விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சூதனாய்க் கள்வனாகித்*  தூர்த்தரோடு இசைந்த காலம்,* 
    மாதரார் கயற்கண் என்னும்*  வலையுள் பட்டு அழுந்துவேனை,*
    போதரே என்று சொல்லி*  புந்தியுள் புகுந்து தன்பால்- 
    ஆதரம் பெருக வைத்த*  அழகனூர் அரங்கம் அன்றே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சூதன் ஆய் - (முதலில்) சூதிலே ஊன்றினவனாய்;
கள்வன் ஆகி - (பிறகு) களவிலே ஆழ்ந்தவனாய்;
தூர்த்தரோடு இசைந்தகாலம் - விஷயாந்தர ப்ரவணரோடே பொருந்தியிருந்த காலத்திலே ;
மாதரார் - ஸ்திரீகளுடைய;
கயல் கண் என்னும் - கயல்போன்ற கண்களாகிற;

விளக்க உரை

ஒருவன் விஷயாந்தரங்களிலே அகப்பட்டால் அந்த ஸப்தாதி விஷயங்களை இஷ்டப்படி அநுபவிப்பதற்குப் பொருள் விஸேஷமாக வேண்டுமாதலால் எவ்வழியிலாவது அது திரட்ட வேண்டிச் சூதாடுவதிலும் களவு செய்வதிலும் இறங்குவான்; சூதாவது-பச்யதோஹரத்வம்; அதாவது-ப்ரத்யக்ஷக்களவு; ‘ கன்னக்களவன்று’ என்கிற மாத்திரமேயொழிய, களவு என்பதில் தட்டில்லை; சூதாடுகிறவன் முதலில் விஸேஷலாபம் வரக்கண்டு மேன்மேலும் அதிலே முயல்வான்; அடைவிலே, சூதில்பெற்ற பொருளையும் இழந்து ஏற்கனவே கையிலுள்ளதையுமிழந்து அனைத்தையும் கொதுகைவைத்துக் தோற்கும்படியான நிலைமைக்கு வருவான்; இதில் இவ்வளவு தன்மையானவாறே பிறகு கன்னக்கனவிலே கைவைப்பான். அதிலே ஏகாகியாகத் திருடுவது சிலநாள் வரையில்; தேர்ச்சி பெற்றவாறே தீவட்டிக் கொள்ளையிலிறங்குவான்; அது ஒருவனாய்ச் செய்யக்கூடிய காரியமன்றாகையால் பலரையும் துணை கூட்டிக்கொள்வான். நாலு தூர்த்தரோடு நெருங்கினவாறே அவர்கள் மாதரார்கயற்கணெனனும் வலையில் பட்டழுந்தும்படி செய்வார்கள். அதற்கு மேற்பட்ட ஆபத்து வேறொன்று சொல்லவேண்டா. இத்தனையும் தமக்கு உண்டானதாகச் சொல்லுகிறார் இவ்வாழ்வார்.

English Translation

O, the days when I was a thief and rogue, keeping company with wicked ones! Alas, I was caught in the net of fish-eyed beautiful dames! The beautiful Lord of Arangam entered into my heart and said, “Come to me”, and made my heart surge with love for him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்