கோவில் திருவாய்மொழி



    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு*
    பலகோடி நூறாயிரம்*
    மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!*   உன்
    செவ்வடி செவ்விதிருக் காப்பு (2)


      அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு 
      விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு 
      வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு 
      படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே 


        வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல்*  வந்து மண்ணும் மணமும் கொண்மின்* 
        கூழாட்பட்டு நின்றீர்களை*  எங்கள் குழுவினிற் புகுதலொட்டோம்*
        ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள்*  இராக்கதர் வாழ்*  இலங்கை 
        பாழாள் ஆகப் படை பொருதானுக்குப்*  பல்லாண்டு கூறுதுமே


          ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து*  எங்கள் குழாம்புகுந்து*
          கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி*  வந்துஒல்லைக் கூடுமினோ*
          நாடும் நகரமும் நன்கறிய*  நமோ நாராய ணாயவென்று*
          பாடு மனமுடைப் பத்தருள்ளீர்*  வ‌ந்து பல்லாண்டு கூறுமினே


            அண்டக் குலத்துக்கு அதிபதி*  ஆகி அசுரர் இராக்கதரை* 
            இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த*  இருடிகேசன் தனக்கு* 
            தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது*  ஆயிர நாமம் சொல்லிப்* 
            பண்டைக் குலத்தைத் தவிர்ந்து*  பல்லாண்டு பல் லாயிரத்தாண்டு என்மினே  


              எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்*  ஏழ்படிகால் தொடங்கி*
              வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்*  திரு வோணத் திருவிழவில் 
              அந்தியம் போதில் அரியுரு ஆகி*  அரியை அழித்தவனைப்* 
              பந்தனை தீரப் பல்லாண்டு*  பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே 


                தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி*  திகழ் திருச்சக்கரத்தின்*
                கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று*   குடிகுடி ஆட்செய்கின்றோம்*
                மாயப் பொருபடை வாணனை*  ஆயிரந் தோளும் பொழி குருதி 
                பாயச்*  சுழற்றிய ஆழி வல்லானுக்குப்*   பல்லாண்டு கூறுதுமே 


                  நெய்யிடை நல்லதோர் சோறும்*  நியதமும் அத்தாணிச் சேவகமும்* 
                  கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு*  காதுக்குக் குண்டலமும்* 
                  மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து*  என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல* 
                  பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்*  பல்லாண்டு கூறுவனே    


                    உடுத்துக்*  களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு* 
                    தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன*  சூடும் இத்தொண்டர்களோம்*
                    விடுத்த திசைக் கருமம் திருத்தித்*  திருவோணத் திருவிழவில்* 
                    படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்*  பல்லாண்டு கூறுதுமே       


                      எந்நாள் எம்பெருமான்*  உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
                      அந்நாளே*  அடியோங்கள் அடிக்குடில்*  வீடுபெற்று உய்ந்தது காண்* 
                      செந்நாள் தோற்றித்*  திரு மதுரையிற் சிலை குனித்து*  ஐந்தலைய 
                      பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே*  உன்னைப் பல்லாண்டு கூறுதுமே


                        அல்வழக்கு ஒன்றும் இல்லா*  அணி கோட்டியர் கோன்*  அபிமானதுங்கன்
                        செல்வனைப் போல*  திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்
                        நல் வகையால் நமோ நாராயணா என்று*  நாமம் பல பரவி* 
                        பல் வகையாலும் பவித்திரனே*  உன்னைப் பல்லாண்டு கூறுவனே  (2)


                          பல்லாண்டு என்று பவித்திரனைப்*  பர மேட்டியைச்*  சார்ங்கம் என்னும்
                          வில் ஆண்டான் தன்னை*  வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்*
                          நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார்*  நமோ நாராயணாய என்று*
                          பல்லாண்டும் பரமாத்மனைச்*  சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே  (2)  


                            மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்*  நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்*
                            சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்*  கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*

                            ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்*  கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்* 
                            நாராயணனே நமக்கே பறை தருவான்*  பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய் (2) 


                              வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்*  செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்- 
                              பையிற் துயின்ற பரமன் அடி பாடி*  நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி* 
                              மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம்*  செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்* 
                              ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி*  உய்யுமாறு எண்ணி உகந்து-ஏலோர் எம்பாவாய்.


                                ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி*  நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்* 
                                தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து* ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்*
                                பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்*  தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி- 
                                வாங்கக்*  குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்*  நீங்காத செல்வம் நிறைந்து- ஏலோர் எம்பாவாய் (2)       


                                  ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்*  ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி* 
                                  ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து*  பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில்*
                                  ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து*  தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் 
                                  வாழ உலகினில் பெய்திடாய்*  நாங்களும் மார்கழி நீர் ஆட மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்  


                                    மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்*  தூய பெருநீர் யமுனைத் துறைவனை *
                                    ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்*  தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை*
                                    தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது*  வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க* 
                                    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*  தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்.


                                      புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில்*  வெள்ளை விளி சங்கின் பேர்-அரவம் கேட்டிலையோ? 
                                      பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு*  கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி* 
                                      வெள்ளத்து அரவிற் துயில் அமர்ந்த வித்தினை*  உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்* 
                                      மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்* உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்*


                                        கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்*  கலந்து- பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே* 
                                        காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து*  வாச நறுங் குழல் ஆய்ச்சியர்*  மத்தினால்- 
                                        ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ*  நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி* 
                                        கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ*  தேசம் உடையாய் திற-ஏலோர் எம்பாவாய். 


                                          கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு*  மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும்* 
                                          போவான் போகின்றாரைப் போகாமல் காத்து*  உன்னைக்- கூவுவான் வந்து நின்றோம்*  கோதுகலம் உடைய-
                                          பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு*  மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய* 
                                          தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்*  ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.


                                            தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்*  தூமம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்* 
                                            மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்*  மாமீர் அவளை எழுப்பீரோ*  உன் மகள் தான்-
                                            ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ*  ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ* 
                                            மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று*  நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்.


                                              நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!*  மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? 
                                              நாற்றத் துழாய் முடி நாராயணன்*  நம்மால்- போற்றப் பறை தரும் புண்ணியனால்*  பண்டு ஒருநாள்-
                                              கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்*  தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ* 
                                              ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே*  தேற்றமாய் வந்து திற-ஏலோர் எம்பாவாய்.


                                                கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து*  செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்* 
                                                குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே*  புற்றரவு-அல்குற் புனமயிலே போதராய்* 
                                                சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து*  நின்- முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்* 
                                                சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி*  நீ- எற்றுக்கு உறங்கும் பொருள்?-ஏலோர் எம்பாவாய்.  


                                                  கனைத்து இளங் கற்று- எருமை கன்றுக்கு இரங்கி*  நினைத்து முலை வழியே நின்று பால் சோர* 
                                                  நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற் செல்வன் தங்காய்*  பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி* 
                                                  சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற*  மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்* 
                                                  இனித் தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம்*  அனைத்து இல்லத்தாரும் அறிந்து-ஏலோர் எம்பாவாய்.   


                                                    புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்*  கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைபாடிப் போய்* 
                                                    பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்*  வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று* 
                                                    புள்ளும் சிலம்பின காண் போது-அரிக் கண்ணினாய்*  குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே* 
                                                    பள்ளிக் கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்*  கள்ளம் தவிர்ந்து கலந்து-ஏலோர் எம்பாவாய்*    


                                                      உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்*  செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்* 
                                                      செங்கற்பொடிக் கூறை வெண்பற் தவத்தவர்*  தங்கள் திருக்கோயிற் சங்கிடுவான் போதந்தார்* 
                                                      எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்*  நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்* 
                                                      சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்*  பங்கயக் கண்ணானைப் பாடு-ஏலோர் எம்பாவாய்.    


                                                        எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ*  சில் என்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்* 
                                                        வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்*  வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக* 
                                                        ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை*  எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்* 
                                                        வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க- வல்லானை மாயனைப் பாடு-ஏலோர் எம்பாவாய்.      


                                                          நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய*  கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண- 
                                                          வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்*  ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை- 
                                                          மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்*  தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்* 
                                                          வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா!*  நீ- நேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய்.   (2) 


                                                            அம்பரமே தண்ணீரே சோறே அறஞ் செய்யும்*  எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்* 
                                                            கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே*  எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்* 
                                                            அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த*  உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் *
                                                            செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா*  உம்பியும் நீயும் உகந்து-ஏலோர் எம்பாவாய்.   


                                                              உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்*  நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்* 
                                                              கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்*  வந்து எங்கும் கோழி அழைத்தன காண்*  மாதவிப்- 
                                                              பந்தர்மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்*  பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்* 
                                                              செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப*  வந்து திறவாய் மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய். (2) 


                                                                குத்து விளக்கு எரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்*  மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்* 
                                                                கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்*  வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்* 
                                                                மைத் தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை*  எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் 
                                                                எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்*  தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய்.
                                                                 


                                                                  முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று*  கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்* 
                                                                  செப்பம் உடையாய் திறல் உடையாய்*  செற்றார்க்கு- வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்* 
                                                                  செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்*  நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்* 
                                                                  உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை*  இப்போதே எம்மை நீர் ஆட்டுஏலோர் எம்பாவாய்.     


                                                                    ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப*  மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள்* 
                                                                    ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்*  ஊற்றம் உடையாய் பெரியாய்*  உலகினில்- 
                                                                    தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்*  மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்* 
                                                                    ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே*  போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்.      


                                                                      அங்கண் மா ஞாலத்து அரசர்*  அபிமான- பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே* 
                                                                      சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்*  கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே* 
                                                                      செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ*  திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்* 
                                                                      அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்*  எங்கள்மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய்.  


                                                                        மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்*  சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து* 
                                                                        வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி*  மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்* 
                                                                        போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா*  உன்- கோயில் நின்று இங்ஙனே போந்தருளி*  கோப்பு உடைய- 
                                                                        சீரிய சிங்காசனத்து இருந்து*  யாம் வந்த- காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய். (2)


                                                                          அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி*  சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி* 
                                                                          பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி*  கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி* 
                                                                          குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி*  வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி* 
                                                                          என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்*  இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்.(2)


                                                                            ஒருத்தி மகனாய்ப் பிறந்து*  ஓர் இரவில்- ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் 
                                                                            தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த*  கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்* 
                                                                            நெருப்பு என்ன நின்ற நெடுமாலே!,*  உன்னை- அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்* 
                                                                            திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி*  வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்.


                                                                              மாலே! மணிவண்ணா! மார்கழி நீர் ஆடுவான்*  மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்* 
                                                                              ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன*  பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே* 
                                                                              போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே*  சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே* 
                                                                              கோல விளக்கே கொடியே விதானமே*  ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய்.


                                                                                கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா*  உன்தன்னைப்- பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம் 
                                                                                நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*  சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே* 
                                                                                பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்*  ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு* 
                                                                                மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்*  கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய். (2)


                                                                                  கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்*  அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து*  உன்தன்னைப்- 
                                                                                  பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்*  குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா*  உன்தன்னோடு- 
                                                                                  உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*  அறியாத பிள்ளைகளோம் அன்பினால்*  உன்தன்னைச்- 
                                                                                  சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே*  இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்.  (2)


                                                                                    சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து*  உன்- பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்* 
                                                                                    பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து*  நீ- குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது* 
                                                                                    இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா*  எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்*  உன்தன்னோடு- 
                                                                                    உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*  மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய். (2)      


                                                                                      வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்*  திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி* 
                                                                                      அங்குப் பறைகொண்ட ஆற்றை*  அணி புதுவைப்- பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன* 
                                                                                      சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே*  இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்* 
                                                                                      செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*  எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். (2)       


                                                                                        கதிரவன் குணதிசைச் சிகரம் வந்துஅணைந்தான்*  கனைஇருள் அகன்றது காலைய‌ம் பொழுதாய்,* 
                                                                                        மதுவிரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்*  வானவர் அரசர்கள் வந்து வந்துஈண்டி,*
                                                                                        எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*  இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்,* 
                                                                                        அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.  (2)


                                                                                          கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்*  கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ,* 
                                                                                          எழுந்தன மலர்அணைப் பள்ளிகொள் அன்னம்*  ஈன்பணி நனைந்த தம் இருசிறகு உதறி,*
                                                                                          விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்*  வெள்எயிறுஉறஅதன் விடத்தினுக்கு அனுங்கி,* 
                                                                                          அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.   


                                                                                            சுடர்ஒளி பரந்தன சூழ்திசை எல்லாம்*  துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,* 
                                                                                            படர்ஒளி பசுத்தனன் பனிமதி இவனோ*  பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்,*
                                                                                            மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற*  வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ,* 
                                                                                            அடல்ஒளி திகழ்தரு திகிரியந் தடக்கை*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.  


                                                                                              மேட்டுஇள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்*  வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்,* 
                                                                                              ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்*  இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை,*
                                                                                              வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!*  மாமுனி வேள்வியைக் காத்து,*  அவ பிரதம்- 
                                                                                              ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே!*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.


                                                                                                புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்*  போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,* 
                                                                                                கலந்தது குணதிசை கனைகடல் அரவம்*  களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,*
                                                                                                அலங்கலந் தொடையல் கொண்டடியிணை பணிவான்*  அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா* 
                                                                                                இலங்கையர் கோன் வழிபாடு செய்கோயில்*  எம்பெருமான்!பள்ளி எழுந்து அருளாயே.


                                                                                                  இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ?*  இறையவர் பதினொரு விடையரும் இவரோ?* 
                                                                                                  மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ?*  மருதரும் வசுக்களும் வந்து வந்துஈண்டி'*
                                                                                                  புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் * குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்,*
                                                                                                  அருவரை அனைய நின் கோயில்முன் இவரோ?*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே. 


                                                                                                    அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ?*  அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?* 
                                                                                                    இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ?*  எம்பெருமான் உன கோயிலின் வாசல்,*
                                                                                                    சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க*  இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,* 
                                                                                                    அந்தரம் பார்இடம் இல்லை மற்றுஇதுவோ?*  அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.   


                                                                                                      வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க*  மாநிதி கபிலைஒண் கண்ணாடி முதலா,* 
                                                                                                      எம்பெருமான் படி மக்கலம் காண்டற்கு*  ஏற்பன ஆயின கொண்டுநன் முனிவர்,*
                                                                                                      தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?*  தோன்றினன் இரவியும் துலங்குஒளி பரப்பி,* 
                                                                                                      அம்பரதலத்தில் நின்று அகல்கின்றது இருள்போய்*  அரங்கத்து அம்மா பள்ளி! எழுந்து அருளாயே.


                                                                                                        ஏதம்இல் தண்ணுமை எக்கம்மத் தளியே*  யாழ்குழல் முழவமோடு இசைதிசை கெழுமி,* 
                                                                                                        கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்*  கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம்,*
                                                                                                        மாதவர் வானவர் சாரணர் இயக்கர்*  சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,* 
                                                                                                        ஆதலில் அவர்க்கு நாள்ஓலக்கம் அருள*  அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.  


                                                                                                          கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?*  கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?* 
                                                                                                          துடியிடையார் சுரி குழல் பிழிந்துஉதறித்*  துகில்உடுத்து ஏறினர் சூழ்புனல் அரங்கா,*
                                                                                                          தொடைஒத்த துளவமும் கூடையும் பொலிந்து*  தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி என்னும்- 
                                                                                                          அடியனை,*  அளியன் என்று அருளி உன் அடியார்க்கு-  ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்து அருளாயே!  (2)


                                                                                                            அமலன் ஆதிபிரான்*  அடியார்க்கு  என்னை ஆட்படுத்த-
                                                                                                            விமலன்,  *விண்ணவர் கோன்  *விரையார் பொழில் வேங்கடவன்,*
                                                                                                            நிமலன் நின்மலன் நீதி வானவன்* நீள்மதில் அரங்கத்து அம்மான்,* திருக்- 
                                                                                                            கமல பாதம் வந்து* என்கண்ணிணினுள்ளன ஒக்கின்றதே. (2)


                                                                                                              கண்ணி நுண் சிறுத் தாம்பினால்*  கட்டு உண்ணப்
                                                                                                              பண்ணிய பெரு மாயன்*  என் அப்பனில்*

                                                                                                              நண்ணித் தென் குருகூர்*  நம்பி என்றக்கால்
                                                                                                              அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (2) 



                                                                                                                நாவினால் நவிற்று*  இன்பம் எய்தினேன்*
                                                                                                                மேவினேன்*  அவன் பொன்னடி மெய்ம்மையே*

                                                                                                                தேவு மற்று அறியேன்*  குருகூர் நம்பி*
                                                                                                                பாவின் இன்னிசை*  பாடித் திரிவனே*



                                                                                                                  திரிதந்து ஆகிலும்*  தேவபிரான் உடைக்*
                                                                                                                  கரிய கோலத்*  திருவுருக் காண்பன் நான்*

                                                                                                                  பெரிய வண் குருகூர்*  நகர் நம்பிக்கு ஆள்-
                                                                                                                  உரியனாய்*  அடியேன்*  பெற்ற நன்மையே*



                                                                                                                    நன்மையால் மிக்க*  நான்மறையாளர்கள்*
                                                                                                                    புன்மை ஆகக்*  கருதுவர் ஆதலில்*

                                                                                                                    அன்னையாய் அத்தனாய்*  என்னை ஆண்டிடும்
                                                                                                                    தன்மையான்*  சடகோபன் என் நம்பியே  

                                                                                                                     



                                                                                                                      நம்பினேன்*  பிறர் நன்பொருள் தன்னையும்*
                                                                                                                      நம்பினேன்*  மடவாரையும் முன் எலாம்*
                                                                                                                      செம்பொன் மாடத்*  திருக் குருகூர் நம்பிக்கு
                                                                                                                      அன்பனாய்*  அடியேன்*  சதிர்த்தேன் இன்றே


                                                                                                                        இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்*
                                                                                                                        நின்று தன் புகழ் ஏத்த அருளினான் *
                                                                                                                        குன்ற மாடத்* திருக் குருகூர் நம்பி *
                                                                                                                        என்றும் என்னை * இகழ்வு இலன் காண்மினே.


                                                                                                                          கண்டு கொண்டு என்னைக்*  காரிமாறப் பிரான் *
                                                                                                                          பண்டை வல் வினை*  பாற்றி அருளினான்*
                                                                                                                          எண் திசையும்*  அறிய இயம்புகேன்* 
                                                                                                                          ஒண் தமிழ்ச்*  சடகோபன் அருளையே


                                                                                                                            அருள் கொண்டாடும்*  அடியவர் இன்புற*
                                                                                                                            அருளினான்*  அவ் அரு மறையின் பொருள்*
                                                                                                                            அருள்கொண்டு*  ஆயிரம் இன் தமிழ் பாடினான்* 
                                                                                                                            அருள் கண்டீர்*  இவ் உலகினில் மிக்கதே


                                                                                                                              மிக்க வேதியர்*  வேதத்தின் உட்பொருள்*
                                                                                                                              நிற்கப் பாடி*  என் நெஞ்சுள் நிறுத்தினான்*
                                                                                                                              தக்க சீர்ச்*  சடகோபன் என் நம்பிக்கு*  ஆட்- 
                                                                                                                              புக்க காதல்*  அடிமைப் பயன் அன்றே?


                                                                                                                                பயனன்று ஆகிலும்*  பாங்கலர் ஆகிலும்* 
                                                                                                                                செயல் நன்றாகத்  *திருத்திப் பணிகொள்வான்,*
                                                                                                                                குயில் நின்றார் பொழில் சூழ்  *குரு கூர்நம்பி,* 
                                                                                                                                முயல்கின்றேன்  *உன்தன் மொய்கழற்கு அன்பையே.  (2) 


                                                                                                                                  அன்பன் தன்னை*  அடைந்தவர்கட்கு எல்லாம் 
                                                                                                                                  அன்பன்*  தென் குருகூர்*  நகர் நம்பிக்கு*
                                                                                                                                  அன்பனாய்*  மதுரகவி சொன்ன சொல் 
                                                                                                                                  நம்புவார் பதி*  வைகுந்தம்*  காண்மினே   (2)


                                                                                                                                    பூமன்னு மாது பொருந்திய மார்பன்*  புகழ் மலிந்த- 
                                                                                                                                    பாமன்னு மாறன்*  அடிபணிந்து உய்ந்தவன்*  பல் கலையோர்- 
                                                                                                                                    தாம்மன்ன வந்த இராமானுசன்*  சரணாரவிந்தம்- 
                                                                                                                                    நாம்மன்னி வாழ*  நெஞ்சே!  சொல்லுவோம் அவன் நாமங்களே.   (2)


                                                                                                                                      கள்ளார்  பொழில்  தென்ன‌ரங்கன்*  கமலப் பதங்கள் நெஞ்சில்- 
                                                                                                                                      கொள்ளா*  மனிசரை நீங்கி*   குறையல் பிரான‌டிக்கீழ்- 
                                                                                                                                      விள்ளாத அன்பன் இராமானுசன்*  மிக்க சீலமல்லால்- 
                                                                                                                                      உள்ளாது என் நெஞ்சு*  ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே. (2) 


                                                                                                                                        பேரியல் நெஞ்சே!  அடிபணிந்தேன் உன்னை*  பேய்ப்பிறவிப்- 
                                                                                                                                        பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி*  பொருவருஞ்சீர்-
                                                                                                                                        ஆரியன் செம்மை இராமானுச முனிக்கு அன்புசெய்யும்* 
                                                                                                                                        சீரிய பேறுடையார்*  அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே.


                                                                                                                                          என்னைப்  புவியில்  ஒருபொருளாக்கி*  மருள்சுரந்த- 
                                                                                                                                          முன்னைப்  பழவினை  வேர‌றுத்து*  ஊழி முதல்வனையே- 
                                                                                                                                          பன்னப் பணித்த இராமானுசன்*  பரன் பாதமும் என்-
                                                                                                                                          சென்னித் தரிக்க வைத்தான்*  எனக்கேதும் சிதைவில்லையே.


                                                                                                                                            எனக்குற்ற செல்வம் இராமானுசன் என்று*  இசையகில்லா- 
                                                                                                                                            மனக்குற்ற மாந்தர்*  பழிக்கில் புகழ்*  அவன் மன்னியசீர்- 
                                                                                                                                            தனக்குற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என்பா* 
                                                                                                                                            இனக்குற்றம் காணகில்லார்,*  பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.  


                                                                                                                                              இயலும் பொருளும் இசையத் தொடுத்து,*  ஈன் கவிகள் அன்பால்-
                                                                                                                                              மயல்கொண்டு வாழ்த்தும் இராமானுசனை,*  மதியின்மையால்- 
                                                                                                                                              பயிலும் கவிகளில் பத்தியில்லாத என் பாவிநெஞ்சால்* 
                                                                                                                                              முயல்கின்றனன்*  அவன்தன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே.


                                                                                                                                                மொழியைக் கடக்கும் பெரும் புகழான்,*  வஞ்ச முக்குறும்பாம்- 
                                                                                                                                                குழியைக் கடக்கும்*  நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்* 
                                                                                                                                                பழியைக் கடத்தும்  இராமானுசன் புகழ் பாடி*  அல்லா- 
                                                                                                                                                வழியைக் கடத்தல்*  எனக்கு இனி யாதும் வருத்தம‌ன்றே.  (2)


                                                                                                                                                  வருத்தும் புறவிருள் மாற்ற,*  எம் பொய்கைப்பிரான் மறையின்- 
                                                                                                                                                  குருத்தின் பொருளையும்*  செந்தமிழ் தன்னையும் கூட்டி*  ஒன்றத்- 
                                                                                                                                                  திரித்தன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ள‌த்தே* 
                                                                                                                                                  இருத்தும் பரமன்*  இராமானுசன் எம் இறையவனே.    


                                                                                                                                                    இறைவனைக் காணும் இதயத்து இருள்கெட*  ஞானமென்னும்- 
                                                                                                                                                    நிறைவிளக்கு ஏற்றிய*  பூதத் திருவடி தாள்கள்,*  நெஞ்சத்து- 
                                                                                                                                                    உறையவைத்து ஆளும் இராமானுசன் புகழ் ஓதும்நல்லோர்* 
                                                                                                                                                    மறையினைக் காத்து*  இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே.       


                                                                                                                                                      மன்னிய பேரிருள் மாண்டபின்*  கோவலுள் மாமலராள்- 
                                                                                                                                                      தன்னொடு மானை*  கண்டமை காட்டும்*  தமிழ்த்தலைவன்- 
                                                                                                                                                      பொன்னடி போற்றும் இராமானுசற்கு அன்பு பூண்டவர்தாள்* 
                                                                                                                                                      சென்னியிற் ​சூடும்*  திருவுடையார் என்றும் சீரியரே.     


                                                                                                                                                        சீரிய நான்மறைச் செம்பொருள்*  செந்தமிழால் அளித்த- 
                                                                                                                                                        பாரியலும் புகழ்*  பாண்பெருமாள்,*  சரணாம் பதுமத்- 
                                                                                                                                                        தாரியல்  சென்னி இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்தம்* 
                                                                                                                                                        காரிய வண்மை,*  என்னால் சொல்லொணாது இக்கடலிடத்தே.


                                                                                                                                                          இடங்கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன்*  இணையடிப்போது- 
                                                                                                                                                          அடங்கும் இதயத்து இராமானுசன்,*  அம்பொற் பாதமென்றும்-
                                                                                                                                                          கடங்கொண்டு இறைஞ்சும் திருமுனிவர்க்கன்றிக் காதல்செய்யா* 
                                                                                                                                                          திடங்கொண்ட ஞானியர்க்கே*  அடியேன் அன்பு செய்வதுவே.


                                                                                                                                                            செய்யும் பசுந்துளபத் தொழில் மாலையும்*  செந்தமிழில்- 
                                                                                                                                                            பெய்யும் மறைத்தமிழ் மாலையும்*  பேராத சீரரங்கத்து- 
                                                                                                                                                            ஐயன் கழற்கணியும் பரன் தாளன்றி*  ஆதரியா- 
                                                                                                                                                            மெய்யன்*  இராமானுசன் சரணே கதி வேறெனக்கே.


                                                                                                                                                              கதிக்குப் பதறி*  வெங்கானமும் கல்லும்  கடலுமெல்லாம்- 
                                                                                                                                                              கொதிக்க*  தவம்செய்யும் கொள்கை அற்றேன்,*  கொல்லி காவலன் சொல்- 
                                                                                                                                                              பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே* 
                                                                                                                                                              துதிக்கும் பரமன்*  இராமானுசன் என்னைச் சோர்விலனே.


                                                                                                                                                                 சோராத காதல் பெருஞ்சுழிப்பால்,*  தொல்லை மாலையொன்றும்- 
                                                                                                                                                                பாராத‌வனைப்*  பல்லாண்டென்று காப்பிடும்*  பான்மையன்தாள்- 

                                                                                                                                                                பேராத  உள்ளத்து இராமானுசன் தன் பிறங்கியசீர்*
                                                                                                                                                                சாரா மனிசரைச் சேரேன்*  எனக்கென்ன தாழ்வினியே?



                                                                                                                                                                  தாழ்வு ஒன்றில்லா மறை தாழ்ந்து*  தலமுழுதும் கலியே- 
                                                                                                                                                                  ஆள்கின்ற நாள் வந்து*  அளித்தவன் காண்மின்*  அரங்கர்மௌலி- 
                                                                                                                                                                  சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்ல‌ருளால்* 
                                                                                                                                                                  வாழ்கின்ற வள்ளல்*  இராமானுசன் என்னும் மாமுனியே.  (2)


                                                                                                                                                                    முனியார் துயரங்கள் முந்திலும்*  இன்பங்கள் மொய்த்திடினும்- 
                                                                                                                                                                    கனியார் மனம்*  கண்ண மங்கை நின்றானைக்*  கலைபரவும்- 
                                                                                                                                                                    தனியானைத் தண் தமிழ்செய்த நீலன் தனக்கு*  உலகில்- 
                                                                                                                                                                    இனியானை*  எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே.       


                                                                                                                                                                      எய்தற்கு அரிய மறைகளை* ஆயிரம் இன்தமிழால்- 
                                                                                                                                                                      செய்தற்கு உலகில் வரும்*  சடகோபனைச்*  சிந்தையுள்ளே- 
                                                                                                                                                                      பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை  உயிர்களெல்லாம்* 
                                                                                                                                                                      உய்தற்கு உதவும்*  இராமானுசன் எம்  உறுதுணையே. 


                                                                                                                                                                        உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும்*  உயர்குருவும்- 
                                                                                                                                                                        வெறிதரு பூமகள் நாதனும்*  மாறன் விளங்கியசீர்- 
                                                                                                                                                                        நெறிதரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீணிலத்தோர்* 
                                                                                                                                                                        அறிதர நின்ற,*  இராமானுசன் எனக்கு ஆரமுதே.  


                                                                                                                                                                          ஆரப் பொழில் தென் குருகைப் பிரான்,*  அமுதத் திருவாய்- 
                                                                                                                                                                          ஈரத் தமிழின்*  இசை உணர்ந்தோர்கட்கு*  இனியவர்தம்- 
                                                                                                                                                                          சீரைப் பயின்று உய்யும் சீலங்கொள் நாதமுனியை*  நெஞ்சால்- 
                                                                                                                                                                          வாரிப் பருகும்*  இராமானுசன் என்தன் மாநிதியே


                                                                                                                                                                            நிதியைப் பொழியும் முகில்என்று*  நீசர்தம் வாசல்பற்றித்- 
                                                                                                                                                                            துதிகற்று உலகில் துவள்கின்றிலேன்*  இனி தூய்நெறிசேர்- 
                                                                                                                                                                            எதிகட்கு இறைவன் யமுனைத் துறைவன் இணைய‌டியாம்* 
                                                                                                                                                                            கதிபெற்றுடைய*  இராமானுசன் என்னைக் காத்தனனே.


                                                                                                                                                                              கார்த்திகை  யானும் கரிமுகத் தானும்*  கனலும்முக்கண்- 
                                                                                                                                                                              மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு*  மூவுலகும்-
                                                                                                                                                                              பூத்தவனே!  என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த* 
                                                                                                                                                                              தீர்த்தனை ஏத்தும்*  இராமானுசன் என்தன் சேமவைப்பே.


                                                                                                                                                                                வைப்பாய வான்பொருள் என்று,*  நல்லன்பர்  மனத்தகத்தே- 
                                                                                                                                                                                எப்போதும் வைக்கும் இராமானுசனை*  இருநிலத்தில்- 
                                                                                                                                                                                ஒப்பார் இலாத உறுவினையேன் வஞ்ச நெஞ்சில்வைத்து* 
                                                                                                                                                                                முப்போதும் வாழ்த்துவன்*  என்னாம்  இதுஅவன் மொய்புகழ்க்கே!      


                                                                                                                                                                                  மொய்த்த வெந்தீவினையால் பல்லுடல் தொறும் மூத்து,*  அதனால்- 
                                                                                                                                                                                  எய்த்தொழிந்தேன் முனநாள்கள் எல்லாம்,*  இன்று   க‌ண்டுயர்ந்தேன்- 
                                                                                                                                                                                  பொய்த்தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்தவியக்* 
                                                                                                                                                                                  கைத்த மெய்ஞ்ஞானத்து*  இராமானுசன் என்னும் கார்தன்னையே   


                                                                                                                                                                                    காரேய் கருணை இராமானுச,*  இக் கடலிடத்தில்- 
                                                                                                                                                                                    ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை*   அல்லலுக்கு- 
                                                                                                                                                                                    நேரே உறைவிடம் நான்வந்து நீஎன்னை உய்த்தபின்*  உன்- 
                                                                                                                                                                                    சீரே உயிர்க்குயிராய்,*  அடியேற்கு இன்று தித்திக்குமே.  


                                                                                                                                                                                      திக்குற்ற கீர்த்தி இராமானுசனை,*  என் செய்வினையாம்- 
                                                                                                                                                                                      மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை*  மேவும்நல்லோர்- 
                                                                                                                                                                                      எக்குற்ற  வாளர் எதுபிறப்பேது இயல்வாக நின்றோர்* 
                                                                                                                                                                                      அக்குற்றம் அப்பிறப்பு*  அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே


                                                                                                                                                                                        கொள்ளக் குறைவு அற்று இலங்கி*  கொழுந்து விட்டு ஓங்கிய உன் 
                                                                                                                                                                                        வள்ளல் தனத்தினால்*  வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்* 
                                                                                                                                                                                        வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று* 
                                                                                                                                                                                        தள்ளுற்று இரங்கும்*  இராமாநுச! என் தனி நெஞ்சமே!


                                                                                                                                                                                          நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன்*  நங்கள்- 
                                                                                                                                                                                          பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன்*  பாதம்நண்ணா- 
                                                                                                                                                                                          வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என்வாய்* 
                                                                                                                                                                                          கொஞ்சிப் பரவகில்லாது*  என்ன வாழ்வு இன்று கூடியதே!


                                                                                                                                                                                            கூட்டும் விதி என்று கூடுங்கொலோ,*  தென் குருகைப்பிரான்- 
                                                                                                                                                                                            பாட்டென்னும்*  வேதப் பசுந்தமிழ் தன்னை,*  தன் பத்தியென்னும்-
                                                                                                                                                                                            வீட்டின்கண் வைத்த இராமானுசன் புகழ் மெய்யுணர்ந்தோர்* 
                                                                                                                                                                                            ஈட்டங்கள் தன்னை,*  என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே?


                                                                                                                                                                                              இன்பம் தருபெருவீடு வந்து எய்திலென்?*  எண்ணிறந்த- 
                                                                                                                                                                                              துன்பம் தரு நிரயம்பல சூழிலென்?*  தொல்லுலகில்- 
                                                                                                                                                                                              மன்பல்லுயிர்கட்கு இறையவன் மாயன் எனமொழிந்த* 
                                                                                                                                                                                              அன்பன் அனகன்*  இராமானுசன் என்னை ஆண்டனனே.


                                                                                                                                                                                                ஆண்டுகள் நாள் திங்களாய்*  நிகழ்காலம் எல்லாம் மனமே!-
                                                                                                                                                                                                ஈண்டு*  பல்யோனிகள்  தோறும்  உழல்வோம்*  இன்றோர்   எண்ணின்றியே‍‍‍‍‍-
                                                                                                                                                                                                காண்தகு தோவ‌ண்ணல் தென்ன‌த்தி ஊரர் கழலிணைக்கீழ்ப்
                                                                                                                                                                                                பூண்டன்பாளன்*  இராமானுசனைப் பொருந்தினமே.  (2)


                                                                                                                                                                                                  பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,*  நல்ல- 
                                                                                                                                                                                                  திருந்திய ஞானமும் செல்வமும் சேரும்*  செறுகலியால்- 
                                                                                                                                                                                                  வருந்திய ஞாலத்தை*  வண்மையினால்  வந்தெடுத்தளித்த- 
                                                                                                                                                                                                  அருந்தவன்*  எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே.  


                                                                                                                                                                                                    அடையார்  கமலத்து அலர்மகள் கேள்வன்*  கையாழியென்னும்- 
                                                                                                                                                                                                    படையோடு   நாந்தகமும் படர் தண்டும்,*  ஒண் சார்ங்கவில்லும்- 
                                                                                                                                                                                                    புடையார்   புரிசங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு*  என்று- 
                                                                                                                                                                                                    இடையே*  இராமானுச முனியாயின  இந்நிலத்தே   


                                                                                                                                                                                                      நிலத்தைச்  செறுத்துண்ணும்  நீசக் கலியை,*  நினைப்ப‌ரிய- 
                                                                                                                                                                                                      ப‌லத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை,*  என் பெய்வினைதென்- 
                                                                                                                                                                                                      புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கியபின்* 
                                                                                                                                                                                                      நலத்தைப் பொறுத்தது*  இராமானுசன் தன் நயப்புகழே


                                                                                                                                                                                                        நயவேன் ஒருதெய்வம் நானிலத்தே*  சில மானிடத்தைப்- 
                                                                                                                                                                                                        புயலே என*  கவி போற்றி செய்யேன்*  பொன் அரங்கமென்னில்-
                                                                                                                                                                                                        மயலே பெருகும் இராமானுசன்*  மன்னு மாமலர்த்தாள்- 
                                                                                                                                                                                                        அயரேன்*  அருவினை என்னை எவ்வாறு  இன்று அடர்ப்பதுவே?    


                                                                                                                                                                                                          அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன்*  அன்று ஆரணச்சொல்- 
                                                                                                                                                                                                          கடல்கொண்ட ஒண்பொருள் கண்ட‌ளிப்ப,*  பின்னும் காசினியோர்- 
                                                                                                                                                                                                          இடரின்கண் வீழ்ந்திடத் தானும் அவ்வொண்பொருள் கொண்டு*  அவர்பின்- 
                                                                                                                                                                                                          படரும் குணன்,*  எம் இராமானுசன் தன் படிஇதுவே.


                                                                                                                                                                                                            படிகொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்திவெள்ளம்* 
                                                                                                                                                                                                            குடிகொண்ட கோயில் இராமாநுசன் குணங்கூறும்,*  அன்பர்-
                                                                                                                                                                                                            கடிகொண்ட மாமலர்த்தாள் கலந்து உள்ளங் கனியும்நல்லோர்* 
                                                                                                                                                                                                            அடிகண்டு கொண்டு உகந்து*  என்னையும் ஆள‌வர்க்கு ஆக்கினரே


                                                                                                                                                                                                              ஆக்கி அடிமை நிலைப்பித்தனை*  என்னை இன்று, அவமே- 
                                                                                                                                                                                                              போக்கிப் புறத்திட்டது என்பொருளா முன்பு*  புண்ணியர்தம்- 
                                                                                                                                                                                                              வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின்வண்ணம்* 
                                                                                                                                                                                                              நோக்கில் தெரிவ‌ரிதால்,*  உரையாய் இந்த நுண்பொருளே.  


                                                                                                                                                                                                                பொருளும் புதல்வரும் பூமியும்*  பூங்குழலாரும் என்றே- 
                                                                                                                                                                                                                மருள்கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே!*  மற்றுளார்தரமோ- 
                                                                                                                                                                                                                இருள்கொண்ட வெந்துயர் மாற்றித் தன் ஈறில் பெரும்புகழே* 
                                                                                                                                                                                                                தெருளும் தெருள்தந்து*  இராமானுசன் செய்யும் சேமங்களே?   


                                                                                                                                                                                                                  சேமநல் வீடும் பொருளும் தருமமும்*  சீரியநற்- 
                                                                                                                                                                                                                  காமமும் என்றிவை  நான்கென்பர்*  நான்கினும் கண்ணனுக்கே- 
                                                                                                                                                                                                                  ஆமது  காமம் அறம்பொருள் வீடிதற்கு என்றுரைத்தான்* 
                                                                                                                                                                                                                  வாமனன் சீலன்*  இராமானுசன் இந்த மண்மிசையே. 


                                                                                                                                                                                                                    மண்மிசை யோனிகள்  தோறும் பிறந்து*  எங்கள் மாதவனே- 
                                                                                                                                                                                                                    கண்ணுற நிற்கிலும் காணகில்லா,*  உலகோர்கள் எல்லாம்-
                                                                                                                                                                                                                    அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே* 
                                                                                                                                                                                                                    நண்ணரு  ஞானம் தலைக்கொண்டு,*  நாரணற்கு ஆயினரே.


                                                                                                                                                                                                                      ஆயிழையார் கொங்கை தங்கும்*  அக் காதல்  அளற்றழுந்தி-
                                                                                                                                                                                                                      மாயும் என் ஆவியை*  வந்தெடுத்தான் இன்று*  மாமலராள்-
                                                                                                                                                                                                                      நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன்*  அரங்கனென்னும்- 
                                                                                                                                                                                                                      தூயவன்*  தீதில் இராமானுசன் தொல்ல‌ருள் சுரந்தே.


                                                                                                                                                                                                                        சுரக்கும் திருவும் உணர்வும்*  சொலப்புகில் வாய‌முதம்- 
                                                                                                                                                                                                                        பரக்கும் இருவினை பற்றற‌ ஓடும்*  படியில்உள்ளீர்- 
                                                                                                                                                                                                                        உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறுகலியை* 
                                                                                                                                                                                                                        துரக்கும் பெருமை*  இராமானுசன் என்று சொல்லுமினே.


                                                                                                                                                                                                                          சொல்லார்  தமிழ்ஒரு மூன்றும்*  சுருதிகள் நான்கும்எல்லை- 
                                                                                                                                                                                                                          இல்லா* அறநெறி யாவும் தெரிந்தவன்*  எண்ணருஞ்சீர்- 
                                                                                                                                                                                                                          நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்கு* 
                                                                                                                                                                                                                          அல்லார் அகல்இடத்தோர்,*  எது பேறென்று காமிப்பரே.


                                                                                                                                                                                                                            பேறுஒன்று மற்றில்லை நின்சரண் அன்றி*  அப் பேற‌ளித்தற்கு- 
                                                                                                                                                                                                                            ஆறுஒன்றும் இல்லை*  மற்ற‌ச் சரண் அன்றி,*  என்று இப்பொருளைத்-
                                                                                                                                                                                                                            தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்* 
                                                                                                                                                                                                                            கூறும் பரம‌ன்று*  இராமானுச மெய்ம்மை கூறிடிலே.


                                                                                                                                                                                                                              கூறும் சமயங்கள் ஆறும் குலைய*  குவலயத்தே- 
                                                                                                                                                                                                                              மாறன் பணித்த*  மறையுணர்ந்தோனை*  மதியிலியேன்-
                                                                                                                                                                                                                              தேறும் ப‌டி என் மனம் புகுந்தானை*  திசைய‌னைத்தும்- 
                                                                                                                                                                                                                              ஏறும் குணனை*  இராமானுசனை இறைஞ்சினமே.


                                                                                                                                                                                                                                இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கனென்று*  இவ்வுலகத்து- 
                                                                                                                                                                                                                                அறம் செப்பும்*  அண்ணல் இராமானுசன்,*  என் அருவினையின்-
                                                                                                                                                                                                                                திறம்செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே* 
                                                                                                                                                                                                                                நிறைந்து ஒப்ப‌ற இருந்தான்,*  எனக்குஆரும் நிகர்இல்லையே!


                                                                                                                                                                                                                                  நிகரின்றி நின்ற என் நீசதைக்கு*  உன் அருளின்கண் அன்றிப்-
                                                                                                                                                                                                                                  புகல் ஒன்றும்இல்லை*  அருட்கும் அஃதேபுகல்*  புன்மையிலோர்-
                                                                                                                                                                                                                                  பகரும் பெருமை இராமானுச!  இனி நாம்பழுதே*
                                                                                                                                                                                                                                  அகலும் பொருள்என்*  பயன் இருவோமுக்கும் ஆனபின்னே?


                                                                                                                                                                                                                                    ஆனது செம்மை அறநெறி*  பொய்ம்மை அறுசமயம்- 
                                                                                                                                                                                                                                    போனது பொன்றி*  இறந்தது வெங்கலி*  பூங்கமலத்-
                                                                                                                                                                                                                                    தேன்நதி பாய்வயல் தென்அரங்கன் கழல் சென்னிவைத்துத்* 
                                                                                                                                                                                                                                    தான்அதில் மன்னும்*  இராமானுசன் இத்தலத்து உதித்தே.


                                                                                                                                                                                                                                      உதிப்பன உத்தமர் சிந்தையுள்*  ஒன்னலர் நெஞ்சம்அஞ்சி- 
                                                                                                                                                                                                                                      கொதித்திட*  மாறி நடப்பன*  கொள்ளைவன் குற்றம்எல்லாம்-
                                                                                                                                                                                                                                      பதித்த என் புன்கவிப் பாஇனம் பூண்டன பாவுதொல்சீர்* 
                                                                                                                                                                                                                                      எதித்தலை நாதன்*  இராமானுசன் தன் இணைஅடியே  (2)


                                                                                                                                                                                                                                        அடியைத் தொடர்ந்துஎழும் ஐவர்கட்காய்*  அன்று பாரதப்போர்- 
                                                                                                                                                                                                                                        முடியப்*  பரிநெடுந் தேர் விடுங்கோனை*  முழுதுணர்ந்த-
                                                                                                                                                                                                                                        அடியர்க்கு அமுதம் இராமானுசன்  என்னை ஆளவந்து*  இப்- 
                                                                                                                                                                                                                                        படியில் பிறந்தது*  மற்றுஇல்லை காரணம் பார்த்திடிலே.


                                                                                                                                                                                                                                          பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப,*  இப் பார்முழுதும்- 
                                                                                                                                                                                                                                          போர்த்தான் புகழ்கொண்டு*  புன்மையினேன் இடைத்தான் புகுந்து*
                                                                                                                                                                                                                                          தீர்த்தான் இருவினை தீர்த்து*  அரங்கன் செய்ய  தாள்இணையோடு- 
                                                                                                                                                                                                                                          ஆர்த்தான்*  இவை எம் இராமானுசன் செய்யும் அற்புதமே.


                                                                                                                                                                                                                                            அற்புதன் செம்மை இராமானுசன்,*  என்னை ஆளவந்த- 
                                                                                                                                                                                                                                            கற்பகம்*  கற்றவர்*  காமுறு சீலன்*  கருதுஅரிய-
                                                                                                                                                                                                                                            பற்பல்லுயிர்களும் பல்லுலகு யாவும் பரனதுஎன்னும்* 
                                                                                                                                                                                                                                            நற்பொருள் தன்னை,*  இந் நானிலத்தே வந்து நாட்டினனே.


                                                                                                                                                                                                                                              நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன,*  நாரணனைக்- 
                                                                                                                                                                                                                                              காட்டிய வேதம் களிப்புற்றது,*  தென் குருகைவள்ளல்-
                                                                                                                                                                                                                                              வாட்டம்இலா வண் தமிழ்மறை வாழ்ந்தது*  மண்ணுலகில்- 
                                                                                                                                                                                                                                              ஈட்டிய சீலத்து*  இராமாநுசன் தன் இயல்வுகண்டே.


                                                                                                                                                                                                                                                கண்டவர் சிந்தை கவரும்*  கடிபொழில் தென்அரங்கன்* 
                                                                                                                                                                                                                                                தொண்டர் குலாவும் இராமானுசனை*  தொகைஇறந்த-
                                                                                                                                                                                                                                                பண்தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்* 
                                                                                                                                                                                                                                                கொண்டலை மேவித் தொழும்,*  குடியாம் எங்கள் கோக்குடியே.


                                                                                                                                                                                                                                                  கோக்குல மன்னரை மூவெழு கால்*  ஒரு கூர் மழுவால்-
                                                                                                                                                                                                                                                  போக்கிய தேவனைப்*  போற்றும் புனிதன்*  புவனமெங்கும்-
                                                                                                                                                                                                                                                  ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின்*  என்
                                                                                                                                                                                                                                                  வாக்கு உரையாது,*  என் மனம் நினையாது இனி மற்றறொன்றையே.


                                                                                                                                                                                                                                                    மற்றொரு பேறு மதியாது,*  அரங்கன் மலரடிக்கு ஆள்- 
                                                                                                                                                                                                                                                    உற்றவரே*  தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமனை*
                                                                                                                                                                                                                                                     நற்றவர் போற்றும் இராமாநுசனை*  இந் நானிலத்தே- 
                                                                                                                                                                                                                                                    பெற்றனன்*  பெற்றபின் மாற்றியேன் ஒரு பேதைமையே.


                                                                                                                                                                                                                                                      பேதையர் வேதப் பொருள் இதென்று உன்னி*  பிரமம் நன்றென்று 
                                                                                                                                                                                                                                                      ஓதி மற்றெல்லா உயிரும் அஃதென்று*  உயிர்கள் மெய்விட்டு-
                                                                                                                                                                                                                                                      ஆதிப் பரனோடு ஒன்றுமென்று சொல்லும் அவ் வல்லலெல்லாம்* 
                                                                                                                                                                                                                                                      வாதில் வென்றான்,*  எம் இராமாநுசன் மெய்ம்மதிக்கடலே.


                                                                                                                                                                                                                                                        கடலளவாய திசை எட்டினுள்ளும்*  கலியிருளே 
                                                                                                                                                                                                                                                        மிடைதரு காலத்து இராமாநுசன்,*  மிக்க நான்மறையின்-
                                                                                                                                                                                                                                                        சுடரொளியால் அவ்   விருளைத் துரந்திலனேல்*  உயிரை- 
                                                                                                                                                                                                                                                        உடையவன்,*  நாரணன் என்று அறிவாரில்லை உற்றுணர்ந்தே. 


                                                                                                                                                                                                                                                          உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந் தொறும்,*  திருவாய் மொழியின்- 
                                                                                                                                                                                                                                                          மணந்தரும்*  இன்னிசை மன்னும் இடந்தொறும்*  மாமலராள்- 
                                                                                                                                                                                                                                                          புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்* 
                                                                                                                                                                                                                                                          குணந்திகழ் கொண்டல்*  இராமாநுசன் எம் குலக்கொழுந்தே.


                                                                                                                                                                                                                                                            கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால்,*  நிரயத்து- 
                                                                                                                                                                                                                                                            அழுந்தியிட்டேனை*  வந்து ஆட்கொண்ட பின்னும்,*  அரு முனிவர்-
                                                                                                                                                                                                                                                            தொழும் தவத்தோன் எம் இராமாநுசன்*  தொல் புகழ்* சுடர்மிக்கு- 
                                                                                                                                                                                                                                                            எழுந்தது,*  அத்தால் நல்ல அதிசயங் கண்ட இருநிலமே.


                                                                                                                                                                                                                                                              இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றி*  இன்று யான் இறையும்- 
                                                                                                                                                                                                                                                              வருந்தேன்*  இனி எம் இராமாநுசன்,*  மன்னு மாமலர்த்தாள்-
                                                                                                                                                                                                                                                              பொருந்தா நிலையுடையப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மைசெய்யா* 
                                                                                                                                                                                                                                                              பெருந்தேவரைப் பரவும்,*  பெரியோர் தம் கழல்பிடித்தே.


                                                                                                                                                                                                                                                                பிடியைத் தொடரும் களிறென்ன*  யான் உன் பிறங்கிசீர்- 
                                                                                                                                                                                                                                                                அடியைத் தொடரும் படி நல்க வேண்டும்*  அறுசமயச்-
                                                                                                                                                                                                                                                                செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்து*  இப்- 
                                                                                                                                                                                                                                                                படியைத் தொடரும்*  இராமாநுச! மிக்க பண்டிதனே!


                                                                                                                                                                                                                                                                  பண் தரு மாறன் பசுந்தமிழ்*  ஆனந்தம் பாய்மதமாய்- 
                                                                                                                                                                                                                                                                  விண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம்*  மெய்ம்மை-
                                                                                                                                                                                                                                                                  கொண்ட நல் வேதக் கொழுந்தண்டமேந்திக்* குவலயத்தே- 
                                                                                                                                                                                                                                                                  மண்டி வந்தேன்றது*  வாதியர்காள்! உங்கள் வாழ்வற்றதே.


                                                                                                                                                                                                                                                                    வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு*  என்றும் மறையவர்தம்- 
                                                                                                                                                                                                                                                                    தாழ்வற்றது*  தவம் தாரணி பெற்றது*  தத்துவநூல்-
                                                                                                                                                                                                                                                                    கூழற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு*  அந்- 
                                                                                                                                                                                                                                                                    நாழற்றது,*  நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே.


                                                                                                                                                                                                                                                                      ஞானம் கனிந்த நலங்கொண்டு*  நாள்தொறும் நைபவர்க்கு- 
                                                                                                                                                                                                                                                                      வானம் கொடுப்பது மாதவன்*  வல்வினையேன் மனத்தில்-
                                                                                                                                                                                                                                                                      ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு* அத்- 
                                                                                                                                                                                                                                                                      தானம் கொடுப்பது*  தன் தகவென்னும் சரண் கொடுத்தே. 


                                                                                                                                                                                                                                                                        சரணம் அடைந்த தருமனுக்கா*  பண்டு நூற்றுவரை- 
                                                                                                                                                                                                                                                                        மரணம் அடைவித்த மாயவன் தன்னை*  வணங்கவைத்த-
                                                                                                                                                                                                                                                                        கரணம் இவை உமக்கன்று என்றி இராமாநுசன்*  உயிர்கட்கு- 
                                                                                                                                                                                                                                                                        அரண் அங்கு அமைத்திலனேல்,*  அரணார் மற்று இவ்வாருயிர்க்கே?


                                                                                                                                                                                                                                                                          ஆரெனக்கு இன்று நிகர் சொல்லில்?*  மாயன் அன்று ஐவர்தெய்வத்-
                                                                                                                                                                                                                                                                          தேரினில் செப்பிய கீதையின்*   செம்மைப் பொருள் தெரியப்-
                                                                                                                                                                                                                                                                          பாரினில் சொன்ன இராமாநுசனை பணியும் நல்லோர்*
                                                                                                                                                                                                                                                                          சீரினில் சென்று பணிந்தது,*  என் ஆவியும் சிந்தையுமே.


                                                                                                                                                                                                                                                                            சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து,*  முன்னாள் 
                                                                                                                                                                                                                                                                            அந்தமுற்று ஆழ்ந்தது கண்டு,*  அவை என்தனக்கு அன்றருளால்-
                                                                                                                                                                                                                                                                            தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன்*  தான் அதுதந்து* 
                                                                                                                                                                                                                                                                            எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே.


                                                                                                                                                                                                                                                                              என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து,*  எண்ணில் பல்குணத்த- 
                                                                                                                                                                                                                                                                              உன்னையும் பார்க்கில்*  அருள் செய்வதே நலம்*  அன்றி என்பால்-
                                                                                                                                                                                                                                                                              பின்னையும் பார்க்கில் நலமுளதே? உன் பெருங்கருணை* 
                                                                                                                                                                                                                                                                              தன்னை என் பார்ப்பர்?*  இராமாநுச! உன்னைச் சார்ந்தவரே?


                                                                                                                                                                                                                                                                                சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக்கீழ்,*  அன்பு தான்மிகவும்-
                                                                                                                                                                                                                                                                                கூர்ந்தது*  அத் தாமரைத் தாள்களுக்கு*  உன்தன் குணங்களுக்கே-
                                                                                                                                                                                                                                                                                தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை  நீ செய்வினை*  அதனால்- 
                                                                                                                                                                                                                                                                                பேர்ந்தது*  வண்மை இராமாநுச! எம் பெருந்தகையே.


                                                                                                                                                                                                                                                                                  கைத்தனன் தீய சமயக் கலகரை*  காசினிக்கே-
                                                                                                                                                                                                                                                                                  உய்த்தனன்*  தூய மறைநெறி தன்னை,*  என்று உன்னி உள்ளம்-
                                                                                                                                                                                                                                                                                  நெய்த்தவன் போடிருந்தது  ஏத்தும் நிறை புகழோருடனே*
                                                                                                                                                                                                                                                                                  வைத்தனன் என்னை*  இராமாநுசன் மிக்க வண்மைசெய்தே.


                                                                                                                                                                                                                                                                                    வண்மையினாலும் தன் மா தகவாலும்*  மதிபுரையும்- 
                                                                                                                                                                                                                                                                                    தண்மையினாலும்*  இத் தாரணியோர்கட்குத்*  தான்சரணாய்-
                                                                                                                                                                                                                                                                                    உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை*  உன்னும்-
                                                                                                                                                                                                                                                                                    திண்மை அல்லால் எனக்கில்லை,*  மற்றோர் நிலை தேர்ந்திடிலே.


                                                                                                                                                                                                                                                                                      தேரார் மறையின் திமெறன்று*  மாயவன் தீயவரைக்- 
                                                                                                                                                                                                                                                                                      கூராழி கொண்டு குறைப்பது*  கொண்டல் அனையவண்மை-
                                                                                                                                                                                                                                                                                      ஏரார் குணத்து எம் இராமாநுசன்*  அவ்வெழில் மறையில்- 
                                                                                                                                                                                                                                                                                      சேராதவரைச் சிதைப்பது,*  அப்போது ஒரு சிந்தைசெய்தே.


                                                                                                                                                                                                                                                                                        செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும்*  திருவரங்கர் 
                                                                                                                                                                                                                                                                                        கைத்தலத்து ஆழியும்  சங்கமும் ஏந்தி,*  நங்கண் முகப்பே-
                                                                                                                                                                                                                                                                                        மொய்த்தலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும்*   நின்புகழே- 
                                                                                                                                                                                                                                                                                        மொய்த்தலைக்கும் வந்து*  இராமாநுச! என்னை முற்றுநின்றே.


                                                                                                                                                                                                                                                                                          நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,*  நிறை வேங்கடப்பொற்
                                                                                                                                                                                                                                                                                          குன்றமும்*  வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்*
                                                                                                                                                                                                                                                                                          உன்தனக்கு எத்தனை இன்பந் தரும் உன் இணைமலர்த்தாள்*
                                                                                                                                                                                                                                                                                          என்தனக்கும் அது,*  இராமாநுச! இவை ஈந்தருளே. (2)


                                                                                                                                                                                                                                                                                            ஈந்தனன் ஈயாத இன்னருள்*  எணிண்ல் மறைக்குறும்பைப்-
                                                                                                                                                                                                                                                                                            பாய்ந்தனன்*  அம்மறைப் பல்பொருளால்,*  இப் படியனைத்தும்-
                                                                                                                                                                                                                                                                                            ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை*  வேர்பறியக்-
                                                                                                                                                                                                                                                                                            காய்ந்தனன்*  வண்மை இராமாநுசற்கு என் கருத்தினியே?


                                                                                                                                                                                                                                                                                              கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி*  கருதரிய-
                                                                                                                                                                                                                                                                                              வருத்தத்தினால்*  மிக வஞ்சித்து*  நீயிந்த மண்ணகத்தே-
                                                                                                                                                                                                                                                                                              திருத்தித் திருமகள் கேள்வனு ஆக்கிய பின்*  என் நெஞ்சில்-
                                                                                                                                                                                                                                                                                              பொருத்தப் படாது,*  எம்இராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே.


                                                                                                                                                                                                                                                                                                பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,*  இந்தப் பூதலத்தே- 
                                                                                                                                                                                                                                                                                                மெய்யைப் புரக்கும்*  இராமாநுசன் நிற்க,*  வேறுநம்மை-
                                                                                                                                                                                                                                                                                                உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கு யாதென்று உலர்ந்து அவமே* 
                                                                                                                                                                                                                                                                                                ஐயப்படா நிற்பர்*  வையத்து உள்ளோர் நல்லறிவு இழந்தே.


                                                                                                                                                                                                                                                                                                  நல்லார் பரவும் இராமாநுசன்,*  திரு நாமம் நம்ப-
                                                                                                                                                                                                                                                                                                  வல்லார் திறத்தை*  மறவாதவர்கள் எவர்,*  அவர்க்கே-
                                                                                                                                                                                                                                                                                                  எல்லாவிடத்திலும் என்றும் எப்போதிலும் எத்தொழும்பும்*
                                                                                                                                                                                                                                                                                                  சொல்லால் மனத்தால்*  கருமத்தினால் செய்வன் சோர்வின்றியே.


                                                                                                                                                                                                                                                                                                    சோர்வின்றி உன்தன் துணையடிக் கீழ்,*  தொண்டு பட்டவர்பால்- 
                                                                                                                                                                                                                                                                                                    சார்வின்றி நின்ற எனக்கு,*  அரங்கன் செய்ய தாளிணைகள்-
                                                                                                                                                                                                                                                                                                    பேர்வின்றி இன்று பெறுத்தும் இராமாநுச!*  இனிஉன்- 
                                                                                                                                                                                                                                                                                                    சீர் ஒன்றிய கருணைக்கு,*  இல்லை மாறு தெரிவுறிலே.


                                                                                                                                                                                                                                                                                                      தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,*  வெந் தீவினையால்- 
                                                                                                                                                                                                                                                                                                      உருவற்ற ஞானத்து உழல்கின்ற என்னை,*  ஒரு பொழுதில்-
                                                                                                                                                                                                                                                                                                      பொருவற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ!* 
                                                                                                                                                                                                                                                                                                      தெரிவுற்ற கீர்த்தி,*  இராமாநுசன் என்னும் சீர் முகிலே.


                                                                                                                                                                                                                                                                                                        சீர்கொண்டு பேரறம் செய்து,*  நல்வீடு செறிதும் என்னும்* 
                                                                                                                                                                                                                                                                                                        பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன்,*  உன் பதயுகமாம்-
                                                                                                                                                                                                                                                                                                        ஏர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன்*  உன்னுடைய- 
                                                                                                                                                                                                                                                                                                        கார்கொண்ட வண்மை*  இராமாநுச! இது கண்டுகொள்ளே.


                                                                                                                                                                                                                                                                                                          கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை*  காண்டலுமே-
                                                                                                                                                                                                                                                                                                          தொண்டு கொண்டேன்*  அவன் தொண்டர் பொற்றாளில்*  என் தொல்லை வெம்நோய்-
                                                                                                                                                                                                                                                                                                          விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை*  வாய்மடுத்து இன்று-
                                                                                                                                                                                                                                                                                                          உண்டு கொண்டேன்,*  இன்னம் உற்றன ஓதில் உலப்பில்லையே.


                                                                                                                                                                                                                                                                                                            ஓதிய வேதத்தின் உட்பொருளாய்,*  அதன் உச்சிமிக்க-
                                                                                                                                                                                                                                                                                                            சோதியை*  நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்*
                                                                                                                                                                                                                                                                                                            பேதைமை தீர்த்த இராமாநுசனைத் தொழும்பெரியோர்*
                                                                                                                                                                                                                                                                                                            பாதமல்லால் என்தன் ஆர் உயிர்க்கு*  யாதொன்றும் பற்றில்லையே.


                                                                                                                                                                                                                                                                                                              பற்றா மனிசரைப் பற்றி*  அப்பற்று விடாதவரே- 
                                                                                                                                                                                                                                                                                                              உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி,*  ஒள்ளியநூல்-
                                                                                                                                                                                                                                                                                                              கற்றார் பரவும் இராமாநுசனை*  கருதும் உள்ளம்-
                                                                                                                                                                                                                                                                                                              பெற்றார் எவர்,*  அவர் எம்மை நின்றளும் பெரியவரே.


                                                                                                                                                                                                                                                                                                                பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும்*  தன் குணங்கட்கு
                                                                                                                                                                                                                                                                                                                உரியசொல் என்றும்*  உடையவன் என்றென்று*  உணர்வில் மிக்கோர்-
                                                                                                                                                                                                                                                                                                                தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன்*  மறை தேர்ந்துலகில்-
                                                                                                                                                                                                                                                                                                                புரியும் நல்ஞானம்*  பொருந்தாதவரை பொரும் கலியே.


                                                                                                                                                                                                                                                                                                                  கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல்*  கலைப் பெருமான்- 
                                                                                                                                                                                                                                                                                                                  ஒலிமிக்க பாடலை உண்டு*  தன்னுள்ளம் தடித்து,*  அதனால்-
                                                                                                                                                                                                                                                                                                                  வலிமிக்க சீயம் இராமாநுசன்*  மறைவாதியராம்* 
                                                                                                                                                                                                                                                                                                                  புலிமிக்கது என்று,*  இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே.


                                                                                                                                                                                                                                                                                                                    போற்றரும் சீலத்து இராமாநுச*  நின் புகழ் தெரிந்து-
                                                                                                                                                                                                                                                                                                                    சாற்றுவனேல்*  அது தாழ்வு அது தீரில்,*  உன் சீர்தனக்கோர்-
                                                                                                                                                                                                                                                                                                                    ஏற்றமென்றே கொண்டிருக்கிலும்* என்மனம் ஏத்திய;ன்றி 
                                                                                                                                                                                                                                                                                                                    ஆற்றகில்லாது,* இதற்கு என்னினைவாய் என்றிட்டு அஞ்சுவனே.


                                                                                                                                                                                                                                                                                                                      நினையார் பிறவியை நீக்கும் பிரானை,*  இந் நீணிலத்தே-
                                                                                                                                                                                                                                                                                                                      எனையாள வந்த இராமாநுசனை*  இருங் கவிகள்-
                                                                                                                                                                                                                                                                                                                      புனையார் புனையும் பெரியவர் தாள்களில்*  பூந்தொடையல்- 
                                                                                                                                                                                                                                                                                                                      வனையார்*  பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே.


                                                                                                                                                                                                                                                                                                                        மருள்சுரந்து ஆகம வாதியர் கூறும்,*  அவப் பொருளாம்-
                                                                                                                                                                                                                                                                                                                        இருள்சுரந்து எய்த்த*  உலகிருள் நீங்கத்,*  தன் ஈண்டியசீர்-
                                                                                                                                                                                                                                                                                                                        அருள்சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன்*  அரங்கனென்னும் 
                                                                                                                                                                                                                                                                                                                        பொருள் சுரந்தான்,*  எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே. 


                                                                                                                                                                                                                                                                                                                          புண்ணிய நோன்பு புரிந்துமிலேன்,*  அடி போற்றி செய்யும்-
                                                                                                                                                                                                                                                                                                                          நுண்ணருங் கேள்வி*  நுவன்றுமிலேன்,*  செம்மை நூற்புலவர்க்கு-
                                                                                                                                                                                                                                                                                                                          எண்ணருங் கீர்த்தி இராமாநுச!  இன்று நீபுகுந்து*  என்- 
                                                                                                                                                                                                                                                                                                                          கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும்*  நின்ற இக் காரணம் கட்டுரையே.


                                                                                                                                                                                                                                                                                                                            கட்டப் பொருளை மறைப்பொருள் என்று*  கயவர்சொல்லும்- 
                                                                                                                                                                                                                                                                                                                            பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே,*  என் பெரு வினையைக்-
                                                                                                                                                                                                                                                                                                                            கிட்டி கிழங்கொடு தன்னருள் என்னும் ஒள் வாளுருவி* 
                                                                                                                                                                                                                                                                                                                            வெட்டிக் களைந்த*  இராமாநுசன் என்னும் மெய்த்தவனே.


                                                                                                                                                                                                                                                                                                                              தவம் தரும் செல்வம் தகவும் தரும்,*  சலியாப்பிறவிப்-
                                                                                                                                                                                                                                                                                                                              பவம் தரும்*  தீவினை பாற்றித் தரும்*  பரந்தாமம் என்னும்-
                                                                                                                                                                                                                                                                                                                              திவம்தரும் தீதில் இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு*
                                                                                                                                                                                                                                                                                                                              உவந்தருந்தேன்,*  அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.


                                                                                                                                                                                                                                                                                                                                உண்ணின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து*  அவர்க்குஉயவே-
                                                                                                                                                                                                                                                                                                                                பண்ணும் பரனும் பரிவிலனாம்படி*  பல்லுயிர்க்கும்-
                                                                                                                                                                                                                                                                                                                                விண்ணின் தலைநின்று வீடளிப்பான் எம் இராமாநுசன்*
                                                                                                                                                                                                                                                                                                                                மண்ணின் தலத்து உதித்து*  உய்மறை நாலும் வளர்த்தனனே.


                                                                                                                                                                                                                                                                                                                                  வளரும் பிணிகொண்ட வல்வினையால்*  மிக்க நல்வினையில்-
                                                                                                                                                                                                                                                                                                                                  கிளரும் துணிவு கிடைத்தறியாது*  முடைத்தலையூன்-
                                                                                                                                                                                                                                                                                                                                  தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்கு*
                                                                                                                                                                                                                                                                                                                                  உளர் எம் இறைவர்*  இராமாநுசன் தன்னை உற்றவரே.


                                                                                                                                                                                                                                                                                                                                    தன்னை உற்றாட்செய்யும் தன்மையினோர்,*  மன்னு தாமரைத் தாள்- 
                                                                                                                                                                                                                                                                                                                                    தன்னை உற்றாட்செய்ய*  என்னை உற்றான் இன்று*  தன்தகவால்- 
                                                                                                                                                                                                                                                                                                                                    தன்னையுற்றார் அன்றி தன்மை உற்றாரில்லை என்றறிந்து* 
                                                                                                                                                                                                                                                                                                                                    தன்னை உற்றாரை*  இராமாநுசன் குணம் சாற்றிடுமே.


                                                                                                                                                                                                                                                                                                                                      இடுமே இனிய சுவர்க்கத்தில்*  இன்னும் நரகிலிட்டுச்-
                                                                                                                                                                                                                                                                                                                                      சுடுமே?  அவற்றை*  தொடர்தரு தொல்லை*  சுழல்பிறப்பில்-
                                                                                                                                                                                                                                                                                                                                      நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம்வசத்தே*
                                                                                                                                                                                                                                                                                                                                      விடுமே? சரணமென்றால்,*  மனமே! நையல் மேவுதற்கே? (2)


                                                                                                                                                                                                                                                                                                                                        தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும்*  தாழ்சடையோன்- 
                                                                                                                                                                                                                                                                                                                                        சொற்கற்ற சோம்பரும்*  சூனிய வாதரும்*  நான்மறையும்-
                                                                                                                                                                                                                                                                                                                                        நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர்*  நீள் நிலத்தே- 
                                                                                                                                                                                                                                                                                                                                        பொற்கற்பகம்,*  எம் இராமானுச முனி போந்தபின்னே.


                                                                                                                                                                                                                                                                                                                                          போந்ததென் நெஞ்சென்னும் பொன்வண்டு*  உனதடிப் போதில் ஒண்சீ- 
                                                                                                                                                                                                                                                                                                                                          ராம் தெளி தேன் உண்டு*  அமர்ந்திட வேண்டி,*  நின் பாலதுவே- 
                                                                                                                                                                                                                                                                                                                                          ஈந்திட வேண்டும் இராமாநுச! இது அன்றியொன்றும்*  
                                                                                                                                                                                                                                                                                                                                          மாந்த கில்லாது,*  இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.   


                                                                                                                                                                                                                                                                                                                                            மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு*  மதி மயங்கித்- 
                                                                                                                                                                                                                                                                                                                                            துயக்கும் பிறவியில்*  தோன்றிய என்னை*  துயரகற்றி- 
                                                                                                                                                                                                                                                                                                                                            உயக்கொண்டு நல்கும் இராமாநுச! என்றது உன்னையுன்னி* 
                                                                                                                                                                                                                                                                                                                                            நயக்கும் அவர்க்கு இது இழுக்கென்பர்,*  நல்லவர் என்றும்நைந்தே.


                                                                                                                                                                                                                                                                                                                                              நையும் மனம் உன் குணங்களை உன்னி*  என் நாஇருந்துஎம்-
                                                                                                                                                                                                                                                                                                                                              ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும்*  அருவினையேன்-
                                                                                                                                                                                                                                                                                                                                              கையும் தொழும் கண் கருதிடுங் காண க் கடல்புடைசூழ்*
                                                                                                                                                                                                                                                                                                                                              வையம் இதனில்*  உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே? 


                                                                                                                                                                                                                                                                                                                                                வளர்ந்த*  வெங்கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாளவுணன்- 
                                                                                                                                                                                                                                                                                                                                                கிளர்ந்த*  பொன்னாகம் கிழித்தவன்*  கீர்த்திப் பயிரெழுந்து- 
                                                                                                                                                                                                                                                                                                                                                விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என்தன் மெய்வினைநோய்* 
                                                                                                                                                                                                                                                                                                                                                களைந்து நல் ஞானம் அளித்தனன்*  கையில் கனியென்னவே.


                                                                                                                                                                                                                                                                                                                                                  கையில் கனியென்னக்*   கண்ணனைக் காட்டித் தரிலும்*  உன் தன்- 
                                                                                                                                                                                                                                                                                                                                                  மெய்யில் பிறங்கிய*  சீரன்றி வேண்டிலன் யான்,*  நிரயத்- 
                                                                                                                                                                                                                                                                                                                                                  தொய்யில் கிடக்கிலும் சோதி விண்  சேரிலும் இவ்வருள்நீ* 
                                                                                                                                                                                                                                                                                                                                                  செய்யில் தரிப்பன்*  இராமாநுச! என் செழுங் கொண்டலே!


                                                                                                                                                                                                                                                                                                                                                    செழுந்திரைப் பாற்கடல் கண்துயில் மாயன்* திருவடிக்கீழ்-
                                                                                                                                                                                                                                                                                                                                                    விழுந்திருப்பார் நெஞ்சில்*  மேவு நல்ஞானி*   நல் வேதியர்கள்-
                                                                                                                                                                                                                                                                                                                                                    தொழும் திருப்பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர்*
                                                                                                                                                                                                                                                                                                                                                    எழுந்திரைத்து ஆடும் இடம்*  அடியேனுக்கு இருப்பிடமே. (2)  


                                                                                                                                                                                                                                                                                                                                                      இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்* மாலிருஞ் சோலையென்னும்‍- 
                                                                                                                                                                                                                                                                                                                                                      பொருப்பிடம்* மாயனுக்கு என்பர் நல்லோர்,* அவை தன்னொடு வந்து‍-
                                                                                                                                                                                                                                                                                                                                                      இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து*  இன்று அவன்வந்து-  
                                                                                                                                                                                                                                                                                                                                                      இருப்பிடம்*  என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே. (2)


                                                                                                                                                                                                                                                                                                                                                        இன்புற்ற சீலத்து இராமானுச,*  என்றும் எவ்விடத்தும்- 
                                                                                                                                                                                                                                                                                                                                                        என்புற்ற நோய்*  உடல் தோறும் பிறந்து இறந்து*  எண்ணரிய‍‍-
                                                                                                                                                                                                                                                                                                                                                        துன்புற்று வீயினும் சொல்லுவது ஒன்றுண்டு*  உன் தொண்டர்கட்கே‍- 
                                                                                                                                                                                                                                                                                                                                                        அன்புற்று இருக்கும்படி,*  என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே. (2) 


                                                                                                                                                                                                                                                                                                                                                          அங்கயல்பாய்  வயல் தென் அரங்கன்,*  அணி ஆகமன்னும்- 
                                                                                                                                                                                                                                                                                                                                                          பங்கய மாமலர்*  பாவையைப் போற்றுதும்   பத்தியெல்லாம்- 
                                                                                                                                                                                                                                                                                                                                                          தங்கியது தென்னத் தழைத்து நெஞ்சே!  நம் தலைமிசையே *
                                                                                                                                                                                                                                                                                                                                                          பொங்கிய கீர்த்தி *  இராமாநுசன் அடிப் பூ மன்னவே. (2)