விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மன்னு புகழ்க் கௌசலைதன்*  மணிவயிறு வாய்த்தவனே* 
  தென் இலங்கைக் கோன் முடிகள்*  சிந்துவித்தாய் செம்பொன் சேர்* 
  கன்னி நன் மா மதில் புடைசூழ்*  கணபுரத்து என் கருமணியே* 
  என்னுடைய இன்னமுதே*  இராகவனே தாலேலோ (2)      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மன்னுபுகழ் - நிலை நின்ற புகழையுடைய;
கௌசலை தன் - கௌஸல்யையினுடைய்;
மணி வயிறு - அழகிய வயிற்றிலே;
வாய்த்தவனே - பிள்ளையாகத் திருவவதரித்தவனே;
முடிகள் - பத்துத் தலைகளையும்;

 

விளக்க உரை

இதில், முதலடியால் அவதாரமும், இரண்டாமடியால் அவதார ப்ரயோஜநமும் சொல்லப்பட்டன வென்க. கணபுரம் - கண்ணபுரம் என்பதன் தொகுத்தல், திருக்கண்ணபுரம் என்னும் இத்திவ்யதேசம் சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று. இத்தலத்தில் சௌரிராஜப்பெருமாள் மிகவும் வரப்ரஸாதி என்பது ப்ரஸித்தம். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வர் ஆகிய ஐவர்களால் மங்களாசாஸநஞ் செய்யப்பெற்ற சிறந்த திவ்யதேசம் இது. தாலேலோ - வளர்பிள்ளைத் தொட்டிலிலே வளர்த்திக் கண்வளரப் பண்ணுகைக்காகச் சீராட்டித் தாலாட்டுதல்; தால் - நாக்கு; தமிழில் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய பிள்ளைத்தமிழில் இத்தாலாட்டை எட்டாம் மாதத்திற் கூறுவது கவிமரபு.

English Translation

Sleep, my sweet child Raghava, Talelo! My Dark-gem-Lord of Kannapuram, surrounded by high stone walls inlaid with gold! You are the jewel of the precious womb of world-famous Kousalya. You severed the heads of Lanka’s king Ravana.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்