தஞ்சைமாமணி கோயில்

கோவிந்த தாசர் என்று ஒரு மனிதர் . அவர் வரத ராஜப் பெருமாளிடம் சென்று ஒரே அழுகை மற்றும் பெரிய முறையீடு ! ” சுவாமி வரத ராஜப் பெருமாள் என்றாலே , வாய் விட்டு கூட இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்க வேண்டாம்னு சொன்னாங்களே .. மனசுல ஆசை பட்டாலே போதுமாம். உங்க முன்னால வந்து கூட கேட்கணும்னு இல்லை .. நீரே ஓடோடி வந்து அதை நிறை வேத்தி வைத்து விடுவீர்னு சொன்னாங்களே .. .. அப்படி இப்படி சொன்னதெல்லாம் பொய்யா .. நானும் தினசரி உங்க கிட்ட வந்து வேண்டிகிட்டே இருக்கேனே .. நான் ஒன்னும் பெரிய மகானோ அதுவோ இதுவோ இல்லை .. ஆனாலும் இப்படி ஒரு மாசமா வந்து உங்க முன்னாடி இப்படி அழுது வடியறேனே .. அதுக்காகவாவது எனக்கு கொஞ்சமாவது அனுக்ரகம் பண்ணக் கூடாதா .. இனிமே உங்களை வரத ராஜப் பெருமாள்னு கூப்பிடறதுக்கு பதில் , என்ன கூப்பிட்டும் வராத ராஜப் பெருமாள்னு சொல்றேன் நான் ” என்று விடாமால் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டார் .. கோவிந்த தாசர் இப்படி அழ தொடங்கியதும் பெருமாளின் நெஞ்சோடு இருக்கும் தாயாருக்கு மனசே தாங்கலியாம் .. என்ன அந்தக் குழந்தை இப்படித் தத்துக்கா பித்துக்கானு உங்களை பார்த்து ஏதேதோ சொல்லிட்டே போறது .. உங்களை அப்படி எல்லாம் பேருக்கு சொன்னால் கூட எனக்கு மனம் தாங்காது .. என் மனசு ரொம்ப கஷ்டப்படும் என்று சொல்ல, பொண்டாட்டி மனசு கஷ்டப்

அமைவிடம்

திரு தஞ்சைமாமணி கோயில் – ஸ்ரீ நீலமேக பெருமாள் கோவில். மாயவரம் .... தஞ்சைமாமணி கோயில்,
தஞ்சாவூர்,

தாயார் : ஸ்ரீ செங்கமல வல்லி
மூலவர் : நீலமேகப் பெருமாள்

மண்டலம் : சோழ நாடு
இடம் : தஞ்சாவூர்


திவ்யதேச பாசுரங்கள்

    953.   
    எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்*  எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்* 
    அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி*  அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்* 
    வம்பு உலாம் சோலை மா மதிள்*  தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி* 
    நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)      

        விளக்கம்  



    3255.   
    மாசு அறு சோதி*  என் செய்ய வாய் மணிக்குன்றத்தை* 
    ஆசு அறு சீலனை*  ஆதி மூர்த்தியை நாடியே* 
    பாசறவு எய்தி*  அறிவு இழந்து எனை நாளையம்?* 
    ஏசு அறும் ஊரவர் கவ்வை*  தோழீ என் செய்யுமே?*     

        விளக்கம்  


    • (மாசறுசோதி.) பராங்குச நாயகி மடலூர்வதாக எண்ணினபடியை அறிந்ததோழி அதனை விலக்கப்புகுந்து ‘ஊரார் பழிசொல்வர்காண்’ என்ன; அவனுடைய அழகு முதலியவற்றிலே அகப்பட்டுக் கலங்கின நான் ஊரார் பழியை லக்ஷியம் பண்ணும் நிலைமையிலே இலேன் என்கிறாள் தலைவி. முதலடியினால் எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற வடிவழகு பேசப்படுகிறது. “மடலெடுக்கை மாறு என்றிருக்கிறாள் தோழி; மடலெடாதொழிகை மாசு என்றிருக்கிறாளிவள். வ்யதிரேகத்தில் இப்படி. ஆற்றாமை விளையாததாகில் நாம் காண்கிற விஷயங்களேபாதியாமே- வடிவிலே யணைந்தவளாகையாலே முற்பட வடிவிலே மண்டுகிறாள்” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்க. வெறும் வடிவழகு மாத்திரத்தைக்கண்டு துடிக்கிரேனல்லேன்; அநவாயில் சில குணங்களையுங் கண்டு துடிக்கிறேன் காண் என்கிறாள்- ஆரறு சீலணை என்பதனால், ஆக என்றாலும் மாசு என்றாலும் குற்றம் என்பதே பொருள்; குற்றமற்ற சீலமானவது, கலக்கும்போது தன்பேறாகவே கலந்தபடி. பாசறவெய்தி = இதற்குப் பலவகையாகப் பொருள் கூறுவர். (1) பாசறவு என்று துக்கத்திற்குப் பெயர்; அதை எய்தி. (20) பாச அறவு - என்று பிரித்து, பாசு - பசுமைநிறமானது, அறவு- அழிந்துபோவது; ஸவவர்ணியமடைந்து என்றபடி. (3) பாசு என்று பாசமாய். (அதாவது பற்று) பந்துக்கள் பக்கல் பாசம் நீங்கி. (4) அற.