விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சூழ்ந்த துழாய்அலங்கல்*  சோதி மணிமுடிமால்,*
  தாழ்ந்த அருவித் தடவரைவாய்,* - ஆழ்ந்த
  மணிநீர்ச்சுனை வளர்ந்த*  மாமுதலை கொன்றான்,* 
  அணிநீல வண்ணத் தவன்.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சூழ்ந்த - நிறையச்சாத்தப்பெற்றுள்ள
துழாய் அலங்கல் - திருத்துழாய் மாலையாலே
சோதி - புகர் பெற்ற
மணி முடி - மணிமயமான கிரீடத்தை யுடையனாயும்
அணி நீலம வண்ணத்தவன் - அழகிய நீலநிறத்தையுடையனாயுமிருக்கிற

விளக்க உரை

எம்பெருமான் அடியார்களுக்காக செய்தருளின காரியங்களெல்லாவற்றினும் ஸ்ரீகஜேந்திராழ்வானுக்குச் செய்தருளின அநுக்ரஹம் விலக்ஷணமாகையாலே, மற்ற காரியங்களெல்லாம் ஒரு தட்டும் இது ஒரு தட்டுமாக இருப்பதுபற்றி கஜேந்த்ர மோக்ஷ வருத்தாந்தத்தைத் தனிப்பட அருளிச் செய்கிறாரிதில். இப்பாட்டில் நடுவே இரண்டடிகளில் கதையையருளிச் செய்து முதலடியிலும் ஈற்றடியிலும் எம்பெருமானைச் சிறப்பித்துக் கூறியிருப்பதன் கருத்தை உய்த்துணர வேண்டும், எம்பெருமான் திருத்துழாய் மாலை அணிந்து கொண்டிருப்பதும், திருவபிஷேகம் அணிந்து கொண்டிருப்பதும் ‘தானே அனைத்துலகும் காக்கவல்ல முழுமுதற் கடவுள்‘ என்பதை விளக்குவதற்கேயாம், பரமபக்தனான கஜேந்திராழ்வான் நெடுங்காலமாக ஒரு நீர்ப்புழுவின் வாயில் அகப்பட்டுக்கொண்டு மிகவும் நொந்துகிடந்த்தனால் எம்பெருமானுடைய ரக்ஷகத்வம் குன்றிக்கிடந்தது, அவனுடைய திருத்துழாய் மாலையும்வாடி, திருவபிஷேகமும் ஒளிமழுங்கிக் கிடந்தது. பிறகு முதலையைத் துணித்து வேழத்தை வாழ்வித்ததனால் ரக்ஷகத்வ லக்ஷணமான திருத்துழாய் மாலையும் திருவபிஷேகேமும் ஒளிமல்கப் பெற்றமையால் அதனை ‘சூழ்ந்த துழாயலங்கல். ‘பக்தனுடைய விரோதி தொலைப்பெற்றோம்‘ என்று பிறந்த அளவற்ற மகிழ்ச்சியினால் திருமேனி புகர்பெற்றபடியை ‘அணிநீல வண்ணத்தவன்‘ என்ற ஈற்றடியினால் அருளிச்செய்தார்.

English Translation

The Lord wears a fall gem crown and a Tulasi wreath over it. He has the adorable hue of a dark gem. He came and killed a crocodile living in the lake. He resides on a mountain flowing with cool streams.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்