- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நாயகனைப்பிரிந்து ஆற்றாத நாயகி வாடைக்கு வருந்திக்கூறும் பாசுரமிது பிரிந்துபோன நாயகன்பின்னே தன் மனம் போய்விட அதனையிழந்த நாயகி, அந்த நாயகனுடைய திருத்துழாய் மாலையில் தனக்கு உண்டான ஈடுபாட்டால் தளர்ந்து நிற்கும் பொழுது அத்திருத்துழாயின் ஸம்பந்தத்தையுடைய காற்று வந்து வீசி வருத்தப்படுத்த; அதனை ஸஹித்திருக்கமாட்டாமல் ‘நெஞ்சை யிழந்து வருந்துகிற எம்மை நீயும் வந்து பகைவர்போல வகுத்துதல் தகாது’ என்று அக்காற்றைக் குறித்துக் கூறுகின்றான். கீழ்ப்பாட்டில் “அப்புள்ளின் பின்போன தனி நெஞ்சமே” என்று பிரமாணபூர்வமாக எம்பெருமான் பக்கலிலே தம் மனம் சென்றமையை அருளிச் செய்தார். அப்படி அப்பெருமான் பின்னே சென்ற தமது மனத்திற்கு இவ்வுலகத்திலுள்ள போக்ய யதார்த்தங்களொன்றும் ப்ரியமாகவல்லாமல் ஹிம்சையாகவேயிருக்கும் படியை இதனால் தெரிவிக்கிறரென்றுணர்க.
English Translation
O Cool Breeze wafting the sweet-poison-fragrance of the Tulasi wreath from the Lord who sucked the angry deceitful ogress beast! The Lord's Garuda bird already stole my lonely heart. Now I have none that the cool Tulasi can steal, Is it proper for you to enter and chill my soul?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்