விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நீஅன்றே நீர்ஏற்று*  உலகம் அடிஅளந்தாய்,*
  நீஅன்றே நின்று நிரைமேய்த்தாய்* - நீஅன்றே
  மாவாய்உரம் பிளந்து*  மாமருதின்ஊடுபோய்,* 
  தேவாசுரம் பொருதாய் செற்று?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நீர் ஏற்று - (மாவலிபக்கல்) உதகதானம் வாங்கி
உலகம் - உலகங்களை
அடி அளந்தாய் நீ அன்றே - திருவடியாலளந்தவன் நீயன்றோ?
நின்று - ரக்ஷிப்பதில் நிலைத்து நின்று பசுக்கூட்டங்களை
மேய்த்தாய நீ அன்றே - மேய்த்தவனும் நீயன்றோ?

விளக்க உரை

ஒன்றோடொன்று சேராதசெயல்களைச் செய்தவன் நீயோவென்கிறார். மாவலிபக்கல் யாசகனாய்ச் சென்றாய் என்றும் விம்மவளர்ந்து உலகங்களையெல்லாம் அளந்தாய் என்றும் கேள்விப்படுகிறோம், யாசகனாய்ச்சென்ற செயலாலே அசக்தியைக் காட்டிக்கொண்டாய், உலகளந்த செயலாலே ஒப்பற்ற சக்தியைக் காட்டிகொண்டாய், இவை என்சொல்? தவிரவும் நீ திருவாய்ப்பாடியில் இடையனாய்ப்பிறந்து அந்த நிலைமையிலேயே கேசியின் வாயைக் கீண்டொழித்தாயென்றும் கேள்விப்படுகிறோம். இவையும் அப்படியே அன்றியும், நீ கண்ணாய்ப்பிறந்து குழந்தையாயிருக்குங் காலத்தில், துன்பப்படுத்துகின்ற பல விளையாடல்களைச் செய்யக் கண்டு கோபித்த யசோதை உன்னை வயிற்றில் கயிற்றினால் கட்டி உரலிலே பிணித்துவிட, அவ்வுரலையும் இழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே சென்றாய் என்றும், தேவாஸுரயுத்தத்தில் அசுரர்களைக்கொன்று தேவர்களை வெற்றி பெறுவித்தாயென்றும் கேள்விப்படுகிறோம், இவையும் அப்படியே, ஆகவிப்படி அசக்தியையும் காட்டவல்ல செயல்களைச் செய்த மஹாநுபாவன் நீயோ பிரானே! என்றாராயிற்று.

English Translation

Did you not measure the Earth as a gift with your feet? Did you not go grazing cows. Did you not rip apart the jaws of the horse kesin? Did you not go between the Marudu trees and destroy them? Did you not fan a war between Devas and Asuras?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்