விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  புண்டரிக மலரதன்மேல்*  புவனி எல்லாம் படைத்தவனே* 
  திண் திறலாள் தாடகைதன்*  உரம் உருவச் சிலை வளைத்தாய்* 
  கண்டவர்தம் மனம் வழங்கும்*  கணபுரத்து என் கருமணியே* 
  எண் திசையும் ஆளுடையாய்*  இராகவனே தாலேலோ  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

புண்டரிகம் மலர் அதன் மேல் - (திருநாபியில் அலர்ந்த) தாமரைப்பூவின் மேல் (பிரமனைத் தோற்றுவித்து அவன் முகமாக);
புவனி எல்லாம் படைத்தவனே - உலகங்கள் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தவனே;
திண் திறலாள் தாடகைதன் - த்ருடமான பலத்தையுடையளான தாடகையினுடைய;
உரம் உருவ - மார்வைத் துளைக்கும்படியாக;
சிலை வளைத்தாய் - வில்லை வளைத்து அம்புகளை எய்தவனே;

விளக்க உரை

English Translation

Sleep, O Lord of the eight Quarters, Talelo! My Dark-gem-Lord of Kanriapuram! You shot an arrow that pierced strong Tataka’s chest, you created the world on a lotus flower, you steal the hearts of those who see you!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்