கோவில் திருவாய்மொழி    அமலன் ஆதிபிரான்*  அடியார்க்கு  என்னை ஆட்படுத்த-
    விமலன்,  *விண்ணவர் கோன்  *விரையார் பொழில் வேங்கடவன்,*
    நிமலன் நின்மலன் நீதி வானவன்* நீள்மதில் அரங்கத்து அம்மான்,* திருக்- 
    கமல பாதம் வந்து* என்கண்ணிணினுள்ளன ஒக்கின்றதே. (2)