திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்

பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது. இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது. இக்கோயில் முதலில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. அவையாவன நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர். இக் கோவில் சென்னை பழமையான கட்டமைப்புகளில் ஒன்றாகும். இக்கோவிலில் வேதவள்ளி தாயார், ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜ சுவாமி, நரசிம்ம, ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் வைகானச ஆகமத்தினையும், தென்கலையையும் பின்பற்றுகிறது. உடன் நரசிம்மர் மற்றும் கிருஷ்ணருக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. இக்கோவிலின் கோபுரங்களிலும், மண்டபத் தூண்களிலும் தென் இந்திய கட்டிடக் கலையை வலியுருத்தும் நிறைய சிற்ப வேலைபாடுகள் காணப்படுகின்றன.

அமைவிடம்

ஸ்ரீ வைகுண்டநாதர் கோவில் வைகுண்ட விண்ணகரம்,
திருநாங்கூர்-609 106. நாகப்பட்டினம் மாவட்டம். தொலைபேசி :+91 4312 432 246,
தொலைபேசி :+91 4364 275 478.,

தாயார் : ஸ்ரீ வைகுந்த வல்லி
மூலவர் : ஸ்ரீ வைகுந்த நாதன்
உட்சவர்: --
மண்டலம் : சோழ நாடு
இடம் : சீர்காழி
கடவுளர்கள்: ஸ்ரீ வைகுண்ட நாதபெருமாள்,ஸ்ரீ வைகுண்ட வல்லி


திவ்யதேச பாசுரங்கள்

    1228.   
    சலம் கொண்ட இரணியனது, அகல் மார்வம் கீண்டு*  தடங் கடலைக் கடைந்து, அமுதம் கொண்டு உகந்த காளை* 
    நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான்*  நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்*
    சலம் கொண்டு மலர் சொரியும், மல்லிகை ஒண் செருந்தி*  செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே 
    வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர்*  வைகுந்தவிண்ணகரம், வணங்கு மட நெஞ்சே! (2)

        விளக்கம்  


    • முதலடியில் ‘ஷனு’ என்னும் வடசொல் சலமெனத் திரிந்தது. மூன்றாம்மடியில் ஐலமென்பது சலமென்றாயிற்று. இச்சொல்லுக்கு தண்ணீரென்று பொருள் கொள்ளமால் சீற்ற பெரியதிருமொழி - முன்றாம்பத்தி கூதிரு.சலங்கொண்டவிரணியன் மென்று பொருள் கொண்டு, மல்லிகை செருந்தி சண்பகங்கள் ஒன்றோடென்று போரிடுவன போன்று மிகமிக மலர்சொரிகின்றமையைக் கூறுவதாக உரைப்பதுமொக்கும். வித்யார்த்திகள் ஒருவருக்கொருவர் ஸ்பர்த்தையோடு படித்துக் கல்வியில் தேர்ச்சியடைவது போலாம்.


    1229.   
    திண்ணியது ஓர் அரி உருவாய், திசை அனைத்தும் நடுங்க*  தேவரொடு தானவர்கள் திசைப்ப*
    இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து, உகிர் மடுத்த நாதன்*  நாள்தோறும் மகிழ்ந்து இனிது, மருவி உறை கோயில்* 
    எண் இல் மிகு பெருஞ் செல்வத்து, எழில் விளங்கு மறையும்*  ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர்* 
    மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர்*  வைகுந்தவிண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

        விளக்கம்  



    1230.   
    அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம்*  அமுது செய்த திருவயிற்றன், அரன்கொண்டு திரியும்*
    முண்டம்அது நிறைத்து, அவன்கண் சாபம்அது நீக்கும்*  முதல்வன்அவன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்*
    எண் திசையும் பெருஞ் செந்நெல், இளந்தெங்குகதலி*  இலைக்கொடி ஒண்குலைக்கமுகோடு, இசலிவளம் சொரிய* 
    வண்டுபல இசைபாட, மயில்ஆலும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

        விளக்கம்  



    1231.   
    கலைஇலங்கும் அகல்அல்குல், அரக்கர் குலக்கொடியைக்*  காதொடு மூக்குஉடன்அரிய, கதறி அவள்ஓடி* 
    தலையில் அங்கை வைத்து, மலைஇலங்கை புகச்செய்த*  தடந்தோளன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
    சிலைஇலங்கு மணிமாடத்து, உச்சிமிசைச்சூலம்*  செழுங்கொண்டல் அகடுஇரிய, சொரிந்த செழுமுத்தம்* 
    மலைஇலங்கு மாளிகைமேல், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!       

        விளக்கம்  


    • திருநாகூரில் செல்வச் சிறப்பை வருணிக்கிறார். பின்னடிகளில் மாட மாளிகைளின் முனையிலே பாதுகாப்புக் குறுப்பாகச் சூலங்கள் நாட்டப்படும்: (“ நீடுமாடத் தனிச்சூலம் போழ்கக் கொண்டல் துளிதூவ” (1593) என்பர் திருவழுந்தூர்ப் பதிகத்திலும்) அந்த சூலங்கள் மேக மண்டவத்தளவம் ஓங்கி விழுந்து அவை மேகங்களின் வயிறுகளைக் குத்திப் பிளக்க அவற்றினின்றும் முத்துக்கள் சிதறி விழுந்து மாளிகைகளிலெங்கும் மலிந்து கிடக்கின்றன.


    1232.   
    மின்அனைய நுண்மருங்குல், மெல்லியற்கா*  இலங்கை வேந்தன் முடிஒருபதும், தோள்இருபதும்போய்உதிர* 
    தன்நிகர் இல் சிலைவளைத்து அன்றுஇலங்கை பொடிசெய்த*  தடந்தோளன் மகிழ்ந்துஇனிது மருவிஉறைகோயில்,
    செந்நெலொடு செங்கமலம், சேல்கயல்கள் வாளை*  செங்கழுநீரொடு, மிடைந்துகழனி திகழ்ந்துஎங்கும்* 
    மன்னுபுகழ் வேதியர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

        விளக்கம்  



    1233.   
    பெண்மைமிகு, வடிவுகொடு வந்தவளைப்*  பெரியபேயினது, உருவுகொடுமாள உயிர்உண்டு* 
    திண்மைமிகு மருதொடு, நல்சகடம் இறுத்தருளும்*  தேவன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
    உண்மைமிகு மறையொடு நல்கலைகள், நிறை பொறைகள்*  உதவுகொடைஎன்று இவற்றின்ஒழிவுஇல்லாப்*  பெரிய 
    வண்மைமிகு மறையவர்கள், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

        விளக்கம்  


    • மூன்றாம்மடியில் உதவு கொடை” என்றதற்க்கும் நான்குமடியில் “வண்மை மிகு” என்றதற்கும் வாசி ஏதேனில் : யாசாகரிகளுக்கு தவம் பண்ணுகிறபடியைச் சொல்லு முன்நாம்மடி எம்பெருமானிடத்தில் ஆத்மஸர்பணம் பண்ணிபடியைச் சொல்வது நான்காமடி என்று வாசி காண்க.


    1234.   
    விளங்கனியை இளங்கன்று கொண்டு, உதிர எறிந்து*  வேல்நெடுங்கண் ஆய்ச்சியர்கள், வைத்ததயிர் வெண்ணெய்* 
    உளம்குளிர அமுதுசெய்து இவ்உலகுஉண்ட காளை*  உகந்துஇனிது நாள்தோறும், மருவிஉறைகோயில்*
    இளம்படி நல்கமுகு குலைத், தெங்குகொடி செந்நெல்*  ஈன்கரும்பு கண்வளரக், கால்தடவும் புனலால்* 
    வளம்கொண்ட பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே! 

        விளக்கம்  



    1235.   
    ஆறாத சினத்தின், மிகுநரகன் உரம்அழித்த*  அடல்ஆழித் தடக்கையன், அலர்மகட்கும் அரற்கும்* 
    கூறாகக் கொடுத்தருளும், திருஉடம்பன் இமையோர்*  குலமுதல்வன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
    மாறாத மலர்க்கமலம், செங்கழுநீர் ததும்பி*  மதுவெள்ளம் ஒழுக, வயல்உழவர் மடைஅடைப்ப* 
    மாறாத பெருஞ்செல்வம், வளரும்அணி நாங்கூர்*  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!   

        விளக்கம்  


    • “மாறாத பெருஞ் செல்வம் வளரும் என்ற விடத்திற்கு வியாக்கியானமருளாகியானமருளாநின்ற பெரிவாய்ச் சான்பிள்ளை- “அங்கே உடைந்தது கிடாய் இங்கே உடைந்தது கிடாய் ஸஹ்யப் பெருக்குக்கிடாய் என்று கூப்பிடுகிற ஆரவாரமேயாய்க் கிடக்குமாயிற்று” என்றளிச்செய்யுமழுகு காண்மின்.


    1236.   
    வங்கம்மலி தடங்கடலுள், வானவர்களோடு*  மாமுனிவர் பலர்கூடி, மாமலர்கள் தூவி* 
    எங்கள்தனி நாயகனே!, எமக்குஅருளாய் என்னும்*  ஈசன்அவன் மகிழ்ந்துஇனிது, மருவிஉறைகோயில்*
    செங்கயலும் வாளைகளும், செந்நெலிடைக் குதிப்ப*  சேல்உகளும் செழும்பணைசூழ், வீதிதொறும் மிடைந்து* 
    மங்குல் மதிஅகடுஉரிஞ்சும், மணிமாட நாங்கூர்  வைகுந்த விண்ணகரம், வணங்குமடநெஞ்சே!

        விளக்கம்  



    1237.   
    சங்குமலி தண்டுமுதல், சக்கரம் முன்ஏந்தும்*  தாமரைக்கண் நெடியபிரான், தான்அமரும் கோயில்* 
    வங்கம்மலி கடல்உலகில், மலிவுஎய்தும் நாங்கூர்*  வைகுந்த விண்ணகர்மேல், வண்டுஅறையும் பொழில்சூழ்*
    மங்கையர்தம் தலைவன் மருவலர்தம் உடல்துணிய*  வாள்வீசும் பரகாலன், கலிகன்றி சொன்ன* 
    சங்கம்மலி தமிழ்மாலை, பத்துஇவை வல்லார்கள்*  தரணியொடு விசும்புஆளும், தன்மை பெறுவாரே. (2)

        விளக்கம்