- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நாயகனைப் பிரிந்த நிலையில் கண்ணிற் காணும் பொருள்களையெல்லாம் நோக்கிப் பலவாறு இரங்குகின்ற நாயகி, புருஷோத்தமனோடு ஒத்த தன்மையையுடைய மேகங்களைக் கண்டு அவற்றை நோக்கி ‘எம்பெருமானது திருமேனியையொத்த மேனியையுடைமையாகிய ஸாரூப்ப நிலையை நீஙக்ள் என்ன முயற்சிகள் செய்து பெற்றீர்கள்? கைம்மாறு கருதாமல் பரோபகாரத்துக்காகவே நல்ல நீரைச் சுமந்துகொண்டு உடம்பு வருந்தச்சென்று ஆங்காங்குப் பெய்து எல்லா வுயிர்களையும் பாதுகாத்தலாகிய பெருந்தவ முடைமையால் உங்களுக்கு எம்பெருமான் கருணை நேர்ந்து அதனாலேதான் இந்த நிலை வந்தது போலும் என்று கூறுகின்றாள். பொய்கையாழ்வார் கடலை நோக்கி “மாலுங் கருங்கடலே! என் நோற்றாய்! வையகமுண்டாலினிலைத் துயின்றவாழியான், கோலக் கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றுந் திருமேனி நீ தீண்டப்பெற்று” என்று எம்பெருமான் எக்காலமும் உன்னிடத்தே பள்ளிகொண்டிருப்பதற்கு ஏற்ப என்ன தவம் புரிந்தாய்? என்று கேட்டார்; இவ்வாழ்வார் மேகத்தை நோக்கி ‘எம்பெருமானோடு உருவொத்திருக்கும்படியாக நீங்கள் என் தவம் புரிந்தீர்கள்? என்று வினவுகின்றார். அதை அனுட்டித்த உபாயத்தையறிந்து தானும் அனுஷ்டித்து அந்நிலைமை பெறக் கருத்துப்போலும். மேகம் வடிவத்தால் திருமாலை யொக்குமென்று தலைவி கூறுதலை “கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணனென்று ஏறப்பறக்கும்”. “நன்று பெய்யும் மழைகாணில் நாரணன் வந்தானென்று ஆலும்” என்னுமிடங்களிலும் காண்க. “ஒக்குமம்மானுருவ மென்று உள்ளங் குழைந்து நாணாளும்,தொக்க மேகப் பல்குழாங்கள் காணுந் தோறுந் தொலைவன் நான்” என்றதுங் காண்க.
English Translation
O Clouds! Tell, me how did you acquire the lord Tirumal's dark hue! I know, carrying life-sustaining water, you roam the skies, hurting your bodies sorely, That penance earned you his grace!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்