திருவாய்ப்பாடி

தலபுராணம்: இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. இந்து தொன்மப்படி துவாபரயுகத்தில் திருமாலின் ஒரு அவதாரமான கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.

அமைவிடம்

மாநிலம் உத்திரப் பிரதேசம் மாவட்டம் மதுரா,

தாயார் : ஸ்ரீ ருக்மிணி மற்றும் சத்ய பாமா
மூலவர் : ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணன்
உட்சவர்: --
மண்டலம் : வட நாடு
இடம் : உத்தராகண்டம்
கடவுளர்கள்: நவ மோகன கிருஷ்ணன், ருக்மிணி


திவ்யதேச பாசுரங்கள்

    132.   
    தீய புந்திக் கஞ்சன் உன்மேல்*  சினம் உடையன் சோர்வு பார்த்து* 
    மாயந்தன்னால் வலைப்படுக்கில்*  வாழகில்லேன் வாசுதேவா!*
    தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்*  சாற்றிச் சொன்னேன் போகவேண்டா* 
    ஆயர் பாடிக்கு அணிவிளக்கே!*  அமர்ந்து வந்து என் முலை உணாயே

        விளக்கம்  


    • தேவகியின் மக்களறுவரைக் கல்லிடை மோதி சிசுஹத்திசெய்த கொடிய கம்ஸன் ‘தேவகியின் எட்டாவது கர்ப்பம் உனக்குப் பகை’ என்ற ஆகாயவாணியினாலும் பின்பு துர்க்கை சொல்லிப் போனதனாலும் ‘நம் பகைவன் கை தப்பிப்போய் நமக்கு அணுகவொண்ணாத இடத்திலே வளரா நின்றான்; அவனை எப்படியாவது கண்டுபிடித்துக் கொன்றுவிடவேணும்’ என்று உன்மேல் மிகவும் கறுக்கொண்டு ஆஸுர ப்ரக்ருதிகளை ஸ்தாவர ஜங்கமங்களான வடிவுகளைக்கொண்டு நீ திரியுமிடங்களில் நிற்கும்படி ஏவியிருக்கிறான்! அவன் அவர்களைக்கொண்டு நீ துணையற்றுத் திரியும்போது பார்த்து உனக்குத் தெரியாமலே தப்பமுடியாதபடி வஞ்சனையால் உன்னைப் பிடித்துக் கொண்டால் பின்னை என்னால் உயிர் தரித்திருக்க முடியாது; என் பேச்சைப் பேணி இங்கேயே இருக்கக் கடவாய் என்று வற்புறுத்துகின்றாள். (அணிவிளக்கே) உனக்கு ஏதேனும் தீங்குவந்தால் இத்திருவாய்ப்பாடியடங்கலும் இருள் மூடிவிடுங்காணென்கிறாள். சோர்வு - தளர்ச்சி; இலக்கணையால் தனிப்பட்டிருத்தலைக் காட்டும். கருமம் - ?? அமர்ந்து உவந்து என்றும் பிரிக்கலாம்.


    145.   
    முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி*  நின்காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு* 
    மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப்*  பசுநிரை மேய்த்தாய்*
    சிலை ஒன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா!*  திரு ஆயர்பாடிப் பிரானே!* 
    தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே*  விட்டிட்டேன் குற்றமே அன்றே?

        விளக்கம்  


    • கண்ணனைப் பலவிதமாகப் புகழ்ந்து யசோதை முலையுண்ணச் சொன்னது அவனும் அப்படியே முலையுண்ணத் தொடங்க அப்போது யசோதை அவன் காதில் கடிப்பை இட்டமாளாக கண்ணன் மிகவும் கோபித்து ‘நீ கொடுக்கும் முலையும் வேண்டா ஒன்றும் வேண்டா’ என்று சொல்லி அவளுக்குப் பிடாமல் அப்பால் ஓடிச்சென்று காதிலிட்ட காதணியையும் பிடுங்கி எறிந்துவிட்டனனாக யசோதை மறுபடியும் பலவிதமாகப் புகழ்ந்துகொண்டு காதில்கடிப்பை இடப்போகையில் அவன் இசையாமலிருக்க யசோதையானவள் ‘அப்பா! உன்மேல் ஒரு குற்றமுமில்லை; தலை செவ்வனே நில்லாத இளங்குழந்தைப் பருவத்திலேயே உன் காதைப் பெருக்காமல் விட்டிட்டது என்னுடைய குற்றமேகாண்’ என்று வெறுத்துக் கூறுகின்றாள்.


    231.   
    தாய்மார் மோர் விற்கப் போவர்*  தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்* 
    நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை*  நேர்படவே கொண்டு போதி*
    காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து*  கண்டார் கழறத் திரியும்* 
    ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*

        விளக்கம்  


    • இடைச்சேரியிலுள்ள இளம்பெண்களைப் புணருகைக்கு நீ தருணம் பார்த்திருக்கிற வளவிலே அப்பெண்களின் தாய் தந்தையர் தங்கள் வீட்டிற்குக் காவலாக அப்பெண்களை நிறுத்திவிட்டுத் தாம் மோர் விற்கவும் மாடு மேய்க்கவும் வெளியிற்சென்றவாறே நீ அப்பெண்களை உனக்கு வேண்டின விடங்களிலே கொண்டு போகின்றாய்; ஏற்கனவே உன்னைப் பழிக்கின்ற கம்ஸாதிகள் நீ செய்த இத்தீம்புகளைக் கேட்டு -வெறுமனே மெல்லுகின்ற வாயனுக்கு ஒரு பிடி அவலும் அகப்பட்டாற் போலக் ‘கண்ணனை ஏசுவதற்குப் பற்பல சங்கதிகள் கிடைத்தன’ என்று மகிழும்படியாக இவ்வகைத் தீமைகள் செய்கின்ற உன்னை அநுகூலரும் வெறுக்கும்படியாய் இப்படிகளாலே நீ பிராகிருதனாகத் தோற்றுவையாகிலும் உனது மெய்யான ஸ்வரூபத்தை நான் அறிந்துகொண்டு உனக்கு அம்மம்தர அஞ்சுவேன் என்கிறாள். பெண்கள் தங்களகங்களிலே தனியிருத்ததலால் இவன் அவ்விடத்தேயிருந்து அவர்களோடு சமிக்கக் கூடுமாயினும், தாய்தந்தையரைத் தேடிக்கொண்டு ஆரேனும் அங்கு வந்தாற் செய்வதென்? என்ற சங்கையினால் வெளியிடத்தே அவர்களைக் கொண்டு போயினனென்க. கண்டார்-உன்னைப் பார்த்த பார்த்த மநுஷ்யர்களெல்லாரும் என்றும் பொருளாம்.


    235.   
    பற்றுமஞ்சள் பூசிப்*  பாவைமாரொடு பாடியிற்* 
    சிற்றில் சிதைத்து எங்கும்*  தீமை செய்து திரியாமே*
    கற்றுத் தூளியுடை*  வேடர் கானிடைக் கன்றின் பின்* 
    எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்?*  எல்லே பாவமே!*

        விளக்கம்  


    • திருவாய்ப்பாடியில் இடைப்பெண்கள் மஞ்சளரைத்தால் ‘இது பற்றும், பற்றாது’ என்பதைப் பரீக்ஷிப்பதற்காகக் கண்ணபிரானுடைய கரிய திருமேனியிலே பூசிப்பார்ப்பார்களாம்; ஆதலால் அம்மஞ்சள் பற்றுமஞ்சள் எனப் பேர் பெற்றது. [கற்றுத்தூளி யித்யாதி.] கன்றுகள் திரள் நுகைத்துக் கிளப்பின தூள்கள் காடெங்கும் பாக்குமாதலால் கண்ணபிரானுடைய பொன் போல் மஞ்சனமாட்டின மேனி நிறம் மழுங்குமேயென்று வயிறெரிகின்றனள்.


    237.   
    வண்ணக் கருங்குழல்*  மாதர் வந்து அலர் தூற்றிடப்* 
    பண்ணிப் பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*
    கண்ணுக்கு இனியானைக்*  கான் -அதரிடைக் கன்றின்பின்* 
    எண்ணற்கு அரியானைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*

        விளக்கம்  


    • கண்ணுக்கினியானை=எத்தனையேனுந் தீம்பு செய்யிலும் அவன் வடிவழகை நினைத்தால் ‘ஆகிலுங்கொடிய வென்னெஞ்சம் அவனென்றே கிடக்கும்’ என்றாற்போல இவனை விடப்போகாதே!’ என்று கருத்து.


    239.   
    மிடறு மெழுமெழுத்து ஓட*  வெண்ணெய் விழுங்கிப் போய்ப்* 
    படிறு பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*
    கடிறு பல திரி*  கான் -அதரிடைக் கன்றின் பின்* 
    இடற என்பிள்ளையைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*

        விளக்கம்  


    • இலட்டுவும் சீடை முதலான பணியாரங்களைப் புஜிக்கவேண்டுமானால் கல் உண்டோவென்று சோதித்து மெதுவாகக் கடித்துண்ணவேணும்; வெண்ணெயாகையால் வருத்தமின்றி மெழுமெழென்று உள்ளே இழியுமே; ஆகையால் அதனை விழுங்குவன் என்க. பலபடிறு செய்கையாவது கச்சொடு பட்டைக்கிழித்துக் காம்புதுகிலவை கீறுகை;* பந்துபறித்துத் துகில்பற்றிக் கீறுகை. களிறு என்றசொல் எதுகையின்பம் நோக்கிக் கடிறு எனவந்தது; டகரப்போலி; ///////// என்பார் வட நூலார்.


    263.   
    விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ*  மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே* 
    கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு*  இளஆய்க் கன்னிமார் காமுற்ற- 
    வண்ணம்*  வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்*   விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்* 
    பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)  

        விளக்கம்  


    • ஸ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகளனைவரும் தன்னைத் தொழா நிற்கவும் எம்பெருமான் அவ்விடத்தே வீற்றிருந்து தனது பரத்துவத்தைப் பாராட்டலாமாயிருக்க, அங்ஙன் செய்யாது இடைச்சேரியில் வந்து பிறந்தது தனது ஸௌசீல்யத்தை வெளிப்படுத்துகைக்காகவென்க. காமுற்ற - ‘காமம் உற்ற’ என்பதன் தொகுத்தல். பக்தர் - ---?. இப்பாட்டால் இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு. அடிவரவு :- தழை வல்லி சுரிகை குன்று சுற்றி சிந்துரம் சால சிந்துரப்பொடி வலம் விண் அட்டு.


    281.   
    புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்*  பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து* 
    அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத*  அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப* 
    அவியுணா மறந்து வானவர் எல்லாம்*  ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்* 
    செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து*  கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.*  

        விளக்கம்  


    • இப்பூலோகத்தினுள் நான் கண்ட அற்புதமொன்றுண்டு, கேளுங்கள்; கண்ணபிரான் இவ்வுலகிலூதின குழலினோசை மேலுலகத்தளவும் பரந்து செல்ல, அங்கு அதனைக் கேட்ட தேவர்களில் ஒருவர் தப்பாமல் தமது மேன்மைக்கேற்ப அந்தணர் யாகங்களில் தரும் ஹவிஸ்ஸுக்களையும் உண்ண் மறந்து ‘கண்ணன் பிறந்து வளருகின்ற ஊர்’’ என்று கொண்டு திருவாய்ப்பாடியேறத் திறண்டுவந்து புகுந்து கூட்டத்தின் மிகுதியினால் ஒருவரை ஒருவர் நெருக்கி நின்று அக்குழலினோசையைக் காதுகளால் நன்கு பருகி அக்கண்ணபிரான் சென்றவிடங்களுக்கெல்லாந் தாங்களும் பின்னே சென்று அவனை ஒரு நொடிப் பொழுதும் விட்டகலமாட்டாதொழிந்தனர்; இதிலும் மிக்க அற்புதமுண்டோ? என்றவாறு தேவர்கள் உண்பது அமுதமாய் இருக்க “அமுதுணா மறந்து” என்னாது “அவியுணாமறந்து” என்றானது. தங்கள் மேன்மைக்கு உறுப்பு அவியுணவேயாகையால் அமுதத்தைக்காட்டிலும் தாங்கள் விரும்பி உண்பது ஹவிஸ்ஸானமைப்பற்றியென்க;”அந்தணர் யாகத்திலே ஸமர்ப்பிப்பது” என்ற விசேஷமுண்டிறே ஹவிஸ்ஸுக்கு. கண்ணன் குழலூதுவது விருந்தாவனத்தில் எனனாநிற்க, தேவர்கள் ஆயப்பாடியிற்புகுந்ததென்? எனில்; கீழ்க்கச்சிக் கோயிலில் நடக்கும் பேரருளாளனது பெரிய திருவடி திருநாளுக்கென்று வந்த திரள் கூட்டத்தின் மிகுதியால் அங்கேறப் புகுரமாட்டாது, மேற்க்கச்சிப் புறத்தளவிலே நிற்குமாபோலக்கொள்க; எனவே, இக்குழலோசை கேட்கவந்து திரண்டுள்ள ஜனங்கள் கண்ணபிரானைச் சுற்றிப் பற்பல காததூரத்தளவாக நின்றனரென்று திரளின் மிகுதி கூறியவாறாம். திருவாய்ப்பாடியிலுள்ள பஞ்சலக்ஷங்குடியிற் பெண்களும் கண்ணனிருப்பிடத்தைச் சூழ்ந்துகொண்டால், இனித் தேவர் நிற்குமிடம் எதுவாகக்கூடுமென்று ஆய்ந்துணர்க. (செவிஉள்) நாவில் -என்று ஒரு சொல்லாக்கொண்டு நாவினால் என்று உரைத்தலுமொன்று; ”செவிக்கு நாவுண்டோவென்னில், ‘செவியுணா நீட்ட’ என்னக்கடவதிறே; சேதநஸமாதியாலே சொல்லுகிறது; அன்றிக்கே, செவிக்கு உணவாயிருந்துள்ள இனிதான **** பூஜித்து என்னவுமாம்; ’செவுக்குணவில்லாதபோழ்து’ (குறள்) என்றானிறெ” என்ற ஜீயருரை இங்கு அறியத்தக்கது. ரஸத்தை கிரஹிப்பது எதுவோ, அது நாக்கு என்று கொண்டு, இசையின் சுவையை கிரஹிக்குங் கருவியைச் செவியுள்நா என்றதாகக்கொள்க. ஒளபசாரிகப் பிரயோகமரத்தனை. உணா - உணவு என்பதன் விகாரம். அமரலோகம் - வட சொற்றொடர்.


    474.   

    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்*  நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்*
    சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்*  கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*

    ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்*  கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்* 
    நாராயணனே நமக்கே பறை தருவான்*  பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய் (2) 

        விளக்கம்  


    • "அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
      இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் “நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 107 வது திருபார்கடலும் ,108 வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த இரு திருப்பதிகளை முடிவாக அடைய முடியும். இப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்."


    618.   
    நாணி இனி ஓர் கருமம் இல்லை*  நால்அயலாரும் அறிந்தொழிந்தார்* 
    பாணியாது என்னை மருந்து செய்து*  பண்டு பண்டு ஆக்க உறுதிராகில்* 
    மாணி உருவாய் உலகு அளந்த*  மாயனைக் காணிற் தலைமறியும்* 
    ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்*  ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்*.   

        விளக்கம்  


    • பெண்ணே! நீ ஆயிரந்தான் சொல்லு, உன்னுடைய துணிவு உகக்கத்தக்கதாகமாட்டாது. நீ படிதாண்டாப் பத்தினியாயிருக்க வேண்டியவள், படி கடந்து நீ செல்லுமளவில் அவ்வெம்பெருமானுக்கு அது பெருத்த அவத்யமாய் முடியும். ப்ரபந்நஸந்தானத்திலே இப்படியுமொருத்தி கிளம்பினாளே‘ என்று ஊராரும் பழிக்கநேரிடும், இதெல்லாம் உனது பெண்மை நிறைவுக்குப் பாங்கல்ல, உன்ஸ்வரூபத்தை நீ காத்துக்கொள்ள வேண்டாவா?“ என்று தாய்மார் சொல்ல, அவர்களை நோக்கிக் கூறுகின்றாள் - நான் முறை கெட்டபடியை இனிமேலா ஊரார் அறியப்போகிறார்கள்? என்றைக்கோ அறிந்த விட்டார்கள்! இனிமேல் அறியவேண்டும்படி இங்கு ஒன்றும் ரஹஸ்யமாயிருக்கவில்லை, ஏழூர்ப்புல்லையும் மேய்த்து எட்டூர்த் தண்ணீரையுங் குடித்து வருகிற கொண்டிப் பசுவின் நிலை போன்றதன்றோ எனது நிலை, இனி நாம் ஆர்க்கு லஜ்ஜைப்பட வேணும், லஜ்ஜைப்பட்டுத்தான் பெறவேண்டியது என்ன இருக்கிறது.


    630.   
    ஆரே உலகத்து ஆற்றுவார்*  ஆயர் பாடி கவர்ந்து உண்ணும்* 
    காரேறு உழக்க உழக்குண்டு*  தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை* 
    ஆராவமுதம் அனையான் தன்*  அமுத வாயில் ஊறிய* 
    நீர்தான் கொணர்ந்து புலராமே*  பருக்கி இளைப்பை நீக்கீரே* 

        விளக்கம்  


    • உரை:1

      இராமபிரானிடத்து ஆசைப்பட்டோமாகில் “***“ (பஹவோ! கல்யாணகுணா, புதுரஸ்ய ஸந்திதே) என்படி அவன் குணங்கடலாகையாலே அந்த்தருணங்களை நம்பியநுஸந்தாநஞ்செய்து கொண்டு ஒருவாறு தத்தத்திருங்கள் (பிராட்டி தரித்திரதார்போல்) க்ருஷ்ணலுடையதீபில் வுண்பட்டவர்கள் அப்படித்தரித்திருதாற்போ)க்ருஷண்னஐடய தீம்பீலே புண்பட்டவர்கள் அப்படித் தரித்திருக்க முடியமோ? திருவாய்ப்பாடியிலுள்ள அஞசுலக்ஷங்குடிற் பெண்களளவிலே செய்யவேண்டிய தீபுகளையெல்லாம் அவன் ஒருமடைசெய்து.“ என்னொருத்தியளவிலே செய்யாநின்றான்நான் எப்படி பிழைக்கமுடியும்? அம்புபட்ட புண்வாயை மருந்திட்டு ஆற்றலாம் அவனது தீம்புகட்கு விஷயமாகித் தளர்ந்தும் முறிந்துவிடக்கிடக்கின்ற என்னை இவ்வுலகத்தில் ஆறுவாருண்டா? என்று சொல்லிக்கொண்டே இளைத்து வீழ்த்து நெடும்போது ஷம்ஜஞையிற்க்கிடந்தாள் ஆண்டாள். அவ்வளவிலே நிதானமறிந்த, சிலர், அம்ருதத்தையிட்டு இவளுடைய மயக்கத்தைத் தீர்க்கலாமென்றெனண்ணி ஆராமுவது இத்யாதீகளான பசுவந்நாமங்களைச் செவிப்படவுரைக்க அதுகேட்டவாறே தெளிந்தெழுந்து பின்னடிகளருளிச் செய்கின்றாள். அமுதத்திலேயுண்டான ஓரமுதத்தைக் கொணர்ந்து நான் சருகாய் உலர்ந்துபோவதற்குமுன்னே என்னைப் பானம் பண்ணுவித்து என்னுடைய இளைப்பை நீக்கப்பாருங்களென்கிறாள்.

      உரை:2

      'உலகத்தவரில் யார் தான் என் துன்பத்தை ஆற்ற வல்லவர்? ஆயர்பாடியில் எல்லாரையும் தன் அன்பாலும் அழகாலும் கவர்ந்து உண்ணும் கரு நிறக் காளை போன்றவன் என்னை வாட்ட வாட்டமுற்று உடல் தளர்ந்தும் உறுப்புகள் முறிந்தும் கிடக்கின்றேன். உங்களால் ஏதாவது உதவி செய்ய முடியும் என்றால், தெவிட்டாத அமுதம் போன்றவனின் அமுத வாயில் ஊறிய நீர் தான் கொண்டு வந்து என் உடல் காய்ந்து போய் விடாமல் என் உடல் மேல் தெளித்தும் நான் உண்ணக் கொடுத்தும் என் இளைப்பை நீக்குங்கள்'


    636.   
    அல்லல் விளைத்த பெருமானை*  ஆயர்பாடிக்கு அணி விளக்கை* 
    வில்லி புதுவைநகர் நம்பி*  விட்டுசித்தன் வியன் கோதை* 
    வில்லைத் தொலைத்த புருவத்தாள்*  வேட்கை உற்று மிக விரும்பும்* 
    சொல்லைத் துதிக்க வல்லார்கள்*  துன்பக் கடலுள் துவளாரே* (2)  

        விளக்கம்  


    • உரை:1

      இத்திருவாய்மொழிகற்றார்க்குப் பலன் சொல்லி முடிக்கிறாள் இதில் * நிச்சலும் தீமைகள் செய்யும் பெருமானாகிய கண்ணபிரான் விஷயமாகப் பெரியாழ்வார் திருமகளார் அருளிச்செய்த இச்சொன்மாலைகளைப் புகழ்ந்து பாடவல்லவர்கள் ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபடமாட்டார்கள் என்கிறாள். “***“ (பஹவோ ந்ருப! கல்யாணகுணா புத்ரஸ்யஸந்திதே) என்னுபடியாக “குணசாலி“ என்று இராமபிரான் புகழ்பெற்றாற்போலக் கண்ணபிரான் “அல்லல் விளைத்த பெருமான்“ என்று புகழ்பெற்றிருப்பனாய்த்து. இவன்செய்யும் தீம்புகள் திருவாய்ப்பாடிக்கு விளக்கிடாற்போலிருக்கு மென்பது தோன்ற “அல்லல்விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கணி விளக்கை“ என்கிறாள். “இவன் தீம்புக்கு இலக்காகாதபோது ஊராக இருண்டு கிடக்குமாய்த்து“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகாண்க.

      உரை:2

      துன்பங்கள் எல்லாம் விளைத்த பெருமானை திருவாய்ப்பாடிக்கு அணிவிளக்கை, வில்லிபுத்தூர் நகரின் தலைவரான விஷ்ணுசித்தரின் திருமகளான கோதை - வில்லை பழிக்கும் புருவமுடையவள் - கண்ணன் மேல் மிகவும் வேட்கை உற்று மிக விரும்பிச் சொல்லும் இந்தச் சொற்களை துதிப்பவர்கள் துன்பக்கடலுள் விழ மாட்டார்கள்


    638.   
    அனுங்க என்னைப் பிரிவு செய்து*  ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்* 
    குணுங்கு நாறிக் குட்டேற்றைக்*  கோவர்த்தனனைக் கண்டீரே?* 
    கணங்களோடு மின் மேகம்*  கலந்தாற் போல வனமாலை* 
    மினுங்க நின்று விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*.          

        விளக்கம்  


    • நான் மிகவும் தளர்ச்சியடையும்படி என்னைப் பிரிந்துபோய்த் திருவாய்ப்பாடி முழுதையுங் கொள்ளை கொண்டு திரியுமவனாய், * வெண்ணெயளைந்த குணுங்கு நாற்றம் கமழுமவனான கோபாலகிருஷ்ணனைக் கண்டதுண்டோ? என்று கேட்பார் பாசுரம் -முன்னடிகள். மின்னலும் மேகமும் சேர்ந்தாற்போலே, ஸ்யாம்மான திருமேனிக்குப் பரபாகமாய் உஜ்ஜவலமான வனமாலை அசையை அசையத் * தன்னோராயிரம் பிள்ளைகளோடு விளையாட நிற்க விருந்தாவனத்தே கண்டோமென்று விடையளிப்பார் பாசுரம் பின்னடிகள். ஆயர்பாடி கவர்ந்துண்ணும் - ஆயர்பாடி யென்றது இடவாகு பெயராய், திருவாய்ப்பாடியிலுள்ள பெண்களையும் தயிர் நெய்பால் முதலிய போக்யபதார்த்தங்களையும் குறிக்கும் குணுங்கு நாற்றமாவது - மொச்ச நாள்ளம். இடைச்சாதியர்க்கு இளயல்வான நாற்றம். குட்டேறு - இளையவ்ருஷபம் கோவர்த்தனன் - பசுக்களை ஒன்று நூறாக வளர்க்குமவன். கண்களோடு - (***) என்னும் வடசொல் - கூட்டமென்று பொருள்படும். இங்கே, தோழன்மார் கூட்டமெனக் கொள்க. * தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவானிறே கண்ணபிரான். மின் மேகம் - உம்மைத்தொகை மின்னலும் மேகமும் என்றவாறு.


    1993.   
    தந்தை தளைகழலத்*  தோன்றிப்போய்,*  ஆய்ப்பாடி- 
    நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் காண்ஏடீ,*
    நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் நான்முகற்குத்* 
    தந்தைகாண் எந்தை*  பெருமான் காண் சாழலே.

        விளக்கம்  


    • தந்தை தலைகழல=கம்ஸனால் விலங்கிடப்பட்டுச் சிறையிருந்த வஸுதேவ தேவகிகளின் கால்விலங்குகள் கண்ணபிரான் திருவவதாரிக்கும்போது இற்று முறிந்தொழிந்த வரலாறு அறியத்தக்கது. சிறைக்கூடத்திலே பிறந்தவன்காணென்று ஏசுகிறபடி.


    1994.   
    ஆழ்கடல்சூழ் வையகத்தார்*  ஏசப்போய்,*  ஆய்ப்பாடித்- 
    தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்டான் காண்ஏடீ,*
    தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்ட பொன்வயிறு,*  இவ்- 
    ஏழ்உலகும் உண்டும்*  இடம்உடைத்தால் சாழலே.

        விளக்கம்  


    • தோழீ! நீ உகக்கிற பெருமான் அவாப்தஸமஸ்தகாமனாக இருந்தாலன்றோ விசேஷம்; அவனுடைய சரித்திரங்களை ஆராய்ந்தால் அவனும் நம்மைப் போலவே பிறர் பொருள்களில் விருப்பமுள்ளவனாகக் காணப்படுகிறானேயல்லது அவரப்தஸமஸ்தகாமனாகக் காணப்படவில்லையே. ஆய்ப்பாடியில் கண்ணானாய்ப்பிறந்து கள்ளவழியால் தயிர்வெண்ணெய் பால் முதலியவற்றை வாரியுண்டான் எனத் தொரிய வருவதால் இங்ஙனம் பிறர் பொருள்களில் ஆசையுள்ளவன் பரமபுருஷனாயிருக்கத் தகுமோ? என்ன; அதற்கு மறுமொழி கூறுகின்றான் மற்றொத்தி. தோழீ!, திருவாய்ப்பாடியில் இடைச்சிகள் சேமித்துவைத்திருந்த தயிரை அமுது செய்தானென்பது உண்மையே; நம்முடைய வயிறு போலே ஏதேனும் சிலவற்றை உண்டு நிறைந்துவிடுகிற திருவயிறோ அவனது? காரேழ் கடலேழ் மலையேழுலகுண்டும் ஆராவயிற்றானாயிருப்பவன் காண். ஷப்தலோகங்களையும் வாரித் திருவயிற்றினுள் இட்டாலும், இன்னமும் இப்படிப் பதினாயிரமுலகங்களை யிட்டாலும் நிறைப்போலே வயிற்றை நிறைக்கவேணுமென்கிற எண்ணத்தினால் தயிர்முதலியவற்றை அவன் வாரியுண்பவனாகில் அவனுடைய அவரப்தஸமஸ்த காமத்வத்திற்குக் குறையுண்டாகும். அடியவர்களுடைய ஹஸ்தஸ்பர்சமுள்ளதொரு பொருளாலல்லது தரிக்கமாட்டாத மஹா குணத்தை வெளியிடவேண்டித் தாழ் குழலார்வைத்த தயிருண்டானத்தனையாகையாலே கொண்டாடத்தக்க எளிமைகாண் இது, என்றளாயிற்று.


    1995.   
    அறியாதார்க்கு*  ஆன்ஆயன் ஆகிப்போய்,*  ஆய்ப்பாடி- 
    உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்தான் காண்ஏடீ*
    உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்த பொன்வயிற்றுக்கு,* 
    எறிநீர் உலகுஅனைத்தும்*  எய்தாதால் சாழலே

        விளக்கம்  


    • திருவாய்ப்பாடியில் கண்ணபிரான் தயிர்வெண்ணெயுண்ட வரலாற்றிலே ஆழ்வார்களெல்லாரும் மிக ஈடுபாடுடையவராதலாலும் இவ்வாழ்வார்தாமும் அதிலே விசேஷமான ஈடுபாடுடையராதலாலும் கீழ்ப்பாட்டின் ப்ரமேயமே இப்பாட்டிலும் பொலிய நிற்கிறது. ஆறியாதர்க்கு ஆனாயனாகி ஸ்ரீ ஸர்வஜ்ஞனான எம்பெருமான் அறிவில்லாதவொரு சன்மத்திலே பிறக்கவேணுமென்று நினைத்தால் இடக்கையும் வலக்கையுங்கூட அறியமாட்டாதபடி அறிவுகேட்டுக்கு எல்லை நிலமான இடைக்குலத்திலே தான் பிறக்க வேணுமோ? அறியாதர்க்கு-அறிவில்லாதவாக்ளுக்குள்ளே, ஆனாயனாகி-கடைகெட்ட இடையனாகி. (இங்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் சில ப்ரசேஷப உத்சேஷபங்கள் இருப்பதை ஏட்டுப்பிரதிகளைக் கொண்டு திருத்திக்கொள்க


    2685.   
    ஆரால் கடைந்திடப் பட்டது*--அவன் காண்மின்*
    ஊரா நிரை மேய்த்து உலகுஎல்லாம் உண்டுஉமிழ்ந்தும்* 
    ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி*
    சீரார் கலைஅல்குல் சீரடிச் செந்துவர்வாய்*
    வாரார் வனமுலையாள் மத்துஆரப் பற்றிக்கொண்டு* 
    ஏரார் இடைநோவ எத்தனையோர் போதும்ஆய்*
    சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை*
    வேரார் நுதல் மடவாள் வேறுஓர் கலத்துஇட்டு* 
    நாரார் உறிஏற்றி நன்குஅமைய வைத்ததனைப்*
    போரார் வேல்கண்மடவாள் போந்தனையும் பொய்உறக்கம்*
    ஓராதவன்போல் உறங்கி அறிவுஉற்று*
    தாரார் தடம்தோள்கள் உள்அளவும் கைந்நீட்டி* 
    ஆராத வெண்ணெய் விழுங்கி* -- அருகுஇருந்த

        விளக்கம்  


    • “உமக்கறியக் கூறுகேனோ“ என்ற கட்டுவிச்சி அங்ஙனமே விரிவாகக் கூறுகின்றாள், “ஆராலிவ்வை மடியளப்புண்டதுதான்“ என்று தொடங்கி “பேராயிர முடையான் பேய்ப்பெண்டீர் நும்மகளைத் தீராநோய் செய்தான்” என்னுமளவும் கட்டுவிச்சியன் வார்த்தை. இதில், எம்பெருமான் உலகமளந்தது இலங்கையைப் பாழ்படுத்தியது, கோவர்த்தன்மலையை யெடுத்துக் கல்மர்காத்தது, கடல் கடைந்தது, பசு மேய்த்தது, உலகமெல்லாம் உண்டுமிழ்ந்தது, வெண்ணெய் களவுசெய்து தாம்பினால் கட்டுண்டது, காளியநாகத்தைக் கொழுப்படக்கியது, சூர்ப்பணகையின் அங்கபங்கம் செய்த்து, கரனைக் கொன்றது, இராவணனைக் கொன்றது. இரணியனை முடித்தது, கஜேந்திராழ்வனைக் காத்தருளியது – ஆகிய சரித்திரங்கள் கூறப்பட்டுள்ளன. இவ்வரிய பெரிய காரியங்களைச் செய்தருளின பரம புருஷன்தான் உங்கள் மகளைத் தீராநோய்க்கு ஆளாக்கினான் என்று சொல்லி முடித்தாளென்க. மாவலியைப் பாதாளத்தில் சிறை வைத்தும், குளவிக்கூடு போலே அசுர ராக்ஷஸர்கள் மிடைந்து கிடந்த இலங்கையை நீறாக்கியும், கடல் கடைந்து அமுதமளித்தும், குன்றெடுத்துக் கோநிரைகாத்தும், பிரபஞ்சங்களை ப்ரளயங் கொள்ளாதபடி நோக்கியும் இவ்வகையாலே அடியார்களுக்குப் பலவிதங்களான நன்மைகளை புரிந்து தனது திருக்கல்யாண குணங்களை நன்கு விளங்கச் செய்துங்கூட த்ருப்தி பெறாத எம்பெருமான் தனது ஸௌலப்யமாகிற வொரு குணத்தை வெட்ட வெளிச்சமாக்குவதற்காகவே வெண்ணெய் களவு செய்த வியாஜத்தாலே உரலோடு கட்டுண்டதாகச் சொல்லுகிற அழகைப் பாருங்கள்.