திருப் ப்ரிதி
திருப்பிரிதி என்பது என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[1] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் தனது தொடக்கப் பாடலாக இத்தலத்தையேப் பாடுகிறார். இத்தலம் எங்கு அமைந்துள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷி மடம் என்றும் கருதப்படுகிறது. [2] இந்த இடத்தில் தற்போது கோவில்களும், சிலைகளும் உள்ளது. இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிரிதியாகுமெனவும் கூறுவர். இவ்விரண்டும் அல்லாமல் இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு
அமைவிடம்
State உத்தராகண்டம்
District கமோலி,
தாயார் : ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்
மூலவர் : பரம புருஷன்
உட்சவர்: --
மண்டலம் : வட நாடு
இடம் : உத்தராகண்டம்
கடவுளர்கள்: பரம புருஷன்,ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்