திருக்கூடல்

கூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது.[1][2] இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன.[3] இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகர்’. மாடத்தில் பள்ளிகொண்டிருக்கும் கோலம் அந்தர வானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது.[4] தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரம் இதனை ‘உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்’ என்று குறிப்பிடுகிறது. இதற்கு உரை எழுதும் ‘அரும்பதவுரை’ இதனை ‘ஸ்ரீ இருந்த வளமுடையார்’ என்று தெரிவிக்கிறது. அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் இக்கோயிலுடைய பெருமாளை ‘அந்தர வானத்து எம்பெருமான்’ எனக் குறிப்பிடுகிறார். இருந்தையூரில் ‘இருந்தையூர் இருந்த செல்வ’ என்னும் பரிபாடல் [5] தொடருக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதும்போது ‘இது வைகைக்கரைக் கண்ணது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமைவிடம்

கூடல் அழகர் பெருமாள் கோயில் மாநிலம்: தமிழ்நாடு அமைவு: மதுரை,

தாயார் : ஸ்ரீ மதுர வல்லி
மூலவர் : கூடல் அழகர்
உட்சவர்: --
மண்டலம் : பாண்டியநாடு
இடம் : மதுரை
கடவுளர்கள்: கூடல் அழகர்,ஸ்ரீ மதுர வல்லி