திரு தலைச் சங்க நாண்மதியம்

ச‌ங்கு தீர்த்தத்தில் பௌர்ணமி நீராடல் மிக விசேஷம்! பௌர்ணமி அன்று நீராடி இங்கு இறைவனையும் இறைவியையும் வணங்கினாலும்,நாண்மதியம் கோயிலுக்கு அருகில் இருக்கும் சந்திர தீர்த்தத்தில் நீராடி பெருமாளையும், தாயாரையும் வணங்கினாலும். நாள்பட்ட தோல் மற்றும் ஒவ்வாமை சம்பந்தப்பட்ட நோய்கள் விலகி விடும் என்பது கண்கூடு! சந்திர பகவான் வணங்கி திருவருள் பெற்ற திருத் தலங்களுள் ஒன்றான காரணத்தினால் ஜாதகத்தில் சந்திரனின் பாதிப்பினால் வரக் கூடிய தோல் வியாதி மற்றும் மன அழுத்தம் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்! கோயில் அமைப்பே சங்கு வடிவில் அமைந்துள்ளது.மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று. உலக மகா கோடீஸ்வரர்களான சங்கநிதி, பதுமநிதி இருவரும் கோயில் நுழைவு வாயிலிலேயே நம்மை வரவேற்கிறார்கள்.கோயில் அமைப்பே சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. மகாவிஷ்ணு இவ்வுலக உயிர்களை காப்பதற்காக சங்காரண்யேஸ்வரரை பூஜை செய்து தனது ஆயுதமாக சங்கை பெற்றுள்ளார். இதனால் இத்தலத்தில் மகாவிஷ்ணுவுக்கு தனி சன்னதி உண்டு. "மூலவரான சங்காரண்யேஸ்வரர் மீது நல்லெண்ணை ஊற்றி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும்."

அமைவிடம்

வியோமஜோதிப்பிரான் (வெண்சுடர்பிரான்,
லோகநாதன்) சோழ நாடு,
மயிலாடுதுறை. 26-திரு இந்தளூர் போன்- 044 22632633 35 ,

தாயார் : ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார்
மூலவர் : நாண்மதியப் பெருமாள்
உட்சவர்: வியோமஜோதிப்பிரான்
மண்டலம் : சோழ நாடு
இடம் : மயிலாடுதுறை
கடவுளர்கள்: நான் மதிய பெருமாள்,தலைச்சங்க நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

    2745.   
    கல்நவில்தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய்,*

    பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?,*  -பூங்கங்கை- 


        விளக்கம்  


    • அழகிற் சிறந்த வேகவதி என்னுமோர் தேவகன்னிகை தனது கணவன் முகத்திலே விழிக்க வொண்ணாதபடி தன்னைத் தனது தமையன் தடைசெய்து இழுத்துக்கொண்டுபோக அவள் அவனை லக்ஷியம் பண்ணாமல் திரஸ்கரித்து உதறித் தள்ளிவிட்டுத் தனது காதலன் ஒரு போர்க்களத்திலே யுத்தம் செய்து கொண்டிருப்பதாகத் தெரிந்து அங்கே போய் இப்படிதானா என்னை நீ கைவிட்டுத் திரிவது என்று தார்க்காணித்து அந்தப் போர்க்களத்திலே பலருமறிய அவன் கையைப் பிடித்திழுத்துத் தன்னூர்க்குக் கொண்டு சென்று இஷ்டமான போகங்களை அநுபவித்து வாழ்ந்தாள் – என்பதாக இவ்விடத்தில் கதை ஏற்படுகிறது. இதன் விரிவை வல்லார் வாய்க்கேட்டுணர்க. முன் தோன்றல் முன்னே பிறந்தவன்.