விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மெய்யர்க்கே மெய்யனாகும்*  விதியிலா என்னைப் போல,*
  பொய்யர்க்கே பொய்யனாகும்*  புட்கொடி உடைய கோமான்,*
  உய்யப்போம் உணர்வினார்கட்கு*  ஒருவன் என்றுணர்ந்த பின்னை,* 
  ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்*  அழகன்ஊர் அரங்கம் அன்றே?   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பொய்யன் ஆகும் - (தனது ஸ்வரூபத்தைக் காட்டித்தராமல் தானும்) பொய்யனாயிருப்பன்;
உய்யபோம் உணர்வினார்கட்கு - உஜ்ஜீவிப்பதற்கு உரிய நல்லறிவு உடையவர்க்கு (கீழ்க்கூறிய மெய்யர்க்கு);
ஒருவன் என்று உணர்ந்த பின்னை - ‘கடவுள் ஒருவன் உண்டு’ என்று நல்லறிவு பிறந்த பின்பு;
ஐயப்பாடு அறுத்து - பின்னும் வரக்கூடிய ஸந்தேகங்களைப் போக்கி;
தோன்றும் - ஸேவை ஸாதிக்கிற

விளக்க உரை

‘தெய்வம் உண்டு’ என்று ஆதரவோடு அங்கீகரியாவிடினும் ‘தெய்வம் உண்டு’ என்று ஒருவன் சொன்னால் அதில் ஆக்ஷேபாதிகளாலே பகைமை பாராட்டாதிருக்கும் நிலை - அத்வேஸ் மெனப்படும்: இதுவே பரமபக்திக்கு முதற்படி எனப்படும். ஒருவஸ்துவில் ஒருவனுக்கு த்வேஷம் குடிகொண்டிருந்தால் அவன் அவ்வஸ்துவைப்பற்றிச் சிந்திக்கவே முடியாது: அன்றி, ‘நேசமுமில்லை, த்வேசமுமில்லை’ என்கிற நிலைமையிலிருந்தால் அவன் நாளடைவில் அவ்வஸ்துவிடத்தில் பரமபக்திபர்யந்தமான அன்பைப் பெற்றுவிடக்கூடும் என்பது அனைவர்க்கு அநுபவம் ஸித்தமான விஷயம். ஆனதுபற்றியே அத்வேஷமென்பது பரமப்ரீதிக்கு முதற்படியாகக் கொள்ளப்புட்டிருக்கின்றதென்க.

English Translation

For the truthful ones he is the truth, for the false ones he is a falsity. For the lowly ones like me, He is the king who bears a Garuda crest. For those who seek the elevation through consciousness, he dispels doubts and reveals himself. He is the beautiful Lord of Tiru-Arangam.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்