- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கருங்கல்லைத் துளைத்துக் குழியாக்கி அதிலே நீரைத் தேக்குவாரைப் போலே அதிமந்தமான என் நெஞ்சிலே வேதாந்த விழுப்பொருள்கள் நன்கு பதியும்படி திருவாய்மொழியை அருளிச்செய்த ஆழ்வார் திறத்திலே ஆட்செய்ய வேணுமென்று நான் ஆசைப்பட்டது அந்த க்ஷணத்திலேயே பல பர்யவஸாயியாயிற்று! என்று தாம் பெற்ற பேற்றின் பெருமையைப் புகழ்கிறார். ஆழ்வார் பகவத் விஷயத்திலே ஆழங்காற்பட்டு “இனியாமுறாமை” நெடுநாள் கழித்தே “உற்றேனுகந்து பணிசெய்து உனபாதம் பெற்றேன்” என்றும் “அவாவற்று வீடுபெற்ற” என்றும் சொல்லும்படி மநோரதஸித்தியில் விளம்பமாயிற்று. இம்மதுரகவிகளுக்கோ அப்படியில்லை. இவர் ஆழ்வார் திருவடிகளில் சேஷபூதராகப் பெற்ற க்ஷணமும், இவ்வாழ்வார்க்கே நித்யகைங்கரியம் பண்ணவேணுமென்று மநோரதித்தக்ஷணமும் அந்த மநோரதம் ஈடேறப் பெற்று நித்யகைங்கரியம் வாய்த்தக்ஷணமும் ஆகிய இம்மூன்று க்ஷணமும் ஒரேக்ஷணமாய்த்து இவர்க்கு: இடையிற் சிறிது விளம்பமும் இல்லை என்னுமிதனால், பகவத் ப்ராவண்யத்திற்காட்டில் பாகவத ப்ராவண்கத்திற்குள்ள ஏற்றம் சொல்லிற்றாயிற்று. “கோளரியை வேறாக வேத்தியிருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தியிருப்பார் தவம்” என்றார் திருமழிசைப்பிரானும்.
English Translation
The deep sense of Vedic thought, He sang in song and taught my heart. Satakopan my Lord is Love, -- alone the use of serving him.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்