திருப் பாடகம்

பாரத யுத்தம் முடிந்த வெகுகாலத்திற்கு பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையை கேட்க வந்தார். அப்போது ராஜா, கிருஷ்ணர் தூது சென்றபோது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள் என ரிஷியிடம் வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி இத்தல தீர்த்தத்தில் அமர்ந்து தவம் செய்த ஜனமேஜய மன்னனுக்காக பெருமாள், தன் பாரத கால தூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார்.

அமைவிடம்

பெயர்: திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் காமாட்சி அம்மன் சன்னிதி தெரு,
28-B,
ஊர்: திருப்பாடகம் காஞ்சிபுரம்(மாவட்டம்) - 631 502. தொலைபேசி எண்:+91- 44-2723 1899 ,

தாயார் : ஸ்ரீ ருக்மிணி, சத்ய பாமா
மூலவர் : பாண்டவ தூதர்
உட்சவர்: --
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : காஞ்சிபுரம்
கடவுளர்கள்: பாண்டவ தூதர், ருக்மிணி


திவ்யதேச பாசுரங்கள்

  2275.   
  உற்று வணங்கித்*  தொழுமின் உலகு ஏழும்*
  முற்றும் விழுங்கும் முகில் வண்ணன்,*  - பற்றிப்-
  பொருந்தாதான் மார்பு இடந்து*  பூம் பாடகத்துள்-
  இருந்தானை,*  ஏத்தும் என் நெஞ்சு.    

      விளக்கம்  


  • பண்டொருகால் உலகமெல்லாம் பிரளயப்பெருங்கடலிலே அழிந்து போவதாயிருக்கையில் அவற்றையெல்லாம் திருவயிற்றிலே யெடுத்துவைத்தடக்கிக் காத்தருளின சிரமம் தீரவும், ப்ரஹ்லாதாழ்வானைப் பாதுகாத்தருளவேண்டி இரணியன் மார்பிடந்த சிரமம் தீரவும் கச்சிநகரில் திருப்பாடகமென்னுந் திருப்பதியில் இனிதாக எழுந்தருளியிருக்கு மெம்பெருமானை என்நெஞ்சு ஏத்துகின்றது, நீங்களும் அவனையே வணங்கி வாழுங்கள் என்று உலகத்தவர்க்கு உபதேசித்தாராயிற்று.