- முகப்பு
- திவ்ய தேசம்
- திரு எவ்வுள்
திரு எவ்வுள்
இதன் திருத்தமான பெயர் திருவெவ்வுளூர் ( = திருஎவ்வுளூர் = திரு எவ்வுள் ஊர்) ஆகும். இதன் உண்மையான பழைய பெயர் வெறுமனே எவ்வுள் என்பதேயாகும். அப்படியேதான் ஆழ்வார் பாசுரங்களில் பாடுவதைக் காணலாம். இவ்வூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும்.[4][5] உள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரிலே காணப்படும். வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகிய இந்த எவ்வுள் என்னும் ஊரை அப்படியே திருமங்கையாழ்வாரும் திருமழிசையாழ்வாரும் பாடியுள்ளனர். பிறகு நாளடைவில் திருஎவ்வுள் என்றும், திருஎவ்வுளூர், திருவெவ்வுளூர் என்றும் அழைக்கப்பெற்ற அவ்வூர், இக்காலத்தில் திருவள்ளூர் எனச் சிதைந்து வழங்குகின்றது.
அமைவிடம்
ஸ்ரீ வீர ராகவ சுவாமி கோவில் ,
திருவள்ளூர் -602 001.,
தாயார் : ஸ்ரீ கனக வல்லி (வசுமதி)
மூலவர் : வைத்ய வீர ராகவப் பெருமாள்
உட்சவர்: --
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : சென்னை
கடவுளர்கள்: வைத்ய வீர ராகவர் ,வசுமதி
திவ்யதேச பாசுரங்கள்
-
1058.
முன்னிரண்டடிகளால் ஸ்ரீராமாவதார வ்ருத்தாந்தத்தையும், பின்னிரண்டடிகளால் ஸ்ரீக்ருஷ்ணாவதார வ்ருத்தாந்தத்தையும் அநுஸந்தித்து, இப்படி ராமகிருஷ்ணாதி அவதாரங்கள் செய்தருளின பெருமான்றானே திருவெவ்வுளூரிலே வந்து சாய்ந்தருளா நின்றானென்கிறார். காஷாயம் என்ற வடசொல் காசையெனத் திரிந்தது. தானவன்-ஆஸூரப்ரகிருதி.
பொய்இலாத பொன்முடிகள் = தலைகட்குப் பொய்யில்லா மையாவது -தனது மாயச்செயல் வல்லமைக்கிணங்க மாயாரூபமான தலைகளைக் காட்டிவிட்டு மெய்யான தலைகளைக்கொண்டு தப்பிப்பிழைத்தா னென்கையன்றியே உண்மையான தலைகளுக்கே அறுப்புண்டானென்கை. திசைகளெங்குந்திரிந்து வெற்றிபெற்று வீராபிஷேகம் விஜயாபிஷேகம் என்று செய்து கொண்ட அபிஷேகங்களில் சிறிதும் பொய்யின்றியே உண்மையான ஏற்றமுடைய கிரீடங்கள் பத்தும் உருள என்னவுமாம்.
“ சக்ரவர்த்தி திருமகனார்க்கு எல்லா ஏற்றமுமுண்டேயாகிலும் ஆச்ரிதர்களுக்காகக் கழுத்திலே ஓலைகட்டித் தூதுபோன ஏற்றமில்லையே; அந்த ஏற்றம் கண்ணபிரானுக்கேயன்றோ வுள்ளது” என்றார்; அதை பட்டர் கேட்டருளி, “ ஓய், குணக்கடலாகிய இராமபிரானுக்குத் தூதுபோதல் அநிஷ்டமன்று காணும்; இக்ஷ்வாகு வம்சத்திலே ஸார்வ பௌமனாகப் பிறந்தானாகையாலே மஹாராஜன் கழுத்திலே ஓலையைக் கட்டித் தூதுபோக விடுவாரைக் கிடையாமையாலே இராமன் தூதுபோகப் பெற்றிலனத்தனை; அந்த அவதாரத்திலே திருவடி அங்குமிங்கும் போவது வருவதாய்க் கொண்டு தூதக்ருத்யஞ்செய்து வார்த்தை சொல்லித் திரிந்த ஏற்றத்தைக் கண்டு ‘நாமும் இப்படி ஆச்ரிதர்களுக்காகத் தூது போகப் பெற்றிலோமே’ என்று திருவுள்ளம் குறைபட்டு அக்குறை தீருகைக்காகவே பின்னை இழிகுலத்திலே வந்து பிறந்து தூதுசென்றான்; க்ஷத்ரியனென்று நிச்சயிக்கில் தூதுபோகவிட மாட்டார்களென்று அத்தை மறைத்து வளர்ந்தான் காணும்; அபிஷிக்த க்ஷத்ரிய குலத்திலே பிறந்தால் ‘தூதுபோ’ என்று ஏவ ஒருவர்க்கும் நா எழாதிறே” என்றருளிச் செய்தாராம். இதற்கு இப்பாசுரம் மூலமாயிருக்கும். “இன்னார் தூதனெனப்பட்டான்” என்னாமல் “இன்னார் தூதனென நின்றான்” என்கையாலே, பாண்டவ தூதனென்று பேர்பெற்ற பின்புதான் எமபெருமானுக்குத் தரிப்பு உண்டாயிற்றென்பது விளங்கும்.
அஞ்ஜலி பண்ணுமவர்கள் அதுக்கு அநுகூலமாகத் தாழ்ச்சி தோற்றச் சொல்லுவதொரு சப்தவிசேஷம் சோத்தம் என்பதாம்; ‘ஸ்தோத்ரம்’ என்ற வடசொல் சோத்த மெனச் சிதைந்து கிடக்கிறது என்பாருமுளர். ஆப்த: என்ற வடசொல் ஆத்தனெனத் திரிந்தது; நம்புதற்குரியவ னென்கை.
சாமியப்பன் = ‘ஸாமி’ என்ற வடசொல் சாமியென்று கிடக்கிறது. பகவத் கீதையில் “வேதாநாம் ஸாமவேதோஸ்மி” என்று “வேதங்களுக்குள்ளே நான் ஸாமவேதமாகிறேன்” என்றருளிச் செய்தமைக்கிணங்க, ஸாமவேத ப்ரதிபாத்யனான பகவான் என்கை. (பாகத்திருந்த இத்யாதி.) வண்டுகள் மதுபானம் பண்ணப்பெற்ற கொன்றை மாலையையும் கங்காதீர்த்தத்தையும் ஜடையிலே உடையனாய்த் திருமேனியின் ஏகதேசத்திலே உறைகின்ற சிவபெருமான் தனது தலையாலே சுமக்கின்ற திருவடிகளையுடைய எம்பெருமான் திருவெவ்வுளுரிலே திருக்கண் வளர்ந்தருளா நின்றான். சூழ்கழல் = உலகங்களையெல்லாம் சூழ்ந்த திருவடி; உலகளந்ததிருவடி.
“முனிவன்” என்றால் மநநம்பண்ணுகிறவன் என்கை; மநநம் பண்ணுகையாவது ஸங்கல்பம் செய்கை. “பன்மைப்படர் பொருளாதுமில் பாழ்நெடுங்காலத்து” என்கிறபடியே * ஒன்றுந்தேவுமுலகு முயிரும்மற்றும் யாதுமில்லாதவக்காலத்து பஹூ ஸ்யாம் ப்ரஜாயேய” என்று ஸ்ருஷ்டிக் குறுப்பாக ஸங்கல்பித்துக் கொண்டவனென்கை. மூர்த்தி மூவராகி = பிரமனுக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டிசெய்தும் தானான தன்மையிலே நின்று ரக்ஷணஞ்செய்தும், சிவனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸம்ஹாரத்தை நடத்தியும் போருகிறவனென்கை. வேதம் விரித்துரைத்த புனிதன் = வேதப் பொருள்களைத் தெளிய வெளியிடாநின்ற பகவத் கீதையை அருளிச்செய்த பவித்ரன். புனிதனென்றது - தனக்கொரு பிரயோஜநத்தைக் கணிசியாமல் பிறருடைய லாபத்தையே நோக்கிக் காரியம் செய்தலாகிற மனத்தூய்மையை யுடையவனென்றபடி. தான் சேயனொருவனாகிலும் தன்னடியார்க்கு இனியன் = “எவர்க்கும் சிந்தைக்கும் கோசரமல்லன்” என்றபடி மனத்தினால் நினைப்பதற்கும் எட்டாதவனாகிலும், தன்னையே நாளும் வணங்கித் தொழுகின்ற அந்தரங்க பக்தர்களுக்கு எளியனாயிருக்கையாகிற இனிமையுடையவன் என்றபடி.
பந்திருக்குமெல்விரலாள் என்றது - ஒருநாளும் பிரிந்து வருந்தாமல் நித்ய ஸம்ச்லேஷத்தாலே கையும் பந்துமாய்க் கொண்டிருப்பவ ளென்றபடி. மாதர்க்குரிய அடைமொழி இது.
விளக்கம்
1059.
விளக்கம்
1060.
விளக்கம்
1061.
விளக்கம்
1062.
விளக்கம்
1063.
விளக்கம்
1064.
விளக்கம்
1065.
விளக்கம்
1066.
விளக்கம்
1067.