விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  செற்றதுவும்*  சேரா இரணியனை*  சென்றுஏற்றுப்
  பெற்றதுவும்*  மாநிலம், பின்னைக்குஆய்* - முற்றல்
  முரிஏற்றின்*  முன்நின்று மொய்ம்புஒழித்தாய்,*  மூரிச்
  சுரிஏறு*  சங்கினாய்! சூழ்ந்து    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பின்னைக்காய் - நப்பின்னைப் பிராட்டிக்காக,
முற்றல் முரி - முதிர்ந்த வலிமையையுடைய
எற்றின் - ரிஷபங்களினுடைய
முன் நின்று - எதிரில் (அஞ்சாதே) நின்று
சூழ்ந்து - (அவற்றைச் சொல்லும் வகையை) ஆலோசித்து

விளக்க உரை

எம்பெருமானே! நீ அடியவர்திறத்தில் அன்பு மிகுதியினால் அவர்களின் இஷ்டங்களை நிறைவேற்றுதற்காகவும் அநிஷ்டங்களைப் போக்குதற்காகவும் செய்தருள்கின்ற சொல்களுக்கு எல்லையுண்டோ? பரமபக்தனான ப்ரஹ்லாதாழ்வானுடைய கருத்துக்கு இரணியன் இணங்கவில்லையென்ற காரணத்தினால் அவனைக் கைதொட்டு முடித்துப் போட்டாய், இந்திரன் கண்ணீர்விட்டு அழுவதைக்கண்டு பொறுத்திருக்க மாட்டாமல் அவனுக்காகக் குறளுருவாகி மரவலிபக்கல் சென்று எண்சாணுடம்பை இருசாணாக்கி இரப்பாளனாய்க் காரியஞ் செய்தாய், நப்பின்னைப் பிராட்டியின் திருமேனியிலுள்ள சாபலத்தினால் ‘இவளைப் பெறுதற்கு எவ்வளவு கடினமான செய்கை செய்தாலும் செய்யலாம்‘ என்று கொழுத்த காளைகளேமுடனே பொருது வெற்றிபெற்றாய், தூரத்திலேயிருந்து உன்வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும் உன் வரவைத் தெரிவிக்கின்ற சங்கினோசையைக் கேட்டு நெஞ்சு குளிர்ந்திருக்குமாறு ஒலி செய்யச் சங்கை விடாமற் கைக்கொண்டுள்ளாய், ஆகவே உனது பிரவ்ருத்திகளடங்கலும் பரார்த்தமாகவே யிருக்கின்றனகாண் – என்றாராயிற்று.

English Translation

You destroyed the defiant Asura Hiranya, you took the Earth from the complaint Asura Mabali, you destroyed seven mighty bulls for the sake of Nappinnai, O Conch-wielding Lord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்