ஸ்ரீவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும். வரலாறு இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது. திருமலைநாயக்கர் மற்றும் இராணிமங்கம்மாள் தங்கள் ஆட்சிகாலத்தில் இவ்வூர் கோயில்களில் பல திருப்பணிகளை செய்துள்ளனர்

அமைவிடம்

பெயர்: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாவட்டம்: விருதுநகர் அமைவு: திருவில்லிபுத்தூர்,

தாயார் : ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)
மூலவர் : ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)
உட்சவர்: --
மண்டலம் : பாண்டியநாடு
இடம் : விருதுநகர்
கடவுளர்கள்: வடபத்ரசாயீ ,ஆண்டாள்


திவ்யதேச பாசுரங்கள்

    133.   
    மின் அனைய நுண் இடையார்*  விரி குழல்மேல் நுழைந்த வண்டு* 
    இன் இசைக்கும் வில்லிபுத்தூர்*  இனிது அமர்ந்தாய்! உன்னைக் கண்டார்*
    என்ன நோன்பு நோற்றாள் கொலோ*  இவனைப் பெற்ற வயிறு உடையாள்* 
    என்னும் வார்த்தை எய்துவித்த*  இருடிகேசா! முலை உணாயே (2)

        விளக்கம்  


    • உரை:1

      (என்ன நோன்பித்யாதி) ரூபணசேஷ்டி தாதிகளாலே இப்படி லோகவிலக்ஷ்ணனாயுள்ள இப்பிள்ளையைப் பெற்றாளும் ஒருத்தியே! அவள்தான் பூர்வஜந்மத்தில் நோற்ற நோன்பு என்னோ! என்று என்னைப் பலரும் கொண்டாடும்படி பிறந்தவனே! என்று யசோதை கண்ணனை தன்வசப்படுத்தமைக்காகப் புகழ்ந்து கூறுகிறபடி. ஹ்ருஷீகேசன் - (ரூபகுணாதிகளாலே) ஸர்வேந்த்ரியங்களையும் கவருமவள்.

      உரை:2

      மின்னல் போன்ற நுட்பமான இடையையும் வண்டுகள் உட்கார்ந்து இனிய ரீங்காரம் செய்யும் பரந்த கூந்தலையும் உடைய பெண்கள் வாழும் ஸ்ரீவில்லிபுத்தூரிலே எழுந்தருளியியவனே உன்னை காண்பவர்கள் "இவனைப் பெற்றவள் என்ன நோன்பு நோற்றாளோ?" என்று புகழ்வதைக் கேட்கும்படி செய்த காதல் மகனே(இருடிகேசா), பால் அருந்தவா. என்கிறார்.


    549.   
    மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்*  வில்லிபுத்தூர் உறைவான் தன்* 
    பொன்னடி காண்பதோர் ஆசையினால்*   என் பொ ருகயற் கண்ணிணை துஞ்சா* 
    இன்னடிசிலோடு பாலமுதூட்டி*  எடுத்த என் கோலக்கிளியை* 
    உன்னொடு தோழமை கொள்வன் குயிலே!*  உலகளந்தான் வரக் கூவாய்*. (2)

        விளக்கம்  


    • பரமபதத்திலே நித்யஸூரிகளுக்கு காட்சிகொடுத்துக் கொண்டு இருக்கக் கடவனான எம்பெருமான் அவ்விருப்பை விட்டு என்னைப் போன்ற வஸ்துக்களைப் பார்த்துப்கொண்டு போது போக்துவதற்காகவன்றோ ஸ்ரீவில்லிபுத்தூரிரிலே எழுந்தருளினான்’ என்னுடைய நடைபோன்ற நடை படைத்த அன்னப்பறவைகள் நாற்புறமும் நிறைந்து விளையாடப்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரிரில் அவன் எழுந்தருளியிருந்து தன் கண்களின் பட்டினியை ஒருவாறு தீர்த்துக்கொண்டான்; அது போல என்கண்களின் பட்டினியும் தீரவேண்டாவோ? அவனுடைய கண்களானவை என்னை ஸாக்ஷாத்தாகப் பாராமல் என்னோடுஸஜாதீயங்களான வஸ்துக்களைப் பார்த்தாலுங்கூட பட்டினி தீரும்படியாயிருக்கின்றன; என்னுடைய கண்களோவென்றால் அப்படிக்கன்றி அவனுடைய திருவடிகளையே ஸாக்ஷாத்தாக ஸேவிக்கவேணுமென்று ஆவல்கொண்டு அந்த ஆவல் நிறைவேறப்பெறாமையினாலே ஒரு க்ஷணமும் துஞ்சுகின்றனவில்லையென்கிறாள்- முன்னடிகளில்.