திரு சாளக்ராமம் (முக்திநாத்)

முக்திநாத் (Muktinath), நேபாள நாட்டின், இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும். வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 105வது திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும். முக்திநாத்தில் பாயும் கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை, வைணவர்கள் நாரயாணனின் அம்சமாக கருதி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள். [1] முக்திநாத் இருப்பிடத்தை 51 சக்தி பீடங்களில் ஒன்றாக சாக்தர்கள் கருதுகின்றனர்.[2] திபெத்திய பௌத்தர்கள் முக்திநாத்தை நூறு புனித நீர் நிலைகள் எனப் போற்று வழிபடுகிறார்கள்.[3] தாந்திரீக திபெத்திய பௌத்தர்கள், முக்திநாத்தில் உள்ள டாகினி என்ற பெண் தெய்வத்தின் இருப்பிடமாக கருதுகின்றனர். [4]

அமைவிடம்

வேறு பெயர்(கள்): சாளக்கிராமம் அமைவிடம் நாடு: நேபாளம் மாவட்டம்: மஸ்டாங் மாவட்டம் அமைவு: தவளகிரி மண்டலம்,

தாயார் : ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார்
மூலவர் : ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தி
உட்சவர்: --
மண்டலம் : வட நாடு
இடம் : நேபாளம்
கடவுளர்கள்: ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தி, ஸ்ரீதேவி நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

  206.   
  பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்*  பல்வளையாள் என்மகள் இருப்ப*
  மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று*  இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்* 
  சாளக்கிராமம் உடைய நம்பி*  சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்* 
  ஆலைக் கரும்பின் மொழி அனைய*  அசோதை நங்காய்!  உன்மகனைக் கூவாய்  

      விளக்கம்  


  • கண்ணபிரான் தன்தாய் வியக்கும்படி சில செய்கைகளைச் செய்து அவற்றால் அவளை மகிழ்வித்து, மீண்டும் பண்டுபோலப் பிறரகங்களிற் புகுந்து தீம்புகளைச் செய்ய, ஓராய்ச்சி யசோதை பக்கலிலே வந்து தன் அகத்தில் அவன் செய்த தீம்புகளைச் சொல்லி முறைப்படுகின்றனள். மேலையகம் - யசோதையின் அகத்துக்கு மேலண்டைவீடு என்க. மேற்கு + அகம், மேலையகம்.


  988.   
  கலையும் கரியும் பரிமாவும்*  திரியும் கானம் கடந்துபோய்* 
  சிலையும் கணையும் துணையாகச்*  சென்றான் வென்றிச் செருக்களத்து* 
  மலை கொண்டு அலை நீர் அணை கட்டி*  மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன்* 
  தலை பத்து அறுத்து உகந்தான்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   

      விளக்கம்    989.   
  கடம் சூழ் கரியும் பரிமாவும்*  ஒலி மாத் தேரும் காலாளும்* 
  உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை*  பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்* 
  இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில்*  இமையோர் வணங்க மணம் கமழும்* 
  தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   

      விளக்கம்    990.   
  உலவு திரையும் குல வரையும்*  ஊழி முதலா எண் திக்கும்* 
  நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான்*  வென்றி விறல் ஆழி வலவன்* 
  வானோர் தம் பெருமான்* மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்* 
  சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  

      விளக்கம்    992.   
  அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற*  அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான்* 
  விளங்கு சுடர் ஆழி*  விண்ணோர் பெருமான் நண்ணார்முன்* 
  கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்*  கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத் தடுத்தான்*
  தடம் சூழ்ந்து அழகு ஆய*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!

      விளக்கம்    993.   
  தாய் ஆய் வந்த பேய் உயிரும்*  தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான்* 
  தூய வரி உருவின் குறளாய்ச் சென்று*  மாவலியை ஏயான் இரப்ப* 
  மூவடி மண் இன்றே தா என்று*  உலகு ஏழும் தாயான்*
  காயா மலர் வண்ணன்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  

      விளக்கம்    994.   
  ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்*  அரி ஆய் பரிய இரணியனை* 
  ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த*  ஒருவன் தானே இரு சுடர் ஆய்* 
  வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்*  மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்* 
  தான் ஆய் தானும் ஆனான் தன்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!

      விளக்கம்    995.   
  வெந்தார் என்பும் சுடு நீறும்*  மெய்யில் பூசி கையகத்து*
  ஓர் சந்து ஆர் தலைகொண்டு*  உலகு ஏழும் திரியும்*  பெரியோன் தான் சென்று*
  என் எந்தாய்! சாபம் தீர் என்ன*  இலங்கு அமுது நீர் திருமார்வில் தந்தான்*
  சந்து ஆர் பொழில் சூழ்ந்த*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!   

      விளக்கம்    996.   
  தொண்டு ஆம் இனமும் இமையோரும்*  துணை நூல் மார்வின் அந்தணரும்* 
  அண்டா எமக்கே அருளாய் என்று*  அணையும் கோயில் அருகு எல்லாம்* 
  வண்டு ஆர் பொழிலின் பழனத்து*  வயலின் அயலே கயல் பாயத்* 
  தண் தாமரைகள் முகம் அலர்த்தும்*  சாளக்கிராமம் அடை நெஞ்சே!  

      விளக்கம்    997.   
  தாரா ஆரும் வயல் சூழ்ந்த*  சாளக்கிராமத்து அடிகளை* 
  கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை* 
  ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார்*  அமரர் நல் நாட்டு அரசு ஆளப்* 
  பேர் ஆயிரமும் ஓதுமின்கள்*  அன்றி இவையே பிதற்றுமினே*

      விளக்கம்