திரு வெள்ளியங்குடி

பழநிக்குக் காவடி எடுத்துச் சென்று வழிபட்ட பிறகு, தாண்டிக்குடி முருகப்பெருமானையும் வந்து தரிசித்தால்தான் விரதம் முழுமை பெறும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. திண்டுக்கல் மாவட்டத்தில், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபாலமுருகன் கோயில். திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில், சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். வத்தலகுண்டில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. போகர் முனிவருக்கு முருகப் பெருமான் காட்சி தந்து அருளியதுபோல, கற்பக மகா முனிவருக்கு கந்தக் கடவுள் காட்சி தந்தருளிய தலம் இது என்கிறார்கள்.

அமைவிடம்

போன்- 044 22632633 35 ஆண்டுகள் திருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி,
திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி திருவாலி: ,

தாயார் : ஸ்ரீ மரகத வல்லி
மூலவர் : கோலவல்வில்லி ராமன்
உட்சவர்: --
மண்டலம் : ஸ்ருங்கார சுந்தரன்
இடம் : சீர்காழி
கடவுளர்கள்: கோலவில்லி ராமன்,வஞ்சுலாவள்ளி


திவ்யதேச பாசுரங்கள்

    1338.   
    ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால்*  ஆல் இலை வளர்ந்த எம் பெருமான்* 
    பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து*  பெரு நிலம் அளந்தவன் கோயில்*
    காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும்*  எங்கும் ஆம் பொழில்களின் நடுவே* 
    வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்*  திருவெள்ளியங்குடி அதுவே. (2)  

        விளக்கம்  


    • ஐந்துலக்ஷங் குடிகள் நிறைந்த திருவாய்ப்பாடியிலே ‘என் வீட்டில் வெண்ணெய் போயிற்று, என் வீட்டில் நெய் போயிற்று’ என்றாற்போலே ஒவ்வொரு இடைச்சியும் கூவிக்கதறும்படி கவ்யங்களைக் களவாடி அமுதுசெய்தவனும், பிரளயங்கொள்ளாதபடி உலகங்களையெல்லாம் வயிற்றினுள்ளே அடக்கிவைத்து ஒரு சிற்றாலந்தளிரில் கண்வளர்ந்தவனும். தீயகருத்துடன் வந்த பூதனையை முலையுண்கிற வியாஜத்தாலே உயிர்முடித்தவனும், தவழ்நடையிலே யமளார்ஜுநங்களை முறித்துத்தள்ளினவனும், மஹாபலியாலே அபஹாரிக்கப்பட்டிருந்த பூமியை இரப்பாளனாய்ச்சென்று பெற்று அளந்துகொண்டவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம், திருவெள்ளியங்குடி. சுக்கிரன் தவம்புரிந்து பேறுபெற்ற தலமென்பதுபற்றி இத்தலத்திற்கு வெள்ளியங்குடியென்று திருநாமமாயிற்றென்பர்.


    1339.   
    ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு*  அரக்கர் தம் சிரங்களை உருட்டி* 
    கார்நிறை மேகம் கலந்தது ஓர் உருவக்*  கண்ணனார் கருதிய கோயில்*
    பூநிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி*  பொதும்பிடை வரி வண்டு மிண்டி* 
    தேன்இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்*  திருவெள்ளியங்குடி அதுவே.

        விளக்கம்  


    • வரிவண்டு மிண்டி அங்கு தேன் இரைத்து உண்டு – அழகிய வண்டுகள் நெருங்கியிருந்து அவ்விடத்தில் மதுவை ஆரவாரத்தோடே பருகி இன் இசை முரலும் - மதுரமான இசைகளைப்பாடா நிற்கப்பெற்ற திருவெள்ளியங்குடி அதுவே.


    1340.   
    கடு விடம் உடைய காளியன் தடத்தைக்*  கலக்கி முன் அலக்கழித்து* 
    அவன்தன் படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்*
    பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய்* 
    அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்*  திருவெள்ளியங்குடிஅதுவே. 

        விளக்கம்  


    • அடைபுடை=அடை – அடுத்திருக்கிற, புடை – பக்கங்களிலெல்லாம் என்று பொருளுரைக்கப்பட்டது. பெரியவாச்சான்பிள்ளை யருளிய வியாக்கியானத்தில் “ (அடைபுடைதழுவி) அஹோராத்ர மணைந்து ஆகாசத்திலே நின்று கோஷியா நிற்குமாய்த்து” என்று காணப்படுதலால் “அடைபுடை” என்பதற்கு ‘இரவும் பகலும்’ என்று பொருள் கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது; இச்சொல் இப்பொருளில் சில நாடுகளில் வழங்கப்படுவதாக இருந்ததுபோலும்.


    1342.   
    பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து*  பாரதம் கையெறிந்து*  ஒருகால் 
    தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த*  செங்கண்மால் சென்று உறை கோயில்*
    ஏர்நிரை வயலுள் வாளைகள் மறுகி*  எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி* 
    சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற*  திருவெள்ளியங்குடி அதுவே.    

        விளக்கம்  


    • பின்னடிகளின் கருத்து :- இத்தலத்து வயல்கள் எப்போதும் ஏர்கொண்டு உழப்படுவதால் ‘இப்படி அபாயங்களுக்குக் காரணமான இவ்விடம் நமக்கு வாஸயோக்யமல்ல’ என்று கருதின வாளைமீன்கள் நிர்ப்பயமாக வாழவேண்டிச் சிறந்த பொய்கைகளிலேசென்று சேர்கின்றனவாம். இதனால் எப்போதும் ஏருழும்படியான நிலவளம் சொன்னபடி. ஸம்ஸாரத்தில் வாழ்ச்சி ஆபத்துக்களுக்கு இடமென்று துணிந்து அதனைவிட்டு நித்யாநந்தமான பரமபதத்தில் வாஸத்தைக் கருதுகின்ற முமுக்ஷுக்களின்படியை இங்ஙனே யெடுத்துக்காட்டினரென்ப.


    1343.   
    காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உற*  கடல் அரக்கர் தம் சேனை* 
    கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த*  கோல வில் இராமன் தன் கோயில்*
    ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்*  ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி* 
    சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்*  திருவெள்ளியங்குடி அதுவே.

        விளக்கம்  


    • பூளைப்பூக்கள் என்று சில காட்டுப்பூக்களுண்டு; காற்றடித்தவாறே அவை பறந்து உருமாய்ந்து இன்னவிடம் போயினவென்று தெரியாதபடி போய்விடும்; அவ்விதமாகவே இலங்கை அரக்கர்களின் சேனைகளெல்லாம் உருமாய்ந்து ஒழியும்படியாகக் கொடிய அம்புகளைப் பிரயோகித்தான் இராமபிரான் - என்பன முன்னடிகள் : அப்படிப்பட்ட பராக்ரமம் வாய்ந்த கோதண்டபாணிப் பெருமானது திருக்கோயில் திருவெள்ளியங்குடி. நீர்நிலங்களிலே பயிர்செய்யப்பட்டுச் செழித்து வளர்ந்துள்ள வாழைகளானவை முற்றிப்பழுக்கும்; அந்தப் பழங்கள் இற்றுக் கீழே விழும். மீன்கள் அவற்றை மேல்விழுந்து புஜித்துச் செருக்கித் துள்ளி விளையாடப் பெற்ற வயல்கள் சூழ்ந்ததாம் இத்தலம். கரந்தன= ‘கரந்தாலன்ன’ என்பதன் தொகுத்தல். கரத்தல் - உருத்தெரியாது போதல். அரந்தை – துன்பம். ஊழ்த்தல் - உதிர்தல்.


    1344.   
    ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த*  மாவலி வேள்வியில் புக்கு* 
    தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு*  திக்கு உற வளர்ந்தவன் கோயில்*
    அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்*  அரி அரி என்று அவை அழைப்ப* 
    வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்*  திருவெள்ளியங்குடி அதுவே.  

        விளக்கம்  


    • ‘யாகம் செய்தல்’ என்றொரு வியாஜத்தையிட்டு ‘என்னுடைய ஸர்வஸ்வத்தையும் பிறர்க்கு உரித்தாக்கக் கடவேன்’ என்று ஸங்கல்பித்துக்கொண்ட மஹாபலியின் யஜ்ஞபூமியில் வாமநப்ரஹ்மசாரியாய்ச்சென்று மூவடிநிலம் இரந்து பெற்றுத் திசைகளெல்லாம் விம்மவளர்ந்த பெருமான் வாழுமிடம் திருவெள்ளியங்குடி. முதலடியில் ‘உணர்ந்து’ என்றும் பாடமுண்டு; அப்போது, ‘மாவலியானவன் வேண்டுவார்க்கு வேண்டினபடி கொடுப்பதாகிற நற்காரியஞ் செய்கிறானென்று தெரிந்துகொண்டு அவனது வேள்விக் கெழுந்தருளி’ என்று பொருளாம். (அள்ளியம் பொழில்வாய் இத்யாதி.) எதுகைநயம் நோக்கி அல்லியை அள்ளியென்ற தாகக் கொள்க. அன்றியே, ‘அளி’ என்பதை அள்ளியென்று விரித்துக்கிடப்பதாகவுங்கொள்வர்: குளிர்ச்சி பொருந்திய என்றபடி. திவ்யதேசத்தில் வாழுங் குயில்களாகையாலே அங்குள்ள பாகவதர்களின் அநுஸந்தானமே அவற்றுக்கும் அமைந்து ‘ஹாரிர்ஹாரி: ஹாரிர்ஹாரி:’ என்று சோலைத்தடங்களிலே கூவுகின்றனவாம்.


    1346.   
    குடிகுடி ஆகக் கூடி நின்று அமரர்*  குணங்களே பிதற்றி நின்று ஏத்த* 
    அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற*  ஆழியான் அமர்ந்து உறை கோயில்*
    கடிஉடைக் கமலம் அடியிடை மலர*  கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய* 
    வடிவுஉடை அன்னம் பெடையொடும் சேரும்*  வயல் வெள்ளியங்குடி அதுவே.

        விளக்கம்  


    • (கடியுடைக்கமலம் இத்யாதி.) நறுமணம் மிக்க தாமரை மலரானது கரும்புக்கும் செந்நெலுக்கு மடியிலே மலர்கின்றது; கரும்பும் பெருஞ்செந்நெலும் அத்தாமரை மலரின் இரு புறத்திலும் அசைகின்றன; அம்மலாரின் மீது அன்னம் பெடையோடு கூடிவாழ்கின்றது -என்று வருணிக்கிற விதற்கு ஒரு உட்கருத்து உரைக்கலாம்; அதாவது – தாமரைமலரென்பது ஒரு சிங்காசனம்; இருபக்கத்திலும் கரும்பும் செந்நெலும் அசைவது சாமரம் வீசுவதொக்ககும்; தாமரை மலரின்மீது அன்னம் பேடையோடுகூடி வாழ்வது பெருமானும் பிராட்டியும்கூடி வாழ்வதொக்கும் என்பதாம். மஹிஷியோடே கூட ராஜபுத்ரனிருக்கும் படிக்கு ஸ்மாரகமென்னவுமாம்.