விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்பன் தன்னை*  அடைந்தவர்கட்கு எல்லாம் 
    அன்பன்*  தென் குருகூர்*  நகர் நம்பிக்கு*
    அன்பனாய்*  மதுரகவி சொன்ன சொல் 
    நம்புவார் பதி*  வைகுந்தம்*  காண்மினே   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்பன் தன்னை - ஆச்ரித பக்ஷபாதியான எம்பெருமானை;
அடைந்தவர்கட்கு எல்லாம் - ஆச்ரயித்தவர்களான ஸகல பாகவதர் பக்கலிலும்;
அன்பன் - பக்தியையுடையரான;
தென்குருகூர் நகர்நம்பிக்கு - நம்மாழ்வர் விஷயத்திலே;
அன்பன் ஆய் - பக்தனாயிருந்து கொண்டு;

விளக்க உரை

நம்மாழ்வார் விஷயத்திலே பரமகபக்தி பரீவாஹமாக வெளிவந்த இக்கண்ணி நுண் சிறுத்தாம்பை மஹாவிச்வாஸத்துடன் ஒதவல்லவர்கள் பரமபதத்திலே போய் ஆழ்வார் திருவடிநிழலிலே வாழப்பெறுவர் என்று பலச்ருதியோடே பிரபந்தத்தை நிகமநஞ் செய்தருளினர். “அன்பன்தன்னை அடைந்தவர்கட்கெல்லா மன்பன்” என்னுமிவ் வடை மொழி ஆழ்வார்க்குமாகலாம், மதுரகவிகளுக்கும் ஆகலாம். ஆழ்வார்க்கு ஆகும் போது -“பயிலுந் திருவுடையார் யவரேலும் அவர் கண்டீர்” என்றபடி சாதி ஒழுக்கம் முதலியவற்றின் ஆராய்ச்சியின்றியே பகவத் பக்திமாத்திரத்தையே பற்றாசாகக்கொண்டு ஸகல பாகவதரிடத்தும் அன்புமிக்க ஆழ்வார் என்றதாகிறது. மதுரகவிகளுக்கு அந்வயித்தால்-பாகவதர் எல்லாரளவிலும் வைத்திருந்த அன்பை ஆழ்வாரொருவரளவிலே மடுத்த மதுரகவி என்று கருத்தாகக் கடவது.

English Translation

To those who seek the Lord’s refuge, Madurakavi who took refuge in Ten-Kurugur Nambi’s feet has this to say, “See Vaikunth here!”

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்