திரு நாவாய்

தலபுராணம்: திருநாவாய் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இந்த தலம் நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நாவாய் தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்றழைக்கப்படுகிறது.[1][2] இறைவன் நவ முகுந்தன் என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில்[1] வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார்.[3] இறைவி: மலர்மங்கை நாச்சியார். விமானம் வேதவிமானம் என்ற வகையைச் சேர்ந்தது. இக்கோவிலில் மாமாங்கத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானாலும் 1921 இல் மாப்பிள்ளைக் கலகம் நடந்த போதும் இக்கோவில் தாக்குதலுக்கு உள்ளானது.இத்தலம் கஜேந்திரனால் வழிபடப்பட்ட தலமாகும்.திருமங்கையாழ்வாரால் 2 பாசுரங்களாலும், நம்மாழ்வாரால் 11 பாசுரங்களாலும் பாடல் பெற்ற தலமாகும்.

அமைவிடம்

பெயர்: திருநாவாய் நவமுகுந்தன் கோயில் அமைவிடம்: நாடு: இந்தியா மாநிலம்: கேரளா மாவட்டம்: மலப்புரம்,

தாயார் : ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார்
மூலவர் : நாவாய் முகுந்தன்
உட்சவர்: --
மண்டலம் : மலை நாடு
இடம் : திருச்சூர்
கடவுளர்கள்: நாவாய் முகுந்தன் ,ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

    1520.   
    தூ வாய புள் ஊர்ந்து வந்து*  துறை வேழம்* 
    மூவாமை நல்கி*  முதலை துணித்தானை* 
    தேவாதிதேவனை*  செங் கமலக் கண்ணானை*
    நாவாய் உளானை*  நறையூரில் கண்டேனே.    

        விளக்கம்  


    • (துஸவாய புள்) ‘தூ வாய’ என்றும், ‘தூ ஆய’ என்றும் பிரிக்கலாம். தூ ஆய வே தஸ்வரூபியாகையாலே ஸ்வத பரிசுத்தனான என்றபடி.


    3750.   
    அறுக்கும் வினையாயின*  ஆகத்து அவனை* 
    நிறுத்தும் மனத்துஒன்றிய*  சிந்தையினார்க்கு*
    வெறித்தண்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    குறுக்கும்வகை உண்டுகொலோ*  கொடியேற்கே?  (2)

        விளக்கம்  


    • திருநாவாய்த் திருப்பதி எனக்கு ஸமீபஸ்தாகைக்கு உபாயமுண்டோவென்கிறார் அறுக்கும் விளையாயின=வினை அறுக்கும் என்னாமல வினையாயின அறுக்கும் என்றது–விரோதியென்று பேர்பெற்றவை யடங்கலும் போக்கும் என்றபடி. ஸ்வரூப விரோதியென்றும் உபாய விரோயென்றும் இபேயவிரோதியென்றும் மூன்று விரோதிகள் திருமந்த் தார்த்த நிர்வாத்தில் தெரிவதுண்டே. இவ்வளவுயுமன்றே விரோதிகள்; இப்போதுள்ள தேஹத்தளவிலே முடியாமல் ப்ராரப்தசேஷமாய்க் கொண்டு அப்பாலும் செல்லக்கூடிய விரோதிகளுமுண்டே; ஆக எல்லாவன விரோதிகளையுமறுக்குமென்றபடி,. இப்படி வினைகளை நறுப்பது ஆர்க்குர் என்னில்; அவனை ஆகத்து நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு=ஹருதயத்திலே அவனை நிலைநிறுத்த வேணுமென்னும் அத்யவஸாயத்திலே ஒருமைப்பட்ட மநோகதத்தையுடையவர்களுக்கு. விரோதிகளைப் போக்குவது மாத்திரமன்றிக்கே பரம போக்யமுமானது என்கிறார் மூன்றாமடியினால். விளையைப் போக்காதே வளரச்செய்தாலும் விடவொண்ணாதபடி போக்யதை மிகுந்த திவ்யதேசம் திருநாவாய். குறுக்கும் வகையுண்டு கொலோ=திருநாவாய்ப் பதியை ஸமிபஸ்தமாம்படி செய்யுமுபாயமுண்டோ? என்று பொருள் கொள்ளலாமாயினும், திருநாவாய்ப்பதியானது ஸபிக்கும்படியான உபாயமுண்டோ வென்று பொருள் கொள்வது பொருந்தும். குறுகும் வகையென்பது குறுக்கும் வகையென்று தேச பாஷைக்குச் சேரக் கிடக்கிறது. எம்பெருமானார் மலைநாட்டுத் திருப்பதி யாத்திரையாக எழுந்தருளாநிற்கையில் திருநாவாய் ஸமீபத்திலே யெழுந்தருளும்போது எதிரே வந்து கொண்டிருந்த மலையாளர்களை நோக்கி 'திருநாவாய் எவ்வளவுதூரமுண்டு' என்று கேட்க, அவர்கள் 'குறுக்கும்' என்றார்களாம். [தமிழ்ப் பாஷையில் குறுகுமென்பது மலையாள பாஷையில் குறுக்குமென்று கிடக்கிறது. ஸமீபத்தில்தானுள்ளது–என்று பொருள்] எம்பெருமானார் அதுகேட்டு 'இப்பாஷையாலே அருளிச் செய்வதே ஆழ்வார்' என்று ஈடு பட்டாராம்.


    3751.   
    கொடிஏர்இடைக்*  கோகனகத்தவள் கேள்வன்* 
    வடிவேல் தடம்கண்*  மடப்பின்னை மணாளன்*
    நெடியான்உறை சோலைகள்சூழ்*  திருநாவாய்*  
    அடியேன் அணுகப்பெறும்நாள்*  எவைகொலோ!

        விளக்கம்  


    • பெரிய பிராட்டியாரோடும் நப்பின்னைப் பிராட்டியாரோடுங் கூட அவன் எழுந்தருளியிருக்கிற திருநாவாயிலே போய்ப்புகுவது என்றைக்கோ வென்கிறார். கொடி போன்றழகிய இடையை யுடையளாய், தாமரைப் பூவிற் பரிமளம் உபாதானமாகப் பிறந்தவனான பிராட்டிக்கு வல்லபன்; கூரிய வேல் போன்றழகிய கண்ணையுடையளான நப்பிள்ளைப் பிராட்டிக்கு மணவாளன். இவ்விரண்டு விசேஷணங்களின் கருத்து–புருஷகாரம் செய்து சேர்ப்பிக்கவல்லவர்கள் அருகேயிருக்கச் செய்தேயும் நான் இழக்கலாமோ என்பதாம்.


    3752.   
    எவைகொல் அணுகப் பெறும்நாள்?'*  என்று எப்போதும்* 
    கவையில் மனம்இன்றி*  கண்ணீர்கள் கலுழ்வன்* 
    நவைஇல் திருநாரணன்சேர்*  திருநாவாய்*  
    அவையுள் புகலாவதுஓர்*  நாள் அறியேனே

        விளக்கம்  


    • திருநாவாயில் மஹா கோஷ்டியிலே சென்று சேர்ந்து அநுபவிக்கும் நாள் எதுவோ? அறிகிறிலேன் என்று அலமருகின்றார். நான் வந்து கிட்டப்பெறும் நாள் எதுவோ வென்று இதையே எப்போதுஞ் சொல்லிக் கண்ணீர் சோரவிருக்கின்றேன். துர்லபத்வம் முதலான தோஷங்களின்றிக்கே திருநாவாயிலே வந்து ஸீலப்னான ஸ்ரீமந் நாராயணன் அங்குப் பெரிய திருவோலக்கமாக இருக்க அத்திரளிலேசென்று கூடப்பெறாமலிக்க என்னாலாகுமோ? அடியார்கள் குழாங்களை யுடன் கூடுவதென்று கொலோ என்று ஆசைப்பட்ட நான் அத்திரளிலே சென்று கூடப் பெறாதிருப்பது தருமோ? என்றாராயிற்று. (கவையில் மனமின்றி) கவையிலேயோன மன மின்றிக்கே–இருதலைப்பட்ட நெஞ்சின்றிக்கே யென்றபடி. ஏகாதரசித்தனாய் கொண்டு என்பது தாற்பரியம். இரட்டைப்பட்டிருப்பதற்குச் சுவை யென்று பெயர்; "சுவை நாவரவினனைப் பள்ளியின்மேல்" என்றார் திருமங்கையாழ்வாரும். கலுழ்வன்–வெள்ளமிட நிற்பேன் என்றபடி.


    3753.   
    நாளேல் அறியேன்*  எனக்குஉள்ளன*  நானும் 
    மீளா அடிமைப்*  பணி செய்யப் புகுந்தேன்*
    நீள்ஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    வாள்ஏய் தடம்கண்*  மடப்பின்னை மணாளா!

        விளக்கம்  


    • ஆத்மாவுள்ளவரையில் கைங்கரியம் பண்ணும்படி விஷயீகரிக்கப்பெற்ற நான் திருநாவாயில் நம்பின்னைப் பிராட்டியோடே கூடவிருக்கிற இருப்பிலே அடிமை செய்ப்பெறும் நாள் என்றோ! அறிகிலேன் என்கிறார். நாளேலயியே னெனக்குள்ளன=நாள் பிநிந்து துக்கப்பட வேண்டிய நாள் இன்னுமெத்தனை நாளுண்டென்று அறிகின்றிலேன் என்றும், அனுபவிக்கப் பெறும் நாள் என்னைக்கென்று அறிகின்றிலேன் என்றும் இரண்டு வகையும் பொருள் கொள்ளலாம். நானும் மீளாவடிமைப் பணி செய்யப் புகுந்தேன்=நித்ய ஸுரிகள் பண்ணும் யாவதாத்மபாவியான கைங்கரித்திலேயன்றோ நானும் அந்வயித்திருப்பது. நீளார் மலர்ச்சோலைகள் சூழ் திருநாவாய்= கைங்கரியம் பண்ணுகைக்குப் புஷ்பம் முதலிய உபகரணங்களினால் குறையொன்று மின்றிக்கே யிருக்கிற திவ்ய தேச மென்றபடி. இத்திருவாய்மொழியில் பிராட்டி ஸம்பந்தம் அடிக்கடி அநுஸந்திக்கப்படுகிறது; அதற்குக் காரணமருளிச் செய்கிறார் நம்பிள்ளை–"தேசாந்தரம்போன ப்ரஜை ஊர் அணித்தானவாறே தாய்மாரைப் பலகால் நினைக்குமாபோலே, ப்ராப்யதேசம் அணித்தானவாறே திரளவும் தனித்தனியும் பிராட்டிமாரை யநுஸந்திக்கிறார்" என்று.


    3754.   
    மணாளன் மலர்மங்கைக்கும்*  மண் மடந்தைக்கும்* 
    கண்ணாளன் உலகத்துஉயிர்*  தேவர்கட்குஎல்லாம்*
    விண்ணாளன் விரும்பிஉறையும்*  திருநாவாய்* 
    கண்ஆரக் களிக்கின்றது*  இங்குஎன்று கொல்கண்டே?  

        விளக்கம்  


    • என் கண்களின் விடாய்தீரத் திருநாவாயைக் கண்டு அநுபவிக்கப்பெறுவது என்றைக்கோ வென்கிறார். மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும் மணாளன்–பெரிய பிராட்டியார்க்கும் பூமிப் பிராட்டியாருக்கும் வல்லபனானாவன். ஒருத்தி புருஷகாரத்திலே ஊன்றியிருப்பள் மற்றொருத்தி பொறுமைதானே வடிவெடுத்தவளாயிருப்பன். இப்படிப்பட்ட இருவரும் அருகேயிருக்க, நான் இழக்கத் தகுமோ வென்றபடி. உலகத்துயிர் தேவர்கட்கெல்லாம் கண்ணாளன–மண்ணுலகிலுள்ள மனிசர்களென்ன, விண்ணுலகிலுள்ள தேவர்களென்ன ஆகிய அனைவர்க்கும் நிர்வாஹகன். உபயவிபூதி நாதனானவனுக்கு நாளொருவான் புறம்புபட்டேனோவென்பது கருத்து. விணணுளன் விரும்பிறையும் திருநாவாய்=பிராட்டிமாரும் தானும் தனக்குத் தகுதியான பரமபதத்தில் திவ்ய பர்யங்கத்திலேயிருந்து நித்ய *ரிகளை நிர்வஹிக்கிறவன் பெறாப்பேறாக ஆதரித்து வர்த்திக்கிற திவ்ய தேசமன்றோ திருநாவாய்; இதனைக் காண்கையிலே விடாய்ப்பட்ட கண்கள் வயிறு நிறையக் கண்டு களிப்பது எந்நாளோ? என்கிறார்.


    3755.   
    கண்டே களிக்கின்றது*  இங்குஎன்று கொல்கண்கள்* 
    தொண்டேஉனக்காய் ஒழிந்தேன்*  துரிசுஇன்றி*
    வண்டுஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்*  
    கொண்டே உறைகின்ற*  எம்கோவலர்கோவே!

        விளக்கம்  


    • எனக்காகத் திருநாவாயைக் கோயிலாகக் கொண்டு உறைகின்ற கோவலர்கோவே! உன்பக்கலிலே அநந்ய ப்ரயோஜனமான அன்மையுடையேனான வென்னுடைய கண்களின் விடாய் சொல்லத் தரமன்று; என்பசி தீராவிட்டாலும் என் கண்களின் பசி தீர்ந்தால் போதுமேயென்கிறார் ; உலகில் யாசிப்பவர்களே 'என் பசி கிடக்கட்டும்; என் குழந்தை படுகிறபாடு பாருங்கள் ; அதன் பசியை முன்னம் தீர்த்தால் போதும்' என்பர்கேள ; அது போலச் சொல்லுகிறபடி. (துரிசின்றி உனக்கே தொண்டா யொழிந்தேன்) உள்ளே ஒரு எண்ணமும் வெளியே மற்றோரெண்ணமுமாக இருக்கு மிருப்பு துரிசு எனப்படும் ; அதாவது க்ருத்திமம் ; அஃதின்றிக்கே உனக்கே தொண்டா யொழிந்தேனென்கிறார்.


    3756.   
    கோவாகிய*  மாவலியை நிலம்கொண்டாய்* 
    தேவாசுரம் செற்றவனே!*  திருமாலே*
    நாவாய்உறைகின்ற*  என்நாரணநம்பீ* 
    'ஆஆ அடியான்*  இவன் என்று அருளாயே. 

        விளக்கம்  


    • திருநாவாயிலே நித்யவாஸம் பண்ணியருளாநின்ற தேவரீர் அடியேனுடைய அநந்யகதித்வத்தைக் கண்டு அருள் செய்தருளவேணுமென்கிறார். (கோவாகியமாவலிமை நிலங்கொண்டாய்) ஸர்வேச்வரன் இந்ததிரனை த்ரிலோகாதிபதியாக்கி வைத்தான்; அவனைத் தள்ளி அந்தப் பதவியைத் தான் கொள்ளை கொண்டு 'நானே அரசு' என்றிருந்தானாயிற்று மாவலி. அவன்றான் ஔதார்யமென்று ஒரு மஹாகுணமுடையவனாயிருந்த படியாலே'' அதுவே பற்றாசாகத் தான் இரப்பாளனாய் நின்று வெகு சாதுரியமாகக் காரியத்தை முடித்தானாயிற்று எம்பெருமான் (தேவாசுரஞ் செற்றவனே) தேவாஸீரயுத்தத்திலே பரஸ்பரவதமேயாய்ச் செல்லா நிற்க, அநுகூலரான தேவர்களுக்காக அஸுரரை யழியச் செய்வதவனே! என்றபடி, (திருமாலே!) விரோதிகளை யழித்து அடியார்களைக் காத்தருள்வதற்கு ஹேது பிராட்டியோ டுண்டான சேர்த்தியென்று தெரிவித்தவாறு. இப்படிப்பட்ட திருக்குணங்கள் திருநாவாயிலே ப்ரத்யக்ஷிக்கலாம்படி யிருக்கின்றமையைக் காட்டுகின்றது மூன்றாமடி,. என்னுடைய அநந்ய கதித்வத்தையே நோக்கி க்ருமை செய்தருளவேணுமென்கிறார் ஈற்றடியால்.


    3757.   
    அருளாது ஒழிவாய்*  அருள்செய்து*  அடியேனைப் 
    பொருளாக்கி*  உன்பொன்அடிக்கீழ்ப் புகவைப்பாய்*
    மருளேஇன்றி*  உன்னை என்நெஞ்சத்துஇருத்தும்* 
    தெருளேதரு*  தென்திருநாவாய் என்தேவே!  

        விளக்கம்  


    • கீழ்ப்பாட்டில் "ஆவாவடியானிவனென்றருளாயே" என்றவர், இப்பாட்டில், அருளினாலுமருள்க ; அருளாதொழியினுமொழிக என்கிறார். இப்பாட்டின் ஈற்றடியை அந்வயிப்பதில் யோஜநாபேதமுண்டு; தெருளேதரு என்பதை திருநாவாய்த தேவனுக்கு விசேஷணமாக்கி யுரைப்பர் (ஆறாயிரப்படியில்) பள்ளான். தருஸ்ரீதந்தருவேணும் என்று வினை முற்றாகக் கொண்டு உரைத்தனர் மற்றையுரே யாசிரியர்கள். தரு என்பதற்கு, தா என்பதன் பொருள்க கொள்ளுமிடத்து, தருகவென்பதன் நடைக்குறையாகக் கொள்ள வடுக்கும். ஆறாயிரப்படியருளிச்செயல்–”அஜ்ஞாநகந்தமில்லாத தொரு படி உன்னுடைய ஸ்வரூபரபகுணபிபூதி விஷய திவ்யஜ்ஞானத்தை” உன் க்ருமையாய எனக்குத் தந்தருளி நீ இன்னமும் உன் க்ருயையேல 'நம்மடியாளிவன்' என்று விஷயீகரித்தருளி அடியேனை உன் பொன்னடிக்கீழ்ப் புகவைத்தருளுவாய், வைத்தருளாதொழிவாய்; திருவுள்ளமானபடி செய்தருள் என்று கொண்டு எம்பெருமானை இன்னதாகிறார் ;" என்று "அருளவுமாம், தவிரவுமாம்; அஜ்ஞாநகந்த மில்லாபடி உன்னை என்னெஞ்சிலே யிருத்தும்படி தெளிவைத் தரவேணுமென்கிறார்" என்று மற்றுள்ள வாசிரியர்கள் பணிக்கும்படி. தெருளைப் பெற்ற பீரான ஆழ்வார் அதைத் தந்தருள வேணுமென்று பிரார்த்திப்பது– பெற்றவனுக்கு விச்சேதமில்லாதபடி அபிவிருத்தியைச் செய்தருளவேணுமென்று பிரார்த்திக்கின்றபடி.


    3758.   
    தேவர் முனிவர்க்குஎன்றும்*  காண்டற்குஅரியன்* 
    மூவர் முதல்வன்*  ஒருமூவுலகுஆளி*
    தேவன் விரும்பிஉறையும்*  திருநாவாய்* 
    யாவர் அணுகப்பெறுவார்*  இனிஅந்தோ!

        விளக்கம்  


    • தாம் இப்படிச் சொல்லச் செய்தேயும் ஒரு விசேஷ கடாக்ஷம் செய்தருளாமையாலே 'நான் இவ்வாசையோடே முடியா நின்றென். என்னுடைய அபிமதத்தைப் பெற்றுக்களிக்கப் போகிற பாக்யவான்கள் யாரோ?' என்கிறார். (தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன்) பிரமன் முதலிய தேவர்களுக்கும், ஸநக ஸநந்தநாதிகளான யோகிகளுக்கும் கூட தாமாகக் காண நினைக்கில் காண வரியனாயிருக்குமவன். மூவர் முதல்வன்–அரி அயன் அரன் என்று சொல்லப்படுகிற மூவர்க்குள்ளே முதன்மை பெற்றிருப்பவன் என்றும், பிரமன் சிவனிந்திரன் என்றும் மூவர்க்கும் நிர்வாஹகன் என்று முரைப்பர். ஒரு மூவுலகாளி–மூவுலகங்களையும் தன் ஸங்கல்பத்தாலே நிர்வஹிக்குமவன். ஆக இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தேவன் ஆச்ரித ரக்ஷணத்திற்குப் பாங்கான தேசமிதுவென்று விரும்பிறையுமிடமான திருநாவாய்ப்தியை நானணுகபெறாதே முடியாநின்றேன். இனிப் பெறுவார் ஆரோ? திருநாவாயில் சென்று ஸேவிக்கவேணுமென்று ஆழ்வார்க்கு நினைவாகில் இதில் அருமையொன்றுமில்லையே; புறப்பட்டுச் சென்று ளேவிக்கத் தட்டென்? என்று சிலர் சங்கிக்க்கூடும். திருநாவாயை அணுகப் பெறவேணுமென்பதே உத்தேச்யமன்று; அவ்விடத்திதுறையும் பெருமானுக்கு அஸாதாரணமான திருநாடுதான் இங்கு உத்தேசம்.


    3759.   
    அந்தோ! அணுகப்பெறும்நாள்*  என்றுஎப்போதும்*  
    சிந்தை கலங்கித்*  திருமால் என்றுஅழைப்பன்*
    கொந்துஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    வந்தே உறைகின்ற*  எம்மா மணிவண்ணா!.

        விளக்கம்  


    • உன்னைக் காணப் பெறாமையாலே நெஞ்சழிந்து கூப்பிடா நின்றேன் காணென்கிறார். தொடங்கும்போதே அந்தோவென்கிறார்– சொல்லத் தொடங்கினது தலைக்கட்ட மாட்டாத பலஹானியாலே. "அணுகப் பெறுநாள் எவைகொல் " என்ன வேண்டியிருக்க அவ்வளவும் சொல்லமாட்டிற்றிலான்றோ. (எப்போதும்) ஒருகால் சொல்லத் தொடங்கி இளைத்தால் பின்னைத் தவிரலாமே, ஆசை வாளாவிருக்க வொட்டுகிற தில்லை. எப்போதும் இதுவே யாத்திரையானபடி. (சிந்தை கலங்கித் திருமாவென்றழைப்பன்)–அத்தலைக்குத் திருவுள்ள மில்லையாகில் நாம் அழைப்பதனால் என்னாகும்? என்கிற தெளிவின்றிக்கே சிந்தை கலங்கியிருக்கப் பெற்றவனாகையாலே திருமாலே யென்று கூப்பிடுகின்றேன். திருநாட்டிலே வந்து காணக் கடலவதான வடிவை இங்கே காட்டுவதாகக் கொண்டு திருநாவாயிலே வந்து நித்யவாஸம் பண்ணுமவனெ!


    3760.   
    வண்ணம் மணிமாட*  நல்நாவாய் உள்ளானைத்*  
    திண்ணம் மதிள்*  தென்குருகூர்ச் சடகோபன்* 
    பண்ணார் தமிழ்*  ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*  
    மண்ணாண்டு*  மணம்கமழ்வர் மல்லிகையே.   (2)

        விளக்கம்  


    • இத்திருவாய்மொழி வல்லார் ஐஹிக ஆமுஷ்மிக ஸகலபோகங்களையும் புஜிக்கப் பெறுவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். மண்ணாண்டு என்பதனால் ஐஹிகபோகம் புஜிக்கப் பெறுகை சொல்விற்று. மல்லிகை மணங்கமழ்வர் என்பதனால் ஆமுஷ்மிகபோகம் புஜிக்கப்பெறுகை எங்ஙனே சொல்லிற்றாகிறதென்னில்; மல்லிகை மணமென்று ஒரு பரிமளத்தை மாத்திரம் சொன்னபடியன்று; இது உபலக்ஷணமாய் ஸகல பரிமளங்களையும் சொன்னபடியாகி, வேதாந்தங்களிலே ஸர்வ கந்த* என்று ஸகல பரிமளங்களும் வடிவெடுத்தவனாகக்ச சொல்லப்படுகிற எம்பெருமானாகப் பெறுவர்–எம்பெருமானோடு ஸாம்பாந்நராவர் என்றபடியாம் *தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே யொக்க அருள் செய்வர் * என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் இங்கே நினைக்கத் தக்கது. "மல்லிகை மணங்கமழ்வர்" என்பதற்குப் பன்னீராயிரவுரைகாரர் "மல்லிகைபோலே பசுத்தமான யகஸ்ஸெளரப்யவிகாஸத்தை யுடையவராவர்" என்றுரைத்தார். அவ்வுரை ஆறாயிரப்படி முதலிய வியாக்கியானங்களுக்குப் பொருந்தியதன்று.