- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
வாடைக்கு வருந்தி மாமையிழந்த நாயகியின் நிலைமையைக் கண்டு தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது. எல்லாருடையவும் எவ்வகையான தாபங்களையும் தணிப்பதையே இயற்கையாகவுடைய மந்தமாருதாமனது இப்பொழுது இவ்வூரில் இவளை எரிக்கின்றது; எரிப்பது நெருப்பின் தன்மையேயன்றிக் காற்றின் தன்மையானது; குளிரப் பண்ணுவதையே இயற்கையாகவுடைய காற்றுக்கு இப்படி நிலைமை மாறுபட்டதற்கு என்ன காரணமிருக்கும்!” இவளது நிறத்தை அழிக்கவேணுமென்று கருதிய எம்பெருமான் தனது செங்கோள்மையை மாறுபடுத்தி வாடையை வேறுபடுத்தி அனுப்பியிருக்கிறான் தேபாலும்!; இன்ன இன்ன வஸ்துக்கள் இன்ன இன்ன தன்மையை யுடையனவா யிருக்க வேண்டும் என்று ஆதியிலே எம் பெருமான் ஒரு வரம்பு கட்டி வைத்திருக்கிறான்; அதன்படியே குளிர்ச்சியைத் தன்மையாவுடைத்தா யிருக்கக் கடவுதான காற்று இப்போது எரிச்சலைத் தன்மையாகக்கொண்ட தென்னில், எம்பெருமான் தான் செய்திருந்த வ்யவஸ்தையைத் தானே மாறுபடுத்தியிருக்க வேண்டும்; ‘மாந்தரும் பராங்குச நாயகிக்குத் தாபத்தை உண்டாக்கக்கடவது’ என்று ஸங்கல்பித்தனன் போலும்! என்று தோழி இரங்குகின்றாள்.
English Translation
This cool-fragrant-Tulasi-desiring girl's large eyes rain fears. The cool breeze with its chilling nature, breaking all bounds of time, place and quality, blows hot everywhere. Has the sceptre of the cloud-hued lord changed how?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்