திருப்பேர்நகர்

108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. பெருமாளின் பஞ்சரங்கதலம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 6 வது திவ்ய தேசம்

அமைவிடம்

அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில்,
கோயிலடி (திருப்பேர் நகர்) - 613105 தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 4362 - 281 488,
281 460,
281 304,

தாயார் : ஸ்ரீ கமலவல்லி (இந்திரா தேவி)
மூலவர் : அப்பலா ரங்கநாதன்
உட்சவர்: --
மண்டலம் : சோழ நாடு
இடம் : திருச்சி
கடவுளர்கள்: திருஆப்பக்கூடத்தான் பெருமாள், ஸ்ரீதேவி


திவ்யதேச பாசுரங்கள்

  205.   
  கொண்டல்வண்ணா!  இங்கே போதராயே*  கோயிற் பிள்ளாய்!  இங்கே போதராயே* 
  தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த*  திருநாரணா!  இங்கே போதராயே* 
  உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி*  ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்*
  கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ளக்*  கண்ணபிரான் கற்ற கல்வி தானே

      விளக்கம்  


  • கீழ்ப்பாட்டில் “வருகவென்றுன் மகன்றன்னைக் கூவாய்” என்று சில ஆய்ச்சிகள் முறையிட்டவாறே யசோதைப்பிராட்டி கண்ணபிரானைப் பலபடியாகப் புகழ்ந்து ‘கண்ணா! முலையுண்ணவா’ என்றழைக்க, அவன் தன் மகிழ்ச்சி தோற்ற “யான் அம்மமுண்டு வந்தேன்காண்! “ என்று சொல்லி ஓடிவந்து அகத்தினுள்ளே புகுர, அவ்யசோதை அவன் வந்த அழகையும் முகமலர்த்தியையுங் கண்டு மகிழ்ந்து அக்கண்ணபிரானை எதிர்கொண்டு சென்று அவனைத்தன் இடுப்பிலேற்றி அணைத்துக் கொண்டவாற்றை ஆழ்வார் அநுஸந்தித்து ‘இவ்வகையான பரிமாற்றத்தைப் பெறும்படி கண்ணன் கற்ற கல்வியுமொன்றே! என்று வியக்கின்றனர். அன்றிக்கே, முன்னிரண்டடியும் பின்னிரண்டடியும் நன்கு பொருந்துமாறு தாயான யசோதைதானே வியக்கின்றாளென்று உரைத்தலும் உரித்தென்க; அப்போது “ஆய்ச்சிதானுங் கண்டெதிரே சென்றெடுத்துக்கொள்ள” என்றது தன் செயலைப் பிறர் சொல்லுமாபோலே தானே சொன்னபடியெனக் கொள்க. கண்ணன் முன்பு செய்த தீமைகளைத் தாயாகிய தான் மறந்துவிட்டு அவனை யெதிர் சென்றெடுத்துக் கொள்ளும்படி அவன் பண்ணின விசித்திரத்தில் ஈடுபட்டு ‘இப்பருவத்திலே இவள் இவ்வளவு விரகனானதே!’ என்று தன்னில்தான் புகழ்ந்து மகிழ்ந்து பொலிகின்றாளென்க. கோயில் -இத்திருநாமம் திருவரங்கத்தின் மேல் வழங்குவது ஸம்ப்ரதாயம். திருப்பேர் - இது சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று. நன்னூலில் “ஒருபொருள்மேற்பல பெயர்வரினிறுதி, ஒருவினை கொடுப்ப தனியுமொரோ வழி” என்றபடி இப்பாட்டில் ‘கொண்டல்வண்ணன்’ ‘கோயிற்பிள்ளை’ ‘திருநாரணன்’ என்பன கண்ணனென்னும் ஒரு பொருளேயென்பது தெளிய நின்றதனால், பெயர்தோறும் ‘போதராய்’ என ஒருவினை கொடுக்கப்பட்டது.


  1428.   
  கை இலங்கு ஆழி சங்கன்*  கரு முகில் திரு நிறத்தன்* 
  பொய் இலன் மெய்யன்தன் தாள்*  அடைவரேல் அடிமை ஆக்கும*
  செய் அலர் கமலம் ஓங்கு*  செறி பொழில் தென் திருப்பேர்* 
  பை அரவுஅணையான் நாமம்*  பரவி நான் உய்ந்த ஆறே.    (2)      

      விளக்கம்    1429.   
  வங்கம் ஆர் கடல்கள் ஏழும்*  மலையும் வானகமும் மற்றும்* 
  அம் கண் மா ஞாலம் எல்லாம்*  அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை*
  திங்கள் மா முகில் அணவு*  செறி பொழில் தென் திருப்பேர்* 
  எங்கள் மால் இறைவன் நாமம்*  ஏத்தி நான் உய்ந்த ஆறே.

      விளக்கம்  


  • திங்கள்மாமுகில் - சந்திரன் தோன்றுகிற மேகமண்டலம் என்னவுமாம்


  1430.   
  ஒருவனை உந்திப் பூமேல்*  ஓங்குவித்து ஆகம்தன்னால்* 
  ஒருவனைச் சாபம் நீக்கி*  உம்பர் ஆள் என்று விட்டான்*
  பெரு வரை மதிள்கள் சூழ்ந்த*  பெரு நகர் அரவு அணைமேல்* 
  கரு வரை வண்ணன்தன் பேர்*  கருதி நான் உய்ந்த ஆறே.

      விளக்கம்  


  • ஆகந்தன்னால் = ‘ஆகம்’ என்று உடம்புக்கும் மார்வுக்கும் பெயர்; இங்கு இலங்கணையால் மார்விலுண்டான நீரைச்சொல்லுகிறது. மார்வில் நிரையெடுத்துப் பிச்சையிட்டு சாபந்தீர்த்தனனென்க. “என் எந்தாய்! சாபந்தீரென்ன இலங்கமுதநீர் திருமார்பில் தந்தான்” என்றா இவர்தாமே கீழ்; “ஈனமர்சாபம் நீக்காயென்ன வொண்புனலை யீந்தான் எனபர்மேல். திருச்சந்த விருத்தத்தில் “கீறுதிங்கள் வைத்தனன் கைவைத்தவன் கபாலமிசை, ஊறுசெங்குருதியால் நிறைத்த” என்றதனால், திருமார்வைக்கீறி ரத்தத்தையெடுத்தும் பிச்சையிட்டதாகவும் உண்டு. அரவணைமேல் கருவரைவண்ணன் = ஒரு வெள்ளிமலையின்மேல் அஞ்சனகிரி சாய்ந்தாற்போன்ற பரபாக அழகு காண்க.


  1431.   
  ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி*  உலகு எலாம் திரியும் ஈசன்* 
  ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன*  ஒண் புனலை ஈந்தான்* 
  தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த*  செறி வயல் தென் திருப்பேர்*
  வானவர்தலைவன் நாமம்* வாழ்த்தி நான் உய்ந்த ஆறே.

      விளக்கம்  


  • ஈனமர்சாபம் - கண்டவர்களடங்கலும் ‘இவன் பிரமஹத்திக்காரன்’ என்று பழிக்கு படியாகவுள்ள பாவம் என்றவாறு. ‘ஹீநம்’ என்ற வடசொல் ‘ஈன்’ எனச்சிதைந்தது.


  1432.   
  வக்கரன் வாய் முன் கீண்ட*  மாயனே என்று வானோர் 
  புக்கு*  அரண் தந்தருளாய் என்ன*  பொன் ஆகத்தானை* 
  நக்கு அரி உருவம் ஆகி*  நகம் கிளர்ந்து இடந்து உகந்த* 
  சக்கரச் செல்வன் தென்பேர்த்*  தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே.

      விளக்கம்  


  • வக்கரன் - ‘தந்தவக்ரன்’ என்ற பெயாரின் ஏகதேசம். கண்ணபிரான் ருக்மிணிக் பிராட்டியை ஸ்வீகரித்தருளின போது எதிர்த்து வந்து போர்செய்து மாண்டொழிந்த அரசர்களில் இவனொருவன். நரஸிம்ஹாவதாரத்திற்கு மிகவும் பிற்பட்டதான க்ருஷ்ணாவதாரத்தில் கொல்லப்பட்ட வக்ரனைப்பற்றி நரஸிம்ஹாவதாரத்திற்குமுன் வானோர் எடுத்துக்கூறினரென்றால் இது பொருந்துமோ? என்று சங்கிக்கவேண்டா; என்பெருமானுடைய திருவவதாரங்கள் பன்முறை நிகழ்ந்தனவாக நூல்கள் கூறும். அன்றியும், இரணியனால் தகர்ப்புண்ட தேவர்கள் ஏதோ சில வாக்கியங்களைச் சொல்லி எம்பெருமானைத் துதித்திருந்தாலும் ‘வக்கரன் வாய்முன் கீண்ட மாயனே!’ என்று ஆழ்வார் அருளிச்செய்யக் குறையில்லை. “தேனுகனும் முரனும் திண்டி றல் வெந்நரகனென்பவர்தாம் மடியச் செருவதிரச் செல்லும், ஆனை! எனக்கொருகாலாடுக சங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுகவாடுகவே” என்று கண்ணபிரானுடைய இளம்பிராயத்தில் யசோதைப்பிராட்டி கூறுவதாகப் பெரியாழ்வா ரருளிச்செய்த பாசுரமும் இது போன்ற மற்றும் பல பாசுரங்களும் இங்கு ஸ்மரிக்கத்தக்கன.


  1433.   
  விலங்கலால் கடல் அடைத்து*  விளங்கிழை பொருட்டு*  வில்லால் 
  இலங்கை மா நகர்க்கு இறைவன்*  இருபது புயம் துணித்தான்*
  நலம் கொள் நான்மறை வல்லார்கள்*  ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு* 
  மலங்கு பாய் வயல் திருப்பேர்*  மருவி நான் வாழ்ந்த ஆறே.

      விளக்கம்  


  • (நலங்கொள் நான்மறை இத்யாதி.) வைதிகர்கள் உரக்க வேதகோஷஞ் செய்வதைக் கேட்ட மீன்கள் தங்களை வெருட்டுஞ்சொற்களென்று ப்ரமித்துத் துள்ளியோடுகின்றனவாம் வயல்களில். குளக்கரையில் வைதிகப்ராஹ்மணர்கள் ப்ரஹ்மயஜ்ஞ ப்ரச்நம உச்சரிக்கும்படியான வைதிகலக்ஷமி விளங்கும் திவ்யதேசமென்று குறிப்பிட்டவாறு. மலங்கு – மீன்களில் ஓர்வகைச்சாதி


  1434.   
  வெண்ணெய் தான் அமுதுசெய்ய*  வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி* 
  கண்ணி ஆர் குறுங் கயிற்றால்*  கட்ட வெட்டொன்று இருந்தான்*
  திண்ண மா மதிள்கள் சூழ்ந்த*  தென் திருப்பேருள்*  வேலை 
  வண்ணனார் நாமம் நாளும்*  வாய் மொழிந்து உய்ந்த ஆறே.

      விளக்கம்    1435.   
  அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய*  ஆய்ப்பாடி தன்னுள்* 
  கொம்பு அனார் பின்னை கோலம்*  கூடுதற்கு ஏறு கொன்றான்* 
  செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த*  தென் திருப்பேருள்*  மேவும்- 
  எம்பிரான் நாமம் நாளும்*  ஏத்தி நான் உய்ந்த ஆறே.

      விளக்கம்    1436.   
  நால் வகை வேதம் ஐந்து வேள்வி*  ஆறு அங்கம் வல்லார்* 
  மேலை வானவரின் மிக்க*  வேதியர் ஆதி காலம்* 
  சேல் உகள் வயல் திருப்பேர்ச்*  செங் கண் மாலோடும் வாழ்வார்* 
  சீல மா தவத்தர் சிந்தை ஆளி*  என் சிந்தையானே.

      விளக்கம்    1437.   
  வண்டு அறை பொழில் திருப்பேர்*  வரி அரவுஅணையில் பள்ளி- 
  கொண்டு உறைகின்ற மாலைக்*  கொடி மதிள் மாட மங்கைத்*
  திண் திறல் தோள் கலியன்*  செஞ்சொலால் மொழிந்த மாலை* 
  கொண்டு இவை பாடி ஆடக்*  கூடுவர் நீள் விசும்பே. (2)       

      விளக்கம்    1857.   
  பெற்றமாளிகைப்*  பேரில் மணாளனை* 
  கற்ற நூல்*  கலிகன்றி உரைசெய்த*
  சொல்திறம்இவை*  சொல்லிய தொண்டர்கட்கு*
  அற்றம் இல்லை*  அண்டம் அவர்க்கு ஆட்சியே   (2)

      விளக்கம்  


  • வியாக்கியானத்தில், ‘பெற்றமாளிகை’ என்றும் ‘பெற்றமாளியை’ என்றும் பாடபேதங் கொள்ளப்பட்டது. முந்தினபாடத்தில், ‘பெற்றம்’ என்று பெருமையாய், பெருமைபொருந்திய மாளிகையுடைத்தான திருப்பேர்நகரிலுறையு மெம்பெருமானை என்றதாகிறது. பிந்தினபாடத்தில், ‘பெற்றம்’ என்று பசுக்களுக்குப் பெயராய், கோபாலனாகையாலே பசுக்களை ஆள்பவனும் திருப்பேர் நகரிலுள்ளவனுமான பெருமானை என்றதாகிறது. கற்ற நூல்கலிகன்றி - ஆழ்வார் எம்பெருமானால் மயர்வறமதிநல மருளப்பெற்றவரேயன்றி ஒருவரிடத்திலே சாஸ்த்ராப்யாஸம் செய்தவரல்லரே, அப்படியிருக்க ‘கற்றநூல்கலிகன்றி’ என்றது எங்ஙனே; என்கிற கங்கைக்கு ஸமாதாநமாகப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்வது காண்மின், - “திருமந்த்ரம் கற்றவிடத்தலே கற்குமித்தனையிறே அல்லாதவையும்“ என்று ஸகலசாஸ்த்ரங்களும் திருமந்திரத்தில் அடங்கினவையாதலால் அத்திருமந்திரத்தை எம்பெரமான் பக்கதில் கற்றபோதே ஸகலசாஸ்த்ரங்களும் கற்கப்பட்டனவாதலால் இங்ஙனஞ் சொல்லக்குறையில்லை யென்க.


  2048.   
  பேசினார் பிறவி நீத்தார்*  பேர்உளான் பெருமை பேசி,* 
  ஏசினார் உய்ந்து போனார்*  என்பது இவ்உலகின் வண்ணம்,*
  பேசினேன் ஏச மாட்டேன்*  பேதையேன் பிறவி நீத்தற்கு,* 
  ஆசையோ பெரிது கொள்க*  அலைகடல் வண்ணர் பாலே. 

      விளக்கம்  


  • “காற்றினம் மேய்க்கலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியுமாகப் பெற்றான், பற்றியுரலிடையாப்பு முண்டான் பாவிகாள் உங்களுக்கேச்சுக்கொலோ“ என்று ஆண்டாள் வயிறெரிந்து பேசும்படியாக தூஷித்தவர்களில் தலைவனான சிசுபாலன் முதலானவர்கள் ‘ஏசினார்‘ என்பதாற் கொள்ளப்படுவர்; வைகிறவனுக்கும் பேர்சொல்லி வையவேண்டி யிருப்பதால் ஏதேனுமொரு படியாலே நம்முடைய திருநாமத்தைச் சொன்னானென்றுகொண்டு எம்பெருமான் ஏசுகிறவர்களுக்கும் நற்கதி நல்குவதுண்டு. சிசுபாலனுக்கு மோக்ஷங்கிடைத்தென்பதைப் பராசர மஹர்ஷி பகர்ந்துவைத்தார், என்பது ஸ்ரீவிஷ்ணு புராணம். ‘கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும், சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன், திருவடி தாட்பாலடைந்த“ என்றார் நம்மாழ்வாரும். என்றார் ஆளவந்தாரும். என்பது இவ்வுலகின் வண்ணம் = லோகமென்கிற சொல்லால் சாஸ்த்ரத்தைவ் சொல்லுகிற வழக்கமுண்டு. “எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லை யென்றே“ என்ற திருவாய்மொழி வியாக்கியானங்களிலும், என்ற ஆளவந்தார், ஸ்தோத்ர வியாக்யானங்களிலுங் காணலாம். ஆகவே இங்கு உலகின் வண்ண மென்று சாஸ்த்ரமர்யாதையைச் சொன்னபடி. (சாஸ்த்ரமறிந்த) உலகத்தவர்கள் சொல்லுவார்கள் என்று பொருள் கொண்டாலுங் கொள்ளலாம். பேசினேன் – எம்பெருமானுடைய பெருமையை நான் பேசினேனென்பதாகப் பொருள்படுவதன்று; ‘ஆ! நாம் வெகு நன்றாகப் படித்துவிட்டோம் என்றால், படிக்கவில்லை யென்று பொருளாவது போல இங்கும் எதிர்மறையாகக் கொள்ளத்தக்கது. எம்பெருமான் பெருமையைப் பேசவல்ல அதிகாரி நானோ என்று இழித்துச் சொல்லுகையில் திருவுள்ளம். இங்கே வியாக்யான ஸ்ரீஸூக்கதிகாண்மின்;- ‘உண்ணப்புக்கு மயிர்ப்பட்டு அழகிதாக உண்டெனென்னுமாபோலே“ என்பதாம். ஏசமாட்டேன் – ஏசி்ப் பெறக்கூடிய மோக்ஷம் வேண்டா என்றபடி.


  2050.   
  பிண்டியார் மண்டை ஏந்தி*  பிறர்மனை திரிதந்துஉண்ணும்- 
  உண்டியான்*  சாபம் தீர்த்த  ஒருவன்ஊர்,*  உலகம் ஏத்தும்-
  கண்டியூர் அரங்கம் மெய்யம்*  கச்சிபேர் மல்லை என்று- 
  மண்டினார்,*  உய்யல் அல்லால்*  மற்றையார்க்கு உய்யல்ஆமே? (2)      

      விளக்கம்  


  • எம்பெருமானுகந்தருளின திவ்ய தேசங்களிலெங்கும் “பதியே பரவித் தொழுந்தொண்டர்“ என்னும்படியாக அவகாஹித்திருக்கும் அவர்கள் உஜ்ஜீவிக்க வழியுண்டே யல்லது அல்லாதவர்களுக்கு ஒருநாளும் உஜ்ஜீவிக்க வழியில்லை யென்கிறார். என்று வேதமானது எம்பெருமானை உள்ளபடி யறிந்தார்க்கல்லது உய்ய விரகில்லை யென்றது. அதனை மறுத்து, திவ்ய தேசங்களிலீடுபடுவார்க்கன்றி மற்றையோர்க்கு உய்யவழியில்லை யென்கிறாரிவ்வாழ்வார். “உண்ணும் முண்டியான்“ ‘உண்ணும் உண்டியான்“ என்பன பாடபேதங்கள் உண்டி-உணவு; பிச்சையெடுத்து உண்ணப்பட்ட உணவையுடையவன் என்றபடி. “இளைப்பினையியக்கம் நீக்கி“ என்ற கீழ்ப்பாட்டிற்படியே வீணாக க்லேசப்படாதே “காம்பறத் தலைசிரைத்து உன் கடைத்தலையிலிருந்து வாழுஞ் சோம்பரையுகத்திபோலுஞ் சூழ்புனலரங்கத்தானே!“ என்கிறபடியே திவ்ய தேசாநுபவமே போதுபோக்காக இருப்பவர்கட்கே எம்பெருமானுடைய அநுக்ரஹம் அளவற்றிருக்குமென்றதாயிற்று.


  2059.   
  நீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மேலாய்!*  நிலாத்திங்கள் துண்டத்தாய்! நிறைந்த கச்சி- 
  ஊரகத்தாய்,* ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்!*  உள்ளுவார் உள்ளத்தாய்,*  உலகம் ஏத்தும்- 
   
  காரகத்தாய்! கார்வானத்து உள்ளாய்! கள்வா!*  காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு- 
  பேரகத்தாய்,* பேராது என் நெஞ்சின் உள்ளாய்!*  பெருமான் உன் திருவடியே பேணினேனே.  (2)

      விளக்கம்  


  • உள்ளுவபருள்ளத்தாய்! – காஞ்சீக்ஷரத்தில் ‘உள்ளுருவாருள்ளம்‘ என்று ஒரு திவ்யதேசம் நிலாத்திங்கள் துண்டம்போலவே தேவதாந்திர ஆலயத்தின் உள்ளிருப்பதாகவும், அத்தலத்து எம்பெருமானையே இங்கு ‘உள்ளுருவாருள்ளத்தாய்!‘ என விளித்திருப்பதாகவும் பலர் சொல்லிப் போருவதுண்டு ; இஃது ஆதாரமற்ற வார்த்தையாகும். பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானம் இங்ஙனே காணவில்லை யென்பதுந்தவிர, பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளின நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் உள்ளுவாருள்ள மென் றொரு திருப்பதி பாடல் பெற்றிராமையும் நோக்கத்தக்கது. தன்னைச் சிந்திப்பவர்களின் சிந்தையிலே கோயில் கொண்டிருக்குமவனே! என்றபடி. எம்பெருமானுக்கு, பரமகதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்ய மென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகிறானென்றும் நம் ஆசார்யர்கள் நிர்வஹித்தருள்வது இங்கு உணரத்தக்கது. உலகமேத்துங் காரகத்தாய் = காரகமென்கிற திவ்யதேசமும் திருக்கச்சிமாநகரில் உலகளந்த பெருமாள் ஸந்நிதியினுள்ளடங்கியது. மேகத்தின் ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவமுடைய எம்பெருமான் வாழுமிடமாதல் பற்றி இத்தலத்திற்குக் காரக மென்று திருநாமமாயிற்றென்பர். எம்பெருமானுக்கு மேகத்தோடு ஸாம்யம் பலபடிகளால் உய்த்துணரத்தக்கது. (இதுவும் நமது ஸ்வாபதேசார்த்த ஸாகரத்தில் விசதம்.)


  2070.   
  முற்று ஆரா வன முலையாள் பாவை* மாயன்- மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்- 
  அற்றாள்* தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்* அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ! என்னும்* 
  பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்* பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி* 
  பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்* பொரு அற்றாள் என் மகள்-உம் பொன்னும் அஃதே       

      விளக்கம்  


  • இதுவன்றோ நிறைவழிந்தார் நிற்குமாறோ“ என்றாள் கீழ்ப்பாட்டில். அதுகேட்ட பெண்டுகள் ‘இப்படியும் சொல்லிக் கைவிடலாமோநீ? ‘நீ விரும்புகிற புருஷன் வேற்றுப் பெண்பிள்ளைகள் பக்கலிலே சாலவும் ஆழ்ந்து கிடப்பவனாகையாலே அவன் உனக்கு முகந்தரமாட்டான்; வீணாக ஏன் அவனிடத்து நசை வைத்துக் கதறுகின்றாய்?‘ என்று சொல்லியாவது மகளை மீட்கப் பார்க்கலாகாதோ?‘ என்று சொல்ல; ‘அம்மனைமீர்! அதுவுஞ் சொன்னேன்; நான்சொல்வதில் ஒரு குறையுமில்லை; என் உபதேசமெல்லாம் விபரீத பலமாய்விட்டது காணீர்‘ என்கிறாளிதில். முற்றாராவன முளையாள்பாவை என்கிறது பெரியபிராட்டியாரை. பிராட்டியின் பருவத்தைப் பற்றிச் சொல்லுமிடங்களில் “யுவதிச்ச குமாரிணீ“ என்று சொல்லப்பட்டது; அதாவது – குமாரியாயிருக்கும் நிலைமையிலே நிற்பவளாய் அத்தோடு யௌவனமும் வந்து முகங்காட்டுமளவாயிருக்கும் இவள் பருவம் என்றபடி. அதற்கு இணங்க ‘முற்றாராவன முளையாள்பாவை‘ என்கிறது. முழுமுற்றும் போந்திலாத அழகிய முலையையுடையளான ஸ்ரீமஹாலெட்சுமி – உபயவிபூதிநிர்வாஹகனாய் எல்லையில் ஞானத்தனாய் நிரூபாதிக ஸ்வதந்த்ரனாய் அவாப்தஸமஸ்த காமனாயிருக்கு மெம்பெருமானையும் தன்னுடைய ஒரு அவயவ விசேஷத்திலே அடக்கியாளப் பிறந்தவளென்கிறது. மாயன்மொய்யகலத்துள்ளியிருப்பாள் அஃதுங்கண்டும் அற்றாள் = எம்பெருமான் பிராட்டியின் திருமுலைத் தடத்தைவிட்டுப் பேராதாப்போலே அவள் இவனுடைய திருமார்பைவிட்டுப் பேராதிருக்கிறபடி; இவன் அவளுடைய திருமுலையைப் பற்றி ‘அகலகில்லேனிறையும்‘ என்பன்; இவள் அவனுடைய திருமார்வைப்பற்றி ‘அகலகில்லேனிறையும்‘ என்பள். முலையை யணைந்து அவன் பித்தேறிக்கிடக்க, மார்வையணைந்து இவள் பித்தேறிக்கிடக்க, இங்ஙனே ஒரு திவ்யதம்பதிகள் பைத்தியம்பிடித்துப் படுகிறபாடு என்! என்னலாம்படி யிருக்கும். (அஃதுங்கண்டும் அற்றாள்) “திவளும் வெண்மதிபோல் திருமுகத்தரிவை செழுங்கடலமுதினிற் பிறந்தவளும், நின்ஆகத்திருப்பது மறிந்துமாகிலுமாசை விடாளால்“ என்றவாறு. உலகத்தில் ஒரு புருஷன் ஒரு ஸ்திரீயினிடத்தில் அளவற்ற அன்பு வைத்திருப்பதாகக் கண்டால் அவனிடத்தில் மற்றையோர் ஆசைவைப்பது கூடாது; ஏனெனில்; அவனுடைய ஆசைப்பெருக்கம் முழுதும் ஒருவ்யக்திவழியிற் பாய்ந்துவிட்டதனால் அது மற்றொரு வ்யக்தியிற் பாயமாட்டாது; அலக்ஷயஞ்செய்யவே நேரிடும். ஆகவே, ஏற்கனவே ஒரு வ்யக்தியினிடத்தில் காதல் கொண்டிராநின்ற புருஷனை மற்றையோர் காதலிப்பது விவேகிக்ருத்யமன்று. இஃது உலகில் ஏற்பட்ட விஷயம். இந்த நியாயத்தைக் கொண்டு பார்க்குமளவில், என்மகள் * அல்லிமலர் மகள் போகமயக்குக்களாகியும் நிற்குமம்மா னிடத்தில் ஆசைவைப்பது கூடாது. அழகிற்சிறந்த திருமகள் ஒரு நொடிப்பொழுதும் விடாது திருமார்பிலேயே அந்தரங்கமாக வாழ்வதைக் கண்டுவைத்தும் இவள் அவ்விடத்திற்கே அற்றுத் தீர்ந்தாள் காண்மின் என்றாள் திருத்தாய். “நீரிலே நெருப்புக் கிளருமாபோலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம்பிறந்தால் பொறுப்பது இவளுக்காக“ என்கிறபடியே குற்றங்களைப் பொறுப்பிக்கவல்ல பெரியபிராட்டியாரும், “தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல், என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்றுசெய்தாரென்பர்“ என்கிறபடியே * செய்தகுற்றம் நற்றமாகவே கொள்ளவல்ல என்பெருமானும் கூடியிருக்கிற இவ்விருப்புத்தானே நமக்குப் பரமஉத்தேச்யமென்று கொண்டு அந்த மிதுனத்திலே ஈடுபடாநின்றாளாயிற்று. தன்நிறைவழிந்தாள் = அந்த மிதுனத்தில் ஈடுபட்டமாத்திரமேயோ? தன் பெண்மைக்குரிய அடக்கமும் அழியப்பெற்றாள். ‘கடல்வற்றிற்று‘ என்பாரைப்போலே சொல்லுகிறபடி காண்மின். நிறைவழிந்தாளென்பதை நீ அறிந்தமை எங்ஙனே? என்று கேட்க ஆவிக்கின்றாள் என்கிறாள். கீழ் ‘எம்பெருமான் திருவரங்கமெங்கே?‘ என்று திருவரங்கம் பெரியகோவிலுக்குப்போக வழிதேடினவள் அதுதெரியப் பெறாமையாலே நெடுமூச்செறியா நின்றாள். இதுவே நிறைவழிந்தமைக்கு அடையாளம். அணியரங்கமாடுதுமோ தோழீயென்னும் = பரகாலநாயகியின் நிலைமையைக் கண்டு ‘எம்பெருமானோ இவளுக்கு முகங்காட்டிற்றிலன்; ஹிதபரையான தாயார் சொல்லும் வார்த்தைகளில் ஒன்றும் இவளுக்கு ப்ரியமல்லாமையாலே தாயைக் கொண்டு இவள் ஆச்வஸிக்கவழியில்லை; இத்தருணத்தில் இவளுக்கு நாம் அருகே நின்று முகங்காட்டுவோம்‘ என்று நினைத்துத் தோழிவந்து பக்கத்தில் நின்றாள்; நின்றவாறே ‘அணியரங்கமாடுதுமோ தோழீ!‘ எனத் தொடங்கினாள். ஸ்ரீரங்கநாதனாகிற பொய்கையிலே படிந்து குடைந்தாடி நம்முடைய விரஹதாபமெல்லாம் தணியப் பெறுவோமோ? என்றாளென்க. பெற்றேன் வாய்ச்சொல் இறையும் பேசக்கேளாள் = ‘இனி நாம் இவள் வருந்தும் படியான ஹிதவார்த்தைகளைச் சொல்லக்கடவோமல்லோம்; இவளுக்கு ப்ரியமான வார்த்தை களையே சொல்லுவோம்‘ என்று நினைத்து இவளுடைய காரியங்களுக்கு உடன்பாடான வார்த்தைகளைச் சொல்லுவதாக நான் வாய்திறந்தாலும் ‘என்வாயில் வருகிற வார்த்தை‘ என்பதுவே காரணமாக அந்த அநுகூலவார்த்தைகளையும் செவிதாழ்த்துக் கேட்கிறாளில்லை. ‘அணியரங்கமாடுவோம், நீர்வண்ணன் நீர்மலைக்கே போவோம்‘ என்று காதை மூடிக்கொள்ளுகிறளென்றபடி. அவன் சொன்ன வார்த்தைகளைக் கேளாள். பிரதிகூலமே சொல்லிப் போருவார் வாயிலே அநுகூல வார்த்தைகள் வந்தாலுங் கேட்பாரில்லையிறே. உன்வார்த்தை கேளாத அவளுடைய வார்த்தை இருந்தபடி என்? என்று கேட்க, பேர்பாடித் தண்குடந்தை நகரும்பாடி என்கிறாள். கோவிலுக்குப்போம் வழியிலுள்ள பாதேயங்களைப் பேசா நின்றாளென்கிறாள். திருக்குறையலூரிலிருந்து திருவரங்கம் போக வேண்டுவார் முந்துறத் திருக்குடந்தையைப் பாடிப் பின்னைத் தென்திருப்பேர்நகரைப் பாட வேண்டுவது ப்ராப்தமாயிருக்க க்ரம ப்ராப்தி பற்றுகிறதில்லை ஆற்றாமையின் கனம். (பாதேயம் = வழிப்போக்கில் உணவுச்சாதம்) பொற்றாமரைக்கயம் நீராடப்போனாள் = கீழே திருக்குடந்தை ப்ரஸ்துதமாகையாலே அத்தலத்தில் புண்ணியதீர்த்தமாக வழங்கிவருகின்ற பொற்றாமரை என்னும் புஷ்கரிணியிலே நீராடப்போனாள் என்று பொருள்கொள்ளப் பொருந்துமாயினும் எம்பெருமான் றன்னையே பொற்றாமரைக்கயமாகப் பேசுகிறாரென்றலும் பொருந்தும். தமிழர், ஸம்ச்லேஷத்தைச் சுனையாடலென்றும் நீராட்டமென்றும் சொல்லுவார்கள். எம்பெருமானோடு கலவிசெய்ய விரும்புவதையே இங்குப் பொற்றாமரைக் கயம் நீராடப்போவதாகச் சொல்லிற்றென்க. இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின்; - ‘மகள் ‘ அணியரங்காடுதுமோ‘ என்று ஊரைச் சொன்னாள்; தான் * பொற்றாமரைக் கயமென்று பெரிய பெருமாளைச் சொல்லுகிறாள்: ‘தயரதன் பெற்ற மரதக மணித்தடம்‘ என்றும் ‘வாசத்தடம்போல் வருவானே!‘ என்றும் தடாகமாகச் சொல்லக்கடவதிறே“ என்பதாம். அவள் பொற்றாமரைக்கயம் நீராடப் புறப்பட்டால் நீ தடை செய்யலாகாதோ? என்ன, பொருவற்றாள் என்மகள் என்கிறாள். பொருவு - பொருத்தம்; என்னோடு சேர்த்தியற்றாள் என்றபடி. என் உறவை அறுத்துக் கொண்டவளை நான் எங்ஙனே நியமிப்பேன்? என்கிறாள். இனி, ‘பொருவற்றாள்‘ என்பதற்கு ‘ஒப்பில்லாதவள்‘ என்றும் பொருளாகும். உம்பொன்னுமஃதே = இரண்டு வகையான பொருளைக் கருதி இச்சொல் சொல்லுகிறாள்; உங்கள் வயிற்றிற் பிறந்த பெண்ணும் இவளைப்போலே அடங்காப் பிடாரிதானோ? அன்றி விதேவையா யிருப்பவளோ? என்று கேட்பது வெளிப்படை. உங்கள் பெண்ணுக்கு இத்தனை வைலக்ஷண்யம் இல்லையே!, * நங்கைமீர்! நீரு மோர்பெண்பெற்று நல்கினீர், எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற வேழையை! என்றாற்போலே கொண்டாட்டம் உள்ளுறை. “உம்பொன் என்கிறது அல்லாத ஆழ்வார்களை; ‘மத்துறுகடைவெண்ணெய் களவினிலூரவிடையாப்புண்டு, எத்திறம்! உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே!!‘ என்று அவதாரத்தை அநுஸந்தித்திறே அவர்கள் மோஹித்தது; அர்ச்சாவதாரத்திலேயிறே இவள் மோஹிப்பது“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.


  2439.   
  என் நெஞ்சம் மேயான்*  இருள் நீக்கி எம்பிரான்*  
  மன்அஞ்ச முன்ஒரு நாள்*  மண் அளந்தான்*  என்நெஞ்சம்
  மேயானை*  இல்லா விடை ஏற்றான்*  வெவ்வினை தீர்த்து 
  ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு.  

      விளக்கம்  


  • தம் நெஞ்சில் இருளையறுத்துக்கொண்டு அங்கே நிரந்தரவாஸம் பண்ணுகிற ஆபத்ரக்ஷகனான எம்பெருமான் பக்கலிலே தமக்கு அன்பு விளைந்தமையை அருளிச்செய்கிறார். இப்பாட்டில் “என்னெஞ்சமேயான்“ என்பது இரண்டிடத்தில் வந்துள்ளது. பொருள் ஒன்றேயாயினும் கருத்தில் வாசியுண்டு, முதலடியில் என்னெஞ்சமேயான் என்றது பொதுவான வ்யாப்தியைச் சொன்னபடி. இரண்டாமடியில் “மண்ணளந்தானென்னெஞ்ச மேயான்“ என்றது உலகளந்த திருக்கோலம் தம் நெஞ்சிலே பொலியும்படி காட்சி தந்தருள்கின்றமையைச் சொன்னவாறு. “இருள் நீக்கி“ என்றது வினையெச்சமன்று, பெயர்ச்சொல், இருளை நீக்குகின்றவன் என்கை. விளையெச்சமாக்கொண்டால், இருனை நீங்கச் செய்து அதனால் எம்பிரான் – எனக்கு உபகாரகனானவ் என்க. இப்படிப்பட்ட எம்பெருமான் நெஞ்சிற்கொள்ளமாட்டாத (துர்மாநியான) ரிஷபவாஹநனாகிய ருத்ரனுடைய வெவ்வினையுண்டு ப்ரஹ்மஹத்யாரூபமான பாபம், அதனைத்தீர்த்து, தன் காரியம் ஆனதுபோல் உவந்தவனான எம்பெருமானுக்கு என்னுடைய அன்பைச் செலுத்தினேன் என்றாராயிற்று.


  3861.   
  பேரே உறைகின்ற பிரான்*  இன்று வந்து* 
  பேரேன்என்று*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*
  கார்ஏழ் கடல்ஏழ்*  மலைஏழ் உலகு உண்டும்* 
  ஆராவயிற்றானை*  அடங்கப் பிடித்தேனே.

      விளக்கம்  


  • இதுக்கு முன்பு தான் ஸர்வேச்வரனாயிருந்தும் என்னோடு கலக்கப் பெறாமையினாலே குறைவாளானாயிருந்தவன் நிர்ஹேதுகமாக என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து பூர்ணனானானனென்கிறார். காரேழ் கடலேழ் மலையேழுலகுண்டு மாராவயிற்றான் என்று பின்னடிகளிலுள்ளது இப்பாட்டுக்கு உயிரானது. புஷ்கலாவர்த்தகம் முதலான மேகங்களேழையும் கடல்களேழையும் குலபர்வதங்களேயுமுடைத்தான லோகத்தையெல்லாம் ரகூஷித்துங்கூட என் செய்தோமென்று குறைபட்டிருந்தானும் ஆவ்வார் திருவுள்ளத்தல் வாஸம் கிடைக்கப் பெறாமையினாலே; அக்குறை தீர்ந்தாயிற்று இப்போது இக்குறை தீருகைக்காகத் திருப்பேர் நகாரிலே வந்து ஸன்னதி பண்ணியிருந்து ஸ்வல்ப வியாரிஜமாத்திரமே கொண்டு ஆழ்வார் திருவுள்ளத்திலே புகுந்தான். தாமரைப்பூவைவிட்டுத் தன்னுடைய திருமார்பிலே வந்து சேர்ந்த பிராட்டி ‘அகலகில்லேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததுபோல, தானும் பேரேன், பேரேன், (அதாவது, ஆழ்வாருடைய இத்திருவுள்ளததை விட்டுப் பேர்ந்து செல்லமாட்டேன், அகன்று போகமாட்டேன்) என்று சொல்லிக்கொண்டே புகுந்தானாம். பிரானே! நீ இங்கேயிருக்கப் போகிறாய்? புறப்பட்டுப் போகிறாய? என்று கேட்பாரு மின்றிக்கே யிருக்கச்செய்தே தானே ஆணையிட்டுப் பேரேன் என்கிறானாயிற்று. (என்னெஞ்சு நிறையப் புகுந்தான்) ‘நிறைய என்பது நெஞ்சிலே அந்வயிப்பதன்று; புகுந்தவனிடத்தே அந்வயிப்பது. என்னெஞ்சு நிறையும்படி புகுந்தானென்று பொருளன்று; என்னெஞ்சிலே புகுந்தான்; (எப்படி புகுந்தானென்னில்;) நிறைய -இதனால் தான் பூர்ணனாம்படி புகுந்தான என்கை.


  3862.   
  பிடித்தேன் பிறவி கெடுத்தேன்*  பிணிசாரேன்* 
  மடித்தேன் மனைவாழ்க்கையுள்*  நிற்பதுஓர் மாயையை*
  கொடிக் கோபுரமாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
  அடிச்சேர்வது எனக்கு*  எளிதுஆயின வாறே.

      விளக்கம்  


  • எம்பெருமான் நிர்வேஹதுகமாகத் தம்மோடே வந்து கலந்தபடியைச் சிந்தித்து இவன் திருவடி எனக்கு இப்படி எளிதானவாறு என்னே என்று வியக்கிறார். பிடித்தேன்-எம்பெருமானை இனியொரு நாளும் பிரியாதபடி சிக்கெனப்பிடித்தேன். (பிறவி கெடுத்தேன்) திறந்து கிடந்த வாசல்தோறும் நுழைந்து திரியும் ஜந்துபோல இதுவரையில் எத்தனையோ யோன்கிளில் நுழைந்து புறப்பட்;ட யான “புநரபி ஜநநம் புநரபி மரணம் புநரபி ஜநநீ ஜடரே பதநம்” என்னும்படியான நிலைஇனி நேராதபடி செய்துகொண்டேன். (பிணிசாரேன்) பிறவியைக் கெடுத்த பின்பு, பிறவியைத் தொற்றிவரும் பிணிகளையும கெடுத்தேனானேன். (மனைவாழ்க்கையுள் நிற்பதோர்மாயையை மடித்தேன்) அநாதிகாலந் தொடங்கி இன்றருளவுஞ் செல்லுகிற இந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தையும் நிவர்த்திப்பித்தேன். ஸம்ஸாரத்தில் நிற்கைக்கடியான மூலப்ரக்ருதியை உருவழித்தேனென்கை. இங்கே ஒரு ஐதிஹ்யமுள்ளது ஈட்டில்: “எம்பெருமானார் உலாவியருளுகிறவர் முடியப்பொகாதே நடுவே மீண்டருள, எம்பார் கதவையொரச்சாரி;த்து திருமாலிருஞ்சோலை யாகாதே திருவுள்ளத்திலோடுகிறது? என்ன; ஆம் அப்படியே யென்றரளிச்செய்தார் என்பதாக. இதைச் சிறது விவாரிப்போம்; புக்தவா சதபதம் கச்சேத் (போஜனம் செய்தவுடனே நுற்றடி நடந்து உலாவவேண்டும்) என்று சாஸ்த்ரமாகையாலே; இதையநுஸாரித்து எம்பெருமானார் பிiகூஷயானவுடனே மடத்திற்குள்ளே உலவாவாநின்று அப்போது திருமாலிருஞ்சோலை வாய்மொழியை அநுஸந்தானம் செய்து கொண்டிருக்கையாலே இப்பாட்டில் மடித்தேன் என்ற விதற்குச்சேர, மேலே போகாமல் திரும்பியருளினார். இதைக் கதவின் புரையாலே எம்பார் கண்டு அஹே பாதம் அஹிரேவ ஜாநாதி என்கிற ர்தியில் தத்துவாமறிந்து, இப்போது இன்ன திருவாய்மொழி யஎஸந்தானமன்றோ திருவுள்ளத்திலோடுகிறது! என்றாராம். ஆம் என்று விடை யிறுத்தராம் எம்பெருமானார். கொடிக் கோபுர மாடங்கள் சூழ்திருப்பேரானடிச் சேர்வது எனக்கு எலிதாயினவாறே!-கொடிகளணிந்த கோபுரங்களையும் மாடங்களையு முடைத்தான திருப்பேர் நகாரிலே நித்ய வாஸ்செய்தருளு மெம்பெருமானுடைய அடி சேருயைற்கிற விது எனக்கு எளிதாயினவாறு என்னே!. இங்கே பரமபோக்யமான ஈட்டு ஸ்ரீஸூக்தி -“அறுகம் புல்லையிட்டுக் கண்ணைப் புதைத்துக்கொள், சாணகச் சாற்றைக்குடி, தலையைக் கீழே நடு, காலை மேலேயெடு என்று அருந்தேவைகளை சாஸ்த்ரம் சொல்லாநிற்க, எனக்கு இங்ஙனே யிருப்பதொரு மூலையடிவழி உண்டாவதே.” என்று. திருப்பேரான் என்ற விடத்து ஈட்டில் “திருப்போரிலே நிற்கிறவன்” என்றருளிச் செய்திருப்பதைக் காண்பவர்கள் ‘திருப்போரிலே சயனத்திருக்கேரலமன்றொ? நின்ற திருக்கோலமாக அருளிச்செய்தபடி யெங்ஙனே? என்று சங்கிப்பர்கள். நிற்கிமுவன் என்றது ஸ்தாவர ப்ரதிஷ்டையாகக் கிடப்பவன் என்ற பொருளிலே பணித்ததாகை யாலே சங்கைக்கு இடமில்லை.


  3864.   
  வானே தருவான்*  எனக்காய் என்னோடுஒட்டி* 
  ஊன்ஏய் குரம்பை*  இதனுள் புகுந்து*  இன்று-
  தானே தடுமாற்ற*  வினைகள் தவிர்த்தான்* 
  தேனேய் பொழில்*  தென்திருப்பேர் நகரானே.

      விளக்கம்  


  • திருப்பேர் நகரான் எனக்குத் திருநாடு தருவதாகச் சபதம் செய்து விரோதிகளையும் போக்கியருளிச் னென்கிறார். வானே தருவானெனக்காய் -எனக்கு வானே தருவானாய் என்று இயைத்துக்கொள்வது. என்னை இங்கே வைத்து, தொண்டர்க்கமுதுண்ணச் சொன் மாலைகள் சொல்லுவிக்குஞ் காரியம் தலைக்கட்டு கையாலே இங்குநின்றுங் கொண்டுபோய்த் திருநாட்டிலே வைப்பதாகக் கருதினான். அநாதிகாலமாக ஸம்ஸாரியாய்ப் போந்தவெனக்கு நிதய ஸூரிகளிருப்பைத் தருவானாக ஸங்கல்பித்ருளினான். என்னோடு ஒட்டி-என்னோடே சபதம்பண்ணி யென்றபடி. எவ்விதமான சபதமென்னில்; இன்று ஆழ்வார்க்குத் திருநாடு கொடுப்பதோ, அல்லது திருநாட்டுக்குத் தலைவனென்னும் பெயரை நானிழப்பதோ இரண்டத்தொன்று செய்யக்கடவேன் என்ற சபதமாகக் கொள்ளலாம். இவ்விடத்து இருப்பத்துநாலாயிரப்படியிலும் ஈடு முப்பத்தாறாயிரப்படியிலும் அராவணமராமம் என்று என்னோடு ஸமயம்பண்ணி என்கிற ஸ்ரீஸூக்தியுள்ளது. இதனால் கீழே முதற்பத்தில் யானொட்டி யென்னுள என்கிற பாட்டில் அத்யமே மரணம் வாபி தரணம் ஸாதரஸ்ய வா என்கிற ஸ்ரீராமயண ச்லோவில்லை” என்று அருளிச்செய்திருந்த ஸ்ரீஸூக்திப ற்டஸ்கலனத்தாலே “இத்தை முடித்தல் கடத்தல்” என்று விழுந்திட்டு விபாரிதார்த்ப்ரத்யாயகமாய் விட்டதென்று நாம் மிக விர்வாக நிருபணம் பண்ணியிருந்தது நன்றேயென்று ஸ்தாபிதமாயிற்று. எங்ஙனே யென்னில்; அராமண மராம் வா என்ற இந்த ப்ரதிஜ்ஞையும் அத்ய மே மரணம் வாபி தரண்ம் ஸாகரஸய் வா என்ற அந்த ப்ரதிஜ்ஞையும் ஒத்திருக்க வேணுமென்பது சொல்லாமலே விளங்கும். ‘இராவணணையாவது தொலைக்கிறேன், அல்லது இராமனாகிற நானாவது தொலைந்து போகிறேன்’ என்று இவ்விடத்து ப்ரமாணத்திற்குப் பொருளாவது போல. ‘கடலையாவது கடக்கிறேன், அல்லது நானாவது முடிந்துபோகிறேன்’ என்றே அவ்விடத்திற்குப் பொருளாவது தான் பொருத்தமென்பதை மத்யஸ்த த்ருஷ்டிகள் உணர்வார்கள். ஊனெய் குரம்பை இத்யாதியின் கருத்தாவது-ஆழ்வீர்ளும்மை இவ்வுடம் போடே கொண்டுபோவதாக விளம்பித்தோம்; ஆனாலும் ளும்முடைய நிர்ப்பந்தத் தாலே இவ்வுண்டம்பை யொழியவே கொண்டுபோவதாக முடிந்தது; இனி ஆறியிருப்பேனோ வென்று சொல்லி, மாம்ஸாதிமாய் ஹேயமான இந்த சாரிரத்தினுள்ளே புகுந்து, தன்னைப் பிரிந்து தடுமாறுகைக் கடியான புண்ய பாபரூப கருமங்களைத் தானே தவிர்த்தருளினானென்கை.


  3866.   
  உண்டு களித்தேற்கு*  உம்பர்என் குறை*  மேலைத்- 
  தொண்டு உகளித்து*  அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்*
  வண்டு களிக்கும் பொழில்சூழ்*  திருப்பேரான்* 
  கண்டு களிப்ப*  கண்ணுள்நின்று அகலானே.

      விளக்கம்  


  • கீழ்பாட்டில் களித்தேனே யென்று களிப்பை ப்ரஸ்தாவித்தார்; அக்களிப்பை ஆர அமரப் பேசுகிறாரிப்பாட்டில். உண்டு களித்அதற்கு கு ளும்பர்என்குறை?- இங்கிருந்தே இப்படிப்பட்ட அநுபவம் பெற்றுக் களிப்பதைவிட பரமபதாநுவத்தில் என்ன விசேஷமுள்ளது? அதில் அவேiகூஷயுடையோமல்லோம் என்பது கருத்து. மேலைத் தொண்டு உகளித்து-மேலான தொண்டு-திருவாய்மொழி பாடுகை; அதனால்லுண்டான உகப்பானது தலைமண்டையிட்டு (அதாவது) அதிசயித்து. அந்தியாலே தொழுஞ் சொல்லுப்பெற்றேன் -முமுகூஷூப்படியில் “அந்திதொழுஞ் சொல்லென்கையாலே பலஞ் சொல்லிற்று” என்றருளிச்செய்தது இங்கே அநுஸந்தேயம். கைங்கரிய தொழுஞ்சொல் நமச்சப்தம்; இதுதான் முடிவான பேறு; அதனையும் இங்குப் பெற்றேன் என்றாராயிற்று. நம இத்யேவ வாதிந: (வண்டு களிக்கும் இத்யாதி) -வண்டுகள் மதுபானம் பண்ணிக் களிக்கிற போழில்காளலே சூழப்பட்ட திருப்பேர் நகாரிலே வர்த்திக்கிற பெருமான் உன்னை மெய்கொள்ளக் காண விருன்பு மென் கண்களே என்று விடாய்த்த எனது கண்கள் கண்டு களிக்கும்படியாகக் கண்ணுக்கே இலக்காயிரா நின்றான்; நான் போகச் சொல்லிடும் கண்வட்டத்தில் நன்றும் அகலுகிறானல்லன். இப்படி அவழன யநுபவித்துக் களிக்கப்பெற்றவெனக்கு மேலொரு குறையுண்டோ? என்றதாயிற்று.


  3867.   
  கண்ணுள் நின்று அகலான்*  கருத்தின்கண் பெரியன்* 
  எண்ணில்நுண் பொருள்*  ஏழ்இசையின் சுவைதானே*
  வண்ணநல் மணிமாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
  திண்ணம் என்மனத்துப்*  புகுந்தான் செறிந்துஇன்றே. 

      விளக்கம்  


  • பரமபோக்யனான திருப்பேர் நகரான் என்பக்கலிலே வ்யாமோஹமே வடிவெடுத்தவனாய் ஒருநாளும் விட்டு நீங்கமாட்டாதரனாய் என்னெஞ்சிலே வந்து புகுந்தானென்கிறார் (கண்ணுள் நின்று அகலான்) ஸதா பச்யந்தி ஸூரய என்கிற படியே ஸதாதர்சனம் பண்ணுவதற்கு இடமாக ஒரு திருநாடு இருப்பதாக நினையாதே இங்கேயே ஸதாதர்சனமாம்படி யிராநின்றான். (கருத்தின்கண் பெரியன்) கருத்தாவது மனோரதம்; அதில்பெரியனம என்றது-பெரிய பெரிய மனோரதங்களைப் பண்ணா நின்றானெ;னறபடி. தம்மைப் பரமபதற்தெறக் கொண்டு போவதிலும், ஆதிவாஹகரை நியமிப்பதிலும், தான் முன்னே துரந்தரனாய்க் கொண்டுபோமதிலும் அவன் பார்க்கிற பாரிப்பு தம்;மாலெண்ணி முடிக்குந் தரமன்று என்றவாறு. (எண்ணில் நுண்பொருள்) எத்தனை தூரம் ஆராய்ந்து பார்த்தாலும் இது புரிந்துகொள்ள முடியாத ஸூகூஷ்ம விஸயமென்பது கருத்து. அவருடைய பாரிப்பு நம்மால் வாய்கொண்டு சொல்லவெண்ணாத மாத்திரமன்று; நெஞ்சுக்கும் எட்டாதபடி கஹனமானது என்கை. (பழிசையின் சுவைதானே) பரமரஸிகன் என்னலாமத்தனை, ஸப்தஸ்வரங்களுக்கு மேற்பட்ட போக்யமான வஸ்து இல்லை; அந்த ஸப்தஸ்வரங்களின் சுவையே வடிவெடுத்தவெனன்று அவருடைய ராஸிக்யத்தைக் குலாவாமேயொழிய ஆழ்வாரளவிலே அவன்கொண்ட பாரிப்புகளை நெஞ்சாலும் நினைக்கப்போகாது என்றதாயிற்று.


  3868.   
  இன்று என்னைப் பொருளாக்கி*  தன்னை என்னுள் வைத்தான்* 
  அன்று என்னைப் புறம்போகப்*  புணர்த்தது என் செய்வான்?*
  குன்றுஎன்னத் திகழ்மாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
  ஒன்று எனக்குஅருள்செய்ய*  உணர்த்தல்உற்றேனே. 

      விளக்கம்  


  • எம்பெருமான் பதில் சொல்லுவதாயிருந்தால் எவ்விதமாகச் சொல்லலாம்? என்று பாரிப்போம் ‘ஆழ்வீர்முன்பு உமக்கு ருசியில்லாமையாலே நாம் உபேகூஷித்திருந்தோம்; இன்று நீர் ருசிபெற்று ஸதாநுஷ்டாநமும் பணிணனீராகையாலே ஆத்ரம் செய்தோம்; என்று ஒரு பதில் சொல்லலாம்; ஆனால் அப்படி சொல்வதற்கு இங்கு விஷயமில்லை. இவர் தலையிலே ஒரு ஸாதனாநுஷ்டானம் காணாமையாலே. ஆனாலும் ஒரு பதில் சொல்லலாம்-“என்;னுடைய ப்ரவ்ருத்திக்கு விரோதியான ஸ்வப்ரவ்ருத்தியிலே நீர் இதுவரையில் ஊன்றியிருந்தீர்; அது என்னை விலக்கின படியாயிருந்தது; விலக்காத ஸமய்ம் எதிரிபார்த்திருந்தேன்; அது இப்போது கிடைத்தமையாலே ளும்மை யாதாரித்தேன்; அன்றியும், என்னைத் தவிர்நத மற்றவற்றில் ஸாதநத்வ புத்திபண்ணிப் போந்தீர் இதுகாறும்; இப்போது அது தவிர்ந்து என்னையே உபாயமாகக் கொண்டீர்; ஆதலால் ஆதாரித்தேன்” என்று சொல்லலாம். ஏன் இந்த பதிலை எம்பெருமான் சொல்லவில்லையென்னில்; இதுவொரு பதிலாகுமோ? அசட்டுத்தனமான பதில்றோவிது; சைதந்ய ப்ரயுக்தமாய் வருகிற அத்வேஷயபரியாயமான ருசியை ஸாதநமென்ன வொண்ணுமோ? உபாயத்வத்தை பேறிட்டுச் சொல்ல எப்படி முடியும்! நம்முடைய ஸ்வாதந்திரியத்தாலேயே உபேகூஷித்திருந்தோம், ஸ்வாதந்திரியத்தாலேயே ஆதாரித்தோம்; இதை ஆழ்வார் நன்கு தெரிந்துகொண்டு கேள்வி கேட்கிறாராகையாலே இவர்க்கு நாம் ஒரு பதிலும் சொல்லிப் பிழைக்க முடியாதென்று பேசாதே கிடந்தான். ஆசாரிய ஹ்ருதயத்தில் இரண்டாவது ப்ரகரணத்ததில் (102) “இடகிலேன் நோன்பறிவிலேன் கிற்பன் கீழ்நாள்களென்கையாலே ஸாதநத்ரய் பூர்வாப்யாஸஜ மல்ல” என்று தொடங்கி (113) “வரலாற்றில்லை வெறிதே யென்றறுதியிட்டபின் வாழ்முதலென்கிற ஸூக்ருத மொழியக் கற்பிபக்கலாவதில்லை” என்கிற சூர்ணையளவும்; மேலே நானகாம ப்ரகரணத்தில் (228) “இன்று அஹேதுகமாக ஆதாரித்த நீ அநாத்யாநாதரஹேது சொல்லென்று மடியைப் பிடிக்க …… இதுவும் நிருத்தர மென்று கவிழ்ந்து நிற்க” என்றருளிச் செய்ததும் மணவாள்மாமுன்கிளின் வியாக்கியானத்தோடும் நம்முடைய விசேஷ விவரணங்களோடும் இங்கே அநுஸந்தேயம். நாஸெவ புருஷகாரேண நாசாப்யந்யேந ஹேதுநா கேவலம் ஸ்வேச்சயைவாஹம் பிரேNகூஷ ஞ்சித் கதாச்ந என்றவனிறே அவன்தான்.


  3869.   
  உற்றேன் உகந்து பணிசெய்து*  உன்பாதம்- 
  பெற்றேன்*  ஈதே இன்னம்*  வேண்டுவது எந்தாய்*
  கற்றார் மறைவாணர்கள்சூழ்*  திருப்பேராற்கு* 
  அற்றார் அடியார் தமக்கு*  அல்லல் நில்லாவே.  (2)

      விளக்கம்  


  • ஈட்டு ஸ்ரீஸூக்திகள் சாஸ்த்திரார்த்தமே வடிவெடுத்தவை காணீர்;- “அவன் தானே செய்தானென்எமன்று அவருக்கு வைஷம்யமும் நைர்க்ருண்யமும் ஸர்வ முக்தியும ப்ரஸங்கியாதோவென்னில், இத்தலையதில் ருசியையபே கூஷித்துச் செய்கையாலே அவருக்கு அவை தட்டாது. அது ஹேதுவென்று ஈச்வரனுக்கு உத்தரமானாலோ வென்னில்; அது உபாயமாக மாட்டாது, பலவியாப்தமான திறே உபாயமாவது. இந்த ருசி அதிதார்ஸ்வரூபமாகையாலே தத்வதிசேஷணமாமித்தனை. உபாயம் ஸஹகாரிநிரபேகூஷமாகையிலும் இந்த ருசி உபாயமாக மாட்டாது. இது உபாயமாகாமையாலே இவர்க்கு இல்லையென்னலாம்; ஸர்வமுக்தி ப்ரஸங்க பாரிஹாரர்த்தமாக அவருக்கு உண்டென்னவுமாம்” என்று. சாஸ்த்ரார்த்த நற்றெளிவை நன்கு பிறப்பிக்க வல்ல இந்த ஸ்ரீஸூக்திகளைக் கண்டுவைத்தும் சிலர்இத்திலையிலுள்ள ஸ்வல்பத்தை உபாயமென்று கூறி முஷ்டி பிடிப்பது வியப்பே. உற்றேன்- நிமஜ்ஜதோந்த பவார்ணவாந்தச் சிராய மே கூலமிவாஸி லப்த: என்ற ஆளவந்தர் ஸ்ரீஸூக்தியை இதற்குச் சந்தையாக அநுஸந்திப்பது. உகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன் -இங்குப் பணி செய்தலாகச் சொல்லுகிறது திருவாய்மொழி பாடுகையை. உகந்து பணிசெய்கை ஸாதனமாய், அதற்கு ஸாத்யம் வேறொன்று இருப்பதாக ஆழ்வார் திருவுள்ளமன்று; உகந்து பணி செய்கையும் பாதம் பெறுகையும் ஒன்றேயாகக் கொள்க. ஈதே யின்னம் வேண்டுவது என்பதனால் இது விளக்கப்பட்டதென்க. இனி பின்னடிகள் பொதுவான லோகோக்தியாகச் சொல்லுகிறபடி. (கற்றார் மறை யித்யாதி.) குருகுலவாஸம் பண்ணிப் போது போக்கினவர்களாய் வேதத்துக்கு வ்யாஸபதம் செலுத்தவல்லவர்களான மஹான்கள் அநுபவித்து வர்த்திக்குமிடமாம் திருப்பேர்நகர்; அவ்விடத்து உறையும் பெருமாளுக்கு அற்றுத்தீர்ந்த வடியார் களுக்கு துக்க ப்ரஸக்தி யுண்டோ வென்றாராயிற்று “திருப்பேராற்கு” என்றதை முன்னிலையில் வந்த படர்க்கையாகக்கொண்டு இதுவும் எம்பெருமானை நோக்கியே சொல்லுகிறதென்று கொள்ளலும் நன்றே. திருப்பேராற்கு-திருப்போரிலே வர்த்திக் கிறவுனக்கு என்றபடியாம். அற்றாரடியார் தமக்கு - அற்றவாகளான அடியவாரானாக்கு என்று இருவகையாகவும் பொருள் கொள்வர்.


  3870.   
  நில்லா அல்லல்*  நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்* 
  நல்லார் பலர்வாழ்*  குருகூர்ச் சடகோபன்*
  சொல்லார் தமிழ்*  ஆயிரத்துள் இவைபத்தும்- 
  வல்லார்*  தொண்டர்ஆள்வது*  சூழ்பொன் விசும்பே.  (2)

      விளக்கம்  


  • இத்திருவாய்மொழி கற்கைக்குப் பரமபத ஸாம்ராஜ்யமே பலனென்றருளிச் செய்கிறார். திருப்பேர் நகர்க்கு ‘நீள்வயல்சூழ்’ என்பது போல ‘நில்லா வல்லல்’ என்பதும் ஒரு விசேஷணமாயிருக்கிறது. துக்கங்களானவை ‘இது நமக்கு உறைவிடமன்று’ என்று தானேவிட்டு ஓடிப்போம்படியான இடமாம் திருப்பேர் நகர். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தலத்தையுத்தேசித்து ஆழ்வாரருளிச்செய்த இப்பதிகம் வல்லார் யாவரோ அவர்களிட்டது சட்டமாயிருக்கும் திருநாடு என்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.