- முகப்பு
- திவ்ய தேசம்
- திருப்புல்லாணி
திருப்புல்லாணி
திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் சேதுக்கரை உள்ளது. ராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாளும், சயனராமரும் அமைந்துள்ளனர். [2] தலவரலாறு புல்லவர், காலவர், கண்ணவர் எனும் மூன்று மகரிஷிகளின் தவத்திற்காக பெருமாள் அரச மரமாகவும் ஆதிஜெகநாதப்பெருமாளாகவும் காட்சியளித்த திருத்தலம். இந்த ஜெகந்நாதர் தசரதருக்கு ராமபிரான் அவதாரம் புரிய அருளியவர் என்பதால் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார். சீதையை மீட்க இலங்கைக்கு கடலில் பாலம் அமைக்க சமுத்திர ராஜனை அழைக்க மீன்களுக்கு இடையேயான வழக்கை தீர்த்து வைக்கச் சென்றதால் அழைப்பிற்கு உடனே வராமல் சமுத்திர ராஜன் தாமதிக்கவே கரையில் மூன்று நாட்கள் ராமபிரான் தங்கியிருந்த திருத்தலம். தாமதமாக வந்த சமுத்திர ராஜன் காரணம் கூறி மன்னிப்பு வேண்டினார்.இந்த சமுத்திரராஜன் சமுத்திரராணியுடன் சயனராமர் சன்னதியின் முன்மண்டபத்தில் அமைந்துள்ளனர்.
அமைவிடம்
திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயில்
ஊர்: திருப்புல்லாணி
மாவட்டம்: ராமநாதபுரம்
தொலைபேசி எண்: +91-4567- 254 527; +91-94866 94035,
தாயார் : ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநி த் தாயார்
மூலவர் : ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன்
உட்சவர்: --
மண்டலம் : பாண்டியநாடு
இடம் : ராமநாதபுரம்
கடவுளர்கள்: தர்பசயன ராமர்,பத்மாசினி
திவ்யதேச பாசுரங்கள்
-
1768.
“தன்னைநைவிக்கிலேன்” என்கிறபாடமே இதுவரை நாம் அறிந்திருந்தது; ஒரு பெரியார்“தன்னை நைவிக்கில் என்” என்கிற பாடத்தைத் தெஜீவித்தருளக் கேட்டபின் அதுவே மிகவும் பொருத்தமான பாடமொன்று தோன்றிற்று. மேலே “உருகி நெஞ்சே நினைந்திங்கிருந்தென்?” “எள்கி நெஞ்சே நினைந்திங்கிருந்தேன்?” என்கிற பாசுரங்களின் நடைக்கு இது மிகவும் சேருமன்றோ. நாம் வெறுமனே நைந்து கொண்டிருப்பதனால் என்ன பயன் என்றபடி. பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்திற்கு மிணங்கியதே இப்பாடம். திருப்புல்லாணிக்கு இரண்டு விசேஷணங்களுள்ளன; இரண்டாமடியும் மூன்றாமடியுஞ் சேர்ந்து முதல் விசேஷணம். நம்மோடு கலந்து பிரிந்துபோன பெருமான் உறையுமிடம் என்கை. செருந்தி என்று ஸுரபுன்னைக்குப் பெயர். அதன் மலர்களும் தாதுகளும் பொன்னிறமாயிருக்குமாதலால் “பொன்னைநைவிக்கு மப்பூஞ்செருந்தி” எனப்பட்டது. பொன்னை நைவித்தலாவது-நிறத்தினால் தோற்பித்தலாம். “மணி நீழல்வாய்” என்று மிகுதியாக வழங்கிவரும் பாடம் மறுக்கத்தக்கது. “நிறமும் மணமும் நிழலும் இவை யெல்லாமுண்டாயிக்கிறபடி. ஓரிந்த்ரியங்கொண்டு ஒதுங்க நிழலில்லை திடீர் ஸர்வேந்த்ரியா பஹார;மமான் தேசம். ச;ரிந்த்ரியத்துக்கு நிறம்; க்ராணேந்த்ரியத்துக்கு மணம்; ஸ்பர்சேந்த்ரியத்துக்கு நிழல்” என்ற வியாக்கியான வாக்கியங்கள் காண்க. அழகிய நிறமும் மணமுமுடைத்தான புன்னைப் பொழிலின் நிழலிலே ஸம்ச்லேஷித்து என் மேனி நிறத்தைக் கொள்ளைகொண்டு என்னை வெறுந்தரையாக்கிவிட்டு அகன்றுபோன பெருமாணுறையுமிடமான திருப்புல்லாணியைத் தொழுவோம் நெஞ்சே! புறப்படு என்றாளாயிற்று. அவன் வஞ்ச கள்வன் மாமயனாகையாலே தன் காரியத்தைச் செய்தான்; நாம் சேஷபூதராகையாலே நம் காரியத்தைச் செய்வோமென்றவாறு.
நெஞ்சமே! இவ்விடத்திலிருந்து கொண்டு அப்பெருமானைச் சிந்தித்து உருகுவதனால் என்ன பலணுண்டாம்? நம்முடைய உருக்கம் தீரவேணுமானாலும் நம்முடைய உருக்கம் தீரவேணுமானாலும் நம் முடைய சிந்தனை தீரவேணுமானாலும் இங்கிருப்பதில் பயனில்லை; புல்லாணியே போய்த் தொழவேணுங்காண். அவ்விடத்தில் வண்டு முதலிய திர்யக்ஜந்துக்களும் தம்தம் அபிமதம் பெற்றுக் களித்து வாழ்கின்றனவாதலால் நாமும் அங்குப்போய் அபிமதம் பெற்றுக் களித்துவாழப் பெறலாமன்றோ என்கிறாள்.
உலகிலுள்ள ஸாமாந்ய ஜனங்கள் தங்கள் தங்கள் காதலரைக்கூடிப் பிரிந்தால் கூடியிருந்தபோது மறக்கமாட்டாதவர்களாய்ப் பிரிந்தபோது நினைக்கமாட்டாதவர்களா யிருப்பர்கள்; ஆழ்வார்களின்படி அப்படியன்றே; எனையூழிகள் பிரிந்தாலும் மறக்கமாட்டார்களே. உலகத்தார்படிக்கு விலக்ஷணமாயன்றோ இவர்களுடைய படியிருப்பது. நாட்டாரைப் போலே இவர்களும் பிஜீவில் மறந்திருக்க வல்லவர்களாகில் ஆறியிருக்கலாமே. மறக்க வழிதெரியாமையன்றோ படாதபாடுகளும் படுகிறார்கள். மறப்பதற்கு ஏதேனும் வழியுண்டோவென்று பார்க்கிறாள் பரகாலநாயகி; ;ஏது செய்தால் மறக்கேன் மனமே!; என்கிறாள். மறந்து பிழைக்க மருந்து தருவாருண்டோ வென்கிறாள் போலும். “மறப்பதற்கு வழிதேடுகிறவிவள் புல்லாணியே தொழுதுமெழு” என்கிறார்களே, இது கூடுமோ? என்னில்; இதற்கு இரண்டு வகையாக அருளிச்செய்வர் பெரியவாச்சான்பிள்ளை. நாட்டாருடைய ரீதியிற்காட்டில் இவர்களுடைய ரீதி வேறுபட்டிருப்பதால், அப்பெருமானைக் கிட்டினால்தான் மறக்கலாமோ பார்ப்போம் என்று கிட்டப்பார்க்கிறாள் என்பது ஒன்று. (பிரிந்தகாலத்தில் மறந்தொழிவது நாட்டார்படியாகில் இவர்களுடைய படி அதற்கு எதிர்த்தடையாகும்போது, கிட்டினகாலத்தில் மறப்பதாக வேணுமே என்கை.) இனி, எதைப்பெற வேணுமானாலும் எம்பெருமானிடத்துப் பிரார்த்தித்தே அவன் வழி யாகப் பெறவேண்டி யிருத்தலால் மறக்கும் வழியைப் பிரார்த்தித்துப் பெறுவதற்காகவே புல்லாணியைத் தொழப்பார்க்கிறாள் என்பது மற்றொன்று. இங்கே கம்பீரமான வியாக்கியான ஸ்ரீஸூக்கள் காண்மின்:- “நாட்டார் தந்தாமுடைய அபிமதரைப் பிரிந்தால் கூடினபோது மறக்கமாட்டாராய்ப் பிரிந்தபோது நினைக்கமாட்டாரா யிருப்பாள். இங்கு அங்ஙனன்றிக்கே பிஜீவில் மறக்கவொண்ணாத படியா யிராநின்றது. இனி அவர்கள் படியன்றிக்கே நம்மது விஸஜாதீயமாயிருந்த பின்பு கிட்டினால்தான் மறக்கலாமாகில் பார்ப்போம் மனமே! போந்துகாணாயென்கிறாள். இவள் படி வ்யரவ்ருத்தமாயிறே யிருப்பது .......... மறக்கைக்கும் தொழவேணும் போலே காணும்; ஏதேனுமாக அபிமதலாபம் தொழுகையால்லது இல்லையாயிருந்தது.” தான் தொழநினைக்கிற திருப்புல்லாணிக்கு விசேஷண மிடுகிறாள் “தாது மல்கு தடஞ்சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து, பின் பேதை நின்னைப் பிரியேனினியென்றகன்றோ னிடம்” என்று பிரியக்கூடாத நிலத்திலே பிரிந்து வஞ்சித்த பெருமான் உறையுமிடம் என்று அத்தலத்திற்கு இதனையே நிரூபகமாகச் சொல்லுகிறபடி, ஒருநீராகப் புணர்ந்த காலத்திலே ;பேதாய்! காலமுள்ளதனையும் இப்படியே கூடியிருப்பே னத்தனையன்றி ஒரு நாளும் பிரியமாட்டேன்; என்று சொல்லிவைத்து உடனே பிரிந்து சென்ற கொடுமையை நினைக்கிறாள். நித்ய வஸந்தமான திருப்புல்லாணியைச் சென்று தொழுவோம் நெஞ்சமே! எழுந்திரு என்றாளாயிற்று.
தோழியை நோக்கிச் சொல்லுகிற பாசுரமிது. பரகால நாயகி தனது உயிர்த்தோழியை நோக்கி ;திருப்புல்லாணியே சென்று தொழுவோம் புறப்படு; என்றாள்; ;அங்குச் செல்ல வேண்டுவது ஏதுக்காக?; என்று கேட்டாள் தோழி. ;நம்முடைய தலைமகள் வர்த்திக்கிற தேசமன்றோ அது; என்றாள் தலைவி, ;நம்முடைய தலைமகன் என்று நீ சொல்லும்படி அவனுக்கும் உனக்கும் ஏதேனும் உறவு நேர்ந்ததுண்டோ?; என்று கேட்டாள் தோழி. ;ஏன் நேரவில்லை, நன்றாக நேர்ந்ததுண்டு; வந்து கலவி செய்த துண்டோ; என்றாள் தலைவி. ;அப்படியாகில் அதற்கு யாரேனும் ஸாக்ஷியுண்டோ?; என்றாள் தோழி. ஸாக்ஷிகளுண்டாகில் அவர்களையுங் கூட்டிக்கொண்டு சென்று அப்பெருமானை வளைத்து வடிம்பிடலாம் என்ற கருத்தாலே கேட்டாள். அதற்கு “கொங்குண்வண்டே கரியாகத்தான் கொடியேற்கு” என்கிறாள் தலைவி; அநதோ! ரஹஸ்யமாக வந்து கலந்து போனாளே!; அவனும் நானுமேயாம்படியன்றோ வந்தது; தன்துளபமாலையில் மதுபானம் பண்ணுகிற வண்டே ஸரக்ஷியாக வந்து போனானித்தனையே என்கிறாள். அந்த வண்டீனுடைய பாக்கியமும் ஒரு பாக்கியமே!; நான் உபவாஸத்தாலே மெலிந்துகிடக்க, அது தேனைப் பருகிக் களித்திருக்கிறபடி என்னே! என்கிறாள். ஒருநாளும் தாம் நோவுபடாதே பிறர்நோவு மறியாதே உண்டு களித்துத் திரியுமவர்கள் பிறர்க்குக் காரியம் செய்வதுண்டோ? உலகில் இல்லையன்றோ! அப்படியே அந்த கொங்குண்வண்டுகளும் நமக்கு ஸாக்ஷியம் சொல்ல மாட்டாவே! என்பதாகக் கொள்க. தகுந்த ஸாக்ஷிகளை வைத்து ஸம்ச்லேஷிக்கமாட்டாத பாவியானேனென்று தன்னைப் பொடிந்து கொள்ளுகின்றமைதோன்றக் ;கொடிமேற்கு; என்கிறாள். ஸாக்ஷிகளில்லையாகிலும் ஸம்ச்லேஷ காலத்தில் அவன் சொன்ன வார்த்தைகள் தானும் ஏதேனுமுண்டோ? என்று கேட்டாள் தோழி; ;கலவியில் நமக்குச் சொன்ன பாசுரங்கள் பலவுண்டு; நான் பிரியமாட்டேன் ; பிரிந்தால் தரிக்கமாட்டேன் ; உடனே வந்து கூடியே விடுவேன் ; பிரிந்து வருந்துவாருடைய வருத்தத்தைத் துளியும் காணமாட்டேன் ; பரமதயாளுத்வமே என்னுடைய பிரகிருதி காண் - என்றாற் போலே சொன்ன பாசுரங்களுக்கு அளவுண்டோ? அதன்படி ஒன்றும் செய்திலனே, அர்த்தமில்லாத வார்த்தைகளை யன்றோ சொல்லிப் போனாள் என்கிறாள்.
கீழ் மூன்றாம்பாட்டில், மறக்கமுடியவில்லை யென்றாள்; இப்பாட்டில் நினைக்க முடியவில்லை யென்கிறாள்; மறப்பது நினைப்பது என்று இரண்டு உண்டு; அவையிரண்டு அருமைப்படுகின்றன போலும் இவர்கட்கு. எதையேனும் நினைத்துக் காலங்கழிக்க வேண்டுதலால், காலக்ஷேபத்துக்காக நினைக்கில் அது ஆச்ரயத்தை வேவச் செய்யா நின்றது; நடந்தவற்றை நினைத்தவாறே நெஞ்சு கொதிக்கின்றதே! என்கிறாள், அசோகவனத்திலே பத்துமாஸம் பிரிந்திருந்த பிராட்டி * “ஸமா த்வாதச தத்ராஹம் ராகவஸ்ய நிவேசநே - புஞ்ஜாநா அமாநுஷாக் போகாந் ஸர்வகாமஸம்ருத்திநீ! என்று பழைய கதைகளைச் சொல்லிக் கொண்டுபோது போக்கவில்லையா? அவளைவிட உனக்கு விசேஷமென்? என்ன; வினையேன் என்கிறாள். அவளத்தனை பாக்யம் பண்ணிற்றேலேன் நான்; நடந்தவற்றை நினைத்த மாத்திரத்திலே நெஞ்சு சுடும்படியான பாவத்தைப் பண்ணினேனென்கிறாள். ப்படிப்பட்ட விஷயந்தான் என்ன நடந்தது? என்ன, “துணரினாழல் நறும்போது நஞ்சூழ்குழல் பெய்து, பின்தணரில் ஆவிதளருமென அன்புதந்தான்” என்கிறாள். கலவி செய்த காலத்திலே அவன் செய்த ச்ருங்கார விலாஸங்களை என்ன சொல்வேன்! பூங்கொத்துகளையுடையத்தான நாழலினுடைய செவ்விப்பூக்களைப் பறித்து என்குழலிலே சூட்டினான்; இனி ஒரு நொடிப்பொழுது பிரிந்தாலும் பிராணன் மாறிப் பறந்துபோய்விடு மென்னும்படியாக அளவுகடந்த அன்பைக்காட்டிப் பரிமாறினான்; அத்தனையும் பிரிவுக்கு உடலாகவே செய்தான்போலும்; பிரியேனென்று சொன்ன வாய்மூடுவதற்கு முன்னமே பிரிந்துபோனான்; இவையே என்னுற்றத்தை வேவச் செய்யா நின்றன வென்கிறாள். அப்படிப்பட்டவன் வர்த்திக்கிறவூரிலே போய் முறையிட்டுக் கொள்ளுவோ மென்கிறாள். துணரினாழல் = ;துணர் இன் நாழல்; என்று பிரிக்க. துணர் - பூங்கொத்து, ;துணரி நாழல்;; என்ற பாடத்துக்கு ;துணரி என்று சொல்வடிவமாகக் கொள்ளவேணும்; அங்ஙனுண்டாகிற் கண்டுகொள்வது. நாழல் எனினும் ஞாழல் எனினும் ஓக்கும்; கோங்கு மரமும் குங்குமமரமுமாம்.
ஸம்ச்லேஷித்த ஸமயத்தில் அப்பிரான் தனது திருமேனியைப் பூர்ணாநுபவ யோக்யமாக ஸர்வஸ்வநாகம் பண்ணினபடியை உத்தேசித்து வள்ளல் என்றாள். அப்படி கலந்து பரிமாறினவன் இப்போது நான் இங்ஙனே பதறியோடிவரும்படி எட்டாதவனாய் வஞ்சகம் செய்கிறானென்ற கருத்துடனே மாயன் என்றாள், அவன் நம்மை அபேக்ஷிக்கிலுமாம், உபேக்ஷிக்கிலுமாம்; கொலை செய்தாலும் விடவொண்ணாத வடிவு படைத்தவன் என்கிறாள் மணிவண்ணன் என்பதால். அவ்வடிவழகைக் காட்டி என்னை அநந்யார்ஹமாக எழுதிக் கொண்டா னென்கிறாள் எம்மான் என்று, இப்படிப்பட்டவன் வர்த்திக்கிற புல்லாணியைத் தொழுதும் எழு நெஞ்சே!. அவன் நித்யவாஸம் பண்ணுகிற விடத்தே சென்றால் அவனுக்கும் நமக்கும் நினைத்தபடி பரிமாறலாம்படியான ஏகாந்த ஸ்தலங்களுண்டு என்கிறாள் பின்னடிகளால். கள்ளவிழும் மலர்க்காலியும் ஸ்ரீ திவ்ய தம்பதிகள் ஜலக்ரிடை பண்ணும்போது அழகிய செங்கழுநீர்ப் பூக்களைப் பார்த்து இவை செவ்வியழிவதற்குமுன்னே பறிக்கவேணுமென்று ஒருவர்க்கொருவர் முற்பட்டுப் பறித்து ஒருவர் மேலொருவர் எறிய, அவை மேலேபட்டு மதுவொழுகுமழகைக் காணலாயிருக்குமென்ப (தூமடல் கைதையும்) தலைமகன் தோள் கொடுக்க ஏறிப் பறிக்கலாம்படியான வெள்ளை மடலையுடைய தாழையும்;. (புள்ளும்) பலவகையான பறவைகளைக் கண்டு ;இதன் பெயர்என்ன? இதன் பெயர்என்ன?” என்று தலைவி கேட்கவும் தலைமகன் அவற்றின் பேர்களைச் சொல்லவும் பெற்ற பட்சிகளும் (அள்ளல் பழனங்களும்) அல்லலறியாத செல்வப் பெண்பிள்ளையாக வளர்ந்த தலைமகள் மருமமறியாத நீர்நிலைகளிலே புக்கு அங்கே சேறுகளில் அழுத்தி நின்றால் தலைமகன் கைப்பிடி கொடுத்துத் தூக்கியெடுக்க வேண்டும்படியான நிலங்களும், ஆக இப்படிப்பட்ட வாய்ப்புகளமைந்த புல்லாணியே தொழுவோமென்றாளாயிற்று.
போயவன் பாலமாய் = ;போய்; என்று தனியே பிரிக்கவுமாம், ;போயவன் என்று முழுச்சொல்லாக் கொள்ளவுமாம். முதல் யோஜனையில் ;போய்த்தொழுதும்; என்று அந்வியப்பது; இரண்டாம் யோஜனையில், போயவன் - போனவன் என்றபடி; பிரிந்துபோன வன் திறத்திலேயே நெஞ்சை வைத்தவர்களாய்க் கொண்டு இரவும் பகலும் இங்கே கண்ணுறங்காதிருத்தலால் என்ன பயன்? என்கை. மேன்மேலும் அலையெறிந்து வருவதைக் குதிரை தாவிவருவதோ டொக்கச் சொல்லுதல் கவிமரபு; புதஞ்செய்தல்-தாவிப்பாய்தல். புரவி-குதிரை.
கலப்பையையும் சக்கரத்தையும் திவ்யாயுதமாகக் கொண்டவர் நமக்கு எளியவராகத் தகாதவர் ;இவரே நமக்கு ப்ராப்யர் என்று அனைவராலும் எதிர்பார்க்கப் படுமவர். அப்படிப்பட்டவர் தாமே அன்புடையவர் போலேவந்து கலந்து, அத்தனையும் கபடமாகவே தலைக்கட்டிற்றாகி ;ஒரு பெண் பெண்டாட்டியை இப்படி வஞ்சித்தோம், என்று சிறிது இரக்கமும் இல்லாதவராயிருக்கின்றார். அவர் தாம் இரங்கிற்றிலர் என்று நாம உதாஸீநமாக இருந்துவிட முடியுமோ? பரதாழ்வான் ;சித்திரகூடத் தேறச் சென்று பெருமாள் திருவடிகளிலே தலையை மடுத்தாகிலும் இரங்கச் செய்வித்துக கொள்வோம்; என்று பாரித்து அங்ஙனே செய்தாற்போலே நாமும் திருப்புல்லாணியே சென்று தொழுதாகிலும் அவரை இரங்குவித்துக் கொள்வோம், நெஞ்சே! புறப்படு என்கிறாள். உலவு கானல் கழி-உலவு கால் நல்வழி என்று பிரிக்க. கால்-காற்று என்றும் நீர்க்கால் என்றும் பொருள் கொள்ளலாம்.
இதுவரையில், அவனுடைய விஷயீகாரமே பேற்றுக்கு உபாயமென்றும், நாம் உபாயாதுஷ்டாநம் பண்ணவேண்டியது ஒன்றுமில்லையென்றும் ஸ்வருபவுணர்ச்சியின்படியே முறை வழுவாதிருந்தோம்; இருந்தவளவிலும் அவனே வந்து விஷயீகரிக்கக் கண்டிலோம்; பெற்றபோது பேறுகிறோமென்று ஆறியிருக்குந் தன்மையோ நமக்கில்லை; வழியல்லாவழியே முயன்றாகிலும் பெற்றுத் தீரவேண்டிய அபிநிவேசம் கிளர்ந்தான் பின்பு இனி நாமே நம்தலையாலே சில உயாங்களைய நுஷ்டித்தாகிலும் பெறப் பார்க்கும் அத்தனையன்றோ. நாம் காலக்ஷேபத்தின் பொருட்டு ஸ்வயம் போக்யமாகச் செய்ய வேண்டிய காரியங்களையும் இனி உபாயமாகச் செய்யக்கடவோம்; இடைவிடாது திருநாமஸங்கீர்த்தனம் பண்ணக்கடவோம்; (குளித்து) ஸாதநாநுஷ்டாநத்திற்கு அதிகாரிகளாக வேண்டுவதற்காக ஸ்நாநம்பண்ணிப் பரிசுத்தமாயிருக்க வேணுமென்பதுண்டே; அதுவும் பண்ணக்கடவோம். சுத்தியும் அசுத்தியும் தேடவேண்டாதே இருந்த படியே அதிகாரியாதற்குரிய நிலைமையிலிருந்த நாம் இனி நியமநிர்ப்பந்தமுள்ள வழியிலே அந்வயிப்போமென்கிறாள். (உச்சிதன்னொலொளி மாமலர்ப் பாதம் நாளும் பணிவோம்) ஒளிமாமலர் பாதமாகையாலே அத்திருவடிகளின் போக்யதையில் ஈடுபட்டு ஸ்வயம் ப்ரயோஜகமாக அவற்றைச் சிரமேற் கொள்ளவேணுமென்றிருந்த நாம் இனி உபாயமாக இக்காரியத்தை அனுட்டிப்போம். என்றிவ்வளவும் தோழியை நோக்கிப் பரகாலநாயகி சொன்னவாறே தோழியானவள் ;கெடுவாய்! பெருமான் அரைக்ஷணம் தாமதித்தானென்று இப்படியும் செய்யத் துணியலாமோ? அவனையுமழித்து உன்னையுமழித்துக கொள்ளப் பார்க்கிறாயே, அது தகுதியன்றே; என்றுசொல்ல; அதற்கு உத்தரம் போல ;நமக்கே கலமாதலில் என்கிறாள். இதன் கருத்தை விவரிப்போம்;- தோழீ! ;ஓதி நாமங் குளிததுச் சீதன்னாலொளிமாமலர்ப்பாதம் நாளும் பணிவோம்; என்று சொன்ன என்னை நோக்கி என்ன சொன்னாய் நீ? அவனையுமழித்து உன்னையுமழித்துக் கொள்ளப்பார்க்கிறாயே; என்று சொன்னாய்; இதில் என்னையழித்துக் கொள்வதாகச் சொன்னது பழுது; என்னையழித்துக் கொள்ளும் முயற்சி யொன்றும் நான் செயிகின்றிலேன்; பகவத்கீதை முதலியவற்றில் ஸாதநாநுஷ்டாகம் பண்ணும்படி அவன் தானே சோதிவாய் திறந்து நியமித்துப் போந்தவற்றையே நான் அனுட்டிக்க முற்படுகிறேன்; நிரபேக்ஷமாக ரக்ஷிக்கக் கடவேனென்று சொல்லியிருக்கிற அவனை அழிக்கிறேனென்பது உண்மை; அவனுடைய ஸ்வரூபத்துக்கு அழிவுவாராமே நோக்கவேணுமென்று இதுகாறும் விரதம் கொண்டிருந்தது போதும்; இனி மேலுள்ள காலமெல்லாம நமக்கே நன்மை பார்க்கக் கடவோம்; * ;தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்த” என்றிருந்து நாம வாழ்ந்த வாழ்வுபோதும் - என்பதாம். இப்படி சொன்ன பரகால நாயகியை நோக்கித் தோழியானவள் ;நங்காய்! நீ எந்த ஸாதநாநுஷ்டாநம் பண்ணினாலும் பலன் அளிக்க வேண்டியவன் அவனன்றோ; அவன் உனக்கு ஒன்றுங் கொடுப்பதில்லையென்று ஸங்கல்பங் கொண்டிருக்குமளவும் நீ எது செய்மாலென்ன? அவன் உனக்கு ஒன்றும் தாரான்காண்; என்ன; ;ஆது தாரானெனிலும் தரும்; என்கிறாள். அவன் ஒன்றும் கொடுக்கமாட்டேனென்று முஷ்டி பிடித்தாலும் பிடிக்கட்டும்; என்னுடைய ப்ரஹ்மாஸ்த்ரம் (-உபாயாநுஷ்டாநம்) பலன் கொடுத்தன்றி நில்லாது என்றாளாயிற்று.
இதில் ஆழ்வார் தமக்குக் ;கலங்கலில்லாப் புகழான்; என்று விசேஷணமிட்டுக் கொண்டதற்கு ஒரு கருத்துண்டு; ;உன் மனத்தாலென்னினைந்திருந்தாய்; என்று அவன் திருவுள்ளமானபடி செய்யப் பார்த்திருக்குமத்தனையன்றித் தன் தலையாலே ஒரு முயற்சி செய்து பெற நினைப்பது அவத்யம் என்று தெளிவுற்ற குடியிலே பிறந்த விவர் அத்தெளிவுக்கு மாறுபாடாக இத்திருமொழி வன்சொல்லாக அருளிச் செய்கிறாரே! இதுவென்? என்று சிலர் சங்கிக்கக்கூடும்; அதனால் இவருடைய ப்ராவண முண்டாயிற்றே!; என்று கொண்டாடும்படி யிருக்குமேயல்லது பழிக்கும்படி யிராது என்றவாறு.
திருப்புல்லாணியைச் சென்று தொழுவோமென்று ஆசைப்பட்டிருந்த நமக்குத் துன்பப்படுவதே பலனாகத் தேறிற்றே!; எஞ்ஞான்றும் துயருற்றிருப்பதே நமக்குத் தொழிலாயிற்றே என்று வருந்திக் கூறுகிறாள் பரகாலநாயகி. இப்பாட்டின் முதலடிக்குப் பெரிவாச்சான்பிள்ளை அருளிச்செய்தது காணீர்- “தார்மிகராயிருப்பார் வைத்த தண்ணீர்ப் பந்தலிலே வழியடிக்காரர் ஒதுங்குமாபோலே, மடலெடுத்தாகிலும் பிழைக்க நட்டபனையிலே அன்றில்வந்து குடிபுகுந்தது.; என்று இதனை விவரிப்போம்;- விடாய்த்தவர்கள் தண்ணீர்பருகிக் களைதீர்ந்து போகட்டுமென்று தர்மப் பிரபுக்கள் தண்ணீர்ப்பந்தல் வைத்தால், வழிபறிக்குமங் கள்ளர்கள் அதிலே வந்து தங்கியிருந்து, வருகிறவர்களை நலியுமாபோலே, விரஹிகள் மடலூர்ந்தாகிலும் அபிமதம் பெற்று வாழ்ந்து போகட்டுமென்று (பனைமடல்களின் மிகுதிக்காக) ஏற்படுத்தின பனந்தோப்பிலே அன்றிற்பறவைகள் வந்து குடிபுகுந்து தழுதழுத்த குரலைக் கொண்டு கொலை செய்கின்றனவே! என்றாறென்க. நாயகனை ஒரு படத்திலேயெழுதி, வைத்தகண் வாங்காமல் அதைப் பார்த்துக்கொண்டு புஷ்பம் சந்தனம் முதலிய போகத்துக்குரிய வஸ்துக்களை விஷமாக உதறித்தள்ளி ஊணும் உறக்கமும் உடம்பு குளிப்பதுமின்றியே பனைமட்டையைக் கையிலெடுத்துக் கொண்டு அதனால் உடம்பை மோதிக்கொண்டு தலைமயிரை விரித்துக் கொண்டு ;இன்ன படுபாவி என்னைக் காக்கமாட்டாதே கைவிட்டான்; அவன் கண்ணற்றவன்; அவனிலும் விஞ்சின கொடியன் இல்லை; பல ஸ்தலங்களிலே அவன் ஸந்நிதிபண்ணி அடியாரைக் காக்கிறான்பதும் ராமக்ருஷ்ணாதி அவதாரங்களினால் பலரைக் காத்தான் என்பதும் முழுப்பொய்யான பேச்சுக்கள்;; என்று தெருவேறக் கதறிக்கொண்டு கேட்டாரெல்லாரும் நடுங்கும்படியும் இரங்கும்படியும் திரிந்துழல்வதே மடலூருகையாதலால், இப்படிப்பட்ட மடலூர்தலைச் செய்தாகிலும் எம்பெருமானை அணையப் பெறுவோமென்று கருதின பரகாலநாயகி, பனைமடல் கொள்ளுதற்காகப் பனைமரத்தருகே சென்றவாறே, அங்கு அன்றிலின் அரிகுரலைச் செவியுற்று வருந்தி இது கூறினன் போலும். அன்றில் என்பது ஒரு பறவை. அது பெரும்பாலும் பனைமரத்தில் வாழும். அது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் இணைபிரியாது நிற்கும். க்ஷணப்பொழுது ஒன்றை ஒன்றுவிட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றை ஒன்று இரண்டு மூன்றுதரம் கத்திக் கூவி அதன் பின்பும் தன் துணையைக் கூடாவிடின் உடனே இறந்துபடும்; இப்பறவையை வடநூலார் க்ரௌஞ்சமென்பர். ஆணும் பெண்ணுமான அந்த அன்றிற்பறவை இணைபிரியாமல் நெருங்கி ஒன்றோடொன்று வாயலகைக் கோத்துக் கொண்டு உறங்கும்பொழுது, அவ்வுறக்கத்தில் வாயலகு தன்னில் நெகிழ்ந்தவளவிலே துயிலுணர்ந்து அந்த நெகிழ்ச்சியையும் பொறாமல், மெலிந்து பெருந்தொனியாகக் கத்துகிற மிக வருந்துமென்ப. “பெண்ணைமேல் பின்னுமவ்வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர்வாளா மென்செய்தேன்” என்பர் பெரிய திருமடலிலும். “மடல்பெண்ணைக் கா ஆர்அன்றில்” என்று அன்வயிக்கவுமாம் மனந்தோப்பு நிறைய அன்றிலாகவே யிருக்கிறதே! என் வருந்துகிறபடி. இலங்கை முழுதும் ராக்ஷஸமயம்! என்னுமாபோலே. அரிகுரல்-அரிதல்-ஹரித்தல்; உயிரை அபஹரிக்கின்ற குரல் என்னலாம்.
சில பறவைகளை விளித்துத் தூதுவிடுகிறாள், அடியார்கட்குக் காரியம் செய்ய மாட்டாதவனையோ நான் ஆசைப்பட்டுத் துடிக்கிறேன்; ப்ரயோஜநாந்தாபரனான இந்திரனுடைய கண்ணீரைக் கண்டு பொறுத்திருக்கமாட்டாமல் தன்னை அழியமாறியும் காரியம் செய்தவனன்றோ அவன்; “மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது” என்னும்படி எப்போதும் ஒருபடிப்பட்ட தன்மையையுடைத்தான திருமேனியை வாமன வடிவாக்கி, *அலம்புரிந்த நெடுந்தடக்கையைக் கொண்டு தானம்பெற்று மூவுலகளந்தான்; ஒருபோது தன்னை அநுவர்த்தித்தும் மற்றொருபோது படையெடுத்து எதிரம்புகோத்தும் திரிகிற இந்திரனுக்காக இத்தனை காரியஞ் செய்தானென்று கேட்டு ;அப்படிப்பட்டவன் அந்தோ! அநந்ய ப்ரயோஜனரான நமக்கு அப்படிப்பட்ட அருந்தொழிலொன்றுஞ் செய்யாவிடினும் முகத்தையும் காட்டமாட்டே னென்கிறானே; என்று கிலேசப்படுகிறேனென்கிறாள் முன்னடிகளால். மேனிநிறம் வேறுபடுவதைப் பொன்பயத்தலாகச் சொல்லுவது கவிமரபு; மேனிநிறம் வேறுபடும் படியான மனத்துயர மடைந்திட்டேன் என்றவாறு. இப்படிப்பட்ட என்னுடைய நிலைமையைப் புல்லாணியம்மானுக்குப் புகலுங்கோளென்கிறாள் பின்னடிகளால். (பொன்னங்கழிகானல்) ஸ்ரீவானமாமலையில் ;சேற்றுத்தாமரை; என்ற (ஆழ்வார்திருவாக்கில் வந்த) திருநாமத்துடனே தடாகமும் ;தேனமாம்பொழில்; என்றதிருநாமத்துடனே தோப்பும், திருமோகூரில் ;தாளதாமரை; என்ற திருநாமத்துடனே தடாகமும் வழங்கி வருதல் போலத் திருப்புல்லாணியில் ;பொன்னங்கழி; என்றொரு நீரோடுகால் வழங்கிவரும் போலும். (அன்னமாய் நூல்பயந்தாற்கு) இப்போது இந்த விசேஷணத்தையிட்டு எம்பெருமானைக் குறிப்பிடுதற்கு இரண்டுவகையான கருத்து உண்டு; பிரமன் இழந்த வேதங்களை ஹம்ஸாவதாரத்தில் மீட்டுக் கொடுத்ததனால் அதுபோலே நானிழந்திருக்கும் மேனிநிறத்தையும் மீட்டுக்கொடுக்க வல்லவர் காண்மின் அவர், என்று குறிப்பிடுதல் ஒரு கருத்து. தூதுபோகிற நீங்கள் ;இவன் நம்மைப் பரமபுருஷன்பக்கல் போகச் சொல்லுகிறாளே; இது நம்மாலாகுமோ? அவர் எங்கே நாம் எங்கே; என்று நீங்கள் அஞ்ச வேண்டுவதில்லை; அவன்றான் அன்னமானவனாகையாலே உங்களோடே ஸஜாதீயனாயிருப்பின் காண்மின்; இனத்தார்பக்கல் போவதற்கு அஞ்சவேண்டாவே என்று குறிப்பிடுதல் மற்றொரு கருத்து. (ஆங்கு இதனைச் செப்புமினே) இங்கே பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்;- “ஒருத்தியின் நிறம் மீட்கைக்காக வந்திருக்கிறவிடத்திதே அறிவியுங்கள்; ஒருத்திக்கே காரியம் செய்யக்கடவோ மென்னும் நியதியுண்டோ?” என்று (இதன் கருத்தாவது-) மூலத்தில் ஆங்கு என்றது புல்லாணியைச் சொன்னபடி ;புல்லாணை; என்பது புல்லாணியென மருவிற்று. பிராட்டியைக் கவர்ந்துசென்ற இராவணனைக் கொல்லுதற்பொருட்டு இராமபிரான் வாநர சேனையுடனே புறப்பட்டுச் சென்று தென் கடற்கரையையடைந்து கடல்கடக்க உபயஞ் சொல்ல வேண்டுமென்று அக்கடலரசனான வருணைப் பிரார்த்தித்து தர்பத்திற்படுத்து எழுநாளளவும் பிராயோபவேசமாகக் கிடந்த தலமாதலால் இதுவடமொழியில் தர்ப்பசயனம் எனப்படும்; புல்லணையென்பது அதற்கு ஏற்ற தென்மொழி. ஆகவே தன்னைப்பிரிந்து நிறவேறுபாடடைந்து வருந்திக்கிடக்கிற ஸீதாபிராட்டியின் நிறத்தை மீட்கைக்காக (அதாவது அவளோடு புணர்தற்காக) வந்து நிற்கிற தலமாதலால் இவ்விஷயத்தை உட்கொண்டு ;ஆங்கு; என்று சொன்னபடி; ஸீதையாகிற ஒருத்திக்கே காரியம் செய்யக் கடவோமென்று ஏதேனும் நியதியுண்டோ? பரகாலநாயகிக்கும் சிறிது உதவக்கூடாதோ என்று சொல்லுங்கோ ளென்றவாறு.
கீழ்ப்பாட்டிலுள்ள ;புள்ளினங்கள்!; என்ற விளியை இப்பாட்டிலும் வருவித்துக் கொள்க. தனது சிந்தை நோயை அத்தலையில் சென்று செப்புமாறு புள்ளினங்களைத் தூதுவிடுகிற ளென்க. தலைவன் பிரிந்து போகிறபோது தோளில் சாத்திக்கொண்டிருந்த திருத்துழாய் மாலையில் ஒரு தலையைப் பிடித்துக்கொண்டு என்னைவிட்டுத் தனியே சென்ற நெஞ்சானது இன்னமும் மீளாதே அவ்விடத்தே நிற்கின்றதே, இப்படியும் நிற்குமோ? திருப்புல்லாணியைத் தொழவேணுமென்று அழகாக ஆசைப்பட்டேன் அந்தோ!; அதற்குப் பலனாக, தீராத சிந்தைநோயையன்றோ நான்பெற்றது; இப்படி நான் மனோவியாதியடைந்து துடிக்கிறேனென்பதைப் புள்ளினங்காள்! கையும்; வில்லுமாய் நிற்கு மவர்க்குச் சொல்லுங்கோள் என்றாளாயிற்று.
திருப்புல்லாணியைத் தொழவேணுமென்று ஆசைப்பட்டு அழகாகப் பேறுபெற்றேனென்பது மூன்றாமடியின் கருத்து. “அரிமலர்க் கண்ணீர் ததும்ப” என்பதற்கு விநோதமானதொரு அர்த்தமருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை;- “கடலும் திரையுங்கண்டு கூட அநுபவிக்க வேணுமென்று ஆசைப்பட்டோம்; இதுவாகில் இவளுக்குத் தேடிப்போக வேணுமோ என்று என்னுடம்பிலே கண்ணநீரையுமுண்டாம்படி பண்ணினான்” என்பது வியாக்கியானம்; - பொருதிரைகள் போந்துலவு புல்லாணியை நான் ஆசைப்பட்டேனாதலால் நீரிலே அவளுக்கு மிக ஆசைபோலும் என்று நினைத்து, அதை நான் தேடியோட வேண்டாமல் உடம்பெல்லாம் கண்ணீர் சோரும்படி செய்துவிட்டாரென்கை. அம்துகிலும்நில்லா = விரஹவ்யஸநத்தாலே உடல் இளைத்துப் போகவே துகில் தரிப்பற்ற தாயிற்று.
பரகாலநாயகியின் உற்றாருறவினவரெல்லாரும் வந்து திரண்டு நங்காய்! நாங்கள் சொன்ன ஹிதவார்த்தையைக் கேளாதே * மெய்போலும்பொய்வல்லனான அவனுடைய வார்த்தையைக் கேட்டாயிற்றே; நாங்கள் என்ன சொன்னோம்? ;பெண்களைப் பரிசழிப்பதே அவனுக்குத் தொழில்; அவன் பக்கல் நசையைவிட்டிடு; விடாயாகில் பரிசழிவாய்; என்றன்றோ நாங்கள் பலகாலுஞ் சொல்லுவது; இப்போது எங்களுடைய வார்த்தையே மெய்யாய் அவனுடைய வார்த்தையெல்லாம்; பொய்யானபடி கண்டாயிறே; இனியாகிலும் எங்கள் வார்த்தையைக் கேட்கவல்லையோ?; என்ன; அவன் பின்னே போயிருக்கிற நெஞ்சு திரும்பி வரட்டும், அப்படியே செய்வோம்; என்கிறாள். அவன் பெண்களைப் பரிசழிப்பவனே யன்றி ஒருநாளும் பெண்களுக்கு உதவுபவனல்லன் என்று உறவினர் சொன்னதை மறுத்துக் கூறுவாள், வில்லாலிலங்கைமலங்கச் சுரந்துரந்த வல்லாளன், என்கிறாள். ஐயோ! அவனுக்கு ஸ்த்ரிகளிடத்துள்ள பக்ஷபாதத்தை நீங்கள் அறிகின்றிலீர்போலும்; உண்ணாது உறங்காது ஒலிகடலையூறுத்து இலங்கை நீறெழச் செற்றதெல்லாம் ஒரு பிராட்டிக்காக வன்றோ? அவளுக்காக அத்தனை பாடுகள் பட்டவன் அவளோடேஸஜாதீயரான நமக்கும் சிறிது உதவாமற்போகான் என்று அக்குணத்தையே பற்றாசாகக் கொண்டன்றோ என்மனம் அவன்பின்னே சென்றிருக்கின்றது; அந்த நெஞ்சு மீண்டுவந்தாலன்றோ நான் உங்கள் வார்த்தையைக் கேட்கவும் அதன்படி நடந்துகொள்ளவும் வல்லேனாவேன்; அது மீண்டு வருமளவும் நீங்களெல்லாரும் ஒருமிடறாகத் திரண்டு என்னைப் பரிஹஸித்தாலும் பழித்தாலும் அப்பெருமானைப் பொய்யனென்றாலும் அந்தப் பொய்யுரைகளையே ஜீவநாதாரமாகக்கொண்டு தரித்திருப்பேனென் றாளாயிற்று. எல்லாரும் = தோழிமாரும் தாய்மாரும் புல்லாணி யெம்பெருமான் பொய்கேட்டிருந்தேனே - எம்பெருமானைத் தவிர மற்றையோர்கள்! மெய்யுரையே சொல்லுவர்களானாலும் அவைகொண்டு நமக்கொரு காரியமில்லை; எம்பெருமானது வார்த்தை பொய்யேயானாலும் அது தவிர வேறொன்று நமக்குப் புகலில்லை யென்கிறாளென்க. “ராமா வதாரத்தில் மெய்யும் க்ருஷணாவதாரத்திற் பொய்யுமே நமக்குத் தஞ்சம்” என்று ரஸோக்தியாக பட்டர் அருளிச் செய்வதுண்டு. பொய்யாகிலுமாம் மெய்யாகிலுமாம்; அதில் ஒரு விசாரமில்லை எம்பெருமானுடையது; என்னுமத்தனையே கொண்டு தரித்திருப்பர் ஆஸ்திக.
உலகப் பொருள்களில் எதையேனும் கண்டுகொண்டாகிலும் இந்தப் பிரிவாற்றாமையை ஒருவாறு ஆற்றுவோமென்று பார்த்தால் ஆதித்தன் அஸ்தமித்தான்; சந்திரன் நெருப்புப்போலே எரிப்பவனாகி என்னையே முடித்திடாநின்றான்; திருப்புல்லாணியைத் தொழ ஆசைப்பட்டு நல்ல பலன் பெற்றேனந்தேர்மேனி நிறமும் போயிற்று, கைவளைகளுங் கழன்றொழிந்தன; இங்ஙனம் பரிதாபப்படுவதே நமக்குப் பணியாயிற்றே யென வருந்துகிறாள். இரண்டாமடியில் ;அஞ்சுடரில்; என்ற பாடத்துக்கு, ;அம்சுடர்இல்; என்று பிரித்து, அழகிய சுடருக்கு இருப்பிடமான சந்திரன் என்று உரைத்துக்கொள்க, தான் ஆடும் ஆல் = ஸூர்யன் தான் முடிந்துபோனான்; சந்திரன் முடியாதே என்னைமுடிக்கப் பார்க்கிறான் என்று சமத்காரமாகச் சொல்லுகிறபடி. (இழந்திருந்தேனித்யாதி) ;பிரானோடே புணர்ந்து இன்னமும் மேனிநிறம் வளங்கொள்ளப் பெறவேணும், இன்னமும் ஆபரணங்கள் அணியப்பெறவேணும்; என்று ஆசைப்பட்டு ஏற்கனவே உள்ளவற்றையுமிழந்தேனே; வட்டிக்கு ஆசைப்பட்டு முதலையுமிழப்பாரைப் போலே என்கதியாயிற்றே; என்கிறாள்போதும்.
உரை:1
இடி போன்ற ஒலியையுடைய மாட்டுக்கழுத்து மணிகளின் ஓசையானது நெருப்புக்கதுவுமாபோதலு கதுவி நலியாநின்றதே!; திருப்புல்லாணியைத் தொழவேணுமென்று ஆசைப்பட்ட எனக்கு நன்றாயிற்று. கடல்தானும் தனது குளிர்ச்சியெழிந்து வெப்பத்தை ஏறிட்டுக்கொண்டு அலைகளென்கிற வியாஜத்தினால் நெருப்பையே வீசுகின்றதே! என்செய்வேனென்கிறாள். வயல்களிலே பகலெல்லாம் மேய்ந்துவிட்டு மாலைப்பொழுதிலே மீண்டு வருகின்ற மாடுகளின் கழுத்திலுள்ள மணிகளின் ஓசை விரஹிகளுக்கு உத்தீபமாகும்; ;மாலைப்பொழுது அணுகிவிட்டதே! தலைவன் இன்னமும் வந்திலனே!; என்று வருத்தத்தையுண்டாக்கி அவ்வழியாலே உத்தீபமாகிற தென்க. தினையேனும் = தினையென்பது மிகச் சிறியதொரு தானியம்; மிக அற்ப அளவுக்கு அதனை உவமை கூறுவதுண்டு; அற்பகாலமும் என்றபடி. தினையைக் கூறுவதுபோல் எள்ளையும் கூறுவதுண்டு; “எட்டனைப்போது; என்ற திருநெடுநதாண்டகங் காண்க.
உரை:2
இடிபோல் கனைக்கும் குரலுடைய கருத்த காளையின் மணி ஓசை தீயை விட கொடியதாய் என்னை துன்புறுத்துகிறது. அழகு மணிமாடங்களுடைய திருப்புல்லாணியைத் தொழுதேன். பாவியான என் மேல் கடலின் அலைகளும் கொடிய நெருப்பையே வீசுகின்றன என்று தலைவனை பிரிந்த நாயகி தன்னை சுற்றியுள்ள பொருள்கள் தனக்கு தனிமைத் துன்பத்தை தருகின்றன என்று வருந்துகிறாள்.
The Lord who is the Vedas, the Vedic sacrifices, and the heavenly fruit of sacrifice, is the first-cause Lord, the twin orbs and all else. See how he gave us his grace! I joined my hands to worship Pullani armid blossoming Punnai trees. I and the tossing sea have become sleepless
நீர்மலை – நீரானது அரண் போலச் சூழப்பெற்ற மலையானது பற்றித் திருநீர்மலை யெனப்படும். புல்லணை யென்பதன் மருஉ, ஸீதையைத் கவர்ந்து சென்ற இராவணனைக் கொல்லும் பொருட்டு ஸ்ரீராமபிரான் வாநரஸேனையுடனே புறப்பட்டுச்சென்று தென்கடற்கரையை யடைந்து கடல்கடக்க உபாயஞ் சொல்ல வேண்டுமென்று அக்கடலரசனான வருணனைப் பிரார்த்தித்துத் தர்ப்பத்தில் பிராயோபவேசமாகக் கிடந்த ஸ்தரமாதலால் புல்லனை யெனப்பட்டது. தர்ப்பசயா க்ஷேத்ரமெனவும் படும். தலைச்சங்க நாண்மதியை –சிறந்த சங்கத்தை யேந்திய நாண்மதியப் பெருமானுடைய தலமாதல்பற்றித் தலைச்சங்க நாண்மதியமென்று திவ்யதேசத்தின் திருநாமம்.
விளக்கம்
1769.
விளக்கம்
1770.
விளக்கம்
1771.
விளக்கம்
1772.
விளக்கம்
1773.
விளக்கம்
1774.
விளக்கம்
1775.
விளக்கம்
1776.
விளக்கம்
1777.
விளக்கம்
1778.
விளக்கம்
1779.
விளக்கம்
1780.
விளக்கம்
1781.
விளக்கம்
1782.
விளக்கம்
1783.
விளக்கம்
1784.
விளக்கம்
1785.
விளக்கம்
1786.
விளக்கம்
1787.
விளக்கம்
2784.