திருப் பவளவண்ணம்

காஞ்சிபுராணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய வரலாறு பேசப்படுகிறது. பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தொடர்ந்து எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும் பயனின்றிப்போக ஒரு கொடிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து அனுப்பினாள். நொடிப்பொழுதில் அந்த அரக்கர் கூட்டத்தை அழித்து பெருமாள் ரத்தம் தோய நின்றார். இவ்வாறு ரத்தம் தோய பிரவாளேச வண்ணராக நின்றதால் பிரவாளேசரானார் தூயதமிழில் பவள வண்ணமானார்

அமைவிடம்

பெயர்: திருப்பவள வண்ணம் அமைவிடம் ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம்: காஞ்சிபுரம்,

தாயார் : ஸ்ரீ பவள வல்லி
மூலவர் : ஸ்ரீ பவளவண்ணன்
உட்சவர்: --
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : காஞ்சிபுரம்
கடவுளர்கள்: ஸ்ரீ பவளவண்ணன்,ஸ்ரீ பவள வல்லி


திவ்யதேச பாசுரங்கள்

    2060.   
    வங்கத்தால் மாமணிவந்து உந்து முந்நீர்-  மல்லையாய்!*  மதிள்கச்சி ஊராய்! பேராய்,* 
    கொங்குத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன்*  குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்,*
    பங்கத்தாய் பாற்கடலாய்! பாரின் மேலாய்!*  பனிவரையின் உச்சியாய்! பவள வண்ணா,* 
    எங்குஉற்றாய்? எம்பெருமான்! உன்னை நாடி*  ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே!    

        விளக்கம்  


    • புண்டரீகர் என்கிற ஒரு பரம பக்தர், கடலின் இக்கரையிலே ஒரு பெரியதோட்டம் ஏற்படுத்தி அதில் சிறந்த புஷ்பங்களையுண்டாக்கி அவற்றைத் தொடுத்தெடுத்துக் கொண்டு போய் எம்பெருமானுக்கு ஸமர்க்கிக்கவேணுமென்று பாரித்தார்; கடலைக்கடந்து செல்ல வேண்டியிருந்தமையால் இக்கடலைக் கையாலிறைத்துவிட்டு வெறுந்தரையாக்கி நடந்தே செல்லுவோமென்று துணிந்து கடலை இறைக்கத் தொடங்கவே, எம்பெருமான் அவருடைய ஆதராதிசயத்தைக் கண்டு வியந்து உவந்து, தானே கடற்கரையிலே ஓடி வந்து அவரது தோப்பிலே தலைக்கிடை கிடந்து அவருடைய வழிபாடுகளை ஸ்வீகரித்தருளினன் என்பது திருக்கடல்மல்லைத் தலசாயிப் பெருமாளைப் பற்றின புராண வரலாறு. பேராய்!=பேரில் உள்ளவன் பேரான்; பேராய் என்பது விளி; திருப்பேர் நகரிலுள்ளவனே! என்றபடி. (கொங்கத்தார் இத்யாதி) கொன்றை மாலையை யணிந்த மார்வையுடையவனும் பார்வதியைத் தனக்கு மனைவியாகக் கொண்டவனுமான ருத்ரனைத் தனது திருமேனியின் ஒரு புறத்திலே இடங்கொடுத்து இருத்தியிருக்குமவனே! என்றபடி. “கொங்கத்தார்“ என்ற பாடத்தில் ‘கொங்கு அத்து ஆர்‘ என்று பிரித்து ‘அத்து‘ என்பதைச் சாரியையாகக் கொள்ளவேணும். ‘கொங்குத்தார்‘ என்ற பாடத்தில், கொங்கு- தேனையும், தார்-பூக்களையும், வளம்-அழகையுமுடைத்தான, கொன்றையலங்கல்- என்றுரைத்துக்கொள்க. பங்கத்தாய்=‘பங்கு‘ என்று பார்ச்வத்திற்குப் பெயர்; திருமேனியின் கூறு. பங்கில் உடையவன்-பங்கத்தான்; அதன் விளி். பாற்கடலாய்=அஹங்காரியான ருத்ரனுக்குத் திருமேனியில் இடங்கொடுத்தவளவேயோ? பிரமன் முதலானோர்க்கு ஓர் ஆபத்து வந்தபோது ரக்ஷகரான நாம் நெடுந்தூரத்திலிருக்க வொண்ணாதென்று பரமபதத்தில் நின்றும் திருப்பாற்கடலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறவனே!.