விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பயனன்று ஆகிலும்*  பாங்கலர் ஆகிலும்* 
    செயல் நன்றாகத்  *திருத்திப் பணிகொள்வான்,*
    குயில் நின்றார் பொழில் சூழ்  *குரு கூர்நம்பி,* 
    முயல்கின்றேன்  *உன்தன் மொய்கழற்கு அன்பையே.  (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பயன் அன்று ஆகிலும் - (பிறர் திருந்துவதால்) தமக்கொரு பயனில்லாமற் போனாலும்;
பாங்கு அலர் ஆகிலும் - (அவர்கள் திருந்துகைக்குப்) பாங்காக அமையாமற் போனாலும்;
செயல்  -தமது அநுஷ்டாகத்தாலே;
நன்றாக திருத்தி - நன்றாக சிக்ஷித்து;
பணி கொள்வான் - (அவர்களை) ஆட்கொள்வதற்காக;

விளக்க உரை

ஆசார்யர்கள், அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யரென்றும் க்ருபாமாத்ர ப்ரஸந் நாசார்யரென்றும் இருவகைப்படுவர். சிஷ்யன் பலகாலும் அநுவர்த்தித்தால் பின்பு அருள்புரிந்து அந்த ஸிஷ்யனை அநுக்ரஹிப்பவர்கள் அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யர் எனப்படுவர்; திருக்கோட்டியூர் நம்பி போல்வார். எம்பெருமானார், கோயிலுக்கும் திருக்கோட்டியூர்க்கும் பதினெட்டு தடவை நடந்து வருந்தின பின்புதானே திருக்கோட்டியூர் நம்பி ப்ரஸந்நாராயருளினார். அங்ஙனன்றியே, ஒருவன் அநுவர்த்தியாவிடினும் அதற்குமேல் விமுகனுமா யிருந்தாலும் முலைக்கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப்போலே அவனே அநுக்ரஹூப்பதைத் தம் பேறாக நினைத்துத் தாங்களே அவனைப் பலகாலும் அநுவர்த்தித்துத் திருத்திப் பணிகொள்ளுமாசிரியர் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்ய ரெனப்படுவர்; எம்பெருமானார், நம்பிள்ளை போல்வார். அப்படிப்பட்ட ஆசார்யத்வபூர்த்தியை மதுரகவிகள் நம்மாழ்வார் திறத்திலே ஸ்வாநுபவத்தாற் கண்டறிந்தவராதலால் அக்குணத்திலே ஈடுபட்டுப் பேசுகிறார். “தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவரடி பணிந்தவர்களுக்குமே இவையுள்ளது” (ஆச்சர்யஹ்ருதயம்-ஙவது ப்ரகரணம்;.) என்ற ஸ்ரீஸூக்தியின் பொருள் இங்கு அநுஸந்திக்கத் தக்கது. (தாய்-ஸீதை; மகன் -ப்ரஹ்லாதன் தம்பி-விபீஷணன்; இவர்-நம்மாழ்வார்; இவரடிபணிந்தவர் -எம்பெருமானார்.)

English Translation

The useless and the worthless souls, He will take and put to meet. O, Kurugur Lord, where cuckoos haunt, I only seek to love thy feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்