விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வண்டினம் முரலும் சோலை*  மயிலினம் ஆலும் சோலை,* 
  கொண்டல் மீதுஅணவும் சோலை*  குயிலினம் கூவும் சோலை,*
  அண்டர்கோன் அமரும் சோலை*  அணி திருவரங்கம் என்னா,* 
  மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை  விலக்கி* நாய்க்கு இடுமின்நீரே.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு இனம் முரலும் சோலை - வண்டுகளின் கூட்டங்களானவை காநம்  செய்யா நிற்கப்பெற்ற சோலைகளையுடையதும்;,
மயில் இனம் ஆலும் சோலை - மயில்களின் கூட்டங்களானவை கூத்தாடாநிற்கப் பெற்ற சோலைகளையுடையதும்;
கொண்டல் மீது அணவும் சோலை - மேகங்களானவை மேலேவந்து படியா நிற்கப்பெற்ற சோலைகளையுடையதும்;
குயில் இனம் கூவும் சோலை - குயில்களின் கூட்டங்கள் ஒன்றையொன்று அழையா நிற்கப்பெற்ற சோலைகளையுடையதும்,;
அண்டர் கோன் அமரும் சோலை - தேவர்கட்குத் தலைவனான ஸ்ரீரங்கனாதன் நித்யவாஸம் பண்ணப்பெற்ற சோலைகளை;

விளக்க உரை

இதுவரை பகவத்விசய விரோதிகளான பாவிகளை நினைத்ததற்கும் அவர்களோடு ஸம்பாசனை செய்ததற்கும் ப்ராயஸ்சித்தமாக “வண்டினமுரலுஞ் சோலை” இத்யாதியைப் பரம போக்யமாகத் தாம் அநுஸந்திக்கச் செய்தேயும், மீண்டும் “திருவரங்கமென்னாமிண்டர்”என்று அப்பாவிகளையே நினைக்கிறார். அவர்களையொழிய இவர்க்கு ஒருக்ஷணமும் செல்லாதுபோலே. ஸம்ஸாரத்திலேயே நெடுநாள் ஊன்றினவன் கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றத்தவரோடுண்டான பற்றை அறுத்துக்கொண்டு பகவத்விஷய சிந்தையினாலேயே போதுபோக்குவேணுமென்று பெருமுயற்சி செய்தாலும் பழையதான வாஸநையின் கணத்தினால் அந்த ஸம்ஸாரப்பற்றை விரைவில் அறுத்துக்கொள்ள முடியாமல் “அங்குற்றேனல்லே னிங்குற்றேனல்லேன்” என்றாற்போல இருகரையனாய்த் தடுமாறுமாபோலேபராங்முகரையும் சீர்திருத்தி மங்களாபாஸநத்துக்கு ஆளாக்கிக் கொள்வதற்காகப் பாடுபடுகையாகிற ஒரு விலக்ஷண ஸம்ஸாரத்திலே நெடுநாளாக ஊன்றின இவ்வாழ்வார், மநோரதம் நிறைவேறப்பெறாத வருத்தத்தினால் அப்பாவிகளின் பற்றை அறுத்துக்கொள்ளவேணுமென்று பெருக்கமுயன்றாலும் அது இவர்க்கு விரைவில் கைகூடுகிறதில்லை. மங்களாபாஸணத்திற்கு ஆள்சேர்க்கப் படுகிறபாட்டின் உறைப்பு என்னே.

English Translation

The beautiful Tiru-Arangam lies amid groves where bumble bees hum songs, - groves where peacocks dance, groves where clouds gather in embrace, and groves where cuckoos coo with love! Remove the food from the gorging ungrateful ones and throw it to the dogs.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்