திருவாறன்விளை

தலபுராணம்: திருவாறன்விளை அல்லது ஆறன்முளா (ஆரன்முளா) என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தல வரலாறு: அர்ஜுனன் ஆறு மூங்கில் துண்டுகளாலான மிதவையில் இறைவன் சிலையைக் கொண்டு வந்ததினால் இத்தலம் திருவாறன்விளை (ஆறு மூங்கில் துண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது.பிரம்மன், வாமன அவதாரத்தில் பெருமாளை தரிசிக்க வேண்டுமென இத்தலத்தில் தவமிருந்து அது போன்றே எம்பெருமான் காட்சி கொடுத்தார் என ஒரு வரலாறும் உண்டு. பாண்டவர்கள் கேரள தேசத்தில் மறைந்து வாழும்போது மகாபாரத யுத்தத்தில் நிராயுத பாணியான கர்ணனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க அர்ஜுனனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது

அமைவிடம்

மாநிலம்: கேரளம் மாவட்டம்: பத்தனம்திட்டா அமைவு: ஆறன்முளா,

தாயார் : ஸ்ரீ பத்மாஸநி நாச்சியார்
மூலவர் : திருக்குறளப்பன் (செஷாசனா )
உட்சவர்: --
மண்டலம் : --
இடம் : கோட்டயம்
கடவுளர்கள்: பார்த்தசாரதி பெருமாள்,ஸ்ரீ பத்மாஸநி நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

    3552.   
    இன்பம் பயக்க எழில் மலர் மாதரும்*  தானும் இவ் ஏழ் உலகை,* 
    இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து*  ஆள்கின்ற எங்கள் பிரான்,* 
    அன்புற்று அமர்ந்து உறைகின்ற*  அணி பொழில் சூழ் திருவாறன்விளை,* 
    அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து*  கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ! (2)      

        விளக்கம்  


    • எம்பெருமான் பிராட்டியோடு கூடு ஆனந்தமயனாக எழுந்தருளியிருக்குமிடமான திருவாறன்விளையிலே அநுபவித்து அடிமை செய்யுங்காலமும் ஆகுமோ வெம்கிறார். ஸம்ஸாரி செதநர்கள் எம்பெருமானோடு சேர்ந்து ஆனந்தமநுபவிப்பது போல, அவ்வெம்பெருமான் தானும் பிராட்டியோடு சேர்ந்தே ஆனந்தமநுவிபவிக்கப் பெறுகின்றானென்பது முதலடியிற்போதரும். “இவ்வேழுலகை இன்பம் பயக்க” என்றவிடத்தில் ஈடு-; மாதாபிதாக்களிரு வரும் சேரவிருந்து பரியப்புக்கால் ப்ரஜைகளுக்கு ஒரு குறைவுகளும் பிறவாதிறே. ஆக இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தமுண்டாக, அச்சேர்த்தியைக் காண்கையாலே லோகத்துக்கு ஆனந்தமுண்டாக, அதுதன்னைக் கண்டு ப்ரஜை பால்குடிக்கக் கண்டுகக்கும் தாயைப்போலே இவர்களுக்குண்டான ப்ரீதியைக்கண்டு அத்தாலே தாங்கள் இன்யராயிருப்பர்களாயிற்று.” திருவாய்மொழி கேட்கைக்குப் பாங்காயிருப்பதொரு தேசம் பெற்றோமென்று பறாப்பேறு பெற்றாப்போலே விரும்பி யெழுந்தருளியிருக்கிற தேசமென்பது தோன்ற “இனிதுடன் வீற்றிருந்தாள்கின்ற” என்கிறார். இப்படிப்பட்ட பெருமான் அவ்விடத்திலிருப்பை ஸ்வயம் ப்ரயோஜநமாகக் கருதி, அவதாரங்கள் போலே தீர்த்தம் ப்ரஸாதியாதே நித்யவாஸம் பண்ணுமிடமாய், அவன் தன் விபூதியோடேயிருந்து திருவாய்மொழி திருச்செவி சாத்துகைக்கீடான பரப்பையுடைய பூம்பொழிலாலே சூழப்பட்டதான திருவாறன் விளையை ப்ரதக்ஷிணம் பண்ணி நமஸ்கரிக்கும் படியான காலம் என்றோ வென்றாராயிற்று.


    3553.   
    ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி*  அகல் இடம் முற்றவும் ஈர் அடியே* 
    ஆகும்பரிசு நிமிர்ந்த*  திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும்* 
    மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு*  மதிள் திருவாறன்விளை,* 
    மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து*  கைதொழக் கூடும்கொலோ!       

        விளக்கம்  


    • “ஆகும்கொல் ஜயமொன்றின்றி” என்கிறவிது ஆழ்வாருடைய மநோரதமாகவுமாம், திருக்குறளப்பனுடைய மசோரதமாகவுமாம். பாட்டின் முடிவிலே “கைதொழக் கூடுங்கொலோ” என்றிருப்பதனால் ‘ஆகுங்கொல் ஜயமொன்றின்றி’ என்பது புநருக்தமாகாதோ வென்னில், ஆகாது; முதலில் ஸாமாந்யமாக மநோரசித்து, மேலே விவரிக்கிறபடியென்று கொள்ளலாம். வாமநமூர்த்தியின் எண்ணமாக அந்வயிக்குமிடத்தில் இந்த சங்கைக்கே ப்ரஸக்தியில்லை. அகலிடம் முற்றவும் ஈரடியால் அளக்க ஆகுங்கொல்! என்கிற ஜயமின்றியே நிமிர்ந்து அளந்தானென்று கொள்க. மாகந் திகழ்-மஹாகம் என்கிற வடசொல் மாகம் என்று கிடக்கிறது. எம்பெருமான் திருவடிகளாலளந்த ஆகாசப் பரப்படங்கலும வியாபியாநின்றுள்ள கொடிகளையுடைத்தான மாடங்களையும் ஓங்கியிருந்துள்ள மதிட்களையுடைத்தான திருவாறன்விளையை சந்தந கர்ப்பூராதி ஸுகந்தத்ரவ்யவாஸிதமாய் ஹிமசீதளமான நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழும் பாக்கியம் வாய்க்குமோ! என்றாராயிற்று. மஹாகந்த மென்ற வடசொல் மாகந்த மென்று திரிந்தது. இந்த திவ்யதேசத்திற்கு மங்களாசாஸநார்த்தமாக எழுந்தருளும் பெரியயார்கள் ஆழ்வாருடைய இப்பாரிப்புக்கிணங்க ஸுகந்தசந்தனச் சேற்றைத் திருமதிளிலே தூவி வழிபாடு செய்வது வழக்கம்


    3554.   
    கூடும் கொல் வைகலும்*  கோவிந்தனை மதுசூதனை கோளரியை,* 
    ஆடும் பறவைமிசைக் கண்டு*  கைதொழுது அன்றி அவன் உறையும்,*
    பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி*  ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,* 
    நீடு பொழில் திருவாறன்விளை தொழ*  வாய்க்கும்கொல் நிச்சலுமே!     

        விளக்கம்  


    • பாட்டின் முடிவிலே “வாய்க்குங்கொல் நிச்சலும்” என்றிருக்கச் செய்தேயும் தொடக்கத்தில் “கூடுங்கொல் வைகலும்” என்றது ஆதராதிகசயத்கையும் விரைவுமிகுதியையுங் காட்டும். அங்குறையும் பெருமான்பக்கலிலே விளங்கும் ஆச்ரிதவாத்ஸல்யத்தைக் கண்டு கோவிந்தனை என்றார்; விரோதிநிரஸனமிடுக்கைக் கண்டு ‘மதுசூதனைக் கோளரியை’ என்றார். “ஆடும் பறவை மிசைக்கண்டு” என்ற சொல்நயத்தை நோக்கி நம்பிள்ளையருளிச் செய்யும் விசேஷார்த்தம்-திருவாறன்விளையை உத்தேச்யமாகக் கொண்டு எம்பெருமானை அங்கே காணவேணுமென்று நாம் அவ்விடந்தேடிச் சென்றால், அவன் திருநகரியை உத்தேச்யமாகக்கோண்டு இங்கே நம்மைக் காணவேணுமென்று ஆடும் பறவைமிசையேறி வருவனே; அன்னவனை நடுவழியிலே கண்டு—என்று. கைதொழுதன்றி—கைதொழுவது மாத்திரமேயல்லாமல் என்றபடி வேதாத்யயந பரர்களும் பஞ்சமஹாயஜ்ஞபராயணர்களும் வாழுமிடமென்கிறது மூன்றமடி.


    3555.   
    வாய்க்கும்கொல் நிச்சலும்*  எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற* 
    வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்*  வயல் சூழ் திருவாறன்விளை,*
    வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்*  வடமதுரைப் பிறந்த,* 
    வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்*  மலர் அடிப்போதுகளே.    

        விளக்கம்  


    • திருவாறன்விளையிலே சென்று அநுபவிக்க ப்ராப்தியில்லையாகிலுமாகுக; அங்கு நின்றருளின் எம்பெருமான் திருவடிகளை இங்கேயிருந்தாகிலும நிரந்தரமாகச் சிந்தனை செய்யும் பாக்கியம் வாய்க்குமோ வென்கிறார். நிச்சலும் என்று சொல்லி, பின்னை எப்பொழுதும் என்கைக்குக் கருத்து என்னென்னில்; இங்கு ஈடு காண்மின்;- “நித்யாக்நிஹோத்ரம் போலே ஒரு கால விசேஷத்திலேயாய்ப் போக வொண்ணுது; எல்லாவஸ்தைகளிலுமுண்டாகவேணும்” என்று. ஒருவர் நித்யம் அக்நிஹோத்ரம் பண்ணுகிறாரென்றால் இரவும் பகலும் அதுவே தொழிலாக இருக்கிறாரென்பதில்லையே; ஒரு நாளைக்கு ஒரு சிறுபோது அக்நிஹோத்ரம் பண்ணினாலும் நித்யாக்நிஹோத்ரியென்று பெயர் வந்துவிடுமன்றோ. அப்படியாகாமே அநவரகமும் நினைக்கப் பெறவேணுமென்கிறது. மனத்தீங்கு-ஈங்கு என்று பிரிக்க. உத்தேச்யமான தொன்றை அநுபவிப்பதிற்காட்டிலும் அநுபவிக்க மநோரத;, யதி நாசம்நவிந்தேத தாவதாணஸ்மிக்ருதீ ஸதா என்கிற ஜிதந்தாச்லோகம் இங்கு ரஸமயமாக வியாக்கியானிக்கப் பெற்றுள்ளது. “நாட்டார் மநோரத மென்றும் அநுபவமென்றும் இரண்டாகவிறே சொல்லிப்போருவது; எனக்கு இதெல்லாம் வேண்டாம்; இம்மநோரத மாத்ரத்தாலே க்ருதக்ருத்யன் நான். சரீரஸம்பந்தமற்றுப் பரமபதத்திலேபோய் ஏற்றமாக அநுபவிக்கு. மதிற்காட்டில் நான் பேறாக நினைத்திருப்பது இத்தையே” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்திகள் ரஸிக்கத்தக்கன இங்கு, இளையாற்றுக்குடி நம்பி யென்பாரொரு பரமபக்தருடைய இதிஹாஸமொன்றும் அருளிச்செய்யப்பட்டுள்ளது. அவர் திருநாட்கள்தோறும் கோயிலுக்கு வந்து பெருமாளை ஸேவித்துப்போவராம் போனால், மீண்டும் திருநாள் வருமளவும் அதனையே போது போக்காக ஸ்மரித்துக்கொண்டிருப்பராம். அவர் நூறு வயஸ்ஸூம் புகுகையாலே பலஹாநி பிறந்த திருமுளைத் திருநாளில் பெருமாள் புறப்பட்ட ஷருளுகைக்கு உதவவந்து புகுரப்பெற்றிலர். பெருமாளும் தேடியருளிக்காணாமை ‘நம் இளையாற்றுக்குடியான் வந்திலன், நம் கண்ணுலமல்லவோ’ என்று திருவுள்ளமானாராம். அவர் தாம் ஆறாந்திருநாளிலே; ஸேவித்திருக்கச்செய்தே ‘நாம் உனக்குச் செய்யவேண்டுவதென்?’ என்று கேட்;டருள், ‘தேவரீர் தந்தருளின சரீரத்தைக்கொண்டு போர ஜாஜீத்தது’ என்ன, ‘வாராய்! மெய்யே யிளைத்தாயாகில் இங்ஙனேயிரு’ என்றருளிச் செய்தார். பெருமாள் நடுவில்திருவாசலுக்கவ்வருகே யெழுந்தருளுஙகாட்டில் திருநாட்டுக்கெழுந்தருளினார்”


    3556.   
    மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்*  இருத்தி வணங்க,* 
    பலர் அடியார் முன்பு அருளிய*  பாம்பு அணை அப்பன் அமர்ந்து உறையும்,* 
    மலரின் மணி நெடு மாடங்கள் நீடு*  மதிள் திருவாறன்விளை,* 
    உலகம் மலி புகழ் பாட*  நம்மேல் வினை ஒன்றும் நில்லாகெடுமே.

        விளக்கம்  


    • அடியார்கள் அநுபவிக்கைக்காக அநந்தசாயியானவன் வர்த்திக்கிற திருவாறன்; விளையினுடைய பெரும்புகழைப்பாட, நம் பாபமொன்றும் நில்லாதே தெலைந்தொழியுமென்கிறார். (பலரடியார் முன்பருளிய) இவ்விடத்து ஈட்டு ஸ்ரீஸூக்திகள் பரமபோக்யமானவை;-“ஸ்ரீவேதவ்யாஸபகவான் ஸ்ரீ பராசரபகவான் இன்கவி பாடும் பரமகவிகளென்று சொல்லப்படுகிற முதலாழ்வார்களெல்லாரு முண்டாயிருக்க, என் பக்கலிலே விசேஷகடாக்ஷிம் பண்ணுவதே! முதலிகளெல்லாருமிருக்கச்செய்தே திருவடிபக்கிலிலே விசேஷகமபக்ஷம் பண்ணினாப்போலேயாயிற்று பலருமுண்டாயிருக்க இவரை விஷயீகரித்தபடி.” இங்கு ஆழ்வானுடய அற்புதமான அதிஹாஸமொன்று (ஈட்டில்) காட்டப்பட்டுளது. கேண்மின்; அக்காலத்திலே அரசாண்டுவந்த சோழராஜன் வைஷ்ணவை த்ரோஹியாகையாலே ஆங்காங்குள்ள விஷ்ணுப்ரதிமைகளை யெடுத்து எறிந்து விடவேணுமென்று முயன்றபோது அவனுக்கு இஷ்டரானவர்கள் ‘மந்த்ரபூர்வகமாக ப்ரதிஷ்டை செய்யப்பட்ட விஷ்ணுபிம்பங்களை யழியச் செய்தால் ஊருக்குப்பெருத்த தீங்கு விளையும்’ என்று சொல்ல. அதுகேட்ட சோழன் ‘அந்த ப்ரதிமைகளில் தெய்வசக்தியை உத்வாஸநம்பண்ணி யழியச் செய்வோம் என்று நிச்சயித்து ஒரு ப்ராஹமணனுக்குப் பணங்கள் கொடுத்து நீ அத்ருச்யாஞ்ஜநமிட்டுக் கொண்டு உத்வாஸநம் பண்ணு என்று ஆஜ்ஞாபிக்க, அவனும் திவ்யதேசங்களிலே சென்று அப்படியே அத்ருச்யாஞ்ஜநமிட்டுக்கொண்டு உத்வாஸநம் பண்ணி பகவத் விக்ரஹங்களைக் கடலிலே யெடுத்தெறிகிற செய்தியை எம்பெருமானர் திருச்செவிசாத்தி ‘நாம் நெடுநாளாக இவ்விடத்துக்கும் அழிவுவரும்படி ஆஸீரவர்க்கம் மேலிடாநின்றது; இனிமேல் செய்யவேண்டுவதென்?’ என்று வியாகுலப்பட்டுப் பெரிய நம்பியோடே சிந்தித்திருக்க, நான் பெருமாளுடைய திருவெல்லையிலே ஒரு ப்ருதஷிலாம் வரும்படியாக உம்முடைய சிஷயர்களில் ஒருவரை என் பின்னே அனுப்ப வேணும்; என் பின்னே வார நின்றால் ‘ஒருவன் பின்னே போகிறோம்;’ என்று தன்னெஞ்சில் படாதே நிழல் போலே என்னைப் பின்செல்பவனாக இருக்கவேணும்; அப்படிப்பட்ட ஒரு சிஷ்யனைப் பார்த்தனுப்பும்’ என்று பெரியநம்பி திருவாய்மலர்ந்தருள, இப்படிப்பட்ட ஆத்மகுணபரிபூர்ணரான சிஷ்யர் ஆழ்வானொருவரேயென்பது உடையவர்க்கு நன்கு தெரிந்திருந்தும் இதனைப் பெரியநம்பி திருவாக்கனால் வெளியிடுவிக்க வேணுமென்றெண்ணிக்கொண்டு நம்பியை நோக்கி ‘இப்படிப்பட்ட சிஷ்யர் இவ்விடத்தில் இருப்பதாகத் தெரியவில்லையே’ என்று சொல்லி நிற்க, ‘நம் கூரத்தாழ்வானை அனுப்பலாகாதோ?’ என்று நம்பி நியமித்தருள, அருகிலிருந்த ஆழ்வான் இதைக் கேட்டு ‘நம்பிகள் நம் ஸ்வரூபத்தினுண்மையை இங்ஙனேயறிந்து பல சிஷ்யர்களின் முன்னே இப்படி யருளிச்செய்யும்படியான பாக்கியம் பெற்றோமே! என்று பெருமகிழ்ச்சியடைந்து, நம்பிகளின் திருவுள்ளப்படியே பிரதக்ஷிணத்திற்குப் பின் சென்றார். “பலரடியார் முன்பருளிய” என்றவிடத்திற்கு இது மிகவும் பொருத்தமான இதிஹாஸம்.


    3557.   
    ஒன்றும் நில்லா கெடும் முற்றவும்*  தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்,*
    அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை*  அணி நெடும் தோள் புணர்ந்தான்,* 
    என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப*  உள்ளே இருக்கின்ற பிரான்,* 
    நின்ற அணி திருவாறன்விளை என்னும்*  நீள் நகரம் அதுவே.

        விளக்கம்  


    • எம்பெருமான்பக்கலில் சாபலமுடையாரை விளித்து உங்களுடைய ஸகல துக்கங்களும் தொலையும்படி திருவாறன் விளையை நெஞ்சாலே நினையுங்கோளென்கிறார். ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவுனை—பாபங்களை நாமேபோக்கிக் கொள்வதாக முயலுமளவில் சிறிது கிடக்க்ச் சிறிது போகும்; அங்ஙனன்றிக்கே ஸர்வசக்தியான அவன் தானே போக்குகையில் வாஸநையோடே போகக்கடவதாயிற்று. ஸ்ரீ விஷ்ணுதர்மத்தில் மேருமந்தரமாத்ரோபி ராசி: பாபஸ்ய கர்மண கேசவம் வைத்யமாஸாத்ய துர்வ்யாதிரிவ நச்யதி. என்று கூறினது இங்கே அநுஸந்தேயம். அமர்வென்று உருப்பிணிநங்கை யணிநெடுந்தோள் புணர்ந்த வரலாறு வருமாறு;-விதர்ப்பதேசத்தில் குண்டினமென்கிற பட்டணத்தில் பீஷ்மகனென்கிற அரசனுக்கு ருக்மன் முதலிய ஜந்து பிள்ளைகளும் ருக்மிணி யென்கிற ஒரு பெண்ணுமிருந்தனர். அந்த ருக்மிணியானவள் ஸாக்ஷித் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரம். அவளுக்கு யுக்தவயது வந்தவுடனே கண்ணபிரான் அங்குச் சென்று இப்பெண்ணை எனக்குத் தாரைவார்த்துக் கொடுங்களென்று கேட்க, ருக்மனென்பவன் அவளைச் கிசுபாலனுக்குக் கொடுக்க நினைத்துக் கண்ணணுக்குக் கொடுக்கலாகாதென்று தகைந்துவிட்டு, சிலநாள் கழிந்தபின் அந்த ருக்மிணியின் கலியாணத்திற்காக ஸ்வயம்வரம் கோடித்து ஸகலதேசத்தரசர்களையுல் வரவழைத்திட்டனன். இதனிடையில் ருக்மிணி “அன்றிப் பின் மற்றொருவற் கென்னைப் பேசலொட்டேள் மாலிருஞ்சோலையெம்மாய்ற்கல்லால்” என்ற துணிவையுடையளாகையால் தன்னை எவ்வகையினுலாகிலும் மணந்து செல்லும்படி கண்ணபிரானிடத்து ஓரந்தணனைத் தூதுவிட்டிருந்தாள். கண்ணபிரானும் அங்ஙனமே பலராமன் முதலியோரைக் கூட்டிக்கொண்டு அப்பட்டணத்திற் கெழுந்தருளிக் கல்யாண முஹீர்த்தினத்திற்கு முதனாள் அந்த ருக்மிணியைத்தான் ப்ரகாசமாக வெடுத்துத் தேரிலேற்றிக்கொண்டு ஊர்நோக்கிப் புறப்படப்புக, சிசுபாலன் முதலிய சில அரசர்கள் கண்ணனை யெதிர்த்துப் போர் செய்யமுயல, பலராமனும் தானுமாக அவர்களை வலியடக்கி வென்று ஓட்டிவிட, பின்பு (ருக்மிணியின் தமையனான) ருக்மன் மிகவும் வெகுண்டு ஆக்ரஹப்பட்டுக் கண்ணனை முடிப்பதாக ஓங்கிவர, அவனைக் கண்ணபிரான் ருக்மிணியின் பிரார்த்தனையின்படி உயிர்க்கொலை செய்யாமல் அவனது மீசையையும் குடுமியையும் சிரைத்துப் பங்கப்படுத்தினன். சேலேந பத்த்வா தமஸாதுகாரிணம் ஸச்மச்ருகேசம் ப்ரவபந் ச்யரூபயத் என்பது ஸ்ரீபாகவதம். இங்ஙனே விரோதிகளைத் தொலைத்துப்பிறகு ருக்மிணிப்பிராட்டியைத் திருமணம் புணர்ந்தானாயிற்று.


    3558.   
    நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள் சூழ்*  திருவாறன்விளை,* 
    நீள் நகரத்து உறைகின்ற பிரான்*  நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்* 
    வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய*  வெம் போர்கள் செய்து.,* 
    வாணனை ஆயிரம் தோள் துணித்தான்*  சரண் அன்றி மற்று ஒன்று இலமே. 

        விளக்கம்  


    • திருவாறன் விளையென்கிற திருப்பதியே தமக்கு ப்ராப்யமென்றும் அங்கு உறையும் எம்பெருமானே அதற்கு உபாயபூதனென்றும் தம்முடைய ஸித்தாந்தத்தை வெளியிடுகிறார் இப்பாட்டில். இத்திருப்பதியின் சுவையை யறியாதார்க்கன்றோ பரமபதம் ப்ராப்யமாவது; இதன் சுவையறிந்தார்க்குப் பரமபதம் ஒரு பொருளாகத் தோன்றுமோ? இத்தலமேயன்றே பரமபதமாவது. எம்பெருமானுக்குங்கூட ப்ராப்யபூமி இதுவான பின்பு இவ்வர்த்தத்தில் ஸம்சயமுண்டோ? விரோதிகளைப்போக்கி இத்தலத்தில் வாஸத்தை யளிப்பதற்கு உபாயபூதன் அப்பெருமானேயாவன். அன்றி மற்றொன்றிலமே என்றவிடத்து ஈடு—“இங்ஙனல்லது ப்ராப்ய ப்ராபகங்கள் மாறாடக்கடவோமல்லோம்” என்று. என்பெருமானை பராப்யனாகக் கொண்டு அவனைப் பெறுதற்கு உபாயமாக இத்திருப்பதியைக்கொள்வர் சிலர்; அது தகுதியற்றதென்று ஆழ்வார் தம்முடைய அத்யவஸாயத்தை வெளியிட்டருளினாராயிற்று.


    3559.   
    அன்றி மற்று ஒன்று இலம் நின்சரணே! என்று*  அகல் இரும் பொய்கையின்வாய்,* 
    நின்று தன் நீள் கழல் ஏத்திய*  ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான்,* 
    சென்று அங்கு இனிது உறைகின்ற*  செழும் பொழில் சூழ் திருவாறன்விளை,* 
    ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?*  தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே.

        விளக்கம்  


    • திருவாறன்விளையிலே புகவே நம்முடைய ஸகல துக்கங்களும் தொலையுமென்கிறார். கஜேந்திராழ்வானுடைய துயரைக் தர்ந்தவன் அங்ஙனமே நம்போல் வாருடைய துயரையும் தீர்க்கத் திருவாறன்விளையிலே வந்து நிதான நிதி பண்ணயிராநின்றான்; அங்குச் சென்று கிட்டி நாம் வலஞ்செய்ய்க்கூடுமோ’ கூடுமாகி கொடிய பாவங்களெல்லாம் நம்முள்ளத்தில் பொருத்த மற்றவையாகிப் பாறிப்பறத்தொழியும் என்றாராயிற்று. பொய்கையில் முதலையிலகப்பட்டு கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹே ஆகர்ஷதே ஜலே என்னும்படி முதலே நீருகிழுக்க, தான் தரைக்கிழுக்க, இப்பயாகப் பல வருஷங்கள் ஸ்வப்ரவ்ருத்தியாலே உய்யப் பார்த்த கஜேந்திராழ்வான் ‘இந்த ஸ்வப்ரவ்ருத்தியானது பகவத்ப்ரவ்ருத்திக்க விரோதியாய் நின்றது; இதற்கு நிவ்ருத்தியுண்டானால்லது அவனருள் பெருகாது’ என்று துணிந்து “நின்சரணேயன்றி மற்றொன்றிலம்” என்று அத்யவஸாயங்கொண்டு எம்பெருமானது திருவடிகளை யேத்தினமை முன்னடிகளிற் கூறப்பட்டது. ஆனையின் நெஞ்சிடர்தீர்த்த பிரான் - ஆனைக்கு இடராவது, உயிர் தொலைகிறதே யென்கிற இடரன்று; வெகு சிரமப்பட்டுப் பறித்த செவ்விப்பூவைத் சிறுகளிலே ஸமர்ப்பித்தப்பெற தொழிகிறோமோ! என்று உண்டான எம்பெருமானுக்கு என்ன அவத்யம் விளைகிறதோ! என்று தோன்றும் வுமாம்; அதாவது, பரமபக்தனான கஜேந்திராழ்வானைக் காத்தருளாவுமானம் ரக்ஷ்கனென்னத் தகுதியுடையனல்லன் என்று உலகத்தார் ஸத்தாந்கம் செய்து விடப் போகிறார்களே யென்று யானை இடர்ப்பட்டதென்கை.


    3560.   
    தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி*  தெளி விசும்பு ஏறலுற்றால்,* 
    நாவினுள்ளும் உள்ளத்துள்ளும்*  அமைந்த தொழிலினுள்ளும் நவின்று,* 
    யாவரும் வந்து வணங்கும் பொழில்*  திருவாறன்விளை அதனை,* 
    மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்*  என்னும் என் சிந்தனையே. 

        விளக்கம்  


    • திருவாறமவிளையை யநுபவிக்க ப்ரதப்தமாகும்போது ஸ்ரீ வைகுண்டம் கிடைப்பதானைலும் தம்முடைய திருவுள்ளம் அதனைப் பொருள்படுத்தாகென்று கூறும் முகத்தால் இத்திருப்பதியில் தமக்குள்ள ஆதராதிசயத்தை வெளியிட்டருளுகிறார் பாவங்களெல்லாம் தொலைந்து பரமபதத்திலேறப் பெறுகையாகிற ஒரு ஸமய விசேஷம் வந்து கிட்டினைலும் என்னெஞ்சானது அதில் ருசியற்று, பரமபோக்யமான திறவாறமவிளையே கிட்டித் தொழ நேருமோ வென்று பாரியா நிற்கும் என்றராயிற்று.


    3561.   
    சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத்தன்மை*  தேவபிரான் அறியும்,* 
    சிந்தையினால் செய்வ தான் அறியாதன*  மாயங்கள் ஒன்றும் இல்லை,* 
    சிந்தையினால் சொல்லினால் செய்கையால்*  நிலத்தேவர் குழுவணங்கும்,* 
    சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை*  தீர்த்தனுக்கு அற்ற பின்னே.     

        விளக்கம்  


    • ஆழ்வீர்! இப்போது நீர் திருவாறன்விளையிலே ப்ராவண்யம் முற்றியிருந்தீராகிலும், பலகாலும் பரமபதமென்று வாய்வெருவிக்கிடந்தீராதலால் எம்பெருமான் அதையே கொள்ளுமென்று நிர்ப்பந்தித்துக் கொடுத்கானானாகில் என் செய்வீரென்று சிலர் கேட்பதாகக் கொண்டு அதற்கு உத்தரமுரைக்கிறார். இப்பாட்டில் அவன் புருஷார்த்தப்ரதன் என்று ப்ரஸித்தனல்லனோ. புருஷன் அர்த்தித்ததை யன்றோ அவன் கொடுத்தருள்வன். எனது ப்ரஸித்தனல்லனோ. புருஷன் அர்த்தித்தைறையும் கணிசியாதிருக்கும்படியை அவன் அறிய அசக்தனல்லனே; அறிந்துவைத்து எங்ஙனே மற்றொன்றுதன்னைக் கொடுப்பவனே என்கிறார். “மற்றென்கிறது பரமபதத்தின் பேர் சொல்லுகையுங்கூட அஸஹயமான படி.” என்ற ஈடு காண்க.


    3562.   
    தீர்த்தனுக்கு அற்றபின்*  மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி*  தீர்த்தனுக்கே 
    தீர்த்த மனத்தனன் ஆகி*  செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 
    தீர்த்தங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் வல்லார்களைத்,*  தேவர் வைகல் 
    தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்*  தம் தேவியர்க்கே. (2)   

        விளக்கம்  


    • இத்திருவாய்மொழியை ஒதுமவர்கள் நித்யஸூரிகள் போரவும் கௌரவிப்பர்களென்று அதனையே பலனாகக் கூறித்தலைக்கட்டுகிறார் ஆயிரம் பாசுரங்களும் ஆயிரம் தீர்த்தங்களாயிற்று. இந்தப் பதிகத்தை அப்யஸிக்கவல்லார்களை திருவடி திருவனநதாழ்வான் ஸேனைமுதலியார் தொடக்கமான நித்யஸுரிகள் ‘இவர்கள் பரம மவத்திரர்கள் என்று ஆதரித்துக் கொண்டு போந்து, தங்கள் மஹரிஷிகளை சொல்லிக களிப்பார்கள் என்றராயிற்று. திருவடியின் தேவிகள் ருத்ராஸூகீர்த்திகள்; ஸேனை முதரலிகளின் தேவிகள் ஸூத்ரவதி என்றிப்படி ப்ரஸிக்தமன்றோ; அவர்களைப் இங்குத் தம் தேவியா என்கிறது.