விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அருள் ஆர் திருச் சக்கரத்தால்*  அகல் விசும்பும் நிலனும்*
  இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர்,*  ஈங்கு ஓர் பெண்பால்-
  பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ?*
  தெருளோம் அரவணையீர்,*  இவள் மாமை சிதைக்கின்றதே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அரவு அணையீர் - ஆதிசேஷசயனத்தை யுடையவரே!
அருள் ஆர் திரு சக்கரத்தால் - கருணை நிறைந்த திருவாழியைக் கொண்டு
அகல் விசும்பும் - பரந்த விண்ணுலகத்திலும்
நிலனும் - மண்ணுலகத்திலும்
இருள் ஆர்வினை கெட - இருளையொத்த கொடிய தொழில்கள் நிகழாதபடி

விளக்க உரை

நாயகனுடைய விசலேஷத்தால் நாயகி துடித்துக் கொண்டிருக்கச் செய்தேயும் வந்து உதவாத நாயகனைத் தோழி வெறுத்துரைக்கும் பாசுரமிது. நீரோ ஸமாக்யமானவரவ்வீர்; திருவாழியாய்வானைப் பரிகரமாகக் கொண்டு எல்லாவுலகங்களிலும் துஷ்டர்களை நிரஸித்து சிஷ்டர்களை வாழ்விப்பதையே விரதமாகக் கொண்டிருக்கின்றீர்; இப்படிஸர்வரக்ஷகரான நீர் இவளையும் ரக்ஷிக்கக் கடமைப்பட்டிருந்தும் இவளொருத்தியை மாத்திரம் பாதுகாவலரது கைவிட்டிருக்கின்றீர்; ‘இவள் நம்மால் அவசியம் காக்கப்பட வேண்டியவளல்லள்.; அப்படிப்பட்ட தகுதி இவளிடத்து ஒன்றுமில்லை’ என்று இகழ்ந்து கைவிட்டீரோ? அன்றி, நம்மால் காக்கப்படும் உலகங்களுக்கு இவள் உட்பட்டவளல்லள்; பஹிர்ப்பூதை’ என்று கருதிக் கைவிட்டீரோ? என வருந்திக் கூறியவாறு.

English Translation

O Lord reclining on a serpent! With your benevolent discus, you reign over the wide Earth and sky, destroying the darkness of karmas, This girl wanes day by day. Is it because your consider women to be of no consequence in your reign? Or is it because you consider this girl outside the pale of justice? We do not know.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்