோக்குமிடத்துக் கருத்துத் தோன்றாநின்றது.
பரகால திருத்தாயார் இங்ஙனே தெருவிலே நின்று அலற்றுவதைக் கேட்டு ஓடிவந்தமாதர்களிற் சிலர்‘அம்மா! உன் மகளைக் கொண்டுபோனவன் என்ன ஜாதியிற் பிறந்தவன்? எவ்வூரிலிருந்து வந்தவன்? என்று கேட்க; நானொன்றுமறியேன்; “ஒருத்திமகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனாயொளித்து வளர” (498) என்கிறபடியே, யதுகுலத்திலே பிறந்து இடைக்குலத்திலே வளர்ந்தவனாமவன்; ஆகையால் அவனை நான் க்ஷத்ரியகுலத்தவனென்பேனோ, இடைக்குலத்தி னென்பேனோ? எனக்குச் சொல்லத்தெரியாது; நீங்களறிவீர்களாகில் சொல்லுங்கள். அவனுடைய ஊர் எதுவென்று கேட்கிறீர்கள்; அதுவும் எனக்குத்தெரியாது; “விண்ணபகரம் வெஃகா விரிதிரை நீர்வேங்கடம், மண்ணகரம் மாமாட வேளுக்கை-மண்ணகத்த, தென்குடந்தை தேனார்திருவரங்கம் தென்கோட்டி” (2343) என்றும் “கண்டியூரரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லை” (2050) என்றும் சொல்லப்படுகிற ஊர்கள் ஒன்றா இரண்டா? பல்லாயிரமானால் எந்த வூரென்று நான் சொல்லுவேன்; உங்களால் நிஷ்கரிஷித்துச் சொல்லமுடியுமானல் சொல்லுங்கள். ஆனால் அவனைப் பார்க்கும்போது நான் தெரிந்து கொண்டவை சிலவுண்டு; பாண்டவர்கட்காகத் துரியோ தநாதியிடம் தூது போனவனும் பாரதப்போரில் தனது பாஞ்சஜன்யமென்னும் சங்கை வாயிலே வைத்து ஊதினவனும் இவன்றான் என்று தெரிந்துகொண்டேன். யெளவந புருஷனாயிருப்பதை நேரில் கண்டேன்.
“ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால், திருமகள்போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டுபோனான்” (300) என்றாற்போலே பெற்றதாய் வயிறொயிக்கூடுமென்பது என் மகளுக்குத் தெரியாமையில்லை: தெரிந்தும், ‘அப்படித்தான் வயிறொயிட்டுமே; நமக்கு என்ன கெடுதி’ என்று ஈரமற்ற நெஞ்சினளாய் அகன்று போய்விட்டாள்; நம்மைப் பெற்றுவளர்த்த தாய் நம்மைப் பரிந்து பரிதாபமுறாதபடி நாம் நடந்துகொள்ள வேணுமேயென்று சிறிதும் இரக்கங் கொண்டாளில்லை. தன்னைவந்து அழைத்தவன் ஆச்சரியமான குணங்களோடும் சக்தியோடும் கூடினவன் என்றும், பெரிய பிராட்டியாரித்தில் பழகி ராஸிக்யத்தில் கைதேர்ந்தவனென்றும் அவனுடைய பெருமையை மதித்து உடன்சென்றாளே யொழிய, நான் வருந்துவேனென்பதைச் சிறிதும் நினைத்திலள். அவள் புறப்பட்டு நடந்து சென்ற போதையழகை நினைக்க நினைக்க என் வயிற்றெரிச்சல் ஆறவில்லை; மிகவும் உல்லாஸமாக நடப்பவள்போலத் தோள்களை வீசிக்கொண்டு, ‘அன்னப்பேடைதான் நடந்து செல்லுகின்றதோ’ என்னலாம்படியாகச் சென்ற அழகை என் சொல்லுவேன். என்னை வருத்தத்திற்கு ஆளாக்கிவிட்டுப் போனாலும் போகட்டும்; சேரவேண்டுமிடத்தில் சுகமாகச் சென்று சேர்ந்தாளாகிலும் ஸந்தோஷமே; தனக்கமைந்த மாயவனை மாதவனைப் பின் செல்லுகின்றாளாகையாலே பரஸ்பரம் மயங்கி வழி தப்புவர்களோ வென்று கவலைப் படுகின்றேன் றாளாயிற்று. ‘என்னை’ என்பது ‘எனை’ என்று தொக்கிக் கிடக்கிறது.
உலகத்தில் மக்களைப் பெற்று வளர்ப்பது ஏதுக்காக? நாம் தளர்ந்திருக்குங் காலத்திலே நமக்குத் துணையாவரென்றே. அப்படியிருக்கவும், என் மகள் எனது அர்த்தியைக்கணிசி யாமலும், பெற்றுவளர்த்த தாயைத் தனிப்பிடவிட்டுப் போகிறோமே யென்று விசாரப்படாமலும் விட்டொழிந்தாள். அவளோ பெரிய துணைவனைப் பிடித்துக்கொண்டாள்; ஆச்ரிதர்கட்காகத் தன் உடம்பை அம்புகட்கு இரையாக்கிக் காரியம் செய்யுமவன் என்று அவன் திறத்திலே யீடுபட்டு உடன் சென்றாள்; திருவரங்கம் பெரிய கோயிலில் திருக்கண்வளர்ந்தருளும் பெருமான் வந்து அழைத்தால் போகா திருக்கலாமோ வென்றும், இவனேயன்றோ நமக்கு இனிய துணைவனென்றும் நினைத்துச் சென்றுவிட்டாள்: செல்லிற் செல்லுக: இருவரும் வழியே சென்று வயலாலியிற் சேர்ந்திருக்கவேணுமே; அப்படி சேர்ந்திருப்பர்களோ, சேராதிருப்பர்களோ வென்று கவலைப்படுகின்றாள் . வரம் செற்று= இராவணன் நெடுநாள் தவம்புரிந்து வலியவரங்கள் பெற்றிருந்ததனால் ‘நமக்கு அழிவில்லை’ என்று செருக்குக்கொண்டு மனம்போன படி செய்து திரிந்தான்; அப்படிப்பட்டவனைத் தண்டிக்கவேண்டி அவன் பெற்றிருந்த வரத்தில் அகப்படாத மானிட வடிவமெடுத்துவந்து கொண்றொழித்ததனால் ‘வரஞ் செற்று’ எனப்பட்டது; பெற்றவரம் பாழாம்படியாக என்கை
போகிறவள் தாய்தந்தையிடத்து ஒரு வாய்ச்சொல் சொல்லிவிட்டுப் போகலாமே அதுவுகஞ் செய்திலள்; தனக்குத் தாய் ஒருத்தி, தந்தை யொருவன் இருப்பதாகவே நெஞ்சில் கொண்டலள் எங்களை இவ்வளவு அலக்ஷியஞ் செய்துவிட்டுப் போவதற்குக் காரணமுண்டு; நப்பின்னை பிராட்டியைக் கைப்பிடித்த பெருமான்றானே நேரேவந்து அழைத்தமையால் அவனுடைய தோளழகிலே தோய்ந்து எம்மை மறந்தாள். “சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும், மேலா தாய் தந்தையுமவரே யினியாவாரே” (3124) என்று உலகங்கட்கெல்லாம் தாய் தந்தையானவனுடைய தோளோடே அணையப்பெறில் பிராகிருதர்களான தாய் தந்தையர்நமக்கு ஏதுக்கு? என்று அலக்ஷியஞ் செய்தனள் போலும்; செய்திடுக; அவள்தான் நடந்து செல்லக்கூடியவளோ? மின்னல் வஞ்சிக் கொடி என்னுமவற்றிற் காட்டிலும் நுட்பமான இடையையுடைய விவள் நடந்து செல்லத் தகுந்தவளன்றே. (அழைத்துக்கொண்டு போகிறவன் பெரிய திருவடியின் மேலே வைத்துக்கொண்டு போகலாகாதோ? என்பது உள்ளுறை.) நடந்து போனாலும் போகட்டும்; இருவராய்ச் செல்லுகிற விவர்கள் உத்தேசித்த இடத்திற்சென்று சேர்ந்திருப்பர்களா? என்கிறாள். “அடியோமுக்கு” என்றது - தேவதேவ திவ்ய மஹிஷியாகப் பெற்ற பெருமேன்மையில் ஈடு பட்டதனாலென்க. புன்னையு மன்னமுஞ் சூழ் புனலாலி = ஊர்வெளியே சோலை வாய்ப்பையும் நீர்வாய்பையும் கொண்டு உள்ளே போய்ச் சேர வேணுமே யென்கிறாள் போலும்.
என் மகள் பருவம் முற்றினவளல்லள்; நேற்றுவரையில் விளையாட்டுக் கருவிகளான முற்றில், கிளி, பந்து, ஊசல், பூவைப்பட்சி முதலியவற்றை ஒரு நொடிப்பொழுவதும் விட்டுப் பிரியா திருந்தவள். இப்படிப்பட்ட விவன் இன்புறுமிவ் விளையாட்டுடையானான பெருமான் வந்தழைத்தவாறே தனது விளையாட்டுக் கருவிகளையெல்லாம் விட்டொழிந்து அவனோடு விளையாடுவதையே தனக்கு ப்ராப்தமாகக் கொண்டு உடன்சென்றுவிட்டாள். இருவருமாய்ச் செல்லும்போது வழியிடையே மஹோத்ஸவமாகவன்றோ நிகழப்போகிறது; இருவரையும் நோக்கிக் கையெடுத்துக் கும்பிடாதார் ஒருவரேனுமிருப்பரோ? பாவியேனாகிய நானொருத்தியேயன்றே இழந்தவள்; மற்றையோர் இழக்கமாட்டார்களே; அனைவருங் கைதொழச் செல்லுமிவர்கள் பாங்காக வயலாலியிற் சென்று சேரவேணுமே யென்கிறாள். முற்றில் - சிறுமுறம்; சிறு பெண்கள் விளையாட்டாகச் சிற்றிலிழைப்பதற்கு மணல்கொழிக்கும் கருவி இது; ‘முச்சல்’ என்று உலகவழக்குச் சொல். சிறு+இல். சிற்றில். பறவை வஸிக்கும் சிறிய கூட்டைச் சொல்லுகிறது இங்கு. செழுங்கோதை தன்வன = ‘கோதை’ என்று பூமாலைக்குப் பெயர்; பூமாலைபோல் ஸூகுமாரமான தன்மைவாய்ந்தவள்; நெஞ்சைக் கவருமவள் என்கை.
என்மகளை என்மகளாக நினைத்திரேன்மின்; ஸாக்ஷாத் பெரிய பிராட்டியாரோடு ஒத்தவளாக நினைத்திருங்கள் என்கிறாள். முதலடியால். “பின்னைகொல் நிலமாமகள்கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள்” (3280) என்பது நம்மாழ்வார்திருத்தாய் பாசுரம்; இத்திருத்தாய் “கடிமாமலர்ப் பாவை யொப்பாள்” என்கிறாள்; கந்தல் கழிந்தால் ஸர்வர்க்கும் நாரிணா முத்தமையுடைய அவஸ்தைவரக் கடவரக் கடவதாயிருக்கும்” என்பது ஸ்ரீவசநபூஷணம்: வந்தேறியான அஜ்ஞாநம் முதலிய தோஷங்கள் என்பது இதன் கருத்து. எம்பெருமானொருவனுக்கே உரிமைப்பட்டிருக்கை, அவனொருவனையே சரணமாகப் பற்றியிருக்கை, அவனொருவனை யே போக்யமாகக் கொண்டிருக்கை, அவனொருவனாலேயே தான் நிர்வஹிக்கத் தகுந்திருக்கை, ஸம்ச்லேஷத்தில் அறியிருக்கை, விச்லேஷத்தில் ஆறியிராமை என்னுமிவ்வாறு படிகளாலே அவித்யாதி தோஷங்கள் மிச்சமின்றிக் கழிந்து பரிசுத்தமாகப்பெற்ற ஆதமஸ்வரூபத்துக்கு இந்த ஆறுபடிகளாலும் நிறைந்துள்ள பிராட்டியோடு ஸாம்யம் இயற்கையாகவே உண்டாயிருக்குமன்றோ.
“நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேற் பனிசோர, அல்லியுந்தாது முதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ, இல்லம் வெறியோடிற்றாலோ” (297) என்றாற் போலே தாய் வயிறெரிந்து சொல்லும்படியாக விட்டுப்பிரிந்து வயலாலி மணவாளன் பின்னே நடந்து சென்ற பரகால நாயகியைப்பற்றிக் கவலைப்பட்டுப்பேசின இத்திருமொழியை ஓதவல்லவர்கள் விண்ணுலகத்தே நித்யாநு பவம் பண்ணப் பெறுவர்களென்றவாறு. “நெடுமால் துணையா” என்னாநிற்க, “தனியே” என்றது - பிறந்தகத்து உறவுமுறையாருடனே புக்ககம் போகவேண்டியது ப்ராப்தகமாயிருக்க, அங்ஙனம் போகாமல் என்றபடி. புகுவரென்று=புகுவர்கொலோவென்று. ஈற்றடியில், “மேவிய நெஞ்சுடை யார்க்கு” என்றும் பாடமுண்டென்ப. “தஞ்சமாவது விண்ணுலகே” என்றவிடத்து வியாக்கியானம்- “தனிவழியே போனாளென்று தாயார்பயப்படப் போகவேண்டர் ஆதிவாஹிக கணத்தோடே தானே வழிகாட்டிக் கொடுபோம்.”
மணாளன்-மணவாள னென்பதன் மரூஉ; கலியாணப்பிள்ளையென்று பொருள்படும். முணம் ஆளன் எனப்பிரியும். திருவாலியி லெம்பெருமான் அமிருதகடவல்லி நாச்சியாரை மணம்புரிந்த மணவாளத் திருக்கோலத்ததுடனே வந்து இவ்வாழ்வார்க்குக் காட்சிதந்து வலிய ஆட்கொண்டு மந்திரோபதேசஞ் செய்து அருள்புரிந்ததனாலும் மணவாளளெனத் திருநாமுமுடையன். இவ்வாழ்வார்தம்மைத் தலைமகளாகப் பாவித்து இப்பெருமானைத் தமக்கு மணவாளனாகக் கொண்டு சில திருமொழிகள் விண்ணப்பஞ் செய்திருந்தலும் உணர்க. பின்னடிகளின் கருத்தாவது-ஆடுமாடுகள் எட்டித் தழைமேயலாப்படி இடையர்கள் சில மரங்களின் கிளைகளைக் கைக்கத்திகொண்டு பாதியளவு வெட்டிச்சாயவிட்டிருத்தல் இயல்பு. அம்மரம் ஒருசார்பசுமையாய் ஒருசார்உலர்ந்து கிடக்கும், அதுபோல நான் ஞானலாபத்தாலுண்டான மகிழ்ச்சியைப் பெற்றதனோடு பேறுகிடைக்கப் பெறாமையாலுண்டான வாட்டத்தையும் அடைந்திராதபடி எனக்கு அருள்செய்யவேண்டுமென்கிறார். “நீடுபன் மலர்மாலையிட்டு நின்னிணையடி தொழுதேத்து மென் மனம்வாட நீ நினையேல்....................................... அணியாலியம்மானே!” என்றார் முன்னும். முழுவதும் ஆநந்தமே பெறும்படி அருள வேண்டுமென்றவாறு. வேர்ப்பறிந்த கொடியின் மலர்களும் போட்டவிடத்திலே செவ்வி பெறும்படி செய்யுந் தேசத்திலே வாழ்பவனாய் முதல் பறிந்ததற்குஞ் செவ்வி பெறுத்தவல்ல பரமசக்தியுக்தனான உனக்கு வேர்ப்பறியாது ஒருசாருலர்ந்தது மாத்திரமாயுள்ள மரத்துக்கு முழுவதும் பசுமையுண்டாம்படி செய்தல் எளிதே; ஆகவே, அம்மரம் போல ஒருபுறம் தளிர்த்து ஒருபுறம்வாடும் எனக்கு நீ பூர்ணாநத்தத்தை விளைக்கத்தட்டில்லையென இப்பரசரத்தின் நயமுணர்க. பல பொல்லாங்குகட்கு இடமான உடம்புடனே இவ்வுலகத்திலே யிருந்து தொண்டுசெய்தலினால் பூர்ணத்ருப்தியுண்டாகாமைபற்றி நான் பரமபதத்தில் உன்னையடையும்படி அருள்புரிய வேணுமென்ற வேண்டினாராயிற்று. ‘இடையனெறிந்த மரம்’ என்றதொடா; ஒரு பழமொழியாய் வழங்கிவந்த தென்பது “அடையப்பயின்றார்” என்று தொடங்கும் பழமொழிச் செய்யுளின் ஈற்றடியாக அத்தொடர் அமைந்திருத்தலால் வந்த ‘ஆற்றங்கரை மரம்’ ‘காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்’ ‘வெள்ளத்திடைப்பட்ட நரியினம்’ ‘வேம்பின்புழு வேம்பன்றியுண்ணாது’ என்பனவும் முதமொழியாதலைப் பழைய நூல்களிற் காணலாமென்ப.
விளக்கம்
1189.
விளக்கம்
1190.
விளக்கம்
1191.
விளக்கம்
1192.
விளக்கம்
1193.
விளக்கம்
1194.
விளக்கம்
1195.
விளக்கம்
1196.
விளக்கம்
1197.
விளக்கம்
1198.
விளக்கம்
1199.
விளக்கம்
1200.
விளக்கம்
1201.
விளக்கம்
1202.
விளக்கம்
1203.
விளக்கம்
1204.
விளக்கம்
1205.
விளக்கம்
1206.
விளக்கம்
1207.
விளக்கம்
1208.
விளக்கம்
1209.
விளக்கம்
1210.
விளக்கம்
1211.
விளக்கம்
1212.
விளக்கம்
1213.
விளக்கம்
1214.
விளக்கம்
1215.
விளக்கம்
1216.
விளக்கம்
1217.
விளக்கம்
2014.
விளக்கம்
2027.