ஸ்ரீ மகா விஷ்ணு சாற்றுமுறை
பல்லாண்டு பல்லாண்டு பல்லா யிரத்தாண்டு *
பலகோடி நூறாயிரம் *
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா *
உன் சேவடி செவ்விதிருக் காப்பு! *
அடியோமோடும் நின்னோடும் *
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு,
வடிவாய் நின்வல மார்பினில் *
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு, *
வடிவார் சோதி வலத்துறையும் *
சுடராழியும் பல்லாண்டு,*
படைபோர் புக்கு முழங்கும் *
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே.*
ஸர்வதேஸ தஸாகாலேஷ்வவ்யாஹத பராக்ரமா
ராமா நுஜார்ய திவ்யாஜ்ஞாவர்த்ததாமபிவர்த்ததாம்,
ராமாநுஜார்யதிவ்யாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்வலா
திகந்தவ்யாபிநீபூயாத் ஸாஹிலோகஹிதைஷிணீ.
ஸ்ரீமந்ஸ்ரீரங்கஸ்ரியமநுபத்ரவாமநுதிநம்ஸம்வர்த்தய
ஸ்ரீமந்ஸ்ரீரங்கஸ்ரியமநுபத்ரவாமநுதிநம்ஸம்வர்த்தய.
நமஸ்ஸ்ரீஸைலநாதாய குந்தீநகரஜந்மநே
ப்ரஸாதலப்தபரமப்ராப்ய கைங்கர்ய ஸாலிநே.
ஸ்ரீஸைலேஸ-தயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்.
வாழி திருவாய் மொழிப்பிள்ளை மாதகவால்
வாழும், மணவாள மாமுனிவன் - வாழியவன்
மாறன் திருவாய் மொழிப்பொருளை மாநிலத்தோர்
தேறும் படியுரைக்கும் சீர்.
செய்ய தாமரைத் தாளிணை வாழியே,
சேலை வாழி திருநாபி வாழியே,
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே,
சுந்தரத்திருத்தோளிணை வாழியே,
கையுமேந்திய முக்கோலும் வாழியே,
கருணை பொங்கிய கண்ணினை வாழியே,
பொய்யிலாத மணவாள மாமுனி
புந்திவாழி புகழ்வாழி வாழியே !
அடியார்கள் வாழ,
அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,
கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ,
மணவாள மாமுனியே, இன்னுமொரு நூற்றாண் டிரும்.
நாமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்த ப்ராதாயிநே
ஆத்ரேய பத்மநாபார்ய ஸ¨தாய குணசாலிநே.
ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத்வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்
வாழி யிராமா நுசப்பிள்ளான் மாதகவால்,
வாழு மணிநிக மாந்தகுரு, - வாழியவன்
மாறன் மறையுமிரா மாநுசன் பாடியமும்,
தேறும் படியுரைக்கும் சீர்.
வஞ்சப் பரசமயம் மாற்றவந்தோன் வாழியே,
மன்னபுகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே,
கஞ்சத் திருமங்கை யுகக்கவந்தோன் வாழியே,
கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே,
செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே,
திருமலைமால் திருமணிமாய்ச் சிறக்கவந்தோன் வாழியே,
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே,
செந்தமிழ்த் நூப்புல் திருவேங்கடவன் வாழியே.
நானிலமும் தான் வாழ
நான்மறைகள் தாம் வாழ,
மாநகரின் மாறன் மறை வாழ,
ஞானியர்கள்சென்னியமணி
சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே!
இன்னுமொரு நூற்றாண் டிரும்.
வாழியணி தூப்புல் வருநிகமாந் தாசிரியன்
வாழியவன் பதராவிந்தமலர்
- வாழியவன் கோதிலாத் தாண்மலரைக்
கொண்டாடிக் கொண்டிருக்கும்
தீதிலா நல்லோர் திரள்.
கோதை பிறந்த ஊர்
கோவிந்தன் வாழும் ஊர்
சோதி மணிமாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர்
நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோன் ஊர்.
பாதகங்கள் தீர்க்கும்
பரம னடிகாட்டும்,
வேத மனைத்துக்கும் வித்தாகும்,
கோதைதமிழ் ஐயைந்து மைந்தும்
அறியாத மானிடரை,
வையம் சுமப்பதூஉம் வம்பு.
திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதூஉம் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!
ஆராத அருளமுதம் பொதிந்த கோயில் *
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்த கோயில் *
தோலாத தனிவீரன் தொழுத கோயில் *
துணையான வீடணற்குத் துணையாங் கோயில் *
சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில் *
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில் *
தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில் *
திருவரங்க மெனத் திகழுங் கோயில் தானே!
கண்ணன் அடியிணை எமக்குக் காட்டும் வெற்பு *
கடு வினையர் இரு வினையும் கடியும் வெற்பு *
திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்பு *
தெளிந்த பெரும் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு*
புண்ணியத்தின் புகல் இதெனப் புகழும் வெற்பு*
பொன்னுலகில் போகமெல்லாம் புணர்க்கும் வெற்பு*
விண்ணவரும் மண்ணவரும் விரும்பும் வெற்பு *
வேங்கட வெற்பென விளங்கும் வேத வெற்பே *
அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேலழகர் வந்தார்
கச்சிதனிற் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்
கருத வரந்தரு தெய்வப்பெருமாள் வந்தார்
முத்தி மழை பொழியு முகில் வண்ணர் வந்தார்
மூலமென வோலமிட வல்லார் வந்தார்
உத்திர வேதிக்குள்ளேயுதித்தார் வந்தார்
உம்பர் தொழுங்கழலுடையார் வந்தார்தாமே.